06.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றி, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் முதலில் விகாரம் அற்றவர்களாகி, பின்னர் பிறருக்கும் கூறுங்கள்.

கேள்வி:
மகாவீர் குழந்தைகளாகிய நீங்கள் எந்த விடயத்தையிட்டு, அக்கறை கொள்ள வேண்டியதில்லை? உங்களைச் சோதிக்கும் பொழுது, எதனையிட்டு நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்?

பதில்:
நீங்கள் தூய்மை ஆகுவதற்கு எவராவது தடையாக இருந்தால், அதனையிட்டு அக்கறைப்படாதீர்கள், ஆனால் நீங்கள் ஒரு மகாவீரரா எனச் சோதனை செய்யுங்கள். நான் என்னை ஏமாற்றுகின்றேனா? நான் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டுள்ளேனா? நான் என்னைப் போல ஏனையோரையும் ஆக்குகின்றேனா? நான் எனக்குள் கோபத்தைக் கொண்டுள்ளேனா? நான் பிறரைச் செய்யும்படி கூறுவதை முதலில் நான் செய்கின்றேனா?

பாடல்:
உங்களைக் கண்டு கொண்டதால் உலகம் முழுவதையும் நாங்கள் கண்டு கொண்டோம். பூமி, வானம் அனைத்தும் எங்களுக்குரியது!

ஓம் சாந்தி.
இங்கு நீங்கள் இதனைக் கூற வேண்டியதில்லை; இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள், அதாவது, நீங்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, காமத்தை வெல்லுங்கள்! அதாவது, தூய்மை ஆகுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோரினீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மீண்டும் நினைவு கூருகின்றீர்கள். உங்களிடம் இருந்து அதனை எவருமே அபகரிக்க முடியாது. உங்களிடமிருந்து அதனை அபகரிக்கக்கூடிய எவருமே அங்கு இல்லை. அது பிரிவினையற்ற இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. பின்னர், இராவண இராச்சியம் பிறருக்கு உரியதாக ஆகுகின்றது. இப்பொழுது இதனை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் மீண்டும் ஒருமுறை பாரதத்தை விகாரம் அற்றதாக ஆக்குகின்றீர்கள் என்பதை அவ்விதமாக நீங்கள் விளங்கப்படுத்தவும் வேண்டும். கடவுளே அதிமேலானவர் என அனைவரும் கூறுகின்றனர். அவர் மாத்திரமே தந்தை என அழைக்கப்படுகின்றார். ஆகவே இதனை நீங்களும் விளங்கப்படுத்தி, முற்றிலும் விகாரமற்ற சுவர்க்கமாக இருந்த பாரதம், இப்பொழுது விகாரம் நிறைந்த நரகம் ஆகிவிட்டது என எழுத வேண்டும்;. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நாங்கள் பாரதத்தை மீண்டும் சுவர்க்கமாக ஆக்குகின்றோம். தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களைக் குறித்துக் கொண்டு, இவ்விடயங்களை நீங்கள் எழுதுவதற்கு உதவும்பொருட்டு இந்த ஞானக் கடலைக் கடையுங்கள். உண்மையில் பாரதமே சுவர்க்கமாக இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் எதனை எழுத வேண்டும்? அந்நேரத்தில் அங்கு இராவண இராச்சியம் இருக்கவில்லை. இப்பொழுது பாரத மக்களாகிய எங்களைத் தந்தை விகாரமற்றவர்கள் ஆக்குகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. அனைத்துக்கும் முதலில், உங்களைச் சோதிக்க வேண்டும்: ‘நான் விகாரம் அற்றவனாகி விட்டேனா?’ ‘நான் கடவுளை ஏமாற்றுகின்றேனா?’ ‘கடவுள் என்னைக் கவனிக்கின்றார் என்றில்லை” அத்தகைய வார்த்தைகள் உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரக் கூடாது. ஒரேயொரு தூய்மையாக்குகின்ற தந்தையால் மாத்திரமே உங்களைத் தூய்மையாக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதம் விகாரமற்றதாக இருந்தபொழுது, அது சுவர்க்கமாக இருந்தது. அத்தேவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருந்தார்கள். அரசரும், அரசியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் இருந்தார்கள். அப்பொழுதே, பாரதம் முழுவதையும் சுவர்க்கம் என அழைக்க முடியும். இப்பொழுது அது நரகமாகும். இந்த 84 பிறவிகளின் ஏணிப்படம் மிக நல்லதொரு விடயம். நல்லவர்களுக்கு இதனை நீங்கள் பரிசாகக் கொடுக்க முடியும். முக்கியஸ்தர்கள் விசேடமான பரிசுகளைப் பெறுகின்றார்கள். ஆகவே நீங்களும் இங்கு வருபவர்களுக்கு இந்தப் படத்தை விளங்கப்படுத்துவதுடன், அவர்களுக்கு இதனை நீங்கள் ஒரு பரிசாகவும் கொடுக்கலாம். நீங்கள் கொடுப்பதற்கு எப்பொழுதும் தயாராகப் பொருட்களை வைத்திருக்கவும் வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தையும் உங்களுக்குள் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த ஞானம் அனைத்தும் ஏணிப் படத்தில் உள்ளது. எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பதை நினைவுசெய்யுங்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம். ஆரம்பத்தில் வந்தவர்கள் நிச்சயமாக 84 பிறவிகளையும் எடுத்திருக்கின்றார்கள். தந்தை உங்களுக்கு உங்கள் 84 பிறவிகள் பற்றிக் கூறிய பின்னர் கூறுகின்றார்: நான் இவரின் சாதாரணச் சரீரத்தில், இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் முடிவில் பிரவேசிக்கின்றேன். நான் இவருக்கு பிரம்மா என்று பெயரிடுகிறேன். இவர் மூலம் நான் பிராமணர்களைப் படைக்கின்றேன். இல்லாவிடின் நான் பிராமணர்களை எங்கிருந்து கொண்டு வருவேன்? பிரம்மாவினது தந்தையைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டதுண்டா? அவர் நிச்சயமாகக் கடவுள் எனக் கூறப்படுகின்றார். பிரம்மாவும், விஷ்ணுவும் சூட்சும உலகில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். தந்தை கூறுகின்றார்: நான் இவரினுள், இவரின் 84 பிறவிகளின் முடிவில் பிரவேசிக்கின்றேன். ஒருவர் தத்தெடுக்கப்படும் பொழுது, அவருடைய பெயர் மாறப்படுகின்றது. அவர் துறவறத்தையும் மேற்கொள்ளச் செய்யப்படுகின்றார். சந்நியாசிகள் துறவறத்தை ஏற்றுக்கொள்ளும் பொழுது, அவர்கள் உடனடியாகவே மறந்து விடுவதில்லை; அவர்கள் நிச்சயமாகச் சிலவற்றை நினைவுசெய்கிறார்கள். நீங்களும் சில விடயங்களை நினைவு செய்தாலும், அவற்றில் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில், அனைத்தும் இடுகாடாகப் போகின்றது என நீங்கள் அறிவீர்கள். ஆகவே நீங்கள் ஏன் அவ்விடயங்களை நினைவுசெய்ய வேண்டும்? அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொள்வதற்காக, எங்களிடம் இந்த ஞானம் உள்ளது. அவர்களும் தங்களிடம் உள்ள ஞானத்தினால் தங்கள் வீடுகள் போன்றவற்றைத் துறக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு தங்கள் வீட்டை விட்டு வந்தார்கள் என நீங்கள் அவர்களிடம் வினவினால், அவர்கள் உங்களுக்குக் கூற மாட்டார்கள். அப்பொழுது அவர்களிடம் நீங்கள் சாதுரியமாக பேசி, அவர்களிடம் வினவ முடியும்: “உங்களுக்கு எவ்வாறு விருப்பமின்மை ஏற்பட்டது? எங்களுக்கும் கூறுங்கள், அப்பொழுது நாங்களும் அதேபோன்று செய்வோம். நாங்களும் தூய்மையாக இருப்பதற்கான ஆசையை நீங்கள் தூண்டுகின்றீர்கள். எனினும் உங்கள் கடந்த காலத்தின் அனைத்தையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள்”. அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து நடந்தவை அனைத்தையும் அவர்களால் உங்களிடம் கூற முடியும். நீங்கள் எவ்வாறு நடிகர்களாகி, உங்கள் பாகங்களை இந்த நாடகத்தில் நடிக்கின்றீர்கள் என்ற இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்திகளில் உள்ளது. உங்கள் கலியுகத்து அனைத்துக் கர்ம பந்தனங்களும் இப்பொழுது துண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுது நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். அங்கு அனைவரும் புதிய உறவுமுறைகளைக் கொண்டிருப்பார்கள். பாபா தொடர்ந்தும் விளங்கப்படுத்துவதற்காக உங்களுக்குப் பல நல்ல கருத்துக்களைக் கொடுக்கிறார். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்த அந்தப் பாரத மக்கள், முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருந்தார்கள். இப்பொழுது 84 பிறவிகளை எடுத்ததனால், அவர்கள் விகாரம் உடையவர்கள் ஆகியுள்ளார்கள். அவர்கள் இப்பொழுது மீண்டும் விகாரம் அற்றவர்கள் ஆகவேண்டும். எனினும் அவர்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்கு ஒருவர் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். தந்தை இப்பொழுது உங்களுக்கு அனைத்தையும் காட்டியுள்ளார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அந்த அதே அவர்கள். குழந்தைகளான நீங்களும் கூறுகின்றார்கள்: பாபா, நீங்களும் அதே அவரே. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு முன்னைய கல்பத்திலும் கற்பித்து, உங்களுக்கு உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுத்தேன். நான் அதேபோன்று தொடர்ந்தும் ஒவ்வொரு சக்கரத்திலும் செய்வேன். நாடகத்தில் என்னென்ன நிகழ்ந்தனவோ, முன்னர் என்னென்ன தடைகள் இருந்தனவோ, அதே தடைகள் மீண்டும் இடம்பெறும். உங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை உங்களால் நினைவுசெய்ய முடியும். இவர் அனைத்தையும் நினைவுசெய்கின்றார். தான் எவ்வாறு கிராமத்துச் சிறுவனாக இருந்தார் எனவும், பின்னர் எவ்வாறு உலக அதிபதி ஆகினார் எனவும் இவர் உங்களுக்குக் கூறுகின்றார். இப்பொழுது மாத்திரமே வைகுந்தத்தில் எவ் வகையான கிராமம் இருக்கும் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இந்நேரத்தில் உங்களுக்கு இந்தப் பழைய உலகம் ஒரு கிராமம் போன்றுள்ளது. வைகுந்தத்திற்கும், நரகத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. பிரமாண்டமான மாளிகைகளையும், கட்டிடங்களையும் பார்க்கையில், இங்கே இதுவே சுவர்க்கம் என மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இவை அனைத்தும் களிமண்ணும், கல்லும் ஆகும்; அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. வைரங்களே அதிகப் பெறுமதி உடையவை. தந்தை கூறுகின்றார்: சத்தியயுகத்தில் உங்கள் தங்க மாளிகைகள் எவ்வாறிருந்தன எனக் கற்பனை செய்து பாருங்கள்! அங்குள்ள சுரங்கங்கள் அனைத்தும் நிரம்பியிருந்தன. அங்கு ஏராளமான தங்கம் இருந்தது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். பாபா விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் எப்பொழுதாவது சோர்ந்து விட்டால், உடனடியாகவே உங்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தக்கூடிய, சில பதிவுசெய்யப்பட்ட பாடல்களை உங்களால் ஒலிக்க முடியும். அப்பொழுது இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கும். பாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அதனை எவருமே உங்களிடம் இருந்து அபகரிக்க முடியாது. நாங்கள் அரைக் கல்பத்துக்குச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறோம். ஓர் இளவரசர் தான் ஓர் எல்லைக்கு உட்பட்ட இராச்சியத்தின் வாரிசு என்பதைப் புரிந்து கொள்கின்றார். எல்லையற்ற தந்தையின் வாரிசுகளாக இருக்கின்ற போதை உங்களுக்கு அதிகளவில் இருக்க வேண்டும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்களே 21 பிறவிகளுக்கு வாரிசுகள் ஆகுகின்றீர்கள். உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! நீங்கள் யாருடைய வாரிசுகள் ஆகினீர்களோ, அந்த ஒரேயொருவரை நிச்சயமாக நினைவுசெய்யவும் வேண்டும். நீங்கள் அவரை நினைவு செய்யாமல், ஒரு வாரிசாக முடியாது. நீங்கள் அவரை நினைவுசெய்தால் மாத்திரமே தூய்மை ஆகுவதுடன், பின்னர் ஒரு வாரிசாகவும் முடியும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இரட்டைக் கிரீடமணிந்த உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள்; நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பிறவிபிறவியாக ஆட்சிசெய்வீர்கள். பக்தி மார்க்கத்து மக்கள் அழிகின்ற தானங்களையும், அழிகின்ற புண்ணியங்களையும் செய்கின்றார்கள். உங்களுடைய இந்த ஞானச் செல்வம் அழிவற்றது. நீங்கள் அத்தகையதொரு பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்கின்றீர்கள். உங்கள் செயல்களுக்கு ஏற்பவே நீங்கள் பெறுகின்ற பலனும் இருக்கின்றது. ஒரு பேரரசனின் மகனாக ஆகுகின்றவர், ஒரு பெரிய எல்லைக்கு உட்பட்ட அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. ஒற்றைக் கிரீடம் அணிந்தவர்களால் முழு உலகினதும் அதிபதிகள் ஆகமுடியாது. நீங்கள் இரட்டைக் கிரீடமணிந்த உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அந்நேரத்தில் வேறெந்த இராச்சியமும் இல்லை. ஏனைய அனைத்துச் சமயங்களும் பின்னரே வருகின்றன. அந்தச் சமயங்கள் விரிவடையும்வரை, முன்னைய அரசர்கள், முரண்பட்டு, விகாரம் உடையவர்களாக இருப்பதால், தொடர்ந்தும் அனைத்தையும் பிரித்தார்கள். முதலில் உலகம் முழுவதிலும் ஓர் இராச்சியமே இருந்தது. அங்கு நீங்கள் அது முன்னைய பிறப்பின் கர்மபலன் எனக் கூறமாட்டீர்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு, எவ்வாறு மேன்மையான செயல்கள் செய்ய வேண்டுமெனக் கற்பிக்கின்றார். நீங்கள் என்ன செயல்களைச் செய்தாலும், என்ன சேவையைச் செய்தாலும் அதற்கேற்பவே அதன் பலனைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். உங்களால் புரிந்து கொள்ள முடியாத செயலை நீங்கள் செய்ய வேண்டுமானால், அப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுங்கள். நீங்கள் மீண்டும், மீண்டும் கடிதம் மூலமாகக் கேட்க வேண்டும். பிரதம மந்திரியைப் பாருங்கள்! அவர் எந்தளவு கடிதங்களைப் பெறுகின்றார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எனினும் அவர் அவை அனைத்தையும் தானே வாசிப்பதில்லை. அவருடைய தபால்கள் அனைத்தையும் கவனிப்பதற்காக, அவரிடம் பல காரியதரிசிகள் உள்ளனர். காரியதரிசிகள், முக்கியமான தபால்களை மாத்திரம் பிரதம மந்திரியின் மேசையில் வைக்கின்றார்கள். இங்கும் அதேபோன்றே உள்ளது. பாபா முக்கியமான கடிதங்களுக்கு உடனடியாகவே பதிலளிக்கின்றார். ஏனையோருக்கு பாபா அன்பையும், நினைவையும் அனுப்புகின்றார். பாபா அமர்ந்திருந்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவது அசாத்தியமானது; அது மிகவும் சிரமமாக இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவஞ் செய்கின்றீர்கள்: ஓகோ! நான் இன்று எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளேன்! பிரம்மா மூலம் சிவபாபா பதிலளிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் பெரும் சந்தோஷத்தை அனுபவஞ் செய்கின்றீர்கள். பந்தனத்தில் இருப்பவர்களுக்குச் சந்தோஷம் பொங்குகின்றது. ஓகோ! நான் பந்தனத்தில் உள்ளேன், இருந்தும் எல்லையற்ற தந்தை எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்! அவர்கள் கடிதத்தைத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொள்கின்றார்கள். அறியாமைப் பாதையில், ஒரு மனைவி தனது கணவனே கடவுள் எனக் கருதுகின்றாள். ஆகவே கணவனிடமிருந்து ஒரு கடிதத்தை அவள் பெறும்பொழுது அதனை முத்தம் இடுகின்றாள். உங்களில் மத்தியிலுள்ள பல குழந்தைகள், பாப்தாதாவிடம் இருந்து ஒரு கடிதத்தைப் பெறும்பொழுது, மெய்சிலிர்ப்பதை அனுபவஞ் செய்கின்றார்கள். அவர்கள் அன்புக் கண்ணீர் சிந்துகின்றார்கள். அவர்கள் கடிதத்தை முத்தமிட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொள்கின்றார்கள். அவர்கள் கடிதத்தைப் பெருமளவு அன்புடன் வாசிக்கின்றார்கள். பந்தனத்தில் உள்ளவர்களும் குறைந்தவர்கள் அல்ல. குழந்தைகளிற் சிலரை மாயை தோற்கடித்து விடுகின்றாள். சிலர் தாங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். பாரதம் விகாரமற்றதாக இருந்தது, அது இப்பொழுது விகாரம் அடைந்துள்ளது. விகாரம் அற்றவர்களாக ஆக விரும்புகின்றவர்கள், முன்னைய சக்கரத்தில் தாங்கள் செய்ததைப் போல், மிகச்சரியாக அதே முயற்சியைச் செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு, மிகவும் இலகுவான வழி உள்ளது. அதுவே உங்கள் திட்டமும் ஆகும். இப்பொழுது இது கீதையின் யுகமாகும். “அதி மேன்மையான கீதையின் யுகம்” நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் எழுத வேண்டும்: பழைய உலகம் புதிய உலகமாக மாற்றம் அடைகின்ற, இதுவே அதிமேன்மையான கீதையின் யுகமாகும். உங்கள் ஆசிரியருமாகிய, எல்லையற்ற தந்தையிடம் இருந்து, நீங்கள் இராஐயோகத்தைக் கற்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்திகள் புரிந்து கொள்கின்றன. நீங்கள் நன்றாகக் கற்றால் இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் ஆகுவீர்கள். இது அத்தகையதொரு பெரிய பாடசாலை! ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பல் வேறுபட்ட பிரஜைகளும் அங்கு இருப்பார்கள், இராச்சியம் தொடர்ந்தும் விரிவடைகின்றது. இந்த ஞானத்தைக் குறைவாக எடுத்தவர்கள், தாமதமாகவே வருவார்கள். நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப, ஆரம்பத்தில் வருவீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகச் சக்கரம் மீண்டும், மீண்டும் இடம்பெறுகின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! எவராவது தடைகளை ஏற்படுத்தினால், அதனை நீங்கள் கவனத்தில் கொள்ளக்கூடாது. நீங்கள் குறைந்தபட்சம் ஒரு துண்டு சப்பாத்தியையேனும் பெறுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், அப்பொழுது உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும். பாபா பக்தி மார்க்கத்திலுள்ள உதாரணத்தையே உங்களுக்குக் கூறுகின்றார்: வழிபாடு செய்யும் நேரத்தில் புத்தியின் யோகம் வெளியே அலைந்து கொண்டிருந்தால், அவர் தனது செவிகளை இழுப்பார் அல்லது தன்னைத் தானே அடிப்பார். இந்த ஞானம் உள்ளது. இதில் நினைவே முக்கிய விடயம். உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாது விட்டால், உங்களையே அறைந்து கொள்ளுங்கள்! ஏன் மாயை என்னைத் தோற்கடிக்கின்றாள்? நான் அந்தளவு பலவீனமானவனா? நான் அவளை வெற்றிகொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் மீது பெரும் கவனம் செலுத்த வேண்டும். உங்களையே வினவுங்கள்: நான் அத்தகையதொரு மகாவீரரா? ஏனையோரை மகாவீரர் ஆக்குவதற்கும், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எந்தளவிற்கு நீங்கள் ஏனையோரையும் உங்களைப் போன்று ஆக்குகின்றீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தும் உயர்ந்ததாக ஆகுகின்றது. உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவதற்கு நீங்கள் பந்தயத்தில் ஓட வேண்டும். எனக்குள் கோபம் இருந்தால், வேறு எவரிடமும் கோபப்படாதீர்கள் என எவ்வாறு என்னால் கூறமுடியும்? அது நேர்மையல்ல, நீங்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்தி, அவர்கள் மேன்மையானவர்களாகி, ஆனால் நீங்கள் இன்னமும் தரம் குறைந்திருந்தால் அது என்ன வகையான முயற்சி? தந்தையை நினைவு செய்வதனால், இந்த நச்சுக் கடலிலிருந்து நீங்கள் பாற்கடலுக்குச் செல்கிறீர்கள் (பண்டிதரின் கதை). தந்தை இங்கேயிருந்து, இந்த உதாரணங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார், பின்னர் அவை பக்திமார்க்கத்தில் மறுபடியும் நடைபெறுகின்றன. ரீங்காரமிடும் வண்டுகளின் உதாரணமும் உள்ளது. நீங்களே பிராமணர்கள், பிரம்மா குமார், குமாரிகளே உண்மையான பிராமணர்கள். பிரஜாபிதா பிரம்மா எங்கே? அவர் நிச்சயமாக இங்கே இருக்க வேண்டும். அவர் அங்கே இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் திறமைசாலிகளாக வேண்டும். சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதே பாபாவின் திட்டம். இதை விளங்கப்படுத்துவதற்குப் படமும் உள்ளது. அதற்குப் பொருத்தமான வாசகங்களும் இருக்க வேண்டும். இதுவே கீதையின் கடவுளின் திட்டம். பிராமணர்களாகிய நாங்கள் உச்சிக்குடுமிகள். நீங்கள் ஒருவர் பற்றி மாத்திரம் பேசுவதில்லை. பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், உச்சிக்குடுமிகளான பிராமணர்களும் இருக்கின்றார்கள். பிரம்மாவே பிராமணர்கள் அனைவரினதும் தந்தையாவார். இந்நேரத்தில் இந்தக் குடும்பம் மிகவும் மகத்தானது. நீங்கள் பின்னர் தேவ குடும்பத்தில் ஒருவர் ஆகுகிறீர்கள். இந்நேரத்தில் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவஞ் செய்கின்றீர்கள். ஏனெனில், நீங்கள் அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வெல்கின்றீர்கள். நீங்கள் பெருமளவில் புகழப்படுகின்றீர்கள். தாய்மார்களுக்கு வந்தனங்கள்! நீங்களே சிவசக்தி சேனை. ஏனைய அனைத்தும் பொய்யானவை. அவ்வாறான (வித்தியாசமான குழுக்கள்) பல இருப்பதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். இதனாலேயே ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சி தேவை. தந்தை கூறுகின்றார்: இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. எனக்கும் அதில் ஒரு பாகம் உள்ளது. நானே சர்வசக்திவான். என்னை நினைவுசெய்வதனால், நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள். சிவபாபாவே மகத்தான காந்தம் ஆவார். அவர் அனைத்திலும் அதியுயர்வான இடத்தில் வசிக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் 21 பிறவிகளுக்கு பாபாவின் எல்லையற்ற வாரிசு ஆகியுள்ளீர்கள் என்ற போதையையும், சந்தோஷத்தையும் சதா பேணுங்கள். நீங்கள் நிச்சயமாக யாருடைய வாரிசு ஆகியுள்ளீர்களோ, அவரை நினைவுசெய்வதுடன், தூய்மையாகவும் வேண்டும்.

2. தந்தை உங்களுக்குக் கற்பித்துள்ள மேன்மையான செயல்களை மாத்திரம் செய்யுங்கள். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பௌதீக உலகத்தினதும் சரீரங்களினதும் விழிப்புணர்வுக்கு அப்பால் இருந்து, சூட்சும உலகின் ஆடையை அணிவீர்களாக.

இன்றைய உலகில், மக்கள் தங்களுடைய பணிக்கு ஏற்ப ஆடைகளை அணிகின்றார்கள். அதுபோலவே, நீங்களும் உங்களுடைய பணிக்கும் நேரத்திற்கும் ஏற்ப ஆடைகளை அணிய முடியும். ஒரு கணம், பௌதீகமாக இருங்கள், அடுத்த கணம் சூட்சுமமாக இருங்கள். இவ்வாறு பல ரூபங்களைக் கொண்ட ஒருவராக ஆகுங்கள். உங்களால் எல்லா வகையான சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும். இது உங்களுடைய சொந்த ரூபமாகும். மற்றவர்களுடைய ஆடைகள் உங்களுக்கு பொருந்துகின்றதோ இல்லையோ, உங்களால் உங்களுடைய சொந்த ஆடைகளை இலகுவாக அணிய இயலும். எனவே, இந்த ஆசீர்வாதத்தை நடைமுறைப்படுத்துங்கள், உங்களால் தனித்துவமான அவ்யக்த சந்திப்பின் அனுபவத்தை பெற முடியும்.

சுலோகம்:
அனைவரின் மீதும் மரியாதை கொண்டவர்களால் உதாரணங்களாக ஆக முடியும். நீங்கள் மரியாதை கொடுத்தால் மாத்திரமே உங்களால் மரியாதையைப் பெற முடியும்.

அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

உங்களுடைய பௌதீக பணிகளுக்கு ஏற்ப, நீங்கள் உங்களுடைய நேர அட்டவணையை அமைத்துக் கொள்வதைப் போல், உங்களுடைய சக்தி நிறைந்த மனதிற்கு நிகழ்ச்சியை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருபோதும் குழப்பம் அடைய மாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய மனதை எந்தளவுக்கு சக்திவாய்ந்த எண்ணங்களில் மும்முரமாக வைத்திருக்கின்றர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் குழப்பம் அடைய மாட்டீர்கள். உங்களுடைய மனம் தொடர்ச்சியாக ஒருநிலையாக இருக்கும் போது, அதாவது அது ஒருமுகப்பட்டு இருக்கும் போது, உங்களுடைய நல்ல அதிர்வலைகள் இயல்பாக எல்லா இடங்களுக்கும் பரவும், சேவையும் இடம்பெறும்.