08.01.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எதையிட்டும் பொய்மையான அகங்காரத்தைக் கொண்டிருக்கக் கூடாது. இந்த இரதத்தின் மீது முழுமையான மரியாதையைக் கொண்டிருங்கள்.
கேள்வி:
உங்கள் மத்தியில் எக்குழந்தைகள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாகவும், எக்குழந்தைகள் துர்ப்பாக்கியசாலிகளாகவும் ஆகுகின்றார்கள்?பதில்:
தேவர்களைப் போன்ற நடத்தை கொண்டவர்களும்;, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பவர்களுமே பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகின்றார்கள். ஆனால் சித்தி அடையாதவர்கள் துர்ப்பாக்கியசாலிகள் எனப்படுகின்றார்கள். சிலர் மற்றவர்களுக்குத் தொடர்ந்தும் துன்பம் கொடுத்து மகா துர்ப்பாக்கியசாலிகள் ஆகுகின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறு சந்தோஷத்தைக் கொடுப்பது என்பது தெரியாது. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை மிகவும் அவதானமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்து தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பல்கலைக்கழகத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் கோருகிறீர்கள். நீங்கள் அதி உயர்ந்த சுவர்க்க இராச்சியத்தையே பெறுகின்றீர்கள் என்பது உங்கள் இதயங்களுக்குத் தெரியும். அத்தகைய குழந்தைகள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நம்பிக்கையைக் கொண்டிருப்பினும், அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் அல்ல. நீங்கள் எப்பொழுதும் முதலில் இருந்து இறுதிவரை வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். ஒரு பரீட்சையிலும் அவர்கள் முதல் இலக்கத்தில் இருந்து இறுதி இலக்கம் வரை வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். சிலர் சித்தி அடைகின்றார்கள், சிலர் தோல்வி அடைகிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தைக் கேட்கலாம்: பாபா என்னைத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகின்றார், ஆனால் நான் எவ்வளவிற்கு அவ்வாறு ஆகியிருக்கின்றேன்? நான் இன்னின்னாரை விடச் சிறந்தவரா? அல்லது குறைந்தவரா? இது ஒரு கல்வி. சில பாடங்களில் பலவீனமாக இருப்பவர்கள், ஒரு குறைந்தளவு தரத்தையே அடைகின்றார்கள் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மாணவத் தலைவராக இருந்தாலும், அவர் ஒரு சில பாடங்களில் பலவீனமாக இருந்தால், குறைந்த தரத்தையே பெறுவார். புலமைப்பரிசிலை அரிதாக ஒரு சிலரே வெல்கின்றார்கள். இதுவும் ஒரு பாடசாலையாகும். நீங்கள் அனைவரும் கற்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு தூய்மையே முதலாவதும், பிரதானதுமான விடயமாகும். நீங்கள் தூய்மையாக வேண்டும் என்றே தந்தையை அழைத்தீர்கள். நீங்கள் குற்றப்பார்வையைக் கொண்டிருக்கும் பொழுது, உங்களாலேயே அதனை உணரக் கூடியதாக இருக்கும். சிலர் பாபாவிற்கு எழுதுகின்றார்கள் : பாபா நான் இந்த விடயத்தில் பலவீனமாக இருக்கின்றேன். மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் பலவீனமாக இருக்கும் பொழுது அது நிச்சயமாகவே அவர்களின் புத்தியில் இருக்கின்றது. சிலர் தாங்கள் தோல்வி அடைவோம் என்றே நம்புகின்றார்கள். இதில் முதல் இலக்கப் பாடம் தூய்மையாகும். பலரும் தாம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக பாபாவிற்கு எழுதுகின்றார்கள். ஆகவே, அதற்கு என்ன கூறுவீர்கள்? தம்மால் இனிமேல் முன்னேற முடியாது என்பதை அவர்களின் இதயம் புரிந்து கொள்கின்றது. நீங்கள் தூய உலகை ஸ்தாபிக்கின்றீர்கள். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள், அப்பொழுது உங்களால் இலக்ஷ்மி நாராயணனின் வம்சத்தினுள் வரமுடியும். ஒரு மாணவனால் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியுமா இல்லையா என்பதை ஒரு ஆசிரியரால் புரிந்து கொள்ள முடியும். அவர் பரம ஆசிரியர் ஆவார். இந்த தாதாவும் பாடசாலையிலேயே கற்றார். சில குழந்தைகள் மிகவும் தீய விடயங்களைச் செய்வதானால் அவர்களின் ஆசிரியர் இறுதியில் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டி நேரிடுகின்றது. முன்னர் அவர்கள் மிகவும் தீவிரமான தண்டனையைக் கொடுத்தார்கள். இப்பொழுது தண்டனை குறைக்கப்பட்டிருப்பதனால் குழந்தைகள் அதிகளவு சீரழிந்து விட்டார்கள். இக்காலத்தில் மாணவர்கள் அதிகளவு குழப்பங்களை விளைவிக்கின்றார்கள்! மாணவர்கள் 'இள ரத்தம்” என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் செய்வதைப் பாருங்கள்! அவர்கள் பொருட்களுக்குத் தீ வைத்து தமது வாலிப சக்தியைக் காட்டுகின்றார்கள். இது அசுர உலகம். இளைஞர்கள் மிகவும் தீயவர்களாக உள்ளார்கள். அவர்களின் கண்கள் மிகவும் குற்றமுடையதாக இருக்கின்றன. வெளியில் மிகவும் நல்லவர்களாகவே அவர்கள் தோற்றம் அளிக்கின்றார்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: உங்களால் இறைவனின் ஆழத்தை அடைய முடியாது. அவ்வாறே, அவர்கள் எத்தகைய மனிதர்கள் என்பதையும் உங்களால் அறிய முடியாது. ஆமாம், அவர்களின் செயற்பாடுகளில் இருந்தும் அவர்கள் கற்பதில் இருந்தும் அவர்களின் புத்தியில் இந்த ஞானத்தை அவர்கள் எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். சிலர் பேசும் பொழுது, அது அவர்களின் வாயில் இருந்து மலர்கள் பொழிவதைப் போன்றும், மற்றவர்கள் பேசும் பொழுது அது கல்லெறிவதைப் போன்றுமே உள்ளது. பார்ப்பதற்கு, அவர்கள் மிகவும் நல்லவர்கள் போலவே தோன்றுவார்கள், அவர்கள் கருத்துக்களையும் குறித்துக் கொள்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் கல்லுப்புத்தியையே கொண்டிருக்கின்றார்கள்! அவர்கள் வெளிப்புறப் பகட்டையே கொண்டுள்ளார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள், இதனாலேயே இந்த ஞானத்தால் வியப்படைந்து, மற்றவர்களுக்கும் அதனைக் கொடுத்துவிட்டு, தம்மைச் சிவபாபாவின் குழந்தைகள் என்றும் அழைத்தவர்கள், பின்னர் ஓடி விட்டார்கள், அதாவது துரோகிகளாகி விட்டார்கள். திறமைசாலிகள் துரோகிகளாக ஆக மாட்டார்கள் என எண்ணாதீர்கள்! மிகச் சிறந்தவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பவர்கள் கூடத் துரோகிகள் ஆகின்றார்கள். இராணுவ படையினரிலும் இது இவ்வாறே உள்ளது. அவர்கள் விமானத்தை இன்னோர் நாட்டிற்கு எடுத்துச் செல்கின்றார்கள். இங்கும் அது அவ்வாறே உள்ளது. ஸ்தாபனைக்கு பெருமளவு முயற்சி தேவையாகும். குழந்தைகள் கற்பதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும், ஆசிரியர்களும் கற்பிப்பதற்கு பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். ஒரு பாடசாலையில் ஒரு மாணவன் கற்காது மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தால் அவன் தண்டிக்கப்படுகின்றான். அவர் தந்தை ஆவார். தந்தை எதையும் கூறுவதில்லை. அந்த விதி தந்தைக்குப் பொருந்தாது. இங்கே, நீங்கள் முற்றிலும் அமைதி காக்க வேண்டும். தந்தை சந்தோஷத்தை அருள்பவரும், அன்புக் கடலும் ஆவார். ஆகவே, குழந்தைளாகிய உங்களின் நடத்தையானது தேவர்களுடையதைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் என்பதை பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு எப்பொழுதும் கூறுகின்றார். எவ்வாறாயினும், உங்களில் சிலர் பலமில்லியன் மடங்கு துர்ப்பாக்கியசாலிகளாகவும் ஆகின்றீர்கள். தோல்வி அடைபவர்களைத் துர்ப்பாக்கியசாலிகள் என்றே அழைக்க முடியும். இது இறுதிவரை தொடரும் என்பது பாபாவிற்குத் தெரியும். சிலர் நிச்சயமாகவே மகா துர்ப்பாக்கியசாலிகள் ஆகுகின்றார்கள். அவர்களின் நடத்தையின் மூலம், அவர்களால் இங்கே இருக்க முடியாது என்பது புரிந்து கொள்ளப்படும். அவர்கள் மேன்மையானவர்கள் ஆகுவதற்குத் தகுதியற்றவர்கள். அவர்கள் தொடர்ந்தும் அனைவருக்கும் துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறு சந்தோஷத்தைக் கொடுப்பது என்பதே தெரியாமல் இருக்கும் பொழுது, அவர்களின் நிலைமை என்னவாகும்? பாபா எப்பொழுதும் கூறுகின்றார் : குழந்தைகளே, உங்களில் அதிகளவு அக்கறை கொள்ளுங்கள். நாடகத்திற்கு ஏற்ப இவை அனைத்தும் நடந்தேயாக வேண்டும். அவர்கள் இரும்பை விடவும் மோசமானவர்களாகி விட்டார்கள். மிகச் சிறந்தவர்கள் கடிதம் கூட எழுதுவதில்லை. அந்த அப்பாவி நாதியற்ற மக்களின் நிலைமை என்னவாகும்? தந்தை கூறுகின்றார்: நான் அனைவருக்கும் நன்மை அளிக்கவே வந்துள்ளேன். இன்று, நான் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன், ஆனால் அவர்கள் நாளையே சீரழிந்தவர்கள் ஆகின்றார்கள். நேற்று நீங்கள் உலகின் அதிபதிகள் என்றும் இன்று நீங்கள் அடிமைகளாகி விட்டீர்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். விருட்சம் முழுவதும் இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கின்றது. இந்த விருட்சம் அற்புதமானது! மனிதர்கள் இந்த விருட்சத்தைப் புரிந்து கொள்வதும் இல்லை! ஒரு சக்கரம் எனில் 5000 வருடங்களைக் கொண்ட மிகச் சரியான விருட்சம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அதில் ஒரு விநாடிக்கான வித்தியாசமேனும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற விருட்சத்தின் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பவரே விருட்சத்தின் பிரபு ஆவார். ஒரு விதை மிகவும் சின்னஞ்சிறியது. ஆனால் அதிலிருந்து எவ்வளவு பழங்கள் உருவாகின்றன எனப்பாருங்கள். இந்த விருட்சமும் மிகவும் அற்புதமானது, அதன் விதை சின்னஞ்சிறியது! ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய வடிவமானவரே! தந்தையும் சின்னஞ்சிறிய வடிவம் உடையரே. அவரை இந்தப் பௌதீகக் கண்களால் பார்க்க முடியாது. அவர்கள் விவேகானந்தரின் உதாரணத்தைக் கூறுகின்றார்கள் அவர் தனது குருவிடமிருந்து ஓர் ஒளி வெளிப்பட்டு தனக்குள் பிரவேசித்ததாகக் கூறுகின்றார். அவ்வாறு ஒருவரில் இருந்து ஒளி வெளிப்பட்டு இன்னொருவருக்குள் பிரவேசிக்க முடியாது. அவரில் இருந்து வெளிப்பட்டது என்னவென்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பலரும் அத்தகைய காட்சிகளைக் காண்கின்றார்கள். பலரும் அதில் நம்பிக்கை கொண்டு, பின்னர் அதனைப் பற்றி எழுதுகின்றார்கள். கடவுள் பேசுகின்றார்: மனிதர்களின் புகழ் இல்லை. தேவர்களின் புகழ் மாத்திரமே இருக்கின்றது. உங்களைத் தேவர்களைப் போன்று ஆக்குகின்ற ஒருவரின் புகழும் இருக்கின்றது. பாபா மிகச் சிறந்த மடல்களைச் செய்வித்தார். நீங்கள் யாராவது ஒருவரது பிறந்த தினத்தைக் கொண்டாட விரும்பினால், அது சிவபாபாவினதாகவே இருக்க வேண்டும். சிவபாபாவே இலக்ஷ்மி நாராயணனை அவ்வாறு ஆக்கினார். ஒரேயொருவரின் புகழ் மாத்திரமே இருக்கின்றது. அந்த ஒருவரை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இவர் தானே கூறுகின்றார்: நானே அதியுயர்ந்தவர் ஆகிப் பின்னர் இறங்கி வருகின்றேன். அதிமேன்மையான இலக்ஷ்மி நாராயணனும் 84 பிறவிகளை எடுத்து, பின்னர் கீழே இறங்குகின்றார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உங்களுக்கும் அதுவே பொருந்தும்! நீங்களே உலகின் அதிபதிகள் ஆக இருந்தீர்கள், இப்பொழுது என்னவாகி விட்டீர்கள்? சத்தியயுகத்தில் யார் இருந்தார்கள்? நீங்கள் அனைவரும் செய்த முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமாக அங்கிருந்தீர்கள். அங்கு அரசர்களும் அரசிகளும் இருந்தார்கள். அங்கே சூரிய வம்சத்தினரும் மற்றும் சந்திர வம்சத்தினரும் இருந்தார்கள். பாபா உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார்! நடக்கும் பொழுதும் உலாவித்திரியும் பொழுதும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் உலகச் சக்கரத்தின் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்களே உயிர்வாழும் கலங்கரை விளக்கங்கள். கல்வி முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் இன்னமும் அந்த நிலையை அடையவில்லை, அது இனிமேல் தான் வர இருக்கின்றது! இதுவே சிறப்புச்சித்தி அடைய இருப்பவர்களின் நிலையாகும். அவர்கள் இந்த ஞானம் அனைத்தையும் தமது புத்தியில் கொண்டிருப்பார்கள். அப்பொழுது மாத்திரமே நீங்கள் தந்தையின் அன்பான, பிரியமான குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். தந்தை அத்தகைய குழந்தைகளுக்குச் சுவர்க்க இராச்சியத்தையே அர்ப்பணிக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் இராச்சியத்தை ஆள்வதில்லை, நான் உங்களுக்கு அதனைக் கொடுக்கின்றேன். இதுவே சுயநலமற்ற சேவை எனப்படுகின்றது. தந்தை உங்களைத் தனது தலையில் அமர்த்துகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் அத்தகைய தந்தையை பெருமளவு நினைவு செய்ய வேண்டும்! இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. தந்தை சங்கமயுகத்தில் வந்து அனைவருக்கும் வரிசைக்கிரமமாக, அவர்களின் முயற்சிக்கு ஏற்ப சற்கதியை அருள்கின்றார். முதல் இலக்கத்தவரே அதி உயர்வானவரும், முற்றிலும் தூய்மையானவரும், இறுதி இலக்கத்தில் இருப்பவரோ முற்றாகவே தூய்மை அற்றவராகவும் இருக்கின்றார். பாபா அனைவருக்கும் அன்பு மற்றும் நினைவுகளைக் கொடுக்கின்றார். பாபா மிகத் தெளிவாகக் கூறுகின்றார்! நீங்கள் ஒருபொழுதும் எவ்விதமானதோர் பொய்யான அகங்காரத்தையும் கொண்டிருக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் இரதத்திற்கு மரியாதையும் கொடுக்க வேண்டும். இவர் மூலமே தந்தை பேசுகின்றார். இவர் முன்னர் ஒருபொழுதுமே அவதூறு செய்யப்படவில்லை. அனைவரும் அவரைப் பெருமளவில் நேசித்தார்கள். இப்பொழுது அவர் எத்தனை அவதூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது எனப்பாருங்கள்! சிலர் துரோகிகளாகி ஓடி விட்டார்கள், ஆகவே அவர்களின் நிலைமை என்னவாகும்? அவர்கள் தோல்வி அடைவார்கள், இல்லையா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மாயை இப்படிப்பட்டவள். ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மாயை எவரையுமே விட்டு வைப்பதில்லை. அவள் அனைத்து வகையான தீயையும் ஆரம்பிக்கின்றாள். தந்தை கூறுகின்றார்: எனது குழந்தைகள் அனைவரும் காமச் சிதையில் அமர்ந்திருந்ததால் முற்றிலும் அவலட்சணமாகி உள்ளார்கள். அனைவரும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. அல்லது உங்கள் அனைவருக்கும் ஒரே பாகம் உள்ளதா? இது ஒரு விலைமாதர் இல்லம் எனப்படுகின்றது. அனைவரும் பல தடைவைகள் காமச் சிதையில் அமர்ந்திருப்பார்கள்! இராவணன் மிகவும் சக்திவாய்ந்தவன்! அவன் உங்கள் புத்திகளைத் தூய்மையற்றதாக ஆக்குகின்றான். இங்கு வந்து தந்தையிடம் இருந்து கற்பித்தல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட அவ்வாறு ஆகிவிட்டார்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யாது விட்டால், உங்கள் குற்றப் பார்வை ஒருபோதும் மாறமாட்டாது. இதனாலேயே சூர்தாசின் (தன்னையே குருடாக்கியவர்) கதை இருக்கின்றது. அது ஒரு கதை. அவர்கள் அதனை ஓர் உதாரணத்திற்காகவே உருவாக்கி உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாம் கண்ணாகிய இந்த ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். அறியாமை என்றால் இருளாகும். “நீங்கள் குருடர்கள்” எனக் கூறப்படும் பொழுது “நீங்கள் அறியாமையில் இருக்கின்றீர்கள்” என்பதே அதன் அர்த்தம். இந்த ஞானம் மறைமுகமானது, எனவே இதில் எதையும் கூறுவது என்ற கேள்விக்கு இடமில்லை. இந்த ஞானம் முழுவதும் ஒரே விநாடியில் வெளிப்படுகின்றது. அனைத்திலும் இலகுவானது ஞானமே ஆகும். இருப்பினும், இறுதிவரை மாயையிடம் இருந்து வரும் சோதனைகள் தொடரும். இப்பொழுது நீங்கள் புயலின் மத்தியில் இருக்கின்றீர்கள். நீங்கள் உறுதியானவர்கள் ஆகும் போது, அதிகளவு புயல்கள் இருக்காது, நீங்கள் வீழ்ந்து விடவும் மாட்டீர்கள். பின்னர் உங்கள் விருட்சம் எவ்வளவிற்கு வளரும் என்பதை உங்களால் காண முடியும்! அது மிகவும் பிரபல்யம் அடையும். ஒரு மரம் எப்பொழுதும் வளர்கின்றது. ஒரு சிறிதளவு விநாசம் இடம்பெறும் பொழுதே நீங்கள் மிகவும் எச்சரிக்கை அடைகின்றீர்கள். பின்னர் நீங்கள் தந்தையின் நினைவைப் பற்றிக் கொள்வீர்கள். இன்னமும் சொற்ப காலமே எஞ்சி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். தந்தை மிகத் தெளிவாகக் கூறுகிறார்: ஒருவருடன் ஒருவர் மிகுந்த அன்புடன் பழகுங்கள். எவரையும் கடுமையாகப் பார்க்க வேண்டாம். கோபம் என்ற அசுத்த ஆவி வரும் பொழுது முகம் முற்றாகவே மாறுகின்றது. நீங்கள் இலக்ஷ்மி நாராயணின் முகங்களைக் கொண்டவர்கள் போன்று ஆக வேண்டும். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் இருக்கின்றன. நீங்கள் மாற்றம் அடைய வேண்டிய வேளையில் காட்சிகள் அருளுவது இடம்பெறும். ஆரம்பத்தில் நீங்கள் காட்சிகளைக் கண்டது போல், இறுதியில் நீங்கள் பல பாகங்களைப் பார்ப்பீர்கள். ஆதனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். “வேடனுக்குக் கொண்டாட்டம், இரைக்குத் திண்டாட்டம்” எனக் கூறப்பட்டுள்ளது. பல காட்சிகள் இறுதியில் பார்க்கப்படும், இதனாலேயே “இதனையே நான் செய்தேன்!” என்ற மனவருத்தம் ஏற்படும். பின்னர் அதற்கான தண்டனை மிகவும் தீவிரமானதாக இருக்கும். தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த மதிப்பை நீங்கள் பேணாவிடின், தண்டனை கிடைக்கும். விகாரத்தில் ஈடுபட்டவர்களும், சிவபாபாவிற்கு அதிகளவு அவதூறை ஏற்படுத்துவதற்குக் கருவியானவர்களும் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்வார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். ஸ்தாபனையின் போது என்ன நடைபெறுகின்றது எனப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். அசுரர்கள் போன்றவர்கள் எவருமே சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அது சங்கமயுகத்தையே குறிக்கின்றது. விகாரமான மனிதர்கள் பெருமளவு துன்பத்தையே உருவாக்குகின்றார்கள்! அவர்கள் தங்கள் புதல்விகளை அடித்துத் திருமணம் செய்யுமாறு துன்புறுத்துகின்றார்கள். பெண்கள் விகாரத்திற்காகப் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் அதிகளவு எதிர்ப்பிற்கு முகம் கொடுக்கின்றார்கள்! அவர்கள் கூறுகின்றார்கள்: சந்நியாசிகளாலேயே தூய்மையாக இருக்க முடியாமல் இருக்கும் பொழுது, நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள் எனக் கூறுவதற்கு நீங்கள் யார்? நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, அவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். தூய்மையின்றி உங்களால் தேவர்களாக முடியாது. நீங்கள் பெருமளவினைப் பெற்றுக் கொள்வதாலேயே உங்களால் அனைத்தையும் துறக்கக் கூடியதாக இருக்கின்றது என நீங்கள் அவர்களுக்குக் கூறுங்கள். கடவுள் பேசுகின்றார்: காமத்தை வென்றவர்கள் உலகினையே வெல்வார்கள்! நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது? எவ்வாறாயினும், மாயையால் உங்களைப் பெருமளவில் வீழ்த்த முடியும். இக்கல்வி மிகவும் மேன்மையானது. தந்தை வந்தே உங்களுக்குக் கற்பிக்கின்றார். சில குழந்தைகள் இதனை மிகச் சரியாக நினைவு செய்யாதிருக்கும் பொழுது மாயை அவர்களை அறைகின்றாள். மாயை சிலரைப் பெருமளவு எனக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஆக்குகின்றாள். அப்பொழுது அத்தகைய ஆத்மாக்களின் நிலை என்ன? மாயை உங்களை மிகவும் கவனயீனமாகவும் அகங்காரம் கொண்டவர்களாகவும் ஆக்குகின்றாள், அதனைக் கேட்கவும் வேண்டாம்! இராச்சியமானது வரிசைக்கிரமமாகவே உருவாக்கப்படுகின்றது. ஆகவே இது ஏதோவொரு காரணத்திற்காகவே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது! நீங்கள் இப்பொழுது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தைப் பற்றிய இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே, நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்! அகங்காரம் வந்த மாத்திரத்திலேயே நீங்கள் மரணிக்கின்றீர்கள். மாயை உங்களை முற்றாக ஒரு சதப்பெறுமதியும் அற்றவர்களாக ஆக்குகின்றாள். நீங்கள் தந்தைக்கு கீழ்ப்படியாதவர்களாக இருக்கும் பொழுது உங்களால் அவரை நினைவு செய்ய முடியாது. நல்லது.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவரோடு ஒருவர் அன்புடன் பழகுங்கள். ஒருபொழுதும் கோபப்படாதீர்கள் அல்லது கடுமையான பார்வையைக் கொண்டிராதீர்கள். ஒருபோதும் தந்தைக்குக் கீழ்ப்படியாது இருக்காதீர்கள்.2. மேன்மைச் சித்தி அடைவதற்குக் கல்வியை உங்கள் புத்தியில் கொண்டிருங்கள். வாழுகின்ற ஒரு கலங்கரை விளக்கமாக ஆகுங்கள். இரவு பகலாக உங்கள் புத்தியில் இந்த ஞானத்தைக் கடையுங்கள்.
ஆசீர்வாதம்:
ஒவ்வொரு பணியும் இலகுவாகும் அளவிற்கு சர்வசக்திவான் தந்தையின் அதிகாரத்தின் மீது உங்கள் புத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பீர்களாக.உங்கள் ஒவ்வொரு பணியையும் நீங்கள் அதி மேன்மையான சர்வசக்திவான் தந்தையின் அதிகாரத்துடனேயே செய்கிறீர்கள். உங்களை எவருமே அசைக்க முடியாத அளவிற்கு இதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் மேற்கொள்கின்ற பணி எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதனை நீங்கள் மிக இலகுவான ஒன்றாகவே அனுபவம் செய்வீர்கள். இக்காலத்தில், உங்கள் மூளையை நீங்கள் பயன்படுத்துவதில் இருந்து விடுபட்டு, எத்தகையதொரு கேள்விக்கும் விடையளிக்கக் கூடிய வகையில் அத்தகைய இயந்திரங்களை விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. அவ்வாறே, சர்வசக்திவான் தந்தையை உங்கள் முன்னால் நீங்கள் வைத்திருக்கும் போது, சகல கேள்விகளுக்கும் இலகுவாக ஒரு பதிலைப் பெற்று, இப்பாதையை மிக இலகுவானதாக அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
ஒரு புற ஆதிக்கத்தின் கீழுள்ள உங்கள் ஸ்திதியை மாற்றுவதற்கு, உங்கள் மன ஒருமைப்பாட்டு சக்தியைப் பயன்படுத்துங்கள்.அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
ஜீவன்முக்தி ஸ்திதியில் இருப்பதிலேயே பிராமண வாழ்வின் சந்தோஷம் உள்ளது. பற்றற்றவர் ஆகுவது என்றால் விடுபட்டு இருப்பதாகும். உங்கள் சம்ஸ்காரங்களுக்கேனும் நீங்கள் அடிபணியாதீர்கள். நான் என்ன செய்வது? நான் எவ்வாறு இதனை செய்வது? நான் இதனைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. இவ்வாறாயின், பந்தன வாழ்வில் இருப்பது என்று அர்த்தம். உங்களுக்கு எந்தவொரு ஆசையும் (இச்சா) இல்லை, ஆனால் ஏதோ ஒன்று உங்களுக்குப் பிடித்திருக்கிறது (அச்சா). நீங்கள் ஒரு திருத்தத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது, ஆனால் நீங்கள் கோபம் அடைந்தீர்கள். இதுவே பந்தன வாழ்விற்குரிய ஸ்திதியாகும். ஒரு பிராமணர் என்றால், ஜீவன்முக்தி அடைந்தவர், அத்தகைய ஓர் ஆத்மா எந்தவொரு பந்தனத்திலும் கட்டுண்டிருக்க மாட்டார்.