03.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுள்ள ஞானத்தைச் சதா உங்களின் புத்திகளில் வைத்திருக்க வேண்டும். அதிகாலையில் விழித்தெழுந்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, இந்த ஞானக்கடலைக் கடையுங்கள்.

கேள்வி:
இந்த இறை கல்வியின் சட்டம் என்ன? இதற்காக நீங்கள் பெற்றுள்ள வழிகாட்டல் என்ன?

பதில்:
நாளாந்தம் கற்பதே இந்த இறை கல்வியின் சட்டமாகும். சிலவேளைகளில் கற்பதும், ஏனைய வேளைகளில் கற்காதிருப்பதும் நியதியல்ல. இந்தக் கல்விக்காக பாபா உங்களுக்குப் பல வசதிகளை செய்துள்ளார். இங்கிருந்து முரளி அனுப்பப்படுகின்றது, எனவே நீங்கள் ஏழு நாள் பாடநெறியை எடுத்த பின்னர், எங்கேனும் கற்க முடியும். நீங்கள் என்றுமே இந்தக் கல்வியைத் தவற விடக்கூடாது.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
இங்கே அமர்ந்திருக்கும் குழந்தைகள் படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் நினைவு செய்கின்றார்கள். அதாவது, அவர்கள் சுயதரிசனச் சக்கரத்தை நினைவு செய்கின்றனர். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவதற்காகவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்துள்ளார். சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவதே குழந்தைகளாகிய உங்களது இலட்சியம். நீங்கள் அசரீரி உலகையும், சூட்சும உலகையும், சரீர உலகையும், 84 பிறவிச் சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். ஏனைய அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்றுங்கள். உண்மையிலேயே பாபா உங்களைச் சூரிய, சந்திர வம்சங்களுக்கு உரியவர்கள் ஆக்கினார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். நடந்தும், உலாவியும் திரியும் பொழுதும், சுயமாகிய, ஆத்மாவிற்குத் தந்தையினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானம் உள்ளது. சிவபாபா உங்களை இப்பொழுது சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் எவ்வாறு 84 பிறவிச் சக்கரத்தின் குத்துக்கரண விளையாட்டை விளையாடுகின்றீர்கள் என்று பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். முதலில், நீங்கள் பிராமணர்கள், சிவபாபாவே பிரம்மாவினூடாக உங்களைப் படைக்கின்றார். படைப்பவரதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இந்த ஞானத்தினூடாக மாத்திரமே நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை எக்காலத்திற்கும் உங்கள் புத்திகளில் கொண்டிருக்க வேண்டும். அதிகாலையில் விழித்தெழுந்து, சுயதரிசனச் சக்கரதாரியாக இருக்கின்ற உணர்வுடன் அமர்ந்திருங்கள். எங்களுடைய 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றி இப்பொழுது எங்களுக்குத் தெரியும். ஒரேயொருவரே ஆத்மாக்களான எங்கள் அனைவரையும் படைப்பவராகிய, தந்தை. நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும், பரந்தாமவாசியான பரமாத்மாவான அசரீரியான பரமதந்தையே எங்களது தந்தை என்றும் நாங்கள் கூறுகின்றோம். நாங்களும் அங்கேயே வசித்தோம். அவரே எங்கள் பாபா ஆவார். ‘பாபா’ என்ற வார்த்தை மிகவும் அழகானது. சிவபாபாவின் ஆலயங்களுக்கு மக்கள் சென்று, அவரை வழிபடுவதுடன், அவரைப் பெருமளவு நினைவும் செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக, சீரழிந்த புத்தி உடையவர்களில் இருந்து தூய, சுத்தமான புத்தியுடையவர்களாக மாற்றுகின்றேன். நான் உங்களது சீரழிந்த, சூத்திர புத்தியைத் தூய, சுத்தமான புத்தியாக, அதாவது, உயர்வான, அதிமேன்மையான புத்தியாக ஆக்கினேன். ஆண்கள், பெண்கள் அனைவரும் இலக்ஷ்மி நாராயணன் விக்கிரகங்களின் முன்னால் விழுந்து வணங்குகின்றார்கள். ஆனால் அவர்கள் யார் என்பதோ, அவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்பதோ, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. பாரதம் அழிவற்ற இடம் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார், ஏனெனில் அது அநாதியான பரமாத்மா பரமதந்தையின் பிறப்பிடமும் ஆகும். அது தூய்மையாக்குபவரான, அனைவருக்கும் சற்கதி அருள்பவரின் பிறப்பிடம். எனவே அதுவே அனைத்திலும் மகத்தான யாத்திரை ஸ்தலமாகும். இதுவே அனைவருக்கும் சற்கதி அருள்பவரான, பரமாத்மா பரமதந்தையின் பிறப்பிடம் என்ற அத்தகையதொரு மேன்மையான போதை வேறு எவருக்கும் இருப்பதில்லை. தூய்மையாக்குபவரின் பிறந்தநாள் பாரதத்திலேயே இடம்பெற்றது. மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். எனவே அவர் நிச்சயமாக இங்கேயே பிறப்பெடுக்கின்றார். பாரதமே மகத்தான யாத்திரை ஸ்தலம். ஆனால், நாடகத்திற்கு ஏற்ப, இதுவே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், தூய்மையாக்குபவரும், எங்கள் தந்தையும், எங்கள் தாயும் தந்தையுமானவருமான கடவுளின் பிறப்பிடம் என்பது எவருக்குமே தெரியாது. இதனாலேயே அவர்கள் பாரத தேசத்தையிட்டுக் கூறுகின்றார்கள்: பாரத மாதாவுக்கு வந்தனங்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியிலேயே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்ற புத்திரிகளாகிய உங்கள் அனைவருக்கும், ஒவ்வொரு கல்பத்திலும் நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், பாரதத்தை வைகுந்தம் ஆக்குகின்றோம் என்ற போதை இருக்க வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களோ, அந்தளவிற்கே நீங்கள் ஒவ்வொருவரும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். சக்கரத்தின் காலஎல்லை நூறாயிரம் ஆண்டுகள் என்று பாரத மக்கள் எழுதியுள்ளார்கள். பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பாபாவினால் ஸ்தாபிக்கப்பட்ட, தர்மத்திற்கு உரியதே கீதை என்பதை நீங்கள் அறிவீர்கள். கீதையை உரைத்தவர் யார் என்பதை பாரத மக்கள் மறந்து விட்டார்கள். அசரீரியான சிவனுக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. அழகானவராக இருந்த ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா, தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் நான் அவருக்குள் பிரவேசித்து, அவரை அழகிய ஸ்ரீகிருஷ்ணர் ஆக்குகின்றேன். இதனாலேயே ஸ்ரீகிருஷ்ணர் அவலட்சணமானவரும் அழகானவருமான, சியாம்சுந்தர் என்று கூறப்படுகின்றார். அவரே சத்தியயுகத்தின் முதல் இலக்கத்திற்குரிய, அழகான இளவரசராக இருந்தார். அவரே அதியுயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற மேன்மையானவரும், அகிம்சையே அவரது பரம தர்மமும் என்பது அவரது புகழ். பாரத மக்களுக்கு இராதைக்கும் கிருஷ்ணருக்கும், இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் உள்ள உறவுமுறை என்னவென்று தெரியாது. தந்தை கூறுகின்றார்: இதுவரை நீங்கள் கற்றுள்ளவை எதிலும் எவ்வித அர்த்தமும் இல்லை. நீங்கள் இப்பொழுது தந்தையின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். 5000 வருடங்களின் பின்னர் பாபா மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இராஜ யோகத்திற்குரிய கற்பித்தல்களைக் கொடுக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஸ்ரீகிருஷ்ணரே கீதையைக் கூறியதாக முழு உலகமும் கூறுகின்றது. தந்தை கூறுகின்றார்: ஸ்ரீகிருஷ்ணருக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானமே கிடையாது. ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா தனது முன்னைய பிறவியில் இந்த ஞானத்தைப் பெற்றார், அவர் இப்பொழுது அதனை மீண்டும் பெறுகின்றார். நான் இவருக்குப் பிரம்மா எனப் பெயரிட்டிருக்கின்றேன். இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவரில் பிரவேசிக்கின்றேன். நீங்கள் இப்பொழுது மரணித்து வாழ்கின்றீர்கள். உங்களுக்குச் சூட்சுமமான பெயர்கள் கொடுக்கப்பட்டன. பலர் தந்தையை விட்டுச் சென்றதால், இப்பொழுது உங்களுக்கு அவ்வாறு பெயர்கள் கொடுக்கப்படுவதில்லை. தந்தைக்குச் சொந்தமாகிய ஒருவர், ஒரு புதிய பெயரைப் பெற்றபின் ஓடி விடுவது சரியாகப்படவில்லை. இதனாலேயே பாபா பெயர்களைக் கொடுப்பதை நிறுத்தி விட்டார். நீங்கள் இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான பிராமணர்களாகவும், சிவபாபாவின் பேரக் குழந்தைகளாகவும் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னிடம் இருந்து ஆஸ்தியைக் கோர வேண்டும். எனவே, என்னை நினைவு செய்யுங்கள்! இது இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவி. சூட்சும வதனத்தில் காட்டப்பட்டுள்ள பிரம்மா தூய்மையானவர். மனிதர்களின் தந்தை, சூட்சும வதனத்தில் இருக்க முடியாது. விருட்சத்தின் உச்சியில் நிற்கின்ற இவர், சரீரதாரி எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஒரு தூய தேவதை ஆகுவதற்காக அவர் இங்கே குழந்தைகளுடன் யோகத்தில் அமர்ந்திருக்கிறார். இதனாலேயே இவரும் சூட்சும வதனத்தில் காட்டப்பட வேண்டும். பிரஜாபிதா நிச்சயமாக இங்கே தேவைப்படுகிறார். அவரோ சூட்சுமமானவர், இவரோ சரீரதாரி. நீங்களும் கூட இங்கே தேவதைகள் ஆகுவதற்காகவே வந்திருக்கிறீர்கள். இந்த ஞானம் முற்றிலும் புதியது என்பதால், இதில் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். இந்த ஞானத்தை நாங்கள் எந்தச் சமயநூல்களிலும் காண முடியாது. கடவுள் ஒரேயொருவரே. அதிமேலான அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையே அனைவரதும் தந்தை ஆவார். அவரது வசிப்பிடம் பரந்தாமம். அவரை அனைவரும் நினைவு செய்கிறார்கள்: வாருங்கள், மாயையின் நிழல் எங்கள் மீது படிந்ததாலே நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளோம். இவ்விடயங்கள் புதியவர்களின் புத்தியில் புகுவதில்லை. உங்களுக்கு இப்பொழுது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியும். சத்தியயுகத்தில் எங்களில் வெகுசிலரே ஆட்சிசெய்தோம். அங்கே எவ்விதமான அதர்மமும் இருக்க முடியாது. அவர்கள் பல்வேறு விடயங்களைச் சமயநூல்களில் எழுதியிருப்பினும், அவை எவற்றிலுமே எவ்விதமான அர்த்தமும் இல்லை. படிப்படியாக ஏணியில் இறங்கி வரும்பொழுது, இப்பொழுது இறுதியில் நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது உயரே பாய்கிறீர்கள். நீங்கள் கீழே இறங்குவதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றன, நீங்கள் உயரப் பாய்வதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். பின்னர் நீங்கள் முதலில் அமைதி தாமத்திற்கும், அதன்பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள். இது துன்பபூமி. நீங்களே முதலில் இறங்கி வந்தவர்கள், ஆதலால், தந்தையும் முதலில் உங்களையே சந்திக்கிறார். தந்தையினதும் குழந்தைகளினதும் சந்திப்பு, அதாவது, பரமாத்மாவினதும் ஆத்மாக்களினதும் சந்திப்பு இங்கேயே நிகழ்கின்றது. மிகச்சரியான கணிப்பு உள்ளது. நாங்கள் தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு இப்பொழுது 5000 வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் முதலில் சுவர்க்கத்தில் எங்கள் பாகங்களை நடித்தோம், பின்னர் தொடர்ந்தும் கீழிறங்கி வந்தோம். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வந்திருக்கிறீர்கள், ஆகவே அங்கே எஞ்சியிருக்கின்ற சிலரும் இங்கே இறங்கி வருவார்கள். பின்னர் உங்கள் கல்வி முடிவடையும். அனைவரும் இங்கே வரவேண்டும். அங்கே வெறுமை ஆகியவுடன், பாபா அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வார். இது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று. நீங்கள் கற்க வேண்டும். சிலவேளைகள் பாடசாலைக்குச் செல்வதும், ஏனைய வேளைகளில் செல்லாமல் விடுதலும் சட்டம் ஆகாது. கற்பதற்காகப் பல வசதிகளை பாபா உங்களுக்குச் செய்து கொடுத்திருக்கிறார். மற்றும்படி, கல்வியைத் தபால் மூலம் பெறுவது என்பது சாதாரணமாக நடப்பதில்லை. எல்லையற்ற தந்தையின் இந்தக் கல்வியானது எங்கும் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. அவை அதிகளவு தாள்களில் அச்சடிக்கப்படுகின்றன. அவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நீங்கள் ஏழு நாட் பாடநெறியை ஒருமுறை பெற்றதும், உங்களால் எங்கு சென்றும் இதனைக் கற்க முடியும். இந்நேரத்தில் அனைவரும் அரைக்கல்பமாக நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு சூளையில் (பத்தி) இருக்க வேண்டும். ஐந்து விகாரங்கள் எனும் இந்த நோயானது உலகம் முழுவதும் பரவி விட்டது. சத்தியயுகத்தில் நீங்கள் நோயற்ற சரீரங்களையே கொண்டிருந்தீர்கள்; நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், என்றென்றும் செல்வந்தர்களாகவும் இருந்தீர்கள். இப்பொழுது உங்கள் நிலைமை என்னவாகி விட்டது எனப் பாருங்கள்! முழு நாடகமும் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளை நினைவு செய்கிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகளாகவும், பூகோளத்தை ஆட்சி செய்பவர்களாகவும் ஆகுகின்றீர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதுடன், அதில் அனைவரும் ஒரு வரிசைக்கிரமமான அந்தஸ்தையும் பெறுவார்கள். சகல வகையான பிரஜைகளும் தேவைப்படுகிறார்கள். நீங்கள் எத்தனை பேரை உங்களுக்குச் சமனாக, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆக்கியிருக்கிறீர்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தைக் கேட்க வேண்டும். நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக மற்றவர்களை உங்களுக்குச் சமனாக ஆக்குகிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். மாயையுடன் எவ்வாறு யுத்தம் செய்வது என்று தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். இதனாலேயே இவர் யுதிஷ்திரர் எனப் பெயரிடப்பட்டுள்ளார். மாயையை வெற்றி கொள்வதற்காக, அவர் உங்களுக்கு யுத்தம் புரியக் கற்பிக்கிறார். அவர்கள் யுதிஷ்திரரையும், திருதராட்டினனையும் காட்டி உள்ளார்கள். மாயையை வெல்பவர்களே உலகையும் வெல்கின்றார்கள் எனவும் நினைவுகூரப்படுகிறது. எவ்வளவு காலம் நீங்கள் வெற்றியாளர்களாக இருந்தீர்கள் என்றும், எவ்வளவு காலம் நீங்கள் தோற்கடிக்கப்பட்டிருந்தீர்கள் என்பதும் உங்களுக்கு மாத்திரமே தெரியும். இது ஒரு பௌதீக யுத்தமும் இல்லை, அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் யுத்தம் நிகழவும் இல்லை. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையிலும் யுத்தம் நிகழவில்லை. கூறப்பட்டுள்ளது: மாயையும் பொய், சரீரமும் பொய். இந்தப் பாரதம் இப்பொழுது பொய்மைப் பூமியாக இருக்கிறது. இது சத்திய பூமியாக இருந்தது, ஆனால் இது இராவண இராச்சியமான பொழுது, பொய்மைப் பூமியாகியது. அவர்கள் கடவுளைப் பற்றிப் பல்வேறு பொய்களைக் கூறுகிறார்கள். அவரை அவர்கள் அதிகளவு அவதூறு செய்கிறார்கள். அவதூறு செய்யப்பட்ட அவதாரமும் நினைவு கூரப்பட்டுள்ளது. தந்தையே அதிகளவு அவதூறு செய்யப்பட்டுள்ளார். அவர் மீனிலும், முதலையிலும், கல்லிலும், கூழாங்கற்களிலும் அவதாரம் செய்கின்றார் எனக் கூறுவதால், அவர்கள் அவரை அவதூறு செய்கிறார்கள். நற்பண்பைக் கொண்டிருத்தல் என இதனை அழைக்க முடியுமா? நீங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை உங்களுக்கு வேறு எவருமே அறியாத, படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அனைவரும் பாபாவினால் கொடுக்கப்பட்டுள்ள, இந்த ஞானத்தின் மூலம் சற்கதியைப் பெறுகிறார்கள். தாங்களே சீரழிந்த நிலையில் உள்ளவர்களால், எவ்வாறு பிறருக்குச் சற்கதியை அருள முடியும்? நான் வந்து, உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். நீங்கள் தூய்மையானவர்களாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் பூஜிப்பவர்களாகி விட்டீர்கள். தூய்மையற்ற அரசர்கள் தூய்மையான அரசர்களை வழிபடுகிறார்கள். சத்தியயுகத்தில் நீங்கள் இரட்டைக் கிரீடத்தைக் கொண்டிருந்தீர்கள். அரசர்கள் விகாரம் உடையவர்கள் ஆகும்பொழுது, ஒற்றைக்கிரீடம் உடையவர்கள் ஆகுகிறார்கள். அவர்களும் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகளே. ஆனால், தூய்மையற்றவர்கள் இன்னமும் தூய்மையானவர்களை வீழ்ந்து வணங்குகிறார்கள். தூய இல்லறப் பாதைக்கு உரியவர்களாக இருந்த பாரத மக்கள், பின்னர் தூய்மையற்ற இல்லறப் பாதைக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: இது இப்பொழுது இந்த மரண பூமியிலே, இறுதிப் பிறவியாகும். நான் இப்பொழுது உங்களை மீண்டும் சத்தியயுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வந்திருக்கிறேன். 5000 வருடங்களுக்கு முன்னரும் இந்த ஏவுகணை யுத்தம் நடைபெற்றது. இப்பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கும் பொழுதும், ஒரு தாமரை மலர் போலாக வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். பிராமணர்களாகிய நீங்களே தாமரையைப் போல் ஆகுகின்றீர்கள். ஆனால் அவர்கள் இந்த அடையாளத்தை விஷ்ணுவிற்குக் கொடுத்திருக்கிறார்கள், ஏனெனில் நீங்கள் இவ்வாறு சதா இருப்பதில்லை. இன்று நீங்கள் தாமரை மலர் போல் ஆகுகின்றீர்கள், பின்னர் இரு வருடங்கள் சென்றதும், நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகிறீர்கள். இது உங்களின் அதிமேன்மையான குலமாகும். பிராமணர்களாகிய நீங்களே உச்சிக்குடுமிகள். பின்னர் மறுபிறவிகள் எடுக்கும் பொழுது, நீங்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், பின்னர் சூத்திரர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் சூத்திரர்களில் இருந்து உடனடியாகவே தேவர்கள் ஆகுவதில்லை; பிராமணர்களின் உச்சிக்குடுமியும் தேவைப்படுகிறது. பாபா இப்பொழுது பிராமணர்களாகிய உங்களுக்கே கற்பிக்கிறார். ஆகவே, நீங்கள் அத்தகைய தந்தையை விட்டு நீங்கக்கூடாது. பாபா கூறுகிறார்: இந்த ஞானத்தினால் அதிசயித்தவர்கள் எனக்கு உரியவர்களாகி, நான் கூறுவதைச் செவிமடுத்து விட்டுப் பின்னர் ஓடிச் சென்று, மாயைக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள். அவர்கள் துரோகிகளாகி, என்னை அவதூறு செய்தார்கள். சற்குருவை அவதூறு செய்பவர்களால், ஒருபொழுதும் சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாதெனக் கூறப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்து அந்தக் குருமார்கள் சற்கதியை அருள்பவர்கள் அல்ல. ஒரேயொரு அசரீரியான தந்தையே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அவர் அனைவரையும் ஈடேற்றவே வந்திருக்கிறார். எதிர்காலத்தில் மக்கள் புரிந்து கொள்வார்கள், ஆனால் அப்பொழுது காலம் தாமதமாகி விடும். அவர்கள் பின்னர் தங்கள் சொந்தச் சமயங்களுக்குள் செல்வார்கள். தேவதர்மமே அனைத்திலும் அதிமேன்மையான தர்மம். தந்தையுடன் இங்கே அமர்ந்திருக்கின்ற பிராமணர்களாகிய நீங்களே தேவர்களிலும் அதிமேன்மையானவர்கள். ஒரு சரீரத்தைக் கொண்டிராத, சரீரமற்றவரே உங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தை கூறுகிறார்: எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. நான் சிவன் என அழைக்கப்படுகிறேன், எனது பெயர் மாற்றம் அடைவதில்லை. ஏனைய அனைவரது சரீரத்தின் பெயரும் மாற்றம் அடைகிறது. நானே பரமாத்மா, எவராலும் எனது ஜாதகத்தை எழுத முடியாது. நான் எல்லையற்ற இரவிலே, அதனைப் பகலாக்குவதற்கு வருகிறேன். இது இப்பொழுது சங்கமயுகம். இவ்விடயங்களை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கிரகியுங்கள். நீங்கள் இவ்விடயங்களை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வரும்பொழுது, உங்களுக்குப் பெருமளவு நேரம் இருக்கிறது; இங்கே நீங்கள் மிக நன்றாக இந்த ஞானக்கடலைக் கடைய முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கும் பொழுது, அதிமேன்மையான குலத்திற்கு உரியவர்களாக இருக்கின்ற விழிப்புணர்வு மூலம், தூய தாமரை மலரைப் போல் ஆகுங்கள். என்றுமே சற்குருவை அவதூறு செய்யாதீர்கள்.

2. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். ஒரு சுயதரிசனச் சக்கரதாரியாகி, பிறரையும் அவ்வாறு ஆக்குங்கள். உங்களுக்கு நேரம் உள்ள பொழுதெல்லாம் நிச்சயமாக இந்த ஞானக்கடலைக் கடையுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா நன்மை செய்யும் உணர்வுகளைக் கொண்டிருப்பதன் மூலம் மற்றவர்களிடம் இருந்து நற்குணங்களை எடுத்துக் கொள்வதனால் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

உங்களின் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவதற்கு, சதா நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் நற்குணங்களை எடுத்துக் கொண்டால், தளம்பல் அடைய மாட்டீர்கள். நற்குணங்களை எடுத்துக் கொள்வது என்றால், நன்மை செய்யும் உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். குறைபாடுகளிலும் நற்குணங்களைப் பார்த்தல் என்றால் நற்குணங்களை எடுத்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். எனவே, குறைபாடுகளைக் கொண்டிருப்பவர்களிலும் நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வாறு அந்த மக்கள் தமது குறைபாடுகளில் திடசங்கற்பத்துடன் இருக்கிறார்களோ, அதேபோல் நீங்கள் உங்களின் நற்குணங்களில் திடசங்கற்பத்துடன் இருக்க வேண்டும். நற்குணங்களின் வாடிக்கையாளர் ஆகுங்கள், குறைபாடுகளின் வாடிக்கையாளர் அல்ல.

சுலோகம்:
தம்மிடம் உள்ள அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்து, இலேசாக ஆகுபவர்கள் தேவதைகள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காக நீங்கள் தந்தையைப் பின்பற்றுகிறீர்கள். எனவே, தந்தை பிரம்மா எவ்வாறு முழுமை ஆகினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். அவரின் சிறப்பியல்புகள் என்ன? அவரின் முழுமைக்கான விசேடமான அடிப்படை என்ன? தந்தை பிரம்மா தனது ஒவ்வொரு மூச்சையும் ஒவ்வொரு விநாடியையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். எனவே, தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு, அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, வெற்றி சொரூபம் ஆகும் இலட்சியத்தைக் கொண்டிருங்கள்.