08.07.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடையை இந்த வாழ்க்கை மிக மிகப் பெறுமதியானது. ஏனெனில், நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்திற்கு ஏற்ப உலகிற்கு சேவை செய்கின்றீர்கள். நீங்கள் இந்த நரகத்தை சுவர்க்கமாக ஆக்குகின்றீர்கள்.

கேள்வி:
உங்கள் சந்தோஷம் மறைவதன் காரணம் என்ன? அதனை எவ்வாறு நீங்கள் சீராக்கிக் கொள்ள முடியும்?

பதில்:
1. நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும் போதும் 2. உங்கள் இதயத்தில் சந்தேகத்தைக் கொண்டிருக்கும் போதும் உங்கள் சந்தோஷம் மறைகின்றது. ஆகையாலேயே பாபா உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார்: சந்தேகம் எழும் போதெல்லாம், அதனையிட்டு உடனடியாகவே பாபாவிடம் கேளுங்கள். ஆத்ம உணர்வு உடையவராக இருப்பதைப் பயிற்சி செய்தால் நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.

ஓம் சாந்தி.
கடவுளே அதி மேலானவர். கடவுள் தன் குழந்தைகளின் முன்னிலையில் பேசுகின்றார். நான் உங்களை அதிமேலானவர்கள் ஆக்குகின்றேன். ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். பாபா உங்களை முழு உலகிற்கும் அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். மனிதர்கள் கூறுகின்றார்கள்: பரமாத்மாவான பரமதந்தையே அதிமேலானவர். தந்தை கூறுகின்றார்: நான் உலக அதிபதி ஆகுவதில்லை. கடவுள் பேசுகின்றார்: மனிதர்கள் கூறுகின்றார்கள்: கடவுளே அதிமேலானவர். எனினும் எனது குழந்தைகளே அதிமேலானவர்கள் என நான் கூறுகின்றேன். அவர் இதை உங்களுக்கு நிரூபிக்கின்றார். அவர் முன்னைய கல்பத்தைப் போன்றே, நாடகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முயற்சி செய்யத் தூண்டுதல் அளிக்கின்றார். தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: உங்களுக்கு ஏதேனும் ஒன்று புரியாதிருந்தால், அதனைப் பற்றிக் கேளுங்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்களுக்கு இது என்ன உலகம் என்பதோ அல்லது வைகுந்தம் என்பது என்னவென்றோ தெரியாது. எத்தனை பிரபுகளும் முகல்களும் (அரசர்கள்) வாழ்ந்து மறைந்திருந்தாலும், அமெரிக்காவில் உள்ளவர்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும், இலக்ஷ்மி நாராணயனைப் போன்று செல்வந்தர்களாக எவரேனும் இருக்க முடியாது. அமெரிக்காவில் அவர்கள் வெள்ளை மாளிகை போன்றவற்றை கட்டியுள்ளார்கள். ஆனால் அங்கே வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட தங்கவீடு இருக்கும். அதுவே சந்தோஷ உலகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் மாத்திரமே கதாநாயக, கதாநாயகி பாகங்களை நடிக்கின்றீர்கள். நீங்கள் வைரங்கள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகம் இருந்தது, இப்பொழுது இது கலியுகமாகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். கடவுளே இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் விளங்கப்படுத்துகின்றார். ஆகையால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுடைய இந்தக் கல்வி புதிய உலகிற்கானது. உங்களுடைய இந்த வாழ்க்கை மிகவும் பெறுமதியானது. ஏனெனில் நீங்கள் உலகிற்கு சேவை செய்கின்றீர்கள். மக்கள் தந்தையை அழைக்கின்றார்கள்: வந்து, நரகத்தை சுவர்க்கமாக மாற்றுங்கள். மக்கள் தந்தையான சுவர்க்கக் கடவுளைப் பற்றி பேசுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள், அல்லவா? நீங்கள் இப்பொழுது நரகத்தில் இருக்கின்றீர்கள். அதன் பின்னர் நீங்கள் மீண்டும் சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். நரகம் ஆரம்பமாகும் போது சுவர்க்கத்தைப் பற்றிய விடயங்களை நீங்கள் மறக்கின்றீர்கள். இது மீண்டும் இடம்பெறும். சத்திய யுகத்திலிருந்து நீங்கள் நிச்சயமாக கலியுகத்திற்குச் செல்ல வேண்டும். பாபா மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: உங்கள் இதயத்தில் சந்தோஷம் மறைந்து விடுமளவிற்கு உங்களுக்குள் சந்தேகம் எழும் போதெல்லாம் பாபாவிடம் அதைப் பற்றி பேசுங்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆகையால், நீங்கள் கற்க வேண்டும், அல்லவா? நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதாலேயே உங்களால் அதிகளவு சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் இருக்க வேண்டும், அல்லவா? தந்தை பிரம்மாந்தத்திற்கு மாத்திரமே அதிபதியாவார். ஆனால் நீங்களோ உலகிற்கே அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தை படைப்பவர் என்று அழைக்கப்பட்ட போதிலும், பிரளயம் ஏற்பட்டு முழு உலகமும் அழிவுற்ற பின்னர், தந்தை புதிய உலகைப் புதிதாகப் படைக்கின்றார் என்றில்லை. இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் பழைய உலகையே புதுப்பிக்கின்றேன். நான் உங்களை புதிய உலகிற்கு அதிபதிகள் ஆக்கி, பழைய உலகின் விநாசத்தைத் தூண்டுகின்றேன். நான் வேறு எதையும் செய்வதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்னை பழைய உலகிற்கு வருமாறு அழைக்கின்றீர்கள். நான் உங்களை தெய்வீகப் பிரபுக்கள் ஆக்குகின்றேன். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக உலகிற்குச் சென்ற போதிலும், நீங்கள் என்றுமே என்னை அங்கே அழைப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது என்னை அழைத்து கூறுகின்றீர்களா: பாபா, தெய்வீகக் உலகிற்கு வருவீர்களா? நீங்கள் அங்கே வருமாறு என்னை அழைப்பதே இல்லை. ‘இந்தத் தூய்மையற்ற உலகில் அனைவரும் துன்பத்தின் போதே கடவுளை நினைவு செய்கின்றார்கள்’ என்று கூறப்படுகின்றது. அவர்கள் சந்தோஷமாக இருக்கும் போது, எவரும் அவரை நினைவு செய்வதில்லை. என்னை அவர்கள் நினைவு செய்வதும் இல்லை, என்னை அவர்கள் அழைப்பதும் இல்லை. துவாபரயுகத்தில் அவர்கள் எனக்கு ஆலயங்கள் கட்டி அங்கே எனது விக்கிரகத்தை வைக்கின்றார்கள். கல்லில் இல்லாவிட்டால், அவர்கள் வைரத்தில் லிங்கத்தை செய்து என்னை வழிபடுவதற்காக அதனை அங்கே வைக்கின்றார்கள். இவை மிகவும் அற்புதமான விடயங்கள்! உங்கள் காதுகளை நன்றாக திறந்து வைத்துக் கொண்டு இந்த விடயங்களை செவிமடுங்கள். உங்கள் காதுகளும் தூய்மையாக்கப்பட வேண்டும். தூய்மையே முதலாவது விடயம். ‘பெண் சிங்கத்தின் பால் தங்கப் பாத்திரத்திலேயே வைக்கப்பட வேண்டும்’ என்று கூறப்படுகின்றது. இங்கும், தூய்மை இருந்தால்தான் உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியும். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி, அது வெற்றி கொள்ளப்பட வேண்டும். இது உங்களின் இறுதி பிறவியாகும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். விநாசம் ஒவ்வொரு சக்கரத்திலும் இடம்பெறுகின்றது. இப்பொழுதும் நாடகத்திற்கு ஏற்ப அதேபோன்று இடம்பெறும். குழந்தைகளாகிய நீங்கள் மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் செய்தைப் போன்றே, மீண்டும் உங்கள் சொந்த மாளிகைகளை சுவர்க்கத்தில் நீங்கள் கட்ட வேண்டும். சுவர்க்கம் வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. ‘வைகுந்தம்’ என்ற வார்த்தை புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தேவதைகள் மன்சரோவாரில் (மந்திர ஏரி) வாழ்கின்றார்கள் என்றும் அந்த ஏரியில் எவரேனும் மூழ்கி எழுந்தால், அவர்கள் தேவதைகள் ஆகுவார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். உண்மையில், அது கியான் மன்சரோவார் (ஞான ஏரி) ஆகும். அதில் மூழ்கி எழுவதால், நீங்கள் முற்றாக மாற்றம் அடைகின்றீர்கள். ஓர் அழகான நபர் தேவதை எனப்படுகின்றார். ஒரு தேவதை இறக்கைகளை கொண்டிருப்பார் என்றில்லை. பாண்டவர்களை நீங்கள் ‘மகாவீர்’ என்று அழைப்பதைப் போல், பாண்டவர்களின் உருவங்களையும் அவர்களின் குகைகள் போன்றவற்றையும் அவர்கள் மிகப் பெரிதாக உருவாக்கி உள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதிகளவு பணத்தை வீண் செலவு செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்குகின்றேன்! அந்தச் செல்வம் முழுவதையும் நீங்கள் என்ன செய்தீர்கள்? பாரதம் மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது. இப்பொழுது பாரதத்தின் நிலைமையைப் பாருங்கள்! 100 வீதம் செல்வச் செழிப்புடன் இருந்தவர்கள், இப்பொழுது 100 வீதம் கடனாளிகள் ஆகியுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பல ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: சிவபாபாவை நினைவு செய்தால், நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் போன்றவர்கள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், பிறருக்கு சதா சேவை செய்பவர்களால் மாத்திரமே எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியும். உங்கள் தாரணை, உங்கள் நடத்தை மிக மிக இராஜரீகமாக இருக்க வேண்டும் என்பதே பிரதான விடயமாகும். உங்கள் உணவும் பானமும் மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களிடம் வருகின்ற எவருக்குமே பௌதீகமாகவும் ஆன்மீகமாகவும் எனச் சகல வழிகளிலும் சேவை வழங்கப்பட வேண்டும். நீங்கள் பௌதீகமாகவும் ஆன்மீகமாகவும் இரண்டு விதமாகவும் சேவை செய்யும் போது, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். உங்களிடம் வருகின்ற அனைவருக்கும் சத்திய நாராயணனின் உண்மைக் கதையைக் கூறுங்கள். சமயநூல்களில் அவர்கள் பல கதைகளை எழுதியுள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார். அவர்கள் பிரம்மாவின் கரங்களில் சமயநூல்களையும் காட்டி உள்ளார்கள். இப்பொழுது, பிரம்மா எவ்வாறு விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து வெளிப்பட முடியும்? இது மிகவும் ஆழமான இரகசியம்! வேறு எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. தொப்புள் கொடியிலிருந்து எவரும் வெளிப்படுதல் என்ற கேள்வியே இல்லை. பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு பிரம்மா ஆகுகின்றார். பிரம்மா, விஷ்ணு ஆகுவதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றது. ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ எனக் கூறப்பட்டுள்ளது. தந்தை எனக்கு ஒரு காட்சியை அருளி, எனக்குக் கூறினார்: நீங்கள் விஷ்ணு வடிவமாக ஆகுவீர்கள். எனக்கு ஒரு விநாடியில் நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு விநாசத்தின் காட்சியும் கிடைத்தது. இல்லாவிடின், நான் கல்கத்தாவில் இராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லாது, மிகவும் கௌரவத்துடன் வாழ்ந்தேன். தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஞான இரத்தினத்தின் வியாபாரத்தைக் கற்பிக்கின்றார். அந்த வியாபாரம் இந்த வியாபாரத்துடன் ஒப்பிடும் போது எதுவுமே இல்லை. எவ்வாறாயினும், இவரது பாகத்திற்கும், உங்களின் பாகங்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. பாபா இவருக்குள் பிரவேசித்த போது, அவர் உடனடியாகவே அனைத்தையும் துறந்தார். பத்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டி இருந்தது. நீங்களும் அனைத்தையும் துறந்தீர்கள். நீங்கள் ஆற்றைக் கடந்து பத்திக்கு வந்தீர்கள். என்ன நடந்தது என்று பாருங்கள். ஆனால் நீங்கள் வேறு எவரைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் பெண்களை கடத்தினார் எனக்கூறப்பட்டது. ஏன்? அவர்களை அரசிகள் ஆக்குவதற்கே. குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்தின் சக்கரவர்த்தினிகள் ஆக்குவதற்கே இந்த பத்தி உருவாக்கப்பட்டது. சமயநூல்களில் பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நடைமுறையில் என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது பார்க்கின்றீர்கள். எவரையும் கடத்துதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் முன்னைய கல்பத்திலும் அவமதிக்கப்பட்டார், அத்துடன் அவருக்கு அவப்பெயரும் ஏற்பட்டது. இதுவே நாடகமாகும். எது நடந்தாலும் முன்னைய கல்பத்தில் நடந்ததைப் போன்று மிகச்சரியாக இடம்பெறுகின்றது. முன்னைய கல்பத்தில் இராச்சியத்தைக் கோரியவர்கள் நிச்சயமாக வருவார்கள் என்பதை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நானும் ஒவ்வொரு கல்பமும் வந்து, பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்றேன். 84 பிறவிகளின் முழுக் கணக்கும் காட்டப்பட்டுள்ளது. சத்தியயுகத்தில், நீங்கள் அமரத்துவமானவராக இருக்கின்றீர்கள். அங்கே அகால மரணம் ஏற்படுவதில்லை. சிவபாபா மரணத்தை வெற்றி கொள்ள உங்களைத் தூண்டுகின்றார். அவர் கூறுகின்றார்: நான் மகாகாலன் ஆவேன். அதனையிட்டு பக்திக் கதைகளும் உள்ளன. நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அமரத்துவ உலகிற்குச் செல்கின்றீர்கள். அமரத்துவ உலகில் நீங்கள் உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டுமாயின், நீங்கள் முதலில் தூய்மையாக வேண்டும். இரண்டாவதாக தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவும் வேண்டும். நாளாந்த அட்டவணை ஒன்றை உங்களுக்காக வைத்திருங்கள். இராவணனூடாக நீங்கள் இழப்பையும், என்னூடாக இலாபத்தையும் அனுபவம் செய்கின்றீர்கள். வியாபாரிகள் இவ்விடயங்களை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். இவை இந்த ஞான இரத்தினங்கள் ஆகும். அவருடன் அரிதாக சிலரே வியாபாரம் செய்கின்றார்கள். நீங்கள் வியாபாரம் செய்யவே இங்கே வந்திருக்கின்றீர்கள். சிலர் மிக நன்றாக வியாபாரம் செய்து, 21 பிறவிகளுக்காக சுவர்க்கம் என்ற ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். 21 பிறவிகளுக்கு மாத்திரம் அல்ல. நீங்கள் 50 இலிருந்து 60 பிறவிகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். நீங்கள் கோடானு கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்களின் காலடியில் தாமரை மலர் காட்டப்பட்டுள்ளது. அதன் அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது கோடானு கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். ஆகையால் நீங்கள் இப்பொழுது அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்! தந்தை கூறுகின்றார்: நான் மிகவும் சாதாரணமானவர். நான் குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள். தூய்மையான மனிதர்கள் சந்தோஷ உலகில் வாழ்கின்றார்கள். அமைதிதாமத்தைப் பற்றிய எந்த வரலாறோ அல்லது புவியியலோ இருக்க முடியாது. அது ஆத்மாக்களின் விருட்சம். சூட்சும உலகைப் பற்றிய கேள்விக்கு இடமில்லை. எவ்வாறாயினும், உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் இருந்தது. ஒரு இலக்ஷ்மியும் நாராயணனும் அங்கே ஆட்சி செய்தார்கள் என்றில்லை. சனத்தொகை அதிகரிக்கின்றது. அதன் பின்னர், துவாபரயுகத்தில், பூஜிக்கத் தகுதியானவர்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள். அதன் பின்னர் மக்கள், கடவுள் சர்வவியாபி எனக் கூறுவதைப் போன்றே கடவுளிடம் கூறுகின்றார்கள்: ‘நீங்கள் பூஜிக்கத் தகுதியானவரும் பூஜிப்பவரும் ஆவீர்கள்’. இவ்விடயங்களை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அரைக்கல்பமாக கடவுள் அதிமேலானவர் எனக் கூறிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது, கடவுள் உங்களிடம் கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்களே அதிமேலானவர்கள். ஆகையால், நீங்கள் அத்தகைய தந்தையின் ஆலொசனையைப் பின்பற்ற வேண்டும். உங்கள் இல்லறத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எல்லோருமே இங்கே தங்கிவிட முடியும் என்றில்லை. இங்கே அனைவரும் தங்க வேண்டுமாயின், மிகப் பெரிய கட்டடம் கட்டப்பட வேண்டும். ஒரு கணநேர தரிசனத்திற்காக, இங்கே, மேலிருந்து கீழே வரைக்கும் மிகப் பெரிய வரிசை நிற்பதை ஒரு நாள் நீங்கள் பார்ப்பீர்கள். ஒரு கணநேர தரிசனம் ஒருவருக்குக் கிடைக்காது விட்டால், அவர் குழப்பம் விளைவிப்பார். அவர் ஒரு மகாத்மாவின் ஒரு கணநேர தரிசனத்தைப் பெற விரும்புகின்றார். ஆனால், அவரோ குழந்தைகளின் தந்தையாவார். அவர் தனது குழந்தைகளுக்கு மாத்திரமே கற்பிக்கிறார். நீங்கள் பாதையைக் காட்டுகின்ற ஒருசிலர் மிகவும் நன்றாகத் தொடர்ந்தும் முன்னேறிச் செல்கின்றார்கள். ஆனால் ஏனையோரால் எதனையும் கிரகிக்க முடியாதுள்ளது. இவ்விடயங்கள் அனைத்தையும் பலரும் செவிமடுக்கின்றார்கள். அவர்கள் வெளியில் சென்ற பின்னர், அனைத்தையும் கைவிடுகின்றார்கள். அந்தளவிற்கு சந்தோஷம் இருப்பதில்லை. கற்பதும் இல்லை, யோகமும் இல்லை. அட்டவணை ஒன்று வைத்திருங்கள் என பாபா அடிக்கடி கூறுகின்றார். இல்லாவிடின், அதிகளவு வருந்த நேரிடும். உங்கள் அட்டவணையை சோதித்து நீங்கள் பாபாவை எவ்வளவு நினைவு செய்கின்றீர்கள் எனப் பாருங்கள். பாரதத்தின் புராதன யோகத்திற்கு அதிகளவு புகழ் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களுக்கு ஏதேனும் புரியாவிட்டால், அதனைப் பற்றி பாபாவிடம் கேளுங்கள். முன்னர் உங்களுக்கு எதுவும் தெரியாதிருந்தது. பாபா கூறுகின்றார்: இது ஒரு முட்காடு. காமமே கொடிய எதிரியாகும். கீதையிலும் இவ்வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கீதையை மக்கள் கற்கின்றார்கள். ஆனால் அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை. பாபா கீதையை தனது வாழ் நாள் முழுவதும் கற்றார். கீதையிலுள்ள செய்தி மிகவும் மேன்மையானது என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். பக்தி மார்க்கத்தில் கீதைக்கு அதிகளவு மரியாதை உள்ளது. பெரிய கீதைகளும் சிறிய கீதைகளும் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணரதும் ஏனைய தேவர்களினதும் அதே படங்களை சில பைசாக்களுக்கு வாங்கலாம். அந்தப் படங்களைக் கொண்டு பெரிய ஆலயங்கள் கட்டப்படுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் வெற்றி மாலையின் மணிகள் ஆக வேண்டும். அத்தகைய இனிய பாபாவிடம் கூறுங்கள்: ‘பாபா, பாபா!’ பாபா உங்களுக்கு சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார் என்று உங்களில் சிலர் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், அவர்களே இந்த ஞானத்தை செவிமடுத்து, அதிசயப் பட்டதுடன், இந்த ஞானத்தை பேசிய பின்னர், மாயை அவர்களை பாபாவை விட்டு விலகச் செய்வதால், அவர்கள் ஓடி விடுகின்றார்கள். ‘பாபா’ என நீங்கள் கூறும் போது, ‘பாபா’ என்றால் ‘பாபா’ தான்! பக்தி மார்க்கத்திலும் நினைவுகூரப்பட்டுள்ளது: அவர் கணவருக்கெல்லாம் கணவர். அனைத்து குருமார்களுக்கு எல்லாம் குருவாக ஒருவர் மாத்திரமே உள்ளார். அவரே எங்கள் தந்தை ஆவார். அவரே தூய்மை ஆக்குபவரான ஞானக் கடலாவார். குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களிடமிருந்து எங்கள் ஆஸ்தியை பெறுகின்றோம். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களைச் சந்திக்கின்றோம். எங்கள் எல்லையற்ற தந்தையான உங்களிடமிருந்து நாங்கள் நிச்சயமாக எங்கள் எல்லையற்ற ஆஸ்தியை பெறுகின்றோம். அல்ஃபாவே பிரதான விடயம். அதன் பின்னர் இராச்சியமான பீற்றா அதில் அடங்கி உள்ளது. ‘பாபா’ என்பது ஓர் ஆஸ்தியை குறிக்கின்றது. அது எல்லைக்கு உட்பட்டது. இது எல்லையற்றது. பல எல்லைக்கு உட்பட்ட பாபாக்கள் உள்ளனர். ஆனால் எல்லையற்ற தந்தை ஒருவரே உள்ளார். அச்சா.

5000 வருடங்களின் பின்னர் மீண்டும் வந்து என்னைச் சந்திக்கும் இனிமையிலும் இனிமையான, குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பௌதீக மற்றும் சூட்சும சேவையைச் செய்து, எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், பிறருக்கும் இந்த அனுபவத்தைக் கொடுங்கள். உங்கள் நடத்தையிலும், உணவிலும், பானத்திலும் மிகவும் இராஜரீகத்தைக் கொண்டிருங்கள்.

2. அமரத்துவ உலகில் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, தூய்மை ஆகுவதுடன் தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். பாபாவை நீங்கள் எவ்வளவு நினைவு செய்கின்றீர்கள் என்பதைப் பார்ப்பதற்கு உங்கள் அட்டவணையைச் சோதியுங்கள். உங்களுக்கான அழியாத வருமானத்தை நீங்கள் ஈட்டுகின்றீர்களா எனச் சோதியுங்கள். உங்கள் காதுகளைத் தூய்மை ஆக்குங்கள். அப்பொழுதே உங்களால் அனைத்தையும் கிரகிக்க முடியும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா அன்பிலே திளைத்திருப்பதுடன், சேவை செய்யும்போது நினைவின் அனுபவங்களின் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்ற ஆத்மா ஆகுவீர்களாக.

நீங்கள் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது அந்த நினைவின் மூலம் நீங்கள் பெறுகின்ற பேறுகளின் அனுபவத்தைத் தொடர்ந்தும் அதிகரிக்க வேண்டும். இப்போது விசேடமான நேரம் ஒதுக்கி, இதில் கவனம் செலுத்துங்கள். அப்போது நீங்கள் அன்பிலே திளைத்திருந்து, அனுபவக் கடலில் மூழ்கி இருக்கும் ஆத்மா என்று இனங்காணப்படுவீர்கள். இந்தச் சூழலில் எப்படி நீங்கள் தூய்மை மற்றும் அமைதியை உணர்கிறீர்களோ, அதேபோல், நீங்கள் அன்பிலே திளைத்திருக்கும் மேன்மையான யோகி ஆத்மா என்ற அனுபவம் இருக்க வேண்டும். இந்த ஞானத்தின் ஆதிக்கம் உள்ளது. ஆனால் அத்துடன்கூடவே, நீங்கள் யோகத்தின் வெற்றி சொரூபமாக இருப்பதன் ஆதிக்கமும் இருக்க வேண்டும். சேவை செய்யும்போது, நினைவின் அனுபவங்களில் திளைத்திருங்கள். அத்துடன் நினைவு யாத்திரையின் அனுபவத்தின் ஓட்டப்பந்தயத்தில் ஓடுங்கள்.

சுலோகம்:
இங்கே, இப்போதே வெற்றியை ஏற்றுக் கொள்வது என்றால், எதிர்காலத்திற்கான உங்களின் வெகுமதியை முடிப்பதாகும்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.

எந்தளவிற்கு அதிகமாகக் குழந்தைகளான நீங்கள் மேன்மையான எண்ணங்களின் சக்தியால் நிரம்புகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களால் செய்யப்பட்ட மேன்மையான சேவையின் ரூபத்தைத் தெளிவாகக் காண முடியும். நீங்கள் ஒவ்வொருவருமே தெய்வீகப் புத்தியும் தூய எண்ணங்களும் கொண்டவரான உங்களை யாரோ அழைக்கிறார்கள், யாரோ உங்களை வரவழைக்கிறார்கள் என அனுபவம் செய்வீர்கள். சிலர் தந்தையையும் இந்த இடத்தையும் தெய்வீகக் காட்சியால் காண்பார்கள். இரண்டு வகையான அனுபவங்களால், நீங்கள் உங்களின் மேன்மையான இலக்கை மிகத் துரிதமான வேகத்தில் அடைந்து விடுவீர்கள்.