11.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய முழுமையான ஆஸ்தியைக் கோரிக் கொள்வதற்கு ஒரேயொரு தந்தையின் மீது முழுமையான அன்பைக் கொண்டிருங்கள். உங்களுடைய அன்பு சரீரதாரிகளுக்கானதாக இருக்கக்கூடாது.

கேள்வி:
உங்களுடைய தேவ சமுதாயத்திற்குச் சொந்தமானவர்களின் மனதிலிருந்து எந்த வார்த்தைகள் எதிரொலிக்கும்?

பதில்:
தந்தையை நினைவு செய்வதன் மூலம் பாவங்கள் அழிக்கப்படுகின்றது என்றும், தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்றும், நீங்கள் அவர்களுக்குக் கூறுகின்ற போது, இந்த வார்த்தைகள் அவர்களினுள்ளே தொடர்ந்தும் எதிரொலிக்கும். தாங்கள் தூய்மையான தேவர்கள் ஆகவேண்டும் என்றும், அவர்களுடைய உணவும், பானமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்றும் அவர்களது புத்திகளில் பிரவேசிக்கும்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை.

ஓம் சாந்தி.
கள்ளங்கபடமற்ற பிரபுவின் குழந்தைகள் செவிமடுக்கின்றார்கள். யாருக்கு? கள்ளங்கபடமற்ற பிரபுவிற்கு. சிவனே கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகின்றார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். “கள்ளங்கபடமற்ற பிரபுவின் குழந்தைகள்” என்றால் சிவனின் குழந்தைகள் என்பதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களின் காதுகளால் கேட்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகின்றீர்கள். குழந்தைகள் முரளியை ஒலிப்பதிவு நாடாவில் கேட்கும் போது சிவபாபாவே அவரது அறிமுகத்தைக் அவர்களுக்குக் கொடுக்கின்றார் எனப் புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் பரமதந்தை, பரமாத்மா என்றழைத்த, கடவுள் என்று குறிப்பிடுகின்ற நானே, அனைத்து ஆத்மாக்களினதும் தந்தை ஆவேன். அவர் எப்போதும் தந்தை என்றே அழைக்கப்படுகின்றார். அவர் தந்தை என்று யார் கூறுகின்றார்? ஆத்மா. ஆத்மாவாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். வேறு எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இல்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் இரண்டு தந்தையரைக் கொண்டுள்ளோம். ஒருவர் சரீரதாரி, மற்றவர் அசரீரியானவர். நான் பரமதந்தை என்று வேறு எவருமே கூறமுடியாது. தந்தையைத்தவிர வேறு எவராலும் உங்களுக்கு இதைக் கூறமுடியாது. தந்தையே கேட்கின்றார்: நீங்கள் பரமதந்தை, பரமாத்மா, தந்தையாகிய கடவுள் என்று கூறும்போது யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்? நீங்கள் லௌகீகத் தந்தையைக் குறிப்பிடுகின்றீர்களா அல்லது இந்த உலகிற்கு அப்பாலுள்ள தந்தையைக் குறிப்பிடுகின்றீர்களா? உங்களுடைய லௌகீகத் தந்தையை தந்தையாகிய கடவுள் என்று அழைப்பீர்களா? ஹிந்தியிலே பரமபிதா (பரமதந்தை) என்று ஒரு சொல் இருக்கின்றது. அவர் மாத்திரமே அசரீரியானவர். ஈஸ்வர், பிரபு, பகவான் என்று கூறுவது தந்தை என்ற உறவுமுறையை நிரூபிக்கவில்லை. தந்தையாகிய கடவுள் என்ற வார்த்தை நல்லது. ஆத்மா கூறுகின்றார்: அவர் எனது தந்தையாகிய கடவுள். லௌகீகத் தந்தை சரீரத்திற்கான தந்தை ஆவார். உங்களுக்கு எத்தனை தந்தையர் உள்ளனர் என நீங்கள் அனைவரும் கேட்கப்படுகின்றீர்கள். ஒருவர் லௌகீகத் தந்தை, மற்றையவர் இந்த உலகிற்கு அப்பாலுள்ள தந்தை ஆவார். இருவரில் யார் மகத்துவமானவர்? அப்பாலுள்ள தந்தை என்றே நிச்சயமாகக் கூறப்பட்டுள்ளது. அவரது புகழானது தூய்மையற்ற அனைவரையும் தூய்மை ஆக்குகின்ற அப்பாலுள்ள தந்தை என்பதாகும். நீங்கள் இப்பொழுது அதைப் புரிந்து கொள்கின்றீர்கள். உலகிலுள்ள எவருமே இதைப் புரிந்து கொள்வதில்லை. அப்பாலுள்ள தந்தையின்மீது அன்பு செலுத்துகின்றீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். ஏனையோர் விநாசகாலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருப்பார்கள். இது இப்பொழுது விநாசத்திற்கான நேரமாகும். அதே மகாபாரத யுத்தம் இடம்பெற இருக்கின்றது. அவர்கள் ஒருவருக்கொருவர் ஆகாய விமானங்களையும், போர்த்தாங்கிகள் போன்றவற்றையும் தொடர்ந்து விநியோகம் செய்கின்றார்கள். அவர்கள் பணத்திற்குப் பதிலாக மற்றைய தேசத்தவர்கள் வேண்டுவனவற்றைக் கொடுக்கின்றார்கள். அவர்கள் கடனுக்கும் அவற்றை விநியோகம் செய்கின்றார்கள். அவர்கள் ஆகாய விமானங்களையும், வெடிபொருட்கள் போன்றவற்றையும் வாங்குகின்றார்கள். அவை அனைத்தும் மிகவும் விலையுயர்ந்தவை ஆகும். வெளிநாட்டில் உள்ளவர்கள் அவற்றை உற்பத்தி செய்து அவர்களுக்கு விற்கின்றனர். பாரதமக்கள் ஆகாயவிமானம் போன்றவற்றை விற்பனை செய்வதில்லை. இந்தப் பொருட்கள் அனைத்தும் வெளியிலிருந்தே வருகின்றன. அவர்கள் வாங்கிய பொருட்களை நிச்சயமாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் அவற்றை அப்பால் வீசி விடுவதற்காக வாங்குவதில்லை. அதுவே விநாசகாலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்ட ஐரோப்பாவில் வாழும் யாதவ சமுதாயம் ஆகும். அதில் அனைத்தும் அடங்குகின்றது. பாரதம் அழியாத தேசம், ஏனெனில் இதுவே அநாதியான தந்தையின் பிறப்பிடம் ஆகும். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட இருக்கின்றபோதே தந்தை வருகின்றார். அவர் ஒருபோதும் அழியாத தேசத்திலேயே பிறப்பு எடுக்கின்றார். தந்தை வந்ததனாலேயே, அவர்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார்கள். ஆயினும், சிவபாபா எப்போது வருகின்றார் என அவர்கள் அறிய மாட்டார்கள். அழிவுக்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்ற நேரத்திலேயே அவர் வருகின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: அது ஐரோப்பாவில் வாழுகின்ற யாதவ சமூகத்தவர் ஆவார். அவர்கள் சத்தியயுகத்தில் இருக்க மாட்டார்கள். அங்கே பௌத்தர்களோ, அல்லது கிறிஸ்தவர்களோ இருக்க மாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் விநாசகாலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் பரமதந்தையை சர்வவியாபி என்று கூறுகின்றனர். நீங்கள் விநாசகாலத்தில் அன்பான புத்தியைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை அறிவீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் எனப் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுடைய 84 பிறவிக் காலத்தில் நீங்கள் தமோபிரதானாகவும் பாவ ஆத்மாக்களாகவும் ஆகுகின்றீர்கள். பாரதமக்களே 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. அனைவரும் வீடு திரும்ப வேண்டும். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இது அனைவருக்கும் கணக்குத்தீர்க்கும் நேரமாகும். அதாவது மரணத்துக்கான நேரமாகும். அந்த யாதவர்கள் கடவுள்மீது அன்பற்றவர்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: அன்பற்ற புத்தியைக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள். சரீரதாரிகளிடம் அன்பு செலுத்தாதீர்கள்! அவர்கள் படைப்புக்களே, ஒரு ஆஸ்தியை அவர்களிடம் இருந்து பெறமுடியாது. ஒரு சகோதரர், ஒரு சகோதரரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறமுடியாது. இது மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. விநாசகாலத்தில் அவர்கள் அன்பற்ற புத்தியைக் கொண்டிருப்பார்கள் எனவும், ஆனால் நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டிருப்பீர்கள் எனவும், குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இதிலும்கூட அதிகளவு அன்புடையவர்கள் தந்தையிடம் நிறைந்த அன்பு கொண்டுள்ளனர். நாங்கள் தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கு சுவர்க்கம் எனும் ஆஸ்தியைக் கோருகின்றோம். பாபா மாத்திரமே எங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். நாம் எவர் மீதும் அன்பு செலுத்தக்கூடாது. ஒரு புதிய வீடு கட்டப்படும் போது அவர்கள் புதியதையே விரும்புவார்கள். பழையது அழிக்கப்படும் எனப்புரிந்து கொள்ளப்படும். நீங்களும் பழைய உலகிலிருந்து உங்களின் இதயத்தைத் தொடர்ந்தும் அகற்றவேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாளுக்கு நாள் சூழலும் தொடர்ந்து மோசமடையும். எவ்வாறு அதிகளவு குழப்பங்கள் உள்ளன என நீங்கள் பார்க்க முடியும். எனவே அனைத்துமே இப்பொழுது அழியப்போகின்றது என உங்களால் புரிந்து கொள்ளமுடியும். நாங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். எனவே புதிய உலகை நினைவு செய்யவேண்டும். எல்லையற்ற தந்தையும் ஆஸ்தியும் நினைவு செய்யப்பட வேண்டும். வேறு எவரையும் நினைவு செய்வதால், எதையுமே அடைய முடியாது. மக்கள் பக்தி மார்க்கத்தில் கடவுளை அதிகளவு நினைவு செய்கின்றார்கள்! அவர்களுடைய பெற்றோர், நண்பர்கள், உறவினர்களை நினைவு செய்கின்றபோதே, அவர்கள் தேவர்களையும் அதிகளவு நினைவு செய்கின்றார்கள். அவர்கள் கங்கைகளில் நீராடச் சென்று அதை தூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றார்கள்! ஓர் அம்பு எய்யப்பட்டு அம்பு தைத்த இடத்தில் கங்கை வெளியாகியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கங்கை நீரை வாயினுள் (ஒருவர் மரணிக்கும் தறுவாயிலுள்ள போது) விடுகின்றார்கள். அவர் சில துளிகள் கங்கைநீரைப் பெற்றால் முக்தி பெறுவார் என்று அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இங்கே இது ஞானம் பற்றிய விடயமாகும். நீங்கள் சிறிதளவு இந்த ஞானத்தைக் கேட்டாலும் அதன் பலனைப் பெறுவீர்கள். இது இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்ற விடயமாகும். அமிர்தம் என்பது பருகுவதற்கான பானமல்ல, அது ஞானமாகும். போக் படைக்கும் நாளில் உங்களுக்கு பருகுவதற்கு அமிர்தம் கொடுக்கப்படுகின்றது என நினைக்காதீர்கள், இல்லை. அது இனிய நீராகும். ஆயினும் இது ஞானம் பற்றிய விடயமாகும். இந்த ஞானம் என்றால், தந்தையையும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் அறிந்து கொள்வதுடன், எவ்வாறு இவ்வுலகச் சக்கரம் சுழல்கின்றது, யார் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள் எனப்புரிந்து கொள்வதுமாகும். ஒவ்வொருவரும் இந்த எண்ணிக்கையான பிறவிகளை எடுக்க முடியாது. பாரதமக்களே முதலில் வருகின்றார்கள். அவர்களே முழுமையாக 84 பிறவிகள் எடுப்பவர்கள் ஆவார்கள். தேவர்களாக இருந்தவர்கள் 84 பிறவிகள் எடுத்துத் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். பின்னர் தந்தை வந்து முட்களை மலர்களாக மாற்றுகின்றார். மக்கள் சரீரஉணர்வு உடையவர்களாகி ஐந்து விகாரங்களில் சிக்கி உள்ளார்கள். இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். சத்தியயுகம் தேவ இராச்சியமாக இருந்தது. சிவபாபாவே சுவர்க்கபூமியை ஸ்தாபிக்கின்றார். அது சூரிய வம்சத்தவராகிய இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. ஸ்தாபனை இப்பொழுது இடம் பெறுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். விநாசகாலத்தில் அன்பான புத்தியைக் கொண்டிருப்பதனால் நீங்களே வெற்றி அடைகின்றீர்கள். நீங்கள் முழு உலகின் மீதும் வெற்றி கொள்கின்றீர்கள். இதை மிக நன்றாக நினைவில் வைத்திருங்கள்! இப்பொழுது கலியுகத்தில் இருக்கின்ற பாரதமக்களாகிய நீங்கள் மாற்றம் அடைந்து சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். பழைய உலகம் துறக்கப்பட வேண்டும். அந்த விகாரமான உறவுமுறைகளே பந்தனம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் விகாரமான பந்தனங்களை விட்டு விகாரமற்ற உறவுமுறைக்குள் பிரவேசித்துள்ளீர்கள். பின்னர் உங்களுடைய அடுத்த பிறவியில் நீங்கள் எந்த விகாரமான பந்தனத்திற்கு உள்ளேயும் பிரவேசிக்க மாட்டீர்கள். அங்கே விகாரமற்ற உறவுமுறைகளே உள்ளன. இந்நேரத்திலோ விகாரமான பந்தனங்கள் உள்ளன. ஆத்மா கூறுகின்றார்: நான் சிவபாபாவின் மீது அன்பு வைத்துள்ளேன். பிராமணர்களாகிய நீங்கள் அவர்மீது அன்பு வைத்துள்ளீர்கள். ஏனெனில் நீங்கள் அவரை மிகச்சரியாக அறிந்துள்ளீர்கள். நீங்கள் தந்தையையும் முழுச்சக்கரத்தையும் அறிவீர்கள். அத்துடன் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துகின்றீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தும் அளவிற்கு அதிகளவு மக்களுக்கு நன்மை பயப்பீர்கள். அதிகளவு புரிந்து கொள்கின்றவர்கள் திறமைசாலிகள், அவர்களே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். நீங்கள் குறைந்தளவு சேவை செய்தால் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். முழு உலகமுமே தூய்மையற்றது. அனைவருக்கும் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவதற்கான பாதையைக் காட்டுங்கள். வேறு எந்த வழிமுறையும் இல்லை. நினைவின் மூலமே பாவங்கள் அழிக்கப்படும். இந்த வார்த்தைகள் தேவசமூகத்திற்குச் சொந்தமானவர்களின் உள்ளே எதிரொலிக்கும். இதுவே சரி என்று அவர்கள் உணர்வார்கள். நாங்கள் உண்மையில் தேவர்கள் ஆகுகின்றோம். எங்களுடைய உணவும் தூய்மையாக இருக்கவேண்டும். தெய்வீகக் குணங்கள் இங்கேயே கிரகிக்கப்பட வேண்டும். சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகுங்கள். நீங்கள் இப்பொழுது இவ்வாறு ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தேவர்களாவர். நீங்கள் அவர்களுக்கு பிரசாதம் படைக்கும் போது, சிகரட்டை பிரசாதமாக படைக்கின்றீர்களா? சிகரட் பிடிப்பவர்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாது. அது ஒரு தெய்வீகமான செயல் அல்ல. நீங்கள் புகைப்பிடித்து அத்துடன் தொடர்ந்தும் வெங்காயம், உள்ளி சாப்பிடுவீர்கள் என்றால், மேலும் வீழ்ந்து விடுவீர்கள். சிலர் இந்தப் பொருட்களைத் துறந்தால் தங்களின் ஆரோக்கியம் மோசம் அடைவதாகக் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள்! அந்தப் பழக்கங்கள் அனைத்தையும் துறவுங்கள், நீங்கள் சற்கதி அடைவீர்கள். பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார்கள். தேவர்களுக்கு இவை ஒருபோதும் பிரசாதமாகப் படைக்கப்படுவதில்லை என்று ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே அவர்களைப் போன்றவர்கள் ஆகவேண்டும். நீங்கள் தொடர்ந்தும் அசுத்தமானவற்றை உண்கின்ற போது, துர்நாற்றம் இருக்கும். சிகரட் பிடிப்பவர்களில் இருந்தும், மது அருந்துபவர்களில் இருந்தும் துர்நாற்றம் பரவும். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து வைஷ்ணவர்களாக (முற்றிலும் தூய மரக்கறி உண்பவர்கள்) ஆகவேண்டும். விஷ்ணுவின் குழந்தைகள் இருப்பதைப் போன்று நீங்கள் தேவகுழந்தைகள். இங்கே நீங்கள் கடவுளின் குழந்தைகள். இது உங்களின் அதி மேன்மையான பிறப்பாகும். நீங்கள் தேவர்களிலும் பார்க்க மேன்மையானவர்கள். நீங்களே மற்றவர்களையும் மேன்மை ஆக்குபவர்கள். இது எல்லையற்ற தந்தையின் மிஷனாகும். கிறிஸ்தவர்களுக்கும் ஒரு மிஷன் உண்டு. அவர்கள் பலரைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகின்றார்கள். இது கடவுளின் மிஷனாகும். நீங்கள் சூத்திரர்களில் இருந்து, பிராமணர்களாக மாற்றப்பட்டுள்ளீர்கள், பின்னர் நீங்கள் தேவதர்மத்திற்கு மாற்றப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களில் இருந்து, பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள் என அறிவீர்கள். நீங்கள் மரணித்து வாழ்கின்றீர்கள், பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் கர்ப்பத்தின் மூலம் பிறப்பெடுப்பீர்கள். தந்தை இங்கே உங்களை தர்மாத்மாக்கள் ஆக்குவதற்காகவே தத்தெடுத்துள்ளார். தந்தை உங்களைத் தனக்குச் சொந்தமாக்கி உள்ளார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் பிராமணர்கள் ஆகிப் பின்னர் தேவர்கள் ஆகின்றீர்கள். அந்த மனிதர்கள் மேன்மையானவர்கள், அவர்களிடம் சகல தெய்வீகக்குணங்களும் உள்ளன. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகின்ற போது, உங்களுக்குத் தூய சரீரங்கள் தேவையாகும். உங்களுடைய பழைய சரீரம் அழிக்கப்பட்டு, பின்னர் நீங்கள் புதிய சதோபிரதான் சரீரத்தைக் கொண்டிருப்பீர்கள். சத்தியயுகத்தில் பஞ்ச பூதங்களும் சதோபிதானாக இருக்கும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சூத்திர குலத்தினருக்கு உரியவராக இருந்தீர்கள். இப்பொழுது பிராமண குலத்துக்குச் சொந்தமாகி உள்ளீர்கள், பின்னர் தெய்வீக குலத்துக்குச் செல்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுப்பீர்கள். பிராமணக்குலம் மறைக்கப்பட்டுள்ளது (திரிமூர்த்தி படத்திலிருந்து). தந்தை இப்பொழுது உங்களை சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாகவும், பின்னர் தேவர்களாகவும் மாற்றுகின்றார். பிராமணர்களாகிய நீங்களே உச்சிக்குடுமிகள். குத்துக்கரண விளையாட்டு ஒன்று உள்ளது. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள், பின்னர் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும் ஆகுவீர்கள்…. பின்னர் நீங்கள் மீண்டும் ஒருமுறை பிராமணர்கள் ஆகுவீர்கள். இதுவே சக்கரம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தில் உள்ளீர்கள். இந்நேரத்தில் உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் பின்னர் வெகுமதியைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக 21 பிறவிகளுக்கு அங்கே சந்தோஷமாக இருப்பீர்கள். சிலர் அரசகுலத்திற்குள் செல்வார்கள், ஏனையோர் பிரஜைகள் ஆகுவார்கள். அரசகுலத்தில் அதிகளவு சந்தோஷம் இருக்கின்றது. பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடையும். நீங்கள் 84 பிறவிகளின் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றீர்கள். தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, உங்களுடைய 84 பிறவிகள் இப்போது முடிவிற்கு வருகின்றது. சிலர் 84 பிறவிகளையும், ஏனையோர் 80, 60 அல்லது 50 பிறவிகளையும் எடுக்கின்றார்கள். பாரதமக்களாகிய நீங்களே, அதிகளவு சந்தோஷத்தைக் காண்கின்றீர்கள். இந்த நாடகத்தில் உங்களின் பெயர் புகழப்பட்டுள்ளது. நீங்கள் தேவர்களிலும் பார்க்க மேன்மையானவர்கள். நீங்கள் பூஜிக்கத்தக்கவர்களாக ஆகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் சத்தியயுகத்தில் எவரையும் பூஜிப்பதுமில்லை, எவரும் எங்களைப் பூஜிப்பதுமில்லை. அங்கே நாங்கள் பூஜிக்கத் தகுந்தவர்கள், பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களில் இருந்து, நாங்கள் பூஜிப்பவர்களாகி, தலை வணங்குகின்றோம். நாங்கள் துவாபரயுகத்தில், பூஜிப்பவர்கள் ஆகத்தொடங்குகிறோம். கடைசியில் அனைவரும் கலப்படம் உள்ளவர்களாக ஆகுகின்றார்கள். இந்த சரீரம் பஞ்ச பூதங்களினால் ஆனது. எவராவது பஞ்ச பூதங்களை வணங்கினால், அது தீயஆவிகளை வணங்குவது என்றே அழைக்கப்படுகின்றது. அனைவரிலும் ஐந்து தீய ஆவிகள் உள்ளன. சரீர உணர்வு எனும் தீய ஆவியும் உள்ளது, பின்னர் காமம், கோபம் எனும் தீய ஆவிகள் உள்ளன. நீங்கள் தீய ஆவிகளின் சமுதாயம் என்று கூறினாலும், அசுர சமுதாயம் என்று கூறினாலும், இரண்டும் ஒன்றேதான். தந்தை வந்து மீண்டும் ஒருமுறை தேவசமுதாயத்தை உருவாக்குகின்றார். தந்தை வந்து உங்களைத் தீய ஆவிகளில் இருந்து விடுவிக்கின்றார். அவர் உங்களைத் தேவர்கள் ஆக்குவதற்காக, அவருடன் யோகம் செய்ய வைக்கின்றார். குருநானக்கும், மனிதர்களைத் தேவர்களாக மாற்றிய பரமதந்தை, பரமாத்மாவின் புகழைப் பாடினார். அவர் ஒருவரே தூய்மை அற்றவர்களைத், தூய்மை ஆக்குபவர் ஆவார். அச்சா.

இனிமையிலும், இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிராமணர்களில் இருந்து, தேவர்கள் ஆகுவதற்கு உங்களிடமுள்ள அசுத்தமான பழக்கங்கள் அனைத்தையும் துறவுங்கள். சூத்திரர்கள், பிராமண தர்மத்துக்கு மாற்றப்பட்டு, தேவர்கள் ஆக்கப்படுவதற்கு அவர்கள் கடவுளின் மிஷனுடன் ஒத்துழைக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீயபழக்கங்கள் அனைத்தையும் துறவுங்கள்.

2. விநாசத்துக்கான இந்த நேரத்தில், ஒரேயொரு தந்தையிடம் உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். இந்தப் பழைய வீடு அழிக்கப்பட உள்ளது, எனவே உங்கள் இதயத்தை அதிலிருந்து அகற்றி, அந்தப் புதிய உலகுடன் இணையுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் யோகியுக்தாகவும் யுக்தியுக்தாகவும் ஆகி, உங்களின் மேன்மையான செயல்களால் நினைவு செய்யப்படுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்களாக.

எந்தளவிற்கு உங்களின் செயல்கள் ஒவ்வொன்றும் மேன்மையானதாக உள்ளதோ, அதற்கேற்ப, நீங்கள் மேன்மையான ஆத்மாக்களில் ஒருவராக நினைவு செய்யப்படுவீர்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் பெயர்களை உச்சரிக்கிறார்கள். ஆனால் இங்கே, மேன்மையான ஆத்மாக்கள் அவர்களின் நற்குணங்கள் மற்றும் செயல்களுக்காக உதாரணமாக நினைவுகூரப்படுகிறார்கள். உங்களின் மேன்மையான செயல்களின் அடிப்படையில், நீங்கள் தொடர்ந்து நினைவு செய்யப்படுவதற்குத் தகுதியானவர் ஆகுவீர்கள். இதற்கு, நீங்கள் யோகியுக்த் ஆகவேண்டும். நீங்கள் யோகியுக்த் ஆகுவதன் மூலம், உங்களின் ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் நிச்சயமாக யுக்தியுக்தாக இருக்கும். இத்தகைய ஆத்மாக்களால் மிகச்சரியாக இல்லாத எந்த எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது அல்லது செயல்களைச் செய்ய முடியாது. இந்தத் தொடர்பும் உள்ளது.

சுலோகம்:
கருவியாக இருப்பதுடன் பணிவையும் கொண்டிருப்பதே ஓர் உண்மையான சேவையாளரின் தகுதிகள் ஆகும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கும்போது, மலர்ச்சியாக இருப்பதுடன் உங்களின் கண்கள், உங்களின் முகம் மற்றும் செயல்பாடுகளில் இனிமை புலப்படும். உங்களின் உதடுகளில் இருந்து ஒருபோதும் கடுமையான அல்லது கசப்பான வார்த்தைகள் வெளிப்பட மாட்டாது. உங்களின் இதயம், தலை, வார்த்தைகள் அனைத்தும் சமமாகவே இருக்கும். உங்களின் இதயத்தில் ஒன்றையும் உங்களின் வார்த்தைகளில் வேறு ஒன்றையும் கொண்டிருப்பது, இலகுத்தன்மையின் அடையாளம் அல்ல. இலகுவான சுபாவத்தைக் கொண்டிருப்பவர்கள், சதா பணிவான இதயத்தைக் கொண்டிருப்பதுடன் அகங்காரம் அற்றவராகவும் தன்னலம் அற்றவராகவும் இருப்பார்.