10.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலமாக எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். என்றுமே எவர் மீதும் கோபப்படாதீர்கள். அன்பு மிகவும் இனிமையானது - அதனைக் கொண்டு நீங்கள் எவரையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கேள்வி:
உங்களை இரட்டைக் கிரீடமுடைய உலக அதிபதிகளாகவும், மிகச் சிறந்தவர்களாகவும் ஆக்குவதற்கு, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்ற வழிமுறை யாது?

பதில்:
1)தெய்வீகக் குணங்களை கிரகித்து, மிகமிக இனிமையானவர்கள் ஆகுங்கள். ஒருவரையொருவர் சகோதரத்துவ பார்வையுடன் பாருங்கள். உங்கள் சொந்த முயற்சியினூடாக இராச்சிய திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள். 2) தந்தையான கடவுளே, உங்களுக்குக் கற்பிப்பதால், நீங்கள் நாளாந்தம் கற்க வேண்டும். நீங்கள் எந்தளவிற்குக் கற்று, பிறருக்குக் கற்பிக்கிறீர்களோ, உங்கள் நடத்தையில் நீங்கள் முன்னேறுகிறீர்களோ, அதற்கேற்ப, நீங்கள் மிகச்சிறந்தவர் ஆகுவீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள், நரகத்தின் கரையிலிருந்து நீங்கள் வெளியேறி, நீங்கள் முன்னேறிச் செல்வதை நீங்கள் அறிவீர்கள். இந்த அதி மங்களகரமான சங்கமயுகம் முற்றிலும் வேறுபட்டது, அத்துடன் இரண்டிற்கும் இடையிலும் உள்ளது. உங்கள் படகு கடலுக்கு நடுவில் உள்ளது, நீங்கள் சத்தியயுகத்திலும் இல்லை, கலியுகத்திலும் இல்லை. நீங்கள் அதி மேன்மையான, அதி மங்களகரமான, சங்கமயுக பிராமணர்கள். சங்கமயுகம் பிராமணர்களுக்கானது, பிராமணர்கள் உச்சிக்குடுமி ஆவார்கள். இது பிராமணர்களுக்கான மிகச் சிறிய யுகம். இது ஒரேயொரு பிறவிக்கானது. இது உங்களுடைய சந்தோஷ யுகமாகும். என்ன சந்தோஷம்? கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்: அத்தகைய மாணவர்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் புத்தியில் இப்பொழுது முழு உலகச் சக்கரத்தின் ஞானமும் உள்ளது. இப்பொழுது, நாங்கள் பிராமணர்கள், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுவோம். முதலில், நாங்கள் இனிய வீடான, வீட்டிற்குச் செல்வோம். அதன் பின்னர் புதிய உலகிற்குச் செல்வோம். பிராமணர்களாகிய நாங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் ஆவோம். நாங்கள் இந்தக் குட்டிக்கரணத்தை அடிக்கின்றோம். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே, பல்ரூப வடிவத்தை அறிவீர்கள். உங்கள் புத்திகள் நாள் முழுவதும் இவ்விடயங்களை கடைகின்றன. இது உங்களுடைய மிகவும் அன்பான குடும்பம் என்பதால், நீங்கள் ஒவ்வொருவரும் மிக மிக அன்பானவர்கள் ஆக வேண்டும். தந்தை இனிமையானவர் என்பதால், அவர் குழந்தைகளாகிய உங்களையும் அவரைப் போன்றே இனிமையானவர் ஆக்குகின்றார். நீங்கள் எவர் மீதும் என்றுமே கோபப்படக்கூடாது. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். தந்தை எவர் மீதும் என்றுமே கோபப்படுவதில்லை. நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அதற்கேற்ப, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்தும் இனிமையானவர் ஆகுவீர்கள். இந்த நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். இது நினைவு யாத்திரை. நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் அமைதி தாமத்தினூடாக சந்தோஷ உலகிற்குச் செல்வீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை சதா சந்தோஷமானவர் ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். தந்தை தீய ஆவிகளை விரட்டுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார்:என்னை நினைவு செய்வதால், அந்தத் தீய ஆவிகள் தொடர்ந்தும் அகன்றுவிடும். உங்களில் எவருக்கேனும் தீய ஆவிகள் இருக்குமாயின், அவற்றை இங்கே என்னிடம் விட்டுச் செல்லுங்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, வந்து எங்கள் தீய ஆவிகளை அகற்றி, எங்களை தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள். எனவே, தந்தை உங்களை மிக அழகானவர் ஆக்குகிறார். பாபா, தாதா இருவரும் சேர்ந்து குழந்தைகளாகிய உங்களை அலங்கரிக்கிறார்கள். அவர்கள் எல்லைக்கு உட்பட்ட தந்தையர், ஆனால் இவரோ எல்லையற்ற தந்தை ஆவார். குழந்தைகள் தாமும் அன்பாக இருந்து, பிறருடனும் அதிகளவு அன்போடு பழக வேண்டும். விகாரங்கள் அனைத்தும் தானம் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு தானத்தை வழங்கும் போது, சகுனங்கள் அகற்றப்படும். இதில் எவ்விதமான சாக்குப்போக்குகளும் இருக்க முடியாது. நீங்கள் எவரையும் அன்பினால் வெற்றி கொள்ள முடியும். அன்போடு விளங்கப்படுத்துங்கள். அன்பு மிகவும் இனிமையானது. மக்களால் சிங்கங்கள், யானைகள், மற்றும் மிருகங்களை அன்பினால் கட்டுப்படுத்த முடிகிறது. அம்மக்கள் விகாரங்கள் உடையவர்கள், ஆனால் நீங்களோ இப்பொழுது தேவர்கள் ஆகுகிறார்கள். எனவே, நீங்கள் தெய்வீகக் குணங்களை கிரகித்து, மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். ஒருவரையொருவர் சகோதரத்துவ பார்வையுடன் பாருங்கள் அல்லது சகோதரர், சகோதரிகள் எனப் பாருங்கள். ஓர் ஆத்மா என்றுமே இன்னோர் ஆத்மாவிற்கு துன்பத்தை விளைவிக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்களுடைய பாக்கிய இராச்சியமான சுவர்க்கத்தை கொடுக்கவே நான் வந்திருக்கின்றேன். இப்பொழுது, என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை இரட்டை கிரீடமுடைய உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே நான் வந்திருக்கிறேன், ஆனால் இதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எவர் மீதும் நான் கிரீடத்தை அணிவிக்க மாட்டேன். உங்கள் சொந்த முயற்சியினால் நீங்களே உங்களுக்கான இராச்சிய திலகத்தை இட்டுக் கொள்ள வேண்டும். தந்தை முயற்சி செய்வதற்கான வழியைக் காட்டுகிறார். இவ் வழியில் நீங்கள் உங்களை இரட்டைக் கிரீடமுடைய அதிபதியாக உங்களை ஆக்கிக் கொள்ள முடியும். இந்தக் கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள். என்றுமே கற்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் ஏதோவொரு காரணத்திற்காகக் குழப்பம் அடைந்து, கற்பதை நிறுத்தினால், நீங்கள் அதிகளவு நட்டமடைய நேரிடும். தொடர்ந்தும் உங்கள் இலாப நட்டத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த இறை பல்கலைகழகத்தின் மாணவர்கள், பூஜிக்கத் தகுதியான தேவர்கள் ஆகுவதற்காக நீங்கள் தந்தையான கடவுளிடம் கற்கிறீர்கள். எனவே, நீங்கள் அதற்கேற்ப நாளாந்த மாணவர்கள் ஆக வேண்டும். மாணவப் பருவமே மிகச் சிறந்தது! நீங்கள் எந்தளவிற்குக் கற்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் பிறருக்குக் கற்பிப்பதுடன், உங்கள் நடத்தையிலும் முன்னேற வேண்டும், அப்பொழுது நீங்கள் மிகச்சிறந்தவர்கள் ஆகுவீர்கள். இனிய குழந்தைகளே, இது இப்பொழுது நீங்கள் திரும்பிச் செல்கின்ற பயணம். நீங்கள் எவ்வாறு சத்தியயுகத்தில் இருந்து, திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகங்களினூடாக தொடர்ந்தும் கீழ் இறங்கினீர்களோ, அவ்வாறாகவே, இப்பொழுது கலியுகத்தில் இருந்து சத்தியயுகத்திற்கு மேலேறிச் செல்ல வேண்டும். நீங்கள் திரேதா யுகத்தை அடையும் போது, உங்கள் பௌதீகப் புலன்களின் விஷமம் முடிவடையும். ஆகையால், எந்தளவிற்கு ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அதற்கேற்ப, இரஜோ, தமோ ஸ்திதிகளின் துரு தொடர்ந்தும் அகற்றப்படும். அதன் பின்னர், எந்தளவிற்கு துரு தொடர்ந்தும் அகற்றப்படுகிறதோ, அதற்கேற்ப, காந்தமான தந்தையின் மீதான கவர்ச்சி அதிகரிக்கும். ஆத்மாக்களாகிய உங்களில் சிலர் கவரப்படாதிருந்தால், நீங்கள் நிச்சயமாக துருவினால் மூடப்பட்டிருக்கிறீர்கள். துரு முற்றாக அகற்றப்பட்டு, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய தங்கம் ஆகும் போது, அதுவே இறுதியான கர்மாதீத் ஸ்திதி ஆகும். இனிய குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை பிரதானமாகக் கூறுவது: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! உங்கள் சரீர உறவினர் அனைவரையும் மறந்திடுங்கள், உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் மறந்து சதா என்னை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள்! நீங்கள் நிச்சயமாக, தூய்மை ஆக வேண்டும். ஒரு குமாரி எந்தளவிற்கு தூய்மையாக இருக்கிறாரோ, அனைவரும் அவளை வணங்குவார்கள். அவர் திருமணம் செய்த உடனேயே, அவள் பூஜிப்பவள் ஆகி, அனைவருக்கும் முன் தலை வணங்குகிறாள். ஒரு குமாரி தனது பெற்றோரின் வீட்டில் இருக்கின்ற போது, அவள் அந்தளவிற்கு பல உறவுமுறைகளை நினைவுசெய்வதில்லை. திருமணத்தின் பின்னர், சரீர உறவுமுறைகள் அதிகரிப்பதுடன், கணவன், குழந்தைகள் மீதுள்ள பற்றும் அதிகரிக்கின்றது. அதன் பின்னர் அவள் தனது மாமனார் மாமியாரையும் நினைவுசெய்கிறாள். முதலில், அவளுக்கு தாய், தந்தை மீது மாத்திரமே பற்று இருந்தது. இங்கே, அந்த உறவுமுறைகள் அனைத்தும் மறக்கப்படல் வேண்டும், ஏனெனில் இவர் மாத்திரமே ஒரேயொரு உண்மையான தாயும் தந்தையும் ஆவார். இது இறை உறவுமுறை ஆகும். நினைவு கூரப்பட்டுள்ளது: நீங்களே தாயும், நீங்களே தந்தையும். இந்தத் தாயும் தந்தையும் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார்கள். ஆகையால் இந்தத் தந்தை கூறுகின்றார்: உங்கள் எல்லையற்ற தந்தையான என்னை சதா நினைவு செய்யுங்கள். சரீரதாரிகளின் மீதும் எப்பற்றும் வைக்காதீர்கள். இந்த எல்லையற்ற தந்தை உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அத்தகைய இனிய தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்கையில், தொடர்ந்தும் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுங்கள். இந்த நினைவு சக்தியினாலேயே, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுவதுடன், சுவர்கத்தின் அதிபதிகளாகவும் ஆகுகிறீர்கள். சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, உங்கள் இதயம் சந்தோஷம் அடைகிறது. சதா தாமும் நினைவுசெய்து, தொடர்ந்து பிறரையும் நினைவுசெய்யத் தூண்டுபவர்கள், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். இந்த முயற்சியைச் செய்வதன் மூலம், நீங்கள் இறுதியில் அந்த ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்வீர்கள். இவ் உலகம் பழையது, சரீரங்களும் பழையவை, சகல சரீர உறவினர்களும் சரீரங்கள் உட்பட அனைத்தும் பழையவை. இப்பொழுது, உங்கள் புத்தியின் யோகத்தை அவர்கள் அனைவரிடம் இருந்தும் அகற்றி, ஒரேயொரு தந்தையோடு மாத்திரம் இணைத்திடுங்கள். அப்பொழுதே இறுதிக் கணங்களில், அந்தத் தந்தையை மாத்திரம் நீங்கள் நினைவுசெய்வீர்கள். நீங்கள் வேறு எந்த உறவினரையும் நினைவு செய்தால், நீங்கள் இறுதியில் அவர்களையே நினைவுசெய்வீர்கள், அதனால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். இறுதியில் எல்லையற்ற தந்தையை நினைவு செய்பவர்கள், சாதாரண மனிதர்களில் இருந்து நாராயணனைப் போல் ஆகுவார்கள், நீங்கள் தந்தையை நினைவுசெய்யும் போது, சிவாலயம் தொலைவில் இருப்பதில்லை. இனிமையிலும் இனிமையான, அன்பான, நீண்ட காலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக, எல்லையற்ற தந்தையிடம் வருகிறீர்கள். ஏனெனில் எல்லையற்ற தந்தையிடம் இருந்து நீங்கள் உலகின் எல்லையற்ற இராச்சியத்தை பெறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது என்றுமே மறக்கப்படல் ஆகாது. இது சதா நினைவு செய்யப்படுமாயின், குழந்தைகளாகிய நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியும். நடந்தும், உலாவித்திரியும் போதும், மீண்டும் மீண்டும் தொடர்ந்தும், உங்கள் பட்ஜைப் பாருங்கள், உங்கள் இதயத்தில் அது பற்றிக் கொள்ளட்டும். ஓஹோ! நான் கடவுளின் ஸ்ரீமத்தினூடாக இதுவாகிறேன்! பட்ஜைப் பார்க்கின்ற போது, தொடர்ந்தும் அவரை நேசியுங்கள். தொடர்ந்தும் கூறுங்கள்: பாபா, பாபா! அப்பொழுது நீங்கள் தந்தையினூடாக இவ்வாறு ஆகுகிறீர்கள் என்ற விழிப்புணர்வை சதா கொண்டிருப்பீர்கள். இனிய குழந்தைகளாகிய நீங்கள் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். நாள் முழுவதும், தொடர்ந்தும் சேவையைப் பற்றிய சிந்தனையையே கொண்டிருங்கள். பாபாவிற்குச் சேவை செய்யாது இருக்க முடியாத குழந்தைகளே தேவை. குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகையும் சுற்றி வளைக்க வேண்டும். அதாவது, தூய்மையற்ற உலகைத் தூய்மையானதாக ஆக்க வேண்டும். முழு உலகமும் துன்ப உலகிலிருந்து சந்தோஷ உலகமாக மாற்றமடைய வேண்டும். ஓர் ஆசிரியர் கற்பிப்பதில் சந்தோஷம் அடைகிறார். நீங்களும் இப்பொழுது உயர்தர ஆசிரியர்களாக வேண்டும். ஆசிரியர் எந்தளவிற்கு சிறந்தவராக உள்ளாரோ, அந்தளவிற்கு அவர் பிறரையும் தனக்குச் சமம் ஆக்குவதுடன், அவர் களைப்படைவதும் இல்லை. இறை சேவை செய்வதில் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியும். நீங்கள் தந்தையின் உதவியையும் பெறுகிறீர்கள். இது மிகப் பெரிய எல்லையற்ற வியாபாரம். வியாபாரிகள் செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். இந்த ஞானமார்க்கத்தில் அவர்களே மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தந்தை எல்லையற்ற வியாபாரி ஆவார். இந்தப் பேரம் முதற்தரமானது, ஆனால் இதற்கு உங்களுக்கு அதிகளவு தைரியம் தேவை. முயற்சி செய்வதால், புதிய குழந்தைகள் பழையவர்களை விட முன்னேறிச் செல்ல முடியும். ஒவ்வொருவரின் பாக்கியமும் தனிப்பட்டது என்பதால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள், உங்களை முழுமையாக சோதனை செய்து பார்க்க வேண்டும். அவ்வாறான சோதனை செய்பவர்கள், இரவு பகலாக, முயற்சி செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அவர்கள் கூறுவார்கள்: எங்கள் நேரத்தை நாங்கள் ஏன் வீணாக்க வேண்டும்? இயன்றளவு எங்கள் நேரத்தை நாங்கள் தகுதியான வகையில் பயன்படுத்துவோம். அவர்கள் தமக்குள் உறுதியாக சத்தியம் செய்கிறார்கள்: நான் என்றுமே தந்தையை மறக்க மாட்டேன். நான் நிச்சயமாக ஒரு புலமைப்பரிசைப் பெறுவேன். அத்தகைய குழந்தைகள் உதவியையும் பெறுகிறார்கள். அத்தகைய முயற்சியைச் செய்கின்ற புதிய குழந்தைகளை நீங்கள் பார்ப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் காட்சிகளைக் காண்பீர்கள். ஆரம்பத்தில் என்னவெல்லாம் இடம்பெற்றதோ, இறுதியில் நீங்கள் அவற்றைப் பார்ப்பீர்கள். நீங்கள் நெருங்கி வருகின்ற போது, நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனம் ஆடுவீர்கள். மறுபுறத்தில், அநாவசியமான இரத்தம் சிந்துதலும் தொடர்ந்து இடம்பெறும். குழந்தைகளாகிய உங்களுடைய இறை ஓட்டப்பந்தயம் இடம்பெறுகின்றது. நீங்கள் ஓடி முன்னேறிச் செல்லும் போது, புதிய உலகின் காட்சிகள் உங்கள் முன்னால் நெருங்கி வரும். அப்பொழுது உங்கள் சந்தோஷம் தொடர்ந்தும் அதிகரிக்கும். காட்சிகளை நெருக்கமாகப் பார்க்க முடியாதவர்களால் அந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியாது. கலியுக உலகில் இப்பொழுது ஆர்வமின்மை கொண்டிருக்க வேண்டும், புதிய சத்தியயுக உலகின் மீது அதிகளவு அன்பிருக்க வேண்டும். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்தால், சுவர்க்கத்தின் ஆஸ்தியையும் நினைவு செய்வீர்கள். அப்பொழுது சிவபாபாவும் நினைவு செய்யப்படுவார். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்ல இருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்: இப்பொழுது உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும், தலை சுவர்க்கத்தை நோக்கியும் உள்ளன. இது இப்பொழுது இளையவர், முதியவரென அனைவருக்குமான இளைப்பாறும் யுகம் ஆகும். பாபாவிற்கு எப்பொழுதும் இந்தப் போதை உள்ளது: ஓஹோ! நான் சென்று, இந்தச் சிறிய கிருஷ்ணர் ஆகுவேன். அவருக்கு முன்கூட்டியே பரிசுகள் அனுப்பப்பட்டு விட்டது. முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்ற கோபியரே, பரிசுகள் அனுப்புகிறார்கள். அவர்கள் அதீந்திரிய சுகத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அமரத்துவ உலகில் தேவர்கள் ஆகுவோம். நாங்களே முன்னைய கல்பத்திலும் அவ்வாறு ஆகினோம். அதன் பின்னர் நாங்கள் 84 பிறவிகளை எடுத்தோம். நீங்கள் இந்தக் குட்டிக்கரணத்தை நினைவு செய்தால், அதுவுமே மகாபாக்கியம்: எப்பொழுதும் அளவற்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டலாபச் சீட்டைப் பெறுகிறீர்கள். நாங்கள் 5000 வருடங்களின் முன்னரும், எங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோரினோம். நாளை மீண்டும் அதனைக் கோருவோம். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முன்னைய கல்பத்தைப் போன்றே மீண்டும் பிறப்பெடுப்போம், நாங்கள் அதே தாய், தந்தையரைக் கொண்டிருப்போம். ஸ்ரீகிருஷ்ணரின் தந்தையாக யார் இருந்தாரோ, அவரே மீண்டும் அவரின் தந்தை ஆகுவார். அத்தகைய எண்ணங்களைத் தொடர்ந்தும் நாள் முழுவதும் கொண்டிருப்பவர்கள், மிகவும் களிப்புடன் இருப்பார்கள். இந்த ஞானக்கடலை நீங்கள் கடையாமல் இருந்தால், நீங்கள் ஆரோக்கியம் அற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இறைசேவையில் என்றுமே களைப்படையாதீர்கள். சிறந்ததோர் ஆசிரியர் ஆகி, பிறரை உங்களுக்குச் சமம் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. நினைவு சக்தியினூடாக, ஆத்மாவைத் தூய்மை ஆக்குங்கள். எந்தச் சரீரதாரிகளின் மீதும் எப்பற்றையும் கொண்டிருக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஏகாந்தத்திற்குள் செல்வதன் மூலம், மௌனசக்தியினால், ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு விநாடியில் தீர்வு காண்பீர்களாக.

ஒரு புதிய, சக்திமிக்க கண்டுபிடிப்பு உருவாக்கப்படும் போது, அது நிலத்திற்கடியில் செய்யப்படுகின்றது. இங்கும், ஏகாந்தத்தில் இருப்பது என்றால் நிலத்திற்கடியில் இருப்பதாகும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், உங்கள் செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போதும், இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் போதும் கொடுக்கும் போதும், வழிகாட்டல்களைக் கொடுக்கும் போதும், இந்தப் பௌதீக உலகிற்கும் உங்கள் சரீர உணர்விற்கும் அப்பால் மௌனத்திற்குள் செல்லுங்கள். இந்த ஸ்திதியின் பயிற்சியாலும், அனுபவத்தாலும் அத்துடன் பிறருக்கு இந்த அனுபவத்தைக் கொடுப்பதாலும் உங்களுக்கு ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இதனைச் செய்வதால், நீங்கள் பிறருக்கு ஒரு விநாடியில் அமைதியினதும் சக்தியினதும் அனுபவத்தைக் கொடுப்பீர்கள். உங்கள் முன்னால் வருகின்ற எவரும், உங்களுடைய இந்த ஸ்திதியினூடாக ஒரு காட்சியை அனுபவம் செய்வார்கள்.

சுலோகம்:
வீணான, பாவகரமான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருந்து, ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருப்பதே யோகியுத்தாக இருப்பதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

தந்தை பிரம்மா குழந்தைகளை அதிபதிகள் ஆக்கி, தன்னை சேவகராகவே கருதினார். அவர்களுக்கு அவர் அதிபதிகள் என்ற மரியாதையைக் கொடுத்தார். அவர் அவர்களுக்கு கௌரவத்தையும் பெயரையும் கொடுத்தார். அவர் என்றும் தனது பெயரைப் போற்றவில்லை. ஆனால், எப்பொழுதும் எனது குழந்தைகள் என்றே கூறினார். தந்தை தனது பெயரையும் கௌரவத்தையும் மரியாதையையும் துறந்து பிறரை ஈடேற்றினார். அத்துடன் குழந்தைகளின் சந்தோஷமே தனது சொந்த சந்தோஷமெனக் கருதினார். குழந்தைகளின் எந்தவொரு சந்தோஷமின்மையின் அனுபவத்தையும் தனது சந்தோஷம் இன்மையாகவே அவர் கருதினார். அவ்வாறாகத் தந்தையைப் பின்பற்றி, ஈடேற்றுகின்ற உணர்வுகளால் நிரம்பியவர் ஆகுங்கள். அப்பொழுதே உலக நன்மை என்ற பணி நிறைவேறும்.