11.10.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2012 Om Shanti Madhuban
சகல வகையான சேவைகளையும் செய்வதுடன் கூடவே, ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, தீவிர முயற்சியின் அலைகளைச் சூழலில் பரப்புங்கள். உங்களின் மனதை வென்றவராகி, உங்களின் மனதால் ஆத்மாக்களுக்குச் சேவை செய்யுங்கள்.
இன்று, அன்பின் விசேடமான நாள் ஆகும். எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும் தமது அன்பான ரூபத்தில் சந்திப்பைக் கொண்டாடுகிறார்கள். நீங்கள் அனைவரும் அன்பு ரூபத்தில் திளைத்திருக்கிறீர்கள். இன்று, அமிர்த வேளைக்கு முன்னரே, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும் தமது அன்பான ரூபங்களில் தமது இதயங்களில் அன்பு முத்துக்களால் ஆன மாலைகளை எடுத்துக் கொண்டு இங்கே வந்து விட்டார்கள். அவர்கள் தமது மனங்களில் பல்வகையான உணர்வுகளையும் தந்தைக்கு விவரித்தார்கள். குழந்தைகளின் அன்பு எத்தனை அழகானது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகள் தமது இதயத்தில் உள்ள விடயங்கiளை பாப்தாதாவிடம் தமது வெவ்வேறு மொழிகளில், தமது வெவ்வேறு உணர்வுகளுடன் பேசினார்கள். அத்துடன் தமது உணர்வுகளை மிகத் தெளிவாகத் தமது கண்களாலும் தமது வாய்களாலும் (வார்த்தைகள்) வெளிப்படுத்தினார்கள். எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரின் அன்பு உணர்வுகளைப் பார்க்கும்போது, பாப்தாதா அனைவரின் அன்பிலும் திளைத்திருந்தார். அவரின் இதயத்தில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! குழந்தைகளின் வாய்களில் இருந்து வெளிப்பட்ட பாடல்: ‘ஆஹா பாபா! ஆஹா!’ ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும்போது, பாப்தாதா குழந்தைகளின் அன்பிலே தன்னை மறந்திருந்தார். குழந்தைகளும் தந்தையின் அன்பிலே தங்களை மறந்திருந்தார்கள்.
இன்று, குழந்தைகளான உங்களை அதிபதிகள் ஆக்குகின்ற பார்வையுடன் தந்தை குழந்தைகளைப் பார்க்கிறார். இன்று, குழந்தைகள் இராச்சியத் திலகத்தைப் பெறுகின்ற நாள் ஆகும். இன்று பாப்தாதா தான் தேவதை ரூபத்தில் இருந்தவண்ணம் குழந்தைகளை உலகச் சேவைக்குக் கருவிகள் ஆக்கிய தினம் ஆகும். அவர் தானே முதுகெலும்பாக ஆகி, உலக மேடையில் குழந்தைகளை வெளிப்படுத்தினார். இப்போது, குழந்தைகளின் சேவையைப் பார்க்கும்போது, பாப்தாதா குழந்தைகளுக்குக் கொடுத்த பொறுப்பின் பெறுபேற்றைப் பார்க்கும்போது, அவர் குழந்தைகளை இட்டு மிக, மிக மகிழ்ச்சி அடைகிறார். அத்துடன் தனது இதயபூர்வமாகப் பாராட்டுகிறார். பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்!
இப்போதும் ஒவ்வொரு குழந்தையும் தந்தை தனக்களித்த உலக சேவையாளர் என்ற ஆசீர்வாதத்தை தனது இதயபூர்வமாக அதிகளவு அன்புடன் பெறுவதுடன் அதைச் செய்வதையும் பாப்தாதா கண்டார். பாப்தாதா பெறுபேற்றினையும் பார்த்தார். ஒவ்வொரு குழந்தையும் தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து ‘எனது பாபா’ என்பதற்கான அன்பைக் கொண்டிருக்கிறார். தந்தையும் தனது இதயத்தில், ‘ஆஹா எனது குழந்தைகளே!’ என்ற அன்பைக் கொண்டிருக்கிறார். தற்சமயம், பெரிய மற்றும் சிறிய நிலையங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எங்கும் விரைவாகத் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உற்சாகம் காணப்படுகிறது. சுற்றி வரும்போது, பாப்தாதா இந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கண்டார். சிறிய மற்றும் பெரிய நிலையங்களில் உள்ள குழந்தைகள், சேவைக்காக அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து அதைக் கொண்டிருப்பார்கள். இன்று, இந்த அன்பான தினத்தில், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் அன்பு மற்றும் சேவையின் பிரதிபலனாக பாப்தாதா தனது திருஷ்டியாலும் இதயபூர்வமான அன்பாலும் பல்கோடிமடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்.
காலத்திற்கேற்ப, இப்போது தந்தையை வெளிப்படுத்துகின்ற உற்சாகம் படிப்படியாக ஆத்மாக்களின் இதயங்களில் பிரவேசிக்கின்றது. பிரம்மாகுமாரிகள் எதையோ பெற்றிருக்கிறார்கள், மாற்றம் நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். முன்னர் அவர்கள் நினைப்பதுண்டு: ‘அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது’. ஆனால் இப்போது அவர்கள் நினைக்கிறார்கள்: ‘நீங்கள் நல்ல பணி செய்கிறீர்கள். எங்களால் செய்ய முடியாததை, நீங்கள் உங்களின் ஒன்றுகூடலில் வெற்றிகரமாகச் செய்துள்ளீர்கள்’. இதனாலேயே, பாப்தாதா தனது இதயபூர்வமான விசேடமான அன்பை தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் அத்துடன் எங்கும் அமர்ந்திருந்து அவர் கூறுவதைப் பார்த்தும் கேட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் வழங்குகிறார். இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? பாப்தாதா ஏற்கனவே உங்களின் சேவைக்காக உங்களைப் பாராட்டி விட்டார். இப்போது ஒவ்வொரு குழந்தையும் இந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தீவிர முயற்சி செய்வதற்கான திடசங்கற்பமான நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். நான் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமான ஒரு தேவதை ஆகவேண்டும். ஏனென்றால், அனைவரும் இப்போது தந்தையுடன் திரும்பிச் செல்லும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் நிச்சயமாக தேவதை ஆகவேண்டும், அவருக்குச் சமமானவர் ஆகவேண்டும். ஏனென்றால், நீங்கள் அனைவரும், நாங்கள் ஒன்றாக வீடு திரும்புவோம், ஒன்றாக ஆட்சி செய்வோம் என்று சத்தியம் செய்துள்ளீர்கள். தந்தை பிரம்மா ஏற்கனவே ஒரு தேவதை ஆகிவிட்டார். எனவே, எப்படி நீங்கள் அவருடன் திரும்பிச் செல்வீர்கள்? தந்தை பிரம்மா தனது வாழ்க்கையில் தனது தேவதை ரூபத்தைக் காட்டினார். அவருக்குப் பல பொறுப்புக்கள் இருந்தன. அனைவரும் ஒரு யோகியாக ஆக்கப்பட வேண்டி இருந்தது. எவ்வாறாயினும், அவருக்குப் பல பொறுப்புக்கள் இருந்த போதிலும் அவர் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருந்ததை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அவர் எப்போதும் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகவே இருந்தார். எந்தவிதக் கவலைகளும் இல்லை, ஆனால் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி. அதேபோல், குழந்தைகளான நீங்களும் தந்தைக்குச் சமமான கவலையற்ற சக்கரவர்த்திகளாக, தேவதைகளாக ஆகவேண்டும். உங்களுக்குள் இந்தத் திடசங்கற்பமான எண்ணம் இருக்க வேண்டும்: நான் நிச்சயமாக இவ்வாறு ஆகவேண்டும். அல்லது, ஏதாவதொரு வேளையில் அப்படி ஆகுவீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
காலத்திற்கேற்ப, சேவை செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நடைமுறையில் நீங்கள் எந்தளவிற்குக் கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல் இப்போது நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகி மற்றவர்களையும் அவ்வாறே ஆக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை பாப்தாதா பார்த்தார். சம்பூரணமாகி, மற்றவர்களையும் சம்பூரணம் ஆக்குங்கள். அத்துடன் உங்களுக்குள் உற்சாகத்தைக் கொண்டிருந்து அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சூழலுக்குள் பரப்புங்கள். எப்படி நீங்கள் சேவை செய்வதற்கான உற்சாகத்தை உங்களுக்கு இடையேயும் சூழலிலும் பரப்புகிறீர்களோ, அவ்வாறே, நீங்கள் இந்த அலையையும் சூழலில் பரப்புவீர்கள் என்ற தூய நம்பிக்கையை பாப்தாதா கொண்டுள்ளார். பாப்தாதா களிப்படைகிறார். எனினும், இப்போதும் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தீவிர முயற்சி செய்ய வேண்டும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் இந்த நம்பிக்கையை வைத்துள்ளார். எனவே, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையின் நம்பிக்கை நட்சத்திரங்கள், அப்படித்தானே? நீங்கள் அத்தகையவர்களா? தங்களைத் தந்தையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற உணர்வதுடன் இந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சூழலுக்குள் பரப்புவீர்கள் என்று நினைப்பவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. நீங்கள் உங்களின் கைகளை மிக நன்றாக உயர்த்தினீர்கள்! உங்களின் கைகளைப் பார்க்கும்போது, பாப்தாதா களிப்படைகிறார். உங்களில் பெரும்பாலானோர் கைகளை உயர்த்தியுள்ளீர்கள். பின்னால் இருப்பவர்களின் கைகளை பாப்தாதாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், முன்னால் இருப்பவர்களின் கைகளை அவரால் பார்க்க முடிகிறது. பின்னால் இருப்பவர்கள் இப்போது தங்களின் கைகளை உயர்த்துகிறார்கள். பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! அச்சா.
யாராவது ஒருவரின் மனதில் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றிற்கான ஊக்கமும் உற்சாகமும் இருக்கும்போது, அது மிக நன்றாக நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதை பாப்தாதா பார்த்துள்ளார். இதனாலேயே, இந்த வேளையில் இந்த அன்பு தினத்தில், பாப்தாதா உங்களுக்கு இந்த வீட்டுவேலையைக் கொடுக்கிறார். மனதின் காரணத்தினாலேயே காலமும் எண்ணங்களும் வீணாக்கப்படுகின்றன என்பதை ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்கிறார். உங்களுக்குள் எப்போதாவது வீணான எண்ணங்கள் தோன்றுமாயின், அப்போது உங்களின் நேரமும் சக்தியும் எந்தளவிற்கு வீணாக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அனுபவம் செய்திருப்பீர்கள். எனவே, பாப்தாதா உங்களுக்கு இந்த வீட்டுவேலையைக் கொடுக்க விரும்புகிறார்: இரண்டு மாதங்களுக்கு, ஒவ்வொரு குழந்தையும் உங்களின் மனதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் மற்றும் நேரத்தை வீணாக்குவதை நிறுத்துவதற்கு உங்களுக்காக ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு உங்களின் அட்டவணையைப் பேண வேண்டும்: நேரத்தை வீணாக்குவதிலும் வீணான எண்ணங்களிலும் எந்தளவிற்கு நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தேன்? இது ஏனென்றால், இப்போது காலத்திற்கேற்ப, உங்கள் அனைவருக்கும் உங்களின் மனங்களின் சக்தியால் ஆத்மாக்களுக்கு சேவை செய்வதற்கான நேரம் வந்துள்ளது. இதற்கு, உங்களின் மனதில் சதா கவனம் செலுத்துவது அவசியம். கூறப்படுகிறது: தமது மனதை வென்றவர்கள், உலகையே வெல்வார்கள். எனவே, மன்மனாபவ என்ற சூழலால், வீணானவை அனைத்தையும் நீங்கள் முடிக்க வேண்டும். உங்களால் இதைச் செய்ய முடியுமா? நீங்கள் இதைச் செய்வீர்களா? இதைச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாப்தாதா உங்களுக்கு ஒரு பரிசை வழங்குவார். நீங்கள் உங்களின் சொந்தப் பெறுபேறைப் பார்க்க வேண்டும். உங்களின் மனம் சந்தோஷமாக இருந்தால், நீங்கள் உங்களின் மனதின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் அனைவரும் இந்த முயற்சியில் முன்னால் ஓர் இலக்கத்தைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது வீணானவை அனைத்தும் முடிந்துவிடும். எண்ணங்கள் மற்றும் காலம் இரண்டும் வீணாகுவது முடிவிற்கு வரும். அதன்பின்னர், வரும் காலங்களில், சக்திவாய்ந்த எண்ணங்களும் சக்திவாய்ந்த நேரமும் சூழலில் பரவும்.
குழந்தைகளைப் பார்க்கும்போது, பாப்தாதா ஒரு விடயத்தை இட்டு மகிழ்ச்சி அடைகிறார். அது என்ன? ஒவ்வொரு குழந்தையும் சேவை செய்துள்ளார். ஆனால் அத்துடன் கூடவே பாப்தாதாவின் சமிக்கை என்னவென்றால், ஓர் இரட்டை அரசர் ஆகுங்கள் என்பதே. உங்களுக்கு அது தெரியும் அல்லவா? ஒன்று சுய இராச்சிய அதிகாரி, தனக்கே அதிபதியாக இருத்தல். இரண்டாவது, எதிர்கால இராச்சிய உரிமையைக் கொண்டிருத்தல். சுயத்தின் அதிபதியாக இருத்தல். தனது ஒவ்வொரு குழந்தையும் சுய அதிபதியாக இருக்கின்ற வேறு எந்தத் தந்தையும் இல்லை என்ற போதை தந்தைக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் உங்களுக்கே அதிபதிகள், அல்லவா? ஒவ்வோர் ஆத்மாவும் தன்னையே ஆள்கிறார். நீங்கள் பௌதீக அங்கங்களின் அல்லது புலன்களின் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. ஆனால் நீங்கள் இராச்சிய உரிமையைக் கொண்டுள்ளீர்கள். தந்தை ஒவ்வொரு குழந்தையையும் சிலவேளைகளில் மட்டுமன்றி, எப்போதும் சுயஅதிபதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார். உங்களால் இப்படி ஆகமுடியுமா? உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மாதங்களில், நீங்கள் உங்களுக்கே அதிபதியாக இருந்தீர்களா அல்லது உங்களின் பௌதீகப் புலன்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டீர்களா என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் கர்மாதீத் ஆகவேண்டும். காலம் நெருங்கி வருகிறது. எனவே, நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? நடக்கும்போதும் அசையும் போதும் நீங்கள் நிச்சயமாக உங்களுக்கே அதிபதி ஆகவேண்டும். இந்த சம்ஸ்காரம், நிச்சயமாக பிராமணக் குழந்தைகளான உங்களின் சம்ஸ்காரம் ஆகும். இரட்டை இராச்சியம் என்றால், இப்போது சுய இராச்சியம், பின்னர் எதிர்காலத்தில் உலக இராச்சியம். சுற்றுப் பயணம் செய்தபோது, பாப்தாதா குழந்தைகளின் பெறுபேறுகளைக் குறித்துக் கொண்டார். இப்போது, சதா சுயத்திற்கு அதிபதியாக இருப்பதில் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். பாப்தாதா உங்களுக்கு இரண்டு பணிகளைக் கொடுத்துள்ளார்: 1) அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் எந்தளவிற்கு சுய அதிபதியாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்களின் சொந்தப் பெறுபேற்றைப் பார்க்க வேண்டும். 2) உங்களின் மனதின்மீது கட்டுப்படுத்தும் சக்தியாலும் ஆள்கின்ற சக்தியாலும் வீணானவை அனைத்தையும் முடிக்க வேண்டும். இதில் ஓர் இலக்கத்தைப் பெறுபவர்களுக்கு பாப்தாதா ஒரு பரிசு வழங்குவார். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் இதைச் செய்யப் போகின்றீர்கள்தானே? நீங்கள் இதைச் செய்வீர்களா? தலையை அசைத்து ஆமோதியுங்கள். அச்சா.
இன்று, பாப்தாதா அனைவரின் அன்பையும் ஏற்றுக் கொண்டார். அமிர்தவேளையில், சூட்சும வதனத்தில் குழந்தைகளின் அழகிய கோலாகலம் காணப்பட்டது. இன்று, முன்னோடிக் குழுவினரும் சூட்சும வதனத்திற்கு வந்து, தமது இதயபூர்வமான அன்பை வழங்கியதுடன் அன்பைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் இப்போது தந்தையிடம் கேட்கிறார்கள்: இறுதியாக, நாம் எதுவரை நாம் இந்தப் பாகத்தை நடிக்கப் போகிறோம்? பாபா என்ன பதில் சொல்லட்டும்? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, பாபா என்ன பதிலைச் சொல்லட்டும்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? (தாதி ஜான்கி பதில் அளித்தார்: நான் தயார்) நீங்கள் தனியே திரும்பிச் செல்வீர்களா? (அனைவரும் ஒன்றாகத் திரும்பிச் செல்வார்கள்) உங்களுக்கு அன்பு இருக்கிறதுதானே? எப்படி நீங்கள் அவர்களை விட்டுவிட்டு சென்று இராச்சியத்தை ஆள்வீர்கள்? (ஏன் முன்னோடிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்னைத் தனியே விட்டுச் சென்றார்கள்?) அது அவர்களின் பாகம். அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இப்போது, நீங்கள் முயற்சி செய்து விரைவாக ஓர் ஒன்றுகூடலைத் தயார் செய்ய வேண்டும். இரண்டு மாதங்களுக்காக உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அனைவரையும் செய்ய வைத்து பெறுபேற்றைக் கொடுத்தால், அது விரைவில் நடைபெறும். (பாபாவின் மீதுள்ள அன்பினால், அவர்கள் அதைச் செய்வார்கள்) அன்பு இருக்கிறது. அன்பெனும் பாடத்தில் நீங்கள் அனைவரும் சித்தி அடைந்துள்ளீர்கள். அனைவரிடமும் அன்பு இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். ஆனால், அத்துடன் கூடவே, உங்களுக்கு சக்தியும் தேவை. இதற்கு, அமிர்த வேளையைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். நீங்கள் நினைவிற்காக அமர்கின்றீர்கள். அதற்காக உங்களை பாப்தாதா பாராட்டுகிறார். ஆனால் அவ்வாறு அமர்ந்திருப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த சூழல் அவசியம். சிலர் இப்படி அமர்ந்திருக்கிறார்கள், சிலர் அப்படி அமர்ந்திருக்கிறார்கள். ஒரு புகைப்படம் எடுத்தால் நீங்களே உணர்வீர்கள்: இப்போது ஏதோவொன்று தேவைப்படுகிறது. பாப்தாதா எரிமலை யோகத்தைப் பற்றிக் கூறியுள்ளார். நீங்கள் இப்போது அதில் ஆழமான கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இப்போது, ‘முயற்சி’ என்ற வார்த்தைக்கு முன்னால் ‘தீவிரம்’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பாப்தாதா இப்போது ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மாதங்களைக் கொடுத்துள்ளார். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் கவனத்திற்காக பாப்தாதா அதிகளவு உதவியை உங்களுக்கு வழங்குவார். மனதின் அதிபதிகளே, உங்களின் கைகள் மற்றும் பாதங்களைச் செயல்பட வைப்பதைப் போல் உங்களின் மனங்களையும் செயல்பட வையுங்கள். நீங்கள் விரும்பியதை உங்களால் செய்ய முடியும், அப்படித்தானே? நீங்கள் ஏதாவதொன்றை வேறு எங்கும் அன்றி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க விரும்பினால், உங்களால் அதைச் செய்ய முடியும், அல்லவா? இத்தகைய மனக் கட்டுப்பாட்டைக் கொண்டிருங்கள். உங்களின் மனம் நீங்கள் விரும்புகின்ற எண்ணங்களை மட்டுமே உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாள் இரவிலும் உங்களின் பெறுபேறுகளைச் சோதித்துப் பாருங்கள்: எந்தளவிற்கு எனது மனதின் மீது நான் ஆளுகின்ற சக்தியையும் கட்டுப்படுத்தும் சக்தியையும் கொண்டிருந்தேன்? நீங்கள் இப்போது வீணானவற்றுக்கு மிக விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இப்போது சக்திசாலியாகி, சக்திசாலியாக இருக்கும் சக்தியைச் சூழலுக்குள் பரப்புங்கள். குழந்தைகளின் துன்பத்தையும் வேதனையையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் இப்போது விரைவில் நிறைவு ஏற்பட வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். அனைவரும் முயற்சி செய்கிறார்கள், ஆனால் இப்போது ‘தீவிரம்’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டது. நான் இதைச் செய்யவே வேண்டும். ‘நான் அதைச் செய்வேன் அல்லது அதைப் பின்னர் பார்ப்பேன்’ என்பதல்ல. எதையாவது எதிர்காலத்திற்காகப் பிற்போடும் இந்த பாஷை இனிமேலும் சரிவரமாட்டாது.
இன்று, நீங்கள் அனைவரும் அன்புக்காட்சியைக் கண்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயத்தில் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். எனினும், அன்பு இருக்கும் அளவிற்கு, சக்தியும் இருக்க வேண்டும். இப்போது, உங்களை சக்தியால் நிரப்பிக் கொள்ளுங்கள். சகோதரிகளான நீங்கள் எவரும் உங்களை வெறுமனே ஒரு சக்தி என்று கருதக்கூடாது. ஆனால் உங்களை சிவசக்தி என்று கருதுங்கள். நீங்கள் ஒரு சிவசக்தி: தந்தை உங்களுடன் இருக்கிறார். பாண்டவர்களின் தந்தை, பாண்டவர்களுடன் இருக்கிறார். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பாப்தாதா ‘முயற்சி’ என்ற வார்த்தைக்கு முன்னால் ‘தீவிர’ என்ற வார்த்தையைச் சேர்க்கும்படி உங்களுக்குக் கூறியுள்ளார். இத்தகைய சூழலை உருவாக்குங்கள். ஒருவரோடு ஒருவர் ஒத்துழையுங்கள். உங்களின் சொந்த இடங்களில் தங்கி இருக்கும்போது, உங்களின் இடத்தை சக்திவாய்ந்தது ஆக்குங்கள். உங்களின் சகபாடிகளை சக்திசாலிகள் ஆக்குங்கள். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஏதாவது புதியதாகச் செய்வீர்கள், அல்லவா? ‘எனது பாபா’ என்று நீங்கள் சொல்வதனால், நீங்கள் என்னுடையவர் (பாபா) என்று சொல்லும் ஒரேயொருவரைப் போல் ஆகவேண்டும்தானே? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயத்தில் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் மிக நல்ல எண்ணங்கள் உள்ளன. அமிர்த வேளையில், நீங்கள் இதைச் செய்வீர்கள், அதைச் செய்வீர்கள் என்ற மிக நல்ல எண்ணங்களை உருவாக்குவதை பாப்தாதா பார்க்கிறார். ஆனால் நீங்கள் ஒரு கர்மயோகி ஆகியதும், தொடர்புகள் மற்றும் உறவுமுறைக்குள் சென்றதும் பின்னர் அது வித்தியாசமாகி விடுகிறது. நீங்கள் இப்போது ஒரு கர்மயோகி ஆகுகின்ற ஸ்திதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அச்சா.
நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? சந்தோஷமாக இருக்கிறீர்களா? பல புதியவர்களும் வந்திருக்கிறார்கள். புதியவர்களும் முதல் தடவை வந்திருப்பவர்களும் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாருங்கள், பலர் வந்துள்ளார்கள். வகுப்பில் அரைவாசிப் பேர் புதியவர்களே. வந்துள்ள புதியவர்களைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், குறைந்தபட்சம் இறுதி நிறைவிற்கு முன்னர் நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் பிந்தி வந்திருக்கும் அளவிற்கு, அந்தளவிற்கு தீவிர முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்தக் குறுகிய காலப்பகுதியில் உங்களின் எதிர்கால 21 பிறவிகள் முழுவதற்கும் நீங்கள் போதியளவைச் சேமிக்க வேண்டும். நீங்கள் இந்தளவு கவனம் செலுத்த வேண்டும். உங்களின் நேரத்தைச் சேமியுங்கள்! ஒரு விநாடியேனும் வீணாக்காதீர்கள். தீவிர முயற்சியாளராக இருங்கள். சாதாரணமான முயற்சி செய்வதன் மூலம், உங்களின் இலக்கைச் சென்று அடைவது கடினமாக இருக்கும். எவ்வாறாயினும், வந்திருக்கும் குழந்தைகளான உங்களை பாப்தாதா தனது இதயபூர்வமாகப் பாராட்டுகிறார். பாராட்டுக்கள்! அச்சா.
ஆசிரியர்கள் பலர் வந்துள்ளார்கள். ஆசிரியர்களைப் பார்க்கும்போது, பாப்தாதா மிகவும் களிப்படைகிறார். ஏனென்றால், கருவி ஆசிரியர்கள் பாப்தாதாவை வெளிப்படுத்துவதற்குக் கருவிகள் ஆகியுள்ளார்கள். எந்தவோர் ஆசிரியரைப் பார்க்கும்போதும் அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். ஏனென்றால், ஓர் ஆசிரியர் என்றால், எதிர்கால முகச்சாயல்கள் அவரினூடாகப் புலப்பட வேண்டும். உங்களின் எதிர்காலம் என்ன? உங்களின் எதிர்காலம் என்பது சதா உங்களின் இதயத்தில் சந்தோஷமாக இருப்பது, எப்போதும் உரிமையைக் கொண்டிருப்பது, அத்துடன் தங்கி இருப்பதில்லை. எனவே, ஆசிரியர்களின் சாயல்கள் இந்தக் காட்சியை வழங்க வேண்டும். ஒவ்வோர் ஆசிரியரும் சதா நினைக்க வேண்டும்: நீங்கள் எதையாவது எங்கேயாவது சொல்கிறீர்களோ இல்லையோ, உங்களின் சாயல்களும் முகமும் நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் பேற்றினை வெளிப்படுத்த வேண்டும். சதா இதில் கவனம் செலுத்துங்கள்: எனது முகம் எப்போதும் காட்சியை அருளுவதாக இருக்கிறதா? ஓர் ஆசிரியரின் முன்னால் வருகின்ற எவரும் ஆசிரியரைப் பார்க்கும்போது, முதலில் அவர்கள் சந்தோஷப்பட வேண்டும். அதன்பின்னர் அவர்களின் வாழ்க்கைளிலும் சந்தோஷம் புலப்படும். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அத்துடன் சந்தோஷப் பாக்கியத்தையும் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வோர் ஆசிரியரினதும் இலட்சியம் நல்லதாக இருப்பதை பாப்தாதா கண்டார்: ‘நான் இதைச் செய்ய வேண்டும். நான் இவ்வாறு ஆகவேண்டும்’. இது அப்படித்தானே? உங்களின் இலட்சியம் என்ன? இதுவே உங்களின் இலட்சியம், அல்லவா? எனவே, இந்த இலட்சியம் உங்களின் தகைமைகளில் புலப்படுகின்றது. ஆனால் அது மேலும் புலப்பட வேண்டும். வருகின்ற எவரும் நிச்சயமாக அந்தச் சந்தோஷத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தோஷமே தேவைப்படுகிறது. அவர்களுக்கு அது தேவைப்படுகிறது. ஆனால் அவர்களால் அவ்வாறு ஆகமுடிவதில்லை. எனவே, ஆசிரியர்கள் என்றால், தமது சாயல்களால் சேவை செய்பவர்கள் என்று அர்த்தம். ‘இவர் என்னவாகி உள்ளார்?’ என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். இப்போது, நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, உங்களின் முகமும் செயல்பாடுகளும் அதிகளவில் இந்தச் சேவையைச் செய்யும். ஏனென்றால், காலம் மிகவும் இக்கட்டானதாக ஆகும்போது, உங்களிடம் மிகக் குறைவான நேரமே இருக்கும். ஆனால் எதையாவது பெற வேண்டும் என்ற அவர்களின் ஆசையோ அதிகரிக்கும். இதனாலேயே, ஆசிரியர்களான நீங்கள் எப்போதும் என்றும் தயாராக இருக்க வேண்டும். அதன் மூலம் வருகின்ற எவரும் நிச்சயமாக எதையாவது எடுத்துச் செல்வார்கள். உங்களின் முகங்களில் இருந்தும் செயல்பாடுகளில் இருந்தும் இருந்தும் அவர்கள் எதையாவது எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் அருள்பவரின் குழந்தைகள், இல்லையா? ஆசிரியர்களான உங்களைப் பார்க்கும்போது பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். அவர் தனது இதயத்தில் உங்களின் புகழைப் பாடுகிறார்: ஆஹா ஆசிரியர்களே! ஆஹா! ஒவ்வோர் ஆசிரியரும் நிச்சயமாகச் சேவை செய்கிறார். அத்துடன் நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன சேவை செய்தீர்கள் என்ற பெறுபேற்றை இரவில் சோதிப்பீர்களாக இருக்கும். நீங்கள் உங்களின் சொந்த அட்டவணையைப் பார்க்க வேண்டும்: சேவை செய்ய வேண்டும் என்ற என்னிடம் இருந்த இலட்சியத்தை நான் நிறைவேற்றினேனா? ஏதாவதொரு காரணத்தால் அவ்வாறு நடக்கவில்லை என்றால், அடுத்த நாள் இரட்டைச் சேவை செய்யுங்கள். அதை அப்படியே விட்டுவிடாதீர்கள். ஏனென்றால், ஆசிரியர் என்றால் கருவி அருள்பவர், அருள்பவரின் குழந்தை என்று அர்த்தம். எனவே பாப்தாதா களிப்படைகிறார் - நீங்கள் சிறிய நிலையம் அல்லது பெரிய நிலையத்தில் இருந்து வந்திருந்தாலும் - ஏனென்றால் அனைத்தையும் துறந்து, ஒரு சேவை இடத்திற்கு வருவதும் தைரியமே, அல்லவா? உங்களின் தைரியத்தை இட்டு பாப்தாதா களிப்படைகிறார். இப்போது மேலும் சகபாடிகளை உருவாக்குங்கள். மேலும் அதிக ஆசியர்களை வெளிப்படச் செய்யுங்கள். ஏனென்றால், சேவை அதிகரிக்கப் போகிறது. இப்போது, சிறிது குழப்பத்திற்காகக் காத்திருங்கள். அனைவரும் ஏக்கத்தடன் உங்களிடம் வருவார்கள். சேவை அதிகரிக்கப் போகிறது. அது குறைவடையப் போவதில்லை.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சுயமரியாதை ஆசனத்தில் ஸ்திரமாக அமர்ந்திருப்பதன் மூலம் மேன்மையான சுயமரியாதையைக் கொண்டிருந்து மாயையை சரணடையச் செய்வீர்களாக.சங்கமயுகத்தின் அதி மேன்மையான சுயமரியாதை, மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் விழிப்புணர்வில் இருப்பதாகும். ஒரு மூத்த அலுவலகர் அல்லது அரசர் தனது சுயமரியாதை ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, மற்றவர்கள் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். அவர் தனது ஆசனத்தில் இல்லை என்றால், எவரும் அவரின் கட்டளைகளைப் பின்பற்ற மாட்டார்கள். அதேபோல், நீங்களும் சுயமரியாதை கொண்டவராக ஆகி, உங்களின் சுயமரியாதை ஆசனத்தில் அமர்ந்திருந்தால், மாயை உங்களிடம் சரணடைவாள்.
சுலோகம்:
பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரின் சகவாசத்தை அனுபவம் செய்பவர்கள், அன்பிலே திளைத்திருக்கும் ஆத்மாக்கள் ஆவார்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுவது ஒரு ஞானி ஆத்மாவின் கடமை. தந்தை இகழ்ச்சியையும் நன்மை செய்யும் பார்வையுடனேயே பார்த்தார். உலக மக்களுக்கு கருணை உள்ளவர்களிடம் கருணை உள்ளது. பக்த ஆத்மாக்களுக்கும் அது உள்ளது. எவ்வாறாயினும், ஒரு ஞானி ஆத்மா என்றால் அனைவருக்கும் நன்மை உணர்வுகளைக் கொண்டிருப்பவர், இழப்பை ஏற்படுத்தும் சிறிதளவு எண்ணமேனும் இல்லாதவர் என்று அர்த்தம். உங்களை இகழ்பவர்களுக்கும் கருணை மற்றும் ஈடேற்றுகின்ற உணர்வுகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே உங்களை உலக உபகாரி என்று சொல்ல முடியும்.