11.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் கற்பதனால், உங்கள் ஸ்திதியைக் கர்மாதீதம் ஆக்குவதுடன், பிறருக்குத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியைக் காட்டவும் வேண்டும். எனவே, ஆன்மீகச் சேவையைச் செய்யுங்கள்.

கேள்வி:
எந்த மந்திரத்தை நினைவு செய்வதன் மூலம், பாவச் செயல்கள் செய்வதில் இருந்து நீங்கள் உங்களைத் தடுக்க முடியும்?

பதில்:
தந்தை உங்களுக்கு, “தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! தீயதைப் பேசாதீர்கள்!” என்ற மந்திரத்தைக் கொடுத்துள்ளார். இம்மந்திரத்தை நினைவு செய்யுங்கள். உங்கள் பௌதீகப் புலனங்கங்கள் மூலம் நீங்கள் எந்தப் பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. கலியுகத்தில் அனைவரும் பாவச் செயல்களைச் செய்கின்றனர். இதனாலேயே பாபா உங்களுக்குத் தூய்மை எனும் தெய்வீகக் குணத்தைக் கிரகிப்பதற்கான வழியைக் காட்டியுள்ளார். இதுவே முதற்தரமான தெய்வீகக் குணமாகும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் யார் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள்? நீங்கள் தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவருமாகிய, எல்லையற்ற தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பது நிச்சயமாக உங்களின் புத்திகளில் இருக்க வேண்டும். அந்தத் தந்தை பிரம்மாவின் சரீரத்தில் இருக்கின்ற பொழுதிலும், நீங்கள் அவரையே (சிவபாபா) நினைவு செய்ய வேண்டும். மனிதர்களால் எவருக்கும் சற்கதி அருள முடியாது. எந்தவொரு மனிதரும் தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். அவர் ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை ஆவார். அந்தத் தந்தை எங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இதை அறிந்திருப்பதால், சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள் என்பதையும் அறிவீர்கள். உங்களுக்கு மிக இலகுவான வழி காட்டப்பட்டுள்ளது. நீங்கள் இயல்பாகவே அவரை நினைவுசெய்வதுடன், தெய்வீகக் குணங்களையும் உங்களுக்குள் கிரகிக்க வேண்டும். நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். நாரதரின் உதாரணமும் உள்ளது. ஞானக்கடலாகிய தந்தை அந்த உதாரணங்கள் அனைத்தையும் கொடுத்தார். சந்நியாசிகள் போன்றோர் கொடுக்கின்ற உதாரணங்களும் உண்மையில் தந்தையால் கொடுக்கப்பட்டவையே ஆகும். பக்தி மார்க்கத்திலுள்ள மக்கள் தொடர்ந்தும் பாடுகின்றனர். அவர்கள் ஆமை, பாம்பு, ரீங்காரமிடும் வண்டு போன்றவற்றின் உதாரணங்களைக் கொடுக்கின்ற பொழுதிலும், அவர்களால் எதையுமே செய்ய முடியாதுள்ளது. தந்தை இப்பொழுது கொடுக்கின்ற உதாரணங்களை, அவர்கள் மறுபடியும் பக்தி மார்க்கத்தில் கொடுக்கின்றார்கள். பக்தி மார்க்கம் கடந்த காலத்தில் நடந்தவை. இந்நேரத்தில் நடைமுறையில் நடப்பவை எல்லாம், பின்னர் பக்தி மார்க்கத்திலே நினைவு கூரப்படுகின்றன. அவர்கள் கடவுளினதும், தேவர்களினதும் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்ற பொழுதிலும், அவர்கள் எதையுமே அறியார்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவதற்கான கற்பித்தல்களைத் தந்தையிடம் இருந்து பெறுவதுடன், மற்றவர்களுக்கும் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவதற்கான பாதையையும் காட்டுகின்றீர்கள். இதுவே உங்களின் பிரதான ஆன்மீக சேவையாகும். முதலில், உங்களிடம் வருபவர்களுக்கு ஆத்மாக்களின் ஞானத்தைக் கொடுங்கள்: நீங்கள் ஓர் ஆத்மா. ஆத்மாக்கள் பற்றி எவருமே அறியார். ஆத்மாக்கள் அழியாதவர்கள். சரியான நேரத்தில் ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கிறார். ஆகையினால் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். பரமாத்மா பரமதந்தையே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை ஆவார். அவர் பரம ஆசிரியரும் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இதை ஒவ்வொரு கணமும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இதை மறக்கக்கூடாது. நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். விநாசம் உங்கள் தலைக்கு மேல் நிற்கின்றது. சத்தியயுகத்தில் தேவ குடும்பம் மிகவும் சிறியதாக இருக்கும். கலியுகத்தில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள்; எண்ணற்ற மதங்களும், எண்ணற்ற அபிப்பிராயங்களும் இருக்கின்றன. சத்தியயுகத்தில் இந்த விடயங்கள் எதுவும் இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்களை நாள் முழுவதும் உங்கள் புத்திகளிலே வைத்திருக்க வேண்டும். இது ஒரு கல்வி, இல்லையா? லௌகீகக் கல்வியில் அவர்கள் பலவகையான புத்தகங்கள் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் புதிய புத்தகங்களை வாங்க வேண்டும். இங்கே, புத்தகங்கள் அல்லது சமயநூல்கள் பற்றிய கேள்வியில்லை. இங்கே ஒரேயொரு விடயமே உள்ளது. ஒரேயொரு கல்வியே உள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இங்கே இருந்தபொழுது, அது அரசர்களின் இராச்சியமாக இருந்தது. எனவே அவர்கள் எவருடைய புகைப்படத்தையும் அன்றி, அரசன் அல்லது அரசியின் படத்தையே முத்திரைகளில் பதித்தார்கள். இந்நாட்களில் அவர்கள் தொடர்ந்தும் முன்னர் வாழ்ந்து சென்ற பக்தர்களின் முத்திரைகளையும் உருவாக்குகின்றார்கள். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் உள்ளபொழுது, அங்கே ஒரு சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினியின் படம் மாத்திரமே இருக்கும். கடந்த காலத்தில் வாழ்ந்த தேவர்களின் படங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது என்றில்லை; இல்லை. மக்கள் புராதன தேவர்களின் பழைய படங்களை வாங்குவதில் நிறைந்த ஆர்வம் கொண்டுள்ளார்கள். ஏனெனில் தேவர்கள் சிவபாபாவுக்கு அடுத்ததாக இருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுவதற்காக, இந்த விடயங்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். இது முற்றிலும் புதிய கல்வியாகும். நீங்கள் முன்னரும் இதைக் கேட்டு உயர்ந்த அந்தஸ்தைக் கோரினீர்கள். வேறு எவருமே இதை அறியமாட்டார்கள். பரமாத்மா பரமதந்தை, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். மகாபாரத யுத்தம் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. நாங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, என்ன நடக்கின்றது என்பதைக் காண்போம். சிலர் ஒன்றையும், மற்றவர்கள் வேறொன்றையும் கூறுகின்றனர். நாளுக்கு நாள் மனிதர்கள் தொடர்ந்தும் இதன் தொடுகையைப் பெறுவார்கள். உலக யுத்தம் நடைபெறப் போவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். அது நடைபெறும் முன்னர், குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியின் மூலம் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். எவ்வாறாயினும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெறுவதில்லை. இந்நேரத்தில் நீங்கள் பிராமண சமுதாயத்தினர், பின்னர் நீங்கள் தேவ சமுதாயத்தினர் ஆகுகிறீர்கள். இதனாலேயே நீங்கள் இந்தப் பிறவியில் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள். தூய்மையே முதற்தரமான தெய்வீகக் குணமாகும். நீங்கள் உங்கள் சரீரங்களின் மூலம் அதிகளவு பாவத்தைச் செய்தீர்கள். ஆத்மாக்களே பாவாத்மாக்கள் எனக் கூறப்படுகின்றனர். ஆத்மாக்கள் அவர்களின் பௌதீக அங்கங்கள் மூலம் அதிகளவு பாவங்களைச் செய்கின்றார்கள். “தீயதைக் கேட்காதீர்கள்” என யாருக்குக் கூறப்படுகின்றது? ஆத்மாக்களுக்கே ஆகும். ஆத்மாக்களே செவிகள் மூலம் கேட்கின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகின்றார்: நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்குச் சொந்தமானவர்களாக இருந்தீர்கள், நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள், இப்பொழுது மீண்டும் நீங்கள் அதற்குச் சொந்தமாக வேண்டும். இந்த இனிய ஞாபகங்கள் வெளியாகும் பொழுது, ஆத்மா தூய்மை ஆகுவதற்கான தைரியத்தைக் கொண்டிருக்கிறார். நீங்கள் உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை எவ்வாறு நடித்துள்ளீர்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது: ஆரம்பத்தில் நீங்கள் இவ்வாறுதான் இருந்தீர்கள் - இது ஒரு கதையாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் தேவர்களாக இருந்தோம் என்பது உங்கள் புத்திகளிலே புகவேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரி உலகவாசிகள். முன்னர், அது ஆத்மாக்களாகிய எங்களுக்கு எங்களின் வீடாக இருந்தது பற்றியோ, எங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக அங்கிருந்து வந்தது பற்றியோ, நாங்கள் சூரிய வம்சத்தினராகவும், பின்னர் சந்திர வம்சத்தினராகவும் ஆகுகின்றோம் என்பது பற்றியோ சிறிதளவு எண்ணம் கூட இருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது, பிரம்மாவின் குழந்தைகளாகிய பிராமண வம்சம் ஆவீர்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். கடவுள் இங்கிருந்து உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அந்தப் பரம தந்தையே, பரம ஆசிரியரும், பரம குருவும் ஆவார். அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், நாங்கள் மனிதர்கள் அனைவரையும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றோம். முக்தி, ஜீவன்முக்தி இரண்டுமே மேன்மையானவை. நாங்கள் எங்களின் வீட்டுக்குச் சென்று, பின்னர் தூய ஆத்மாக்களாகக் கீழிறங்கி ஆட்சிசெய்;வோம். இது ஒரு சக்கரமாகும். இது சுயதரிசனச் சக்கரம் என அழைக்கப்படுகின்றது. இது ஞானத்துக்கான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: உங்களுடைய சுயதரிசனச் சக்கரம் சுழல்வது நின்று விடக்கூடாது. தொடர்ச்சியாக அதைச் சுழற்றுவதன் மூலம், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் இராவணனை வெற்றி கொள்வீர்கள்; உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். நீங்கள் இப்பொழுது இவை அனைத்தையும் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளீர்கள். ஆகவே நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க முடியும். நீங்கள் அமர்ந்திருந்து மாலையின் மணியைச் சுழற்ற வேண்டும் என்றில்லை. ஆத்மாக்களாகிய உங்களுக்குள்ளே இந்த ஞானம் உள்ளது. ஆகையினால் குழந்தைகளாகிய நீங்கள் மற்றைய சகோதர, சகோதரிகளுக்கும் அதனை விளங்கப்படுத்த வேண்டும். அந்தக் குழந்தைகளும் உதவியாளர்களாக ஆகுவார்கள், இல்லையா? நான் குழந்தைகளாகிய உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகின்றேன். என்னிடம் இந்த ஞானம் உள்ளது, இதனாலேயே நான் மனித குல விருட்சத்தின் விதையான, ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றேன். அவர் தோட்டத்தின் அதிபதி என்றும் அழைக்கப்படுகின்றார். சிவபாபா தேவ தர்மத்தின் விதையை விதைத்துள்ளார். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் நாள் முழுவதும் இந்தளவையேனும் தொடர்ந்தும் நினைவுசெய்தால், அதிகளவு நன்மையை அனுபவம் செய்யலாம். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் தூய்மையாகவும் வேண்டும். கணவனும், மனைவியும் ஒன்றாக வாழ்கின்ற பொழுதிலும், தூய்மையாக இருக்கிறார்கள். இதுபோன்று வேறு எந்தச் சமயமும் இல்லை. சந்நியாசப் பாதையில் ஆண்கள் மாத்திரமே தூய்மையாக இருக்கின்றனர். கணவனும், மனைவியும் ஒன்றாக வாழ்ந்து, தூய்மையாக இருப்பது கஷ்டமானது என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சத்திய யுகத்தில் அனைவரும் இப்படித்தான் இருந்தார்கள், அப்படித்தானே? மக்கள் இலக்ஷ்மி, நாராயணனின் புகழ் பாடுகின்றார்கள். பாபா எங்களைச் சூத்திரர்களில் இருந்து, பிராமணர்களாக மாற்றி, பின்னர், தேவர்களாக ஆக்குகின்றார் என இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து, பூஜிப்பவர்களாக மாறுவோம். பின்னர் நீங்கள் பாவப் பாதைக்குச் செல்லும் பொழுது, சிவனுக்கு ஆலயங்களைக் கட்டி அவரைப் பூஜிப்பீர்கள். உங்கள் 84 பிறவிகள் பற்றிய ஞானம், குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: உங்களுடைய 84 பிறவிகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை; நான் இப்பொழுது உங்களுக்கு அதைக் கூறுகின்றேன். எந்த மனிதராலும் உங்களுக்கு இதைக் கூறமுடியாது. தந்தை இப்பொழுது உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். உங்கள் சரீரங்கள் இங்கே தூய்மையாக முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் பொழுது, உங்கள் தூய்மையற்ற சரீரங்களை விட்டு விட வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். தூய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏனைய அனைவரும் இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். இதை நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதுடன், நீங்கள் உங்களுடைய வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் தந்தையை வீட்டில் வைத்தே நினைவுசெய்ய வேண்டும். தந்தை இந்தச் சரீரத்தினுள் பிரவேசித்து, உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுகிறார் என்று நீங்கள் அறிந்துள்ள பொழுதிலும், உங்கள் புத்திகள் உங்கள் இனிய வீடான, பரந்தாமத்திலிருந்து துண்டிக்கப்படுவதை அனுமதிக்காதீர்கள். ஆசிரியர் உங்களுக்குக் கற்பிப்பதற்காக அவரது வீட்டை விட்டு இங்கே வருகின்றார். உங்களுக்குக் கற்பித்த பின்னர் அவர் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுவார். அவரால் ஒரு விநாடியில் எங்கேயும் செல்ல முடியும். ஆத்மா ஒரு சின்னஞ்சிறிய புள்ளி ஆவார். நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும். தந்தை ஆத்மாக்கள் பற்றிய இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். உங்களுடைய கைகள் அல்லது கால்கள் அல்லது ஆடைகள் அழுக்கடையும் அளவிற்கு, சுவர்க்கத்தில் எதுவுமே அழுக்காக இருக்க மாட்டாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தேவர்களின் ஆடைகள் மிக அழகானவை. அவர்களுடைய ஆடைகள் முதற்தரமானவை; அங்கே அவற்றைக் கழுவ வேண்டிய தேவையில்லை. அவற்றைப் பார்ப்பதிலேயே அதிகளவு சந்தோஷம் இருக்கும். எங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கு நாங்கள் இவ்வாறாக ஆகுகின்றோம் என்பதை ஆத்மா அறிவார். இதைத் தொடர்ந்தும் பாருங்கள். ஒவ்வொருவரும் இந்தப் படத்தை வைத்திருக்க வேண்டும். பாபா இவ்வாறாகவே உங்களை ஆக்குகின்றார் என நீங்கள் பெரும் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, அவ்வாறான தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் ஏன் அழ வேண்டும்? நீங்கள் எந்தக் கவலையையும் கொண்டிருக்கக் கூடாது. மக்கள் தேவர்களின் ஆலயங்களுக்குச் சென்று புகழ்ந்து பாடல்களைப் பாடுகின்றார்கள்: “நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்.” அவர்கள் பல பெயர்களை உரைக்கின்றார்கள். அவர்கள் நினைவு செய்கின்ற சகல பெயர்களும் சமயநூல்களிலே எழுதப்பட்டுள்ளன. அவற்றைச் சமயநூல்களில் எழுதியது யார்? வியாசர் அல்லது சில புதியவர்கள் அவற்றை எழுதியுள்ளார்கள் (இதிகாசங்கள்). முன்னர் கிராந்த் மிகவும் சிறியதாகக் கையால் எழுதப்பட்டு இருந்தது. அவர்கள் இப்பொழுது அதனை மிகவும் பெரியதாக்கி உள்ளார்கள். அவர்கள் நிச்சயமாக அதில் மேலதிகமாகச் சேர்த்துள்ளார்கள். குருநானக் ஒரு மதத்தை ஸ்தாபிக்கவே வருகிறார். ஒரேயொருவர் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுப்பவர். கிறிஸ்துவும் ஒரு மதத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார். அனைவரும் கீழிறங்கி வந்த பின்னர் நீங்கள் அனைவரும் வீடு திரும்புவீர்கள். உங்களை வீட்டுக்கு அனுப்புபவர் யார்? கிறிஸ்துவா? இல்லை; அவர் வேறொரு பெயரிலும், ரூபத்திலும், தமோபிரதான் ஸ்திதியிலும் இருக்கின்றார். அவர் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். இந்நேரத்தில் அனைவரும் தமோபிரதானாகவே இருக்கிறார்கள். அனைவரும் முற்றிலும் உக்கிய நிலையில் உள்ளார்கள். மறுபிறவிகள் எடுத்ததன் மூலம் அனைத்து மதத்தவரும் இந்நேரத்தில் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். இப்பொழுது அனைவரும் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். சக்கரம் மீண்டும் சுழல வேண்டும். முதலில் சத்திய யுகத்தில் இருந்த புதிய தர்மம் தேவைப்படுகின்றது. தந்தை வந்து ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பின்னர் விநாசம் இடம்பெற வேண்டும். ஸ்தாபனை, விநாசம் பின்னர் பராமரிப்பு இருக்கின்றது. சத்தியயுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருக்கின்றது. உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? முழுக் கல்பத்தையும் உங்கள் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். நாங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்து, பின்னர் வீட்டுக்குத் திரும்புவோம். நடக்கும் பொழுதும், பேசும்பொழுதும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். கிருஷ்ணர் சுயதரிசனச் சக்கரத்தை வைத்திருந்து, அதன் மூலம் அனைவரையும் கொன்றதாக அம்மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் அகாசூர், பகாசூர் (இரு அசுரர்கள்) போன்றவர்களின் படத்தைக் காட்டி உள்ளார்கள். எவ்வாறாயினும், அவ்வாறு எதுவுமே இருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக வேண்டும். ஏனெனில், உங்களுடைய பாவங்கள் அவ்வாறு செய்வதனால் அழிக்கப்படுகின்றன. எந்த அசுர சுபாவமும் முடிவடைந்து விடும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற முடியாது. அசுரர்கள் கலியுகத்திலும், தேவர்கள் சத்திய யுகத்திலும் இருக்கின்றார்கள், இடையில் சங்கமயுகம் இருக்கின்றது. சமயநூல்கள் பக்தி மார்க்கத்துக்குச் சொந்தமானவை. அதில் இந்த ஞானத்தின் பெயரோ, சுவடோ இல்லை. ஞானக்கடலே அனைவரதும் ஒரேயொரு தந்தை ஆவார். தந்தை இல்லாது, எந்தவோர் ஆத்மாவும் தூய்மையாகவோ அல்லது வீடு திரும்பவோ முடியாது. நீங்கள் நிச்சயமாக உங்கள் பாகங்களை நடித்தாக வேண்டும். ஆகையினால் நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் எங்களுடைய சத்தியயுகத்துப் புதிய பிறவிக்குள் செல்வோம். நாங்கள் அவ்வாறான பிறவியை மீண்டும் பெறமாட்டோம். சிவபாபாவும், இந்த பிரம்மாவும் இருக்கின்றார்கள். லௌகீகத் தந்தை, பரலோகத் தந்தை அத்துடன் அலௌகீகத் தந்தையும் இருக்கின்றனர். இந்த நேரத்திலேயே இவரை நீங்கள் அலௌகீகத் தந்தை என அழைக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவையே நினைவு செய்கின்றீர்கள், பிரம்மாவை அல்ல. மக்கள் பிரம்மாவை ஆலயத்தில் பூஜிக்கச் செல்கின்றார்கள் ஆயினும், அந்த வழிபாடு சூட்சும உலகிலுள்ள, சம்பூரண அவ்யக்த ரூபத்துக்கானதாகும். இந்தச் சரீரதாரி பூஜிக்கத் தகுந்தவரல்ல. அவர் ஒரு மனிதர் ஆவார். மனிதர்கள் பூஜிக்கப்படுவதில்லை. பிரம்மா தாடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் இந்த இடத்துக்குச் சொந்தமானவர் என உங்களால் கூறமுடியும். தேவர்களுக்குத் தாடி இருப்பதில்லை. குழந்தைகளான உங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுடைய பெயர் போற்றப்படுகின்றது, இதனாலேயே உங்களின் ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சோமநாதர் ஆலயமே அனைத்திலும் மேலானது. உங்களுக்கு அமிர்தம் அருந்தக் கொடுத்த பின்னர் என்ன நடந்தது? இப்பொழுது இங்குள்ள தில்வாலா ஆலயத்தைப் பாருங்கள். அந்த ஆலயமே மிகச்சரியான ஞாபகார்த்தம் ஆகும். நீங்கள் தரையில் தபஸ்யா செய்வதாகக் காட்டப்பட்டுள்ளீர்கள், சுவர்க்கம் மேலே சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுவர்க்கம் மேலே எங்கோ இருப்பதாக நினைக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு சுவர்க்கத்தைக் கீழே ஆலயங்களில் உருவாக்க முடியும்? அதனாலேயே அவர்கள் அதை மேலே கூரையில் சித்தரித்துள்ளார்கள். அதை உருவாக்கியவர்கள் எதையுமே புரிந்து கொண்டிருக்கவில்லை. இதை நீங்கள் கோடீஸ்வரர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆகையினால் நீங்கள் இதை ஏனைய பலருக்கும் கொடுக்க முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் அசுர சுபாவத்தை முடிப்பதற்கு, நீங்கள் உலாவித் திரியும்பொழுதும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். முழுச் சக்கரத்தையும் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருங்கள்.

2. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதுடன், உங்கள் புத்தி பரந்தாமமான, வீட்டுடனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தி உள்ள விடயங்களைப் பற்றிச் சிந்தித்து, உங்களுக்கு நன்மை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல நற்குணங்களாலும் நிரம்பியவராகி, அத்துடன்கூடவே, குறிப்பாக, குறிப்பிட்டதொரு சிறப்பியல்பினால் ஆதிக்கம் செலுத்துவீர்களாக.

வைத்தியர்களிடம் பொதுவான நோய்கள் பற்றிய அறிவு இருக்கும். அத்துடன், சிலர் குறிப்பிட்ட துறையில் விசேட அறிவுடன் பிரபல்யம் அடைவார்கள். அதேபோல், குழந்தைகளான நீங்கள் நிச்சயமாக சகல நற்குணங்களாலும் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்டதொரு சிறப்பியல்பில் அனுபவசாலி ஆகி, அதை நீங்கள் செய்யும் சேவையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். எப்படி சரஸ்வதி, ஞான தேவியாகவும் இலக்ஷ்மி, செல்வத்தின் தேவியாகவும் வழிபடப்படுகிறார்களோ, அவ்வாறே, உங்களிடம் சகல நற்குணங்களும் சக்திகளும் இருக்கும்போது, குறிப்பாக ஒரு சிறப்பியல்பில் ஆராய்ச்சி செய்து, உங்களை அதில் ஆதிக்கம் செலுத்துபவர் ஆக்குங்கள்.

சுலோகம்:
விகாரங்களின் பாம்பை உங்களின் இலகு யோகம் என்ற படுக்கை ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சதா கவலை அற்றவராக இருப்பீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

உங்களின் மனம் தந்தைக்குச் சொந்தமாக இருப்பதனால், ‘எப்படி எனது மனதை ஈடுபடுத்துவது?’ அல்லது ‘எப்படி அவரை நான் நேசிப்பது?’ என்ற கேள்விகள் எழ முடியாது. ஏனென்றால், நீங்கள் எப்போதும் அன்பில் திளைத்திருக்கும்போது, நீங்கள் அன்பின் சொரூபமாக இருக்கும்போது, மாஸ்ரர் அன்புக்கடலாக ஆகியிருக்கும்போது, நீங்கள் அவரை நேசிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் அன்பு சொரூபம் ஆகியிருப்பீர்கள். எந்தளவிற்கு ஞான சூரியனின் கதிர்களும் ஞானோதயமும் அதிகரிக்கிறதோ, அந்தளவிற்கு அன்பின் அலைகளும் வெளிப்படும்.