07.06.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.03.2010     Om Shanti     Madhuban


மூதாதையர் மற்றும் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மா என்ற சுயமரியாதையில் இருந்தவண்ணம் முழு விருட்சத்திற்கும் சகாஷ் வழங்குவதன் மூலம் உங்களின் மனதால் அனைவரையும் பராமரியுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள மூதாதையர்களாகவும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகவும் உள்ள தனது ஆத்மாக்கள் அனைவரையும் பார்க்கிறார். நீங்கள் உங்களை மூதாதை ஆத்மாக்களாகக் கருதுகிறீர்கள்தானே? பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் எங்கே வாழ்கிறார்கள்? உங்களின் விருட்சத்தை உங்களுக்கு முன்னால் கொண்டு வந்து, அதில் உங்களின் இடம் எங்கே இருக்கிறது என்று பாருங்கள். மூதாதையர்களின் இடம் வேர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்களே விருட்சத்தின் வேர்களும் அத்துடன் அடிமரமும் ஆவீர்கள். எனவே, முழு விருட்சமும் வேர்களின் மூலமே பராமரிப்பைப் பெறுகின்றது. நீங்கள் பராமரிப்பதுடன் முழு விருட்சத்தினதும் சகல கிளைகள், கொப்புகள், இலைகள் அனைத்திற்கும் சகாஷை வழங்கும் மூதாதையர்கள் ஆவீர்கள். மூதாதையர்களாக இருப்பதுடன் கூடவே நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களும் ஆவீர்கள். கடைசி இலைகூட அடிமரத்தின் ஊடாக சகாஷைப் பெறுகிறது. நீங்கள் உங்களை முழு விருட்சத்திற்கும் சகாஷை வழங்குபவர்கள் என்பதை அனுபவம் செய்கிறீர்களா? கிளைகள், கொப்புகள், இலைகளாக இருக்கும் ஆத்மாக்கள் அனைவருக்கும் சகாஷை வழங்கும் மூதாதையர்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா? எப்படித் தந்தை பிரம்மா முப்பாட்டனார் எனப்படுகிறாரோ, அதேபோல் அவரின் குழந்தைகள், அவரின் சகபாடிகளும் மாஸ்ரர் முப்பாட்டனார் ஆவீர்கள். முழு விருட்சத்திலும் உள்ள ஆத்மாக்களும் மூதாதை ஆத்மாக்களான உங்களை நோக்கிக் கவரப்படுகிறார்கள். மூதாதை ஆத்மாக்களான நீங்கள் அவர்களை உங்களின் சக்திகளால் பராமரிக்கிறீர்கள். தந்தை, மூதாதை ஆத்மாக்களான உங்கள் அனைவரையும் பராமரித்தார், எப்படி அவர் அதைச் செய்தார்? சகல சக்திகளாலும். அதேபோல், நீங்கள் மூதாதையர்களாக இருப்பதைப் பொறுத்தவரை, நீங்களே அவர்களை சக்திகளால் பராமரிப்பவர்கள். தற்காலத்தில், ஆத்மாக்கள் அனைவரும் சந்தோஷம் அற்று இருப்பதை உங்களால் காண முடிகிறது. அவர்கள் தமது சொந்த இஷ்ட தெய்வங்களை அழைக்கிறார்கள்: ‘வந்து, எங்களைப் பாதுகாருங்கள்! எமக்கு அமைதியைக் கொடுங்கள்! எமக்கு சக்தியைக் கொடுங்கள்! ஓ மன்னிப்புக் கடல்களே, மூதாதையர்களே, எங்களைப் பராமரியுங்கள்!’ மூதாதை ஆத்மாக்களான உங்களால் இந்த ஒலியை உங்களின் காதுகளில் கேட்க முடிகிறதா? அவர்களின் மூதாதையர்களாக இருக்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? முழு மரத்தையும் பாருங்கள் - ஏனைய மதங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் அனைவரும் அந்த மரத்தின் கிளைகளாகவும் கொப்புகளாகவும் இருப்பதனால், அவர்களும் அந்தப் பார்வையுடனேயே உங்களைப் பார்க்கிறார்கள். நீங்களும் அவர்களின் மூதாதையர்கள் ஆவீர்கள். நீங்கள் எந்தவொரு மதத்தைச் சேர்ந்த ஆத்மாக்களையும் சந்திக்கும்போது, அவர்களை உங்களின் சொந்த மரத்தின் கிளைகள், கொப்புகளாகக் கருதுகிறீர்களா? அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, நீங்கள் தங்களுக்குச் சொந்தமானவர்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அந்த ஆத்மாக்களுக்கு நீங்கள் தங்களுக்குச் சொந்தமானவர்கள் என்ற உணர்வு உள்ளது, அவர்கள் அந்த உணர்வைக் கொண்டிருக்கவே வேண்டும். உங்களுக்குள் அந்தளவு போதையும் கருணை உணர்வுகளும் உள்ளனவா? அவர்கள் துயரத்துடன் அழுகிறார்கள்: ‘கருணை காட்டுங்கள்!’ எனவே, இப்போது காலத்திற்கேற்ப, மூதாதை ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் உங்களின் மனங்களினூடாக சக்திகளால் அவர்களைப் பராமரிக்க வேண்டும். இவர்களுக்கு இப்போது இதுவே தேவையாக உள்ளது. எந்தளவிற்கு நீங்கள் ஒரு மூதாதை என்ற போதையைப் பேணுகிறீர்களோ, அந்தளவிற்கு, அந்த ஆத்மாக்கள் உங்களால் பராமரிக்கப்படுவார்கள். பொதுவாக, லௌகீக வாழ்க்கையிலும் ஒருவரின் மூத்தவர்களால் அவர் பராமரிக்கப்படுவார். அவர்களே ஒருவரின் சரீரத்திற்கான உணவு, பானம் போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அத்துடன் ஒருவரின் வருமானத்திற்கான மூலாதாரமான கல்விக்கான ஏற்பாடுகளையும் செய்வார்கள். எப்படித் தந்தை குழந்தைகளான உங்களை வெவ்வேறு சக்திகளால் பராமரிக்கிறாரோ, அவ்வாறே, முழு விருட்சத்தினதும் கிளைகள், கொப்புகள், இலைகளைப் பராமரிப்பது உங்களின் கடமை ஆகும். மூதாதை ஆத்மாக்களான உங்களுக்கு இத்தகைய உற்சாகம் உள்ளதா? அத்துடன் நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் என்ற போதையும் உங்களுக்கு இருக்கிறதா? நாடகம் முழுவதையும் பாருங்கள், எந்தவொரு மகாத்மா அல்லது மதத்தாபகரும் ஆத்மாக்களான உங்களைப் போன்று ஒழுங்குமுறையுடன் வழிபடப்படுவதில்லை. உங்களின் பூஜைகள் ஒழுங்குமுறையுடன் இடம்பெறுகின்றன: உங்களுக்கான ஆரத்தி (ஒரு தட்டில் தீபங்களை ஏற்றி வழிபடும் முறை) பிரசாதம் படைத்தல் - இந்த முறையில் வேறு எவரும் வழிபடப்படுவதில்லை. நீங்கள் நினைவு செய்யப்படும் வழிமுறையும் உங்களின் புகழ் பாடப்படும் வழிமுறையும்கூட ஒழுங்குமுறையுடனேயே இடம்பெறுகிறது. இந்த முறையில் எவரும் நினைவு செய்யப்படுவதில்லை. எனவே, மூதாதையர்களாக இருப்பதுடன் கூடவே, நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களும் ஆவீர்கள். இந்த முழு நாடகத்திலும் வேறு எவரும் உங்களைப் போன்று அதே முறையில் வழிபடப்படவோ அல்லது நினைவு செய்யப்படவோ இல்லை.

எனவே, பூஜிக்கத் தகுதிவாய்ந்த, மூதாதை ஆத்மாக்களான உங்களைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தந்தையின் இதயத்தில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் பாடல் என்னவென்றால்: ஆஹா, முழு விருட்சத்தினதும் எனது மூதாதை ஆத்மாக்களே, பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களே! ஆஹா! தற்காலத்தில், குழந்தைகளான உங்கள் அனைவரையும் உங்களின் சுயமரியாதை வடிவத்தில், தந்தைக்குச் சமமாக சம்பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பதைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். அதற்கு, குழந்தைகளான நீங்கள் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளான நீங்கள் அனைவரும் மிக நல்ல முயற்சிகளைச் செய்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்த முயற்சிகளுக்கு சதா (எப்போதும்) என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் இதற்கே கவனம் செலுத்த வேண்டும். பாப்தாதா குழந்தைகளான உங்களைக் கேட்கிறார்: எப்படி பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் உங்களின் மேன்மையான சுய மரியாதை வடிவத்தில் பார்க்கிறாரோ, அதேபோல், நீங்களும் உங்களை இத்தகைய மேன்மையான சுயமரியாதை உடையவர்களாகக் கருதுகிறீர்களா?

குழந்தைகளான நீங்களும் இப்போது உங்களின் இராச்சியத்திற்குச் செல்ல விரும்புவதை பாப்தாதா கண்டார். நீங்கள் தொடர்ந்து உங்களின் மனங்களில் இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள்: ‘நாங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் இப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும். நாங்கள் இப்போது திரும்பிச் செல்லும் பயணத்தைச் செய்ய வேண்டும்’. இதற்கு, பாப்தாதா உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார்: எல்லா வேளையும் ஏதாவதொரு வகையான சேவை செய்வதில் உங்களை மும்முரமாக ஈடுபடுத்துங்கள். குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்கான ஆர்வமும் ஊக்கமும் உற்சாகமும் இருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். பாப்தாதா மிக நல்ல சேவைச் செய்திகளைக் கேட்கிறார். எவ்வாறாயினும், நீங்கள் துரித கதியில் முன்னேறுவதற்கு, பாப்தாதா குறிப்பாகக் குழந்தைகளான உங்களின் கவனத்தை ஈர்க்கிறார்: வார்த்தைகளால் மட்டும் சேவை செய்யாதீர்கள். நீங்கள் சேவை செய்யும்போது, ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளைச் செய்யுங்கள்: உங்களின் மனதால் சகாஷ் கொடுங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களால், அதாவது, தொடர்புகள் மற்றும் உறவுமுறைகளால் இந்த ஞானத்தைக் கொடுங்கள். ஒரே வேளையில் நீங்கள் செய்யும் சேவையில் ஒரு விளைவையும் உருவாக்குவதற்கு உங்களின் முகத்தாலும் இத்தகைய சேவையைச் செய்யுங்கள். ஒரே வேளையில் மூன்று வகையான சேவையைச் செய்யுங்கள். ஏனென்றால், இப்போது ஆத்மாக்கள் சேவையில் ஏதாவது வேறுபாட்டையே விரும்புகிறார்கள் - ஏதாவது மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, உங்களால் ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்யும்போது, உங்களின் மனதாலும் உங்களின் செயல்களாலும் சேவை இடம்பெறுகிறதா என்பதை நீங்கள் சோதித்துப் பார்த்தீர்களா? அதாவது, உங்களின் உறவுமுறைகளாலும் தொடர்புகளாலும் சேவை இடம்பெறுகிறதா? ஒரே வேளையில் அவை நடக்கிறதா? ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் செய்கிறோம் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் மூன்று வகையான சேவைகளையும் செய்கிறீர்களா? எனவே, இப்போது கவனம் செலுத்துங்கள்! சிலவேளைகளில் மட்டுமல்ல. என்ன நடக்கிறது? நீங்கள் சேவை செய்கிறீர்கள், ஆனால் அத்துடன் கூடவே உங்களுக்குள்ளும் உங்களின் சகபாடிகளுடனும் திருப்தி இருக்க வேண்டும். ஏனென்றால், சேவையின் பலன், திருப்தியும் சந்தோஷமும் ஆகும். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பாருங்கள்: நீங்கள் சேவை செய்தீர்கள். ஆனால் நீங்களும் உங்களின் சகபாடிகளும் சூழலும் திருப்திக்கான அதிர்வலைகளுடன் இருந்தால் மட்டுமே சேவை செய்வதில் சந்தோஷம் இருக்கும் என்று உங்களுக்கு உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி பெறுவதற்கு குறிப்பாக மூன்று விடயங்களைப் பற்றி உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் அவற்றை நினைவு செய்வீர்களாக இருக்கும். முதலில், சேவை என்றால் கருவி என்ற உணர்வுடன் இருத்தல் (நிமித் பாவ்). இரண்டாவதாக, தூய உணர்வுகள் (பாவனா). மூன்றாவதாக, தூய, இனிமையான வார்த்தைகள். நோக்கம் (பாவ்), தூய உணர்வுகள் (பாவனா), சுபாவம் (சுபாவ்). இவை அனைத்தும் நீங்கள் செய்யும் சேவையில் ஒன்றாக இருக்கும்போது, நீங்களும் திருப்தியாக இருப்பீர்கள். உங்களின் சகபாடிகளும் திருப்தியாக இருப்பார்கள். அத்துடன் நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்களோ, அவர்களும் தொடர்ந்து முன்னேறுவார்கள். கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருப்பவர்கள், தந்தையுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஒரு கருவியாக இருக்கும் உணர்வு இல்லாவிட்டால், அவர்கள் தந்தைக்கு நெருக்கமாக வரமாட்டார்கள். எனவே, நீங்கள் சேவை செய்யும் போதெல்லாம், உங்களின் நோக்கங்கள், உணர்வுகள் மற்றும் சுபாவம் என்பவை மிகச்சரியாக இருக்கின்றனவா எனச் சோதித்துப் பாருங்கள். தற்காலத்தில், பாப்தாதா பார்க்கின்ற பிரதானமான விடயம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் எங்கே சேவை செய்யச் சென்றாலும் உங்களின் சகபாடிகள் திருப்தியாக இருக்கிறார்களா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி என்பது, திருப்தி மற்றும் சந்தோஷம் என்ற பலனைப் பெறுவதே ஆகும். இத்துடன்கூடவே, பாப்தாதா ஒரு விடயத்திற்காக சமிக்கை வழங்குகிறார்: நடக்கும்போதும் அசையும்போதும் ஒன்றுகூடலில் இருக்கும்போதும் நீங்கள் சேவை செய்யும்போது, யாரோ ஒருவர் உங்களுடன் இருப்பார், அதனால் ஒருவரை ஒருவர் ஆத்மாவாகப் பாருங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் ஓர் ஆத்மாவாகப் பார்க்கிறீர்கள், நீங்கள் அதையும் பயிற்சி செய்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அந்த ஆத்மாவைப் பார்க்கும்போது, அவரின் ஆதியான சம்ஸ்காரங்களின் ரூபத்தில் பார்க்கிறீர்களா? அல்லது, அந்த ஆத்மாவின் ஒன்றுகலந்துள்ள சம்ஸ்காரங்களையும் பார்க்கிறீர்களா? மற்றவர்களை ஆத்மாக்களாகப் பார்ப்பதில் நீங்கள் சித்தி அடைந்துள்ளீர்கள். ஆனால், அந்த ஆத்மாக்களை எந்த சம்ஸ்காரங்களுடன் பார்க்கிறீர்கள்? அந்த ஆத்மாக்களின் ஆதியான சம்ஸ்காரங்களுடன் நீங்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது, தற்போதுள்ள சம்ஸ்காரங்களும் உங்களின் முன்னால் வருகின்றனவா? எனவே, தந்தை கூறுகிறார்: இன்றில் இருந்து, அனைத்திற்கும் முதலில் எவரையும் ஓர் ஆத்மாவாகப் பாருங்கள். ஆனால் அந்த ஆத்மாவை அவரின் ஆதியான சம்ஸ்காரங்களின் வடிவத்தில் பாருங்கள். அப்போது உங்களுக்கு இடையில் சிலவேளைகளில் நடக்கும் விடயங்கள் அனைத்தும் நடக்காது. தற்சமயம், நீங்கள் ஆத்மாக்களைப் பார்க்கிறீர்கள். ஆனால், ஒவ்வோர் ஆத்மாவின் தற்போதைய சம்ஸ்காரங்கள் என்னவாக இருந்தாலும் அவையும் உங்களின் முன்னால் தோன்றுகின்றன. ஆகவே, ஒருவரோடு ஒருவர் இருக்க வேண்டிய முழுமை ஸ்திதியில் ஓர் இடைவெளி காணப்படுகிறது. எனவே, ஒவ்வோர் ஆத்மாவையும் அவரின் ஆதியான சம்ஸ்காரங்களுடன் பாருங்கள். அப்போது, ஒன்றுகூடலில் ஏற்படும் தடைகள் முடிந்துவிடும்.

இந்த பிராமணக் குடும்பம், ஒரு மேன்மையான குடும்பம் அகும். குடும்பத்திற்கு மகத்தான புகழ் உள்ளது. இந்த இறை குடும்பத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் காண மாட்டீர்கள். கல்பம் முழுவதிலும் ஒரேயொரு தடவை மட்டுமே நீங்கள் இந்த இறை குடும்பத்தைக் கண்டு கொள்வீர்கள். கல்பம் முழுவதிலும் இத்தகைய பெரிய குடும்பத்தை நீங்கள் கண்டு பிடிக்கவே மாட்டீர்கள். இந்தக் குடும்பத்தின் சிறப்பியல்பை அறிந்து கொள்வதும் இந்தக் குடும்பத்துடன் பழகுவதும் பெரியதொரு பாடம் ஆகும். இந்த ஞானத்தின் அத்திவாரம் நம்பிக்கையே என்று உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில் நான்கு விடயங்கள் உள்ளன: தந்தை - தாதாவும் இதில் அடங்குகிறார், இந்த ஞானத்தில் நம்பிக்கை, நாடகத்தில் நம்பிக்கை, குடும்பத்தில் நம்பிக்கை. நீங்கள் புத்திகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், அதனால் இலகுவான முயற்சியாளர்கள் ஆகுகிறீர்கள். எப்படி உங்களுக்கு பாப்தாதாவின் மீது நம்பிக்கை உள்ளதோ, அவ்வாறே குடும்பத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதும் அவசியம் ஆகும். நீங்கள் ஏதாவது பொதியை மூட்டை கட்டும்போது, என்ன செய்வீர்கள்? நான்கு பக்கங்களிலும் அதை இறுக்குவீர்கள். ஒரு பக்கமேனும் இறுக்கமாக இல்லாவிட்டால், அது சத்தம் போடும். அதேபோல், தந்தை, இந்த ஞானம், இந்த ஞானத்திற்குள் குறிப்பாக நாடகம் மற்றும் குடும்பம். இந்த நான்கு விடயங்களும் பலமாக இல்லாவிட்டால், தடைகள் ஏற்படும். அப்போது நீங்கள் தடைகளை வெற்றி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே, குடும்பத்தை இனங்காணுதல், குடும்பத்திற்கான அன்பு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் - இவை முற்றிலும் அவசியமானவை.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மூதாதையர், நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர். ஆதனால் நீங்கள் இந்த விடயங்களை உங்களுக்கும் உங்களின் சகபாடிகளுக்கும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் எத்தகையவராக இருந்தாலும் வரிசைக்கிரமமானவர்களே. எவ்வாறாயினும், பிராமணக் குடும்பத்தின் விசேடமான பணியே ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதே ஆகும். சில குழந்தைகள் கூறுகிறார்கள்: மற்றவர்கள் கோபப்படுகிறார்கள், எப்படி அவர்கள் ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்வார்கள்? அவர்கள் ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடும், அவர்கள் கோபப்படலாம். பாப்தாதா கூறுகிறார்: ஓகே, அவர்களின் சம்ஸ்காரங்களால் அவர்கள் தீய ஆசிகளைக் கொடுக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால், அவர்கள் தீய எண்ணங்களைக் கொடுப்பதனால்.... அவர்கள் தீய எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை எடுத்துக் கொள்பவர் யார்? அது நீங்களா அல்லது மற்ற நபரா அவற்றை எடுத்துக் கொள்பவர்? அவர்களே கொடுப்பவர்கள், நீங்கள் எடுத்துக் கொள்பவர்கள். எனவே, நீங்கள் ஏன் அவர்களின் சாபத்தை ஏற்றுக் கொண்டீர்கள்? நீங்கள் ஆத்மாக்களை அவர்களின் ஆதியான சம்ஸ்காரங்களின் ரூபத்தில் பார்த்தால், உங்களுக்குள் கருணை ஏற்படும். உங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்! அவர்களின் சாபத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், நீங்களே எடுத்துக் கொள்பவர்கள். கொடுக்கவும் வேண்டாம், அவற்றை எடுக்கவும் வேண்டாம்.

பாப்தாதா இப்போது உங்களுக்கு இன்றைக்காகவும் அடுத்த தடவை பாபா வரும்வரைக்கும் வீட்டுவேலை கொடுக்கிறார். நீங்கள் இன்னோர் ஆத்மாவை ஓர் ஆத்மாவாகப் பார்க்கும்போது, அவரின் தற்போதைய சம்ஸ்காரங்களின் வடிவத்தில் பார்க்காதீர்கள். ஆத்மா என்று நீங்கள் சொல்லும்போது, அந்த ஆத்மாவை அவரின் ஆதியான சம்ஸ்காரங்களில் பாருங்கள். அந்த ஆத்மாவுடன் ஓர் உறவுமுறையை உருவாக்கும்போது அல்லது அந்த ஆத்மாவைப் பார்க்கும்போது, அந்தப் பார்வையுடன் அந்த ஆத்மாவைப் பாருங்கள். பின்னர், உங்களின் முயற்சிகளைத் தீவிரம் அடைவதற்கு அனுமதிக்காத இந்தத் தடைகள் வரமாட்டாது. இப்போது நீங்கள் உங்களின் மனோபாவத்தையும் பார்வையையும் மாற்றினால், சூழ்நிலைகள் அனைத்தும் முடிந்துவிடும். நீங்கள் ஆத்மாக்களை எந்தவொரு சூழ்நிலைகளில் பார்த்தாலும், பிராமணக் குடும்பத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் எப்போதும் உள்ள கடமை என்னவென்றால், நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொடுப்பதுடன் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் எடுத்துக் கொள்வதும் ஆகும் என்று பாப்தாதா முன்னரே உங்களுக்குக் கூறியுள்ளார். அந்த சம்ஸ்காரங்களுடன் ஆத்மாக்களைப் பார்த்து, அந்த முறையில் முன்னேறிச் செல்லுங்கள். பாபா உங்களுக்கு மேலும் ஒரு விடயத்தையும் கூறுவார். உங்களுக்கு முன்னரும் இதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சிலவேளைகளில், ஓர் ஒன்றுகூடலில், நீங்கள் பரதர்சன் (மற்றவர்களைப் பார்த்தல்), பர சிந்தன் (மற்றவர்களைப் பற்றிச் சிந்தித்தல்), பரமத் (மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுதல்) என்பவற்றால் கவரப்படுகிறீர்கள். இப்போது, இந்த மூன்று ‘பர்’ களையும் முடித்து, ஒரு ‘பர்’ என்பதை வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, பர-உப்கார் (மற்றவர்களை ஈடேற்றுதல்). நீங்கள் மற்றவர்களை ஈடேற்ற வேண்டும். நீங்களே மற்றவர்களை ஈடேற்றுபவர்கள். பிராமணர்களின் சுபாவம், மற்றவர்களை ஈடேற்றுவதாகும். மற்றவர்களைப் பார்க்காதீர்கள். அந்த ‘பர்’ என்பதை முடித்து விடுங்கள். அந்த மூன்றும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இதனாலேயே, நீங்கள் சதா உங்களின் சுய மரியாதையை நினைவு செய்ய வேண்டும்: பிராமண ஆத்மாவான எனது சுய மரியாதை, மற்றவர்களை ஈடேற்றுவதே ஆகும். அடுத்த பருவகாலத்தின் போது, குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரிலும் இந்த மாற்றத்தைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். இது சாத்தியமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அனைவருமே உங்களின் கைகளை உயர்த்துவதில் கெட்டிக்காரர்கள்! எனவே, நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? நல்லது. பாப்தாதா பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். ஒருவர் மற்றவரின் கவனத்தைத் தொடர்ந்தும் இதில் ஈர்க்க வேண்டும். நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஒவ்வொரு நாள் இரவிலும் தூங்கச் செல்வதற்கு முன்னர், பாப்தாதாவிற்கு இரவு வணக்கம் சொல்வதற்கு முன்னர், நீங்கள் ஏதாவது நல்லது செய்தீர்களா அல்லது கெட்டது செய்தீர்களா என்ற உங்களின் முழுமையான அட்டவணையையும் பாபாவிடம் கொடுங்கள். நீங்கள் எது செய்திருந்தாலும் அதன் அட்டவணையைக் கொடுத்து, உங்களின் புத்தியை வெறுமையாக்கிய பின்னர், இரவு வணக்கம் என்று கூறுங்கள். தந்தைக்கு இரவு வணக்கம் கூறிவிட்டு, தந்தையின் நினைவில் தூங்கச் செல்லுங்கள். அப்போது நீங்கள் மிக நன்றாக நித்திரை செய்வீர்கள். உங்களை முதலில் வெறுமை ஆக்குங்கள். உங்களின் புத்தியில் எதையும் வைத்திருக்காதீர்கள். நீங்கள் உங்களின் முழுமையான அட்டவணையையும் தந்தையிடம் கொடுத்தால், தர்மராஜ்புரிக்கு நீங்கள் செல்ல வேண்டியதில்லை. நேர்மையான இதயத்தை இட்டுப் பிரபு களிப்படைகிறார். எனவே, உங்களுக்கு இந்த வீட்டுவேலை கொடுக்கப்பட்டுள்ளது. முதலில், உங்களின் மூதாதை மற்றும் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ரூபத்தில் நடக்கும்போதும் அசையும்போதும் உங்களால் சேவை செய்ய முடியும். தந்தை புதல்வி ஜனக்கைப் பார்த்துள்ளார். அவரின் ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டாலும் கராச்சியில் நடக்கும் சேவைக்குத் தனது மனதால் அவர் சகாஷ் வழங்கினார். அதற்கு யார் கருவியாக இருந்தாலும் இவர் இதை நடைமுறையில் செய்தார். அங்குள்ள ஆத்மாக்கள் சகாஷைப் பெற்றார்கள். அவர்கள் உற்சாகத்துடன் முன்னேறுகிறார்கள். எனவே, பாப்தாதா இத்தகைய நடைமுறை உதாரணத்தைக் கண்டார். அதனால் உங்களால் அனைவராலும் அதைச் செய்ய முடியும். சந்தோஷம் அற்று இருப்பவர்களுக்கு, கதறி அழுபவர்களுக்கு உங்களால் சந்தோஷ அலைகள் சென்று அடையச் செய்ய முடியும். உங்களின் பக்தர்கள் உங்களை அழைக்கிறார்கள்: எப்போது எங்களின் தேவதேவியர்கள் கருணை கொண்டு வருவார்கள்? உங்களால் அதைக் கேட்க முடியாமல் உள்ளது. ஆனால், தந்தையால் அதை அதிகளவில் கேட்க முடிகிறது. அவர்கள் இஷ்ட தெய்வங்களான உங்கள் அனைவரையும் அழைக்கிறார்கள். உங்களின் பக்தர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் பக்தர்களுக்குத் தெரியும். அவர்கள் அழைக்கிறார்கள். பிராமண ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். உங்களில் சிலர் சிறிது பின்தங்கி இருக்கலாம் அல்லது கெட்டிக்காரர்களாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். நீங்கள் வேர்களில் அமர்ந்திருக்கிறீர்கள். எனவே, சகாஷ் வழங்கும் பாகம் உங்களுக்கு இருக்கிறது. எனவே இப்போது, உங்களின் மனதால் சேவை செய்வதை அதிகரியுங்கள். எந்தளவிற்கு நீங்கள் மும்முரமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். உங்களால் இதைச் செய்ய முடியும், அல்லவா? உங்களின் மனதால் எப்படிச் சேவை செய்வது என்று உங்களுக்குத் தெரியும், அல்லவா? உங்களுக்குத் தெரியுமா? அதைத் தெரியும் என்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஓகே, உங்களின் கைகளைக் கீழே விடுங்கள்! உங்களுக்குத் தெரிகிறது. ஓகே, அவ்வப்போது அதை நடைமுறையில் தொடர்ந்து செய்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் தொடர்ந்து இதைச் செய்கிறீர்களா? ஓகே. நீங்கள் அதை ஓர் ஒழுங்குமுறையாகத் தொடர்ந்து செய்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டுமா? நீங்கள் அதைச் சிலவேளைகளில் மட்டும் செய்கிறீர்கள் என்றால், அதை ஒழுங்குமுறையுடன் செய்யுங்கள். அதை நீங்கள் சிறிதளவில் செய்கிறீர்கள் என்றால், அதை அதிகரியுங்கள். ஏனென்றால், கல்பம் முழுவதற்குமான அத்திவாரம், தற்சமயம் நீங்கள் செய்யும் சேவையின் பலனே ஆகும். நீங்கள் பூஜிப்பவர்களாகவோ அல்லது இராச்சியத்தைக் கோருபவர்களாகவோ எப்படி ஆகினாலும் இரண்டுக்குமான அத்திவாரம், தற்சமயம் நீங்கள் செய்யும் சேவை, தற்சமயம் உங்களின் ஸ்திதி, தற்சமயம் உங்களின் வார்த்தைகள், தற்சமயம் உங்களின் உறவுமுறைகளும் தொடர்புகளுமே ஆகும். இதனாலேயே, அடுத்த தடவை பாப்தாதா முதல் சந்திப்பிற்காக வரும்போது, அவர் விரும்புகிறார்..... எதுவரை இது தொடரும் என்று தந்தை கேட்டதைப் பற்றி நீங்கள் சிந்திக்கக்கூடும். நீங்கள் என்றும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதனாலேயே, அனைவரின் பெறுபேறும் முதல் சந்திப்பின் போது எடுத்துக் கொள்ளப்படும். இப்போது இருப்பதில் இருந்து சதவீதம் அதிகரித்திருக்க வேண்டியது அவசியமாகும். உண்மையில், பாப்தாதா ஆரம்பத்தில் இருந்தே கூறுகிறார்: நீங்கள் அதைச் செய்வதாக இருந்தால், இப்போதே அதைச் செய்யுங்கள். ஏதாவதொரு வேளையில் அல்ல. நீங்கள் பாப்தாதாவிடம் சிலவேளைகளில் என்ற பாடல்களை அதிகளவில் பாடுகிறீர்கள். நீங்கள் மிக நல்ல பாடல்களைப் பாடுகிறீர்கள். ஆனால் சிலவேளைகளில் என்ற பாடலை பாப்தாதா விரும்புவதில்லை. ‘அபி அபி’ (இப்போதே) என்ற பாடல்களையே அவர் விரும்புகிறார். உடனடித் தானம் மகத்தான புண்ணியத்தை உருவாக்கும். எனவே, அடுத்த வருடத்திற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், குழந்தைகளான நீங்கள் இல்லாமல் எதையும் தனித்துச் செய்வதற்கு பாப்தாதா விரும்புவதில்லை. இதனாலேயே, அவர் ஒவ்வொரு நாளும் குழந்தைகளான உங்களைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறார். தீவிர முயற்சியாளர் குழந்தைகளே, இனிய குழந்தைகளே, அன்பான குழந்தைகளே, இப்போது செல்வோம் வாருங்கள்!

எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் நீங்கள் பாப்தாதாவின் முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது எங்கே அமர்ந்திருந்தாலென்ன, நீங்கள் அனைவரும் தந்தையை நினைவு செய்கிறீர்கள். எனவே, தந்தை யாரை நினைவு செய்கிறார்? அவர் எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரையும் நினைவு செய்கிறார். ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்ற நம்பிக்கை தந்தைக்கு உள்ளது. தந்தை ஒவ்வொரு குழந்தையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள் என்பதை அவர் அறிந்திருந்தாலும் நீங்கள் அனைவரும் உங்களின் இலக்கத்திற்கு ஏற்ப சம்பூரணம் ஆகவேண்டும், அப்படியல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் செய்வதற்கேற்ப ஒவ்வொருவரின் முயற்சியையும் பாபா பார்க்கிறார். தந்தைக்கு மிகுந்த அன்பு ஏற்படுகிறது. நீங்கள் முயற்சி செய்யும்போது, நீங்கள் சிரமப்படுவதில் இருந்து விடுபட வேண்டும் என்று அவருக்கு அதிகளவில் அன்பு ஏற்படுகிறது. அன்பிலே திளைத்திருங்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அன்பிலே திளைத்து இருக்கிறீர்களோ, அந்தளவிற்குக் குறைந்தளவு முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். அத்துடன், தந்தையின் மீது அன்பு கொண்டிருப்பதற்காக உங்களின் கைகளை உயர்த்தும்படி பாப்தாதா கேட்கும்போது, நீங்கள் அனைவரும் மிகவும் உயரே உங்களின் கைகளைத் தூக்குகிறீர்கள். உங்களுக்கு அவரின் மீது அன்பு உள்ளது என்பதைத் தந்தை ஏற்றுக் கொள்கிறார். அன்பெனும் பாடத்தில் உங்களில் பெரும்பாலானோர் சித்தி அடைந்துள்ளீர்கள். ஆனால் சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளும்போது தந்தையை மறந்து விடுகிறீர்கள்.

எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவின் இதயபூர்வமான பல்கோடி மடங்கு அன்பும் நினைவுகளும் கனிவும் உரித்தாகுக. அனைவருக்கும், அதிபதிகளான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் தந்தை நூறாயிரக்கணக்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்களும் பறப்பதுடன் தொடர்ந்து மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் அசரீரியாகி, பிரதிகூலமான சூழ்நிலைகள் அனைத்தையும் வெற்றி கொள்வதற்கு, உங்களின் அணிகலன்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் உங்களின் சொந்த ஸ்திதியைப் பயன்படுத்துவீர்களாக.

தமது அணிகலன்களைத் தங்களுடன் வைத்திருப்பவர்களால் ஒருபோதும் தமது சரீரங்களை இட்டு எந்தவிதமான அகங்காரத்தையும் கொண்டிருக்க முடியாது. அசரீரியானவராகி, உங்களின் அணிகலன்கள் அனைத்தையும் பயன்படுத்துவது என்றால் மன்மனாபவ மற்றும் மதியாஜிபவ ஆகுவதாகும். நீங்கள் உங்களின் சொந்த ஆதி ஸ்திதியில் ஸ்திரமாகும்போது, உங்களால் பிரதிகூலமான சூழ்நிலைகள் அனைத்தையும் இலகுவாக வெற்றி கொள்ள முடியும். அப்போது, இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் வெவ்வேறு பழைய வகையான சுபாவங்கள் அனைத்தும் முடிந்துவிடும். ஆத்மாவான உங்களின் நோக்கங்களை நீங்கள் பார்க்கும்போது, முரண்பாடுள்ள சுபாவத்துடன் செய்யப்படும் அனைத்தும் முடிவடைந்துவிடும். அப்போது உங்களால் சகல சூழ்நிலைகளிலும் முகங்கொடுக்கும் சக்தியை உங்களுக்குள் விருத்தி செய்து கொள்ள முடியும்.

சுலோகம்:
உங்களின் மனதில் ஓரடி எடுத்து வையுங்கள், தந்தை ஒத்துழைப்புக் கொடுப்பதற்காக ஆயிரம் அடிகளை எடுத்து வைப்பார்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

தமது சொந்தக் கடந்த காலத்தை அல்லது மற்றவர்களின் கடந்த காலத்தைப் பார்க்காமல் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைப்பவர்கள், இலகுவான சுபாவத்தைக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் இலகுவான சுபாவத்தால் அவர்களின் கண்களிலும் முகங்களிலும் செயல்பாடுகளிலும் நடைமுறையாக இனிமையையும் மலர்ச்சியையும் உங்களால் காண முடியும். இலகுவான சுபாவம் என்ற ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள், மற்றவர்களையும் இலகுவான சுபாவம் உடையவர்கள் ஆக்குவார்கள். இலகுவான சுபாவத்தைக் கொண்டிருத்தல் என்றால், நீங்கள் எதைக் கேட்டாலும் பார்த்தாலும் அல்லது செய்தாலும் சாரம் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் சாரத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.