06.07.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.2006     Om Shanti     Madhuban


எண்ணங்கள், காலம், வார்த்தைகளின் சேமிப்புத் திட்டத்தின் மூலம் வெற்றி விழாவைக் கொண்டாடுங்கள். விரக்தியுடன் இருக்கும் ஆத்மாக்களில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றி வையுங்கள்.


இன்று, அன்புக்குரிய தினம் ஆகும். எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்புக்கடலில் அமிழ்ந்து இருக்கிறீர்கள். இந்த அன்பானது உங்களை இலகு யோகி ஆக்குகிறது. அன்பானது உங்களை ஏனைய கவர்ச்சிகள் எல்லாவற்றுக்கும் அப்பால் எடுத்துச் செல்லக்கூடியது. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் பிறப்பில் இருந்தே அன்பின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். மாற்றம் நடக்கச் செய்வதற்கான சக்தியை அன்பு கொண்டுள்ளது. எனவே, இன்று, எங்கும் இரண்டு வகையான குழந்தைகள் இருப்பதை பாபா கண்டார். எல்லோரும் அன்பான குழந்தைகள். ஆனால் ஒரு வகையினர் அன்பான குழந்தைகள். இன்னொரு வகையினர் அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகள் (லவ்லீன்). அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகள் இயல்பாகவும் இலகுவாகவும் தமது ஒவ்வோர் எண்ணம், மூச்சு, வார்த்தை, செயலில் தந்தைக்குச் சமமானவர்கள். ஏன்? தந்தை குழந்தைகளான உங்களுக்கு சக்திசாலியாக இருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கி உள்ளார். இன்றைய நாள் நினைவிற்கும் சக்திக்குமான நாள் என்று அழைக்கப்படுகிறது. ஏன்? தந்தை இந்தத் தினத்தில் தன்னை முதுகெலும்பு ஆக்கி, உலக மேடையில் அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகளை வெளிப்படுத்தினார். பௌதீக ரூபத்தில், அவர் குழந்தைகளை வெளிப்படுத்தினார். அத்துடன் அவரே அவ்யக்த ரூபத்தில் ஒரு சகபாடி ஆகினார்.

இந்த நினைவு மற்றும் சக்தியின் தினத்தில், பாப்தாதா குழந்தைகளை அதிபதிகள் ஆக்கி, மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கு, சர்வசக்திவான் தந்தையை வெளிப்படுத்தும் பணியை வழங்கினார். இதைப் பார்க்கும்போது, தந்தை சந்தோஷப்படுகிறார். ஏனென்றால், குழந்தைகள் எல்லோரும் தந்தையை வெளிப்படுத்தும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். அதாவது, தமது கொள்ளளவிற்கும் வலிமைக்கும் ஏற்ப உலகிற்கு நன்மை செய்து, உலகை மாற்றுகின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற சகல சக்திகள் என்ற ஆஸ்தியை உங்களுக்காகவும் உலகிலுள்ள ஆத்மாக்களுக்காகவும் பயன்படுத்துகிறீர்கள். இத்தகைய மாஸ்ரர் சர்வசக்திவான்கள், சகலகலா வல்ல சேவையாளர்கள், உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தைக்குச் சமமாக வைத்திருப்பதுடன் தன்னலம் அற்றவர்களாகவும் எல்லையற்ற சேவையாளர்களாகவும் உள்ள குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதா இதயபூர்வமான பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். இந்தத் தேசமும் வெளிநாடுகளும் - இந்தத் தேசத்தைச் சேர்ந்த குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை. வெளிநாட்டைச் சேர்ந்த குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை. பாப்தாதா இத்தகைய குழந்தைகளின் புகழைத் தனது இதயத்தில் புகழ்வதுடன், ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்ற பாடலையும் பாடுகிறார். நீங்கள் எல்லோரும் ஆஹா, ஆஹா (அற்புதமான) குழந்தைகள்தானே? நீங்கள் உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். மிகவும் நல்லது. பாப்தாதாவிற்குத் தூய பெருமை உள்ளது. அவர் தனது குழந்தைகளை இட்டுப் பெருமைப்படுகிறார். ஏனென்றால், கல்பம் முழுவதும் தனது ஒவ்வொரு குழந்தையும் சுய இராச்சிய அரசனாக உள்ள தந்தை எவரும் கிடையாது. நீங்கள் எல்லோரும் சுய இராச்சிய அரசர்கள்தானே? நீங்கள் பிரஜைகள் இல்லையல்லவா? பல குழந்தைகள் பாபாவுடன் உரையாடும்போது பாபாவிடம் கேட்கிறார்கள்: ‘எதிர்காலத்தில் நாம் என்ன ஆகுவோம் என்ற ரூபத்தை எமக்குக் காட்டுங்கள்’. பாப்தாதா என்ன சொல்கிறார்? அன்னை ஜெகதாம்பா குழந்தைகள் எல்லோருக்கும் ஒரு ரூபத்தைக் கொடுத்ததாகப் பழைய குழந்தைகள் சொல்கிறார்கள். எனவே, எங்களுக்கும் ஒரு ரூபத்தைக் கொடுங்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கண்ணாடியைக் கொடுத்திருப்பதாகவும் நீங்கள் எதிர்காலத்தில் என்ன ரூபம் ஆகுவீர்கள் என்பதை அந்தக் கண்ணாடியில் உங்களால் பார்க்க முடியும் என்றும் பாப்தாதா கூறுகிறார். உங்களுக்கு இது தெரியுமா? அந்தக் கண்ணாடி உங்களிடம் இருக்கிறதா? எந்தக் கண்ணாடி என்று உங்களுக்குத் தெரியுமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும்! உங்களுக்குத் தெரியுமா? தற்சமயம் சுய இராச்சிய ஸ்திதியின் கண்ணாடியே அந்தக் கண்ணாடி ஆகும். எந்தளவிற்கு தற்சமயம் நீங்கள் சுய இராச்சிய அதிகாரியாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு, நீங்கள் உலக இராச்சியத்தின் உரிமையைக் கோருவீர்கள். இப்போது, நீங்கள் சதா சுய இராச்சிய அதிகாரியா என்பதைப் பார்ப்பதற்கு அந்தக் கண்ணாடியில் உங்களைப் பாருங்கள். அல்லது, நீங்கள் சிலவேளைகளில் தங்கி இருப்பவராகவும் ஏனைய வேளைகளில் உரிமை உள்ளவராகவும் இருக்கிறீர்களா? சிலவேளைகளில் தங்கியிருப்பவராகவும் சிலவேளைகளில் உரிமை உள்ளவராகவும் இருத்தல். அதாவது, சிலவேளைகளில் உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றும். சிலவேளைகளில் உங்களின் மனம் உங்களை ஏமாற்றும். சிலவேளைகளில் உங்களின் வாய் உங்களை ஏமாற்றும். சிலவேளைகளில் உங்களின் காதுகள் உங்களை ஏமாற்றும். வீணான விடயங்களைக் கேட்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? உங்களின் பௌதீக அங்கங்களில் ஏதாவது உங்களை ஏமாற்றினால், அவை உங்களைக் கட்டுப்படுத்தினால், உங்களிடம் நீங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆசீர்வாதமாகவும் ஆஸ்தியாகவும் பெற்ற சகல சக்திகளில், கட்டுப்படுத்தும் சக்தி அல்லது ஆளுகின்ற சக்தி இல்லை என்பதையே அது நிரூபிக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்: தன்னையே ஆள முடியாத ஒருவரால் எப்படி உலகை ஆள முடியும்? சுய இராச்சிய அதிகாரி என்ற உங்களின் தற்போதைய ஸ்திதியின் கண்ணாடியில் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எல்லோரும் ஒரு கண்ணாடியைப் பெற்றுள்ளீர்கள்தானே? நீங்கள் இந்தக் கண்ணாடியைப் பெற்றிருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கண்ணாடியில் எந்தவிதமான கறைகளும் இல்லையல்லவா? கண்ணாடி தெளிவாக இருக்கிறதா?

சுய இராச்சிய அதிகாரியாக இருக்கும் மரியாதையை பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் வழங்கி உள்ளார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற பட்டத்தைத் தந்தையிடம் இருந்து பெற்றுள்ளீர்கள். சக்திகள் கொண்ட அதிபதி மட்டும் அல்ல. ஆனால் சகல சக்திகளையும் கொண்ட ஓர் அதிபதி. தமது இதயபூர்வமான உரையாடல்களின் போது, சில குழந்தைகள் சொல்கிறார்கள்: ‘பாபா, நீங்கள் சகல சக்திகளையும் எனக்குக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் சிலவேளைகளில், இந்தக் குறிப்பிட்ட சக்திகள் சரியான வேளையில் செயல்படுவதில்லை’. அந்தச் சக்திகள் சரியான நேரத்தில் வெளிப்படுவதில்லை, அந்த நேரம் கடந்து சென்ற பின்னரே அவை வெளிப்படுகின்றன என அவர்கள் அறிவிக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? நீங்கள் குறிப்பிட்டதொரு சக்தியை அழைக்கும்போது, நீங்கள் உங்களின் அதிபதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். ஒருவர் தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கா விட்டால்..... அந்த ஆசனத்தில் (பதவி) இல்லாத ஒருவரின் கட்டளைகளுக்கு எவரும் கீழ்ப்படிய மாட்டார்கள். ‘நான் ஒரு சுய இராச்சிய அதிகாரி, நான் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான், தந்தையின் ஆஸ்திக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எனக்கு உரிமை உள்ளது’. இந்த ஆசனத்தில் அமர்ந்தவண்ணம் கட்டளை இடுங்கள். ‘நான் என்ன செய்வது? எப்படி நான் இதைச் செய்வது? என்னால் இதைச் செய்ய முடியாது.’ நீங்கள் உங்களின் ஆசனத்தை விட்டு எழுந்தபின்னர் ஒரு கட்டளை இட்டால், எப்படி எவரும் உங்களுக்குக் கீழ்ப்படிவார்கள்? இன்றைய உலகில், ஒருவர் பிரதம மந்திரியாகத் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தால், எல்லோரும் அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். அவரின் ஆசனத்தைக் கைவிட்ட பின்னர் அவருக்கு யாராவது கீழ்ப்படிவார்களா? எனவே சோதித்துப் பாருங்கள்: ‘நான் எனது ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேனா? நான் உரிமை உள்ள ஒருவராகக் கட்டளை இடுகிறேனா?’ தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். உங்களிடம் இறை அதிகாரம் உள்ளது. நீங்கள் எந்தவோர் ஆத்மாவின் அதிகாரத்தை அல்லது எந்தவொரு மகாத்மாவின் அதிகாரத்தையும் பெறவில்லை. உங்களிடம் இறை அதிகாரம் உள்ளது. எனவே, உங்களின் அதிகாரத்தின் ஸ்திதியிலும் உங்களின் உரிமையுடனும் ஸ்திரமாக இருந்தவண்ணம் எந்தவொரு சக்திக்கும் கட்டளை இடுங்கள். அப்போது அந்தச் சக்தி, ‘ஆம் எனது பிரபுவே! ஆம் எனது பிரபுவே!’ எனச் சொல்லும். சகல சக்திகளின் முன்னால், மாயை, பஞ்சபூதங்கள், சம்ஸ்காரங்கள், சுபாவம் எல்லாமே வேலையாட்கள் ஆகிவிடும். அவை அதிபதியான உங்களுக்காகக் காத்திருக்கும். ‘மாஸ்ரர், எங்களுக்குக் கட்டளை இடுங்கள்!’

இது சக்தி தினம், அல்லவா? எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் என்ன சக்திகள் உள்ளன என்பதை மீட்டல் செய்ய வைக்கிறார். இதை நீங்கள் கீழ்க்கோடிடும்படி அவர் செய்கிறார். அவசியமான வேளையில், நீங்கள் ஏன் சக்தி அற்றவர்கள் ஆகுகிறீர்கள்? பெரும்பாலான குழந்தைகளில் ஓர் ஒழுக்கு இருப்பதை பாப்தாதா காண்கிறார். இந்த ஒழுக்கால், சக்திகள் குறைந்து விடுகின்றன. பிரதானமாக இரண்டு விடயங்களில் ஒழுக்கு ஏற்படுகின்றது. அவையாவன: எண்ணங்களும் காலமும் வீணாக்கப்படுகின்றன. இது தீயது என்று இல்லை. ஆனால் வீணானது. அந்த வேளையில் நீங்கள் தவறு செய்வதில்லை. ஆனால் எதையும் சேமிப்பதும் இல்லை. இன்று நான் எந்தவிதப் பிழையும் செய்யவில்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எதையாவது நல்லதைச் சேமித்தீர்களா? நீங்கள் எதையும் இழக்கவில்லை. ஆனால் நீங்கள் எதையாவது சம்பாதித்தீர்களா? நீங்கள் துன்பத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் எத்தனை பேருக்கு நீங்கள் சந்தோஷத்தைக் கொடுத்தீர்கள்? நீங்கள் எவரின் அமைதியையும் கெடுக்கவில்லை. ஆனால், எந்தளவிற்கு அமைதியின் அதிர்வலைகளை நீங்கள் பரப்பினீர்கள்? அமைதித் தூதுவராகி, எத்தனை பேருக்கு சூழல், உங்களின் வாய், உங்களின் அதிர்வலைகள் மூலம் அமைதியைக் கொடுத்தீர்கள்? நீங்கள் சேமிப்பதற்கான இந்த அதிமேன்மையான மங்களகரமான யுகத்தில் குறுகிய காலம் மட்டுமே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை. இதை ஒவ்வொரு கணமும் நினையுங்கள். ‘இது நடக்கும், நான் அதைச் செய்வேன்.....’ இப்பொழுது இல்லையேல், எப்போதும் இல்லை. இந்தத் தீவிர முயற்சியையே தந்தை பிரம்மா செய்தார். அப்படித்தான் அவர் முதலாம் இலக்கம் என்ற இலக்கை அடைந்தார். எனவே, இந்தச் சக்தி தினத்தில், தந்தை உங்களுக்குக் கொடுத்த சக்திகளையும் நீங்கள் நினைத்தீர்கள்தானே? சேமிப்புத் திட்டம் ஒன்றைச் செய்யுங்கள்: எண்ணங்களைச் சேமித்தல், காலத்தைச் சேமித்தல், வார்த்தைகளைச் சேமித்தல். எவை சரியற்ற வார்த்தைகளோ, அந்த மிகச்சரியற்ற, வீணான வார்த்தைகளைப் பேசாமல் இருப்பதன் மூலம் சேமித்தல்.

பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரையும் உங்களின் அதிகாரி என்ற ஆசனங்களில் சதா அமர்ந்திருக்கும் சுய இராச்சிய அரசர்களாகக் காண விரும்புகிறார். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் இந்த ரூபத்தை விரும்புகிறீர்கள்தானே? பாப்தாதா தொலைக்காட்சியில் எந்தவொரு குழந்தையையும் பார்க்கும்போதும், அந்தக் குழந்தை இந்த ரூபத்தில் இருப்பதையே காண விரும்புகிறார். பாப்தாதாவிடம் ஓர் இயல்பான தொலைக்காட்சி உள்ளது. அவர் அதைப் போட வேண்டியதே இல்லை. ஒரே நேரத்தில் அவரால் எல்லா இடங்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் அவரால் பார்க்க முடியும். எனவே, இது சாத்தியமா? நாளையில் இருந்து, பாபா தனது தொலைக்காட்சியைப் போட வேண்டி இருந்தால், அவரால் எதைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும்? நீங்கள் உங்களின் தேவதை ஆடையில் இருக்க வேண்டும். தேவதை ஆடை என்றால் ஒரு ஜொலிக்கும் ஆடை ஆகும். அது ஒரு ஜொலிக்கும் ஒளியாலான ஆடை. சரீர உணர்வு என்ற சேற்றின் ஆடையை அணிந்து கொள்ளாதீர்கள். உங்களிடம் ஜொலிக்கும் ஆடைகள் இருந்தால், நீங்கள் வெற்றி நட்சத்திரங்கள் ஆவீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் ரூபமும் இப்படி இருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் இத்தகையவர்கள்தானே? நீங்கள் சேற்றினால் ஆன ஓர் ஆடையை அணிந்தால், நீங்களும் சேற்றைப் போன்றே இருப்பீர்கள்தானே? தந்தை எப்படி சரீரமற்றவரோ, அப்படியே தந்தை பிரம்மா ஒரு ஜொலிக்கும் ஆடையுடன் இருக்கிறார். அவர் ஒரு தேவதை. தந்தையைப் பின்பற்றுங்கள். பௌதீகமான முறையில், உங்களின் ஆடைகளில் சேறு பட்டுவிட்டால் அல்லது கறை படிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அவற்றை மாற்றுவீர்கள்தானே? அதேபோல், உங்களிடம் எப்போதும் ஜொலிக்கும், தேவதை ஆடை உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரச குழந்தை என்ற தூய பெருமை தந்தைக்கு உள்ளது. எனவே, அந்த ரூபத்தில் இருங்கள். ஓர் அரசனைப் போல் வாழுங்கள். அப்போது மாயை உங்களின் வேலையாள் ஆகி, உங்களிடம் விடை பெறுவதற்காக வரும். அரைக்கல்பத்திற்கு விடை பெறுவதற்காக அவள் வருவாள். அவள் உங்களைத் தாக்க மாட்டாள். பாப்தாதா எப்போதும் கூறுகிறார்: தங்களைத் தந்தையிடம் அர்ப்பணிப்பவர்கள், ஒருபோதும் தோல்வி அடைய முடியாது. நீங்கள் தோல்வி அடைந்தால், நீங்கள் அர்ப்பணிக்கவில்லை என்றே அர்த்தம்.

இப்போது, நீங்கள் எல்லோரும் மீட்டிங் வைக்கப் போகின்றீர்கள். அந்தச் சந்திப்புக்களுக்காக ஒரு திகதி குறிக்கப்பட்டு விட்டதல்லவா? எனவே, இந்தத் தடவை, சேவைத் திட்டங்களுக்காக மட்டும் ஒரு மீட்டிங் நடத்துவதைக் காண பாப்தாதா விரும்பவில்லை. நீங்கள் சேவைத் திட்டங்களைச் செய்யலாம். ஆனால் அத்துடன் உங்களின் சந்திப்புக்களில் வெற்றி விழாவிற்கும் திட்டங்களைச் செய்யுங்கள். நீங்கள் பல விழாக்களைக் கொண்டாடி உள்ளீர்கள். இப்போது வெற்றி விழாவிற்கு ஒரு திகதியை நிச்சயம் செய்யுங்கள். எப்படி எல்லோராலும் இப்படி ஆகமுடியும் என நீங்கள் சிந்திக்கக்கூடும். குறைந்தபட்சம் 108 மணிகள் வெற்றி சொரூபங்கள் ஆகியிருப்பதன் விழாவைக் கொண்டாட வேண்டும் என பாப்தாதா கூறுகிறார். அவர்கள் உதாரணங்கள் ஆக வேண்டும். இது சாத்தியமா? கூறுங்கள்! முன் வரிசையில் இருப்பவர்களே, கூறுங்கள்! இது சாத்தியமா? பதில் சொல்வதற்கான தைரியம் உங்களிடம் இல்லை. நீங்கள் அதைச் செய்வீர்களா மாட்டீர்களா என இன்னமும் சிந்திக்கிறீர்களா? தைரியத்தால் எல்லாமே நடக்கும். தாதி, சொல்லுங்கள்: 108 பேர் வெற்றி சொரூபங்கள் ஆகமுடியுமா? (ஆம், அவர்களால் நிச்சயமாக அப்படி ஆகமுடியும். வெற்றி விழாவைக் கொண்டாட முடியும்) பாருங்கள், தாதிக்குத் தைரியம் இருக்கிறது. உங்கள் எல்லோர் சார்பாகவும் அவர் தைரியத்தைக் கொண்டிருக்கிறார். ஆகவே, ஒத்துழையுங்கள். எனவே, இடம்பெற உள்ள மீட்டிங்கின் அறிக்கை பாப்தாதாவிடம் வரவேண்டும். பாண்டவர்களே, பேசுங்கள்! ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? ஏன் உங்களிடம் இந்தத் தைரியம் இல்லை? அதை நடைமுறையில் செய்து காட்டுவீர்கள்தானே? அப்படியா? நல்லது. குறைந்தபட்சம் தைரியத்தைப் பேண முடியும்தானே? தைரியத்தைக் கொண்டிருந்து இதை நடைமுறையில் செய்து காட்டுவோம் என நம்புவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதைச் செய்வீர்களா? எந்தவிதமான சம்ஸ்காரங்களும் எஞ்சி இருக்காதல்லவா? எந்தவொரு பலவீனமும் எஞ்சி இருக்காதல்லவா? அச்சா, மதுவனத்தைச் சேர்ந்தவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள்! ஆஹா! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அச்சா, அப்போது 108 இலகுவாக உருவாகிவிடும். பலர் தமது கைகளை உயர்த்தி இருப்பதனால், 108 என்பது பெரிய விடயம் அல்ல. இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம், தாதி ஜான்கி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரும் ஏதோ சொல்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். நாம் வெளிநாட்டைச் சேர்ந்த மாலையையும் பார்ப்போம். சரிதானே? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, இன்று இங்கே எத்தனை இரட்டை வெளிநாட்டவர்கள் வந்துள்ளீர்கள்? (200). அவர்களில் 108 பேர் தயாராகி விடுவார்கள். சரிதானே? இதற்கு ‘நான் முதலில்’ என்று சொல்லுங்கள். இதில், மற்றவர்களைப் பார்க்காதீர்கள். நான் முதலில். ஏனைய விடயங்களுக்கு ‘நான்’ எனச் சொல்லாதீர்கள். ஆனால் இதற்கு நிச்சயமாக ‘நான்’ எனச் சொல்லுங்கள். பாப்தாதா உங்களுக்கு மேலதிகமாக வேலை தரப் போகிறார்.

இன்று, சக்தி தினம். எனவே, உங்களிடம் சக்தி உள்ளது. பாப்தாதா தனித்துவமான தீபாவளியைக் கொண்டாட விரும்புகிறார். நீங்கள் பல தடவைகள் தீபாவளியைக் கொண்டாடி உள்ளீர்கள். ஆனால் பாப்தாதா தனித்துவமான தீபாவளியைக் கொண்டாட விரும்புகிறார். அவர் அதை உங்களுக்குச் சொல்லட்டுமா?சொல்லட்டுமா? ஓகே. நிகழ்காலத்தை உங்களால் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள், எங்கும் உள்ள மனிதர்களில் அவநம்பிக்கை அதிகளவில் அதிகரிக்கிறது. எனவே, நீங்கள் உங்களின் மனங்கள், வார்த்தைகள் அல்லது உறவுமுறைகள் மற்றும் தொடர்புகள் என எதனால் அவர்களுக்குச் சேவை செய்தாலும், நம்பிக்கை இழந்திருக்கும் மக்களில் நம்பிக்கைத் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். எங்கும் உள்ள மனித ஆத்மாக்களின் மனங்களில் நம்பிக்கை தீபங்கள் ஏற்றி வைக்கப்பட வேண்டும். நம்பிக்கைத் தீபங்களின் இந்தத் தீபாவளியையே பாப்தாதா விரும்புகிறார். இது சாத்தியமா? குறைந்தபட்சம், இந்த நம்பிக்கைத் தீபங்கள் சூழலில் ஏற்றி வைக்கப்பட்டால், அப்போது உலக மாற்றம் இங்கே அண்மையில் வந்துவிடும். அதன்பின்னர், பொன்னான காலை மலர்ந்துவிடும். எதுவும் நடக்க முடியாது என்ற நம்பிக்கை இன்மை இப்போது முடிவடைய வேண்டும். நம்பிக்கைத் தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். உங்களால் இதைச் செய்ய முடியும்தானே? இது இலகுவா அல்லது கஷ்டமா? இது இலகுவானதா? இதைச் செய்வோம் என்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் இதைச் செய்வீர்களா? நீங்கள் பல தீபங்களை ஏற்றி வைத்தால், அப்போது அதுவே தீபாவளி ஆகிவிடும். அதிர்வலைகளை அந்தளவு சக்திவாய்ந்தவை ஆக்குங்கள். ஓகே, உங்களால் அவர்களிடம் செல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால், ஒளி மற்றும் சக்தி வீடாகி, அந்த அதிர்வலைகளை வெகுதொலைவிற்கும் பரந்துபட்டும் பரவச் செய்யுங்கள். விஞ்ஞானத்தால் வெளிச்சவீட்டின் மூலம் வெளிச்சத்தை வெகு தொலைவிற்கும் பரந்து பட்டும் அனுப்பக் கூடியதாக இருக்கும்போது, உங்களால் அந்த அதிர்வலைகளைப் பரப்ப முடியாதா? இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள்: ‘நான் அதைச் செய்ய வேண்டும்’. அதைச் செய்வதில் மும்முரம் ஆகுங்கள். உங்களின் மனதை நீங்கள் மும்முரமாக வைத்திருந்தால், நீங்களும் நன்மை அடைவீர்கள், ஆத்மாக்களும் நன்மை அடைவார்கள். நடக்கும் போதும் அசையும்போதும், நீங்கள் நிச்சயமாக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை வைத்திருங்கள். இந்த மனோபாவம், சூழலில் பரவும். ஏனென்றால், காலத்திற்கேற்ப, எல்லாமே சடுதியாகவே நடக்கும். ‘நீங்கள் ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை?’ என உங்களின் சகோதர, சகோதரிகள் முறைப்பாடு செய்யக்கூடாது. சில குழந்தைகள் தாம் இதை இறுதியில் செய்வோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் அதை இறுதியில் செய்தால், அப்போதும் அவர்கள் முறைப்பாடு செய்வார்கள். நீங்கள் முன்னரே தமக்குக் கூறி இருந்தால், தாம் எதையாவது செய்திருப்போமே என அவர்கள் முறைப்பாடு செய்வார்கள். ஆகவே, தொடர்ந்து உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் பாப்தாதாவிடம் இருந்து ஒளியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன், ஒரு வெளிச்சவீடாகத் தொடர்ந்தும் வெளிச்சத்தைக் கொடுங்கள். உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் அதிகளவில் போராடுவதைப் பார்க்கும்போது பாப்தாதா அதை விரும்புவதில்லை. ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான், போராடுவதா! எனவே, அரசர்கள் ஆகுங்கள், வெற்றி சொரூபங்கள் ஆகுங்கள். நம்பிக்கை இன்மை எல்லாவற்றையும் முடித்து, நம்பிக்கை தீபங்களை ஏற்றுங்கள். அச்சா.

குழந்தைகளின் அன்பின் நினைவு மாலைகள் பல பாப்தாதாவை வந்தடைந்து உள்ளன. நினைவுகளை அனுப்பி வைத்துள்ளவர்களை பாப்தாதா தனிப்பட்ட முறையில் தனக்கு முன்னால் பார்க்கிறார். அந்த நினைவிற்குப் பதிலாக, தனது இதயத்தின் ஆசீர்வாதங்களையும் தனது இதயபூர்வமான அன்பையும் அவர் வழங்குகிறார். அச்சா.

முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! நல்லது. ஒவ்வொரு சந்திப்பிலும் பெரும்பாலானோர் புதியவர்களாக இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே, நீங்கள் சேவையை அதிகரித்துள்ளீர்கள், அப்படித்தானே? நீங்கள் இத்தனை பேருக்கு செய்தியைக் கொடுத்துள்ளீர்கள். எப்படி நீங்கள் செய்தியைப் பெற்றுள்ளீர்களோ, அதேபோல், இரட்டிப்பு எண்ணிக்கையினருக்கும் நீங்கள் செய்தியைக் கொடுக்க வேண்டும். அவர்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குங்கள். நல்லது. ஒவ்வொரு பாடத்திலும் அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து முன்னேறுங்கள். நல்லது.

அச்சா. இப்போது நடக்கும்போதும் அசையும்போதும் உங்களின் மனதாலும் வார்த்தைகளாலும் அல்லது உங்களின் செயல்களாலும் சேவை செய்வதை நீங்கள் நிறுத்தக்கூடாது என்ற இலட்சியத்தை வைத்திருங்கள். நினைவைக் கொண்டிருப்பதையும் நீங்கள் நிறுத்தக்கூடாது. நினைவும் சேவையும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும். நினைவு மற்றும் சேவை இரண்டிலும் உங்களை மிக மும்முரமாக வைத்திருங்கள். நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது, மாயை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தொலைவில் இருந்தேனும் உங்களிடம் மாயை வருவதற்கான தைரியம் உங்களிடம் இல்லாத அளவுக்கு மிகவும் மும்முரமாக இருங்கள். அப்போது உங்களால் தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும் என்று நீங்கள் வைத்திருந்த இலட்சியத்தை உங்களால் இலகுவாக நிறைவேற்ற முடியும். நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. நீங்கள் அன்பின் சொரூபமாக இருப்பீர்கள். அச்சா.

கண்களின் ஒளியாக இருந்து பாப்தாதாவின் கண்களில் அமிழ்ந்துள்ள குழந்தைகளான உங்களுக்கும் தந்தையின் சொத்து எல்லாவற்றுக்குமான உரிமையைக் கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் சதா ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யும் மகாவீர் மற்றும் மகாவீரினிக் குழந்தைகள் எல்லோருக்கும் ஒரேயொரு தந்தையே தமது முழு உலகம் என்ற ஆழ்ந்த அன்புடன் அன்பிலே மூழ்கி இருக்கும், அன்பிலே திளைத்திருக்கும், அதாவது, இலகுவாகத் தந்தைக்குச் சமமாக ஆகுகின்ற குழந்தைகளுக்கும் அன்பாகவும் அன்பிலே மூழ்கியிருக்கும் இத்தகைய குழந்தைகளுக்கு பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான சேவையாளராகி, உங்களின் ஒவ்வொரு செயலாலும் சிறப்பியல்பாலும் அருள்பவரை வெளிப்படுத்துவீர்களாக.

உண்மையான சேவையாளர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கும்போது, ஒருபோதும் எந்தவோர் ஆத்மாவையும் தம்மில் அகப்பட வைக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் எல்லோரையும் தந்தையுடன் தொடர்பு கொள்ளச் செய்வார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் எல்லோருக்கும் தந்தையை நினைவூட்டும். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தந்தையே தென்படுவார். தமது சிறப்பியல்பாலேயே யாராவது ஒருவர் தன்னுடன் ஒத்துழைக்கிறார் என அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். மற்றவர்கள் தந்தையை அன்றி, உங்களைப் பார்த்தால், அது சேவை அல்ல. ஆனால், அது அவர்களைத் தந்தையை மறக்கச் செய்வதாகும். உண்மையான சேவையாளர்கள் எல்லோரையும் தங்களுடன் அன்றி, சத்தியமானவருடன் இணைத்து விடுவார்கள்.

சுலோகம்:
எந்த வகையான வேண்டுகோள் விடுப்பதற்குப் பதிலாக, சதா சந்தோஷமாக இருங்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.

மேன்மையான பாக்கிய ரேகையை வரைவதன் அடிப்படை, மேன்மையான எண்ணங்களும் மேன்மையான செயல்களும் ஆகும். நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆத்மாவோ அல்லது சேவையாளர் ஆத்மாவோ, இருவராலும் இதன் அடிப்படையில் ஓர் இலக்கத்தைக் கோர முடியும். இருவருக்கும் தமது பாக்கியத்தை உருவாக்குவதற்கான முழுமையான வாய்ப்பு உள்ளது. தாம் விரும்பிய அளவு பாக்கியத்தை உருவாக்க விரும்பும் எவராலும் அதைச் செய்ய முடியும்.