07.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மிகவும் இராஐரீகமான மாணவர்கள். நீங்கள் தந்தையினதும், ஆசிரியரினதும், சற்குருவினதும் நினைவில் நிலைத்திருந்து, ஆன்மீகச் சேவையைச் செய்ய வேண்டும்.
கேள்வி:
தங்களை எல்லையற்ற நடிகர்களாகக் கருதியவாறு முன்னேறிச் செல்பவர்களின் அடையாளங்கள் யாவை?பதில்:
அவர்கள் தங்களது புத்திகளை சூட்சுமமானவர்கள் அல்லது சரீரதாரிகள் எவரையும் நினைவுசெய்ய அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் ஒரேயொரு தந்தையையும், அமைதி தாமமாகிய தங்களது வீட்டையும் தொடர்ந்தும் நினைவு செய்கின்றார்கள். ஏனெனில் அனைத்து மகத்துவமும் ஒரேயொரு தந்தைக்கு உரியவையே. தந்தை எவ்வாறு முழு உலகிற்கும் உதவி செய்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்றாரோ, அவ்வாறே குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று உதவியாளர்கள் ஆகுகிறீர்கள்.ஓம் சாந்தி.
முதலாவதாக, தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கிறார். இங்கே தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பொழுது, உங்களை நீங்கள் ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதும், நீங்கள் ஆசிரியருக்கு முன்னாலும் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதும் உங்கள் புத்திகளில் பிரவேசிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்பதே முதலாவது விடயம் ஆகும். தந்தை ஓர் ஆத்மா, ஆசிரியரும் ஓர் ஆத்மா, குருவும் ஓர் ஆத்மா. அனைவரும் ஒருவரே. நீங்கள் புதியதொரு விடயத்தைச் செவிமடுக்கின்றீர்கள். பாபா, இதை நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் செவிமடுக்கின்றோம் என நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் அங்கங்களால் அவர் கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள் என்பதையும் உங்கள் புத்திகள் நினைவுசெய்யட்டும். இந்த நேரத்தில் மட்டுமே குழந்தைகளாகிய நீங்கள் அதிமேலான கடவுளிடமிருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவார். அவர் உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் எந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார்? அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார், அதாவது, அவர் உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் எத்தனை பேரைத் திரும்ப அழைத்துச் செல்கின்றார்? நீங்கள் இவை அனைத்தையும் அறிவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக் கூட்டத்தைப் போல் திரும்பிச் செல்ல வேண்டும். சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமே உள்ளது. அங்கே அனைத்தும் உள்ளது: தூய்மை, அமைதி, சந்தோஷம். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவானது. இங்கிலாந்து உலக வரைபடத்தில் எங்கே உள்ளது என்பதைப் புரிந்து கொண்டதும், அதை அவர்களால் இலகுவாக நினைவுசெய்ய முடியும். இங்கும் அவ்வாறே. ஒவ்வொரு மாணவருக்கும் இது விளங்கப்படுத்தப்பட வேண்டும். அதிமேலான கடவுள் சிவனுக்கு வந்தனங்கள் என்பது ஒரேயொருவருக்குரிய புகழாகும். படைப்பவராகிய தந்தை ஒருவர், ஒரு குடும்பத்தின் மூத்த அங்கத்தவர் ஆவார். அந்தத் தந்தையர் எல்லைக்கு உட்பட்ட வீடுகளுக்கு உரியவர்கள், இவரோ எல்லையற்ற வீட்டிற்குரிய தந்தை ஆவார். அவரே ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இராஐரீகமான மாணவர்கள். நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் எனத் தந்தை கூறுகிறார். பிரஐாபிதா பிரம்மா நிச்சயமாக இங்கேயே இருக்க வேண்டும். அவரில்லாமல் எவ்வாறு எதையும் செய்ய முடியும்? அவர் தத்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அவர் முதிர்ச்சி உடைய ஒருவராகவே இருக்க வேண்டும். எனவே முதிர்ச்சியான ஒருவரே தேவைப்படுகின்றார். ஸ்ரீகிருஷ்ணர் ‘குழந்தாய், குழந்தாய்’ எனக் கூறமாட்டார். அது முதியவர் ஒருவருக்கே பொருந்துகின்றது. ஒரு குழந்தையை எவரும் பாபா எனக் கூறமாட்டார்கள். எனவே நீங்கள் யாருக்கு முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் புகவேண்டும். உங்களுக்குள் சந்தோஷமும் இருக்க வேண்டும். மாணவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களின் புத்திகள் அவர்களின் தந்தையையும், ஆசிரியரையும் நினைவுசெய்கின்றன. அவர்களின் தந்தை அவர்களின் ஆசிரியரிலிருந்து வேறுபட்டவர். உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஓரேயொருவரே. இந்த பாபாவும் ஒரு மாணவர். இவரும் கற்கின்றார். இவர் தனது சரீரத்தைக் கடனாகக் கொடுத்திருப்பதே ஒரேயொரு வேறுபாடாகும்; வேறெந்த வேறுபாடும் இல்லை. இல்லாவிடில் இவரும் உங்களைப் போன்றவரே. இந்த ஆத்மாவும் நீங்கள் புரிந்து கொள்வதையே புரிந்து கொள்கின்றார். மகத்துவம் ஒரேயொரு தந்தையுடையதே. அவர் பிரபு, ஈஸ்வர் என அழைக்கப்படுகின்றார். இவரும் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, ஒரேயொரு பரமாத்மாவை நினைவு செய்யுங்கள். சூட்சுமமானவர்கள், சரீரதாரிகள் சகலரையும் மறந்து விடுங்கள். நீங்கள் அமைதிதாம வாசிகள். நீங்கள் எல்லையற்ற நடிகர்கள். இந்த விடயங்களை வேறு எவரும் அறிய மாட்டார்கள். இந்த விடயங்களை முழு உலகில் உள்ள எவருமே அறிய மாட்டார்கள். இங்கே வருபவர்கள் தொடர்ச்சியாக இதைப் புரிந்து கொள்வதுடன், தொடர்ந்தும் தந்தையின் சேவையைச் செய்கின்றார்கள். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள், இல்லையா? தந்தையும் உங்களுக்குச் சேவை செய்யவே வந்துள்ளார். அவர் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கும் சேவையைச் செய்கின்றார். நீங்கள் உங்கள் இராச்சியத்தை இழந்து சந்தோஷம் அற்றவர்கள் ஆகும்பொழுது, தந்தையை அழைக்கின்றீர்கள். அந்த இராச்சியத்தை உங்களுக்குக் கொடுத்தவரையே நீங்கள் அழைத்திருப்பீர்கள். தந்தை உங்களைச் சந்தோஷ உலகின் அதிபதிகளாக ஆக்க வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உலகில் உள்ள வேறு எவருமே இதை அறிய மாட்டார்கள். பாரதவாசிகள் அனைவருமே ஒரே தர்மத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே பிரதான தர்மமாகும். அந்தத் தர்மம் இல்லாத பொழுதே தந்தை வந்து அதை ஸ்தாபிக்க முடியும். அல்லா அல்லது கடவுள் என்றெல்லாம் முழு உலகமும் அழைக்கின்ற கடவுளே நாடகத்திற்கு ஏற்ப மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் செய்ததைப் போல இங்கே வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை வந்து ஸ்தாபனையை மேற்கொள்ளும் கீதையின் அதே அத்தியாயம் இதுவாகும். பிராமணர்களும், தேவர்களும் எனக் கூறப்பட்டுள்ளது; சத்திரியர்களைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில், சத்திரியர்கள் இரண்டு கலைகள் குறைந்தவர்கள். ஆகையால் “பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் வந்தனங்கள்” என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது. புதிய உலகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. திரேதாயுகம் புதிய உலகம் என அழைக்கப்படுவதில்லை. ஆரம்பத்தில் சத்தியயுகத்தில் உலகம் முற்றிலும் புதியதாக இருக்கின்றது. இப்பொழுது இவ்வுலகம் அனைத்திலும் பழையதாக உள்ளது. பின்னர் நீங்கள் அனைத்திலும் புதிய உலகிற்குச் செல்வீர்கள். நாங்கள் இப்பொழுது அந்த உலகிற்குச் செல்கின்றோம். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுகிறீர்கள் எனக் கூறுகிறீர்கள். நாங்கள் சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கின்றோம். இது இளவரசர் ஆகுகின்ற கதை என அழைக்கப்படுவதில்லை. இது சத்திய சாராயணனின் கதை என அழைக்கப்படுகின்றது. அவர்கள் நாராயணனை வேறோருவராகக் கருதுகிறார்கள். ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை அவர்கள் காண்பிப்பதில்லை. இந்த ஞானத்தின் பல விடயங்கள் உள்ளன. இதனாலேயே உங்களுக்கு ஏழு நாட்களுக்கு இந்த ஞானம் வழங்கப்படுகின்றது. நீங்கள் ஏழு நாட்கள் பத்தியில் இருக்க வேண்டும். எல்லா நேரமும் நீங்கள் இங்கே இந்த பத்தியில் வந்திருக்க முடியாது. அவ்வாறாயின், அனைவரும்; இந்த பத்தியில் இருக்கிறோம் என்று சாக்குப்போக்குகள் கூறி இங்கேயே இருந்து விடுவார்கள். காலை, மாலை இரண்டு வேளையிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. மாலையில் சூழல் அவ்வளவு நல்லதாக இருக்க மாட்டாது. இரவிலும் பத்திலிருந்து பன்னிரெண்டு மணிவரை சூழல் மிகவும் தீயது. இங்கே குழந்தைகளாகிய நீங்கள் நினைவில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அங்கே நீங்கள் நாள் முழுவதும் உங்கள் வேலையிலும், வியாபாரத்திலும் மும்முரமாக இருக்கிறீர்கள். வேலை செய்வதோடு, நல்ல தொழிலைப் பெறுவதற்காகக் கற்பவர்களும் பலர் இருக்கின்றார்கள். நீங்கள் இங்கே கல்வி கற்கின்றீர்கள். எனவே நீங்கள் உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை நினைவுசெய்ய வேண்டும். சரி, அவரை நீங்கள் ஆசிரியராக நினைவுகூர்ந்தால், உங்களால் தந்தை, ஆசிரியர், சற்குரு மூவரையும் ஒரே நேரத்திலே நினைவுசெய்ய முடியும். இது உங்களுக்கு மிகவும் இலகுவானது. எனவே நீங்கள் அவரை உடனடியாக நினைவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அவரே எங்களது பாபாவும், எங்கள் ஆசிரியரும், எங்கள் குருவும் ஆவார். தந்தையே அதிமேலானவர். அவரிடமிருந்தே நாம் எமது சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாம் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வோம். சுவர்க்கம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முயற்சி செய்கின்றீர்கள். இதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். உங்கள் ஓசை பரவும்பொழுது மனிதர்கள் இதை அறிந்து கொள்வார்கள். பிராமணர்களாகிய உங்களது ஆன்மீகத் தர்மம், ஸ்ரீமத்தைப் பின்பற்றி இந்த ஆன்மீகச் சேவையில் மும்முரமாக இருப்பதாகும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், மேற்கொள்ளும் மேன்மையான பணியை மக்களும் அறிந்து கொள்வார்கள். நீங்கள் செய்கின்ற ஆன்மீகச் சேவையை வேறெவராலும் செய்ய முடியாது. பிராமண தர்மத்திற்கு உரியவர்களாகிய நீங்கள் மட்டுமே இப்பணியைச் செய்ய முடியும். எனவே நீங்கள் உங்களை இப்பணியில் ஈடுபடுத்துவதுடன், இதில் மாத்திரமே மும்முரமாகவும் இருக்க வேண்டும். தந்தையும் இப்பணியில் மும்முரமாக இருக்கிறார், அல்லவா? நீங்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அரசாங்கத் தலைவர்கள் அனைவரையும் பராமரிப்பதற்காகச் சந்திக்கிறார்கள். இந்கே நீங்கள் மறைமுகமான வழியில் என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் மறைமுகமான, அறியப்படாத, அகிம்சா சத்திரியர்கள். இதன் அர்த்தத்தை எவரும் அறியமாட்டார்கள். நீங்களே இரட்டை அகிம்சா சேனையினர். ஒருவரைத் தூய்மையற்றவர் ஆக்குகின்ற விகாரமே மாபெரும் வன்முறையாகும். இந்த விகாரத்தை வெற்றிகொள்ள வேண்டும். தந்தை பேசுகிறார்: காமமே கொடிய எதிரி. இந்த விகாரத்தை வெற்றி கொள்வதன் மூலம், நீங்கள் உலகை வெற்றி கொள்கிறீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் உலகை வென்றார்கள், இல்லையா? பாரதம் உலகை வெற்றி கொண்டது. அவர்கள் எவ்வாறு உலக அதிபதிகள் ஆகினார்கள்? வெளி உலகத்தவரால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்து கொள்வதற்கு, ஒரு பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகிறது. முக்கிய பரீட்சைகளை எழுதுபவர்கள் பரந்த, எல்லையற்ற புத்திகளைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சொந்த இராச்சியத்தை நீங்கள் ஸ்தாபிக்கின்றீர்கள். உலகில் அமைதி நிலவியது என்றும், அந்த நேரத்தில் வேறெந்த தர்மமும் இருக்கவில்லை என்றும் நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். சுவர்க்கத்தில் அமைதி மட்டும் இருக்காது. வைகுந்தம் அல்லாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே பூந்தோட்டம் மாத்திரம் இருக்காது; மனிதர்களும் தேவைப்படுகிறார்கள். நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருப்பதுடன், உங்கள் எண்ணங்களும் மேன்மையானவையாக இருக்க வேண்டும். உங்களுக்கு வெளிப்பகட்டைக் கொண்ட சௌகரியம் தேவையில்லை. இந்நேரத்தில் நீங்கள் முற்றுமுழுதாக எளிமையாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது உங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்கின்றீர்கள். இது உங்கள் பெற்றோரின் வீடாகும். உங்களுக்கு இங்கே இரட்டைத் (இரு) தந்தையர் இருக்கிறார்கள். ஒருவர் அதிமேலான அசரீரியானவரும், மற்றவர் இந்தச் சரீரதாரியும் ஆவார். இவரும் அதிமேலானவரே. நீங்கள் இப்பொழுது உங்கள் புகுந்த வீடான, விஷ்ணு தாமத்திற்குச் செல்கின்றீர்கள். அது கிருஷ்ண தாமம் என அழைக்கப்படுவதில்லை. நிலம் ஒரு குழந்தைக்குச் சொந்தமானதாக இருப்பதில்லை. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமான, விஷ்ணு தாமமாகும். நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். எனவே நீங்கள் நிச்சயமாகச் சாதாரண மனிதர்களிலிருந்து, நாராயணன் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்களே கடவுளின் உண்மையான உதவியாளர்கள். குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலங்களாவது ஆத்ம உணர்வில் இருக்க முயற்சி செய்பவர்களையே கடவுளின் உண்மையான உதவியாளர் என பாபா அழைக்கின்றார். கர்ம பந்தனங்கள் இல்லாத பொழுதே நீங்கள் உதவியாளர்கள் ஆகி உங்கள் கர்மாதீத நிலையை அடையலாம். சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதற்குக் கர்மாதீத ஸ்திதி நிச்சயமாகத் தேவையாகும். இன்னமும் கர்ம பந்தனங்கள் இருந்தால் தண்டனை கிடைக்கும். நினைவில் இருப்பதற்குப் பெருமளவு முயற்சி தேவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்களே புரிந்துகொள்ள முடியும். இதற்கான வழிமுறை மிக இலகுவானது: தந்தையை நினைவுசெய்யுங்கள். பாரதத்தின் புராதன யோகம் மிகப் பிரபல்யமானது. இந்த ஞானம் தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கும் யோகத்திற்கு உரியது. ஸ்ரீகிருஷ்ணர் யோகம் கற்பிப்பதில்லை. ஸ்ரீகிருஷ்ணரை சுயதரிசனச் சக்கரத்துடன் சித்தரித்துள்ளார்கள். அந்தப் படம் முற்றிலும் தவறானதாகும். நீங்கள் இப்பொழுது படங்கள் எதையும் நினைவுசெய்யத் தேவையில்லை. அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்கள் புத்திகள் எவரையும் நோக்கி ஈர்க்கப்படக்கூடாது. உங்களுடைய ரேகை மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இது கற்பதற்கான நேரம். உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவுசெய்து, உலகை மறந்து விடுங்கள். அப்பொழுதே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஆரம்பத்தில் வந்தபொழுது, சரீரமற்றே வந்தீர்கள். இப்பொழுதும் சரீரமற்றே திரும்ப வேண்டும். நீங்கள் சகலதுறை வல்லவர்கள். அந்த நடிகர்கள் எல்லைக்கு உட்பட்டவர்கள். நீங்களோ எல்லையற்றவர்கள். நீங்கள் அந்தப் பாகங்களைப் பல தடவைகள் நடித்திருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பலமுறை எல்லையற்றதற்கு அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். சிறிய நாடகங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தில் பல தடவைகள் நடிக்கப்படுகின்றன. சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை நடந்தவை அனைத்தும் மீண்டும் தொடர்ந்து இடம்பெறுகிறது. உச்சியிலிருந்து அடிவரையான அனைத்து விடயங்களும் உங்கள் புத்திகளில் உள்ளது. அசரீரி உலகமும், சூட்சும உலகமும், உலகச் சக்கரமும் இருக்கின்றன. அவ்வளவு தான். உங்களிற்கு வேறெந்த உலகுடனும் தொடர்பில்லை. உங்கள் தர்மம் ஒன்றே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. மற்றவர்கள் வருவதற்கான காலகட்டத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள். நீங்கள் இறங்கி வந்த வரிசைக்கிரமத்திலேயே மீண்டும் திரும்பிச் செல்வீர்கள். ஏனைய சமயங்களைப் பற்றி நாம் என்ன கூறமுடியும்? நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். படங்கள் அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் நினைவு செய்யக்கூடாது. ஒரேயொரு தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள். அவர்கள் பரமாத்மா நீள்கோள வடிவமானவர் என்று நம்புகிறார்கள். எவ்வாறு எவரும் நீள்கோள வடிவமாக இருக்க முடியும்? அவ்வாறாயின் அவரால் எவ்வாறு இந்த ஞானத்தைப் பேசமுடியும்? நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியின் ஊடாகப் பேசுவதன் மூலம் அவரால் உங்களைத் தூண்ட முடியுமா? தூண்டுதல்கள் மூலம் எதுவுமே நடைபெறுவதில்லை. அவர் சங்கரரைத் தூண்டுகின்றார் என்றில்லை. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்கள் மூலமாகப் பேசுவதைப் போலவே, கடவுளும் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். அவருடைய பாகம் தெய்வீகமானதும், தனித்துவமானதும் ஆகும். தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவர் ஒரேயொரு தந்தையே. அவர் கூறுகின்றார்: எனது பாகம் தனித்துவமானது. முன்னைய கல்பத்தில் இங்கு வந்தவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தும் நாடகமே. சிறிதளவு வேறுபாடும் இருக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்வதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நாடகத்திற்கு ஏற்ப நீங்கள் செய்யும் முயற்சிகள் குறைவாக உள்ளன என உங்களால் கூறமுடியாது. அப்போது, நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தும் மிகக் குறைவானதாகவே இருக்கும். உங்கள் முயற்சி தீவிரப்படுத்தப்பட வேண்டும். நாடகத்திடம் அதை விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து உங்கள் அட்டவணையைச் சோதியுங்கள். உங்கள் அட்டவணையை அதிகரியுங்கள். உங்கள் அட்டவணை அதிகரிக்கின்றதா, குறைவடைகிறதா என்பதைக் குறிப்பெடுங்கள். பெருமளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். இங்கே உங்களுக்குப் பிராமணர்களின் சகவாசம் உள்ளது. ஆனால் வெளியே தீய சகவாசமே உள்ளது. அவர்கள் தவறான விடயங்களைப் பற்றி மாத்திரமே பேசுகின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களைத் தீய சகவாசத்திலிருந்து அகற்றுகின்றார். மனிதர்கள் தீய சகவாசத்தின் ஆதிக்கத்தால் தமது வாழ்க்கை முறையையும் ஆடைகளையும் மாற்றி விட்டார்கள். அவர்கள் முற்றுமுழுதாகத் தமது நாட்டையும், ஆடைகளையும் மாற்றி விட்டார்கள். இது தமது சொந்தத் தர்மத்தையே அவமரியாதை செய்வது போன்றதாகும். அவர்களின் சிகை அலங்காரங்களைப் பாருங்கள். சரீர உணர்வே உள்ளது. அவர்கள் தங்களின் சிகையை அலங்கரிப்பதற்காக நூறிலிருந்து நூற்றி ஐம்பது ரூபாய் வரை செலவு செய்கின்றனர். அது தீவிர சரீர உணர்வு என அழைக்கப்படுகின்றது. அவர்களால் ஒருபொழுதும் இந்த ஞானத்தை எடுக்க முடியாது. பாபா கூறுகின்றார்: முற்றிலும் எளிமையாக இருங்கள். நீங்கள் விலைமதிப்புள்ள புடைவையை அணியும்பொழுது சரீர உணர்வு ஏற்படுகிறது. உங்கள் சரீர உணர்வைத் துண்டிப்பதற்கு நீங்கள் அணிபவை அனைத்தும் எளிமையானதாக இருக்க வேண்டும். நல்ல, விலையுயர்ந்த பொருட்கள் சரீர உணர்வைக் கொண்டு வருகின்றன. இந்த நேரத்தில் நீங்கள் சாதாரண ஆடை அணியும் நிலையில் இருக்கின்றீர்கள் (ஒரு பெண்ணின் திருமணத்திற்கு முதல் நாளில் அவளைப் பழைய, கிழிந்த ஆடையை அணியச் செய்கிறார்கள்). அனைத்தில் இருந்தும் உங்கள் பற்றை அகற்றுங்கள். மிகவும் சாதாரணமாக இருங்கள். உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக, நீங்கள் திருமணங்களுக்கு நிற ஆடைகளில் செல்லலாம். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் அதை மாற்றுங்கள். நீங்கள் இப்பொழுது சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்கள் வெள்ளை ஆடைகளை அணிகிறார்கள். இளையவர்கள், முதியவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் ஓய்வு ஸ்திதியில் இருக்கிறீர்கள். சிறிய குழந்தைகளுக்கும் சிவபாபாவை நினைவூட்டுங்கள். இதனால் மாத்திரமே அவர்கள் நன்மை அடைய முடியும். இப்பொழுது நாங்கள் சிவபாபாவிடம் செல்ல உள்ளோம்; அவ்வளவுதான். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நடத்தை எவ்விதத்திலும் சரீர உணர்வின் அடிப்படையில் இல்லாதிருப்பதில் எப்பொழுதும் கவனம் செலுத்தி, உறுதிப்படுத்துங்கள். மிக எளிமையாக இருங்கள். எதிலும் பற்று வைக்காதீர்கள். தீய சகவாசத்தையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.2. நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யும்பொழுது, உங்கள் கர்ம பந்தனங்கள் அனைத்தையும் துண்டிப்பதால், கர்மாதீதம் ஆகுங்கள். குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலங்களாவது ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து, கடவுளின் உண்மையான உதவியாளர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் படைப்பாளியாகி, உங்களின் பரந்த, எல்லையற்ற புத்தியாலும் உங்களின் பெரிய இதயத்தாலும் எல்லோருக்கும் சொந்தமாக இருக்கும் அனுபவத்தை வழங்குவீர்களாக.மாஸ்ரர் அருள்பவரின் முதல் படைப்பு, அவரின் சரீரமே. தமது சரீரங்களின் மீது அதிபதிகளாக இருப்பதில் சம்பூரணமாக வெற்றி அடைந்தவர்கள், தமது அன்பு மற்றும் தொடர்பால் சொந்தமாக இருக்கும் அனுபவத்தை எல்லோருக்கும் வழங்குவார்கள். இத்தகையதோர் ஆத்மாவுடன் தொடர்பைக் கொண்டிருப்பதன் மூலம் ஆத்மாக்கள் ஏதாவதொரு சந்தோஷத்தின் சிறப்பியல்பை அமைதி, அன்பு, ஆனந்தம், ஒத்துழைப்பு, தைரியம், ஊக்கம், உற்சாகத்தினை அருள்பவரிடம் இருந்து பெறுவார்கள். இத்தகைய ஆத்மாக்கள் மட்டுமே, பெரிய இதயங்களுடன் பரந்த, எல்லையற்ற புத்திகளையும் கொண்டவர்கள் எனப்படுவார்கள்.
சுலோகம்:
உங்களின் ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் இறக்கைகளுடன் சதா பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
உங்களை மேன்மையான எண்ணங்களால் நிரப்பிக் கொள்வதற்கு ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்றால் இலேசாகவும் ஒளியாகவும் உள்ள தேவதை என்று அர்த்தம். இத்தகைய குழந்தைகளின் ஒவ்வொரு மேன்மையான எண்ணமும் எப்போதும் வெற்றிநிறைந்தது. குழந்தைகளான உங்களிடம் உள்ள ஒரு மேன்மையான எண்ணத்தால் நீங்கள் தந்தையிடம் இருந்து ஆயிரம் மேன்மையான எண்ணங்களைப் பெறுகிறீர்கள். ஒன்றுக்குப் பதிலாக நீங்கள் ஆயிரத்தைப் பெறுகிறீர்கள்.