09.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, பிரஜாபிதா பிரம்மா கொள்ளுப்பாட்டனார் ஆவார். அதாவது, அவரே சகல சமயங்களினதும் முதற் தந்தை ஆவார். நீங்கள் மாத்திரமே அவரின் தொழிலை அறிந்திருக்கின்றீர்கள்.

கேள்வி:
உங்கள் செயல்களை மேன்மையானதாக ஆக்குவதற்கான வழி என்ன?

பதில்:
இப்பிறவியில் நீங்கள் செய்த எந்தச் செயல்களையும் தந்தையிடம் இருந்து மறைக்காதீர்கள். ஒவ்வொரு செயலையும் ஸ்ரீமத்திற்கு ஏற்ப செய்யும் போது, ஒவ்வொரு செயலும் மேன்மையானதாகும். அனைத்தும் செயல்களிலேயே தங்கியுள்ளது. ஒருவர் ஒரு பாவச் செயலை செய்த பின்னர் அதனை மறைப்பாராயின், நூறு மடங்கு தண்டனை பெறுவதுடன், அப்பாவமும் தொடர்ந்தும் அதிகரிக்கும். தந்தையுடனான யோகமும் துண்டிக்கப்படுகின்றது. இவ்வாறாக தமது பாவங்களை மறைப்பவர்கள், தமக்குள் இருக்கின்ற சகல உண்மையையும் முற்றாக அழிக்கின்றார்கள். ஆகையாலேயே நீங்கள் தந்தையுடன் நேர்மையாக இருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, இப் பழைய உலகில் நீங்கள் இன்னமும் சொற்ப நாட்களுக்கான பயணிகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகிலுள்ள மக்கள் தாம் இன்னமும் 40,000 ஆண்டுகள் இந்த உலகில் தொடர்ந்தும் வாழ்வோம் என நினைக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்விடயங்களை மறந்து விடாதீர்கள். இங்கே அமர்ந்திருக்கும் போது, குழந்தைகளாகிய நீங்கள், உங்களுக்குள் சந்தோஷ குமிழ்கள் பொங்கி எழுவதை உணர வேண்டும். உங்கள் கண்களால் நீங்கள் பார்ப்பவை அழியப் போகின்றன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதும் நீங்கள் 84 பிறவிகளை முழுமையாக எடுத்திருக்கின்றீர்கள் என்பதும் உங்கள் புத்திகளில் உள்ளது. தந்தை இப்பொழுது உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார். பழைய உலகம் முடிவிற்கு வரும் போது, தந்தை உலகைப் புதுப்பிப்பதற்காக வருகின்றார். புதிய உலகம் பழையது ஆகுகின்றது, அதன் பின்னர் பழைய உலகம் புதியதாக ஆகின்றது. இந்த சக்கரத்தைப் பற்றிய ஞானம் உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் இச்சக்கரத்தை சுற்றி பல தடவைகள் வந்திருக்கின்றீர்கள். இச்சக்கரம் இப்பொழுது இறுதியை அடைகின்றது. அதன் பின்னர், புதிய உலகில் வெகுசில தேவர்களாகிய நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். அங்கே சாதாரண மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது சாதாரண மனிதரில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். உங்களுக்கு இப்பொழுது இந்த உறுதியான நம்பிக்கை உள்ளது. அனைத்தும் செயல்களில் தங்கியுள்ளது. மனிதர்கள் பிழையான செயல்களைச் செய்யும் போது, அவர்களின் மனசாட்சி நிச்சயமாக அவர்களை உறுத்தும். ஆகையாலேயே தந்தை வினவுகின்றார்: நீங்கள் இப்பிறவியில் எந்த செயல்களையும் செய்யவில்லை, அப்படித்தானே? இவ் உலகம் இராவணனின் தீய இராச்சியமாகும். நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். உலகிலுள்ள எவருக்கும் இராவணன் யாரென்பது தெரியாது. பாபுஜி (காந்திஜி) இராம இராச்சியத்தை ஏற்படுத்த விரும்புவதாக கூறுவதுண்டு, ஆனால் அதன் அர்த்தம் என்னவென்பதை எவருமே புரிந்து கொள்ளவில்லை. எல்லையற்ற தந்தை இராம இராச்சியம் எவ்வாறிருக்கும் என இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது தெளிவற்ற பார்வையைக் கொண்டவர்களின் உலகமாகும். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் ஆஸ்தியை கொடுக்கின்றார். நீங்கள் இனியும் பக்தி செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது தந்தையின் கையை பிடித்திருக்கின்றீர்கள். தந்தையின் ஆதரவு இல்லாது, நீங்கள் நச்சு நதியில் தத்தளித்தீர்கள். அரைக்கல்பத்திற்கு, பக்தி உள்ளது. இந்த ஞானம் கிடைத்த பின்னர், நீங்கள் புதிய உலகமான சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். பாபாவை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். அதன் பின்னர், நீங்கள் தூய இராச்சியத்திற்குச் செல்வீர்கள். அதிமேன்மையான சங்கமயுகமான இப்பொழுதே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இதுவே, நீங்கள் முட்களில் இருந்து மலர்கள் ஆகுகின்ற, அழுக்கானவரில் இருந்து அழகானவர்கள் ஆகுகின்ற, அதிமேன்மையான சங்கமயுகமாகும். உங்களை அவ்வாறு ஆக்குபவர் யார்? தந்தையே ஆவார். தந்தையே ஆத்மாக்களாகிய எங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவார் என்பதை நாங்கள் அறிவோம். லௌகீகத் தந்தையை நாங்கள் எல்லையற்ற தந்தை என அழைக்க முடியாது. ஆத்மாக்களைப் பொறுத்த வரையில், பரலோகத் தந்தையே அனைவரதும் தந்தை ஆவார். அதன் பின்னர் பிரம்மாவின் தொழிலும் தேவைப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது அனைவரின் தொழிலும் தெரியும். விஷ்ணுவின் தொழிலும் உங்களுக்குத் தெரியும். அவருக்கு அதிகளவு அலங்காரம் செய்யப்படுகின்றது. அவர் சுவர்க்க அதிபதி ஆவார். இவர் சங்கமயுகத்திற்கு உரியவர் எனக் கூறப்படுகின்றது. அசரீரியான உலகம் உள்ளது, சூட்சும உலகம், சரீர உலகம். அவை சங்கமயுகத்தில் மாத்திரமே உள்ளன. இது பழைய உலகினதும் புதிய உலகினதும் சங்கமம் ஆகும் என தந்தை விளங்கப்படுத்துகிறார். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! புதிய உலகம் தூய்மையான உலகமாகும், பழைய உலகம் தூய்மையற்ற உலகமாகும். எல்லையற்ற தந்தைக்கும் நடிப்பதற்கு ஒரு பாகம் உள்ளது. அவரே படைப்பவரும் இயக்குநரும் ஆவார். அனைவரும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதால் நிச்சயமாக அவருக்கும் ஒரு செயற்பாடு இருக்க வேண்டும், அப்படித்தானே? அவர் ஒரு மனிதர் என அழைக்கப்படுவதில்லை. அவருக்கு ஒரு சரீரம் இல்லை. ஏனைய அனைவரும் தேவர்கள் அல்லது மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சிவபாபாவை தேவர் என்றோ மனிதர் என்றோ அழைக்க முடியாது, ஏனெனில் அவருக்கென சரீரம் இல்லை. அவர் இந்தச் சரீரத்தை தற்காலிகமாக கடனாக பெற்றிருக்கின்றார். அவர் தானே கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஒரு சரீரம் இல்லாமல் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு நான் எவ்வாறு இராஜயோகம் கற்பிப்பேன்? நான் கல்லிலும் கூழாங்கற்களிலும் இருப்பதாக மனிதர்கள் கூறுகின்றார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் நான் எவ்வாறு வருகின்றேன் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றீர்கள். எந்த மனிதராலும் இதனைக் கற்பிக்க முடியாது. தேவர்கள் எவ்வாறு சத்திய யுக இராச்சியத்தை பெற்றார்கள்? அவர்கள் நிச்சயமாக சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றிருக்க வேண்டும். எனவே, இதனைக் கடைவதால், குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நாங்கள் இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தை நிறைவு செய்துள்ளோம். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். தந்தை தானே கூறுகின்றார்: இதுவே பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். சத்தியயுகத்தின் இளவரசனான ஸ்ரீகிருஷ்ணர், 84 பிறவிச் சக்கரத்தை சுற்றி வருகின்றார். நீங்கள் சிவனின் 84 பிறவிகள் எனக் காட்டுவதில்லை. உங்கள் மத்தியில் கூட, உங்கள் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகவே நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். மாயை மிகப் பலசாலி ஆவாள். அவள் எவரையும் விட்டு வைப்பதில்லை. தந்தைக்கு இது மிக நன்றாகத் தெரியும். தந்தை அந்தர்யாமி (அனைவருக்குள்ளும் என்ன உள்ளது என்பதை அறிந்தவர்) என நினைக்காதீர்கள். இல்லை! அவர் அனைவரையும் அவர்களின் நடத்தையின் மூலம் அறிந்து கொள்கின்றார். மாயை அவர்களை முற்றாக விழுங்கிவிடும் போது, அவர் செய்தியைப் பெறுகின்றார். அத்தகைய பல விடயங்களை குழந்தைகளாகிய நீங்கள் அறியமாட்டீர்கள். தந்தை அனைத்தையும் அறிவார் என்பதால் பாபா அந்தர்யாமி என மக்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அந்தர்யாமி அல்ல. அனைவருமே அவரவரின் நடத்தைகளினால் அறிந்து கொள்ளப்படுகிறார்கள். சிலரின் நடத்தை மிகத் தீயதாக உள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார்: மாயையை இட்டு எச்சரிக்கையாக இருங்கள்! மாயை உங்களை ஏதோ ஒரு வகையில் முற்றாக விழுங்கக் கூடியவள். இருப்பினும், தந்தை அவர்களுக்கு விளங்கப்படுத்திய போதும், அவர்களின் புத்தியில் அது நிற்பதில்லை. ஆகையாலேயே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காமமே கொடிய எதிரியாகும். நீங்கள் விகாரத்திற்குள் விழுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அத்தகைய குழந்தைகள் உள்ளார்கள். ஆகையால், தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒரு தவறைச் செய்திருந்தால், அதனைத் தந்தையிடம் நேர்மையாகக் கூறுங்கள். அதனை மறைக்காதீர்கள். இல்லாவிடின், நூறு மடங்கு பாவம் சேமிக்கப்படுவதுடன், உங்கள் மனசாட்;சி தொடர்ந்தும் உறுத்துவதால் நீங்கள் தலை கீழாக விழுகிறீர்கள். நீங்கள் உண்மையான தந்தையுடன் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். இல்லாவிடின், பேரிழப்பு இருக்கும். இந்த நேரத்தில் மாயை தீவிரமாக உள்ளாள். இது இராவணனின் உலகம். நாங்கள் ஏன் இந்தப் பழைய உலகை நினைவு செய்ய வேண்டும்? நாங்கள் இப்பொழுது போகவுள்ள புதிய உலகையே நாங்கள் நினைவுசெய்ய வேண்டும். தந்தை ஒருவர் புதிய வீடொன்றைக் கட்டும் போது, அவரது குழந்தைகள் சந்தோஷம் அடைகின்றார்கள். ஏனெனில், புதியதொரு வீடு தமக்காகக் கட்டப்படுகின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். இங்கு, இது ஓர் எல்லையற்ற விடயம். புதிய உலகமான சுவர்க்கம் எங்களுக்காக கட்டப்படுகின்றது. நாங்கள் வாழ்வதற்காக நிச்சயமாக சுவர்க்கத்தில் வீடுகள் இருக்கும். நாங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல உள்ளோம். தந்தையை நீங்கள் எந்தளவிற்கு நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அழகான மலர்கள் ஆகுகின்றீர்கள். நாங்கள் விகாரங்களின் ஆதிக்கத்தினால் முட்கள் ஆகினோம். இங்கே மாயை அரைவாசிக் குழந்தைகளை முற்றாகத் தின்று விடுகின்றாள் என்பதைத் தந்தை அறிவார். இப்பொழுது வராமல் இருக்கின்ற குழந்தைகள் மாயையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் தந்தையிடம் கூட வருவதில்லை. மாயை இவ்வாறாக பலரை விழுங்குகின்றாள். பலரும் இங்கிருந்து சென்று விடுகின்றார்கள், அவர்கள் கூறுகின்றார்கள்: ‘இது மிக நல்லது, இது மிக நல்லது. நான் இதனைச் செய்வேன், அதனைச் செய்வேன். நான் எனது வாழ்வையே யக்ஞத்திற்காக கொடுப்பேன்’. எவ்வாறாயினும், அவர்கள் இன்று இங்கில்லை. உங்கள் யுத்தம் மாயைக்கு எதிரானது. மாயைக்கு எதிராக எவ்வாறு யுத்தம் இடம்பெற முடியும் என எவருக்கும் தெரியாது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரதும் மூன்றாம் ஞானக் கண்ணை திறந்திருக்கின்றார். அதனைக் கொண்டே நீங்கள் இருளில் இருந்து ஒளிக்குள் வந்திருக்கிறீர்கள். ஆத்மாக்களுக்கு மாத்திரமே இந்த ஞானக்கண் கொடுக்கப்படுகின்றது. ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள்! பக்தி மார்க்கத்தில் நீங்கள் நினைவு செய்தீர்கள். நீங்கள் கூறுவதுண்டு: நீங்கள் வரும் போது, நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். உங்களை நீங்கள் எவ்வாறு அர்ப்பணிப்பீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அதனை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு ஆத்மாக்களோ, தந்தையும் ஓர் ஆத்மாவே. தந்தையின் பிறப்பு அலௌகீகமானது (சூட்சுமமானது). அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்களே கூறுகிறீர்கள்: ஒவ்வொரு சக்கரத்திலும் இவரே எங்கள் தந்தை ஆவார், இவர் அதே தந்தையே. நாங்கள் கூறுகின்றோம்: பாபா, பாபா! தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, குழந்தைகளே! அவர் ஓர் ஆசிரியராக எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். வேறு எவராலும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். ஆகையால், நீங்கள் அத்தகைய தந்தைக்கு உரியவராகி, அத்தகைய ஆசிரியரிடம் இருந்து கற்பித்தல்களைப் பெறுங்கள். உங்களுக்கு உள்ளே சந்தோஷம் பொங்கி எழ வேண்டும். ஒருவர் அழுக்காகி விட்டால், அந்தளவிற்கு சந்தோஷம் இருக்க முடியாது. சிலரைப் பொறுத்தவரையில், நீங்கள் பெரும்பாடுபட்டாலும், அவர்கள் உங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை போன்றே உள்ளது. இங்கே, மனிதர்களுக்கு பல குடும்பப் பெயர்கள் உள்ளன! உங்கள் குடும்பப் பெயர் எவ்வளவு சிறப்பாக உள்ளதெனப் பாருங்கள்! இவர் அனைவரிலும் அதி மகத்துவமானவர்: கொள்ளுப் பாட்டனாரான பிரம்மா. அவரை எவருக்கும் தெரியாது. சிவபாபா சர்வவியாபி என்று கூறுவது மட்டுமல்ல, எவரும் பிரம்மாவை பற்றி எதுவும் புரிந்து கொண்டிருக்கவில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் படங்களும் உள்ளன. பிரம்மா சூட்சும உலகில் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரின் வாழ்க்கைச் சரிதத்தை அவர்கள் சற்றேனும் அறியாதுள்ளார்கள்! அவர்கள் பிரம்மாவை சூட்சும உலகில் காட்டுகின்றார்கள். எனவே, பிரஜைகளின் தந்தையான பிரம்மா எங்கிருந்து வருகின்றார்? அங்கிருந்து அவர் குழந்தைகளைத் தத்தெடுக்கின்றாரா? எவரும் எதனையும் புரிந்து கொள்வதில்லை. மக்கள் பிரஜாபிதா பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவரின் வாழ்க்கைச் சரிதத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள். இது பாபாவின் இரதம் என, அதாவது இவரின் பல பிறவிகளின் பின்னர் அவரின் சரீரத்தை ஆதாரமாக பாபா எடுத்திருப்பதாக விளங்கப்படுத்தி உள்ளார். இந்த அதிமேன்மையான சங்கமயுகம், இப்பொழுது கீதையின் அத்தியாயம் ஆகும். தூய்மையே பிரதான விடயம். தூய்மை அற்றவரில் இருந்து எவ்வாறு தூய்மை ஆகுவது என்பதை உலகில் உள்ள எவருமே புரிந்து கொள்வதில்லை. சாதுக்களும் புனிதர்களும் என்றுமே கூறுவதில்லை: ‘உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் மறந்திடுங்கள், ஒரேயொரு தந்தையை நினைவு செய்தால் மாயையின் செல்வாக்கினால், நீங்கள் செய்த சகல பாவச் செயல்களும் முற்றாக எரிந்து விடும்.’ எந்த ஒரு குருவினாலும் இவ்வாறு கூற முடியாது. இவர் எவ்வாறு பிரம்மா ஆகுகின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவரின் குழந்தைப் பருவத்தில், அவர் ஒரு கிராமத்துச் சிறுவனாக இருந்தார். அவர் முதற் பிறவியில் இருந்து இறுதிப்பிறவி வரை 84 பிறவிகளை எடுத்துள்ளார். ஆகையால், புதிய உலகம் பழையதாக ஆகின்றது. குழந்தைகளாகிய உங்கள் புத்திகளின் பூட்டு இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. உங்களால் இதனைப் புரிந்து கொண்டு, கிரகிக்க முடிகின்றது. நீங்கள் இப்பொழுது விவேகமானவர் ஆகியுள்ளீர்கள். முன்னர், நீங்கள் விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் விவேகமானவர்கள் ஆவார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விவேகம் அற்றவர்கள். உங்கள் முன்னால் உள்ள படத்தைப் பாருங்கள். அவர்கள் வைகுந்தத்தின் அதிபதிகள், அப்படித்தானே? ஸ்ரீகிருஷ்ணர் சுவர்க்க அதிபதி ஆவார். அவர் பின்னர் கிராமத்துச் சிறுவன் ஆகுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இதனைக் கிரகித்து, நிச்சயமாக தூய்மை ஆக வேண்டும். தூய்மையே பிரதானமானது. சிலர் எழுதவும் செய்கின்றார்கள்: பாபா, மாயை என்னை விழச் செய்து விட்டாள். எனது கண்கள் குற்றமானதாக ஆகிவிட்டன! தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அவ்வளவே! நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் வாழ்வின் ஆதாரத்திற்காக நீங்கள் இன்னமும் சொற்ப காலத்திற்கே செயற்பட வேண்டும், அதன் பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்வோம். இப் பழைய உலகின் விநாசத்திற்கான யுத்தம் இடம்பெறும். அது எவ்வாறு இடம்பெறும் எனப் பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொள்கின்றது. ஆகையால், உங்களுக்கு நிச்சயமாக புதிய உலகம் தேவை. ஆகையாலேயே விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் எங்கள் புதிய உலகை நாங்கள் ஸ்தாபிக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் சேவையில் பிரசன்னமாகி உள்ளேன். தூய்மை அற்றவர்களான உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்காக வருமாறு என்னை நீங்கள் அழைத்தீர்கள். நீங்கள் என்னை வருமாறு வேண்டியதால், நான் வந்திருக்கின்றேன். நான் உங்களுக்கு மிகவும் இலகுவான வழியை காட்டுகின்றேன்: மன்மனாபவ! இது கடவுளால் பேசப்பட்டது, ஆனால் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தந்தைக்கு அடுத்தவர். சிவபாபாவே பரந்தாமத்தின் அதிபதி ஆவார், ஆனால் இவர் உலக அதிபதி ஆவார். சூட்சும உலகில் எதுவும் இடம்பெறுவதில்லை. அனைவரிலும் முதலாமவர் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். அனைவரும் அவர் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் பின்னரே வருகின்றார்கள். அனைவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றில்லை. ஆகையால், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்கள் எலும்புகள்கூட ஆழமான சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். போலியான சந்தோஷத்தினால் பயனில்லை. வெளியிலுள்ள வெவ்வேறான வகையான குழந்தைகள் பாபாவிடம் வருகின்றார்கள். அவர்கள் என்றுமே தூய்மையாக இருந்ததில்லை. பாபா அவர்களில் ஒருவரிடம் வினவினார்: நீங்கள் விகாரத்தில் ஈடுபடுகிறீர்கள், இருப்பினும் ஏன் இங்கே வருகின்றீர்கள்? அவர் பதிலளித்தார்: நான் என்ன செய்வது? என்னால் வராது இருக்க முடியவில்லை. நான் ஒவ்வொரு நாளும் வருகின்றேன். ஏனெனில், ஏதோ ஒருநாள், அம்பு இலக்கைத் தாக்கக்கூடும். உங்களைத் தவிர, வேறு யார் எனக்கு சற்கதி அருள முடியும்? அவர் வந்து இங்கே அமர்ந்திருந்து விட்டுச் செல்வதுண்டு. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் ஆவாள். தன்னை பாபா தூய்மை அற்றவரில் இருந்து தூய்மை ஆக்குகின்றார் என்றும் அழகான மலராக ஆக்குகின்றார் என்றும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார், அவரால் என்ன செய்ய முடியும்? குறைந்தபட்சம் அவர் உண்மையையாவது கூறுகின்றார். அவர் நிச்சயமாக இப்பொழுது சீர்திருந்தி இருப்பார். இங்கு மட்டுமே அவரால் சீர்திருந்த முடியும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஒருவரின் முகச்சாயலைப் போன்று இன்னொருவருடையது இருக்க முடியாது. ஒரு சக்கரத்தின் பின்னர், மீண்டும் உங்கள் பாகத்தை அதே முகச் சாயலுடன் நீங்கள் நடிப்பீர்கள். ஆத்மாக்கள் அனைவரது பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் அனைவரும் தொடர்ந்தும் தமது பாகங்களை மிகச்சரியாக நடிக்கின்றார்கள். சிறிதளவேனும் வேறுபாடு இருக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் அழியாதவர்கள், அவர்களுக்குள் அழியாததொரு பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும். இது உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட்ட போதும், நீங்கள் மறக்கிறீர்கள். உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது. இதுவும் நாடகத்தில் இடம்பெற வேண்டும். இந்த இராச்சியம் ஒவ்வொரு சக்கரத்திலும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். வெகுசிலரே சத்தியயுகத்திற்குள் பிரவேசிக்கின்றார்கள், அவர்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். இங்கும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்கு மட்டுமே உங்கள் சொந்தப் பாகத்தை அறிய முடியும். வேறு எவராலும் அதனை அறிய முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உண்மையான தந்தையுடன் எப்பொழுதும் நேர்மையாக இருங்கள். உங்களை முற்றாக தந்தையிடம் அர்ப்பணியுங்கள்.

2. இந்த ஞானத்தைக் கிரகித்து விவேகமானவர் ஆகுங்கள். உங்களுக்குள் ஆழமான சந்தோஷத்தைப் பேணுங்கள். ஸ்ரீமத்திற்கு எதிராக எதனையேனும் செய்து, உங்கள் சந்தோஷத்தை இழக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நாடகத்தின் கருத்தை அனுபவம் செய்து, சதா பற்றற்ற பார்வையாளர் ஸ்திதியில் இருப்பதன் மூலம் ஆட்ட அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

நாடகத்தின் கருத்தை அனுபவம் செய்பவர்கள், சதா பற்றற்ற பார்வையாளர் ஸ்திதியில் ஸ்திரமாகவும் சதா ஆட்ட அசைக்க முடியாதவர்களாகவும் இருப்பதை அனுபவம் செய்கிறார்கள். நாடகக் கருத்தின் அனுபவசாலி ஆத்மாக்கள், தீமையான ஒன்றிலும் தீயது எதையும் பார்க்க மாட்டார்கள், ஆனால் நன்மையை மாத்திரமே பார்ப்பார்கள். அதாவது அதில் சுயத்திற்கான நன்மை என்னவென்றே பார்ப்பார்கள். இழப்பிற்கான கணக்கு அனைத்தும் இப்பொழுது முடிவடைந்து விட்டது. நீங்கள் பரோபகார தந்தையின் குழந்தைகள். இது உபகாரமிக்க யுகமாகும். இந்த ஞானத்தின் அதிகாரத்தையும் உங்கள் அனுபவத்தையும் பயன்படுத்தி ஆட்ட அசைக்க முடியாதவர் ஆகுங்கள்.

சுலோகம்:
தமது நேரத்தை மிகப் பெறுமதியானதாகக் கருதுவதன் மூலம் தகுதிவாய்ந்த முறையில் அதனைப் பயன்படுத்துபவர்கள் என்றுமே ஏமாற்றப்படுவதில்லை.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

இந்த நேரத்தில் மாத்திரமே ஞானப் பொக்கிஷங்களைக் கொண்டு நீங்கள் முக்தி, ஜீவன்முக்தி ஸ்திதிகளை அனுபவம் செய்ய வேண்டும். துன்பத்திற்கான, அமைதியின்மைக்கான, விகாரங்களுக்கான காரணங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுங்கள். விகாரங்கள் ஏதேனும் வருமாயின், வெற்றியீட்டுங்கள், தோல்வி அடையாதீர்கள். வீணான எண்ணங்கள், எதிர்மறையான எண்ணங்கள், எதிர்மறையான செயல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருப்பதே ஜீவன்முக்தி ஸ்திதியில் இருப்பதாகும்.