11.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாப்தாதாவினால் நேசிக்கப்பட்டு, நினைவு செய்யப்படுவதற்குச் சேவாதாரி ஆகுங்கள். உங்கள் புத்தி இந்த ஞானத்தால் நிறைந்திருக்கும் பொழுது, நீங்கள் அதை மற்றவர்கள் மீது பொழிய வேண்டும்.
கேள்வி:
முகில்கள் மழை பொழிவதற்கு நிறைந்தும், தயாராக இருந்தும், எந்தப் போதையால் அதைப் பொழிய இயலாமல் உள்ளது?பதில்:
சரீர உணர்வு எனும் அநாவசியமான போதை இருக்குமாயின், நிறைந்துள்ள முகில்கள் அப்பாற் கொண்டு செல்லப்பட்டு விடும். அவர்கள் மழை பொழிந்தாலும் கூட, சேவை செய்வதற்குப் பதிலாக அவச்சேவையையே செய்கின்றனர். பாபா மீது அன்பு இல்லாது விட்டாலோ அல்லது அவருடன் யோகம் செய்யாது விட்டாலோ, அவர்களிடம் ஞானம் இருந்தாலும், அவர்கள் வெறுமையாக இருப்பது போன்றே இருக்கும். அத்தகைய வெற்று முகில்களால் எவ்வாறு பலருக்கும் நன்மையளிக்க முடியும்?ஓம் சாந்தி.
இப்பொழுது ஒருசில முகில்களே எஞ்சியுள்ளன. மழை குறைவடையும் பொழுது, முகில்கள் கடலின் மேல் கலைந்து செல்கின்றன் அவை வெறுமை ஆகுகின்றன. அதேபோன்று, இங்கும், முகில்களாகிய நீங்கள் குளிர்ச்சி அடைகின்றீர்கள். தாங்களும் புத்துணர்ச்சி அடைந்து, பின்னர் சென்று, மற்றவர்கள் மீதும் பொழிபவர்களே முகில்கள் ஆவர். மழை பொழியாத ஒருவரை முகில் என அழைக்க முடியாது. இவர்கள் ஞான முகில்கள், அவையோ நீர் முகில்கள் ஆகும். ஞான முகில்கள் தங்கள் பருவ காலத்தின் பொழுதே வருகின்றனர். அவர்கள் வந்து தங்களைப் புத்துணர்ச்சியூட்டி, பின்னர் சென்று மற்றவர்களையும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றனர். முகில்களும் வரிசைக்கிரமமானவை. சில மிகவும் கடுமையாகப் பொழிகின்றன. மழை பொழிந்து, வாடிப்போன தாவரங்களைப் புத்துணர்ச்சி ஊட்டுவது முகில்களின் கடமையாகும். முழுமையான இந்த ஞானத்தைக் கொண்டவர்களால் மறைந்திருக்க முடியாது. அவர்களுக்கு பாபாவின் வழிகாட்டல்களும் தேவைப்படாது. அவர்களே முகில்கள். அவர்கள் தங்களை நிரப்பி, பின்னர் மற்றவர்கள் மீது பொழிவதற்காகவே வருகின்றார்கள். மிகவும் கடினமான, வறண்ட நிலமாகக் காணப்படும் இடங்களுக்கு எல்லாம் நீங்கள் சென்று, அவற்றைப் பசுமையாக்க வேண்டும். மகாராத்திக் குழந்தைகள் அனைத்து நிலையங்களையும் மிக நன்றாக அறிவார்கள்: எந்த நிலையங்கள் இன்னமும் பின்தங்கி நிற்கின்றன, எந்த நிலையங்களின் சில குழந்தைகளுக்கு அதிகப் புயல்கள் வருகின்றன என்பவற்றை அவர்கள் அறிவார்கள். மகாராத்தி சேவாதாரிக் குழந்தைகள் இதனை மிக நன்றாக அறிவார்கள். பாபா எப்பொழுதும் கூறுகிறார்: சேவாதாரிக் குழந்தைகளுக்கு எனது அன்பையும், நினைவுகளையும் வழங்குங்கள். நல்ல முகில்கள் சேவைக்குச் செல்வார்கள். கண்காட்சிகளில் அனைவரும் ஒரே விதத்தில் விளங்கப்படுத்துவதில்லை. கீதையின் கடவுள் அசரீரியான பரமாத்மா பரமதந்தையே அன்றி, சரீரதாரியான ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்பதே பிரதான விடயமாகும். விளங்கப்படுத்துவதற்கு மிகச்சிறந்த வழிமுறை தேவைப்படுகின்றது. எவ்வாறு சென்று, மற்றவர்களை விழித்தெழச் செய்வது என்பது பற்றி நீங்கள் நாள் முழுவதும் சிந்திக்க வேண்டும். அனைவரும் காரிருளில் உள்ளனர். இரு தந்தையரைப் பற்றித் தொடர்ந்தும் அனைவருக்கும் அன்புடன் விளங்கப்படுத்துங்கள். ஒருவர் எல்லைக்கு உட்பட்ட தந்தையும், மற்றவர் எல்லையற்றவரும் ஆவார். எல்லையற்ற தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புத்தியைப் (விவேகம்) பெற்றுள்ளீர்கள். உலக மக்கள் பெருமளவு ஆடம்பரத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களின் புத்திகள் கல்லைப் போன்றது. தந்தை கூறுகின்றார்: தங்களைச் சாதுக்கள் என்று அழைப்பவர்களையும் நான் ஈடேற்ற வேண்டியுள்ளது. அவர்களுக்கும் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது. சத்தியயுகத்தில் இந்த ஞானம் மறைந்து விட்டிருக்கும். எவ்வாறாயினும், எவருக்குமே இது தெரியாது. இந்த ஞானம் சமயநூல்களில் இல்லை. அவற்றின் மூலம் எவராலுமே சற்கதியைப் பெற முடியாது. கீதைக்கு அதிக மதிப்பு உள்ளது! எவ்வாறாயினும், அது பக்தி மார்க்கம் ஆகும். தந்தையே தூய்மையாக்குபவர், அவர் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். எனவே, இராச்சியத்திற்கு நிச்சயமாகப் புதிய உலகம் தேவைப்படுகின்றது. தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது இதை அறிவீர்கள். அவர் முன்னைய கல்பத்தில் விளங்கப்படுத்தியவர்களுக்கே இப்பொழுது மீண்டும் ஒருமுறை விளங்கப்படுத்துகின்றார். அப்பொழுதே அவர்கள் புரிந்து கொள்வார்கள். எல்லா நேரமும் அதே யுத்தம் இடம்பெறும் என்றில்லை. அது எட்டு முதல் பத்து வருடங்கள் வரை நீடித்து, பின்னர் நிறுத்தப்பட்டு விடும். நாடகத்தின்படி, உருவாக்கப்பட்ட குண்டுகள் வெறுமனே வைத்திருப்பதற்காக அல்ல. தூய்மையற்ற மனிதர்களின் மரணம் இடம்பெறாமல் சத்தியயுகம் வரமாட்டாது. எவ்வாறு அமைதி நிலைநாட்டப்படுகின்றது என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அமைதியை நிலைநாட்டி, உலகை மேன்மையாக்குவது தந்தையின் பணி மாத்திரமே ஆகும். தந்தை கூறுகின்றார்: உங்களின் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டித்து, அதனை ஒரேயொருவருடன் தொடர்புபடுத்துங்கள். உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, கண்ணுக்குப் புலப்படுகின்ற அனைத்துடனும் உங்களுக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுங்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, வீட்டை நினைவு செய்யுங்கள்! இது மரணபூமி என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் அமரத்துவப் பூமிக்குச் செல்வதற்காக, அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றோம். தேவர்கள் தெய்வீகக் குணங்களுடைய மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அத்தகைய ஒருவரேனும் இங்கிருக்க முடியாது. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அதிகளவு அவதூறு செய்து எழுதியுள்ளனர். அவர்களின் புத்தியில் எதுவுமே பிரவேசிப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிக நன்றாக முயற்சி செய்து, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். தெய்வீகக் குணங்கள் என்றால் என்ன என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நிச்சயமாக முற்றிலும் விகாரம் அற்றவர்கள் ஆகவேண்டும். இதுவே பிரதானமானதும், முதன்மையானதுமான நற்குணமாகும். எவ்வாறு தூய்மை அற்றவர்கள் சகல இடங்களிலும் தூய்மையானவர்களின் முன்னால் தலைவணங்குகின்றார்கள் என்பதை நீங்கள் காண்கின்றீர்கள். சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையானவர்கள் என்பதால், அங்கு ஆலயங்கள் கிடையாது. அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகும்பொழுது, ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். தூய்மையானவர்களாக இருந்தவர்கள் பின்னர் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். இது பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். தந்தை கூறுகின்றார்: இப்பழைய உலகையும், இப்பழைய சரீரங்களையும் மறந்து விடுங்கள். இப்பழைய உலகம் இப்பொழுது முடிவடைய வேண்டும். அது அழிக்கப்படுவதற்கு அதிக நேரம் எடுக்காது. இப்பழைய உலகம், செல்வம், செழிப்பு, பொக்கிஷங்கள் போன்றவை அனைத்தும் அழிவடையவுள்ளன. இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை உலகிலுள்ள எவருமே அறியார். நீங்கள் அனைவருக்கும் இதைக் கூறுகின்றீர்கள், ஆனால் அவர்களும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இவற்றைக் கடவுளின் வாசகங்களாகக் கருதும்பொழுதே, இவை அனைத்தும் அவர்களின் புத்தியில் இருக்க முடியும். தந்தை குழந்தைகளான உங்களுக்குக் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்களின் தந்தையான, என்னை நினைவு செய்யுங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தை ஆவார். அனைவரும் சகோதரர்கள். சுவர்க்கத்தில் சகோதரர்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர், கலியுகத்திலோ சகோதரர்கள் அனைவரும் சந்தோஷம் அற்றுள்ளனர். சகல ஆத்மாக்களும் இப்பொழுது நரகவாசிகளாக உள்ளனர். ஆத்மாக்கள் மட்டும் இருக்க மாட்டார்கள், அவர்கள் சரீரங்களையும் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும், இதற்கே முயற்சி தேவை. இது உங்களின் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல. பரமாத்மா பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதில் நீங்கள் முதலில் நம்பிக்கை வைத்திருக்கும் பொழுதே, இந்த ஸ்திதி உறுதியாக இருக்க முடியும். சிவபாபா இச்சரீரத்தின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கவே இங்கு வருகின்றார். நாங்கள் இச்சரீரங்களின் மூலம் அதைச் செவிமடுத்து, அதைக் கிரகிக்கின்றோம். நாங்கள் சரீரங்களை நீக்கி, எங்களது சம்ஸ்காரங்களுக்கேற்ப வேறொன்றை எடுக்கின்றோம். இது இராணுவத்தில் இருப்பவர்களைப் பற்றி பாபா கூறும் உதாரணத்தைப் போன்றது. அவர்கள் யுத்தம் புரியும் சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்வதால், தங்கள் அடுத்த பிறவியிலும் அங்கேயே ஈர்க்கப்படுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் சம்ஸ்காரங்களை அறிவீர்கள்; அசரீரியான எல்லையற்ற தந்தை எத்தகைய சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் ஆவார். அவரே வந்து, எங்களைத் தூய்மை ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள், உங்கள் பல பிறவிகளுக்குரிய பாவங்கள் அழிக்கப்படும். இல்லாவிடின், பெருமளவு தண்டனை கிடைப்பதுடன், எந்த அந்தஸ்தையும் பெறவும் முடியாது. பாபா மிக இலகுவான பாதையை உங்களுக்குக் காட்டுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் கூறுகின்றார்: மன்மனாபவ! இந்தக் கூற்றும் கீதையில் உள்ளது. ஆயினும் அதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படவில்லை. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! உங்கள் சரீரத்தையும், அனைத்துச் சரீரம் சார்ந்த சமயங்களையும் துறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, பரமாத்மா பரமதந்தையான என்னை நினைவு செய்யுங்கள். நினைவு யோக அக்கினி எனவும் அழைக்கப்படுகின்றது. யோகம் என்பது ஒரு பொதுவான வார்த்தை; இதுவும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதால், காரிருளினை உருவாக்கி உள்ளார்கள். இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அது உங்கள் கற்பனையே என அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. ஓர் ஆஸ்தியைக் கோர அவர்கள் விரும்பவில்லை. முதலில், எல்லையற்ற தந்தையே தந்தையும், ஆசிரியரும், சற்;குருவும் என்பதையும், அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். புதிய நபர் ஒருவர் இந்த நம்பிக்கையை உடனடியாகக் கொண்டிருப்பது அசாத்தியமாகும். சில புதியவர்கள் விவேகிகளாக இருப்பதால், அவர்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. சிலரோ இங்கு வருவதையே விரும்புவதில்லை; அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை! அது அவர்களின் புத்தியில் புகுவதே இல்லை. பல பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் உள்ளனர். எனவே, அவர்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற்றிருக்க வேண்டும். இது ஒரு குடும்பம். ‘பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும்’ என்றே பெயர் எழுதப்படுவதால், இது ஒரு குடும்பம் ஆகும். பிரஜாபிதாவின் குடும்பம் மிகப் பெரியது, இருப்பினும், இது எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. உங்கள் இலக்கும், குறிக்கோளும் என்ன என்று எவரேனும் உங்களைக் கேட்டால், வெளியில் உள்ள பெயர்ப் பலகையில் எழுதப்பட்டுள்ளதை அவருக்குக் கூறுங்கள்: பிரஜாபிதா பிரம்மகுமாரர்களும், குமாரிகளும். எனவே இது ஒரு குடும்பமாகும். நாங்கள் எங்களது பாட்டனாரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றோம். சிவபாபா, பிரஜாபிதா பிரம்மாவின் வாய் மூலம் படைப்பைப் படைக்கின்றார். எனவே, அவரே படைப்பவர். அவர் சுவர்க்கத்தைப் படைக்கின்றார், எனவே அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பார். எனவே, இது ஒரு குடும்பம் ஆகும். இங்கு தந்தையும், புத்திரர்களும், புத்திரிகளும், பாட்டனாரும் உள்ளனர். பிரம்மாவும், அத்துடன் சிவனும் உள்ளனர். அவரே படைப்பவர். அவர் அசரீரியானவர். எனவே, எவ்வாறு அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார்? அவர் பிரம்மா மூலமே உங்களின் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். இதை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துங்கள். அவர்களிடம் கூறுங்கள்: இது உங்கள் தந்தையின் வீடு. இது உருத்திரரின் ஞான யாகம் என்றும் அழைக்கப்படுகின்றது. நாங்கள் பிராமணர்கள். தந்தையைத் தவிர எவராலும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. கீதையில் கூறப்படுகின்றது: “மன்மனாபவ”, அதாவது, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். எனவே, நாங்கள் அந்த ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றோம். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பாடுகின்றனர்: “பாபா, நீங்கள் வரும்பொழுது நான் என்னை அர்ப்பணித்து உங்களுக்குச் சொந்தம் ஆகுவேன். ஆத்மாவாகிய நான் இச்சரீரத்தை நீக்கி, உங்களுடனேயே திரும்புவேன். நான் உங்களுக்குச் சொந்தம் ஆகும்பொழுது, நிச்சயமாக உங்களுடனேயே திரும்புவேன்.” ஒரு பெண் திருமணம் செய்ததும் தனது மணவாளனுடன் செல்கின்றாள். மணவாளனாகிய சிவன் கூறுகின்றார்: நான் உங்களை இத்துன்பத்தில் இருந்து விடுவித்து, சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்வேன். பின்னர், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த முயற்சிகளுக்கேற்ப இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். நீங்கள் எந்தளவிற்கு இந்த ஞானச் செல்வத்தைக் கிரகிக்கின்றீர்களோ, அதற்கேற்ப, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். இளம் புத்திரிகள் சேவை செய்கின்றனர். அவர்கள் பெரும் கல்விமான்களுக்கும் பண்டிதர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பெரும் ஆர்வம் இருக்க வேண்டும். மல்யுத்தத்தில், அவர்கள் ஒருவரோடொருவர் மல்யுத்தம் புரிவதற்குச் சவால் விடுகிறார்கள். சேவாதாரிக் குழந்தைகள் சௌகரியமாகத் உறங்கக்கூடாது; ஓய்வெடுப்பது பாவமாகும்! தங்களை மகாராத்திகளாகக் கருதுபவர்கள், சௌகரியமாக, சந்தோஷத்தில் உறங்கக் கூடாது. சேவைக்காக, சதா எங்கும் பயணியுங்கள். இப்பொழுதெல்லாம், பாபா பல கண்காட்சிப் படத் தொகுதிகளைச் செய்வித்திருக்கின்றார். முக்கிய பிரமுகர்களை அழையுங்கள். இப்பொழுது இல்லாது விட்டாலும், அவர்கள் பின்பு எப்பொழுதாவது வருவார்கள். தொடர்ந்தும் சாதுக்கள், புனிதர்கள், மகாத்மாக்களை விழிப்படையச் செய்யுங்கள். எவ்வாறாயினும், அவர்களுடன் பேசுபவர் ஒரு மகாராத்தியாக இருக்க வேண்டும். தந்தையை நேசிக்காதவர்களும், அவரை நினைவு செய்யாதவர்களும் வெற்று முகில்களைப் போன்றவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? கற்றவர்களின் முன்னால் கற்காதவர்கள் தலைவணங்குவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்குக் கற்றுள்ளீர்கள் என்பதை உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் செய்யும் சேவையிலும் அது காண்பிக்கப்படும். முகில்கள் நிரம்பியிருந்தும், மழையைப் பொழியாவிடின், அம்முகில்களால் என்ன பயன்? ஒவ்வொருவரது புரிந்துணர்வும் அவருக்கே உரியது. சரீர உணர்வின் பயனற்ற போதை இருக்குமாயின், உங்கள் உயர்ந்த அந்தஸ்து சதா காலத்திற்குமாக இழக்கப்பட்டு விடும். பாபா சேவை செய்வதில் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்தி, மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் இந்த ஆன்மீகச் சேவையை நாங்கள் செய்வதற்கு ஒரு மண்டபத்தை அவர்களிடம் கேளுங்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வந்துள்ளார். எவ்வாறாயினும், நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறு சொற்பொழிவு ஆற்றுவது என்பதை அறியாதவர்களால் விளங்கப்படுத்த இயலாது; அவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர மாட்டார்கள். சேவை செய்பவர்கள் ஓர் அந்தஸ்தைக் கோருவார்கள். பாரதத்திற்கும், இவ்வுலகிற்கும் இந்த ஞானமின்றி நன்மையில்லை என முக்கிய பிரமுகர்களுக்கு எழுதுங்கள். கல்வியே பிரதானமானது. இலக்ஷ்மியும், நாராயணனும் தங்கள் கல்வி மூலமே தங்கள் அந்தஸ்தைக் கோரினார்கள்: அவர்கள் தங்கள் முன்னைய பிறவியில் இராஜயோகத்தைக் கற்றார்கள். நாங்களும் இப்பொழுது இதனை இங்கு கற்கின்றோம். ஒரு பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட பரீட்சையை எழுதிய பின்னர், ஏதோவொன்றாக ஆகுவார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் பெறும் இந்த ஞானம் இந்த உலகிற்கானதல்ல. உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்குவதற்கே நீங்கள் கற்கின்றீர்கள். அம்மக்களோ இப்பிறவியில் சந்தோஷத்தைப் பெறுவதற்காகக் கற்கின்றார்கள். எனவே, அந்த லௌகீகக் கல்வியையும் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் அதேவேளை, இக்கற்பித்தல்களையும் பெறுங்கள். இதில் எதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் ஏன் இந்த ஆன்மீக ஞானத்தைக் கற்கக்கூடாது? நீங்கள் படங்களை எடுத்துச் சென்று மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: இந்த ஞானம் அனைவருக்கும் அத்தியாவசியமானது. எவ்வாறாயினும், சில குழந்தைகள் இன்னமும் உஷாராகவும், சுறுசுறுப்பாகவும் இல்லை. அவர்கள் தங்கள் தொழில்களிலும் பொறுப்புகளிலும் அகப்பட்டுள்ளார்கள். யாராவது பந்தனத்தில் இருந்து விடுதலையாகி இருப்பின், அவர் சேவையில் மும்முரமாக ஈடுபடவேண்டும். அனைவரும் ஸ்ரீமத்தைப் பின்பற்ற மாட்டார்கள். மாயை இடையில் பெருமளவு குழப்பங்களை விளைவிக்கின்றாள். சில குழந்தைகள் பெருமளவு ஆர்வம் கொண்டுள்ளார்கள், ஆயினும் சென்று பலருக்கு நன்மை பயக்கின்ற போதை அவர்களுக்கு இல்லை. நீங்கள் இப்பொழுது வளர்ந்து விட்டாலும், ஏன் இன்னமும் மூச்சுத் திணறுகின்றீர்கள் என்று பாபாவும் அதிசயப்படுகின்றார். பாரதத்தை ஈடேற்ற வேண்டும் என நீங்கள் கூறலாம். நாங்கள் உண்மையான சேவை செய்து, மனிதர்களைத் தேவர்களாக மாற்ற வேண்டும். சிலரிடம் அந்தப் போதை இல்லாததைப் பார்த்து பாபா மிகவும் வியப்படைகின்றார். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நீங்கள் ரஜோ புத்தியைக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு மிக நல்ல வாய்ப்பு இருக்கின்றது. தங்கள் ஞானத்தைப் பற்றிப் பெருமளவு ஆணவத்தைக் கொண்டவர்களும் உள்ளனர், அவர்கள் தொடர்ந்தும் பெருமளவு அவச்சேவையையே செய்கின்றார்கள். வெல்லமும், வெல்லத்தை வைத்திருக்கும் பையுமே அறியும். இராகு கிரகணத்தின் சகுனங்கள் உள்ளன. வியாழ திசை நீக்கப்பட்டு, பின்னர் அங்கு இராகு கிரகணத்தின் சகுனங்கள் உள்ளன. ஒரு நிமிடம் அவர்கள் மிக நன்றாக முன்னேறுகின்றார்கள், அடுத்த நிமிடம் தீய சகுனங்களால் அவர்கள் வீழ்கின்றார்கள். குழுந்தைகளாகிய நீங்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருக்க வேண்டும். நீங்கள் முதல் அடியை எடுத்து, பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் நிச்சயமாக இந்தப் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குவோம். நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதும், சீரழிந்தவர்களை மேன்மையானவர்கள் ஆக்குவதுமே உங்கள் தர்மமாகும். பாபா உங்களை மிகவும் போதையுடையவர்கள் ஆக்குகின்றார். ஆனால் குழந்தைகளான உங்களில் வரிசைக்கிரமமாகவே போதை எழுகின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பந்தனத்திலிருந்து விடுபட்டு, பாரதத்திற்கு உண்மையான சேவையைச் செய்யுங்கள். ஆன்மீகச் சேவை செய்து, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுங்கள். உங்கள் ஞானம் பற்றிய ஆணவத்தைக் கொண்டிருக்காதீர்கள். ஆன்மீகப் போதையைப் பேணுங்கள்.2. உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, முதலில் உங்கள் ஸ்திதியை பலமானதாக ஆக்குங்கள். உங்கள் சரீரம் உட்பட, நீங்கள் பார்க்கின்ற அனைத்தில் இருந்தும் விலகி, ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் செய்வதையும் பேசுவதையும் ஒத்ததாக ஆக்குகின்ற உண்மையான சேவையாளராகி, அதனால் நல்ல தரமுள்ள சேவையைச் செய்வீர்களாக.நீங்கள் பேசுவதை, முதலில் செய்வதில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். எதையாவது கூறுவது இலகுவானது. ஆனால் அதைச் செய்வது கடினமாக இருக்கும். கடின உழைப்பின் பலன் நல்லதாக இருக்கும். ஆனால் நீங்கள் மற்றவர்களிடம் எதையாவது செய்யும்படி கூறிவிட்டு, நீங்களே அதைச் செய்யாவிட்டால், சேவையுடன் கூடவே, அவச்சேவையையும் பார்க்க முடியும். இது, அமிர்தத்திற்குள் ஒரு துளி நஞ்சு போடப்பட்டால், அந்த அமிர்தமும் நஞ்சாக ஆகிவிடுவதைப் போன்றதே ஆகும். இந்த முறையில், நீங்கள் எவ்வளவு சேவை செய்தாலும் ஒரு சிறிய தவறு அந்தச் சேவையை முடித்துவிடும். எனவே அனைத்திற்கும் முதலில், உங்களில் கவனம் செலுத்துங்கள். அப்போது நீங்கள் உண்மையான சேவையாளர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு, பாழாகிப் போன எதையும் சரிப்படுத்துவதே, அனைத்திலும் மிகப்பெரிய சிறப்பியல்பு ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
உங்களின் கனவுகளில் அல்லது எண்ணங்களில் தூய்மை இன்மை என்ற விகாரம் குழப்பாத போது, நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள் எனப்படுவீர்கள். இலகுவாகவும் இயல்பாகவும் சதா சகோதரத்துவத்தை உணர்ந்தவராக இருங்கள். அதாவது, நினைவின் சொரூபம் ஆகுங்கள். உங்களின் சம்பூரணமான, சதோபிரதான் ஸ்திதியில் இருந்து ஒருபோதும் கீழே வராதீர்கள், கீழே வந்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். உங்களின் ஆதியான, நற்குணம் மிக்க, ஆத்மாவாக இருக்கும் சக்திவாய்ந்த ரூபத்தில் இருந்து கீழே வருவது என்றால் அது பாவக்கணக்கில் சேமிக்கப்படும்.