11.01.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    20.10.2008     Om Shanti     Madhuban


ஒரு திருப்தி மணியாகி, உலகத்திற்கு திருப்தி ஒளியைப் பரப்புங்கள். நீங்களும் திருப்தியாக இருந்து, அனைவரையும் திருப்திப்படுத்துங்கள்.


இன்று, எப்போதும் திருப்தியாக இருக்கும் தனது திருப்தி இரத்தினங்களை பாப்தாதா பார்க்கிறார். ஒவ்வொரு திருப்தி இரத்தினத்தின் ஜொலிப்பினூடாக அழகான பிரகாசம் எங்கும் ஜொலிக்கிறது. ஒவ்வொரு திருப்தி இரத்தினமும் தந்தையாலும் அனைவராலும் அத்துடன் சுயத்தாலும் நேசிக்கப்படுகிறார். அனைவரும் திருப்தியை விரும்புகிறார்கள். திருப்தி என்பது எப்போதும் சகல பேறுகளாலும் நிரம்பி இருப்பதாகும். ஏனென்றால், எங்கு திருப்தி இருக்கிறதோ, அங்கே அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை. திருப்தியான ஆத்மாவிற்கு திருப்தி என்ற இயல்பான சுபாவம் காணப்படும். திருப்தி சக்தியானது, இலகுவாகவும் இயல்பாகவும் எங்கும் உள்ள சூழலில் திருப்தியைப் பரப்புகிறது. இத்தகையதோர் ஆத்மாவின் முகமும் கண்களும் சூழலில் திருப்தி அலைகளைப் பரப்பும். எங்கு திருப்தி உள்ளதோ, அங்கே இயல்பாகவே ஏனைய சிறப்பியல்புகளும் வந்துவிடும். சங்கமயுகத்தில் தந்தையிடம் இருந்து பெறுகின்ற விசேடமான பரிசு திருப்தி ஆகும். திருப்தி என்ற ஸ்திதி எப்போதும் புற நிலைகளிலும் வெற்றி அடையும். புறச் சூழ்நிலைகள் தொடர்ந்து மாறும். ஆனால், திருப்தி என்ற சக்தி சதா அதிகரித்துக் கொண்டே இருக்கும். எத்தனை புறச் சூழ்நிலைகள் உங்களின் முன்னால் வந்தாலும், ஒவ்வொரு கணமும் மாயையும் இயற்கையும் திருப்தி இரத்தினத்தின் முன்னால் ஒரு பொம்மலாட்டத்தைப் போன்றே தென்படும். ஆகவே, திருப்தி ஆத்மாக்கள் ஒருபோதும் துயரப்பட மாட்டார்கள். புறச் சூழ்நிலைகளின் காட்சி, களிப்பூட்டும் காட்சியாகவே அனுபவம் செய்யப்படும். இந்தக் களியாட்டத்தை அனுபவம் செய்வதற்கு, உங்களின் ஸ்திதி என்ற ஆசனம் எப்போதும் பற்றற்ற பார்வையாளருக்கு உரியதாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு ஒரு பொழுது போக்கின் அனுபவத்தைக் கொடுக்கும். காட்சி எவ்வளவுதான் மாறினாலும், பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் ஒரு திருப்தியான ஆத்மாவால் ஒவ்வொரு புறச் சூழ்நிலையையும் சுயத்தின் ஸ்திதியால், ஒரு பற்றற்ற பார்வையாளராக இருப்பதன் மூலம் மாற்ற முடியும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் எப்போதும் திருப்தியாக இருக்கிறேனா? எப்போதும்? நீங்கள் எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டும் திருப்தியாக இருக்கிறீர்களா?

ஒவ்வொரு சக்திக்கும், உங்களின் சந்தோஷத்திற்கும் இலேசாகவும் ஒளியாகவும் ஆகி நீங்கள் பறப்பதற்கும், பாப்தாதா எப்போதும் குழந்தைகளுக்குக் கூறுகிறார் - எப்போதும் ‘சதா’ என்ற வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். பிராமண வாழ்க்கையின் அகராதியில் ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தை இடம்பெறுவதில்லை. ஏனென்றால், திருப்தி என்றால் சகல பேறுகளும் என்று அர்த்தம். எங்கு சகல பேறுகளும் உள்ளனவோ, அங்கே ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தை இருக்க மாட்டாது. எனவே, நீங்கள் எப்போதும் ஓர் அனுபவத்தைக் கொண்டிருப்பவரா அல்லது இன்னமும் முயற்சி செய்து கொண்டிருப்பவரா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே இதைக் கேட்டீர்களா? நீங்கள் உங்களுக்குள் இதைச் சோதித்துப் பார்த்தீர்களா? நீங்கள் எல்லோரும் தந்தையின், தனிச் சிறப்புடைய, அதியன்பிற்குரிய, இனிய, அன்பான, ஒத்துழைக்கும் சுய மாற்றத்தை ஏற்படுத்தும் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அத்தகையவர்கள்தானே? அப்படி உள்ளதா? தந்தை உங்களைப் பார்ப்பதைப் போன்றே நீங்கள் உங்களை அனுபவம் செய்கிறீர்களா? சிலவேளைகளில் மட்டும் அன்றி, எல்லா வேளையும் திருப்தியாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் ‘சதா’ என்ற வார்த்தையை நினைவு செய்கிறீர்கள்தானே? நீங்கள் மெதுவாக உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். நல்லது. மிகவும் நல்லது. உங்களில் வெகு சிலர் மட்டுமே உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். அதைக் கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னரே நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா மீண்டும் மீண்டும் உங்களின் கவனத்தை ஈர்க்கிறார்: இப்போது, காலத்தையும் அத்துடன் சுயம் என்ற இரண்டையும் பாருங்கள். காலத்தின் வேகத்தையும் சுயத்தின் வேகத்தையும் சோதியுங்கள். நீங்கள் திறமைச் சித்தி அடைய வேண்டும், அல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்: நான் தந்தையின் ராஜ் துலார்(விசேடமான அதியன்பிற்குரிய இராஜ குழந்தை) ஆவேன். நீங்கள் உங்களை இராஜ குழந்தைகளாகக் கருதுகிறீர்கள், அல்லவா? பாப்தாதா உங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்? ‘அதியன்பிற்குரிய குழந்தைகள்’. எனவே, யார் அந்த அதியன்பிற்குரிய குழந்தைகள்? தந்தையைப் பின்பற்றுபவர்கள். பின்பற்றுவது மிக, மிக, மிக இலகுவானது. அதில் சிரமமே கிடையாது. நீங்கள் இந்த ஒரு விடயத்தைப் பின்பற்றினால், உங்களால் இலகுவாக சகல விடயங்களையும் பின்பற்ற முடியும். தந்தை தினமும் ஒரேயொரு வாக்கியத்தை நினைவூட்டுகிறார். உங்களுக்கு அது நினைவிருக்கிறது, அல்லவா? உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களின் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். இது ஒரேயொரு வாக்கியம்தானே? ஆத்மாக்களே அதை நினைவு செய்கிறார்கள். தந்தையிடம் இருந்து பொக்கிஷங்களைப் பெற்றுள்ளவர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. ஏனென்றால், அவர்களிடம் அளவற்ற பேறுகளும் எல்லையற்ற பொக்கிஷங்களும் உள்ளன. நீங்களே அருள்பவரின் குழந்தைகள் ஆவீர்கள். உங்களால் மற்றவர்களுக்கு வழங்காமல் இருக்க முடியாது. உங்களில் பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டம் என்ன? இரட்டை வெளிநாட்டவர்கள். எனவே, உங்களின் பட்டமே ‘இரட்டை’ என்பதாகும். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அத்துடன் இயல்பாகவே எப்போதும் ‘ஆஹா எனது குழந்தைகளே! ஆஹா!’ என்ற பாடலைப் பாடுகிறார். இது நல்லது. நீங்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து எந்த விமானத்தில் வந்துள்ளீர்கள்? பௌதீகமாக, நீங்கள் எந்தவொரு விமானத்திலும் வந்திருக்கலாம். ஆனால், பாப்தாதா எந்த விமானத்தைப் பார்க்கிறார்? நீங்கள் அனைவரும் ஆழ்ந்த அன்பெனும் விமானத்தில் ஏறி உங்களின் அன்பான வீட்டை வந்து அடைந்துள்ளீர்கள். இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: ஓ அன்பான, அதியன்பிற்குரிய குழந்தையே, எப்போதும் ஒரு திருப்தி இரத்தினமாகி, திருப்தி ஒளியை உலகில் பரப்புவாயாக. திருப்தியாக இருப்பதுடன், மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். தாங்கள் திருப்தியாக இருப்பது இலகுவானது, ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது சிறிது கஷ்டம் என்று சில குழந்தைகள் கூறுகிறார்கள். ஒவ்வோர் ஆத்மாவையும் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்றால், அதற்கான வழிமுறை மிகவும் இலகுவானது என்பதை பாப்தாதா அறிவார். யாராவது உங்களின் மீது அதிருப்தி அடைந்து, உங்களுடன் அதிருப்தியாகவே இருந்தால், அப்போது அந்த நபர் எப்படியும் அதிருப்தியாகவே இருப்பார். எவ்வாறாயினும், அவர்களின் அதிருப்தியால் ஏதொவொரு அளவிற்கு நீங்களும் அதன் ஆதிக்கத்திற்கு உட்படுகிறீர்கள். உங்களுக்குள் வீணான எண்ணங்கள் தோன்றுகின்றன, அல்லவா? பாப்தாதா உங்களுக்கு வழங்கிய மந்திரத்தின், நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளின் மந்திரத்தின் விழிப்புணர்வின் சொரூபமாக நீங்கள் உங்களை வைத்திருந்தால், உங்களுக்குள் எந்த வீணான எண்ணங்களும் தோன்றாது. ஒருவர் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், நீங்கள் உங்களை சதா பற்றற்றவர்களாகவும் அவரின் அதிர்வலைகளில் இருந்து பற்றற்றவராகவும் எப்போதும் தந்தையின் மீது அன்பு உடையவராகவும் அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்பாகவும் இருக்கும் உங்களின் மேன்மையான ஸ்திதியின் அதிர்வலைகள், அந்த ஆத்மாவைச் சென்று அடையா விட்டாலும், அவை நிச்சயமாக சூழலில் பரவும். யாராவது ஒருவர், தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருந்து வீணான எண்ணங்களின் வடிவில் நீங்கள் அந்த ஆத்மாவால் பாதிக்கப்பட்டால், அனைவரின் எண்ணங்களும் சூழலில் பரவும். ஆகவே, பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்பானவராகவும் ஆகுங்கள். அத்துடன் அந்த ஆத்மாவிற்காக நன்மை செய்கின்ற, தூய உணர்வுகளையும் நல்லாசிகளையும் கொண்டிருங்கள். அவர் ஒரு தவறு செய்ததால், நான் அவர்களுக்கு வலிமையுடன் கூற வேண்டி இருந்தது எனக் குழந்தைகள் பல தடவைகள் கூறுகிறார்கள். உங்களின் சுபாவமும் முகமும்கூடச் சிறிதளவு வலிமை நிறைந்ததாக ஆகுகின்றன. எனவே, அவர் ஒரு தவறு செய்தார். ஆனால் நீங்கள் காட்டிய வலிமை ஒரு தவறில்லையா? அவர் ஏதோ தவறு செய்தார், நீங்கள் வலிமையுடன் எதையாவது சொல்கிறீர்கள். இது கோபத்தின் சுவடு என்றே சொல்லப்படும், அப்படித்தானே? ஒரு தவறு இன்னொரு தவறைச் சரி ஆக்குமா? தற்காலத்தில் காலத்திற்கேற்ப, நீங்கள் உங்களின் வார்த்தைகளை வலிமையுடன் வெளிவிடும்போது, விசேட கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏனென்றால், உரத்துப் பேசுவது அல்லது அவர் மாறுகிறார் இல்லை எனச் சிந்தித்து, அதனால் வெறுப்புடன் பேசுவது என்பவை இரண்டாம் இலக்க விகாரத்தின் சுவடே ஆகும். உங்களின் வாயில் இருந்து வெளிவரும் வார்த்தைகள் மலர்களைத் தூவுவது போல் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இனிமையான வார்த்தைகள், புன்னகைக்கும் முகம், இனிய மனோபாவம், இனிமையான திருஷ்டி, இனிமையான உறவுமுறைகளும் தொடர்புகளும் - இவையும் சேவைக்கான வழிமுறைகள் ஆகும். ஆகவே, பெறுபேற்றைப் பாருங்கள். அவர்கள் தவறு செய்தால், அவர்கள் பிழையே. வேறெந்த இலட்சியமும் இல்லாமல், அவர்களுக்குப் புரிய வைக்கும் இலட்சியத்துடன் - நீங்கள் கற்பித்தல்களைக் கொடுத்து அவர்களுக்கு விளங்கப்படுத்தும் உங்களின் இலட்சியம் மிகவும் நல்லதே - அதன் பெறுபேறு என்னவாக உள்ளது? அவர் மாறினாரா? உண்மையில், எதிர்காலத்தில் உங்களுக்கு முன்னால் வருவதற்கே அவர் பயப்படுவார். உங்களுக்கு இருந்த இலட்சியம் பூர்த்தியாகவில்லை. ஆகவே, உங்களின் எண்ணங்கள், உங்களின் வார்த்தைகள், நீங்கள் பேசும் விதம், உங்களின் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகள் இவை அனைத்தும் எப்போதும் இனிமையாக இருக்க வேண்டும். அதாவது, எப்போதும் மகத்துவமாக இருக்க வேண்டும். ஏனென்றால், தற்காலத்தில் மக்கள் உங்களின் நடைமுறை வாழ்க்கையைக் காணவே விரும்புகிறார்கள். நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்யும்போது, அவர்கள் அந்த வார்த்தைகளால் செய்யப்பட்ட சேவையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, நெருங்கி வருகிறார்கள். அதில் நன்மை உள்ளது. ஆனால், அவர்கள் நடைமுறையில் இனிமையையும் மகத்துவத்தையும் உங்களின் செயல்கள் மற்றும் முகத்தினூடான மேன்மையான உணர்வுகளைப் பார்க்கும்போது, அவர்களும் தங்களுக்கான தூண்டுதலைப் பெற்றுக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் காலத்திற்கேற்ப சூழ்நிலைகள் மாறும்போது, அந்த வேளையில், நீங்கள் அனைவரும் உங்களின் முகத்தாலும் நடத்தையாலும் அதிகளவு சேவை செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, உங்களையே சோதித்துப் பாருங்கள். ஏனைய ஆத்மாக்களிடம் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் உள்ள மனோபாவத்தையும் பார்வையையும் கொண்ட சம்ஸ்காரங்கள், உங்களின் சுபாவத்தில் ஒரு பாகமாகவும் இயல்பாகவும் உள்ளனவா?

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் மாலையின் மணியாக, வெற்றி மாலையின் மணியாக இருப்பதையே காண விரும்புகிறார். எனவே, நீங்கள் எல்லோரும் உங்களை வெற்றி மாலையின் மணிகள் ஆகப் போகின்றவர்கள் எனக் கருதுகிறீர்களா? கருவிகள் ஆகிய குழந்தைகள் மட்டுமே 108 மணி மாலையில் ஒருவர் ஆகுவார்கள் எனப் பல குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால், பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார், 108 என்பது பக்தி மாலையின் ஒரு ஞாபகார்த்தம் ஆகும். எவ்வாறாயினும், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு வெற்றி மணி ஆகும்போது, பாப்தாதா மாலையில் மேலும் பல இழைகளை உருவாக்குவார். தந்தையின் இதய மாலையில், வெற்றியாளர் குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓரிடம் உள்ளது. இது தந்தையின் உத்தரவாதம். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், நடத்தை மற்றும் உங்களின் முகத்தில் உங்களை வெற்றியாளர்கள் ஆக்குங்கள். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நீங்கள் இப்படி ஆகுவீர்களா? பாப்தாதா உங்களை வெற்றி மாலையின் மணி ஆக்குவார் என்ற உத்தரவாதத்தை வழங்கி உள்ளார். அப்படி ஆகுவது யார்? ஓகே, அப்படி என்றால், மாலையின் இழைகளில் மேலும் இழைகளைச் செய்ய ஆரம்பிப்பார். இரட்டை வெளிநாட்டவர்கள் இதை விரும்புகிறீர்கள்தானே? உங்களை வெற்றி மாலையில் கொண்டு வருவது தந்தையின் கடமை. வெற்றியாளர் ஆகுவது உங்களின் கடமை. இது இலகுவானது, அப்படித்தானே? அல்லது, இது சிரமமா? நீங்கள் அதைச் சிரமம் என்று உணர்கிறீர்களா? அதைச் சிரமம் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அது உங்களுக்குச் சிரமமாக இருக்கிறதா? அதைச் சிறிது சிரமம் என்று உணர்பவர்கள், சிலர் இருக்கிறார்கள். பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் பாப்தாதா எனக் கூறும்போது, ‘பாபா’ எனக் கூறுவதன் மூலம் நீங்கள் ஆஸ்தியைப் பெற மாட்டீர்களா? உங்கள் அனைவருக்கும் ஆஸ்திக்கான உரிமை இருப்பதனால், தந்தையும் மிக இலகுவாக உங்களுக்கு ஆஸ்தியை வழங்கி இருப்பதனால் - அது ஒரு விநாடிக்குரிய விடயம் - உங்களுக்குத் தெரிந்திருப்பதுடன் ‘எனது பாபா’ என்று ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். எனவே, தந்தை என்ன கூறினார்? எனது குழந்தை. ஆகவே, ஒரு குழந்தைக்கு இயல்பாகவே ஓர் ஆஸ்தியின் உரிமை உள்ளது. பாபா என்று நீங்கள் சொல்கிறீர்கள்தானே? நீங்கள் அனைவருமே ‘எனது பாபா’ என்ற இந்த ஒரு கூற்றைப் பயன்படுத்துகிறீர்கள். அது அப்படித்தானே? ‘எனது பாபா’ என்பதுதானே? இதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள். அது ‘எனது பாபா’ என்பதாக இருந்தால், அது ‘எனது ஆஸ்தி’ என்பதாகவும் இருக்காதா? ‘எனது பாபா’ என நீங்கள் சொல்வதனால், ‘எனது ஆஸ்தி’ என்பதும் அதில் அடங்கி உள்ளது. ஆஸ்தி என்ன? தந்தைக்குச் சமமாக இருப்பது. வெற்றியாளர் ஆகுதல். பெரும்பாலான இரட்டை வெளிநாட்டவர்கள் கையோடு கைகோர்த்துச் செல்வதை விரும்புகிறார்கள் என்பதை பாப்தாதா கண்டார். கையோடு கைகோர்த்துச் செல்வது ஒரு நாகரிகமாக உள்ளது. இப்போதும் தந்தை கேட்கிறார்: சிவபாபாவின் கரம் எது? அவருக்கு பௌதீகமான கரங்கள் கிடையாது. எனவே, நீங்கள் சிவபாபாவின் கரத்தைப் பிடித்து இருக்கிறீர்கள் என்றால், அந்தக் கரம் என்ன? ஸ்ரீமத்தே தந்தையின் கரம் ஆகும். எனவே, நீங்கள் கையோடு கைகோர்த்துச் செல்வதை விரும்புவதைப் போல், ஸ்ரீமத் எனும் கையோடு உங்களின் கைகோர்த்து நடப்பதில் என்ன சிரமம் உள்ளது? நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். ஒவ்வோர் அடியையும் ஸ்ரீமத்திற்கேற்ப எடுத்து வைப்பதன் மூலம், எவ்வாறு அவர் முழுமையான தேவதை ஆகுகின்ற தனது இலக்கை அடைந்தார் என்ற நடைமுறை அத்தாட்சியை நீங்கள் கண்டீர்கள்தானே? அவர் அவ்யக்த தேவதை ஆகினார். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். விழித்து எழுந்த கணத்தில் இருந்து இரவுவரை. பாப்தாதா ஒவ்வோர் அடிக்கும் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுத்துள்ளார்: நீங்கள் எப்படி விழித்தெழ வேண்டும், நீங்கள் எப்படிப் பழக வேண்டும், நீங்கள் எப்படிச் செயல்களைச் செய்ய வேண்டும், உங்களின் மனதில் என்ன எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும், அத்துடன் உங்களின் நேரத்தை மேன்மையான முறையில் நீங்கள் எப்படிச் செலவிட வேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்வரை உள்ள காலத்திற்கான ஸ்ரீமத்தைப் பெற்றுள்ளீர்கள். நான் இதைச் செய்வதா வேண்டாமா? என நினைக்க வேண்டிய தேவையே இல்லை. தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். பாப்தாதாவிற்கு அவரின் இதயத்தில் ஆழ்ந்த அன்பு உள்ளது. ஒரு குழந்தையேனும் வெற்றியாளர் ஆகாமல் விடுவதை, அரசன் ஆகாமல் இருப்பதைக் காண பாப்தாதா விரும்பவில்லை. ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரச குழந்தை, சுய இராச்சிய அதிகாரி, சுயத்தின் அதிபதி ஆவார். ஆகவே, உங்களின் சுய இராச்சிய அதிகாரத்தை மறந்து விடாதீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?

இக்கட்டான நேரங்களும் ‘சடுதியாக’ என்ற நேரங்களும் முன்னால் வருகின்றன என்ற சமிக்கையை பாப்தாதா பல தடவைகள் வழங்கி விட்டார். ஆகவே, என்றும் தயாராக இருப்பதுடன் சரீரமற்றவர் ஆகுகின்ற அனுபவத்தைக் கொண்டிருப்பதும் அவசியமாகும். நீங்கள் எந்தளவிற்கு மும்முரமாக இருந்தாலும், இப்பொழுதில் இருந்தே, நீங்கள் மும்முரமாக இருக்கும்போதும், ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுகின்ற பயிற்சியைச் செய்யுங்கள். நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவ்வாறு பிஸியாக இருக்கும்போது உங்களுக்குத் தாகம் எடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் தண்ணீர் குடிப்பீர்கள்தானே? உங்களுக்குத் தாகம் ஏற்பட்டுள்ளது, அதனால் தண்ணீர் அருந்துவது அவசியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவ்வப்போது, சரீரமற்றவராகவும் ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதையும் பயிற்சி செய்வது அவசியம். ஏனென்றால், வரவிருக்கும் நேரங்களில் எங்கும் குழப்பம் நிலவும் காலங்களில் அசைக்க முடியாத ஸ்திதிக்கான அவசியம் உள்ளது. எனவே, இப்பொழுதில் இருந்தே நீண்ட காலத்திற்கு நீங்கள் இதைப் பயிற்சி செய்யா விட்டால், உங்களால் உச்சக்கட்ட குழப்பம் நிலவும் வேளையில் நீங்கள் எப்படி அசைக்க முடியாதவராக இருப்பீர்கள்? நாள் முழுவதும், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களை ஒதுக்கி, காலத்திற்கேற்ப, உங்களின் ஆத்ம உணர்வு ஸ்திதியால் உங்களால் சரீரமற்றவர் ஆக முடியுமா என உங்களையே சோதித்துப் பாருங்கள். சோதித்து, உங்களையே மாற்றிக் கொள்ளுங்கள். உங்களைச் சோதிக்க மட்டும் செய்யாமல், மாற்றியும் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் சோதிப்பதன் மூலமும் அதை மீட்டல் செய்வதன் மூலமும் அது உங்களின் இயல்பான ஸ்திதி ஆகிவிடும். உங்களுக்கு பாப்தாதாவிடம் அன்பு உள்ளது. நீங்கள் எல்லோரும் இதில் உங்களின் கையை உயர்த்துகிறீர்கள். உங்களுக்கு அன்பு இருக்கிறது, அல்லவா? உங்களிடம் முழுமையான அன்பு உள்ளதா? அது முழுமையாக உள்ளதா அல்லது அரைகுறையாக உள்ளதா? இது அரைகுறையாக இல்லை, அல்லவா? எனவே, உங்களிடம் அன்பு இருந்தால், உங்களின் சத்தியம் என்ன? நீங்கள் செய்த சத்தியம் என்ன? நீங்கள் ஒன்றாக வீடு திரும்பிச் செல்வீர்களா? நீங்கள் சரீரமற்றவர் ஆகித் தந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்களா அல்லது அவரைப் பின்தொடர்வீர்களா? நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்களா? அத்துடன் நீங்கள் அவருடன் சூட்சும வதனத்தில் குறுகிய நேரத்திற்கு, குறுகிய நேரத்திற்கு மட்டும் இருப்பீர்கள். பின்னர், நீங்கள் தந்தை பிரம்மாவுடன் முதல் பிறவியில் வருவீர்கள். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்களா? நீங்கள் செய்துள்ளீர்கள்தானே? இதற்காக, பாபா உங்களைக் கைகளை உயர்த்தும்படி கூறவில்லை, ஆனால் உங்களின் தலையை ஆமோதித்து அசையுங்கள். உங்களின் கைகளை உயர்த்துவதன் மூலம் நீங்கள் களைப்படைகிறீர்கள். நீங்கள் அவருடன் செல்ல இருப்பதனால், பின்னால் தங்கப் போவதில்லை என்பதனால், தந்தை தன்னுடன் யாரை அழைத்துச் செல்வார்? தனக்குச் சமமாக இருப்பவர்களையே தந்தை தன்னுடன் அழைத்துச் செல்வார். தந்தையும் தனியே போக விரும்பவில்லை. அவரும் குழந்தைகளுடனேயே செல்ல விரும்புகிறார். எனவே, அவருடன் செல்வதற்கு நீங்கள் தயாரா? ஆமாம் என்று தலையசையுங்கள். நீங்கள் தயாரா? நீங்கள் அனைவரும் செல்வீர்களா? நீங்கள் அனைவரும் செல்வதற்குத் தயாரா? தந்தை செல்லும்போது மட்டுமே உங்களால் செல்ல முடியும். இப்போது நீங்கள் செல்ல மாட்டீர்கள். இப்போது, நீங்கள் வெளிநாடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை ஒரு கட்டளை இடுவார், அத்துடன் பற்றை வென்றவராகவும் நினைவின் சொரூபமாகவும் இருக்கும் மணியையும் அடிப்பார். அப்போது நீங்கள் அவருடன் திரும்பிச் செல்ல ஆரம்பிப்பீர்கள். எனவே, ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, அல்லவா? அன்பின் அடையாளம், அவருடன் திரும்பிச் செல்வதே ஆகும். அச்சா.

வெகு தொலைவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தனக்கு நெருக்கமாக இருப்பதை பாப்தாதா அனுபவம் செய்கிறார். விஞ்ஞானத்தின் கருவிகளால் தொலைவில் உள்ளவற்றை நெருக்கமாகக் கொண்டு வரக்கூடியதாக இருப்பதைப் போல் - உங்களால் அவர்களைப் பார்க்க முடிகிறது, அவர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது - பாப்தாதாவும் தொலைவில் உள்ள குழந்தைகளையும் அனைவரிலும் நெருக்கமாக இருப்பதைக் காண்கிறார். நீங்கள் தொலைவில் இல்லை, அவரின் இதயத்தில் அமிழ்ந்து இருக்கிறீர்கள். பாப்தாதா குறிப்பாக இந்தத் தடவை இங்கே வந்திருக்கும் குழந்தைகளைத் தனது இதயத்திலும் தனது கண்களிலும் அமிழ்த்தி வைத்திருப்பதுடன் ஒவ்வொருவரையும் தன்னுடன் திரும்பிச் சென்று, அவருடனேயே தங்கியிருந்து பின்னர் பிரம்மா பாபாவுடன் இராச்சியத்திற்கு ஆட்சி செய்ய வருபவர்களாகவே பார்க்கிறார். எனவே, இன்றில் இருந்து, நாள் முழுவதும் நீங்கள் மீண்டும் மீண்டும் என்ன அப்பியாசத்தைச் செய்வீர்கள்? இப்போது, ஒரு விநாடியில், உங்களால் ஆத்ம உணர்விலும் சரீரத்தில் இருக்கும்போதே, பற்றற்று சரீரமற்ற ஸ்திதியிலும் அத்துடன் தந்தையின் மீது அன்பு உடையவராகவும் அனுபவம் செய்ய முடியாதா? எனவே, இப்போது, ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுங்கள். அச்சா. (அப்பியாசம்). இந்த முறையில், நாள் முழுவதும் எப்படி என்றாலும் அவ்வப்போது ஒரு விநாடியை ஒதுக்கி, தொடர்ந்தும் இந்தப் பயிற்சியை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், வரப் போகும் நேரங்கள் அதிகபட்சம் துயரம் தரக் கூடியதாகவே இருக்கும் என்பதை பாப்தாதா அறிவார். நீங்கள் அனைவரும் சகாஷ் வழங்க வேண்டும். நீங்கள் அந்த சகாஷை வழங்குவது உங்களின் தீவிர முயற்சி ஆகிவிடும். குறுகிய நேரத்தில், நீங்கள் சகல சக்திகளையும் சகாஷின் மூலம் வழங்க வேண்டும். இத்தகைய இக்கட்டான வேளைகளில் சகாஷ் வழங்குபவர்கள், நீங்கள் அதை எத்தனை பேருக்கு வழங்கினாலும், நீங்கள் அதைப் பலருக்கோ அல்லது வெகு சிலருக்கோ வழங்கினாலும் அந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் துவாபர, கலியுகங்களில் உங்களின் பக்தர்கள் ஆகுவார்கள். அதனால், சங்கமயுகத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பக்தர்களை உருவாக்குகிறீர்கள். ஏனென்றால், நீங்கள் அவர்களுக்கு வழங்குகின்ற சந்தோஷமும் அமைதியும் அவர்களின் இதயங்களில் பதிந்து விடும். அவர்கள் அதன் பிரதிபலனைத் தமது பக்தி என்ற வடிவில் உங்களுக்குத் தருவார்கள். அச்சா.

எங்கும் உள்ள பாப்தாதாவின் கண்ணின் ஒளிகள் அனைவருக்கும் உலகை ஈடேற்றுவதுடன் உலகிற்கு ஆதாரமாக இருக்கும் ஆத்மாக்களுக்கும் மாஸ்ரர் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்கின்ற உலகை மாற்றுகின்ற குழந்தைகளுக்கும் இதயபூர்வமாக அதிக, அதிகமான அன்பும் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் அத்துடன் கோடானுகோடி ஆசீர்வாதங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடனும் உங்களின் நிலையின் போதையுடனும் கல்பம் கல்பமாக சகல உரிமைகளையும் கொண்டிருப்பீர்களாக.

‘நானும் எனது பாபாவும்’ என்ற விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்தவராக இருந்து, சதா இந்த மேன்மையான நிலையின் உணர்வுடன் இருங்கள். இன்று, நான் ஒரு பிராமணர், நாளை நான் ஒரு தேவர் ஆகுவேன். எப்போதும் ‘ஹம்ஸோ ஸோகம்’ என்ற மந்திரத்தை நினைவு செய்யுங்கள். இதன் போதையையும் சந்தோஷத்தையும் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் இலகுவாகப் பழைய உலகை மறந்து விடுவீர்கள். நீங்கள் கல்பம் கல்பமாக, சகல உரிமைகளையும் கொண்ட ஓர் ஆத்மா என்ற போதையை எப்போதும் கொண்டிருப்பீர்கள். நான் இப்படி இருந்தேன், நான் இப்படி இருக்கிறேன், நான் கல்பம் கல்பமாக இப்படி இருப்பேன்.

சுலோகம்:
உங்களின் சொந்த ஆசிரியர் ஆகுங்கள், பலவீனங்கள் அனைத்தும் இயல்பாகவே முடிந்துவிடும்.

அவ்யக்த சமிக்கை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்தில் இருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி வாழ்க்கையின் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

பொதுவாக, எவருமே பந்தனத்தில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் எதனுடைய ஆதிக்கத்திற்கும் உட்படும்போது, ஒரு பந்தனத்தால் நீங்கள் கட்டப்படுகிறீர்கள். எனவே, நீங்கள் ஏதாவது ஒன்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஆத்மாவா அல்லது நீங்கள் சுதந்திரமாக இருக்கும் ஆத்மாவா எனச் சோதித்துப் பாருங்கள். ஜீவன்முக்தியின் மகிழ்ச்சி இப்போதுதான் உள்ளது. எதிர்காலத்தில், ஜீவன்முக்தி வாழ்க்கைக்கும் பந்தன வாழ்க்கைக்கும் இடையில் வேறுபாடு இருக்காது. இந்த வேளையில் ஜீவன்முக்தி வாழ்க்கையின் அனுபவம் மேன்மையானது. நீங்கள் வாழ்க்கை வாழுகிறீர்கள், ஆனால் பந்தனத்தில் இல்லாமல் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.