08.10.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சுவர்க்கத்திற்;கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கே நீங்கள் இப் பாடசாலைக்கு வந்துள்ளீர்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகி, பதிவேட்டில் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள்.
கேள்வி:
எந்த ஒரு விழிப்புணர்வு இல்லாததால், சில குழந்தைகள் தந்தையின் மீது மரியாதையைக் கொண்டிருப்பதில்லை?பதில்:
முழு உலகினாலும் அழைக்கப்படுபவரும், அனைவராலும் நினைவு செய்யப்படுபவரும், அதிமேலான தந்தையுமான ஒரேயொருவரே தற்சமயம் எங்களுக்குச் சேவை செய்ய இங்கு இருக்கின்றார் என்ற விழிப்புணர்வு சில குழந்தைகளிடம் இல்லை. இந்த நம்பிக்கை வரிசைக்கிரமமாகவே உள்ளது. எந்தளவிற்கு இந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளதோ, அதற்கேற்பவே நீங்கள் அந்த மரியாதையைக் கொண்டிருக்கிறீர்கள்.பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்களின் மீது ஞான மழை பொழிகின்றது.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஞானக்கடலுடன் இருக்கின்றீர்கள். குழந்தைகள் அனைவரும் ஒரே இடத்தில் தங்க முடியாது. அவருடன் அமர்ந்திருப்பவர்களால் இந்த ஞானத்தை நேரடியாகச் செவிமடுக்க முடியும், ஆனால் தொலைவில் வாழ்பவர்கள் சற்றுத் தாமதித்தே அதைப் பெறுகின்றார்கள். எவ்வாறாயினும், தந்தையுடன் வாழ்பவர்கள் தொலைவில் வாழ்பவர்களை விடவும் பெரும் முன்னேற்றத்தை அனுபவம் செய்கின்றார்கள் என்றில்லை. இல்லை, தொலைவில் வாழ்பவர்கள் அதிகளவு கற்று, அதிகளவு முன்னேற்றம் அடைவது நடைமுறையில் காணப்படுகிறது. எல்லையற்ற தந்தை இங்கே இருக்கின்றார் என்பது நிச்சயமானது. பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். சில குழந்தைகள் பெரிய தவறுகளையும் செய்கின்றார்கள். முழு உலகமும் நினைவு செய்கின்றவரான எல்லையற்ற தந்தையே எங்களுக்குச் சேவை செய்வதில் ஈடுபட்டு, அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்கான பாதையை எங்களுக்குக் காட்டுவதுடன் எமக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பினும், அவருக்கு அந்தளவிற்கு மரியாதை செலுத்துவதில்லை. பந்தனத்தில் உள்ளவர்கள் பல துன்புறுத்தல்களை அனுபவம் செய்கின்றார்கள். அவர்கள் பரிதவித்தாலும், நினைவில் நிலைத்திருந்து, இந்த ஞானத்தை நன்றாகப் பெறுகின்றார்கள். அவர்களின் அந்தஸ்து மேன்மை ஆகுகின்றது. அனைவரையும் பற்றி பாபா இவ்வாறு கூறுவதில்லை. அது நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமானது. தந்தை குழந்தைகளை எச்சரிக்கின்றார். அனைவரும் ஒரேமாதிரி இருக்க முடியாது. இருப்பினும் வெளியில் வாழ்பவர்களும், பந்தனத்தில் இருப்பவர்களும் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றார்கள். பக்திமார்க்கத்தினரால் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதன் அர்த்தத்தை எடுத்துக் கொள்வது உங்களுக்குப் பெறுமதியானது. அன்பிற்கினியவர் யார் என்பதைப் பற்றியும், அவர் யாருக்கு அன்பிற்கினியவர் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு என்ன தெரியும்;? ஆத்மாக்கள் தம்மையே அறியாததால், தந்தையை அவர்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? அவரும் ஓர் ஆத்மா, அல்லவா? நான் யார் என்பதையும், நான் எங்கிருந்து வருகின்றேன் என்பதையும் கூட அவர்கள் அறியார்கள். அனைவரும் சரீர உணர்வில் இருக்கின்றார்கள். எவருமே ஆத்ம உணர்வில் இல்லை. அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பார்களாயின், அப்பொழுது ஆத்மாக்கள் தமது தந்தையை அறிந்திருப்பார்கள். சரீர உணர்வில் இருப்பதனால், அவர்கள் ஆத்மாக்களைப் பற்றியோ அல்லது பரமாத்மாவான பரமதந்தையைப் பற்றியோ அறியார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியே விளங்கப்படுத்துகின்றார். இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். ஒரேயொரு இலக்கும் குறிக்கோளுமே உள்ளன: சுவர்க்க இராச்சியத்தை அடைவதாகும். சுவர்க்கத்தில் பல்வேறுபட்ட அந்தஸ்துக்கள் உள்ளன. அரசர், அரசியுடன், பிரஜைகளும் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: உங்களை இரட்டைக் கிரீடம் உடையவர்கள் ஆக்குவதற்கே நான் மீண்டும் ஒருமுறை வந்திருக்கின்றேன். அனைவருமே இரட்டைக் கிரீடத்திற்கு உரியவர்கள் ஆக முடியாது. நன்றாகக் கற்பவர்கள் தம்மால் இவ்வாறு ஆக முடியும் என உள்ளார்த்தமாகப் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் அர்ப்பணித்திருப்பதுடன், நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள். நீங்கள் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்கின்றீர்கள். சிலர் பல குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுபவர்கள் என்று கருதுவதில்லை. இதனாலேயே அவர்கள் முயற்சி செய்வதில்லை. உங்களால் அவ்வாறு ஆக முடியுமா என நீங்கள் தந்தையிடம் வினவினால், அவரால் உடனடியாகவே உங்களுக்குக் கூற முடியும். நீங்கள் அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது என்பதை நீங்களே உங்களைப்; பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அதற்குத் தகைமைகளும் தேவைப்படுகின்றன. அத்தகைய விடயங்கள் சத்திய, திரேதா யுகங்களில் இடம்பெறுவதில்லை. அங்கே, அது வெகுமதியாகும். அந்த நேரத்தில் வருகின்ற அரசர்கள் தமது பிரஜைகளின் மீது பெருமளவு அன்பு வைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஒரு தாயையும் தந்தையையும் போன்றவர்கள். இவரே எல்லையற்ற தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அந்த ஒரேயொருவரே முழு உலகையும் பதிவு செய்கின்றார். நீங்களும் உங்களைப் பதிவு செய்கின்றீர்கள். அவர் உங்கள் ஒவ்வொருவருக்;கும் ஒரு கடவுச்சீட்டைக் கொடுக்கின்றார். சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்கு இங்கே நீங்கள் ஒரு கடவுச்சீட்டைப் பெறுகின்றீர்கள். சுவர்க்கத்திற்குச் செல்லும் தகுதி பெறுகின்ற அனைவரும் ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என பாபா கூறியுள்ளார். ஏனெனில் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். அப்படத்தின் பக்கத்தில், கிரீடமணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் ஆகுகின்றீர்கள். இந்த மாதிரியை நீங்கள் கண்காட்சிகளில் வைத்திருக்க வேண்டும். இது இராஜயோகம் ஆகும். உதாரணத்திற்கு, ஒருவர் சட்டநிபுணர் ஆகும்பொழுது, அவர்கள் சாதாரண உடையுடன் உள்ள அவரது புகைப்படத்தை ஒருபுறத்திலும், அவர் சட்டநிபுணர் ஆடையில் உள்ள புகைப்படத்தை மறுபுறத்திலும் வைத்திருக்கின்றார்கள். அவ்வாறே, நீங்கள் சாதாரண ஆடை அணிந்த உங்கள் புகைப்படத்தை ஒருபுறமும், இரட்டைக் கீரிடம் அணிந்துள்ள உங்கள் புகைப்படத்தை மறுபுறமும் வைத்திருக்க வேண்டும். ‘நீங்கள் என்னவாக விரும்புகின்றீர்கள்? நீங்கள் சட்டநிபுணராக விரும்புகின்றீர்களா அல்லது மகாராஜா ஆக விரும்புகின்றீர்களா?’ என நீங்கள் வினவுகின்ற ஒரு புகைப்படமும் உங்களிடம் உள்ளது. நீங்கள் அத்தகைய புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும். சட்டநிபுணர்களும், நீதிபதிகள் போன்றோரும் இங்கே இருக்கிறார்கள். நீங்கள் புதிய உலகில் அரசர்களுக்கு எல்லாம் அரசர்களம் ஆக உள்ளீர்கள். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. இவ்வாறாகவே நீங்கள் ஆகுகின்றீர்கள். விளக்கம் மிகவும் நன்று! படங்கள் மிகவும் நன்றாகவும், முழு அளவிலும் இருக்க வேண்டும். சட்டநிபுணர்கள் ஆகுவதற்காக மாணவர்கள் கற்கும்பொழுது, அவர்கள் சட்டநிபுணருடன் யோகம் செய்து, சட்டநிபுணர்கள் ஆகுகின்றார்கள். இவரின் யோகம் பரமாத்மா பரமதந்தையுடன் உள்ளது. அதனால், அவர் இரட்டைக் கிரீடம் உடையவர் ஆகுகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதன் அடிப்படையில் செயற்பட வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் படத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. நீங்கள் இவ்வாறே ஆகுகின்றீர்கள். ஆகவே, நிச்சயமாக உங்களுக்கு ஒரு புதிய உலகம் தேவைப்படுகின்றது. நரகத்தின் பின்னர் சுவர்க்கம் இருக்கும். இப்பொழுது இது அதிமேன்மையான சங்கமயுகம் ஆகும். இக்கல்வி உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றது. இதில் பணம் போன்றவற்றிக்கான தேவையே இல்லை. நீங்கள் கற்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும். ஒருவர் கற்பதற்குப் போதுமானளவு பணம் இல்லாமல் மிகவும் ஏழையாக இருந்தார். அப்படியிருந்தும், அவர் முயற்சி செய்து செல்வந்தராகி, விக்டோரியா இராணியின் அமைச்சர் ஆகினார். இந்நேரத்தில் நீங்களும் மிகவும் ஏழைகளாக இருக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு அத்தகைய மேன்மையான விடயங்களைக் கற்பிக்கிறார். இங்கு, நீங்கள் உங்கள் புத்தியின் மூலம் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். மின்விளக்குகள் போன்றவற்றை ஏற்ற வேண்டிய தேவையில்லை. நீங்கள் எங்காவது அமர்ந்து அவரை நினைவுசெய்ய முடியும். எவ்வாறாயினும், மாயை என்பவள் தந்தையை நீங்கள் மறந்து விடுமாறு செய்பவள். நினைவிலேயே தடைகள் உள்ளன. இது ஒரு யுத்தம். தந்தையை நினைவு செய்வதால், ஆத்மாக்கள் தூய்மை ஆகுகிறார்கள். நீங்கள் கற்கும்பொழுது, மாயை எதனையும் செய்வதில்லை. நினைவின் போதையானது, கல்வியினுடைய போதையை விடவும் மகத்தானது. இதனாலேயே புராதன யோகம் நினைவுகூரப்பட்டு வருகிறது. கூறப்பட்டுள்ளது: யோகமும், ஞானமும். நீங்கள் யோகம் செய்வதற்கான ஞானத்தைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு நினைவில் நிலைத்திருப்பதற்கான வழிகள் கூறப்பட்டுள்ளன. உலகச் சக்கரத்தின் ஞானமும் உள்ளது. படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ வேறு எவரும் அறியார். அவர்கள் பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்கிறார்கள். “புராதனம்” என்று அழைக்கப்பட்டது, புதிய உலகமாக இருந்தது. அது நூறாயிரக் கணக்கான வருடங்களைக் கொண்டது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சக்கரத்தின் பல்வேறு கால எல்லைகளையும் காட்டுகின்றார்கள். ஒருவர் ஒரு விடயத்தையும், மற்றவர் மற்றுமொரு விடயத்தையும் கூறுகிறார்கள். இங்கு, ஒரேயொரு தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் வெளியே செல்லும் பொழுதும், படங்களைப் பெறுவீர்கள். இவர் ஒரு வியாபாரி ஆவார். பாபா கூறுகிறார்: உங்களால் துணியிலும் படங்களை அச்சிட முடியும். ஒருவரிடம் அச்சிடுவதற்கு ஒரு பெரிய திரைத்துணி இல்லாதுவிடின், நீங்கள் இரு பாகங்களாகத் துணியில் அச்சிட்டுப் பின்னர் அவற்றை இணைத்த இணைப்பு தெரியாத வகையில் அவற்றை ஒன்றாக்குங்கள். அதிமேன்மையான அதிகாரியான, எல்லையற்ற தந்தை கூறுகிறார்: அதைப் போன்று ஒருவர் அச்சிட்டிருந்தால், நான் அவருடைய பெயரைப் புகழடையச் செய்வேன். ஒருவர் இவற்றைத் துணியில் அச்சிட்டு, அவற்றை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்றால், அவருக்கு ஒவ்வொரு படத்துக்கும் 5000 முதல் 10,000 ரூபாய்கள் வரை கொடுக்கப்படலாம். அவர்களிடம் அபரிமிதமான பணம் உள்ளது. இவற்றை உருவாக்க முடியும். நகரங்களின் அழகான காட்சிகளையும், பக்கக் காட்சிகளையும் அச்சிட்ட அத்தகைய பெரிய அச்சகங்கள் இருக்கின்றன, கேட்கவும் வேண்டாம்! இவற்றையும் அச்சிட முடியும். இது முதற்தரமான ஒன்று. அவர்கள் கூறுவார்கள்: இதில் உண்மையான ஞானம் உள்ளது. வேறு எவரும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியாது. இதை எவரும் அறிய மாட்டார்கள். விளங்கப்படுத்துகின்ற எவரும் ஆங்கிலத்தில் பேசுவதில் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். அங்கு அனைவரும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கும் செய்தி கொடுக்கப்பட வேண்டும். நாடகத்திற்கேற்ப, அவர்களே விநாசத்துக்கான கருவிகள் ஆகுபவர்கள். இருசாராரிடமும் அத்தகைய குண்டுகள் போன்றவை உள்ளன, அவர்கள் ஒன்றிணைந்தால் முழு உலகத்திற்குமே அதிபதிகள் ஆக முடியும் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நீங்கள் யோகசக்தி மூலம் முழு உலகினதும் இராச்சியத்தைக் கோரும் வகையில் இந்நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மூலம் எவரும் உலக அதிபதிகள் ஆக முடியாது. அவர்களிடம் விஞ்ஞானம் உள்ளது, உங்களிடமோ மௌனம் உள்ளது. தந்தையையும், சக்கரத்தையும் நினைவுசெய்து, ஏனையோரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குங்கள். யோகசக்தி மூலம் குழந்தைகளாகிய நீங்கள் உலக இராச்சியத்தைக் கோருகிறீர்கள். நிச்சயமாக அவர்கள் தங்கள் மத்தியில் சண்டை இடுவார்கள். இடையில் உள்ள நீங்களே வெண்ணெயைப் பெறுவீர்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் வாயில் வெண்ணெய் உருண்டையைக் காட்டி உள்ளார்கள். ஒரு கூற்றும் உள்ளது: இருவர் சண்டையிட, மூன்றாவது நபர் வெண்ணெயை எடுத்து உண்டார். உண்மையில் அவ்வாறே உள்ளது. நீங்கள் முழு உலக இராச்சியமாகிய வெண்ணெயைப் பெறுகிறீர்கள். ஆகவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஓஹோ! பாபா, இது உங்களின் அற்புதம்! இது உங்களின் ஞானம். விளக்கம் மிகவும் சிறந்தது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள், எப்படி முழு உலக இராச்சியத்தைப் பெற்றார்கள்? இதைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. அந்நேரத்தில், வேறு கண்டங்கள் இருக்கவில்லை. தந்தை கூறுகிறார்: நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நான் உங்களை அவ்வாறு ஆக்குகிறேன். கற்பதனால் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். பரமாத்மாவாகிய நான், சரீரமற்றவர். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. நீங்கள் சரீரதாரிகள். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குச் சூட்சும சரீரங்கள் உள்ளன. நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்பது போன்று, நானும் பரமாத்மா ஆவேன். எனது பிறவி தெய்வீகமானதும், தனித்துவமானதும் ஆகும். வேறு எவரும் இவ்விதமாகப் பிறவியெடுக்க முடியாது. இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மரணம் அடைந்தால், அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாடகத்தின் புரிந்துணர்வை அதிகளவு பெறுகிறீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கிறீர்கள். சிலருக்கு மந்தபுத்தி உள்ளது. மூன்று தரங்கள் உள்ளன. கடைசித் தரத்தைப் பெறுபவர்கள், மந்தமானவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். யார் முதற்தரத்தில் உள்ளார்கள் எனவும், யார் இரண்டாந் தரத்தில் உள்ளார்கள் எனவும் அவர்களே புரிந்து கொள்கிறார்கள். பிரஜைகளின் மத்தியிலும் அவ்வாறே உள்ளது. இது ஒரே கல்வியே ஆகும். கற்றதன் பின்னர், நீங்கள் இரட்டைக்கிரீடம் உடையவர்கள் ஆகுவீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இரட்டைக்கிரீடம் உடையவர்களாக இருந்தோம். பின்னர், நாங்கள் ஒற்றைக் கிரீடம் உடையவர்கள் ஆகினோம், இப்பொழுது எங்களிடம் கிரீடம் இல்லை. கூறப்பட்டுள்ளது: நீங்கள் செய்யும் செயல்களுக்கேற்ப, பலனைப் பெறுகிறீர்கள். நீங்கள் இதைச் சத்தியயுகத்தில் கூற மாட்டீர்கள். இங்கு, நல்ல செயல்களைச் செய்தால், நீங்கள் ஒரு பிறவிக்குச் சிறந்த பலனைப் பெறுகிறீர்கள். பிறப்பில் இருந்தே நோய்வாய்ப்பட்டிருக்கும் வகையில் சிலர் அத்தகைய செயலைச் செய்கிறார்கள். அதுவும் கர்ம வேதனையாகும். குழந்தைகளாகிய உங்களுக்குக் கர்மா, நடுநிலைக் கர்மா, பாவக் கர்மாவின் தத்துவம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு செய்பவை அனைத்துக்கும் நல்ல, தீய பலனைப் பெறுகிறீர்கள். ஒருவர் செல்வந்தர் ஆகும்பொழுது, அவர் நிச்சயமாக முன்னர் நல்ல செயல்களைச் செய்திருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது பிறவிபிறவியாக உங்கள் வெகுமதியை உருவாக்குகிறீர்கள். அங்குள்ள செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு இந்நேரத்தில் அனைவரும் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. அந்த வெகுமதி 21 பிறவிகளுக்கு அழியாதது. இங்கு, நீங்கள் தற்காலிகமான சிலவற்றை மாத்திரம் பெறுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்தும் செயல்களைச் செய்ய வேண்டும். இது கர்ம ஷேத்திரம் ஆகும். சத்தியயுகமே சுவர்க்கத்தின் கர்ம ஷேத்திரம் ஆகும். அங்கு பாவச்செயல்கள் செய்யப்படுவதில்லை. இவ்விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியால் கிரகிக்க வேண்டும். அரிதாகவே உங்களிற் எவரும் தொடர்ந்தும் இக்கருத்துக்களை எழுதிக் கொள்கிறீர்கள். சிலர் தங்கள் அட்டவணையை எழுதுவதில் களைப்படைந்தும் விடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இக்கருத்துக்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். அவற்றை நினைவு செய்யவும் முடியாத அளவிற்கு இக்கருத்துக்கள் மிகவும் ஆழமானவை; அவை நழுவி விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட கருத்தை மறந்து விட்டதாகப் பின்னர் நீங்கள் வருத்தப்படுவீர்கள். அனைவருடைய நிலையும் அதுவேயாகும். பலர் மறந்து விடுகிறார்கள், பின்னர் மறுநாள் நினைவு செய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சுய முன்னேற்றத்தைப் பற்றி அக்கறை கொண்டிருக்க வேண்டும். அரிதாகவே உங்களிற் சிலர் மிகச்சரியாக எழுதுகிறீர்கள் என்பதை பாபா அறிவார். பாபாவும் வியாபாரி ஆவார். இவர் அழியும் இரத்தினங்களின் வியாபாரியாக இருந்தார். அந்த வியாபாரியோ இந்த ஞான இரத்தினங்களின் வியாபாரி ஆவார். பல குழந்தைகள் யோகம் என்னும் பாடத்தில் சித்தி அடைவதில்லை. அரிதாகவே உங்களிற் சிலரால் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலத்துக்கு மிகச்சரியாக நினைவில் நிலைத்திருக்க இயலுகிறது. நீங்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் ஜீவனோபாயத்துக்காகவும் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அந்தக் காதலரினதும், அன்பிற்கினியவரினதும் உதாரணத்தை பாபா உங்களுக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு எங்காவது தனிமையில் அமர்ந்திருக்கும் பொழுது, ஒருவரையொருவர் நினைவு செய்வதுடன், ஒருவர் மற்றவரின் முன்னிலையில் தோன்றுகிறார்கள். அதுவும் ஒரு காட்சி போன்றது. இவர் அந்த ஒரேயொருவரை நினைவு செய்கிறார், அந்த ஒரேயொருவர் இவரை நினைவு செய்கிறார். இங்கு, அந்த ஒருவரே அன்பிற்கினியவரும், நீங்கள் அனைவரும் அவரின் காதலிகளும் ஆவீர்கள். அந்த அழகிய அன்பிற்கினியவர் மிகவும் அழகானவரும் சதா-தூய்மையானவரும் ஆவார். தந்தை கூறுகிறார்: நானே பயணியும், சதா-அழகானவரும் ஆவேன். நான் உங்களையும் அழகாக்குகிறேன். தேவர்களிடம் இயற்கை அழகுள்ளது. இங்கு, மக்கள் எல்லா வகையான நாகரிகத்தையும் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பல்வேறு விதமான ஆடைகளை அணிகிறார்கள். அங்கு, அவர்கள் நிலையான, இயற்கை அழகைக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் அந்த உலகத்துக்குச் செல்ல உள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஒரு பழைய, தூய்மையற்ற தேசத்திலும், ஒரு தூய்மையற்ற சரீரத்திலும் பிரவேசிக்கிறேன். இங்கு எவருக்கும் ஒரு தூய சரீரம் இல்லை. தந்தை கூறுகிறார்: நான் இவருடைய பல பிறவிகளின் இறுதியில் இவரின் சரீரத்தில் பிரவேசித்து, இல்லறப் பாதையை ஸ்தாபிக்கிறேன். நீங்கள் மேலும் முன்னேறுகையில், தொடர்ந்தும் மேலும் சேவாதாரிகள் ஆகுவீர்கள். நீங்கள் முயற்சி செய்து, பின்னர் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் முன்னர் அத்தகைய முயற்சியைச் செய்தீர்கள், அவ்வாறு மீண்டும் செய்கிறீர்கள். முயற்சி செய்யாமல் உங்களால் எதையும் பெற முடியாது. நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கு புதிய உலக இராச்சியம் இருந்தது. அது இப்பொழுது இல்லை; அது பின்னர் இருக்கும். கலியுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் வரும். மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் அது இருந்ததைப் போன்றே, அந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை அர்ப்பணிப்பதுடன், நம்பிக்கை நிறைந்த புத்திகளும் உங்களுக்கு இருக்க வேண்டும். என்றுமே தீய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். உங்களில் குறைபாடுகள் எதுவும் இல்லாத பொழுதே, உங்களால் ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெற முடியும்.2. இந்த ஞான இரத்தினங்களின் வியாபாரத்தைச் செய்வதற்கு பாபா உங்களுக்குக் கூறுகின்ற சிறந்த கருத்துக்களைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர், அவற்றை நினைவுசெய்து, பிறருக்கும் கூறுங்கள். உங்கள் சுய முன்னேற்றத்தைப் பற்றியே எப்பொழுதும் அக்கறை கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு குழந்தையாகவும் அதேவேளை ஓர் அதிபதியாகவும் இருப்பதன் மூலம் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவர் ஆகுவீர்களாக.எப்படி எல்லோருக்கும் ஒரு குழந்தையாக இருப்பதன் போதை உள்ளதோ, அதேபோல், ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் ஆகுங்கள். அதாவது, தந்தைக்குச் சமமான சம்பூரண ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். ஓர் அதிபதியின் சிறப்பியல்பானது, ஒருவர் எந்தளவிற்கு அதிபதியாக இருக்கிறாரோ, அதற்கேற்ப உலகச் சேவையாளரின் சம்ஸ்காரங்கள் சதா வெளிப்பட்டு இருக்கும். உங்களுக்குள் அதிபதியாகவும் அதே அளவிற்கு உலகச் சேவையாளராகவும் இருக்கும் போதை இருக்கும்போது, நீங்கள் தந்தைக்குச் சமமானவர் என்று அழைக்கப்படுவீர்கள். குழந்தை மற்றும் அதிபதி என்ற இரண்டு வடிவங்களையும் நடைமுறையில் கொண்டு வாருங்கள். அப்போது உங்களால் தந்தைக்குச் சமமாக இருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யக்கூடியதாக இருப்பதுடன் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி இருக்க முடியும்.
சுலோகம்:
இந்த ஞானத்தின் எல்லையற்ற பொக்கிஷங்களின் உரிமையைக் கோருங்கள், அப்போது தங்கியிருத்தல் முடிந்துவிடும்.அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.
வார்த்தைகளால் சேவை செய்வது இயல்பானது ஆகியிருப்பதைப் போல், உங்களின் மனதினால் செய்யும் சேவையும் ஒரே வேளையில், இயல்பாக நடைபெற வேண்டும். வார்த்தைகளால் சேவை செய்வதுடன் கூடவே, தொடர்ந்து உங்களின் மனதாலும் சேவை செய்யுங்கள். அப்போது நீங்கள் குறைவாகவே பேச வேண்டியிருக்கும். உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம் ஒத்துழைக்கும்போது, நீங்கள் பேசும்போது பயன்படுத்தப்படும் சக்தியானது சேமிக்கப்படும். அந்த மனதினால் செய்யப்படும் சக்திவாய்ந்த சேவையானது, உங்களை மகத்தான வெற்றி பெறச் செய்யும்.