11.05.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    07.03.2005     Om Shanti     Madhuban


சம்பூரணமான தூய்மைக்கான விரதத்தைக் கடைப்பிடிப்பதுடன் ‘நான்’ என்ற உணர்வை அர்ப்பணிப்பதே சிவ ஜெயந்தியைக் கொண்டாடுதல் என்று அர்த்தம்.


இன்று, தந்தை சிவன் குறிப்பாகத் தனது சாலிகிராம் குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். பாப்தாதாவும் குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாட வந்துள்ளார். ஏனென்றால், தந்தைக்குக் குழந்தைகளான உங்களின் மீது அதிகளவு அன்பு உள்ளது. தந்தை அவதாரம் செய்த உடனேயே, இந்த யாகத்தை உருவாக்குகிறார். பிராமணர்கள் இல்லாமல் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. இதனாலேயே, இந்தப் பிறந்தநாள் அலௌகீகமானது, தனித்துவமானது, அழகானது. கல்பம் முழுவதிலும் வேறு எந்தவொரு பிறந்தநாளும், ஒரே நாளில் தந்தையினதும் குழந்தைகளினதும் பிறந்த நாளாக இருக்க முடியாது. ஒருபோதும் அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை. தந்தை அசரீரியானவர். ஒரு புறம், அவர் அசரரீயானவர். மறுபுறம், நீங்கள் அவரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். தந்தை சிவனுக்கு மட்டுமே அவருக்கென்று ஒரு சரீரம் கிடையாது. இதனாலேயே, அவர் தந்தை பிரம்மாவின் சரீரத்தில் அவதரிக்கிறார். இந்த அவதாரத்தையே நீங்கள் ஒரு பிறந்தநாளின் வடிவத்தில் கொண்டாடுகிறீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட வந்திருக்கிறீர்களா அல்லது உங்களின் சொந்தப் பிறந்த நாளைக் கொண்டாட வந்திருக்கிறீர்களா? நீங்கள் வாழ்த்துச் சொல்ல வந்திருக்கிறீர்களா அல்லது வாழ்த்துக்களைப் பெற வந்துள்ளீர்களா? இதுவே ஒன்றாக இருப்பதற்காகக் குழந்தைகளால் தந்தைக்குச் செய்யப்பட்ட சத்தியம் ஆகும். இப்போது, சங்கமயுகத்தில், உங்களிடம் ஒன்றிணைந்த சகவாசம் உள்ளது. உங்களின் அவதாரம் ஒரே வேளையில் இடம்பெற்றுள்ளது. நீங்கள் ஒன்றாகவே மாற்றத்திற்கான பணியைச் செய்கிறீர்கள். அத்துடன் நீங்கள் பரந்தாமத்திற்கு, வீட்டுக்கும் ஒன்றாகவே திரும்பிச் செல்வீர்கள். இது தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான அன்பின் வடிவம் ஆகும்.

பக்தர்களும் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் அவரை அழைப்பதுடன் பஜனை பாடுகிறார்கள். நீங்கள் அப்படி அழைப்பதில்லை. உங்களின் கொண்டாட்டம் என்றால் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். கொண்டாடுவது என்றால் சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பறந்து கொண்டிருத்தல் என்று அர்த்தம். இதனாலேயே இது திருவிழா என்று அழைக்கப்படுகிறது. திருவிழா என்றால் உற்சாகத்தைப் பேணுதல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் சதா கொண்டாடுகிறீர்கள். அதாவது, நீங்கள் சதா உங்களின் உற்சாகத்தைப் பேணுகிறீர்கள்தானே? இது எல்லா வேளையும் இருக்கிறதா அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? உண்மையில், பிராமண வாழ்க்கையின் மூச்சே ஊக்கமும் உற்சாகமும் தான். எப்படி உங்களால் மூச்சு விடாமல் வாழ முடியாதோ, அப்படியே, ஊக்கமும் உற்சாகமும் இல்லாமல் பிராமண ஆத்மாக்களால் பிராமண வாழ்க்கை வாழ முடியாது. நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள்தானே? பாருங்கள், நீங்கள் குறிப்பாகத் தொலைவில் இருந்து இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஓடோடி வந்துள்ளீர்கள். பாப்தாதாவிற்குக் குழந்தைகளான உங்களின் பிறந்த நாளில் இருக்கும் சந்தோஷம், தனது சொந்தப் பிறந்த நாளை இட்டு இல்லை. இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் தட்டுக்கள் நிறைந்த பல மில்லியன் மடங்கு சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் வழங்குகிறார். வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

இந்தத் தினத்தில், பாப்தாதா உண்மையான பக்தர்களையும் அதிகளவில் நினைவு செய்கிறார். அவர்கள் ஒரு நாளுக்கு மட்டும் விரதம் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ உங்களின் வாழ்க்கை முழுவதற்கும் சம்பூரணமான தூய்மைக்கான விரதத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள். அவர்கள் உணவில் விரதம் இருக்கிறார்கள். நீங்களும் மனதின் உணவிற்கு விரதம் பிடிக்கிறீர்கள். அதாவது, வீணான எண்ணங்கள், எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் தூய்மையற்ற எண்ணங்கள். நீங்கள் உறுதியான விரதத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்தானே? இரட்டை வெளிநாட்டவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். குமார்களே, கூறுங்கள்! உங்களின் விரதத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கிறீர்களா? அது உறுதியானதா? அது பலவீனம் அடையவில்லையே? மாயையும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். நீங்கள் எல்லோரும் உங்களின் கொடிகளை அசைக்கிறீர்கள். நீங்கள் உங்களின் கொடிகளை அசைப்பதை மாயையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும் என்ற விரதத்தை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, நீங்கள் உங்களின் மனோபாவத்தை மேன்மையானது ஆக்கிக் கொள்ள வேண்டும். உங்களின் மனோபாவத்திற்கு ஏற்பவே உங்களின் பார்வையும் செயல்களும் இயல்பாகவே அப்படி ஆகும். எனவே, நீங்கள் இத்தகைய விரதத்தைக் கடைப்பிடித்தீர்கள்தானே? தூய, சுத்தமான மனோபாவம், தூய, சுத்தமான பார்வை. நீங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, எதைப் பார்க்கிறீர்கள்? நீங்கள் முகத்தைப் பார்க்கிறீர்களா அல்லது நெற்றியின் மத்தியில் ஜொலிக்கும் ஆத்மாவைப் பார்க்கிறீர்களா? ஒரு குழந்தை கூறினார், தான் மற்றவர்களுடன் பேசும்போது அல்லது தான் எதையாவது செய்யும்போது, முகத்தைப் பார்த்தவண்ணமே அதைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அதனால் அந்த நபரின் கண்களை நோக்கிப் பார்வை செல்கிறது என்றும் கூறினார். எவ்வாறாயினும், சிலவேளைகளில், முகத்தைப் பார்க்கும்போது, உங்களின் மனோபாவம் சிறிது மாறுகிறது. பாப்தாதா கூறுகிறார்: கண்களுடன் கூடவே, நெற்றியும் உள்ளது. எனவே, உங்களால் நெற்றியின் மத்தியைப் பார்த்தவண்ணம் ஆத்மாவுடன் பேச முடியாதா? இப்போது, பாப்தாதா உங்களின் முன்னால் அமர்ந்திருக்கிறார். எனவே அவர் உங்களின் கண்களைப் பார்க்கிறாரா அல்லது உங்களின் நெற்றியைப் பார்க்கிறாரா என உங்களால் சொல்ல முடியுமா? அவை இரண்டும் ஒன்றாகவே உள்ளன. எனவே, முகத்தைப் பாருங்கள், ஆனால் முகத்தில் உள்ள நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் பாருங்கள். அதனால் இந்த விரதத்தைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள். ஆனால் இப்போது அதிக கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஆத்மாவைப் பார்த்தவண்ணம் பேச வேண்டும். ஆத்மா, ஆத்மாவுடன் பேசுகிறார். ஆத்மா, ஆத்மாவைப் பார்க்கிறார். அப்போது உங்களின் மனோபாவம் எப்போதும் தூய்மையாக இருக்கும். இத்துடன்கூடவே, மற்றைய நன்மை என்னவென்றால், உங்களின் மனோபாவத்திற்கு ஏற்பவே, சூழலும் உருவாக்கப்படும். மேன்மையான சூழலை உருவாக்குவதன் மூலம், உங்களின் சொந்த முயற்சியைச் செய்வதுடன்கூடவே, நீங்கள் சேவையையும் செய்வீர்கள். எனவே, அது இரட்டை நன்மை, இல்லையா? எவ்வளவு தீய குணங்கள் நிறைந்த அல்லது தூய்மையற்ற எவர் இருந்தாலும் உங்களின் மனோபாவத்தால் உருவாக்கப்பட்ட சூழலால் அவர் மாறும்படியான மேன்மையான மனோபாவத்தை உருவாக்குங்கள். உங்களின் விழிப்புணர்விலும் உங்களின் ரூபத்திலும் சதா இந்த விரதம் இருக்க வேண்டும்.

தற்காலத்தில், பாப்தாதா குழந்தைகளின் அட்டவணைகளைப் பார்க்கிறார். உங்களின் சொந்த மனோபாவத்தால் சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, சிலவேளைகளில் குழந்தைகள் மற்றவர்களால் உருவாக்கப்பட்ட சூழலின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறார்கள். அதற்கான காரணம் என்ன? தமது இதயபூர்வமான உரையாடல்களில், குழந்தைகள் மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ‘எனக்கு அவரின் சிறப்பியல்பு பிடித்திருக்கிறது, நான் அவரிடம் இருந்து அதிகளவு ஒத்துழைப்பைப் பெறுகிறேன்.’ எவ்வாறாயினும், அந்தச் சிறப்பியல்பு இறைவனிடம் இருந்து பெற்ற பரிசு. பிராமண வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய பேறுகளையும் சிறப்பியல்புகளையும் பெற்றுள்ளீர்களோ, அவை பிரபு-பிரசாதம் (இறைவனான பிரபுவிடம் இருந்து பெற்ற படையல்), அவை இறைவனின் பரிசுகள். எனவே, நீங்கள் அருள்பவரை மறந்துவிட்டு, பெறுபவர்களை நினைக்கிறீர்கள். பிரசாதம் (புனிதமான படையல்) ஒருபோதும் எவருடைய தனிப்பட்ட உடமை கிடையாது. இதுவே பிரபு பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. அதை இன்னாரின் பிரசாதம் என்று அழைப்பதில்லை. நீங்கள் ஒத்துழைப்பைப் பெறுகிறீர்கள். அது நல்லதே. ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் ஒத்துழைப்பைப் பெறச் செய்த அருள்பவரை மறக்காதீர்கள். எனவே, நீங்கள் இந்தப் பிறந்த நாளுக்காக உறுதியான விரதத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா? உங்களின் மனோபாவம் மாறிவிட்டதா? சம்பூரணமான தூய்மை. இதுவே உண்மையான விரதத்தைக் கடைப்பிடிப்பதுடன் ஒரு சத்தியத்தையும் செய்வதாகும். எனவே, சோதித்துப் பாருங்கள்: நீங்கள் பெரிய, புற விகாரங்களின் விரதத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள். ஆனால் அவற்றின் சிறிய குழந்தைகளிடம் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டீர்களா? பொதுவாக, இல்லறத்தவர்களுக்குத் தமது குழந்தைகளை விடத் தமது பேரக் குழந்தைகளின் மீது அதிக அன்பு இருக்கும். தாய்மார்களான உங்களுக்கு அவர்களின் மீது அன்பு இருக்கிறதல்லவா? எனவே, நீங்கள் பெரிய ரூபங்களை வென்று விட்டீர்கள். ஆனால் அவற்றின் சிறிய, சூட்சுமமான வடிவங்கள் உங்களைத் தாக்கவில்லையே? உதாரணமாக, சிலர் கூறுகிறார்கள்: ‘எனக்குக் கவர்ச்சி இல்லை. ஆனால் எனக்கு அது பிடித்திருக்கிறது. நான் அதை அதிகம் விரும்புகிறேன். ஆனால் நான் அதை நோக்கிக் கவரப்படவில்லை.’ நீங்கள் ஏன் குறிப்பாக அதை விரும்புகிறீர்கள்? எனவே, சிறிய வடிவங்களில் தூய்மையின்மையின் ஏதாவது சுவடுகள் எஞ்சி உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், ஒரு சுவட்டில் இருந்து சிலவேளைகளில் முழுச் சந்ததியும் உருவாக்கப்பட முடியும். ஏதாவது விகாரம் வந்தால், அது பெரிய ரூபத்திலோ அல்லது சிறிய ரூபத்திலோ வந்தாலும் அதை விளைவிப்பது ஒரேயொரு வார்த்தையே. அந்த ஒரு வார்த்தை ‘நான்’ என்பதாகும். ‘நான்’ என்ற சரீர உணர்வு. இந்த ‘நான்’ என்ற ஒரு வார்த்தையினூடாக, அகங்காரம் ஏற்படும். அல்லது, முழுமையான அகம்பாவம் இல்லாவிட்டாலும் கோபம் இருக்கும். ஏனென்றால், அகம்பாவத்தின் அடையாளம், அவரால் ஒரு இகழ்ச்சியான வார்த்தையையும் சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பதாகும். அதனால் அவர் கோபம் அடைவார். எனவே, பக்தர்கள் ஒரு பலி கொடுக்கிறார்கள். ஆனால், இந்தத் தினத்தில், உங்களிடம் ‘நான்’ என்ற எல்லைக்குட்பட்ட உணர்வு என்ன இருந்தாலும் அதைத் தந்தையிடம் பலி கொடுத்து முடித்து விடுங்கள். ‘நான் அதைச் செய்யவே வேண்டியுள்ளது, நான் அவ்வாறு ஆக வேண்டியுள்ளது’ எனச் சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வேளையில் அதைச் செய்வதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் சக்திசாலிகள். எனவே, சக்திசாலிகளாகி, அதை முடித்துவிடுங்கள். இது எதுவும் புதியதல்ல. எத்தனை கல்பங்களாக, எத்தனை தடவைகளாக நீங்கள் சம்பூரணம் ஆகியுள்ளீர்கள்? உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது எதுவும் புதியதல்ல. நீங்கள் ஒவ்வொரு கல்பமும் அவ்வாறு ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஏற்கனவே எப்படி ஆகினீர்களோ அப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை மீண்டும் செய்ய வேண்டும், அவ்வளவே. ஏற்கனவே உருவாக்கப்பட்டதை நீங்கள் உருவாக்க வேண்டும். இதனாலேயே, இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்டது. இப்போது நீங்கள் அதை மீண்டும் செய்ய வேண்டும். அதாவது, நீங்கள் அதை உருவாக்க வேண்டும். இது சிரமமா அல்லது இலகுவானதா? சங்கமயுகத்தின் ஆசீர்வாதமான, இலகு முயற்சி என்பதை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்றே பாப்தாதா நம்புகிறார். இந்தப் பிறவியில் இலகு முயற்சிக்கான இந்த ஆசீர்வாதத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் இயல்பாகவே 21 பிறவிகளுக்கு இலகுவான வாழ்க்கையைப் பெறுவீர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சிரமப்படுவதில் இருந்து விடுவிக்கவே வந்துள்ளார். நீங்கள் 63 பிறவிகளாகக் கடினமாக உழைத்து வந்தீர்கள். ஆகவே, இப்போது, இந்த ஒரு பிறவியில் இறையன்பினால், அன்பினால் சிரமப்படுவதில் இருந்து விடுபடுங்கள். எங்கே அன்பு உள்ளதோ, அங்கே எந்தவிதமான சிரமமும் இல்லை. எங்கே சிரமம் உள்ளதோ, அங்கே அன்பு இருக்காது. அதனால், இலகு முயற்சியாளராக இருப்பதற்கான ஆசீர்வாதத்தை பாப்தாதா உங்களுக்கு வழங்குகிறார். விடுபடுவதற்கான வழிமுறை அன்பே ஆகும் – உங்களின் இதயபூர்வமாக தந்தை மீதான அன்பு. அன்பிலே திளைத்திருங்கள். இதற்கான பெரும் ஆயுதம் (யந்திரா) மன்மனாபவ என்ற மந்திரம் ஆகும். எனவே இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். எப்படி அதைப் பயன்படுத்துவது என உங்களுக்குத் தெரியும்தானே? சங்கமயுகத்தில் இறையன்பின் ஊடாக எப்படி நீங்கள் பல சக்திகளையும் நற்குணங்களையும் அதிகளவான இந்த ஞானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுள்ளீர்கள் என பாப்தாதா பார்த்தார். ஆகவே, இறைவனிடம் இருந்து பெற்ற இந்தப் பொக்கிஷங்களையும் பரிசுகள் அனைத்தையும் சரியான வேளையில் பயன்படுத்துங்கள்.

எனவே, பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? ஒவ்வொரு குழந்தையும் ஓர் இலகு முயற்சியாளர் ஆகவேண்டும். இலகுவாக, அதேவேளை தீவிரமாகவும் இருக்க வேண்டும். திடசங்கற்பத்தைப் பயன்படுத்துங்கள். ‘நான் அப்படி ஆகவேண்டும். நான் அப்படி ஆகாவிட்டால், யார் ஆகுவார்? நான் அப்படி இருந்தேன், நான் அப்படி இருக்கிறேன், நான் ஒவ்வொரு கல்பமும் அப்படி ஆகுவேன்.’ உங்களுக்குள் நிச்சயமாக இத்தகைய உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அதை ஏதாவதொரு வேளையில் நீங்கள் செய்வீர்கள் எனச் சொல்லாதீர்கள். நீங்கள் நிச்சயமாக அதைச் செய்யவே வேண்டும். அது நடக்கவே வேண்டும். அது ஏற்கனவே நிறைவேறி விட்டது.

இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகளைப் பார்ப்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், அவர் தனிப்பட்ட முறையில் தனக்கு முன்னால் இருக்கும் குழந்தைகளை மட்டும் பார்க்கவில்லை. இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரையும் அவர் பார்க்கிறார். பெரும்பான்மையான பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெளிநாடுகளில் இருந்தே வந்துள்ளன. வாழ்த்து மடல்கள், ஈமெயில்கள் அத்துடன் இதயபூர்வமான எண்ணங்களையும் பாபா பெற்றுள்ளார். தந்தை குழந்தைகளின் பாடல்களைப் பாடுகிறார். நீங்களும், ‘பாபா, நீங்கள் அற்புதங்களைச் செய்துள்ளீர்கள்’ எனப் பாடுகிறீர்கள்தானே? ஆகவே, தந்தையும் இனிய குழந்தைகளான நீங்கள் அற்புதங்களைச் செய்துள்ளீர்கள் என்ற பாடலைப் பாடுகிறார். நீங்கள் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள், ஆனால் வெகு தொலைவில் இருப்பவர்கள் பாப்தாதாவின் இதயத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என பாப்தாதா எப்போதும் கூறுகிறார். இன்று, எங்கும் உள்ள குழந்தைகளின் எண்ணங்களில், வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! என்பதே உள்ளது. இந்த ஒலியானது பாப்தாதாவின் காதுகளை வந்தடைகிறது. அத்துடன் எண்ணங்கள் அவரின் மனதை வந்தடைகின்றன. இவை வெறுமனே வாழ்த்து மடல்கள் மட்டுமல்ல. பெயரளவில் அவை வாழ்த்து மடல்கள். பெயரளவில் அவை கடிதங்கள். எவ்வாறாயினும், அவை மிக மகத்தான பரிசுகள், வைரங்களை விட மகத்தானவை. நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அத்துடன் களிப்படைகிறீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் உங்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடி விட்டீர்கள். நீங்கள் இரண்டு வயதாகவோ அல்லது ஒரு வயதாகவோ அல்லது ஒரு வாரம் வயதாகவோ இருந்தாலும் இதுவே யக்யத்தின் ஸ்தாபனைக்கான பிறந்தநாள் ஆகும். பிராமணர்கள் எல்லோரும் யக்யத்தில் வசிப்பவர்களே. இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதங்களுடன் கூடவே தனது இதயபூர்வமாக அதிகளவு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். சதா ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுவதுடன் தொடர்ந்து பறவுங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும் பெறுவதும் இலகுதானே? இது இலகுவானதா? இது இலகுவானது என உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கொடிகளை அசையுங்கள்! எனவே, நீங்கள் இந்த ஆசீர்வாதங்களைக் கைவிடவில்லைத்தானே? எல்லாவற்றிலும் மிக இலகுவான முயற்சி, ஆசீர்வாதங்களைக் கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதாகும். இதில் யோகம் அடங்கியுள்ளது. இதில் இந்த ஞானம் அடங்கியுள்ளது. இதில் தாரணை அடங்கியுள்ளது. இதில் சேவையும் அடங்கி உள்ளது. ஆசீர்வாதங்களை வழங்கி, ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நான்கு பாடங்களும் அடங்கியுள்ளன.

எனவே, இரட்டை வெளிநாட்டவர்களே, ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெறுவது இலகுவானதுதானே? இது இலகுவானதா? நீங்கள் முதலில் இங்கே வந்ததில் இருந்து 20 வருடங்களாக இந்த ஞானத்தில் இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் 20 வருடங்களாக வருகிறீர்கள். ஆனால் பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். குழந்தைகள் எத்தனை நாடுகளில் இருந்து வந்துள்ளார்கள்? (69 நாடுகளில் இருந்து). வாழ்த்துக்கள்! நீங்கள் 69 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக 69 நாடுகளில் இருந்து வந்துள்ளீர்கள். இது மிகவும் நல்லது. இங்கே வருவதில் எந்தவிதச் சிரமமும் இருக்கவில்லைத்தானே? நீங்கள் இலகுவாக இங்கே வந்தீர்கள், அல்லவா? எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே எந்தவிதமான சிரமமும் கிடையாது. எனவே, இன்று என்ன விசேடமான ஆசீர்வாதத்தை நீங்கள் நினைவு செய்வீர்கள்? இலகு முயற்சியாளர்கள். இலகுவான எதையும் விரைவாகச் செய்ய முடியும். அதிகளவு முயற்சி தேவைப்படுகின்ற வேலையே கஷ்டமாக இருக்கும். அதனால் அதற்கு நேரமும் எடுக்கும். எனவே, நீங்கள் எல்லோரும் யார்? இலகு முயற்சியாளர்கள். அதைச் சொல்லுங்கள்! அதை நினையுங்கள்! நீங்கள் உங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றதும், சிரமப்படுவதில் ஈடுபடாதீர்கள். சிரமப்படுகின்ற வேலை ஏதாவது உங்களுக்கு இருக்குமாயின், அப்போது உங்களின் இதயபூர்வமாக ‘பாபா, எனது பாபா!’ எனச் சொல்லுங்கள். சிரமப்படுதல் முடிந்துவிடும். அச்சா. நீங்கள் இப்போது கொண்டாடினீர்கள்தானே? தந்தை கொண்டாடினார், நீங்கள் எல்லோரும் கொண்டாடினீர்கள். அச்சா.

இப்போது உங்களால் இந்த அப்பியாசத்தை ஒரு விநாடியில் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியும்தானே? அச்சா. (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்).

சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணுகின்ற எங்கும் உள்ள மேன்மையான குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சங்கமயுகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள இலகு முயற்சி செய்யும் குழந்தைகள் எல்லோருக்கும் தந்தையுடன் இருக்கின்ற ஆத்மா என்ற விழிப்புணர்வுடன் ஆத்மாவான நான் எனச் சொல்பவர்களுக்கும் தமது மனோபாவத்தால் சூழலை உருவாக்கும் ஒத்துழைப்பை வழங்கும் ஆத்மாக்கள் எல்லோருக்கும் இத்தகைய மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும் நமஸ்தேயும்.

வெளிநாட்டைச் சேர்ந்த இரட்டை வெளிநாட்டு மூத்த சகோதரிகளிடம்: நீங்கள் எல்லோரும் நல்ல முயற்சி செய்துள்ளீர்கள். நீங்கள் குழுக்களை உருவாக்கி, கடினமாக உழைத்துள்ளீர்கள். இங்கே, சூழல் நன்றாக உள்ளது. ஒன்றுகூடலின் சக்தியும் உள்ளது. இந்த முறையில், எல்லோரும் மிக நல்ல புத்துணர்ச்சி பெறுகிறார்கள். நீங்கள் அதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். இது நல்லது. நீங்கள் எல்லோரும் ஒருவரில் இருந்து மற்றவர் வெகு தொலைவில் வசிக்கிறீர்கள். அதனால் ஒன்றுகூடலின் சக்தியும் மிகவும் நல்லது. இத்தகையதொரு பெரிய குடும்ப ஒன்றுகூடல் உள்ளது, அதனால், ஒவ்வொருவரின் சிறப்பியல்பும் ஓர் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் மிக நல்லதொரு திட்டத்தைச் செய்துள்ளீர்கள். பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொருவரின் நறுமணத்தையும் எடுத்துக் கொள்கிறீர்கள். அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள், நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடுவது நல்லதே. நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. அத்துடன் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. நீங்கள் ஒருவர் மற்றவரின் சிறப்பியல்புகளை விரும்புகிறீர்கள். அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஒன்றுகூடல் நல்லதாக ஆகுகின்றது. இது நல்லது.

நிலையங்களில் வசிக்கும் சகோதர, சகோதரிகள்: (பதாகை – நாம் அன்பினதும் கருணையினதும் ஒளியை ஏற்றி வைத்திருப்போம்). உங்களுக்கு மிக நல்ல எண்ணம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்காகக் கருணையான பார்வையைக் கொண்டிருங்கள். உங்களின் சகபாடிகளுக்காக கருணைநிறைந்த பார்வையைக் கொண்டிருங்கள். அத்துடன் எல்லோருக்காகவும் கருணைநிறைந்த பார்வையைக் கொண்டிருங்கள். கடவுளின் அன்பானது காந்தம் போன்றது. எனவே, உங்களிடம் இறையன்பு என்ற காந்தம் உள்ளது. உங்களால் இறையன்பு என்ற இந்தக் காந்தத்தால் எந்தவோர் ஆத்மாவையும் தந்தைக்குச் சொந்தம் ஆக்க முடியும். பாப்தாதா குறிப்பாகத் தனது இதயபூர்வமான ஆசீர்வாதங்களை நிலையங்களில் வசிக்கும் எல்லோருக்கும் வழங்குகிறார். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் பாபாவின் பெயரை உலகிலே பெருமைப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் பிரம்மாகுமாரிகளின் பெயரை ஒவ்வொரு மூலைக்கும் பரவச் செய்துள்ளீர்கள்தானே? எல்லாவற்றிலும் பாப்தாதாவிற்குப் பிடித்த சிறந்த விடயம் என்னவென்றால், நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்களாக இருப்பதைப் போல் இரட்டைத் தொழில்களையும் செய்கிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் லௌகீகத் தொழிலுடன் அலௌகீகப் பணியையும் செய்கிறீர்கள். பாப்தாதா இதைப் பார்க்கிறார். பாப்தாதாவின் தொலைக்காட்சி மிகப் பெரியது. இங்கே அத்தனை பெரிய தொலைக்காட்சி கிடையாது. நீங்கள் எப்படி மிக விரைவாக வகுப்பு எடுக்கிறீர்கள், எப்படி நின்று கொண்டே காலை உணவை உண்கிறீர்கள், உங்களின் வேலைத்தலத்திற்கும் உரிய நேரத்திற்குச் சென்று அடைகிறீர்கள். நீங்கள் அற்புதங்களைச் செய்கிறீர்கள். இவை அனைத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா உங்களுக்குத் தொடர்ந்தும் தனது இதயபூர்வமான அன்பை வழங்குகிறார். மிகவும் நல்லது. நீங்கள் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். கருவி ஆகியிருப்பதன் பரிசாக தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் விசேடமான திருஷ்டி வழங்குகிறார். நீங்கள் மிக நல்லதோர் இலட்சியத்தை வைத்திருந்தீர்கள். நீங்கள் நல்லவர்கள், நீங்கள் நல்லவர்களாகவே இருப்பீர்கள். அத்துடன் மற்றவர்களையும் நல்லவர்கள் ஆக்குவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றுக்கும் சிக்கனமான வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்கி, சீரிய முயற்சியாளர் ஆகுவீர்களாக.

சாதாரணமான வாழ்க்கையில், ஒரு குடும்பத்தில் நீங்கள் சிக்கனமாக இல்லாவிட்டால், அந்த வீட்டை நன்றாக இயக்க முடியாது. அதேபோல், கருவிக் குழந்தைகள் சிக்கனமாக இல்லாவிட்டால், நிலையமும் நன்றாக இயங்காது. அவை எல்லைக்குட்பட்ட இல்லறங்கள். ஆனால் இதுவோ எல்லையற்ற இல்லறம் ஆகும். எனவே, உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், சக்திகள் என்பவற்றைப் பொறுத்தவரை எவ்வளவற்றை மேலதிகமாக நீங்கள் செலவழித்தீர்கள் எனச் சோதித்துப் பார்க்க வேண்டும். தமது பொக்கிஷங்களின் சிக்கனமான வரவுசெலவுத் திட்டத்தைச் செய்து அதற்கேற்ப வாழ்பவர்கள், சீரிய முயற்சியாளர்கள் எனப்படுவார்கள். அவர்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் அல்லது இந்த ஞானத்தின் சக்திகள் எதுவுமே வீணாகிப் போகாது.

சுலோகம்:
அன்புப் பொக்கிஷத்தால் நிரம்பியவராகி, எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து, அன்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மைசக்தி உங்களை பரம பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆக்குகிறது. நீங்கள் தூய்மை சக்தியால் இந்தத் தூய்மையற்ற உலகையே மாற்றுகிறீர்கள். விகாரங்களின் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களை தூய்மை சக்தி குளிர்விக்கிறது. அது ஆத்மாக்களை அவர்களின் பல பிறவிகளின் விகாரங்களின் பந்தனங்களில் இருந்து விடுவிக்கிறது. துவாபர யுகத்தில் இருந்தே இந்த உலகம் தூய்மையின் அடிப்படையிலேயே சிறிதளவு ஆதாரத்தைப் பெற்று வந்தது. இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, உங்களின் தூய்மை ஒளிக் கிரீடத்தை அணிந்து கொள்ளுங்கள்.