10.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானக் குறிப்புகளை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருப்பதால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் இப்போது சுவர்க்க வாயிலில் நிற்கின்றீர்கள். பாபா உங்களுக்கு முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான பாதையைக் காட்டுகின்றார்.
கேள்வி:
உங்கள் பதிவேட்டை நன்றாக வைத்திருப்பதற்கு, நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
உங்கள் எண்ணங்களினாலோ, வார்த்தைகளினாலோ அல்லது செயல்களினாலோ எவருக்கும் துன்பத்தை விளைவிக்காமல் இருப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சுபாவம் முதற்தரமானதாகவும், மிக இனிமையானதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தவறான செயல்களைச் செய்வது அல்லது யாருக்காவது துன்பம் கொடுப்பது போன்றவற்றைச் செய்யுமளவிற்கு, மாயை உங்களுடைய மூக்கை அல்லது காதுகளைப் பிடிக்கக்கூடாது. நீங்கள் எவருக்காவது துன்பத்தை விளைவித்தால் அதற்காக நீங்கள் வருந்த நேரிடுவதுடன் உங்கள் பதிவேடும் பாழாகிவிடும்.பாடல்:
அன்பான கடவுளே, குருடருக்குப் பாதையைக் காட்டுங்கள்!ஓம் சாந்தி.
தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்குக் காட்டப்பட்டுள்ள பாதை மிக இலகுவானது. எனினும், குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் அலைந்து திரிகின்றீர்கள். இங்கே அமர்ந்திருக்கையில், தந்தை உங்களுக்குக் கற்பித்து மௌன தாமத்திற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது மிக இலகுவானது. தந்தை கூறுகின்றார்: இயன்றவரை இரவு பகலாக நினைவில் நிலைத்திருங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதிகளவில் பாதயாத்திரை செய்து அலைந்து திரிகின்றார்கள். நீங்கள் இங்கே அமர்ந்தவாறே நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, தொடர்ந்தும் அசுரத்தனமான குறைகளை நீக்க வேண்டுமெனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் பாவம் ஏற்படக்கூடிய அசுரத்தனமான செயல்களைச் செய்யக்கூடாது. தந்தை குழந்தைகளாகிய உங்களை சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார். ஒரு சக்கரவர்த்தியின் குழந்தை தனது தந்தையையும் தனது இராச்சியத்தையும் பார்க்கையில் சந்தோஷம் அடைகின்றார். அவர்களுக்கு இராச்சியங்கள் இருந்தாலும் சரீர நோய்கள் இன்னமும் உள்ளன. இங்கே, சிவபாபா வந்து, அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. பின்னர், நாங்கள் சுவர்க்கத்திற்குச் சென்று அங்கே ஆட்சி செய்வோம். அங்கே எந்த வகையான துன்பமும் இருக்க மாட்டாது. படைப்பவரதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளன. இந்த ஞானம் வேறு எந்த மனிதரின் புத்தியிலும் இல்லை. முன்னர் உங்களிடமும் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். நீங்கள் தந்தையை அறிந்திருக்கவில்லை. பக்தி மிகவும் மேன்மையானதாகக் கருதப்பட்டு, பல்வேறு முறைகளில் பக்தி செய்யப்பட்டது. அங்கே அனைத்து விடயங்களும் பௌதீகமானவை. அங்கே சூட்சுமமானதாக எதுவும் இல்லை. அவர்கள் செல்கின்ற அமர்நாத்திற்கான யாத்திரை ஒரு பௌதீக யாத்திரையே ஆகும். அங்கே ஒரு லிங்கமும் உள்ளது. மக்கள் தாங்கள் யாரிடம் செல்கின்றார்கள் என்பது பற்றிப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இனியும் அலைந்து திரியப் போவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் வேதங்கள் அல்லது சமய நூல்கள் போன்ற எதுவுமே இல்லாத புதிய உலகிற்குச் செல்வதற்காகவே கற்கின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். சத்தியயுகத்தில் என்றுமே பக்தி எதுவும் இருப்பதில்லை. அங்கே சந்தோஷம் மாத்திரமே உள்ளது. எங்கு பக்தி உள்ளதோ அங்கு துன்பம் இருக்கும். இந்தச் சக்கரத்தின் படம் மிகவும் நல்லது. அதில் சுவர்க்க வாயில்கள் மிகத் தெளிவாக உள்ளன. இப்போது நீங்கள் சுவர்க்க வாயிலில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அதில் பெருமளவு சந்தோஷம் இருக்கவேண்டும். ஞானக் குறிப்புகளை நினைவு செய்வதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷம் மிக்கவராக இருக்க முடியும். நீங்கள் சுவர்க்க வாயிலினூடாகச் செல்ல இருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு வெகு சிலரே இருப்பார்கள். இங்கே அதிகளவு மனிதர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் அதிகளவில் அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் அதிகளவு தானதர்மம் செய்கின்றார்கள். அவர்கள் சாதுக்கள் போன்றோரைப் பின்பற்றி அலைந்து திரிகின்றபோதிலும் அவர்கள் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள்: ஓ கடவுளே! குருடருக்கு வழிகாட்டுங்கள்! அவர்கள், எப்போதும் முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான வழி காட்டப்பட வேண்டும் என விரும்புகின்றார்கள். இந்த உலகம் துன்பமான, பழைய உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். அந்த மக்கள் இதனை அறியமாட்டார்கள். கலியுகத்தின் கால எல்லை ஆயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே அந்த அப்பாவிகள் காரிருளில் இருக்கின்றார்கள். ஓரு சட்ட நிபுணராகவோ அல்லது ஒரு பொறியியலாளராகவோ ஆகுவதற்கு அவர்கள் தங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியருடன் யோகம் செய்து (தொடர்புகொண்டு) அவரை நினைவு செய்வது போன்று, எங்களுடைய பாபா எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதை உங்களுக்கு உள்ளே நீங்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். சட்டநிபுணர் ஆகுவதற்கான கல்வியைக் கற்பதன் மூலம் எவரும் சட்டநிபுணர் ஆகலாம். இது இராஜயோகம் ஆகும். எங்கள் புத்தியின் யோகம் பரமாத்மாவான பரமதந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் சந்தோஷப் பாதரசம் அதிகளவில் உயர்ந்திருக்க வேண்டும். மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள்! உங்கள் சுபாவம் முதற்தரமானதாக இருக்க வேண்டும். உங்களால் எவருமே துன்பத்தை அனுபவிக்கக்கூடாது. நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்க விரும்பா விட்டாலும், மாயை உங்கள் மூக்கையும் காதுகளையும் பிடித்து, உங்களைப் பயன்படுத்தி தவறுகளைச் செய்விக்கின்றாள். பின்னர் நீங்கள் உள்ளே வருந்துவீர்கள்: ஒரு காரணமும் இல்லாமல் நான் அவருக்குத் துன்பத்தை விளைவித்து விட்டேன். எவ்வாறாயினும், உங்கள் பதிவேடு பாழாகிவிட்டது. நீங்கள் உங்கள் எண்ணங்களினாலோ, வார்த்தைகளினாலோ அல்லது செயல்களினாலோ எவருக்கும் துன்பத்தைக் கொடுக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். தந்தை வந்து எங்களை அத்தகைய தேவர்கள் ஆக்குகின்றார். அவர்கள் எவருக்கேனும் துன்பத்தை விளைவிப்பார்களா? ஒரு லௌகீக ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றார், அவர் உங்களை சந்தோஷம் அற்றவராக ஆக்கமாட்டார், அல்லவா? ஆம், மாணவர்கள் கற்காது விட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது பாடசாலைகளில் எவருக்கேனும் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்மீக ஆசிரியர்கள், உங்கள் கடமை அவர்களுக்குக் கல்வி புகட்டுவதுடன் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்பிப்பதாகும். அவர்கள் நன்றாகக் கற்றால், உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்கள் கற்காது விட்டால் சித்தியடைய மாட்டார்கள். தந்தை ஒவ்வொரு நாளும் வந்து உங்களுக்குக் கல்வி புகட்டுவதுடன் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்பிக்கின்றார். கண்காட்சிகள் போன்றவை பிறருக்;குக் கற்பிப்பதற்காக நடத்தப்படுகின்றன. அனைவரும் கண்காட்சிகளையும் புரொஜெக்டர்களையும் விரும்புகின்றார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த புரொஜெக்டர்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். தந்தை சகல விடயங்களையும் மிக இலகுவான முறையில் உங்களுக்குக் கூறுகின்றார். அமர்நாத்தில் சேவை செய்வது மிக இலகுவானது. பக்தி என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன என்பதை நீங்கள் படங்கள் மூலம் விளங்கப்படுத்தலாம். ஒரு பக்கத்தில் ஞானமும் மறு பக்கத்தில் பக்தியும் உள்ளன. ஒன்றினூடாக சுவர்க்கமும், மற்றதனூடாக நரகமும் உள்ளன. இது மிகத் தெளிவானது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் என்ன கற்கின்றீர்களோ அவை மிக இலகுவானவை. நீங்கள் ஏனையோருக்கும் மிக நன்றாகக் கற்பிக்கின்றீர்கள். எனினும், உங்கள் நினைவு யாத்திரை எங்கே செல்கின்றது? இவை அனைத்தும் புத்திக்கான விடயங்களாகும். நாங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இந்த நினைவிலேயே மாயை உங்களுக்கு சவுக்கடி கொடுக்கின்றாள். அவள் உங்கள் புத்தியின் யோகத்தை முழுமையாகத் துண்டித்து விடுகின்றாள். தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் யோகம் செய்வதில் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள். மிக நல்ல மகாராத்திகளும்கூட பலவீனமானவர்களாக இருக்கின்றார்கள். இன்னார் ஞானத்தில் மிக நன்றாக இருப்பதால் அவர் ஒரு மகாராத்தி என சிலர் நினைக்கின்றார்கள். பாபா கூறுகிறார்: அவர்கள் குதிரைப்படையினரும் காலாட்படையினரும் ஆவார்கள். நினைவில் நிலைத்திருப்பவரே மகாராத்தி ஆவார். நினைவில் நிலைத்திருந்து கருமங்களை ஆற்றும்போது உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இல்லாவிட்டால், தண்டனையை அனுபவம் செய்வதுடன் உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். ஆகவே நீங்கள் என்ன முயற்சியைச் செய்கின்றீர்கள் என்பதை அறிவதற்கு ஓர் அட்டவணையை வைத்திருங்கள். பாபாவே கூறுகின்றார்: நானும் முயற்சி செய்கின்றேன். எனது புத்தி தொடர்ந்தும் வேறு பக்கங்களுக்குச் செல்கின்றது. பாபா பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிள்ளது. உங்களாலோ விரைந்து செல்லமுடியும். அத்துடன் நீங்கள் உங்கள் நடத்தையையும் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். தூய்மையாகிய பின்னர் நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால் நீங்கள் சம்பாதித்த அனைத்தும் அழிந்துவிடும். நீங்கள் எவருடனாவது கோபம் கொண்டாலோ அல்லது உப்புநீர் போலாகினாலோ, அது நீங்கள் அசுரத்தனம் உடையவர் ஆகிவிட்டீர்கள் என்றே அர்த்தம். மாயை பல்வேறு வடிவங்களில் வருவாள். இன்னும் எவரும் முழுமை அடையவில்லை. பாபா முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டுகின்றார். குமாரிகளாகிய உங்களுக்கு இது மிகவும் இலகுவானது. நீங்கள் முதலில் பலம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுக்குள் நேர்மை இருக்க வேண்டும். உள்ளே உங்கள் இதயம் வேறு எவர்மீதாவது பற்று வைத்திருந்தால் உங்களால் தொடர்ந்தும் இங்கே இருக்க முடியாது. குமாரிகளும் தாய்மாரும் பாரதத்தை சுவர்க்கம் ஆக்கும் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கு முயற்சி தேவை. முயற்சி இன்றி எதனையும் பெறமுடியாது. நீங்கள் 21 பிறவிகளுக்கான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஆகவே நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். இதில் நீங்கள் பலசாலிகள் ஆகும்வரை பாபா உங்களை உலகியல் கல்வியைத் தொடர்வதற்கு அனுமதிக்கின்றார். நீங்கள் இரு உலகையும் இழந்ததாக இருக்கக்கூடாது. நீங்கள் எவராவது ஒருவரின் பெயரிலோ அல்லது வடிவத்திலோ அகப்பட்டால் முழுமையாக அழிந்துவிடுவீர்கள். பாக்கியசாலிக் குழந்தைகளால் மாத்திரமே சரீர உணர்வை மறப்பதற்கு முயற்சி செய்வதுடன், சரீரம் அற்றவர்களாகித் தந்தையை நினைவு செய்யவும் முடியும். தந்தை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்கள் சரீரத்தை மறந்துவிடுங்கள். இந்தச் சரீரமற்ற ஆத்மாவாகிய நான் இப்போது வீடு திரும்புகின்றேன். இங்கே நான் இந்தச் சரீரத்தை நீக்கவேண்டும். நான் தந்தையின் நினைவில் தொடர்ந்தும் இருந்தால் மாத்திரமே கர்மாதீத நிலையை அடைந்து இதனை நீக்கிவிட முடியும். இது புத்திக்கான விடயம். எவ்வாறாயினும், ஒருவரின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர் என்ன முயற்சியைச் செய்வார்? நீங்கள் இங்கு முதலில் சரீரம் அற்றவர்களாக வந்து, பின்னர் சந்தோஷமான கர்ம உறவுமுறைக்குள் கட்டுப்பட்டவராகி, பின்னர் இராவண இராச்சியத்தின் விகார பந்தனத்தில் அகப்பட்டுள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்போது சரீரம் அற்றவர்களாகவே திரும்பிச்செல்ல வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மாவே தூய்மையற்றவர் ஆகியுள்ளார். ஆத்மா கூறுகின்றார்: ஓ! தூய்மையாக்குபவரே வாருங்கள்! இப்போது உங்களுக்குத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக மாறுவதற்கான வழி காட்டப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு வந்து உங்கள் பாகத்தை நடிப்பதற்காக ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றீர்கள். தந்தை இப்போது இதை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: முன்னைய சக்கரத்தில் எவருக்கு விளங்கப்படுத்தப்பட்டதோ அவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் கலியுக உறவுகளை இப்போது மறந்து விடுங்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இந்த உலகம் அழிக்கப்பட உள்ளது. இந்த உலகில் எவ்வித சக்தியும் எஞ்சியிருக்கவில்லை. இதனாலேயே மக்கள் அதிகளவில் அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் கடவுளைச் சந்திப்பதற்காகப் பக்தி செய்கின்றார்கள். அவர்கள் பக்தி மார்க்கம் மிக நல்லது என நினைக்கின்றார்கள். அதிகளவில் பக்தி செய்வதனால், கடவுளைச் சந்திப்பதுடன் தாம் சற்கதி அடையமுடியும் என அவர்கள் நம்புகின்றார்கள். உங்கள் பக்தி இப்போது முடிவுக்கு வருகின்றது. ஓ இராமா! ஓ கடவுளே! என்ற பக்திக்குரிய வார்த்தைகள் இனிமேலும் உங்கள் வாயிலிருந்து வெளிவர மாட்டாது. அதை நிறுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! உலகம் தமோபிரதானாக இருக்கின்றது. சதோபிரதானாக உள்ளவர்கள் சத்தியயுகத்தில் வாழ்வார்கள். சத்தியயுகம் என்பது உயர்ந்த நிலையாகும். பின்னர், கீழிறங்கும் நிலை ஆரம்பமாகின்றது. திரேதா யுகம் சுவர்க்கம் என அழைக்கப்பட மாட்டாது. சத்திய யுகம் மாத்திரமே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. ஆரம்பம், மத்தி, இறுதி என்பவற்றின் இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. ஆரம்பம் என்றால் தொடக்கம், மத்தி என்றால் அரைவாசி என்பதாகும். அதன் பின்னர் முடிவு உள்ளது. இறுதியாக இருக்கும் அரைவாசியில் இருந்து இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகின்றது. தந்தை பாரதத்திலேயே வருகின்றார். பாரதமே தூய்மையாகவும் தூய்மை அற்றதாகவும் ஆகுகின்றது. பாரத வாசிகளே 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள். ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே வருகின்றார்கள். விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய நேரத்தில் வருவார்கள். இந்த விடயங்கள் வேறு எவரின் புத்தியிலும் இல்லை. உங்களிலும்கூட அனைவராலும் இவை அனைத்தையும் கிரகிக்க முடியாது. சக்கரத்தின் 84 பிறவிகளையும் உங்கள் புத்தியில் வைத்திருந்தாலே, நீங்கள் சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்கள். பாபா இப்போது எங்களை வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளார். உண்மையான அன்பிற்கினியவர் வந்துள்ளார். பக்தி மார்க்கத்தில் நாங்கள் அதிகமாக நினைவு செய்தவரே இப்பொழுது ஆத்மாக்களாகிய எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். அமைதி என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. ஆத்மாக்கள் அமைதி சொரூபமானவர்கள். நீங்கள் இந்த அங்கங்களைப் பெறுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் செயலாற்ற வேண்டும். அமைதிக் கடலான தந்தை அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அப்போதே அனைவரும் அமைதியைப் பெறுவார்கள். சத்தியயுகத்தில், அமைதியையும் சந்தோஷத்தையும் நீங்கள் கொண்டிருப்பீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் திரும்பிச் சென்று மௌன தாமத்தில் இருப்பார்கள். தந்தை மாத்திரமே அமைதிக் கடல் என அழைக்கப்படுகின்றார். இதனைப் பல குழந்தைகள் மறந்துவிடுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் ஆத்ம உணர்வு உடையவர் ஆகாமல் சரீர உணர்விலேயே இருக்கின்றார்கள். தந்தை அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கின்றார். அவர்களுக்கு படத்திலுள்ள இந்த சங்கம யுகத்தைக் காட்டுங்கள். இந்நேரத்தில் அனைவரும் அமைதி அற்றவராகவே இருக்கிறார்கள். சத்தியயுகத்தில் இத்தகைய பல சமயங்கள் இருப்பதில்லை. அவர்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குச் சென்றிருக்க வேண்டும். நீங்கள் அங்கே உங்கள் மனம் திருப்தி அடையும் அளவிற்கு அமைதியைப் பெறுவீர்கள். உங்கள் இராச்சியத்தில் நீங்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டிருப்பீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் தூய்மை, அமைதி, சந்தோஷம் போன்றவற்றைக் கொண்டிருப்பீர்கள். முக்தி தாமம், இனிய இல்லம் என அழைக்கப்படுகின்றது. அங்கே தூய்மையற்ற அல்லது சந்தோஷமற்ற எதுவுமே இருப்பதில்லை. அங்கே சந்தோஷம் அல்லது துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அமைதியின் அர்த்தத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. இராணியின் அட்டியல் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் அமைதி, சந்தோஷம் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! நியதிக்கு அமையவே அங்கே புத்திரர்கள் பிறக்கின்றார்கள். தேவர்கள் புத்திரர்களைக் கொண்டிருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. சரீரத்தை நீக்கி விடுவதற்குரிய நேரம் இதுவே என ஆத்மா ஒரு காட்சியைப் பெற்று, தனது சரீரத்தைச் சந்தோஷத்துடன் நீக்குகின்றார். இந்த பாபாவும் தனது சரீரத்தை விட்டு நீங்கிச் சென்று பின்னர் அவ்வாறு ஆகுகின்ற சந்தோஷத்தைக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கின்றேன். நீங்களும் சத்திய யுகத்திற்குச் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சங்கம யுகத்திலேயே இவை அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்கும். ஆதலால் நீங்கள் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். எந்தளவிற்குக் கல்வி உயர்கின்றதோ, அந்தளவிற்கு சந்தோஷமும் அதிகமாகும். கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! உங்களின் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளது. ஆகவே பெருமளவு சந்தோஷம் இருக்கவேண்டும். எனினும் முன்னேறுகையில் சிலர் வீழ்ந்து விடுகின்றார்கள். குமாரிகளாகிய நீங்கள் சேவைத் தலத்திற்கு வரும்போதே, சேவை வளர்கின்றது. தந்தை கூறுகின்றார்: சிங்கமும், ஆடும் ஒரே குளத்தில் நீர் அருந்துகின்ற உலகிற்கே நீங்கள் செல்லப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் ஆதலால் நீங்கள் ஒருவரோடு ஒருவர் உப்பு நீர் போன்று ஆகக்கூடாது. அங்கு நீங்கள் எதைப் பார்த்தாலும், உங்கள் இதயம் சந்தோஷப்படும். அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். எனவே குமாரிகளாகிய நீங்கள் உங்கள் லௌகீகப் பெற்றோருக்குக் கூறவேண்டும்: இப்பொழுது நான் அங்கே செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றேன். ஆகவே, நான் நிச்சயமாகத் தூய்மையாக இருக்கவேண்டும். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. நான் இப்பொழுது யோகியாகி விட்டேன். எனவே நான் தூய்மை அற்றவராக ஆகமுடியாது. இவ்வாறு பேசுவதற்கு நீங்கள் மிகவும் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். அத்தகைய குமாரிகள் வெளிப்படும்போது, சேவை எவ்வளவு விரைவாக வளர்கின்றது என நீங்கள் பார்ப்பீர்கள். எனினும் அவர்கள் பற்றை வென்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் மரணித்து விட்டதால், நீங்கள் ஏன் வேறு எதனையும் நினைவு செய்ய வேண்டும்? உங்களிற் பலர் உங்கள் வீட்டையும் உங்கள் குழந்தைகள் போன்றோரையும் நினைவு செய்கிறீர்கள். எனவே, எவ்வாறு நீங்கள் தந்தையுடன் யோகம் செய்ய முடியும்? இப்பொழுது நீங்கள் பாபாவிற்கே உரியவர் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். இப்பழைய உலகம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய பாக்கியத்தை மேன்மையானது ஆக்குவதற்கு, இயன்றவரை சரீரமற்றவர் ஆகுகின்ற பயிற்சியைச் செய்யுங்கள். நீங்கள் எவருடைய பெயரையோ அல்லது ரூபத்தையோ நினைவு செய்யாத வகையில் சரீர உணர்வை மறந்துவிடுவதற்கு முழு முயற்சி செய்யவேண்டும்.2. உங்களுடைய நடத்தைக்கான ஓர் அட்டவணையை வைத்திருங்கள். அசுரத்தனமான செயல்கள் எதனையும் ஒருபோதும் செய்யாதீர்கள். நேர்மையான இதயத்தைக் கொண்டிருந்து, பற்றை வென்றவராகி, பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்ற சேவையில் மும்முரமாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையின் எந்தவிதமான இராஜரீக ரூபத்தில் இருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம் உலகை வென்றவர் ஆகுவீர்களாக.‘எனது முயற்சி, எனது கண்டுபிடிப்பு, எனது சேவை, எனது தொடுகை, எனது நற்குணங்கள் நல்லவை. எனது தீர்மானிக்கும் சக்தி மிகவும் நல்லது....’ இந்த ‘எனது’ என்ற உணர்வானது மாயையின் இராஜரீக வடிவம் ஆகும். மாயை எத்தகைய மந்திர வித்தையைச் செய்கிறாள் என்றால் அவள் ‘உங்களுடையது’ என்பதை ‘எனது’ என்று மாற்றி விடுகிறாள். ஆகவே, இப்போது இத்தகைய பந்தனத்தில் இருந்து விடுபட்டு, ஒரேயொரு தந்தையுடன் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மாயையை வென்றவர் ஆகுவீர்கள். மாயையை வென்றவர்களால் மட்டுமே உலகை வென்றவர்கள் ஆகமுடியும். அவர்களால் ஒரு விநாடியில் இலகுவாகவும் இயல்பாகவும் சரீரமற்றவர் ஆகுவதற்கான வழிகாட்டலைப் பயன்படுத்த முடியும்.
சுலோகம்:
எவருடைய எதிர்மறையையும் நேர்முகமாக மாற்றக்கூடியவரே உலகை மாற்றுபவர் ஆவார்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
உங்களின் ஆதி ரூபம் தூய்மையானது. உங்களின் ஆதி தர்மம், அதாவது, ஆத்மாவின் முதல் தாரணை தூய்மையே ஆகும். தூய உலகமே உங்கள் ஆதிதேசமாகும். உங்களின் இராச்சியம், தூய இராச்சியமாகும். பரம பவித்திரமான, பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் என்பது உங்கள் ஞாபகார்த்தமாகும். உங்களின் பௌதீக அவயவங்களின் அநாதியான சுபாவம், தூய செயல்களைச் செய்வதாகும். இதை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தால், நீங்கள் முயற்சி செய்வதில் இருந்தும் பலவந்தமாக இருப்பதில் இருந்தும் விடுபடுவீர்கள். அதேவேளை உங்களால் தூய்மையை ஓர் ஆசீர்வாதமாகக் கிரகிக்க முடியும்.