05.10.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    03.03.2007     Om Shanti     Madhuban


இந்த ஞானத்தின் சிவப்பு நிறத்தையும் இறை சகவாசத்தின் நற்குணங்கள் மற்றும் சக்திகளின் நிறத்தையும் பிரயோகிப்பதே உண்மையான ஹோலியைக் கொண்டாடுவதே ஆகும்.


இன்று பாப்தாதா தனது அதிர்ஷ்டம் மிக்க புனிதம் மிக்க குழந்தைகளுடன் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளார். உலக மக்கள் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் குழந்தைகளான அதைக் கொண்டாடுவது மட்டுமல்ல - கொண்டாடுவது என்றால் அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். எனவே நீங்கள் புனிதமானவர்கள், அதாவது, தூய ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் என்ன வகையான ஆத்மாக்கள்? நீங்கள் புனிதமானவர்கள். அதாவது, மகத்தான தூய ஆத்மாக்கள். உலக மக்கள் பௌதீக நிறங்களால் தமது சரீரங்களை நிறமூட்டுகிறார்கள். ஆனால் ஆத்மாக்களான நீங்கள் என்ன நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள்? எல்லாவற்றிலும் சிறந்த நிறம் என்ன? எந்த நிறம் அழியாதது? ஆத்மாக்களான உங்களை இறை சகவாசம் என்ற நிறத்தால் நிறம் ஊட்டியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் மூலம் ஆத்மாக்களான நீங்கள் தூய்மை எனும் நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். இறை சகவாசம் என்ற இந்த நிறம் மிகவும் மகத்தானதும் இலகுவானதும் ஆகும். இப்போதும் இறுதியில், மக்கள் இறை சகவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் சத்சங்கத்திற்கு (சத்தியமான சகவாசம்) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சத்சங்கம் என்றால் இறை சகவாசத்தில் இருப்பது எல்லாவற்றிலும் மிக இலகுவானது என்பதே அதன் அர்த்தம். அவரின் சகவாசத்தில் இருப்பது அதிமேலானவரின் சகவாசத்தில் இருப்பது கஷ்டமா? எப்படி இறைவன் அதிமேலானவரோ, குழந்தைகளான நீங்களும் இந்தச் சகவாசத்தின் நிறத்தால் நிறமூட்டப்பட்டு அதிமேலானர்களாகவம் தூய மகாத்மாக்களாகவும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களாகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் இந்த அழியாத சகவாசத்தின் நிறத்தை விரும்புகிறீர்கள்தானே? உலக மக்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். இறை சகவாசம் மட்டுமல்ல, அவர்கள் நினைவைக் கொண்டிருப்பதற்கும் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். எவ்வாறாயினும் ஆத்மாக்களான உங்களுக்குத் தந்தையைத் தெரியும். அத்துடன் நீங்கள் ‘எனது பாபா’ என உங்களின் இதயபூர்மாகக் கூறியுள்ளீர்கள். தந்தையும் எனது குழந்தைகளே எனக் கூறினார். நீங்கள் நிறம் ஊட்டப்பட்டுள்ளீர்கள். தந்தை எந்த நிறத்தால் உங்களை நிறமூட்டினார்? அவர் உங்களை சிவப்பு நிறத்தால் நிறமூட்டினார்(குலால் - வழிபடுவதற்காக விசேடமாகப் பயன்படுத்தப்படும் சிவப்புப் பொடி). அவர் உங்களை நற்குணங்களாலும் சக்திகளாலும் நிறமூட்டினார். அந்த நிறத்தால் நீங்கள் தேவதேவியர்கள் ஆகினீர்கள். அதனால் இப்போதும் கலியுகக் கடைசியிலும் உங்களின் தூய ரூபங்கள் தேவாத்மாக்களின் ரூபத்தில் வழிபடப்படுகின்றன. பலர் தூய ஆத்மாக்கள் ஆகுகிறார்கள். பலர் மகாத்மாக்களாகவும் புண்ணியாத்மாக்களாகவும் ஆகுகிறார்கள். ஆனால் தேவதேவியர்களின் ரூபத்தில் உங்களின் தூய்மை எத்தகையது என்றால் ஆத்மாக்களான நீங்களும் தூய்மை ஆகுகிறீர்கள். உங்களின் சரீரங்களும் தூய்மை ஆகுகின்றன. உங்களிடம் எப்படி இத்தகைய மேன்மையான தூய்மை ஏற்பட்டது? சகபாடியின் நிறத்தினாலேயே. இறைவன் எங்கே எனக் குழந்தைகளான உங்களிடம் யாராவது கேட்கும்போது நீங்கள் எல்லோரும் போதையுடன் பேசுகிறீர்கள். ஆம் அவர் பரந்தாமத்தில் இருக்கிறார். ஆனால் இப்போது, சங்கமயுகத்தில் இறைவன் உங்களுடன் எங்கே இருக்கிறார்? நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? இப்போது, இறைவன் தூய ஆத்மாக்களான எங்களின் இதய சிம்மாசனத்தை மட்டுமே விரும்புகிறார். இது அப்படித்தானே? தந்தை உங்களின் இதயங்களில் இருக்கிறார், நீங்களும் தந்தையின் இதயத்தில் இருக்கிறீர்கள். அவரின் இதயத்தில் இருப்பவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் இருக்கிறீர்களா? அச்சா. மிகவும் நல்லது. நீங்கள் ஒன்றிணைந்து இருப்பதனால் உங்களின் இதயத்தைத் தவிர வேறு எந்த இடத்தையும் கடவுள் விரும்பவில்லை என நீங்கள் போதையுடன் சொல்கிறீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள்தானே? சில குழந்தைகள் தாம் ஒன்றிணைந்து இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் தந்தையின் சகவாசத்தின் நன்மையைப் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் அவரை உங்களின் சகபாடி ஆக்கியுள்ளீர்கள். அது உறுதியாக உள்ளது. ‘எனது பாபா!’ என நீங்கள் கூறினீர்கள். அதனால் நீங்கள் அவரை உங்களின் சகபாடி ஆக்கியுள்ளீர்கள். ஆனால் அதற்கும் ஒவ்வொரு கணமும் அவரின் சகவாசத்தை அனுபவம் செய்வதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இதிலேயே நீங்கள் வரிசைக்கிரமமாக நன்மை பெறுவதை பாப்தாதா பார்க்கிறார். அதற்கான காரணம் என்னவென்பதை நீங்கள் எல்லோரும் மிக நன்றாக அறிவீர்கள்.

பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார்: பழைய சம்ஸ்காரங்களின் வடிவில் இராவணனின் பழைய சொத்து ஏதாவது இன்னமும் உங்களின் இதயத்தில் எஞ்சி இருந்தால் இராவணனுக்குச் சொந்தமான அந்த விடயங்கள் உங்களுடையவை அல்ல. அவை வேறொருவருக்குச் சொந்தமானவை. உங்களுக்குச் சொந்தமான எதையும் நீங்கள் ஒருபோதும் உங்களுடன் வைத்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அதைக் கொடுத்து விடுவீர்கள். எவ்வாறாயினும் பாப்தாதா பார்த்திருக்கிறார், அத்துடன் குழந்தைகள் தமது இதயபூர்வமான உரையாடல்களின் போது கூறுவதையும் கேட்டிருக்கிறார்: பாபா நான் என்ன செய்வது? எனது சம்ஸ்காரங்கள் இப்படி இருக்கிறதே. எனது சம்ஸ்காரங்கள் எனச் சொல்லும் வகையில் அவை உங்களின் சம்ஸ்காரங்களா? இது எனது பழைய சம்ஸ்காரம், எனது பழைய சுபாவம் எனச் சொல்வது சரியா? இது சரியா? இப்படிச் சொல்வது சரி என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் எவரும் கைகளை உயர்த்தவில்லை. அப்படி என்றால் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் அதைத் தவறுதலாகச் சொல்கிறீர்களா? நீங்கள் மரணித்து வாழ்வதால் இப்போது உங்களின் குடும்பப் பெயர் என்ன? உங்களின் கடந்த பிறவியின் குடும்பப்பெயர் உங்களுக்கு இருக்கிறதா அல்லது பிகே என்பதே உங்களின் குடும்பப் பெயரா? உங்களின் குடும்பப் பெயர் என்று எதை எழுதுகிறீர்கள்? பிகே அல்லது இன்னார் என்றா? இன்னார் என்றா? நீங்கள் மரணித்து வாழ்வதால் எப்படிப் பழைய சம்ஸ்காரங்கள் உங்களுடையதாகும்? பழைய சம்ஸ்காரங்கள் வேறொருக்கு உரியவை. ஆவை உங்களுடையவை அல்ல. எனவே இந்த ஹோலியின் போது நீங்கள் எதையாவது எரிப்பீர்கள்தானே? ஹோலியில் ஏதாவது எரிக்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் நிறமூட்டுகிறார்கள். எனவே இந்த ஹோலியில் நீங்கள் எல்லோரும் எதை எரிப்பீர்கள்? எனது சம்ஸ்காரங்கள். பிராமண வாழ்க்கையின் அகராதியில் இருந்து இதை நீக்குங்கள். வாழ்க்கையும் ஓர் அகராதிதான் இல்லையா? எனவே, இப்போது உங்களின் எண்ணங்களில் மட்டுமல்ல, உங்களின் கனவுகளிலேனும் ஒருபோதும் பழைய சம்ஸ்காரங்களை உங்களின் சம்ஸ்காரங்கள் என்று நினைக்காதீர்கள். இப்போது தந்தையின் சம்ஸ்காரங்கள் எவையோ அவையே உங்களின் சம்ஸ்காரங்களும். உங்களின் இலட்சியம் தந்தைக்குச் சமமானவர் ஆகுவது என நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள் அல்லவா? எனவே, நீங்கள் எல்லோரும் உங்களின் இதயபூர்வமாக இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தை உங்களுக்கே சத்தியம் செய்துள்ளீர்களா? தவறுதலாகவேனும் ‘எனது’ என ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘எனது, எனது’ என நீங்கள் சொல்லும்போது அந்தப் பழைய சம்ஸ்காரங்கள் தமது அனுகூலத்தை எடுத்துக் கொள்கின்றன. ‘எனது’ என நீங்கள் சொன்னதும் அவை உங்களுடனேயே குடியேறி விடுகின்றன. அவை உங்களை விட்டுப் போவதில்லை. பாப்தாதா உங்கள் எல்லோரையும் எந்த ரூபத்தில் காண விரும்புகிறார்? உங்களுக்கு இது தெரியும், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறீர்கள். ஒவ்வொரு குழந்தையும் நெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்தவராக ஒரு சுய இராச்சிய அதிகாரம் உள்ள சுய இராச்சிய அதிகாரிக் குழந்தையாக இருப்பதையே பாப்தாதா காண விரும்புகிறார். தங்கியிருக்கும் குழந்தையாக அல்ல. அவர் உங்களை சுய இராச்சிய அதிகாரிக் குழந்தையாக கட்டுப்படுத்தும் சக்தியையும் ஆளும் சக்தியையும் கொண்டவராக அத்துடன் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாகவும் பார்க்கிறார். நீங்கள் உங்களை என்ன ரூபத்தில் பார்க்கிறீர்கள்? இந்த ரூபத்தில்தானே? நீங்கள் உங்களுக்கே அதிபதிகள், அப்படித்தானே? நீங்கள் தங்கியிருப்பவர்கள் இல்லையல்லவா? நீங்கள் எல்லோரும் தங்கியிருக்கும் ஆத்மாக்கள் எல்லோரையும் உரிமை உள்ளவர்களாக ஆக்குபவர்கள். நீங்கள் தங்கியிருக்கும் ஆத்மாக்களின் மீது கருணை கொண்டு அவர்களையும் உரிமை உள்ளவர்களாக ஆக்குபவர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் இங்கே ஹோலியைக் கொண்டாட வந்துள்ளீர்கள் அப்படித்தானே?

நீங்கள் எல்லோரும் அன்பெனும் விமானத்தில் இங்கே வந்திருப்பதைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்கிறார். உங்கள் எல்லோரிடமும் இந்த விமானம் உள்ளதல்லவா? உங்களிடம் இந்த விமானம் உள்ளதா? நீங்கள் பிறவி எடுத்தவுடனேயே ஒவ்வொரு பிராமணருக்கும் பிறந்தநாள் பரிசாக மனமெனும் விமானத்தை பாப்தாதா வழங்கியுள்ளார். எனவே, உங்கள் எல்லோரிடமும் மனமெனும் விமானம் உள்ளதல்லவா? நீங்கள் இதற்காக உங்களின் கைகளை மிக நன்றாக உயர்த்துகிறீர்கள். இது ஓகேயா? பெற்றோல் ஓகேயா? இறக்கைகள் ஓகேயா? அதை ஆரம்பிப்பதற்கான சாவி ஓகேயா? இவை அனைத்தையும் நீங்கள் சோதித்தீர்களா? இது எத்தகைய விமானம் என்றால் ஒரு விநாடியில் அதனால் மூவுலகங்களுக்கும் பயணம் செய்ய முடியும். தைரியம் மற்றும் ஊக்கம், உற்சாகம் என்ற இரண்டு இறக்கைகளும் நன்றாக இருந்தால் ஒரு விநாடியில் அதை ஆரம்பிக்க முடியும். அதை ஆரம்பித்து வைப்பதற்கான சாவி என்ன? எனது பாபா. நீங்கள் ‘எனது பாபா’ என்று சொன்ன உடனேயே உங்களின் மனம் எங்கே அடைய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அங்கே சென்று அடைந்துவிடும். இரண்டு இறக்கைகளும் நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்கக்கூடாது. ஏன்? பாப்தாதாவின் சத்தியமும் ஆசீர்வாதமும் என்னவென்றால்: நீங்கள் தைரியமாக ஓரடி எடுத்து வைக்கும்போது தந்தை ஆயிரம் அடிகளுடன் உங்களுக்கு உதவி செய்வார். ஒரு சம்ஸ்காரம் எவ்வளவு பலமானதாக இருந்தாலும் ஒருபோதும் தைரியத்தை இழக்காதீர்கள். ஏன்? சர்வசக்திவான் தந்தையே உங்களின் உதவியாளர். நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். அதனால் அவர் எப்போதும் பிரசன்னமாக இருக்கிறார். சர்வசக்திவானின் ஒன்றிணைந்த தந்தையின் மீது தைரியமாக உரிமையைக் கொண்டிருந்து உறுதியாக இருங்கள். இது நடக்கவே வேண்டும், தந்தை என்னுடையவர், நான் தந்தைக்குச் சொந்தமானவன். ஒருபோதும் இந்தத் தைரியத்தை மறக்காதீர்கள். அப்போது என்ன நடக்கும்? நான் இதை எப்படிச் செய்வது? (கெய்ஸே) என நீங்கள் நினைக்கும்போது, அது மாறிவிடும். அதற்குப் பதிலாக இதை இப்படிச் செய்யுங்கள் (எய்ஸே) என்று ஆகுங்கள். எப்படி என்னால் இதைச் செய்ய முடியும்? நான் என்ன செய்வது? என்பதாக இருக்கக்கூடாது. இல்லை. இது இந்த முறையில் ஏற்கனவே பூர்த்தியாகி விட்டது. நான் இதைச் செய்கிறேன், அது நடக்கும், அது நடக்க வேண்டியுள்ளது, தந்தை எப்படியும் உதவி செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள். அது ஏற்கனவே பூர்த்தியாகி விட்டது. புத்தியில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு உதவி செய்யத் தந்தை கடமைப்பட்டுள்ளார். நீங்கள் அதன் வடிவத்தைச் சிறிது மாற்றி விடுகிறீர்கள். நீங்கள் தந்தையின் மீது உரிமை கோருகிறீர்கள், ஆனால் அதன் வடிவத்தை மாற்றிவிடுகிறீர்கள். பாபா, நீங்கள் உதவி செய்வீர்கள்தானே? நீங்கள் அதைச் செய்யக் கடமைப் பட்டுள்ளீர்கள்தானே? ‘நீங்கள் செய்வீர்கள்தானே?’ என்பதை நீங்கள் சேர்த்துக் கொள்கிறீர்கள். நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டவர்களுக்கு வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே பாப்தாதா அவர்களின் நெற்றிகளில் வெற்றித் திலகத்தை இட்டுள்ளார். உங்களின் தீவிர முயற்சிக்குத் திடசங்கற்பத்தை சாவி ஆக்குங்கள். நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்துள்ளீர்கள். பாப்தாதா இதயபூர்வமான உரையாடல்களைக் கேட்கும்போது அவற்றில் உங்களுக்கு அதிகளவு தைரியம் காணப்படுகிறது. அத்துடன் நீங்கள் சக்திவாய்ந்த திட்டங்களையும் செய்கிறீர்கள். ஆனால் அந்தத் திட்டங்கள் நடைமுறை ஆகும்போது, நீங்கள் அதை ஒரு தெளிந்த புத்தியுடன் செய்வதில்லை. அதில் நீங்கள் சிறிது ‘இருக்க வேண்டும்’ என்பதைப் போடுகிறீர்கள். ‘அது நடக்க வேண்டும்.’ உங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் எண்ணங்கள் இவையல்ல. ஏனென்றால் நீங்கள் அவற்றுடன் வீணான எண்ணங்களைக் கலந்து விடுகிறீர்கள்.

இப்போது, காலத்திற்கேற்ப, நீங்கள் தெளிந்த புத்திகளைக் கொண்டவர்கள் ஆகி உங்களின் எண்ணங்களை நடைமுறையாக ஆக்க வேண்டும். சிறிதளவேனும் பலவீனமான எண்ணங்கள் வெளிப்பட அனுமதிக்காதீர்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நாங்கள் இதை முதல் தடவை செய்யவில்லை. நாங்கள் இதைப் பல தடவைகள் செய்திருக்கிறோம். இப்போது, அதை மீண்டும் செய்கிறோம், அவ்வளவுதான். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் எத்தனை தடவைகள் வெற்றி நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதை நினைவு செய்யுங்கள். நீங்கள் பல தடவைகள் வெற்றி நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். பல கல்பங்களாக வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும். இந்த உரிமையுடன் நம்பிக்கை உள்ள புத்திகளைக் கொண்டவர்கள் ஆகி திடசங்கற்பம் என்ற சாவியைப் பயன்படுத்துங்கள். பிராமண ஆத்மாக்களான உங்களுக்கு இல்லாமல் வெற்றி எங்கே செல்ல முடியும்? பிராமண ஆத்மாக்களான உங்களுக்கு வெற்றி பிறப்புரிமையாகும். அது உங்களின் கழுத்து மாலையாக உள்ளது. இந்தப் போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா? இந்த போதை உங்களுக்கு இருக்கிறதா? ‘அது நடக்குமா அல்லது இல்லையா’ என நீங்கள் நினைப்பதில்லை, அல்லவா? அது ஏற்கனவே பூர்த்தியாகி விட்டது. உங்களின் புத்திகளில் இந்தளவு நம்பிக்கையுடன் ஒவ்வொரு பணியையும் செய்யுங்கள். வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. நீங்கள் இத்தகைய நம்பிக்கை உடைய புத்தியைக் கொண்ட ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் அத்தகையவர்கள். ‘நான் வெற்றி பெறுபவனா இல்லையா?’ என நினைக்காதீர்கள். நீங்கள் வெற்றி பெறுபவர்கள். இந்தப் போதையை மட்டும் கொண்டிருங்கள். நீங்கள் அப்படி இருந்தீர்கள், அப்படி இருக்கிறீர்கள், அப்படி இருப்பீர்கள். எனவே, நீங்கள் இத்தகைய புனிதமான ஆத்மாக்கள், அப்படித்தானே? நீங்களே அதிபுனிதமானவர்கள். எனவே, பாப்தாதாவின் ஞானத்தின் குலால் (சிவப்பு நிறம்) உடன் நீங்கள் ஹோலி கொண்டாடினீர்கள். வேறு எதை நீங்கள் விளையாடுவீர்கள்?

உங்களில் பெரும்பாலானோருக்கு மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். ‘நாங்கள் இதைச் செய்வோம், நாங்கள் அதைச் செய்வோம், இது நடக்கும்.’ பாப்தாதாவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் இந்த ஊக்கமும் உற்சாகமும் சதா வெளிப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், அது சிலவேளைகளில் அமிழ்ந்திருக்கும். அது சிலவேளைகளில் வெளிப்பட்டிருக்கும். அது அமிழ்ந்திருக்கக் கூடாது. அது வெளிப்பட்டே இருக்க வேண்டும். ஏனென்றால், சங்கமம் முழுவதும் உங்களுக்கு ஒரு பண்டிகையே ஆகும். அவர்கள் சிலவேளைகளில் மட்டுமே ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் அதிகளவு நேரத்திற்குப் பதட்டத்துடனேயே இருக்கிறார்கள். அதனால் பண்டிகை வரும்போது தம்மால் ஆடிப் பாடி உண்டு மகிழலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அது தங்களை மாற்றும் என்று நினைக்கிறார்கள். எவ்வாறாயினும் நீங்களோ ஒவ்வொரு விநாடியும் ஆடிப் பாடுகிறீர்கள். நீங்கள் சதா உங்களின் மனதில் தொடர்ந்து சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறீர்கள்தானே? அல்லது, இல்லையா? நீங்கள் நடனம் ஆடுகிறீர்களா? உங்களுக்கு சந்தோஷத்தில் நடனம் ஆடுவது எப்படி எனத் தெரியுமா? நடனம் எப்படி ஆடுவது என உங்களுக்குத் தெரியும். எப்படி நடனம் ஆடுவது எனத் தெரிந்து கொண்டவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எப்படி நடனம் ஆடுவது என்பது உங்களுக்குத் தெரியும். நல்லது. எப்படி நடனம் ஆடுவது என்பது தெரிந்திருந்தால் பாராட்டுக்கள். எனவே, நீங்கள் சதா நடனம் ஆடுகிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும் ஆடுகிறீர்களா?

பாப்தாதா இந்த வருடத்திற்காக உங்களுக்கு வீட்டுவேலை கொடுத்துள்ளார்: இந்த இரண்டு வார்த்தைகளை ஒருபோதும் நினைக்காதீர்கள் - சிலவேளைகளில், ஏதோ ஒன்று. நீங்கள் அதைச் செய்துள்ளீர்களா? அல்லது, ‘சிலவேளைகளில்’ இன்னமும் இருக்கிறதா? ‘சிலவேளைகளில்’ மற்றும் ‘ஏதோ ஒன்று’ இப்போது முடிவடைய வேண்டும். நடனம் ஆடுவதில் களைப்பு அடைதல் என்ற கேள்வியே இல்லை. நீங்கள் படுத்திருந்தாலென்ன, வேலை செய்து கொண்டிருந்தாலென்ன, நடந்து கொண்டிருந்தாலோ அல்லது அமர்ந்திருந்தாலோ, உங்களாலோ இந்த சந்தோஷ நடனத்தை ஆட முடியும். அத்துடன் நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுள்ள பேறுகளின் பாடல்களையும் உங்களால் பாட முடியும். உங்களுக்கு அந்தப் பாடலைத் தெரியும், அல்லவா? எல்லோருக்கும் அந்தப் பாடலைத் தெரியும். சிலருக்கு வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தெரியும். ஏனையோருக்கு அது தெரியாமல் இருக்கும். ஆனால் எல்லோருக்குமே பேறுகளின் பாடல், தந்தையின் நற்குணங்களின் பாடல் தெரியும். எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையே, ஒவ்வொரு கணமும் ஒரு பண்டிகையே. சதா ஆடிப் பாடுங்கள். பாபா உங்களுக்குச் செய்வதற்கு என்று வேறு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இந்த வேலையை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்: ஆடிப் பாடுங்கள். எனவே இரசியுங்கள். நீங்கள் ஏன் ஒரு சுமையைச் சுமக்கிறீர்கள்? இரசியுங்கள், ஆடிப் பாடுங்கள், அவ்வளவுதான். அச்சா. நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்கள்தானே? இப்போது நீங்கள் நிறங்களுடனும் ஹோலி கொண்டாடுவீர்களா? அச்சா, பக்தர்கள் உங்களைப் பிரதி செய்வார்கள், அப்படித்தானே? நீங்கள் இறைவனுடன் ஹோலி கொண்டாடுகிறீர்கள். அதனால், பக்தர்களும் தேவதேவியர்களான உங்களில் யாராவது ஒருவருடன் ஹோலி கொண்டாடுகிறார்கள். அச்சா.

இன்று, சில குழந்தைகள் ஈமெயில்கள், கடிதங்களை அனுப்பி உள்ளார்கள். அத்துடன் அவர்கள் தொலைபேசியிலும் அழைத்துள்ளார்கள். என்ன வசதிகள் இருந்தாலும் அந்த வழிமுறைகளால் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் அதை அனுப்ப நினைத்த கணமே, அது பாப்தாதாவை வந்தடைந்து விடுகிறது. எவ்வாறாயினும், எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் எல்லோரும் விசேடமாக நினைவு செய்கிறீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்தீர்கள். பாப்தாதாவும் அதற்குப் பிரதிபலனாக, ஒவ்வொரு குழந்தைக்கும் பலமில்லியன் மடங்கு ஆசீர்வாதங்களையும் தனது இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அவரின் பெயருக்கும் சிறப்பியல்புக்கும் ஏற்ப வழங்குகிறார். திரான்ஸ் செய்தியாளர் ஒருவர் பாபாவிடம் செல்லும்போது, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தனது நினைவை வழங்குவார்கள். திரான்ஸ் செய்தியாளரின் மூலமாக நினைவை அனுப்பாதவர்களின் நினைவும் பாப்தாதாவை வந்தடைகின்றன. இதுவே இறையன்பின் சிறப்பியல்பாகும். இந்த ஒவ்வொரு நாட்களும் மிகவும் அழகானவை. நீங்கள் கிராமங்களிலோ அல்லது பெரிய நகரங்களிலோ இருந்தாலும் கிராமங்களில் இருப்பவர்களின் நினைவும் அவர்களிடம் வசதிகள் இல்லாதபோதும் தந்தையை வந்தடைகின்றன. ஏனென்றால், தந்தையிடம் பல ஆன்மீக வசதிகள் உள்ளன. அச்சா.

இன்றைய உலகில், மருத்துவர்கள் எல்லோரையும் மருந்து எடுப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக தேகாப்பியாசம் செய்யச் சொல்கிறார்கள். பாப்தாதாவும் கூறுகிறார்: போராடுவதை நிறுத்துங்கள், சிரமப்படுவதை நிறுத்துங்கள். நாள் முழுவதும் அவ்வப்போது ஐந்து நிமிடங்களுக்கு உங்களின் மனதிற்கு அப்பியாசம் கொடுங்கள். ஒரு நிமிடம் அசரீரியானவர் ஆகுங்கள். ஒரு நிமிடத்திற்கு தேவதை ஆகுங்கள். ஒரு நிமிடத்திற்கு சகல கலாவல்ல சேவையாளர் ஆகுங்கள். ஒவ்வொரு தடவையும் ஐந்து நிமிடங்களுக்கு நாள் முழுவதும் இந்த மன அப்பியாசத்தைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாக இருப்பதுடன் சிரமப்படுவதில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள். இது சாத்தியம்தானே? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள்? மதுவனமே அத்திவாரம் ஆகும். மதுவனத்தின் அதிர்வலைகள் தானாகவே எங்கும் சென்றடைகின்றன. மதுவனத்தில் ஏதாவது நடக்கும்போது, அது அடுத்த நாளே பாரதம் முழுவதிலும் உள்ள வெவ்வேறு இடங்களைச் சென்றடைகிறது. மதுவனத்தில் பல வசதிகள் உள்ளன. அது நல்லதோ அல்லது ஏதாவது முயற்சியோ எதுவும் மறைந்திருக்காது. எனவே, மதுவனம் எதைச் செய்தாலும் அந்த அதிர்வலைகள் எங்கும் இயல்பாகவும் இலகுவாகவும் பரவும். முதலில், மதுவனவாசிகள் வீணான எண்ணங்களை நிறுத்த வேண்டும். இது சாத்தியமா? நீங்கள் எல்லோரும் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள், அல்லவா? மதுவனவாசிகளே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எனவே, வீணானவை எல்லாவற்றையும் முடிப்பதற்கு மதுவனவாசிகளான நீங்கள் உங்களுக்கு இடையே ஒரு திட்டத்தைச் செய்ய வேண்டும். பாப்தாதா உங்களின் எண்ணங்களை முடிக்க வேண்டும் என பாப்தாதா சொல்லவில்லை. ஆனால் வீணான எண்ணங்கள் எல்லாவற்றையும் முடிக்கும்படியே கூறுகிறார். அவற்றில் எந்தவித நன்மையும் இல்லை, துயரம் மட்டுமே உள்ளது. இது சாத்தியமா? மதுவனவாசிகளான நீங்கள் உங்களுக்கு இடையே ஒரு மீட்டிங்கைச் செய்து இதைச் செய்வோம் என உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதைச் செய்வீர்கள், நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள்! இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! வாழ்த்துக்கள்! பாப்தாதா தனது இதயபூர்வமாக உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். வாழ்த்துக்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தைரியம் உள்ளது, அவர்களால் தாம் விரும்பிய எதையும் செய்ய முடியும். மற்றவர்களையும் உங்களால் அதைச் செய்ய வைக்க முடியும். மதுவனத்தில் சகோதரிகளும் இருக்கிறார்கள். சகோதரிகளே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள்! மீட்டிங் வையுங்கள். தாதிகளே, அவர்களுடன் ஒரு மீட்டிங் வையுங்கள். பாருங்கள், அவர்கள் எல்லோரும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். இப்போது, கைகளின் கௌரவத்தைப் பேணுங்கள். அச்சா. தந்தை பிரம்மா இறுதி ஆசீர்வாதத்தை வழங்கினார்: அசரீரி, விகாரமற்றவர், அகங்காரம் அற்றவர். தந்தை பிரம்மாவின் இந்தக் கடைசி ஆசீர்வாதம், குழந்தைகளான உங்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருந்தது. எனவே, ஒரு விநாடியில் தந்தை பிரம்மாவின் பரிசை உங்களின் மனதால் ஏற்றுக் கொள்ள முடியுமா? நீங்கள் தந்தையிடம் இருந்த பெற்ற பரிசை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் சதா போடுவீர்கள் என்ற திடசங்கற்பமான எண்ணத்தை உங்களால் கொண்டிருக்க முடியுமா? ஏனென்றால், ஆதிதேவரிடம் இருந்து பெற்ற பரிசு, சிறியதொரு விடயம் அல்ல. பிரம்மாவே முப்பாட்டனார் ஆவார். அவரிடம் இருந்து பெற்ற பரிசு சிறியதொரு விடயம் அல்ல. எனவே, உங்களின் சொந்த முயற்சிக்கேற்ப, இன்றைய ஹோலி என்றால் ஏற்கனவே நடந்தவை - ஹோ லி, ஹோ கய் (அது நடந்து முடிந்துவிட்டது) என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். ஆனால் இப்பொழுதில் இருந்தே, நீங்கள் இந்தப் பரிசை சதா வெளிப்படச் செய்து, சேவைக்கான பிரதிபலனை தந்தை பிரம்மாவிற்கு வழங்குவீர்கள். பாருங்கள், தந்தை பிரம்மா கடைசி நாள் வரை கடைசிக் கணம் வரை சேவை செய்தார். இதுவே சேவை செய்வதிலும் குழந்தைகளுக்காகவும் தந்தை பிரம்மாவின் அன்பின் அடையாளம் ஆகும். எனவே, தந்தை பிரம்மாவிற்குப் பிரதிபலனைக் கொடுப்பது என்றால், உங்களுக்குக் கொடுத்த பரிசை மீண்டும் மீண்டும் மீட்டல் செய்து, அதை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் என்று அர்த்தம். எனவே, தந்தை பிரம்மாவின் மீதுள்ள அன்பிற்கான பிரதிபலன், நீங்கள் எல்லோரும் உங்களின் இதயங்களில் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தந்தை பிரம்மாவிடம் இருந்து அன்பெனும் பரிசிற்கான பிரதிபலனைக் கொடுப்பதாகும். அச்சா.

எங்கும் உள்ள மிகுந்த அதிர்ஷ்டசாலி மற்றும் அதிபுனிதமான குழந்தைகள் எல்லோருக்கும் திடசங்கற்பமான எண்ணங்களின் சாவியை நடைமுறை வடிவத்தில் எப்போதும் போடுகின்ற தைரியசாலிக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு வகையான சேவைகளைச் செய்வதில் சதா தமது மனங்களை மும்முரமாக வைத்திருப்பவர்களுக்கும் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதிக்கும் குழந்தைகளுக்கும் தமது உற்சாகத்தை ஒவ்வொரு நாளும் பேணுவதுடன் ஒவ்வொரு நாளையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடுபவர்களுக்கும் சதா சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா ஆத்ம உணர்வுடையவராகி, அன்பை அனுபவம் செய்வதன் மூலமும் அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதன் மூலமும் எல்லாவற்றையும் மறப்பீர்களாக.

உங்களின் விழிப்புணர்விலும் உங்களின் ஸ்திதியிலும் அன்பு இருக்க வேண்டும். அதனால் உங்களின் செயல்கள், வார்த்தைகள், தொடர்புகள், உறவுமுறைகளில் நீங்கள் அன்பிலே திளைத்திருப்பீர்கள். அப்போது நீங்கள் ஏனைய அனைத்தையும் மறந்து, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவீர்கள். அன்பானது தந்தையுடன் உங்களை ஒரு நெருக்கமான உறவுமுறையில் கொண்டு வருவதுடன் உங்களை ஒரு முழுமையான துறவியாகவும் ஆக்கும். அன்பெனும் இந்த சிறப்பியல்பாலும் அன்பிலே திளைத்திருக்கும் இந்த ஸ்திதியாலும் உங்களால் ஆத்மாக்கள் எல்லோருடைய பாக்கியத்தையும் அதிர்ஷ்டத்தையும் வெளிப்படச் செய்ய முடியும். இந்த அன்பே, அதிர்ஷ்டப் பூட்டின் சாவி ஆகும். இதுவே மாஸ்ரர் சாவி. இந்தச் சாவியால் உங்களால் எந்தவோர் அபாக்கியசாலி ஆத்மாவையும் பாக்கியசாலியாக ஆக்க முடியும்.

சுலோகம்:
உங்களின் சொந்த மாற்றத்திற்கான கணத்தை நீங்கள் நிச்சயம் செய்யும்போது, உலக மாற்றம் தானாகவே நடக்கும்.

அவ்யக்த சமிக்கை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

மனதின் சக்திக்கான கண்ணாடி, உங்களின் வார்த்தைகளும் செயல்களும் ஆகும். இது இந்த ஞானம் இல்லாத ஆத்மாக்களோ அல்லது இந்த ஞானத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களோ யாராக இருந்தாலும் அவர்கள் யாராவது ஒருவருடன் ஓர் உறவுமுறையில் அல்லது தொடர்பில் வரும்போது, உங்களின் வார்த்தைகளும் செயல்களும் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைந்திருக்க வேண்டும். தூய, சக்திவாய்ந்த மனங்களைக் கொண்டவர்கள், இயல்பாகவே தூய, சக்திவாய்ந்த வார்த்தைகளையும் செயல்களையும் கொண்டிருப்பார்கள். உங்களிடம் சக்திவாய்ந்த மனம் இருக்கும்போது, உங்களின் நினைவின் சக்தியானது மேன்மையாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். நீங்கள் ஓர் இலகு யோகி ஆகுவீர்கள்.