10.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை தன்னை அவதூறு செய்பவர்களை ஈடேற்றுவதைப் போன்று நீங்களும் அவ்வாறே தந்தையை பின்பற்ற வேண்டும். சந்தோஷத்தை அருள்பவர்களாக இருந்து தொடர்ந்தும் உங்கள் சரீரங்களை மறந்திடுங்கள்.
கேள்வி:
ஆத்ம உணர்வுடைய குழந்தைகளின் பிரதான அடையாளங்கள் யாவை?பதில்:
1. அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகளவு ஆன்மிக அன்புடையவராக இருப்பார்கள். 2. அவர்கள் ஒருபோதும் பலவீனங்களைப் பற்றி பேச மாட்டார்கள். 3. அவர்கள் பிறருக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். 4. அவர்களுடைய சந்தோஷம் ஒருபோதும் மறையாது. அவர்கள் எப்பொழுதும் அளவற்ற சந்தோஷத்தில் நிலைத்திருப்பார்கள். 5. அவர்கள் ஒருபோதும் முரண்பாட்டிற்குள் வரமாட்டார்கள். 6. சகல ஆத்மாக்களும் சகோதரர்கள் என்ற விழிப்புணர்வில், அவர்கள் தெய்வீகக் குணங்களை எடுத்துக் கொள்ளும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரினதும் தெய்வீகக் குணங்களையே பார்ப்பார்கள். அவர்கள் தாமும் தெய்வீகக் குணங்கள் உடையவர்களாக இருப்பதுடன் பிறரையும் தெய்வீகக் குணங்கள் உடையவராக ஆக்குவார்கள். 7. அவர்கள் தந்தையை தவிர வேறு எவரையும் நினைவு செய்ய மாட்டார்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையான அதிமேலான தந்தையின் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் அத்தகைய தந்தையைக் கண்டு பிடித்திருப்பதனால் நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். ஞானக்கடலான தந்தையிடம் இருந்து ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிரப்புவதற்கும் ஓர் வருமானத்தை ஈட்டுவதற்கும் நீங்கள் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளை மிக உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களை மாத்திரமே பார்க்கின்றார். அவர் வேறு எவரையும் நினைவுசெய்ய வேண்டியதில்லை. இந்த ஆத்மா (பிரம்மாபாபா) தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: நாங்கள் இருவரும் குழந்தைகளாகிய உங்களையே பார்க்கின்றோம். இந்த ஆத்மாவான நான் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராக பார்க்க வேண்டியதில்லை. ஆனால் தந்தையின் சகவாசத்தில் நான் அவ்வாறே பார்க்கின்றேன். நான் தந்தையுடனேயே இருக்கின்றேன், அப்படித்தானே? நான் அவருடைய குழந்தை என்பதால் நான் அவருடனேயே அனைத்தையும் பார்க்கின்றேன். நான் இதைச் செய்வது போல், ஓர் உலக அதிபதியாக சுற்றிப் பயணிக்கின்றேன். நான் திருஷ்டி கொடுக்கின்றேன். சரீரம் உட்பட அனைத்தும் மறக்கப்பட வேண்டும். இல்லாவிடின், தந்தையும் குழந்தையும் ஒருவராக ஆகுவதுபோல் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையான குழந்தைகளே, அதிகளவு முயற்சி செய்யுங்கள். தந்தை தன்னை அவதூறு செய்பவர்களையும் ஈடேற்றுவதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறே அவரைப் பின்பற்ற வேண்டும். சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகுங்கள். உங்கள் மத்தியில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, அந்த சரீரங்களை தொடர்ந்தும் மறந்திடுங்கள். தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். இதுவும் உயிருடனேயே மரணித்திருக்கும் ஸ்திதியை போன்றதேயாகும். நீங்கள் இவ் உலகைப் பொறுத்தவரையில் மரணித்தவர்களாக ஆக வேண்டும். கூறப்பட்டுள்ளது: நீங்கள் மரணிக்கும் போது, உலகம் உங்களைப் பொறுத்தவரையில் மரணிக்கின்றது. இங்கே நீங்கள் உயிருடன் மரணித்து வாழ வேண்டும், எனவே நீங்கள் சரீரங்கள் என்ற விழிப்புணர்வை தொடர்ந்தும் அகற்றிடுங்கள். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, தொடர்ந்தும் இதனைப் பயிற்சி செய்யுங்கள். காலையில் ஏகாந்தமாக அமர்ந்திருந்து, உங்களுடனேயே பேசுங்கள். அதிகளவு உற்சாகத்துடன் தந்தையை நினைவு செய்யுங்கள். ‘பாபா, நான் இப்பொழுது உங்களுடைய மடிக்கு வருகின்றேன்’. ஒரேயொருவரின் நினைவில் சரீரம் முடிய வேண்டும். இதுவே ஏகாந்தம் எனப்படுகின்றது. தந்தையை நினைவு செய்யும்போது, சரீரம், அதாவது தோல் நீக்கப்படும். உங்களுக்கு இப்பழைய உலகும், பழைய சரீரங்களும் முடிவடைய உள்ளன என்பது தெரியும். சங்கமயுகத்தின் சிறிதளவு காலமே முயற்சி செய்வதற்காக உள்ளது. குழந்தைகள் வினவுகின்றார்கள்: பாபா, இந்தக்கல்வி எப்பொழுது வரைக்கும் தொடரும்? பாபா கூறுகின்றார்: தேவ இராச்சியம் ஸ்தாபனை செய்யப்படும் வரையில், நான் தொடர்ந்தும் இந்த ஞானத்தைக் கூறுவேன், அதன் பின்னர் நீங்கள் புதிய உலகிற்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். இவை பழைய சரீரங்கள் என்பதால், தொடர்ந்தும் ஏதாவது ஒரு கர்மவேதனை இருக்கும். இதில் பாபா உங்களுக்கு உதவுவார் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் கடனாளி ஆகினால் அல்லது சுகயீனம் அடைந்தால் தந்தை ‘அது உங்கள் கர்மக்கணக்கு!’ என்றே கூறுவார். எவ்வாறாயினும், ஆம், யோக சக்தியினால், உங்கள் ஆயட்காலம் நீடிக்கப்படுகின்றது. முயற்சி செய்யுங்கள், ஆனால் கருணைக்காக வேண்டாதீர்கள். தந்தையை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதில் நன்மை உள்ளது. இயன்றளவு அனைத்தையும் யோக சக்தியுடன் செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் பாடுகின்றார்கள்: உங்கள் கண்களில் என்னை மறைத்து வைத்திருங்கள். நேசிக்கப்படும் ஒருவர் கண் மணி அல்லது உயிருக்கு மேலாக நேசிக்கப்படுபவர் என்று குறிப்பிடப்படுகின்றார். இந்தத் தந்தையே அதி அன்பிற்கினியவர், ஆனால் அவர் மறைமுகமாக உள்ளார். அந்தளவிற்கு அன்பு இருக்க வேண்டும், கேட்கவும் வேண்டாம்! தந்தை தனது குழந்தைகளை தனது கண்களில் மறைத்து வைத்திருக்கின்றார். கண்கள் பௌதீகமானவை அல்ல. ஆனால் புத்தியே அவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. அதி அன்பிற்குரிய அசரீரியான தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஞானக்கடலும் சந்தோஷக்கடலும் அன்புக் கடலும் ஆவார். அத்தகைய அதி அன்பிற்கினிய தந்தையின் மீது அதிகளவு அன்பு இருக்க வேண்டும். அவர் குழந்தைகளுக்காக தன்னலமற்ற சேவையை அதிகளவு செய்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களை வைரங்களைப் போன்றவர்கள் ஆகச் செய்கின்றார். பாபா மிக இனிமையானவர். அவர் அகங்காரம் அற்றவர், அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கின்றார் என்பதால், குழந்தைகளாகிய நீங்களும் அதிகளவு அன்புடன் சேவை செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றினால், உங்கள் பாக்கியத்தை நீங்கள் இழக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவர் மீது ஒருவர் ஆன்மிக அன்பைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், சரீர உணர்வுடன் இருப்பதால், அந்தளவிற்கு அன்பை ஒருவர் மீது ஒருவர் கொண்டிருப்பதில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஒருவர் மற்றவரிடமுள்ள குறைபாடுகளையே பார்க்கின்றீர்கள்: இவர் இப்படியானவர், அவர் இதனைச் செய்கின்றார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக இருந்த போது, நீங்கள் எவரிடத்திலும் குறைபாடுகளை காணவில்லை. நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகளவு அன்புடன் இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது அந்த ஸ்திதியைக் கிரகிக்க வேண்டும். முன்னர், நீங்கள் மிகவும் இனிமையானவராக இருந்தீர்கள். எனவே இப்பொழுதும், அவ்வாறு இனிமையானவராகி, சதா சந்தோஷத்தை அருளுங்கள். சரீர உணர்வுடையவர் ஆகுவதால், நீங்கள் துன்பத்தை விளைவித்ததால், உங்கள் ஆன்மிக சந்தோஷம் மறைந்தது. உங்கள் ஆயட்காலம் குறைந்தது. தந்தை இப்பொழுது உங்களை சதோபிரதானாகவும் சதா சந்தோஷத்தை அருள்பவராகவும் ஆக்கவே வந்திருக்கின்றார். நீங்கள் எந்தளவிற்கு தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு குறைபாடுகள் அகற்றப்படும். எந்தவொரு பாராபட்சமும் கூட முடிவடையும். உறுதியாக நினைவு செய்யுங்கள்: நாங்கள் சகோதரர்கள். உங்களை சகோதரர்கள் எனப் பார்ப்பதால், நீங்கள் எப்பொழுதும் தெய்வீகக் குணங்களைப் பார்ப்பீர்கள். அனைவரையும் தெய்வீகக் குணம் உடையவராக்க முயற்சியுங்கள். குறைபாடுகளை அகற்றி, தெய்வீகக் குணங்களை கிரகியுங்கள். ஒருபோதும் எவரையும் அவதூறு செய்யாதீர்கள். சிலருக்கு தம்மை புரிந்து கொள்ளவோ அல்லது தாம் மிகவும் நல்லவர்கள் என்று நினைக்கவோ முடியாத அளவிற்கு அவர்களிடம் குறைபாடுகள் உள்ளன. அவர்களிடம் குறைபாடுகள் இருப்பதனால், அவர்கள் தீய வார்த்தைகளை ஓர் இடத்தில் அல்லது வேறொரு இடத்தில் கூறிவிடுகிறார்கள். அத்தகைய விடயங்கள் சதோபிரதான் ஸ்திதியின் போது இடம்பெற மாட்டாது. எவ்வளவு இனிமையானவராக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் என்பதையும், தந்தை மீத எவ்வளவு அன்பு உள்ளது என்பதையும் காண நீங்கள் உங்களையே பாருங்கள். தந்தையை முற்றாகப் பற்றி பிடித்துக் கொள்ளும் அளவிற்கு அத்தகைய அன்பைக் கொண்டிருங்கள். பாபா, நீங்கள் எங்களை மிகவும் மேன்மையானவராகவும் விவேகமானவர்களாகவும் ஆக்குகிறீர்கள். நீங்கள் எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறீர்கள். இவ்வாறாகத் தந்தையின் புகழைப் பாடுவதன் மூலம் நீங்கள் உள்ளார்ந்தமாக குதூகலிக்க வேண்டும். உங்கள் ஆன்மிக சந்தோஷத்தைப் பேணிக் கொள்ளுங்கள். பாடப்பட்டுள்ளது: சந்தோஷத்தைப் போன்றதொரு போஷாக்கு இல்லை. தந்தையைச் சந்திப்பதில் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். 21 பிறவிகளுக்கு நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பதற்கும் எவரும் எதற்கும் கவலைப்படாமல் இருக்கும் வகையில் சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய போஷாக்கைப் பெறுகிறீர்கள். இப்பொழுது அதிகளவு கவலைகள் இருப்பதாலேயே அது மக்களின் சரீரங்களைப் பாதிக்கின்றது. நீங்கள் எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. சந்தோஷம் என்ற இந்த போஷாக்கைத் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் ஊட்டுங்கள். இந்த மகத்தான விருந்தோம்பலை ஒருவருக்கொருவர் வழங்குங்கள். மக்களால் பிறருக்கு அத்தகைய விருந்தோம்பலை வழங்க முடியாது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தின் அடிப்படையிலேயே இந்த விருந்தோம்பலை வழங்குகிறீர்கள். பிறரிடம் அவர்களின் நலன் பற்றி விசாரிப்பதும் தந்தையின் அறிமுகத்தை அவர்களுக்குக் கொடுப்பதே ஆகும். இது முதற்தரமான அற்புதமான ஞானத்தினதும் யோகத்தினதும் போஷாக்காகும். இதனை நீங்கள் ஒரேயொரு ஆன்மிக சத்திரசிகிச்சை நிபுணரிடம் மாத்திரமே பெறுகிறீர்கள். மன்மனாபவவும் மதியாஜிபவவும் ஆகும். அவ்வளவே. இந்த இரண்டு வாசகங்களும் போஷாக்காகும். நீங்கள் அதி அன்பிற்கினிய தந்தையிடம் இருந்து உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். இது ஒரு சிறிய விடயமல்ல. இந்த இரண்டு வாசகங்களும் மிகவும் பிரபல்யமானவை. இந்த இரண்டு வாசகங்களையும் கொண்டு, நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும் என்றென்றும் செல்வந்தராகவும் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைக் கடைந்து முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ‘இறை மாணவ வாழ்க்கையே மிகவும் சிறந்தது’ என்ற புகழ் இந்நேரத்திற்கு உரியது. இயன்றளவு இந்த ஆன்மிக போஷாக்கு பிறரைச் சென்றடையச் செய்து, ஒருவருக்கு ஒருவர் முன்னேறுவதற்கு உதவுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். மிகவும் பொறுமையாகவும், முதிர்ச்சியுடனும், உண்மையாகவும், புரிந்துணர்வுடனும் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைகளை வைரம் போன்றதாக ஆக்குங்கள். இனிய குழந்தைகளே, தந்தையிடம் இருந்து நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத்தையிட்டு நீங்கள் கவனயீனமாக இருக்கக் கூடாது. அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். அனைவருமே தந்தையின் செய்தியைப் பெற்றுக் கொள்ள உள்ளார்கள். செய்தி மிகவும் இலகுவானது. நீங்கள் கூற வேண்டியது: உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி, தந்தையை நினைவு செய்யங்கள், உங்கள் பௌதீகப் புலன்களினால் எந்தத் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கவோ, வார்த்தைகளைப் பேசவோ, செயல்களையோ செய்யாதீர்கள். ஒருநாள் உங்கள் மௌன சக்தி ஒலிக்கும். நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுவதுடன், உங்கள் பெயரும் தொடர்ந்தும் போற்றப்படும். இது நல்லதொரு நிறுவனம் என்றும், நீங்கள் நல்லதொரு பணியை முன்னெடுக்கிறீர்கள் என்றும், நீங்கள் மிகவும் எளியதொரு பாதையைக் காட்டுகிறீர்கள் என்றும் அனைவரும் புரிந்து கொள்வார்கள். பிராமணர்களின் விருட்சம் வளர்ச்சி அடையும், பெருமளவு பிரஜைகளும் தொடர்ந்தும் உருவாக்கப்படுவார்கள். பல நிலையங்கள் திறக்கப்படும். உங்கள் கண்காட்சிகள் கிராமங்கள் தோறும் இடம்பெறும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் முக்கியமானதொரு சேவையைச் செய்ய வேண்டும். உங்கள் புதிய நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்படும். அங்கே பல மக்கள் வந்து தமது வாழ்வை வைரங்கள் போன்றதாக ஆக்கிக் கொள்வார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதே அந்த அப்பாவி மக்களின் பாதங்கள் வழுக்கி விழ மாட்டாது. எந்தளவிற்கு நிலையங்கள் உள்ளனவோ, அந்தளவிற்கு அதிகளவு மக்கள் வாழ்விற்கான தானத்தை வந்து பெற்றுக் கொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் போது பலரும், மனிதர்களை தேவர்களாக மாற்றுகின்ற இராஜயோகத்தை தமக்குக் கற்பிக்க வாருங்கள் என உங்களை அழைப்பார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, கடவுள் அபுவிற்கு வந்துள்ளார் என அதிகளவு ஆரவாரம் கேட்கும். இந்த நேரத்தில் பழைய உலகில் சர்வதேச ரீதியில் பல பிரச்சினைகள் இருப்பதை குழந்தைகளாகிய நீங்கள் பார்க்கிறீர்கள். அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் இப்பொழுது முடிவடையப் போகின்றன. நீங்கள் அவை எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. அனைவரிடமும் கூறுங்கள்: அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இந்தப் பழைய உலகம் இப்பொழுது முடிவடைய உள்ளது. அதனிடத்தில் எந்த பற்றையும் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்குள் பற்று இருக்குமாயின், உங்கள் இதயம் சுத்தமாக இல்லாவிடின், நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க மாட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவில் இந்த ஞானச் செல்வத்தின் பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள் என்பதால் அதிகளவு சந்தோஷமும் இருக்க வேண்டும். உங்கள் இதயம் எந்தளவிற்கு தூய்மையாக உள்ளதோ அந்தளவிற்கு நீங்கள் ஏனையோரையும் தூய்மை ஆக்குவீர்கள். யோக ஸ்திதியில் உங்கள் இதயங்கள் தூய்மை ஆகும். குழந்தைகளாகிய நீங்களும் யோகியாகி, பிறரையும் யோகி ஆக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் இருக்க வேண்டும். உங்கள் சரீரத்தின் மீது பற்று இருக்குமாயின், நீங்கள் சரீர உணர்வு உடையவராக இருந்தால், உங்கள் ஸ்திதி பலவீனமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் உண்மையான வைரங்கள் ஆகுகின்றார்கள். ஆகையால், இயன்றவரையில் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்ற பயிற்சியைச் செய்யுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையை போன்று அகங்காரமற்றவர் ஆகி, அதிகளவு அன்புடன் அனைவருக்கும் சேவை செய்யுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் சொந்தக் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பாக்கியத்தை இழக்காதீர்கள்.2. நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்ட, சந்தோஷ போஷாக்கை நீங்களும் உண்டு பிறருக்கும் ஊட்டுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதிகளவு பொறுமையுடனும், முதிர்ச்சியுடனும், உண்மையுடனும், புரிந்துணர்வுடனும் தந்தையை நினைவுசெய்து உங்கள் வாழ்க்கையை ஒரு வைரம் போன்றதாக ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கவரப்படுபவராக இருப்பதில் இருந்து, கவர்ச்சியில் இருந்து விடுபட்டவராக மாற்றி, சக்தி சொரூபம் ஆகுவீர்களாக.சக்தி சொரூபம் ஆகுவதற்கு, கவரப்படுபவராக இருப்பதில் இருந்து, கவர்ச்சியில் இருந்து விடுபட்டவராக மாற்றம் அடையுங்கள். உங்களின் சரீரம், உங்களின் உறவுகள் அல்லது ஏதாவது பௌதீக உடமைகளின் மீது உங்களுக்குக் கவர்ச்சி இருக்குமாயின், மாயையாலும் வரமுடியும். அத்துடன் உங்களால் சக்தி சொரூபமாக ஆக முடியாதிருக்கும். இதனாலேயே, நீங்கள் முதலில் கவரப்படுபவராக இருப்பதில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள். அப்போது உங்களால் மாயையின் எந்தத் தடைகளுக்கும் முகங்கொடுக்கக் கூடியதாக இருக்கும். தடைகள் வரும்போது கதறுதல் அல்லது பயப்படுவதற்குப் பதிலாக, சக்திசாலி ஆகுங்கள். அப்போது நீங்கள் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் கருணையானது சுயநலமாக அன்றி, தன்னலம் அற்றதாகவும் பற்றில் இருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
நான் சங்கமயுக பிராமணர். இது வீணான எண்ணமோ தூய்மையின்மையின் சம்ஸ்காரமோ அல்லது சூத்திரரின் சம்ஸ்காரமோ கிடையாது. தூய்மையின்மை மற்றும் மறதியின் சம்ஸ்காரங்களை உங்களுடையதாக, ஒரு பிராமணருடையதாக அல்லாது, அவற்றை ஒரு சூத்திரரின் சம்ஸ்காரங்களாக அனுபவம் செய்யுங்கள். இவற்றை உங்களுடையதாக நீங்கள் கருதும்போது, நீங்கள் துயரப்படுவீர்கள் அல்லது மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவீர்கள்.
மாதேஸ்வரியின் விலைமதிக்க முடியாத வாசகங்கள்.
வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய மங்களகரமான நேரம்
எங்கள் வாழ்வில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஆத்மாக்களாகிய நாங்கள் நீண்ட காலமாகக் கொண்டிருந்தோம். எனவே, நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு நிச்சயமாக ஒரு நேரத்தில் நிறைவேற்றப்படும். இது எங்கள் இறுதிப் பிறவி, அந்த இறுதிப் பிறவியிலும் இது இறுதியான நேரமாகும். நீங்கள் இன்னமும் இளமையானவர்கள் என நீங்கள் எவருமே நினைக்க முடியாது. இளமையானவராயினும் முதுமையானவராயினும் அனைவருக்கும் சந்தோஷம் தேவையாகும். ஆனால், எது எங்களுக்கு துன்பத்தை விளைவிக்கின்றது என்ற இந்த ஞானத்தையும் நாங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் சிக்கிக் கொண்டுள்ள அந்த ஐந்து விகாரங்களினால், நாங்கள் உருவாக்கிக் கொண்ட கர்ம பந்தனங்களைக் கடவுளின் நினைவு என்ற தீயினால் மாத்திரமே எரிக்க முடியும் என்ற இந்த ஞானத்தை நீங்கள் இப்பொழுது பெற்றிருக்கின்றீர்கள். எங்கள் கர்ம பந்தனங்களில் இருந்து இலகுவாக விடுதலை அடைவதற்கான வழி, சர்வசக்திவான் பாபாவை ஒவ்வொரு மூச்சிலும் நடக்கும் போதும் உலாவித் திரியும் போதெல்லாம் நினைவு செய்வதாகும். கடவுள் எங்களுக்கு இந்த நிவாரணத்தைக் கூறி எங்களுக்கு உதவுவதற்கு தானே வருகின்றார். ஆனால் ஒவ்வோர் ஆத்மாவும் தத்தமது முயற்சியை செய்ய வேண்டும். கடவுளே தந்தை, ஆசிரியர், குருவின் வடிவில் வந்து எங்களுக்கு எங்கள் ஆஸ்தியை கொடுக்கின்றார். எனவே, முதன்முதலில், நாங்கள் தந்தைக்கு உரியவர்கள் ஆக வேண்டும், அதன் பின்னர் ஆசிரியருடன் கற்று பிறவி பிறவிக்காக, சந்தோஷம் என்ற எங்கள் வெகுமதியை நாங்கள் உருவாக்க வேண்டும். அதாவது, எங்கள் முயற்சிக்கு ஏற்ப, ஜீவன் முக்தி என்ற அந்தஸ்தை நாங்கள் பெறுகின்றோம். குருவின் வடிவில், அவர் எங்களைத் தூய்மையாக ஆக்கி, எங்களுக்கு முக்தி அளிக்கின்றார். எனவே இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற சரியான முயற்சியைச் செய்யுங்கள். இது பழைய கணக்கை முடித்து, புதிய வாழ்வை உருவாக்குவதற்கான நேரமாகும். இந்த நேரத்தில் ஆத்மாவான உங்களை நீங்கள் எந்தளவிற்கு தூய்மையாக்க முயற்சி செய்கிறீர்களோ, அந்தத் தூய பதிவு, அதற்கமைய பதிவு செய்யப்பட்டு, முழு சக்கரத்திற்கும் அது தொடரும். எனவே இந்த நேரத்தில் நீங்கள் ஈட்டுகின்ற வருமானத்திலேயே முழுச் சக்கரமும் தங்கியுள்ளது. பாருங்கள், இந்த நேரத்தில் மட்டுமே நாங்கள் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைப் பெறுகின்றோம். நாங்கள் தேவர்கள் ஆக வேண்டும். இது இப்பொழுது எங்கள் ஏறும் ஸ்ததியாகும். அதன் பின்னர் நாங்கள் அங்கே சென்று எங்கள் வெகுமதியை அனுபவம் செய்வோம். அங்கே, எதிர்காலத்தில் தாம் வீழ்வோம் என்பதை தேவர்கள் அறிந்திருப்பதில்லை. தமது சந்தோஷத்தின் பின்னர், தாம் வீழ்வோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தால், தாம் வீழ்வதைப் பற்றிக் கவலைப்படுவதில் அவர்களால் தமது சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது போய்விடும். மக்கள் எப்பொழுதும் ஏறும் முயற்சியிலேயே இருக்கும் வகையிலேயே ஆன்மிக சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, சந்தோஷத்திற்காக வருமானத்தை ஈட்டுதல் ஆகும். எவ்வாறாயினும், நாடகத்தில் அரைக்கு அரைவாசி என்ற பாகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற இரகசியத்தை நாங்கள் அறிந்திருக்கின்றோம். எனவே நாங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டிய நேரத்தில், நாங்கள் முயற்சி செய்து அந்த சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவே முயற்சி செய்வதற்கான சிறப்பியல்பாகும். ஒரு நடிகர் தான் நடிக்கும் போது தனது சிறப்பியல்புகள் அனைத்தினாலும் நடிக்க வேண்டும் என்பது அவரின் கடமையாகும். அப்பொழுதே பார்வையாளர்கள் ‘ஆஹா ஆஹா’ (மீண்டும் ஒருமுறை) எனக் கூறுவார்கள். ஆகையாலேயே தேவர்களுக்கு கதாநாயகன், கதாநாயகிகள் பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அவர்களின் ஞாபகார்த்த விக்கிரகங்கள் நினைவுகூரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. விகாரமற்ற இல்லறம் ஒன்றில் வாழ்ந்து, தாமரை போன்றதொரு ஸ்திதியை உருவாக்குவதே தேவர்களின் சிறப்பியல்பாகும். இந்த சிறப்பியல்பை நாங்கள் மறந்து விட்டதாலேயே பாரதம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இப்பொழுது எங்கள் வாழ்வை அவ்வாறாக ஆக்கி எங்களுக்கு உதவுவதற்கு கடவுளே வந்திருக்கின்றார். அவரின் கரங்களை நாங்கள் பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் எங்கள் வாழ்க்கைப் படகு அக்கரை சேரும். அச்சா.