07.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் முன்னிலையில் பல்வேறு வழிமுறைகளை வைத்திருப்பதனால், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். இப்பழைய உலகை மறந்து விடுங்கள். உங்கள் இனிய வீட்டையும், புதிய உலகையும் நினைவுசெய்யுங்கள்.

கேள்வி:
எச்செயல்கள், அதாவது, எந்த முயற்சிகள் சக்கரத்தில் வேறு எந்த நேரத்திலுமன்றி, இந்நேரத்தில் மாத்திரமே இடம்பெறுகின்றது?

பதில்:
முழுச் சக்கரத்திலும் சங்கமயுக வேளையில் மாத்திரமே நினைவு யாத்திரையில் இருப்பதற்கும், ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குவதற்கும் முயற்சி செய்யப்படுவதுடன், முழு உலகையும் தூய்மை ஆக்குகின்ற செயலும் மேற்கொள்ளப்படுகின்றது. இச் செயல்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. குழந்தைகளாகிய நீங்கள் அநாதியான, அழிவற்ற நாடகத்தின் இந்த அற்புதமான இரகசியங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்ளுக்கு விளங்கப்படுத்துகின்றார். எனவே, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வில், ஆன்மீக ஸ்திதியில், உங்கள் புத்தியில் நம்பிக்கையுடன் அமர்ந்திருந்து, அவரைச் செவிமடுக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: ஆத்மாக்களே தங்கள் அங்கங்களினூடாகச் செவிமடுக்கின்றனர். இதை மிக உறுதியாக நினைவில் வைத்திருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சற்கதியும், சீரழிவும் கொண்ட சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். இதில் இந்த ஞானமும், அந்த வழிபாடும் உள்ளடங்கி உள்ளன. இந்த ஞானமும் பக்தியும், சந்தோஷமும் துன்பமும், பகலும் இரவும் நிறைந்த இந்நாடகம் தொடர்ந்தும் எவ்வாறு நடிக்கப்படுகின்றது என்பதை நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் உங்கள் புத்திகளில் வைத்திருங்கள். நாங்கள் எங்களின் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றோம். தந்தை அனைத்தையும் நினைவு செய்வதால், குழந்தைகளாகிய உங்களை நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். இதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் இராச்சியத்தை அடைகிறீர்கள். இப்பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் வீடு பழையதாகி, புதிய வீடொன்று கட்டப்படுகின்றது என்பதை நீங்கள் அறியும்பொழுது, விரைவில் உங்களின் புதிய வீட்டிற்குச் செல்லப் போகின்றீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளே ஏற்படுகின்றது. எவ்வாறாயினும், சில சமயங்களில் ஒரு புதிய வீடு கட்டுவதற்கு ஓரிரு வருடங்கள் எடுக்கின்றன. உதாரணமாக, அரசாங்க மாளிகை புதுடெல்கியில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, தாங்கள் புதுடெல்கிக்கு மாற்றலாகிச் செல்லப் போவதாக அரசாங்கம் கூறியது. இந்த எல்லையற்ற உலகம் முழுவதும் பழையதாகி விட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். பாபா உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகின்றார். இவ்வழிமுறைகள் மூலம் உங்கள் புத்தியை நினைவு யாத்திரையில் மும்முரமாக வைத்திருங்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இதனாலேயே நாங்கள் இனிய வீட்டை நினைவுசெய்ய வேண்டும். இதற்காக மக்கள் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். இத்துன்ப உலகம் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும் என்பது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பழைய உலகில் வாழ்ந்தாலும்கூட, அதை நீங்கள் விரும்பவில்லை. இப்பொழுது நாங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். உங்கள் முன்னிலையில் படங்கள் இல்லா விட்டாலும், இப்பொழுது இது பழைய உலகின் இறுதிக்காலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்லப் போகின்றோம். பக்தி மார்க்கத்தில் பல படங்கள் உள்ளன. அதனுடன் ஒப்பிடும்பொழுது, உங்களிடம் வெகு சில படங்களே உள்ளன. உங்கள் படங்கள் இந்த ஞான மார்க்கத்திற்கு உரியவை, அவர்களுடையதோ பக்தி மார்க்கத்திறகு உரியவை. பக்திமார்க்கம் முழுவதும் படங்களுடனேயே இடம்பெறுகின்றது. எவ்வாறாயினும், உங்களின் படங்களே நிஜமானவை. எனவே, எது சரி, எது பிழை என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். பாபா ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றார். உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. சக்கரம் முழுவதிலும் நீங்கள் எத்தனை பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சதா தந்தையின் நினைவில் இருப்பதுடன், இந்த ஞானத்தையும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தந்தை படைப்பவரினதும், படைப்பினதும் முழு ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். எனவே, நீங்கள் தந்தையையும் நினைவு செய்கின்றீர்கள். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: நான் உங்களின் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவேன். பாபா கூறுகிறார் என விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என்றும், முக்தியளிப்பவர் என்றும், வழிகாட்டி என்றும் அழைத்தீர்கள். எவ்விடத்திற்கான வழிகாட்டி? அமைதிதாமத்திற்கும், முக்திக்குமான வழிகாட்டி. தந்தை உங்களை அழைத்துச் சென்று அங்கே விடுகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார், உங்களுக்குக் கல்வி புகட்டுகின்றார். அவர் உங்களை அழகானவர்களாக்கி, உங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே விடுகின்றார். ஒருவருக்குத் தத்துவங்களைப் பற்றியும், பிரம்ம தத்துவம் பற்றியும் எவ்வளவு அறிவு இருந்தாலும், வேறு எவராலும் அன்றி, தந்தையால் மாத்திரமே உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும். தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்து விடுவோம் என அவர்கள் நினைக்கின்றனர். அமைதிதாமமே உங்களின் வீடு என்பது உங்கள் புத்தியில் உள்ளது. முதலில் நீங்கள் அங்கு திரும்பிச் செல்வீர்கள், பின்னர் நீங்களே முதலாவதாகப் புதிய உலகிற்குள் பிரவேசிப்பீர்கள். ஏனைய அனைவரும் பின்னரே வருவார்கள். ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் எவ்வாறு வரிசைக்கிரமமாக வருகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் யாருடைய இராச்சியங்கள் உள்ளன? அவர்களின் சமயநூல்கள் எவை? சூரிய வம்சத்தவர்களும், சந்திர வம்சத்தவர்களும் ஒரேயொரு நூலையே வைத்திருக்கின்றனர். எவ்வாறாயினும், அந்தக் கீதை உண்மையானதல்ல. ஏனெனில், நீங்கள் இப்பொழுது பெறுகின்ற இந்த ஞானம் இங்கேயே முடிவடைந்து விடுகின்றது; அங்கு சமயநூல்கள் எதுவும் கிடையாது. துவாபர யுகத்திற்குப் பின்னர் வரும் சமயங்கள் அனைத்தினதும் சமயநூல்கள் பின்னர் சதாகாலமும் தொடர்கின்றன் அவை அப்பொழுதிலிருந்து தொடர்கின்றன. ஒரு தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது, ஏனைய அனைத்தும் அழிக்கப்பட்டும். ஒரே இராச்சியம், ஒரே தர்மம், ஒரே மொழி, ஒரே வழிகாட்டல் பற்றி மக்கள் தொடர்ந்தும் பேசுகின்றனர். அது ஒரேயொருவரால் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட முடியும். குழந்தைகளாகிய நீங்கள் சத்திய யுகத்திலிருந்து கலியுக இறுதி வரையான ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தூய்மை அற்றவர் ஆகுவதற்கு உங்களுக்கு அரைக் கல்பம் எடுத்துள்ளது. உண்மையில், முழுக் கல்பம் என்றும் கூட நீங்கள் கூறலாம். நீங்கள் இப்பொழுது மட்டுமே நினைவு யாத்திரையில் இருப்பதற்குக் கற்றுக் கொள்கின்றீர்கள். இக்கல்வி அங்கு இருக்க மாட்டாது. தேவர்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மை ஆனவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்கள் முன்னர் இங்கு இராஜயோகம் கற்றுத் தூய்மையாகிய பின்னரே அங்கு சென்றனர். அது சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகின்றது. முழுச் சக்கரத்திலும் இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்க முயற்சி செய்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். முயற்சி, அதாவது, தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்கும் செயற்பாடு அடுத்த சக்கரத்திலும் மீண்டும் நிகழும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சக்கரத்தைச் சுற்றி வருகின்றீர்கள். எவ்வாறு இது ஒரு நாடகம் என்பதையும், எவ்வாறு சகல ஆத்மாக்களும் தங்களுக்குள் அழியாத பாகங்களின் பதிவுகளைக் கொண்ட நடிகர்கள் என்பதையும் பற்றிய இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளன. இது ஒரு நாடகத்தைப் போன்றது. எனினும், அந்தத் திரைப்படமோ பழையதாகும் பொழுது தேய்ந்து கிழிந்து விடுகின்றது. இது அழிவற்றது. அத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மாவில் முழுப் பாகமும் பதிவாகி இருப்பதும் ஓர் அற்புதமேயாகும். தந்தை மிக ஆழமான, சூட்சுமமான விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிறர் இவ்விடயங்களைக் கேள்விப்படும் பொழுது, மிக அற்புதமான விடயங்கள் இங்கே விளங்கப்படுத்தப்படுவதாகக் கூறுகின்றார்கள். ஆத்மாக்கள் என்றால் என்ன என்பதை நாங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றோம். அனைவரும் சரீரங்களைப் பற்றிப் புரிந்து கொள்கின்றார்கள். வைத்தியர்களால் ஒரு மனிதனின் இதயத்தை அகற்றி, மீண்டும் அவ்விடத்தில் வைக்க முடிந்தாலும், ஆத்மாக்களைப் பற்றி எவருமே அறியார். ஆத்மாக்கள் எவ்வாறு தூய்மை அற்றவரிலிருந்து, தூய்மை ஆகுகின்றார்கள் என்பதையும் எவரும் அறியார். அவர்கள் ஒரு தூய்மையற்ற ஆத்மா, தூய ஆத்மா, மகாத்மா பற்றிப் பேசுகின்றார்கள். அனைவரும் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து என்னைத் தூய்மை ஆக்குங்கள்! எவ்வாறாயினும், எவ்வாறு ஓர் ஆத்மாவால் தூய்மையாக முடியும்? இதற்கு, அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் தேவைப்படுகின்றார். ஆத்மாக்கள் பிறப்பிற்கு அப்பாற்பட்டவரை அழைக்கின்றனர். ஆத்மாவைத் தூய்மை ஆக்குவதற்கான சிகிச்சை அவரிடம் மாத்திரமே உள்ளது. எனவே, கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என அறிந்துள்ளதால் குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷத்தில் மெய்சிலிர்க்க வேண்டும். அவர் நிச்சயமாக உங்களை இறைவர், இறைவிகள் ஆக்குவார். பக்தி மார்க்கத்தில் இலக்ஷ்மியும் நாராயணனும் இறைவனும் இறைவியும் என அழைக்கப்படுகின்றார்கள். அரசனும், அரசியும் போன்றே பிரஜைகளும் உள்ளார்கள். அவர் உங்களைத் தன்னைப் போன்று தூய்மையானவர் ஆக்குகின்றார். அவர் உங்களையும் இந்த ஞானக் கடல்களாக்கி, பின்னர் தன்னை விடவும் மகத்தானவர்கள் ஆக்குகின்றார். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் தூய்மையானவர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகுகின்ற உங்களின் முழுமையான பாகத்தை நடிக்க வேண்டும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்க பாபா மீண்டும் ஒரு தடவை வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தர்மம் மறைந்து விட்டதென, இந்தத் தர்மத்தையிட்டே கூறப்படுகின்றது. இது ஓர் ஆல மரத்துடன் ஒப்பிடப்படுகின்றது. ஆலமரத்தில் பல கிளைகள் தோன்றினாலும், அடிமரம் இருப்பதில்லை. இங்கும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த பல கிளைகள் தோன்றினாலும், தேவ தர்மத்தின் அத்திவாரம் இப்பொழுது இல்லை; அது மறைந்து விட்டது. தந்தை கூறுகின்றார்: அந்தத் தர்மம் இருக்கவே செய்கின்றது, ஆனால் அவர்கள் அதன் பெயரை மாற்றிவிட்டனர். இப்பொழுது தூய்மையாக இல்லாததால், அவர்களால் தங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. அது இப்பொழுது இல்லாததாலேயே தந்தை படைப்பை உருவாக்க வருகின்றார். நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். அனைத்தும் அவ்வாறே. குழந்தைகளாகிய நீங்கள் இதனை மறந்து விடக்கூடாது. நீங்கள் யார் மூலம் தூய்மை ஆகுகின்றீர்களோ, அத்தந்தையை நினைவுசெய்வதே முதலாவதும், பிரதானமானதுமான இலக்காகும். வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள் என அனைவரும் கூறுகின்றனர். தங்களை அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆக்குமாறு அவர்கள் கேட்பதில்லை. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். நாங்கள் நிச்சயமாக எங்களின் ஆஸ்தியை இப்பொழுது பெற வேண்டும். நாங்கள் இப்பாகங்களைக் கல்பம் கல்பமாக நடித்துள்ளோம். விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. எவ்வாறு இப்படம் சற்கதிக்கான படமாக உள்ளதென, பாபா படங்களைப் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் வாய் மூலமாகவும், அத்துடன் படங்களைப் பயன்படுத்தியும் விளங்கப்படுத்தலாம். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்கள் உங்களின் இப்படங்களில் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்குவதற்காகச் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் கற்பதுடன், மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றேன், எனினும் அது உங்களின் பாக்கியத்திலும் இருக்கவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நாடகத்திற்கேற்ப தொடர்ந்தும் முயற்சி செய்கின்றீர்கள். தந்தை நாடகத்தின் இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தை, தந்தையாகவும், ஆசிரியராகவும் உள்ளார். அத்துடன் அவர் உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கின்ற, உண்மையான சற்குருவாகவும் இருக்கின்றார். தந்தையே அமரத்துவ ரூபம். இதுவே இவ்வாத்மாவின் சிம்மாசனம் ஆகும். இதன் மூலமாகவே இவர் தனது பாகத்தை நடிக்கின்றார். தந்தைக்கும் தனது பாகத்தை நடிப்பதற்கும், சற்கதி அளிப்பதற்கும் ஒரு சிம்மாசனம் தேவைப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரணச் சரீரத்தில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. நான் எவ்விதப் பகட்டையோ, ஆடம்பரத்தையோ கொண்டிருக்க முடியாது. அந்தக் குருமாரின் சீடர்கள் தங்களின் குருவிற்கென ஒரு தங்க சிம்மாசனத்தை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் மாளிகைகள் போன்றவற்றையும் கட்டியுள்ளனர். நீங்கள் எதை உருவாக்குவீர்கள்? நீங்கள் குழந்தைகளும், அத்துடன் மாணவர்களும் ஆவீர்கள். எனவே, அவருக்காக நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதை எங்கு உருவாக்குவீர்கள்? இவர் சாதாரணமானவர். நீங்கள் விலைமாதர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஏழைகளையும் ஈடேற்ற வேண்டும். சில குழந்தைகள் இதைச் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்கள் பெனாரஸிற்குக் கூட சென்றிருக்கின்றனர். நீங்கள் அவர்களை ஈடேற்றினால், பிரம்மாகுமாரிகள் விலைமாதர்களுக்கும் இந்த ஞானத்தைக் கொடுத்து அற்புதங்கள் செய்கின்றார்கள் என மக்கள் கூறுவார்கள். அவர்கள் அத்தொழிலை விட்டு, சிவாலயத்தின் அதிபதிகள் ஆகவேண்டும் எனவும் நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஞானத்தைக் கற்று, பின்னர் அதை மற்றவர்களுக்கும் கொடுங்கள். விலைமாதர்கள் பின்னர் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். ஒரு தடவை மக்கள் இதைக் கற்று, திறமைசாலிகள் ஆகிவிட்டால், அவர்கள் தங்களின் அலுவலகர்களுக்கும் இதை விளங்கப்படுத்தலாம். ஒரு மண்டபத்தில் படங்களை வைத்து, அவற்றை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அப்பொழுது, விலைமாதர்களைச் சிவாலயவாசிகளாக ஆக்குவதில் பிரம்மாகுமாரிகள் கருவிகள் ஆகியிருப்பது ஓர் அற்புதமே என அனைவரும் கூறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்கான அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. நீங்கள் கல்லுப்புத்தி உடையவர்களையும், கூன்முதுகு உடையவர்களையும், சுதேசிகளையும், நற்குணங்கள் அற்றவர்களையும் ஈடேற்ற வேண்டும். சாதுக்களும் ஈடேற்றப்பட்டனர் என்பது நினைவுகூரப்படுகின்றது. சாதுக்கள் இறுதியில் ஈடேற்றப்படுவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர்கள் இப்பொழுது வந்து, உங்களுக்குச் சொந்தமானவர்கள் ஆகினால், பக்தி மார்க்கம் முடிவிற்கு வந்துவிடும்; ஒரு புரட்சி ஏற்படும். சந்நியாசிகள் தாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகக் கூறித் தங்கள் ஆச்சிரமங்களை நீங்கிச் செல்வார்கள். அது இறுதியில் நிகழும். அனைத்தையும் எவ்வாறு செய்வதென பாபா தொடர்ந்தும் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். பாபாவால் வெளியில் எங்கும் செல்ல முடியாது. குழந்தைகளிடம் சென்று கற்றுக் கொள்ளுங்கள் என்றே தந்தை கூறுவார். அவர் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கான வெவ்வேறு வழிகளைக் கொடுக்கின்றார். மக்கள் உங்களின் புகழைப் பாடக்கூடியதாக அத்தகைய பணியைச் செய்யுங்கள். கடவுள் சக்திகளை ஞான அம்புகளால் நிரப்பியதாக நினைவு கூரப்படுகின்றது. இதுவே ஞான அம்பாகும். இந்த அம்பு உங்களை இவ்வுலகிலிருந்து வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் தொலைநோக்குப் புத்தியைக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் புகழ் ஓரிடத்தில் போற்றப்பட்டு, அரசாங்கத்திற்கு அது தெரிய வந்தால், உங்களின் செல்வாக்கு அதிகளவில் பரவும். ஐந்து முதல் ஏழு வரையான உத்தியோகத்தர்கள் ஓரிடத்திலிருந்து வெளிப்பட்டால், அது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும். அவர்கள் கூறுவார்கள்: பிரம்மாகுமாரிகள் விலைமாதர்களை அந்தத் தொழிலைக் கைவிடச் செய்து, அவர்களைச் சிவாலயத்தின் அதிபதிகள் ஆக்கியுள்ளார்கள். உங்களுக்குப் பெரும் புகழ் ஏற்படும். அவர்கள் தங்கள் பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். அப்பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் பெரிய நிலையங்களைத் திறப்பீர்கள். படங்கள் போன்றவற்றைச் செய்வதற்கு நீங்கள் பணத்தைப் பயன்படுத்த முடியும். மக்கள் பின்னர் அவற்றைப் பார்த்து வியப்படைவார்கள். ‘நீங்களே பரிசு பெறுபவர்களில் முதலாவதாக இருப்பீர்கள்’ என அவர்கள் கூறுவார்கள். அவர்கள் உங்களுடைய படங்களை அரசாங்க மாளிகைக்கும் எடுத்துச் செல்வார்கள். அவற்றை அவர்கள் விரும்புவார்கள். சாதாரண மனிதர்களைத் தேவர்களாக்க வேண்டும் என்ற ஆசை உங்களின் இதயத்தில் இருக்க வேண்டும். முன்னைய சக்கரத்தில் இந்த ஞானத்தைப் பெற்றவர்கள், மீண்டும் இதைப் பெறுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். செல்வம் போன்ற அனைத்தையும் துறப்பதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகின்றது. பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: நான் எனது வீட்டையோ, நண்பர்களையோ, உறவினர்களையோ நினைவு செய்வதில்லை. நான் எதனை நினைவு செய்கின்றேன்? நான் தந்தையையும், குழந்தைகளாகிய உங்களையும் தவிர வேறு எவரையும் நினைவு செய்வதில்லை. நான் அனைத்தையும் பரிமாற்றம் செய்து விட்டேன். வேறு எங்கு எனது புத்தி செல்ல முடியும்? நான் இந்த இரதத்தைத் தந்தைக்குக் கொடுத்து விட்டேன். உங்களைப் போன்றே நானும் கற்கின்றேன். நான் இந்த இரதத்தை பாபாவிற்குக் கடனாகக் கொடுத்துள்ளேன். நாங்கள் முதலில் சூரிய வம்ச தாமத்திற்குச் செல்லவே முயற்சி செய்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான கதையாகும். ஆத்மாக்களே மூன்றாவது கண்ணைப் பெறுகின்றார்கள். இந்த ஆத்மாவாகிய நான், ஒரு தேவர் ஆகுவதற்கு இந்த ஞானத்தைக் கற்கின்றேன். பின்னர் நான் அரசர்களுக்கு எல்லாம் அரசர் ஆகுவேன். சிவபாபா கூறுகின்றார்: நான் உங்களை இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் ஆக்குகின்றேன். உங்கள் புத்திகள் நாடகத்திற்கேற்ப, முன்னைய கல்பத்தைப் போன்றே இப்பொழுது மிகச்சரியாக அதிகமாகத் திறந்துள்ளன. நீங்கள் இப்பொழுது நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உலகச் சக்கரத்தையும் சுழற்ற வேண்டும். பழைய உலகை உங்கள் புத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. புதிய ஸ்தாபனை உங்களுக்காகவே இடம்பெறுகின்றது என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இப்பழைய, துன்ப உலகம் இப்பொழுது முடிவடையப் போகின்றது. நீங்கள் இவ்வுலகை விரும்பவே கூடாது.

2. பாபா தன்னிடமிருந்த அனைத்தையும் பரிமாற்றம் செய்து விட்டதால், அவரது புத்தி எங்கும் செல்வதில்லை. எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதற்கு, எவ்வாறு அவர்களுக்குச் சேவை செய்வது, விலைமாதர் இல்லத்தை எவ்வாறு சிவாலயம் ஆக்குவது என்ற ஒரேயொரு ஆசையை மாத்திரமே உங்கள் இதயம் கொண்டிருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
சரீர உணர்வின் எந்த இராஜரீகமான ரூபத்தையும் பார்த்து அதை முடிவுக்கு கொண்டு வருகின்ற ஒரு பற்றற்ற பார்வையாளராக இருப்பீர்களாக.

மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்காமல் இருப்பது அல்லது அவர்களை ஒதுக்கி விடுவது என்பது சரீர உணர்வின் இராஜரீக ரூபமாகும். அது உங்களையும் மற்றவர்களையும் அவமதிக்கச் செய்கின்றது. அது ஏனென்றால், மற்றவர்களை ஒதுக்கி வைப்பவர்களிடம் அகங்காரம் இருக்கின்றது. அவர் ஒதுக்கி வைத்த நபர் அவமதிக்கப்பட்டதாக உணர்கின்றார். நீங்களே ஒவ்வோர் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள், ஒவ்வொரு செயலையும் செய்கிறீர்கள் என்பதால், பற்றற்ற பார்வையாளராக இருக்கின்ற ஆசீர்வாதத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருங்கள். நாடகம் என்ற கேடயத்தை வைத்திருந்து, நாடகம் என்ற தண்டவாளத்தில் இருப்பதால், ‘நான்’ என்ற இராஜரீகமான ரூபத்தை முடித்து, அனைவருக்கும் மரியாதையையும் அன்பையும் கொடுங்கள். அவர்கள் எல்லா நேரத்திற்கும் உங்களுடன் ஒத்துழைப்பார்கள்.

சுலோகம்:
கடவுளின் ஸ்ரீமத் என்ற நீரின் அடிப்படையில், செயல் என்ற விதையை சக்திநிறைந்தது ஆக்குங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

ஒவ்வொரு கணமும், ஒவ்வோர் ஆத்மாக்கள் மீதும் நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் என்ற தூய அதிர்வலைகளைக் கொண்டிருக்கின்ற அனுபவத்தை நீங்களும் மற்றவர்களும் இயல்பாக கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கணமும், அனைத்து ஆத்மாக்களை இட்டு, எப்பொழுதும் ஆசீர்வாதங்கள் உங்கள் மனதிலிருந்து உருவாகட்டும். நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்து அனுபவப்பட்டு உள்ளதைப் போல், இந்தச் சேவை செய்வதில் உங்கள் மனம் சதா மும்முரமாக இருக்கட்டும். உங்களுக்கு எந்த சேவையும் செய்வதற்கு கொடுக்காத போது, நீங்கள் வெறுமையாக இருப்பதை உணர்கின்றீர்கள். வார்த்தைகளால் சேவை செய்வதைப் போல, இவ்வகையில் உங்கள் மனதால் சேவை இடம்பெறுவது இயல்பாக இருக்கட்டும்.