09.08.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    02.03.2011     Om Shanti     Madhuban


மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற உங்களின் சுயமரியாதை ஆசனத்தில் அமர்ந்திருங்கள். ஒருவருக்கு ஒருவர் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கி, ஒருவரோடு ஒருவர் ஒத்துழையுங்கள். வீணான எண்ணங்கள் என்ற அக் மலரை அர்ப்பணித்து, முதல் இலக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


இன்று, நீங்கள் அனைவரும் அத்துடன் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும் அமிர்த வேளையில் இருந்தே மிகுந்த அன்புடன் உங்களின் அன்பு மற்றும் சந்தோஷத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையும் இந்தப் பிறந்த நாளுக்காக நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தந்தையால் மிகவும் நேசிக்கப்படுவதுடன் அவரின் இதயத்திற்கு அன்பானவராகவும் இருக்கிறார். பாப்தாதா தனது கரங்கள் என்ற மாலையால் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.

பாபாவின் முன்னால் இருக்கும் நீங்கள் அனைவரும் வாழ்த்துக்களை வழங்குவதுடன் வாழ்த்துக்களையும் பெறுவதை பாப்தாதா பார்க்கிறார். எங்கும் உள்ள பல இடங்களிலும் உள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். தந்தையும் இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களின் சந்தோஷமான முகங்களால் அன்புக்கடலின் அலைகளில் அசைவதை பாப்தாதா பார்க்கிறார். தந்தை தனியே வருவதில்லை என்று தந்தை சந்தோஷப்படுகிறார். அவர் குழந்தைகளுடனேயே வருகிறார். ஏனென்றால், அவர் இந்த யாகத்தை உருவாக்கவே வருகிறார். எனவே, இந்த யாகத்தில் இருப்பவர்கள் யார்? பிராமணர்கள். இதனாலேயே, தந்தை தனித்து வருவதில்லை, ஆனால் குழந்தைகளுடனேயே வருகிறார். ஏனென்றால், இந்தப் பிறந்த நாளே சகல பிறந்த நாட்களிலும் அதி அற்புதமானதாகும். கல்பம் முழுவதிலும், இந்தப் பிறந்தநாள் மட்டுமே ஒரே வேளையில் தந்தையினுடையதும் குழந்தைகளினதும் பிறந்த நாள் ஆகும். இதனாலேயே, இந்தப் பிறந்தநாள் வைரம் போன்று பெறுமதி வாய்ந்தது எனப்படுகிறது. ஆதி இரத்தினங்களான குழந்தைகள் அனைவருக்கும் தந்தையும் விசேடமான வாழ்த்துக்களை வழங்குகிறார். எனவே, நீங்கள் அனைவரும் இங்கே வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளீர்களா? அத்துடன் வாழ்த்துக்களைப் பெறவும் வந்துள்ளீர்களா? தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள், ஒன்றாகத் திரும்பிப் பறப்பீர்கள், தந்தை பிரம்மாவுடன் ஒன்றாகச் சேர்ந்து வந்து, ஆட்சி செய்வீர்கள். உங்களுடன் இருப்பேன் என்று பாபா சத்தியம் செய்துள்ளார். நீங்களும் என்ன சொல்கிறீர்கள்? தந்தை எங்கே இருக்கிறாரோ அங்கேயே நாங்களும் இருப்போம். இதுவே குழந்தைகளுக்குத் தந்தையினதும் தந்தைக்குக் குழந்தைகளினதும் சத்தியம் ஆகும். பௌதீகமாக, நீங்கள் வேறு எங்கேயாவது வாழலாம். ஆனால் உங்களின் இதயங்களில், தந்தை எப்போதும் உங்களுடன் இருக்கிறார். இதனாலேயே தந்தை திலாராம் (இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர்) எனப்படுகிறார். இங்கிருக்கும் ஞாபகார்த்தமும் தில்வாலா ஆலயமே ஆகும். எனவே, உங்கள் அனைவரின் இதயங்களிலும் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர் இருக்கிறார், அல்லவா? குழந்தைகளான உங்களை ஒருபோதும் தனித்து இருக்க வேண்டாம் என்று தந்தை எப்போதும் கூறுகிறார். நாங்கள் சதா ஒன்றாக இருக்க வேண்டும். நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் தனித்து இருந்தால், மாயை தனது வாய்ப்பை எடுத்துக் கொள்வாள். ஆனால் நீங்கள் தந்தையுடன் இருந்தால், வெளிச்சவீடான அவரே உங்களுடன் இருப்பார். நீங்கள் அவருடன் இருக்கும்போது, மாயை தொலைவில் இருந்தே ஓடி விடுவாள். அவளால் உங்களுக்கு நெருக்கமாக வரமுடியாது. இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் தந்தைக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்போம் என்று தந்தையும் குழந்தைகளுக்குச் சத்தியம் செய்துள்ளார். இதுவே உங்கள் அனைவரினதும் சத்தியம், அல்லவா? நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக இருப்போம். நீங்கள் ஒன்றாக இருப்பதை விரும்புகிறீர்கள், அல்லவா? ஆம், நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தலாம்.

குழந்தைகளான நீங்கள் அனைவரும் அமிர்த வேளையில் உங்களின் இதயத்தின் விடயங்களை அதிகளவில் பாபாவிற்குக் கூறுவதை பாப்தாதா பார்த்துள்ளார். இல்லாவிட்டால், உங்களுக்கு நேரம் இல்லை. ஆனால் அமிர்த வேளையில், நீங்கள் அனைவரும் உங்களின் இதயத்தில் உள்ள பல இனிமையான விடயங்களைக் கூறுகிறீர்கள். தந்தையும் குழந்தைகளான உங்கள் அனைவரின் இதயங்களின் விடயங்களைக் கேட்பதுடன் உங்கள் அனைவருக்கும் பதிலும் வழங்குகிறார். நீங்கள் அனைவரும் ஒரு விடயத்தை இட்டு மிகவும் சந்தோஷம் அடைகிறீர்கள்: நீங்கள் உங்களின் இதயபூர்வமாக ‘மேரா பாபா’ (எனது பாபா) என்று சொல்கிறீர்கள். தந்தையும் பிரசன்னம் ஆகுகிறார். பிரபு பிரசன்னம் ஆகுகிறார். இது இதயத்திற்கான விடயம் ஆகும். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் உங்களின் இதயபூர்வமாக ‘மேரா பாபா’ என்று கூறினீர்கள், பிரபு பிரசன்னம் ஆகுகிறார்.

இன்று, பாப்தாதாவின் காதுகளில் இனிமையான பாடல் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அது என்ன பாடல்? ‘எனது பாபா, அன்பான பாபா, இனிய பாபா!’ பாப்தாதாவும் குழந்தைகளான உங்களின் அன்பிலே கலந்திருந்தார், கலந்திருக்கிறார். உங்களின் அன்பான தெய்வீகச் செயலைப் பார்க்கும் போது, உங்களின் பக்தர்களின் புத்திகளும் எதிலும் குறைந்ததல்ல. அவர்கள் உங்களின் ஞாபகார்த்தத்தை மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். அவர்கள் துவாபர யுகத்தில் வருகிறார்கள். அந்த ஆத்மாக்கள் பரந்தாமத்தில் இருந்து வருவதனால் அவர்களின் முதல் பிறவி சதோபிரதானாகவே இருக்கும். எனவே இன்று, பாபாவின் பார்வை பக்தர்களின் மீதும் விழுந்தது. அவர்கள் உங்களை மிகச்சரியாகப் பிரதி செய்துள்ளார்கள். ஏனென்றால், உங்களின் நடைமுறைச் செயல்கள் எவையாக இருந்தாலும், ஆரம்ப காலத்திற்கு உரிய உங்களின் விசேடமான பக்தர்கள் உங்களின் ஞாபகார்த்தங்களை மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். எவ்வாறாயினும், உங்களுடையது நடைமுறையானது. ஆனால் அவர்களுடையதோ ஒரு ஞாபகார்த்தமே. நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள். நீங்கள் என்ன சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்? தூய்மைக்கான சத்தியம். அவர்களும் ஒரு சத்தியம் செய்துள்ளார்கள். அவர்கள் சத்தியம் செய்வதைப் பிரதி செய்துள்ளார்கள். ஆனால், நீங்கள் ஒரு பிறவிக்காகச் சத்தியம் செய்யும்போது, அது பல பிறவிகளுக்குத் தொடரும். அவர்கள் ஒரு நாள் தூய்மையாக இருக்கிறார்கள். அத்துடன் தூய உணவையும் பானத்தையும் உட்கொள்கிறார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்காகச் சத்தியம் செய்கிறீர்கள். ஆனால் அவர்களுடையதோ தற்காலிகமான காலப்பகுதிக்கு மட்டுமே ஆகும். ஜாக்ரனுக்கும் (இரவு முழுவதும் விழித்திருத்தல்) இதுவே நடக்கிறது: நீங்கள் ஒளிக்குள் வந்து, முழு உலகினதும் இருளை அகலச் செய்கிறீர்கள். அரைக்கல்பத்திற்கு இருள் வரமுடியாது. நீங்கள் மனங்களின் இருளை நீக்குகிறீர்கள். அத்துடன் புறத்தே, சடப்பொருளின் இருளையும் துன்பத்தையும் நீக்குகிறீர்கள். அவர்களும் இரவு முழுவதும் விழித்திருப்பதன் மூலம் இதைப் பிரதி செய்துள்ளார்கள். இன்னொரு விடயம் என்னவென்றால், நீங்கள் உங்களைத் தந்தையிடம் அர்ப்பணித்துள்ளீர்கள், நீங்கள் உங்களையே பலி கொடுத்துள்ளீர்கள். நீங்கள் உங்களைச் சம்பூரணமாக அர்ப்பணித்துள்ளீர்கள். அதனால் அவர்களும் உங்களைப் பிரதி செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் பலி கொடுப்பதில்லை. அவர்கள் தங்களைப் பலி கொடுப்பதில்லை, ஆனால் அவர்கள் எதைப் பலி கொடுக்கிறார்கள்? உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஓர் ஆட்டைப் பலி கொடுக்கிறார்கள். ஏன் அவர்கள் வேறு எதுவும் இல்லாமல் ஓர் ஆட்டை மட்டும் தேர்ந்து எடுத்துள்ளார்கள்? நீங்கள் எல்லோருமே சிரிக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு அது ஏன் என்று தெரியும். தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குச் சமிக்கை செய்கிறார்: ‘நான்’ என்ற உணர்வைத் துறந்து, ஒரு கருவியாக இருக்கும் உணர்வை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே, அவர்கள் ஓர் ஆட்டைத் தேர்ந்து எடுக்கிறார்கள். ஏனென்றால், அது எப்போதும் ‘மே, மே’ (நான், நான்) என்றே கத்துகிறது. எனவே, பக்தர்களின் புத்திகளும் அற்புதமானவை. உண்மையில் அவர்கள் உங்களின் பக்தர்களே. அவர்கள் தந்தை மற்றும் உங்களின் பக்தர்கள் ஆவார்கள். இதனாலேயே, உங்களை உண்மையான இதயத்துடன் வழிபடுகின்ற உங்களின் பக்தர்களுக்குத் தந்தை ஏதாவதொரு பலனை வழங்குகிறார். அவர்களும் எப்போதும் உண்மையாகவும் சாத்வீகமாகவும் இருப்பதே அந்த பக்தியின் பலன் ஆகும். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். துன்பமான வேளைகளில் அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. ஏனென்றால், அவர்கள் உண்மையான இதயங்களுடன் தமது பக்தியைச் செய்கிறார்கள். எனவே, தற்காலத்தில், தந்தையும் குழந்தைகளான உங்களுக்கு ‘நான்’ என்ற உணர்வைத் துறக்குமாறு சமிக்கை கொடுக்கிறார். ‘நான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும். நான் மட்டுமே சரி, அதனால் அது மட்டுமே நடக்க வேண்டும்’. ஒன்று, ‘நான்’ என்ற சாதாரணமான உணர்வு. ‘நான் ஒரு சரீரதாரி, நான் பௌதீகமானவன்’. எவ்வாறாயினும், ஒன்று சாதாரணமான ‘நான்’ என்பது, மற்றையது சூட்சுமமான ‘நான்’ என்பது. அதில், நீங்கள் தந்தையின் பரிசையும் உங்களுடையதாகக் கருதுகிறீர்கள்: நான் இதைச் செய்தேன், நான் இதைக் கூறினேன், நான் இதைச் செய்கிறேன். தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பியல்புகளுக்காக ‘நான்’ என்ற உணர்வை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதிலும் உங்களின் சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதிலும் சூட்சுமமான ‘நான்’ என்பது காணப்படுகிறது. ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவற்றுக்கு எப்போதும் ‘எனது பாபா’ என்று நினையுங்கள் என்று பாப்தாதா உங்களுக்கு சமிக்கை கொடுக்கிறார். உங்களின் இதயங்கள் அந்த ஒருவரின் மீதே பற்று வைக்க வேண்டும். எல்லைக்கு உட்பட்ட எனது பெயர், எனது கௌரவம் போன்ற ‘எனது’ என்பனவற்றை முடியுங்கள். ‘நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா எனக்குச் சொந்தமானவர்’ என்றே இருக்க வேண்டும். அதன்பின்னர் அதிகளவு சந்தோஷம் காணப்படும்: ‘கடவுள் இப்போது என்னுடையவர். இதைவிட எனக்கு என்ன வேண்டும்?’ ஒன்று சாதாரணமான ‘எனது’ என்பது, இன்னொன்று சூட்சுமமான ‘எனது’ என்பது. இந்தச் சூட்சுமமான ‘எனது’ என்பது உங்களை அழுக்காக (மெய்லா) ஆக்குகிறது. ஆனால் ‘எனது பாபா’ என்பது உங்களைச் சகல பொக்கிஷங்களும் நிரம்பியவர்கள் ஆக்குகிறது.

இன்று, நீங்கள் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். நீங்கள் உங்களின் சொந்தப் பிறந்த நாளையும் கொண்டாட வந்துள்ளீர்கள். குழந்தைகளான நீங்கள் இல்லாமல் தந்தையால் எதையும் செய்ய முடியாது. ஆகவே, இன்று தந்தை உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வந்துள்ளார்: ‘ஆஹா எனது குழந்தைகளே! ஆஹா!’ இப்போது நான் ஒன்றைச் சொல்லட்டுமா? நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்களா? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பின்னர் நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்கள் என்றால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரட்டை வெளிநாட்டவர்களே, நீங்கள் அதைச் செய்வீர்களா? ஆசிரியர்களே, நீங்கள் அதைச் செய்வீர்களா? இதுவரை, இன்றுள்ள ஞாபகார்த்தத்தில், பரமாத்மாவான சிவனுக்கு அவர்கள் அக் மலரைப் படைக்கிறார்கள். அவர்கள் ரோஜா மலரை அல்லது வேறு எதையும் படைப்பதில்லை. ஆனால் அக் மலரை மட்டுமே படைக்கிறார்கள். இன்று, நீங்கள் எதை அர்ப்பணிக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார்? நீங்கள் இந்த வீட்டுவேலையைச் செய்ய வேண்டும் என்று பாபா விரும்புகிறார். நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்கள், அல்லவா? அச்சா.

குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஹா ஜி (ஆமாம்) என்று கூறும்போது பாப்தாதா அதை மிகவும் விரும்புகிறார். எனவே இன்று, பிறந்தநாளில் தந்தையின் எண்ணமானது: ஒருவருக்கு ஒருவர் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும் போது, ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பவராகி வீணான எண்ணங்கள் என்ற அக் மலரைப் படையுங்கள். நீங்கள் வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் வீணானவை எதையும் கேட்கக்கூடாது, ஒருவரின் சகவாசத்திற்குள் செல்வதன் மூலம் வீணான எண்ணங்களின் சகவாசத்தால் உங்களை நிறமூட்டவும் கூடாது. இது ஏனென்றால், எங்கே வீணான எண்ணங்கள் இருக்கிறதோ, உங்களால் உங்களின் விழிப்புணர்வில் நினைவெனும் தூய எண்ணங்களையும் முரளி என்று நீங்கள் அழைக்கின்ற இந்த ஞானத்தின் இனிய வார்த்தைகளையும் வைத்திருக்க முடியாது. நீங்கள் முரளியைக் கேட்பீர்கள், நீங்கள் அதை வாசிப்பீர்கள், அதுவும் அத்தியாவசியமானது. இது பிராமணர்களின் ஒழுக்கம். ஆனால் அது உங்களுடன் செவிமடுக்கும் நிலையில் மட்டுமே இருக்கும். உங்களின் மனதால் கடைவது எதுவும் நடக்காது. ‘இன்று, முரளி மிக நன்றாக இருந்தது. நான் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன். ஆசீர்வாதமும் மிக நன்றாக இருந்தது. ஆமாம், நான் அதை விரைவில் நினைவு செய்வேன்’ என்று நீங்கள் நினைப்பீர்கள், அத்துடன் கூறுகிறீர்கள். வீணான எண்ணங்கள் உங்களின் மனதையும் புத்தியையும் தம்மை நோக்கிக் கவரும். நீங்கள் தந்தைக்கு என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘பாபா, நாங்கள் சுவாரசியமான செய்திகளைக் கேட்க வேண்டும், அல்லவா? நாங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகவேண்டும்’. எவ்வாறாயினும், வீணான விடயங்கள் அந்தஸ்தின் பேற்றிலே இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, குழந்தைகளான நீங்கள் அனைவரும் வீணான எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டோம் என்று தந்தைக்குச் சத்தியம் செய்கிறீர்களா? ‘அவை வரவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அவை வருகின்றன. அவை வருவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அப்படியிருந்தும் அவை வருகின்றன’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். எனவே, நீங்கள் அவற்றைத் திடசங்கற்பத்துடன் தந்தையிடம் கொடுக்க வேண்டும். அனைத்திற்கும் முதலில், எப்படிக் கொடுப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவற்றைத் தந்தையிடம் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் கொடுத்த ஏதாவது உங்களிடம் திரும்பி வந்தால், நீங்கள் அதை உங்களுடன் வைத்திருப்பீர்களா அல்லது அதைத் திரும்பிக் கொடுப்பீர்களா? நீங்கள் ஏற்கனவே கொடுத்து விட்ட எதையும் உங்களுடன் வைத்திருந்தால் உங்களின் பட்டம் என்னவாக இருக்கும்? அதைத் தந்தையிடம் ஒரு தடவையே உங்களின் சொந்த ஆர்வத்துடனும் திடசங்கற்பத்துடனும் முழுமையாகக் கொடுத்து விடுங்கள். பின்னர், மீண்டும் மீண்டும் சோதித்துப் பாருங்கள்: நான் கொடுத்து விட்ட எதுவும் என்னிடம் திரும்பி வரவில்லையே? மற்றவர்களுக்குச் சொந்தமான எதையும் உங்களுக்குச் சொந்தமாகக் கருதுவது நல்லதாக இல்லை. எனவே, ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்வதற்கு முன்னர், உங்களை முதலில் சோதித்த பின்னர் தூங்கச் செல்லுங்கள்: இன்று நாள் முழுவதும், எனக்குள் ஏதாவது வீணான எண்ணங்கள் ஏதாவது ஏற்பட்டனவா? நான் வீணான எதையும் செய்தேனா? நான் கொடுத்த எதையும் திரும்பி எடுத்து விடவில்லைத்தானே?

இன்று, இந்தப் பிறந்தநாள் பரிசைக் கொடுப்பதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எங்கே தைரியம் இருக்கிறதோ, பாப்தாதா உங்களுக்கு ஒரு பரிசைக் கொடுப்பார். உங்களின் இதயபூர்வமாகக் கூறுங்கள்: ‘எனது பாபா, கருணைநிறைந்த கனிவான பாபா, இதை எடுத்துக் கொள்ளுங்கள்!’ நீங்கள் உங்களின் இதயபூர்வமாக இதைக் கூறினால், தந்தை மேலதிகமான பரிசை வழங்குவார். உங்களுக்கு தைரியம் இருந்தால், தந்தை உங்களுக்கு மேலதிக உதவியை வழங்குவார். உங்களுக்குத் தைரியம் இருந்தால், நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் உதவியைப் பெறுவீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? இப்போது தீவிர முயற்சி செய்வதற்கான வழிமுறை, மூன்று புள்ளிகளை இடுவதே என்று பாப்தாதா சில காலமாக உங்களை எச்சரிக்கை செய்கிறார்: நான் ஒரு புள்ளி, புள்ளியான தந்தையை நினைவு செய்து, கடந்த காலத்திற்கு ஒரு புள்ளி, முற்றுப்புள்ளி வையுங்கள். இதற்கு பாப்தாதா கூறுகிறார்: இதைக் கடையுங்கள், ஒரு புள்ளி ஆகி, ஒரு புள்ளியைப் பார்த்து, ஒரு புள்ளி வையுங்கள். இதனாலேயே புள்ளிக்கு அதிகளவு முக்கியத்துவம் உள்ளது. இன்றைய உலகிலும் மக்கள் பணத்தை எண்ணும்போது பிந்து (பூச்சியம்) இடுவதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தற்காலத்தில் மக்கள் அதிகளவில் எதை விரும்புகிறார்கள்? பணத்தை. எவ்வாறு பணம் அதிகரிக்கும்? தொடர்ந்து ஒரு பூச்சியத்தை இடுங்கள். 10 இற்கு ஒரு பூச்சியத்தைச் சேர்த்தால் அது 100 ஆகும். இன்னொரு பூச்சியத்தைச் சேர்த்தால் அது 1000 ஆகும். அவர்கள் பூச்சியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையாகப் பூச்சியம் என்றால் என்ன என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். எனவே இன்று, தந்தைக்கு இந்தப் பிறந்தநாள் பரிசை நீங்கள் கொடுத்தீர்களா? கொடுத்தீர்களா? உங்களின் இதயபூர்வமாக நீங்கள் அதைக் கொடுத்தீர்களா? ‘ஏன்? என்ன? செய்வீர்களா? எப்படி அதை என்னால் செய்ய முடியும்? நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்?’ என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். இவ்வாறு கேள்வி கேட்கும் மொழி தவறானது: ‘நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? எப்படி நான் அதைச் செய்வது?’ இந்தக் கேள்விகளைக் கேட்காதீர்கள். இந்தப் பரிசைக் கொடுப்பதற்கு நீங்கள் சந்தோஷமாக உங்களின் கைகளை உயர்த்தினீர்களா அல்லது ஒன்றுகூடலின் காரணத்தால் கட்டாயத்தின் பேரில் உயர்த்தினீர்களா? கட்டாயத்தின் பேரில் அதைச் செய்பவர்களால் அதை நிரந்தரமாகச் செய்ய முடியாது. அது சிலவேளைகளில் மட்டுமே நடைபெறும். தமது இதயபூர்வமாக இதைச் செய்பவர்கள் கூறுகிறார்கள்: நான் இதைச் செய்ய வேண்டும். நான் இவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் இந்தப் பரிசைக் கொடுத்து விட்டீர்களா அல்லது இன்னமும் அதைக் கொடுக்க வேண்டியுள்ளதா? உங்களிடம் இந்த எண்ணம் சந்தோஷமாக இருந்தால், சர்வசக்திவான் தந்தையின் குழந்தைகளான மாஸ்ரர் சர்வசக்திவான்களான உங்களுக்கு இது பெரியதொரு விடயமே இல்லை. உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற உங்களின் ஆசனத்தில் எப்போதும் நிலையாக அமர்ந்திருங்கள். அதை மறக்காதீர்கள். இது சுயமரியாதை, அல்லவா? உங்களின் சுயமரியாதையை உங்களால் கைவிட முடியாது. மரியாதை இல்லாததாலேயே மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்கிறார்கள். இதனாலேயே, பாப்தாதா உங்களின் மீது அன்பு வைத்திருக்கிறார்: அற்ப விடயங்களுக்காக உங்களின் சுயமரியாதையை இழக்காதீர்கள். இறைவனாலேயே இந்த சுயமரியாதை உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மக்களால் தமக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் காரணத்தால் மக்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இங்கே இறைவனிடம் இருந்து சுயமரியாதையைப் பெற்றுள்ளீர்கள்: நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். நீங்கள் விரும்பியதை உங்களால் செய்ய முடியும். உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதல்லவா? ஆமோதித்தால் தலையை அசையுங்கள்! உங்களின் கைகளை அசைக்க வேண்டாம், ஆமோதித்துத் தலையை அசையுங்கள்! இந்தத் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? ஆசிரியர்களே? நீங்கள் அவர்களை அதைச் செய்ய வைக்க வேண்டும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்களும் அதைச் செய்வீர்கள், அத்துடன் கவனம் செலுத்தி, மற்றவர்களையும் அதைச் செய்ய வைப்பீர்கள். நீங்கள் இதற்குக் கருவிகள் ஆவீர்கள். எந்த வகுப்பு, யாருடைய வகுப்பு ஓர் இலக்கத்தைக் கோருவார்கள் என்று நாம் பார்ப்போம். அதன்பின்னர் அவர்களுக்கு ஒரு நல்லதொரு பரிசை வழங்குவோம். என்ன பரிசை வழங்கப் போகிறார் என்று பாபா உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. பாபா ஓர் அழகான பரிசை வழங்குவார். வகுப்பு முழுவதும் இதைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் மட்டும் அதைச் செய்வார் என்பதல்ல. பெரும்பாலானோர் அதைச் செய்ய வேண்டும்.

இன்று, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் இரண்டாம் இலக்கம் அன்றி, முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும் என்று பாப்தாதா அதிகளவு அன்புடன் உணர்கிறார். நீங்கள் முதல் சிம்மாசனத்தில் அமர மாட்டீர்கள். ஏனென்றால் இரண்டு பேர் மட்டுமே அந்தச் சிம்மாசனத்தில் அமர்வார்கள். ஆனால், நீங்கள் முதல் இராச்சியத்திற்குள், முதல் அரச குடும்பத்திற்குள் வருவீர்கள். இரண்டு இலக்கங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் ஆட்சி செய்து, இராச்சியத்திற்கான உரிமையைக் கோர வேண்டும். அதனால் நீங்கள் முதல் இராச்சியத்திற்குள் வருவீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களின் மீது அன்பு வைத்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் ஏதாவதொரு சிறப்பியல்பில் முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும் என்று அவர் உணர்கிறார்: வரிசைக்கிரமம் இல்லை, ஆனால் முதலாம் இலக்கம். உங்களுக்குள் இந்த உற்சாகம் உள்ளதா? நீங்கள் முதலாம் இலக்கத்தைக் கோர விரும்புகிறீர்களா அல்லது நீங்கள் பெறுகின்ற எதையிட்டும் திருப்தி அடைகிறீர்களா? ‘அது நன்றாக உள்ளது, நன்றாகவே உள்ளது’ எனக் கூறாதீர்கள். ஏதாவதோர் அற்புதத்தைக் காட்டுவதில் ஒவ்வொரு குழந்தையும் முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும் என்பதே தந்தையின் எதிர்பார்ப்பு ஆகும். நான்கு பாடங்கள் உள்ளன. நீங்கள் நான்கு பாடங்களில் ஏதேனும் ஒன்றில் நிச்சயமாக முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும். கீழ்க்கோடிடுங்கள்: ‘நான் நிச்சயமாக இவ்வாறு ஆகவேண்டும்’. பாபா உங்களுக்கு அதிகளவு சிரமத்தைக் கொடுக்கவில்லை. ஏதாவதொரு பாடத்தில் முதலாம் இலக்கத்தைக் கோருங்கள். இது இலகுவானதுதானே? இன்று, அமிர்த வேளையில் ஒரு சந்திப்பைக் கொண்டாடிய குழந்தைகளான நீங்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகிறீர்கள். நீங்கள் சந்தோஷமாகப் புன்னகை செய்தீர்கள். தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் சதா பறக்கின்ற ஸ்திதியாக இருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கினார் - நடக்கும் ஸ்திதி அல்ல, ஆனால் பறக்கும் ஸ்திதி. எனவே, இன்று பாப்தாதாவிடம் இருந்து பெற்ற இந்த ஆசீர்வாதத்தை நினைவு செய்யுங்கள். பாப்தாதா உங்களினதும் அவரினதும் பிறந்த நாளின்போது உங்கள் அனைவருக்கும் என்ன ஆசீர்வாதத்தை வழங்கினார்? நீங்கள் பறக்கும் ஸ்திதியில் இருப்பீர்களாக! இன்று நாள் முழுவதும், உங்களின் இதயங்களில் சிவராத்திரி பண்டிகையை நீங்கள் கொண்டாடினீர்கள், அல்லவா? நீங்கள் அனைவரும் நல்லவர்கள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் அரச அந்தஸ்தில் அனைத்திலும் சிறந்ததைக் கோருவீர்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள், அல்லவா? தந்தை சதா அனைத்தையும் நல்லதாகவே பார்க்கிறார். அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகளான நீங்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது உங்களின் சொந்த இடங்களில் இருந்தவண்ணம் கொண்டாடினால் என்ன, உங்கள் அனைவரையும் பார்ப்பதில் பாப்தாதா களிப்படைகிறார். குழந்தைகளான நீங்களும் தந்தையுடன் சந்திப்பைக் கொண்டாடுவதில் சந்தோஷம் அடைகிறீர்கள். எவ்வாறாயினும் இன்றில் இருந்து, சதா சந்தோஷமாக இருக்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். சிலவேளைகளில் மட்டும் சந்தோஷமாக இருப்பதல்ல, ஆனால் சதா சந்தோஷமாக இருத்தல். உங்களைப் பார்க்கின்ற எவரும் உங்களின் முகத்தைப் பார்த்து நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி ஆத்மாவாகத் தோன்றுகிறீர்கள் என்று நினைக்க வேண்டும். உங்களின் செயல்களிலும் முகத்திலும் உங்களின் பாக்கியம் தென்பட வேண்டும். உங்களின் மனதில் அதிகளவு இருக்கிறது என்று நினைக்காதீர்கள், இல்லை! உங்களின் சந்தோஷமும் அதிர்ஷ்டமான முகமும் மற்றவர்களுக்கு ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும். உங்களிடம் ஏதோ உள்ளதென்று உங்களின் முகம் அவர்களுக்குச் சொல்லும். உங்களின் முகம் சேவை செய்ய வேண்டும். அத்துடன் அவர்களைத் தந்தையிடம் அழைத்து வரவேண்டும். சந்தோஷமாக இருங்கள்! இதுவும் சேவை செய்வதற்கான வழிமுறைகளே ஆகும். எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் உங்களின் பிறந்தநாளுக்குப் பல்கோடி மடங்கு பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்! அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சந்தேகமான எண்ணங்கள் அனைத்தையும் முடிப்பதன் மூலம் மாயையை வென்றவரான ஒரு வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.

உங்களுக்குள் ஒருபோதும் சந்தேகமான எண்ணம் எதுவும் வர அனுமதிக்காதீர்கள், ‘நான் தோல்வி அடையக்கூடும்’ என்ற எண்ணத்தைக் கொண்டிராதீர்கள். சந்தேகம் நிறைந்த புத்தியைக் கொண்டிருப்பதனாலேயே நீங்கள் தோல்வி அடைகிறீர்கள். ஆகவே, வெற்றி அடைவதன் மூலம் நீங்கள் நிச்சயமாக அனைவருக்கும் காட்டுவீர்கள் என்று எப்போதும் நினையுங்கள். வெற்றி உங்களின் பிறப்புரிமை. சகல உரிமைகளையும் கொண்டிருந்த வண்ணம் அனைத்தையும் செய்யும்போது, நீங்கள் நிச்சயமாக வெற்றிக்கான உரிமையைக் கொண்டிருப்பீர்கள். அதாவது, சித்தி அடைவீர்கள். இந்த முறையில், நீங்கள் ஒரு வெற்றி இரத்தினம் ஆகுவீர்கள். இதனாலேயே, எனக்குத் தெரியாது என்ற வார்த்தைகள் ஒருபோதும் மாஸ்ரர் ஞானம் நிறைந்த ஆத்மாவின் உதடுகளில் இருந்து வெளிப்படக் கூடாது.

சுலோகம்:
கருணை உணர்வானது இலகுவாக உங்களுக்குள் கருவியாக இருக்கும் உணர்வை வெளிப்படச் செய்கிறது.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

தொட்டாற் சுருங்கி செடியானது நீங்கள் அதைச் சிறிதளவில் தொட்ட உடனேயே சக்தியற்றுப் போவதைப் போல், மாயை என்ற தொட்டாற் சுருங்கி செடியையும் உங்களின் தூய எண்ணம் என்ற சக்தியால் ஒரு விநாடியில் மயக்கம் அடையச் செய்யுங்கள். சதா உங்களின் ஆதி ரூபத்தையும் உங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ரூபத்தையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அப்போது தூய்மை இன்மை அல்லது மறதியின் எந்தவொரு பெயரோ அல்லது சுவடோ எஞ்சியிருக்காது.