09.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையுடன் திரும்பிப் பறந்து செல்வதற்கு நீங்கள் முழுமையாகத் தூய்மையாகி, உங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். “இச்சரீரம் கூட என்னுடையதல்ல”. முழுமையாகவே சரீரமற்றவர்கள் ஆகுங்கள்.
கேள்வி:
உயர் இலக்கை அடைவதற்கு நீங்கள் எந்த அச்சத்தை அகற்ற வேண்டும்?பதில்:
சில குழந்தைகள் மாயையின் புயல்களையிட்டுப் பெருமளவு அச்சப்படுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, புயல்கள் என்னைப் பெருமளவுக்குத் தொந்தரவு செய்கின்றன. அவற்றை நிறுத்துங்கள்! பாபா கூறுகிறார்: குழந்தைகளே, இது ஒரு குத்துச்சண்டை ஆகும். அந்தக் குத்துச்சண்டையில் ஒருசாராரே எல்லா வேளையிலும் தாக்குகிறார்கள் என்பதல்ல. அவர்களில் ஒருவர் ஐந்து தடவைகள் குத்தினால், மற்றவர் நிச்சயமாகப் பத்துத் தடவைகள் குத்துவார். இதனாலேயே நீங்கள் அச்சம் அடையக்கூடாது. ஒரு மகாவீரராக (தைரியமான போர்வீரர்) இருந்து வெற்றியாளர் ஆகுங்கள், அப்பொழுது மாத்திரமே உங்களால் உங்களுடைய உயர்ந்த இலக்கை அடைய முடியும்.பாடல்:
ஒரு சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டு நான் உங்கள் வாசலுக்கு வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இந்தப் பாடலில் நிச்சயமாக ஏதோ உட்பொருள் உள்ளது, ஏனெனில் தந்தையே இந்த ரெக்கோடைக் கொண்டு வந்துள்ளார், அவர் அதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவார். இது மரணித்து வாழ்ந்து, தந்தைக்கு உரியவராக இருத்தல் என்று அழைக்கப்படுகிறது. தந்தைக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் ஆசிரியருக்கு உரியவர் ஆகுகிறீர்கள். ஆசிரியருக்கு உரியவராகிய பின்னர், பெரும்பாலானோர் ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளபொழுது, அவர்கள் அக்குழந்தையைக் கிறிஸ்தவர் ஆக்குகிறார்கள். அவர்கள் குழந்தையை, ஒரு குருவின் மடியில் வைக்கிறார்கள், அவர் கிறிஸ்தவப் பாதிரியாராகவோ அல்லது யாராகவோ இருக்கலாம். பாதிரியார்கள் கிறிஸ்து அல்ல. அவர்கள் கூறுவார்கள்: நீங்கள் கிறிஸ்துவின் பெயரில் ஒரு கிறிஸ்துவர் ஆகுகிறீர்கள். இப்பொழுது, குழந்தைகளான நீங்கள் முதலில் தந்தைக்கு உரியவர்கள், அதாவது, நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுகிறீர்கள். எங்களிடம் உள்ளவை அனைத்தும், எங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வம் அனைத்தும் பாபாவுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. நாங்கள் மரணித்து வாழ்கிறோம், அதாவது, ஆத்மாக்களாகிய நாங்கள் அவருக்கு உரியவர்கள். இது உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். எனக்கு உரியவை அனைத்தும், எனது சரீரம், எனது செல்வம், எனது சொத்து, எனது உறவுமுறைகள் போன்றவை அனைத்தும் மறக்கப்பட வேண்டும். ஒரு நபர் மரணிக்கும் பொழுது, அவர் அனைத்தையும் மறக்கிறார். இலக்கு மிகவும் உயர்வானது! நாங்கள் சரீரமற்ற ஆத்மாக்கள். இதனை உறுதியாக்குங்கள். நீங்கள் உங்கள் சரீரங்களை நீக்கி விட்டு, மரணிக்கிறீPர்கள் என்பதல்ல் இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் இன்னமும் முழுமையாகத் தூய்மை ஆகவில்லை. நீங்கள் தந்தைக்கு உரியவர்கள், ஆனால் பாபா கூறுகிறார்: ஆத்மாக்களான நீங்கள் தூய்மை அற்றவர்கள். ஆத்மாக்களின் இறக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது ஆத்மாக்களால் பறக்க இயலாதுள்ளது. தமோபிரதானாக இருக்கின்ற காரணத்தினால் ஒரு மனிதராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. மாயை முழுமையாகவே உங்கள் இறக்கைகளைத் துண்டித்து விட்டாள். ஆத்மாவே அனைத்திலும் வேகமாகச் செல்லக் கூடியவர் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். ஆத்மாவை விடவும் வேகமானது எதுவும் இல்லை; ஆத்மாவுடன் எதனையும் ஒப்பிட முடியாது. இறுதியில், ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக் கூட்டம் போன்று வீடு திரும்புவார்கள். அவர்கள் எங்கு செல்வார்கள்? அவர்கள் சூரிய, சந்திரனுக்கும் அப்பால், மிக மிகத் தொலைவுக்குச் செல்வார்கள். அவர்கள் அங்கிருந்து திரும்ப மாட்டார்கள். ரொக்கெட்டுக்கள் அங்கு மேலே சென்று, பின்னர் திரும்புகின்றன் அவற்றால் சூரியனைக் கூட அடைய முடியாது. நீங்கள் அதற்கும் அப்பால் தொலைவுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் சூட்சும உலகிற்கும் மேலே உள்ள, அசரீரி உலகிற்குச் செல்ல வேண்டும். ஆத்மாக்களான நீங்கள் இறக்கைகளைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் தீர்த்து, தூய்மை ஆகுகிறார்கள். கணக்கைத் தீர்க்கும் நேரத்தைப் பற்றிய பெருமளவு புகழ் எழுதப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது, ஆத்மாக்கள் அனைவரும் அசுத்தமானவர்களாகவும், பாவாத்மாக்களாகவும் உள்ளார்கள். தங்களைக் குருமார்களாகக் கருதி 'நானே பிரம்ம தத்துவம்", “நான் பிரம்ம தத்துவத்தை அடைந்து விட்டேன்" எனக் கூறுகின்ற, பல மகத்துவமான குருமார்கள், சாதுக்கள், சந்நியாசிகள் உள்ளார்கள். அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் எங்கு பிரம்ம தத்துவத்தைச் சென்றடைந்திருப்பார்கள்? ஆத்மாக்கள் என்ற ரீதியில், நீங்கள் பிரம்ம தத்துவத்தில் வசிக்கிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எவ்வாறாயினும், இந்நேரத்தில், எவராலும் அங்கு திரும்பிச் செல்ல முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் இங்கேயே மறுபிறவி எடுக்கிறார்கள். இந்நாடகம் எல்லையற்றது. தங்கள் பாகங்களை நடிப்பதற்கு நடிகர்கள் அனைவரும் நிச்சயமாக அங்கிருந்து கீழிறங்கி வர வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் மேடைக்கு வந்து விட்டார்கள். விநாசவேளை ஏற்படும்பொழுது, அனைவரும் இங்கு கீழே வந்திருப்பார்கள். அங்கிருந்து அவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு நடிகர் ஒரு பாகத்தை நடிக்காமல் வீட்டில் இருக்க மாட்டார். அவர் நிச்சயமாக நாடகத்தினுள் வர வேண்டும். அனைவரும் அங்கிருந்து கீழே வந்துவிடும் பொழுது, தந்தை வந்து அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். தந்தை கூறுகிறார்: நான் இங்கு கீழே இருந்தாலும், ஆத்மாக்கள் தொடர்ந்தும் கீழிறங்குகிறார்கள். எண்ணிக்கை வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் வளர்கின்றது. பின்னர் நீங்கள் வரிசைக்கிரமமாகத் திரும்பிச் செல்வீர்கள். அனைத்தும் உங்கள் ஸ்திதியில் தங்கியுள்ளது. இதனாலேயே நீங்கள் மரணித்து வாழ வேண்டும். நீங்கள் ஓர் ஆத்மா என்னும் நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கே முயற்சி தேவைப்படுகிறது. குழந்தைகள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதனால், இதனை மறக்கிறார்கள். நீங்கள் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பொழுது மாத்திரமே, உங்களால் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருக்க முடியும். பாபா, இவை அனைத்தும் உங்களுக்கு உரியவை. நானும் உங்களுக்கு உரியவன். இச்சரீரம் எனக்கு உரியதல்ல, நான் இப்பொழுது அதனைத் துறக்க வேண்டும் என்பதைப் போன்றுள்ளது. பாபா, நான் உங்களுக்கு உரியவன். பாபா கூறுகிறார்: எனக்கு உரியவராகி, ஏனைய அனைவருடனுமான உங்கள் பற்றைத் துண்டித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பதல்ல. நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றையும் செய்து, உங்கள் வீட்டையும் பராமரிக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடனான தங்கள் கடமையையும் தீர்த்துக் கொண்டு, நிச்சயமாக அவர்களுக்குச் சேவை செய்வதனால், அதன் பிரதிபலனைத் திரும்பக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பராமரிப்பின் காரணமாக, அவர்களுக்குக் கடன்பட்டுள்ளவர்கள் ஆகுகிறார்கள். இப்பொழுது தந்தை உங்களைப் பராமரிக்கிறார். ஆரம்பத்தில் வந்தவர்கள் அனைவரும் உடனடியாகவே அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். அவர்கள் தங்களுக்கென எதனையும் வைத்திருக்கவில்லை. அவர்கள் அனைத்தையும் அர்ப்பணித்தார்கள்; குழந்தைகளாகிய நீங்கள் அச்செல்வத்தின் மூலம் பாரதத்தைத் தூய்மை ஆக்குகிறீர்கள். பாரதம் மாத்திரமே முழுமையாகத் தூய்மையாக இருந்தது. பாரத மக்கள் இருந்ததைப் போன்று எவருமே சந்தோஷமாகவும், தூய்மையாகவும் இருக்க முடியாது. தூய்மையாக்குபவராகிய தந்தை, முழு உலகத்தையும் தூய்மை அற்றதிலிருந்து தூய்மையாக்குகின்ற பாரதமே, மகத்தான யாத்திரைத் தலமாக இருக்கிறது. இந்த பஞ்சதத்துவங்கள் கூட இப்பொழுது உங்கள் எதிரிகளாக இருக்கின்றன. பூமியதிர்ச்சிகள் ஏற்படும். புயல்கள் ஏற்படும், ஏனெனில் அனைவரும் தமோபிரதானாக உள்ளார்கள். பெருமளவு துன்பத்தை விளைவிக்கின்ற, இயற்கை அனர்த்தங்களும் ஏற்படும். இந்நேரத்தில், அனைத்தும் துன்பத்தை விளைவிக்கின்றன. சத்தியயுகத்தில், அனைத்தும் சந்தோஷத்தைத் தருகின்றன. அங்கு புயல்களோ அல்லது சூடான காலநிலை போன்றனவோ இருக்க மாட்டாது. இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்ற, உங்களில் மிகச்சிலரே இருக்கிறீர்கள். இன்று, அவர்கள் இங்கு இருப்பார்கள், நாளை அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை எனக் கூறப்படும். அவர்கள் இங்கு வந்தாலும், அவர்கள் அனைவருமே சதாகாலமும் உறுதியாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் இங்கிருந்து திரும்பச் சென்றவுடன், பத்து நாட்களுக்குப் பின்னர், அவர்களின் செய்தியை யாரோ ஒருவர் எழுதுவார்: பாபா, மாயை இன்னாரை உண்டு விட்டாள். இது தொடர்ந்தும் நடைபெறுகின்றது. சிறிய மரக்கன்றுகள் பெரியதாகும் பொழுது, அவை பழத்தைத் தருகின்றன. அதன்பின்னர் ஏனையவற்றையும் தங்களைப் போன்று ஆக்குவதற்கான வலிமையை அவை கொண்டிருக்கின்றன் அவை பழத்தைக் கொடுக்கின்றன. தந்தைக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் பிரஜைகளையும், வாரிசுகளையும் உருவாக்க வேண்டும். சிலர் வழிகாட்டிகளாகி, தாங்கள் தங்களுடைய இலக்கை அடைந்து விட்டார்கள் என எண்ணிக் கொண்டு பாபாவிடம் வருகிறார்கள், ஆனால் இல்லை; இலக்கு மிகவும் உயர்வானது. அவர்கள் கூறுகிறார்கள்: மாயையின் புயல்கள் பல ஏற்படுகின்றன. நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள், ஆகவே புயல்கள் வரும். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் உங்களுக்கு உரியவர்களாக இருந்தோம். நாங்கள் உங்களிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைப் பெற்றோம். அதன்பின்னர், மறுபிறவி எடுத்ததன் பின்னர், நாங்கள் 84 பிறவிகளினூடாகச் சென்று, இப்பொழுது மீண்டும் உங்களுக்கு உரியவர்களாக இருக்கிறோம். நான் நிச்சயமாக உங்களிடம் இருந்து என்னுடைய ஆஸ்தியைப் பெறுவேன். ஆகவே, அத்தகையதொரு தந்தை பெருமளவுக்கு நினைவு செய்யப்பட வேண்டும். நீங்கள் ஏனையோரையும் உங்களுக்குச் சமமாக ஆக்கிப் பலனைக் கொடுக்க வேண்டும். வேறு எவ்வாறு மாலை உருவாக்கப்பட்டிருக்கும்? எவ்வாறு நீங்கள் ஏனையோரைத் தந்தையின் வாரிசுகள் ஆக்குவீர்கள்? பிரஜைகள் தேவைப்படுகிறார்கள், சிம்மாசனத்தில் அமர்வதற்கு வாரிசுகளும் தேவைப்படுகிறார்கள். பலர் தந்தையிடம் வருகிறார்கள். பின்னர் அவர்கள் தந்தையை விட்டு விலகுகிறார்கள். அவர்களின் புத்தியின் யோகம் துண்டிக்கப்பட்டு, விளையாட்டு முடிவடைகிறது. சில குழந்தைகள் வந்து, பாபாவை வினவுகிறார்கள்: பாபா, நான் எவ்வாறு எனது ஸ்திதியைப் புயல்களால் தாக்கப்படாததாக ஆக்க முடியும்? பாபா தொடர்ந்தும் இதனைச் செய்வதற்கான வழிகளை உங்களுக்குக் காட்டுகிறார். தந்தையை நினைவு செய்யுங்கள்! புயல்கள் வரும். குத்துச்சண்டையில், ஒருசாரார் மாத்திரமே தொடர்ந்தும் குத்தப்படுவதை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? நிச்சயமாக அவர்கள் இருவரும் தைரியத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரை ஐந்து தடவைகள் குத்தினால், மற்றவர் பத்துத் தடவைகள் குத்துவார். இதுவும் ஒரு குத்துச்சண்டையே. நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யும் பொழுது, மாயை தொடர்ந்தும் ஓடிவிடுவாள். எவ்வாறாயினும், இது உடனடியாக நடைபெற மாட்டாது. நீங்கள் மாயையுடன் மல்யுத்தம் செய்ய வேண்டும். மாயை உங்களைத் தாக்க மாட்டாள் என எண்ண வேண்டாம். அது யாராக இருந்தாலும், இது ஒரு பெரிய குத்துச்சண்டை ஆகும். பலர் மிகவும் அச்சம் அடைகிறார்கள். மாயை முழுமையாகவே அவர்களை அவர்களுடைய மூக்கால் பற்றிப் பிடிக்கிறாள். இது ஒரு யுத்தகளம் ஆகும். புத்தியின் யோகத்தின் தொடர்பில் மாயை பெரிய தடைகளை உருவாக்குகிறாள். யோகத்துக்கே முயற்சிகள் அனைத்தும் தேவைப்படுகின்றன. பாபா ஞானம் நிறைந்த ஆத்மாக்களை நேசிக்கிறார் எனக் கூறினாலும், அவர் இந்த ஞானத்தைக் கொடுப்பவர்களை மாத்திரம் நேசிக்கிறார் என்பதல்ல, ஏனெனில் மிகச்சரியான யோகமும் இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள்! மாயையின் தடைகளையிட்டு, அச்சமடைய வேண்டாம். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். அனைவரும் இவ்வாறு ஆகுவார்களா? 16,108இன் மணிமாலை மிகவும் பெரியது. அது இறுதியிலேயே பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். திரேதா யுகத்தின் இறுதிவரை பல்வேறு இளவரசர்களும், இளவரசிகளும் இருப்பார்கள். இதன் சில அடையாளங்கள் உள்ளன. எட்டு மணிகளினதும், 108 மணிகளினதும் அடையாளங்கள் உள்ளன. இது முற்றிலும் சரியானது. திரேதாயுக இறுதியில் அங்கு 16,108 இளவரசர்களும், இளவரசிகளும் இருப்பார்கள். ஆரம்பத்தில் அத்தனை பேர் இருக்க மாட்டார்கள். முதலில், அவர்களில் சிலரே இருக்கிறார்கள், பின்னர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. அவர்கள் அனைவரும் இங்கேயே உருவாக்கப்படுகிறார்கள். உங்களுக்கு மிகச்சிறந்த சந்தர்ப்பம் உள்ளது, ஆனால் அதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. பாடலிலும் கூறப்பட்டுள்ளது: நான் மரணித்தாலும், நான் உங்களை விட்டு ஒருபொழுதும் நீங்க மாட்டேன். பாபா, இச்சரீரம், மனம், செல்வம் அனைத்தும் உங்களுக்கே உரியவை. நான் சரீரமற்றவராகி, உங்களை நினைவு செய்கிறேன். நான் எனது புத்தியின் யோகத்தை உங்களுடன் தொடர்புபடுத்துவேன். பாபா கூறுகிறார்: இவை அனைத்தும் குழந்தைகளான உங்களுக்கே ஆகும். குழந்தைகள் கூறுகிறார்கள்: என்னிடம் உள்ள அனைத்தும் உங்களுக்கே உரியது. அவர்கள் கூறுகிறார்கள்: இவை அனைத்தும் கடவுளால் கொடுக்கப்பட்டவை. இப்பொழுது பாபா கூறுகிறார்: இவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. உங்களிடம் என்ன உள்ளது? அச்சரீரங்களும் அழிக்கப்படும். நான் இப்பொழுது அதனை உங்களுக்காகப் பரிமாற்றம் செய்கிறேன். நீங்கள் இலகுவில் பரிமாற்றம் செய்கிறீர்கள். ஆகவே, பாபா கூறுகிறார்: குழந்தைகளே, சரீரமற்றவர்கள் ஆகுங்கள்! என்னை நினைவு செய்யுங்கள்! உங்கள் புத்தியை அனைத்தையும் அர்ப்பணிக்குமாறு செய்யுங்கள். அரிச்சந்திரன் என்னும் அரசரை அவருடைய உடைமைகளை நம்பிக்கையின் பேரில் வைக்குமாறு கேட்கப்பட்டதாகக் கதையொன்று உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் இச்சமயநூல்கள் போன்றவை அனைத்தினதும் சாராம்சத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். நான் உங்களைப் பிரம்மாவின் வாயின் மூலம் அரசர்களும், அரசிகளும் ஆக்கினேன், நான் அதனை இப்பொழுது மீண்டும் செய்கிறேன். மனிதர்களால் ஒருபொழுதும் மனிதர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, அவர்களுக்குக் கீதையை வாசிப்பதனால், அவர்களை அரசர்களும், அரசிகளுமாக ஆக்க முடியாது. ஆகவே கீதையைச் செவிமடுப்பதில் என்ன நன்மை உள்ளது? தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு கல்பத்திலும் நானே வந்து உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். நீங்கள் எனக்கு உரியவர்கள் ஆகும்பொழுது மாத்திரமே, ஒரு வாரிசு ஆகுவீர்கள். ஆகவே, நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக யோகத்தில் நிலைத்து இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத் தொடர்ந்தும் தூய்மை ஆகுவீர்கள். பாபா, இவை அனைத்தும் உங்களுக்கே உரியவை. நான் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் மாத்திரமே. உங்களுடைய கட்டளைகள் இன்றி, நான் எதையும் செய்ய மாட்டேன். உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் பற்றிய வழிகாட்டல்களையும் நீங்கள் பெறுகிறீர்கள். பொதுவாக, ஏழைகளே தங்கள் முழுக் கணக்கையும் கொடுக்கிறார்கள். செல்வந்தர்களால் அதனைக் கொடுக்க முடியாது; அவர்களால் தங்களை அர்ப்பணிக்க முடியாது. அரிதாக மாத்திரமே அவர்கள் வெளிப்படுகிறார்கள். ஜனகனின் பெயர் உள்ளது. அவர்களுக்குக் குழந்தைகளும், ஒன்றிணைந்த சொத்துக்களும் உள்ளன, ஆகவே அவற்றை எவ்வாறு பிரிக்க முடியும்? அவர்களால் தங்கள் தனிப்பட்ட சொத்தை அர்ப்பணிக்கும் வகையில், அவர்களால் எவ்வாறு அதைப் (தனிப்பட்ட முறையில்) பெற்றுக் கொள்ள முடியும்? தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். தாய்மார்களே அனைவரிலும் ஏழைகள். குமாரிகள் அவர்களை விடவும் ஏழைகள் ஆவார்கள். குமாரிகளுக்கு ஒருபொழுதும் ஓர் ஆஸ்தியின் போதை இருப்பதில்லை. புத்திரர்களுக்குத் தங்கள் பெற்றோர்களின் சொத்தின் போதை உள்ளது. ஆகவே, வைகுந்த ஆஸ்தியைக் கோருவதற்கு, நீங்கள் அவை அனைத்தையும் துறக்க வேண்டும். ஏழைகளுக்கே எப்பொழுதும் தானம் அளிக்கப்படுகின்றது. பாரதமே அனைத்திலும் ஏழையாக உள்ளது. அமெரிக்கா மிகவும் செல்வந்த நாடாக உள்ளது. அவர்களுக்கு ஆஸ்தி கொடுக்கப்பட்டுள்ளதா? பாரதம் அனைத்திலும் செல்வந்த நாடாக இருந்த பொழுது, அங்கு வேறு சமயங்கள் இருக்கவில்லை; அங்கு பாரத மக்களும், ஒரு பாஷையும் மாத்திரமுமே இருந்தன. கடவுள் ஒருவரே. நான் ஓர் இராச்சியத்தையும், ஒரு தர்மத்தையும், ஒரு பாஷையையும் ஸ்தாபிக்கிறேன். நான் சர்வசக்தி மிக்கதோர் அரசாங்கத்தை ஸ்தாபிக்கிறேன். ஒன்றிலிருந்து, பின்னர் இரண்டு, மூன்று என இருக்கும். இப்பொழுது பல்வேறு சமயங்கள் இருக்கின்றன. ஆகவே, இப்பொழுது நிச்சயமாக ஒரு தர்மமே இருக்க வேண்டும். அந்த ஒரு தர்மம் இருந்தது என்பது 5000 வருடங்களுக்குரிய ஒரு விடயம். சத்திய யுகத்தின் ஆயுட்காலம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கல்விமான்கள் எழுதியுள்ளார்கள். சத்திய யுகம் என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் மரணித்து விடும்பொழுது, அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் எனவும், ஒருவேளை அவர் மேலே சென்றிருக்கக்கூடும் எனவும் அவர்கள் எண்ணுகிறார்கள். தில்வாலா ஆலயத்திலும், அவர்கள் சுவர்க்கத்தை மேலே கூரையிலேயே காட்டியுள்ளனர். இதனாலேயே மக்கள் குழப்பம் அடைகிறார்கள். உண்மையில், சுவர்க்கம் மேலே இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது பாபாவிடம் செல்வீர்கள் எனவும், பின்னர் இங்கு கீழே ஆட்சிசெய்வதற்கு வருவீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும் வகையில், இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பறவையாகிய மாயை, பலவீனமானவர்களை உண்கிறாள். இதனாலேயே ஒரு புகைப்படம் எடுக்கப்படுவதுடன், ஒரு பதிவேடும் வைக்கப்படுகிறது. பாபா செய்திகள் அனைத்தையும் பெறுகிறார். “நான் பாபாவின் குழந்தை ஆகும்வகையில், இன்னார் அத்தகையதொரு ஞான அம்பை எய்தார்". குமாரிகளினால் அம்புகள் எய்யப்பட்டன என்று சமயநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ! நீங்கள் ஏன் தந்தையை மறந்தீர்கள்? இது இந்த ஞானத்தின் ஞான அம்பு என அழைக்கப்படுகிறது. நீங்கள் அவர்களுக்குத் தந்தையை நினைவூட்ட வேண்டும். வன்முறைக்கான அம்பு பற்றிய கேள்வியே கிடையாது. பாபா கூறுகிறார்: பிரம்மாவின் வாய் மூலம் நான் உங்களுக்குச் சமயநூல்கள் அனைத்தினதும் உட்கருத்தை விளங்கப்படுத்துகிறேன். இங்கு நிச்சயமாகப் பிரம்மா இருக்க வேண்டும். விஷ்ணுவின் தொப்பூள்க் கொடியிலிருந்து பிரம்மா வெளிப்படுவதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். அவர்கள் எதனையும் அறியார்கள்! தங்கள் மனதில் பிரவேசித்த அனைத்தையும் மக்கள் எழுதி உள்ளார்கள். அதிகளவு அசுத்தம் உள்ளது! மந்திரசக்தி உடைய பலர் இருக்கிறார்கள்! சத்தியம் வெளிப்படும் பொழுது, பொய்மை அதை எதிர்க்கிறது. சிவபாபா அசரீரியானவர் எனவும், இந்தப் பிரம்மா பௌதீகமானவர் எனவும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள், ஆனால், தொப்பூள் போன்றன பற்றிய கேள்வியே கிடையாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. வெறுமனே இந்த ஞானத்தைச் செவிமடுத்து, அதைக் கூறுபவராக இல்லாமல், இப்பொழுது ஒரு ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுங்கள். நினைவுக்காகவும் முயற்சி செய்யுங்கள். சரீரமற்றவர்களாகி, சரீரமற்ற தந்தையை நினைவு செய்யுங்கள்.2. தந்தைக்கு உரியவராகி, ஏனைய அனைத்தில் இருந்தும் உங்கள் பற்றைத் துண்டியுங்கள். “இச்சரீரம் கூட எனக்கு உரியதல்ல”. முழுமையாக ஆத்ம உணர்வு உடையவர்களாகி, உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் உங்களை நிலைநிறுத்தி, இலகுவாக ஒரு சதா கர்மயோகி ஆகுவீர்களாக.ஏதாவது இயந்திரத்தை நீங்கள் பொருத்தியவுடன், அது தானாகவே தொடர்ந்து செயல்படும். அதேபோல், நீங்கள் உங்களை ஒரு தடவை மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஸ்திதியில் நிலைநிறுத்தி விட்டால், பலவீனமான வார்த்தைகள் ஒருபோதும் வெளிப்பட மாட்டாது. ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் இயல்பாகவே அந்த அமைவிற்கேற்ப தொடர்ந்து வெளிப்படும். அந்த அமைவானது இலகுவாக உங்களை சதா கர்மயோகியாகவும் எந்தவொரு தூய்மையற்ற எண்ணத்தில் இருந்து விடுபட்ட ஸ்திதியில் சதா இருக்கும் ஓர் இலகு யோகியாகவும் ஆக்கும்.
சுலோகம்:
‘நான்’ என்பதற்குப் பதிலாக, ‘பாபா, பாபா!’ எனக் கூறுவதே நினைவைக் கொண்டிருப்பதற்கான அத்தாட்சி ஆகும்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
சகித்துக் கொள்பவர்களால் மட்டுமே நாடகத்தின் கேடயத்தைப் பயன்படுத்தி ஸ்திரமாகவும் அத்துடன் மலர்ச்சியாகவும் இருக்க முடியும். நீங்கள் சகித்துக் கொள்ளாவிட்டால், நாடகத்தின் கேடயத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கும். இந்த வேளையில் நீங்கள் என்ன செயல்களைச் செய்தாலும் சதா கரன்கரவன்ஹாரின் உணர்வில் இருங்கள். தந்தை நீங்கள் அனைத்தையும் செய்யத் தூண்டுகிறார், அனைத்தையும் செய்பவர்கள், அவரின் கருவிகள் ஆவார்கள். இந்த விழிப்புணர்வுடன் நீங்கள் செயல்பட்டால், ஒரு பற்றற்ற பார்வையாளர் என்ற பாகத்தை நடிப்பதில் அனுபவசாலி ஆகுவீர்கள்.