12.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். ஆகவே கொடிய எதிரியாகிய காமத்தை வெற்றி கொள்ளுங்கள். காமத்தை வெற்றி கொள்வதன் மூலம் உலகை வென்றவர்கள் ஆகுங்கள்.

கேள்வி:
உங்கள் செயற்பாடுகளினூடாக நீங்கள் அனைவருக்கும் கொடுக்கக்கூடிய காட்சி என்ன?

பதில்:
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் செயற்பாடுகளினூடாக நீங்கள் ஓர் அன்னமா அல்லது ஒரு நாரையா என்ற காட்சியைக் கொடுக்க முடியும். அன்னங்கள் ஒருபொழுதும் எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதில்லை. நாரைகள் விகாரம் உடையவை என்பதால், துன்பத்தை விளைவிக்கின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நாரைகளில் இருந்து அன்னங்கள் ஆகுகிறீர்கள். ஏனைய அனைவரையும் தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆக்குவதே, தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகின்ற குழந்தைகளான உங்கள் கடமையாகும்.

ஓம் சாந்தி.
நீங்கள் ‘ஓம்சாந்தி’ எனக் கூறும்பொழுது, உங்கள் ஆதி தர்மத்தை நினைவு செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் வீட்டையும் நினைவு செய்கிறீர்கள், ஆனால் நீங்கள் வெறுமனே வீட்டில் அமர்ந்திருக்கக் கூடாது. நீங்கள் தந்தையின் குழந்தைகள் என்பதால், நீங்கள் நிச்சயமாக உங்கள் சுவர்க்கத்தையும் நினைவு செய்ய வேண்டும்;. ஆகவே ‘ஓம்சாந்தி’ எனக் கூறுவதனால் இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் புகுகின்றது. ஆத்மாவாகிய நான் ஓர் அமைதி சொரூபம். நான் அமைதிக் கடலாகிய தந்தையின் ஒரு குழந்தை. சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தை எங்களைத் தூய்மையினதும், அமைதியினதும் சொரூபங்கள் ஆக்குகின்றார். தூய்மையே பிரதான விடயம். உலகமே தூய்மையாகவும், தூய்மை அற்றதாகவும் ஆகுகிறது. தூய உலகில் விகாரமுடைய ஒருவரேனும் இருக்க முடியாது. தூய்மையற்ற உலகில் ஐந்து விகாரங்கள் இருக்கின்றன. இதனாலேயே இவ்வுலகம் ஒரு விகாரமான உலகம் என அழைக்கப்படுகின்றது. அது விகாரமற்ற உலகமாகும். விகாரமற்ற உலகிலிருந்து ஏணியில் கீழே வரும்பொழுது, நீங்கள் விகார உலகினுள் வருகிறீர்கள். அது தூய உலகமும், இது தூய்மையற்ற உலகமும் ஆகும். அது சந்தோஷமாகிய பகலாகும். இது அலைந்து திரியும் இரவாகும். உண்மையில் இரவில் எவருமே அலைவதில்லை, ஆனால் பக்தியானது அலைந்து திரிவதைப் போன்றது எனக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் சற்கதியை அடைவதற்கே இங்கு வந்திருக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அந்தப் பாவங்கள் அனைத்தினாலும் நிறைந்திருந்தீர்கள்; உங்களுக்கு ஐந்து விகாரங்களும் இருந்தன. அவற்றில் காமமே பிரதான விகாரம் ஆகும். இதனூடாகவே மனிதர்கள் பாவாத்மாக்கள் ஆகுகிறார்கள். அவனோ அல்லது அவளோ ஒரு தூய்மையற்ற பாவாத்மா என்பது அனைவருக்கும் தெரியும். காமம் எனும் ஒரு விகாரத்தினாலேயே தகைமைகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: காமத்தை வெற்றி கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் உலகை வென்றவர்கள் ஆவீர்கள். அதாவது, புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஆகவே உங்களுக்குள் அந்தளவு சந்தோஷம் இருக்க வேண்டும். மனிதர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு விகாரங்கள் எவையும் இருக்கக்கூடாது. காமமே பிரதான விகாரம், இவ்விகாரத்தினாலேயே அதிகளவு குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் அதிகளவிற்கு அமைதியின்மை இருக்கிறது. எங்கும் விரக்திக் கூக்குரல் ஒலிக்கின்றது. ஏன் இவ்வுலகில் விரக்திக் கூக்குரல்கள் ஒலிக்கின்றன? ஏனெனில், அவர்கள் பாவாத்மாக்கள் என்பதால் ஆகும். விகாரங்களினாலேயே அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இவ்வுலகில் உள்ள எதுவும் பயனற்றது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள்; வைக்கோற்போர் தீ மூட்டப்பட உள்ளது. உங்கள் பௌதீகக் கண்களால் நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் தீ மூட்டப்பட உள்ளன. ஆத்மாக்களைத் தீயிலிட முடியாது. அது ஆத்மாக்கள் எப்பொழுதும் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதைப் போன்றுள்ளது; ஆத்மாக்கள் எப்பொழுதும் உயிருடனேயே இருக்கிறார்கள். எவராவது எப்பொழுதாவது ஓர் ஆத்மாவைக் காப்புறுதி செய்கின்றாரா? சரீரங்களையே காப்புறுதி செய்ய முடியும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். இது ஒரு விளையாட்டு எனக் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் மேலே வசிக்கிறார்கள், அவர்கள் பஞ்ச தத்துவங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். உலகின் அனைத்து விடயங்களும் பஞ்ச தத்துவங்களில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் என்றுமே உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் எப்பொழுதும் உள்ளவர்கள், அவர்களே புண்ணியாத்மாக்களாகவும், பாவாத்மாக்களாகவும் ஆகுகிறார்கள். ஆத்மாக்களுக்கே இப்பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன: புண்ணியாத்மா அல்லது பாவாத்மா. ஆத்மாக்கள் ஐந்து விகாரங்களினாலே மிகவும் தீயவர்கள் ஆகுகிறார்கள்! பாவங்கள் அனைத்தில் இருந்தும் உங்களை விடுவிப்பதற்கே தந்தை இப்பொழுது வந்துள்ளார். விகாரங்களே முழு நடத்தையையும் சீர்குலைக்கின்றன. நல்ல நடத்தை என்றால் என்ன என்பதையேனும் மக்கள் புரிந்து கொள்வதில்லை. இது அதிமேலான ஆன்மீக அரசாங்கம் ஆகும். உங்களைப் பாண்டவ அரசாங்கம் என்று அழைப்பதற்குப் பதிலாக உங்களை இறை அரசாங்கம் என அழைக்கலாம். நீங்கள் இறை அரசாங்கம் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இறை அரசாங்கம் என்ன செய்கிறது? அது ஆத்மாக்களைத் தூய்மையாக்கித் தேவர்களாக மாற்றுகிறது. வேறு எங்கிருந்து தேவர்கள் வருவார்கள்? இது எவருக்கும் தெரியாது. தேவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் எவ்வாறு தேவர்கள் ஆகினார்கள், அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? தேவர்கள் சுவர்க்கத்தில் மாத்திரமே இருக்கிறார்கள். சுவர்க்கவாசிகள் நிச்சயமாக நரகவாசிகள் ஆகுகிறார்கள், பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்கவாசிகள் ஆகுகின்றார்கள். உங்களுக்கே இது தெரியாது. ஆகவே எவ்வாறு வேறெவராலும் இதனை அறிந்து கொள்ள முடியும்? நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதையும், இந்த ஆத்மாக்கள் அனைவரும் நடிகர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் புத்தியில் இவ்விடயங்கள் அனைத்தையும் வைத்திருங்கள். உங்கள் புத்தியில் கல்வி இருக்க வேண்டும், அத்துடன் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவும் ஆகவேண்டும். தூய்மை அற்றவர் ஆகுவது மிகவும் தீமையானது. ஆத்மாக்களே தூய்மை அற்றவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஒருவருடன் ஒருவர் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். தூய்மை அற்றதைத் தூய்மை ஆக்குவதே உங்கள் தொழிலாகும். தூய்மை ஆகுங்கள், அப்பொழுது நீங்கள் தூய உலகிற்குச் செல்வீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மா இல்லாவிட்டால், சரீரமும் இருக்க முடியாது, செயற்படவும்; முடியாது. ஆதியில், நீங்கள் தூய உலகில் வசித்தீர்கள் என்பதை ஆத்மாக்களான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எவ்வாறு நீங்கள் முற்றிலும் விவேகம் அற்றவர்கள் ஆகினீர்கள் என்பதையும், அதனாலேயே நீங்கள் தூய்மையற்ற உலகிற்குத் தகுதியானவர்கள் ஆகினீர்கள் என்பதையும் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார். இப்பொழுது நீங்கள் தூய்மையாகும் வரை, உங்களால் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்களாக முடியாது. சங்கம யுகத்திலேயே சுவர்க்கத்துடனான ஒப்பீடு செய்யப்படுகின்றது. அங்கு ஒப்பீடு செய்யப்படுவதில்லை. இச்சங்கம யுகத்திலேயே நீங்கள் இந்த முழு ஞானத்தையும் பெறுகிறீர்கள். நீங்கள் தூய்மை ஆகுவதற்கான ஆயுதங்களைப் பெறுகிறீர்கள். ஒரேயொருவரே தூய்மையாக்குபவராகிய பாபா என அழைக்கப்படுகிறார். நீங்கள் அவருக்குக் கூறுகிறீர்கள்: அவர்களைப் போல் எங்களைத் தூய்மை ஆக்குங்கள்; அவர்கள் சுவர்க்க அதிபதிகள். நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதும், பின்னர் 84 பிறவிகளை எடுத்ததும் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர் ‘சியாம் சுந்தர்” எனப் பெயர் இடப்பட்டுள்ளார். அவர்கள் கருநீல நிறமான கிருஷ்ணரின் உருவங்களை உருவாக்கி உள்ளார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் கிருஷ்ணரின் அத்தகையதொரு தெளிவான புரிந்துணர்வைப் பெறுகின்றீர்கள். அவர்கள் இரு உலகங்களைக் காட்டி உள்ளார்கள். ஆனால், உண்மையில் இரு உலகங்கள் இருப்பதில்லை; ஓர் உலகமே உள்ளது. அது புதியதாகவும், பின்னர் பழையதாகவும் ஆகுகின்றது. முதலில், ஒரு குழந்தை புதிதாக இருந்து, பின்னர் வளரும் பொழுது, முதியவர் ஆகுகின்றார். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் பெரும்பாடு படுகிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் இதனைப் புரிந்து கொண்டுள்ளார்கள், இல்லையா? இதனைப் புரிந்து கொள்வதனால், அவர்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகினார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்தியவர் யார்? கடவுளே ஆவார்! ஒரு யுத்தத்தைப் பற்றிய கேள்வி இல்லை. கடவுள் விவேகம் மிக்கவரும், ஞானம் நிறைந்தவரும் ஆவார்! அவர் மிகவும் தூய்மையானவர்! மனிதர்கள் அனைவரும் சிவனின் விக்கிரகத்திற்கு முன்னால் சென்று வணங்குகின்றார்கள், ஆனால் அவர் யார் என்பதையோ அல்லது அவர் என்ன செய்கிறார் என்பதையோ அவர்கள் அறிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ‘சிவகாசி விஷ்வநாத் கங்கா….(உலகப் பிரபுவிடம் இருந்து கங்கை வெளிப்பட்ட காசியிலுள்ள சிவாலயம்) எனக் கூறுகிறார்கள். அவர்கள் முற்றிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை! நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது அவர்கள் கூறுகிறார்கள்: உங்களால் எங்களுக்கு எதனை விளங்கப்படுத்த முடியும்? நாங்கள் வேதங்கள், சமயநூல்கள் அனைத்தையும் கற்றுள்ளோம். எவ்வாறாயினும் இராம இராச்சியம் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. புதிய உலகமாகிய, சத்தியயுகம் இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. இதனைக் கிரகிக்கும் நீங்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கிறீர்கள். உங்களில் சிலர் இதனையும் மறந்து விடுகின்றீர்கள், ஏனெனில் உங்கள் புத்தி முழுமையாகவே கல்லைப் போன்றுள்ளது. ஆகவே தெய்வீகப் புத்தி உடையவர்களின் கடமை ஏனையோரையும் அவ்வாறு ஆக்குவதாகும். கல்லுப்புத்தி உடையவர்கள் தொடர்ந்தும் அதே செயற்பாடுகளைப் புரிவார்கள். இது ஏனெனில் அன்னங்களும், நாரைகளும் இருக்கிறார்கள். அன்னங்கள் என்றுமே எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதில்லை. நாரைகள் துன்பத்தை விளைவிக்கிறார்கள். சிலர் முழுமையாகவே நாரைகளைப் போன்று நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் அனைத்து விகாரங்களும் இருக்கின்றன. இங்கும் மிகவும் விகாரம் நிறைந்தவர்கள் வருகின்றார்கள். அவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்களை இனங்காண முடியாது. விகாரம் நிறைந்த பலர் பல்வேறு நிலையங்களுக்கும் செல்கிறார்கள். தாங்கள் பிராமணர்கள் எனக் கூறி அவர்கள் சாக்குப்போக்குகளைக் கூறுகின்றார்கள், ஆனால் அது ஒரு பொய்யாகும். இது பொய்களின் உலகம் என அழைக்கப்படுகின்றது. புதிய உலகம் சத்தியத்தின்; உலகமாகும். இப்பொழுது சங்கம யுகம். அதிகளவு வேறுபாடு உள்ளது! பொய்களைக் கூறி, பொய்யான அனைத்தையும் செய்பவர்கள் மூன்றாந்தரத்தினர் ஆகுகின்றார்கள். முதற்தரமும், இரண்டாம் தரமும் உள்ளன. தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையின் முழுமையான அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். ஒன்றாக வாழ்ந்து தூய்மையாக இருப்பது அசாத்தியம் எனச் சிலர் கூறுகின்றார்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சிலருக்கு யோக சக்தி இல்லாததால், இதைப் போன்று இலகுவான எவற்றையும் அவர்களால் முழுமையாக விளங்கப்படுத்த முடியாதுள்ளது. இங்கு கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என அவர்களுக்கு எவரும் விளங்கப்படுத்துவதில்லை. அவர் கூறுகின்றார்: தூய்மை ஆகுவதனால், நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அது தூய உலகமாகும். தூய உலகில் தூய்மையற்ற எவரும் இருக்க முடியாது. அங்கே ஐந்து விகாரங்கள் இருப்பதில்லை. அது விகாரமற்ற உலகமும், இது விகாரமான உலகமும் ஆகும். நாங்கள் சத்தியயுக இராச்சியத்தைப் பெறுகின்றோம். ஆகவே நாங்கள் ஏன் ஒரு பிறவியில் தூய்மையாகக் கூடாது? நாங்கள் அத்தகையதொரு பெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்கிறோம்! இதனாலேயே அதிகளவு சந்தோஷம் இருக்கிறது. தேவர்கள் தூய்மையானவர்கள். தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குகிறார். ஆகவே உங்களுக்கு இந்த ஆசையின் தூண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது என நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். தந்தை மாத்திரமே உங்களை அவர்களைப் போன்றவர்கள் ஆக்குகிறார். தந்தையைத் தவிர எவராலும் உலகைப் புதிதாக உருவாக்க முடியாது. கடவுள் மாத்திரமே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு வருகிறார். அவருடைய இந்த இரவு நினைவுகூரப்பட்டுள்ளது. ‘ஞானம், பக்தி, விருப்பமின்மை’ எனக் கூறப்படுகின்றது. ஞானம், பக்தி ஒவ்வொன்றும் அரைக்கு அரைவாசிக் காலத்திற்கு உரியவை. பக்தியின் பின்னர் விருப்பமின்மை உள்ளது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆகவே நீங்கள் சரீரங்களாகிய, உங்கள் ஆடைகளைத் துறக்க வேண்டும். நீங்கள் இந்தத் தீய உலகில் இனிமேலும் வசிக்கக்கூடாது. 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. நாங்கள் இப்பொழுது அமைதி தாமத்தினூடாக, தூய உலகிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அனைத்திற்கும் முதலில் நீங்கள் அல்பா என்னும் விடயத்தை மறக்கக்கூடாது. பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது எனக் குழந்தைகளும் புரிந்து கொள்கிறார்கள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்கிறார். தந்தை பல தடவைகள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளார். நரகம் அழிய உள்ளது. நரகம் மிகவும் பெரியதும், சுவர்க்கம் மிகவும் சிறியதும் ஆகும்! புதிய உலகில் ஒரு தர்மமே இருக்கிறது, இங்கோ எண்ணற்ற சமயங்கள் இருக்கின்றன. ஒரே தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? அதைச் செய்தவர் பிரம்மாவாக இருக்க முடியாது. பிரம்மா தூய்மை அற்றவராகிப் பின்னர் தூய்மை ஆகுகிறார். நீங்கள் என்னைப் பற்றி இவ்வாறு கூற மாட்டீர்கள்: தூய்மை ஆகுகின்ற தூய்மையற்ற ஒருவர். அவர்கள் தூய்மையாக இருக்கும் பொழுது, இலக்ஷ்மி நாராயணன் என அழைக்கப்படுகிறார்கள். பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் இருக்கின்றன. இவர் பிரஜாபிதா. சிவபாபா அநாதியான படைப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். ‘அநாதியான’ எனும் வார்த்தை தந்தையையே குறிப்பிடுகிறது. தந்தை அநாதியானவர், ஆகவே ஆத்மாக்களும் அநாதியானவர்கள். நாடகமும் அநாதியானது. நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஆத்மாவாகிய சுயம், உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் முழுக் கால எல்லையினதும் இந்த ஞானத்தைப் பெறுகிறார். இதனைக் கொடுப்பவர் யார்? தந்தையே ஆவார். நீங்கள் 21 பிறவிகளுக்குப் பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்களாக இருந்து, பின்னர் இராவண இராச்சியத்தில் அனாதைகள் ஆகுகிறீர்கள். அப்பொழுது விகாரங்கள் பிரவேசிப்பதால், அனைவரினதும் நடத்தை பாழாகுகிறது. எவ்வாறாயினும் இரு உலகங்கள் இருக்கின்றன என்றில்லை. நரகமும், சுவர்க்கமும் ஒரேநேரத்தில் இருக்கின்றன என மக்கள் நம்புகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்படுகிறது! இப்பொழுது நீங்கள் மறைமுகமானவர்கள். சமயநூல்களில் என்ன எழுதப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! அவர்கள் முழுமையாகவே அனைத்தையும் சிக்கலாக்கி விட்டார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் சிக்கலாகியுள்ள அனைத்தினதும் சிக்கலை எடுக்க முடியாது. மக்கள் அவரை அழைக்கின்றார்கள்: என்னால் பயனில்லை, ஆகவே வந்து என்னைத் தூய்மையாக்கி, எனது நடத்தையைச் சீர்திருத்துங்கள்! உங்கள் நடத்தைகள் அதிகளவிற்குச் சீர்திருத்தப்பட்டுள்ளன! எவ்வாறாயினும், மற்றவர்களைப் பொறுத்த வரை, சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக அவர்கள் மென்மேலும் அதிகம் பாழாக்கப்பட்டுள்ளனர். ஒருவருடைய நடத்தையில் இருந்து அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இன்று ஒருவர் ஒரு மகாராத்தி அல்லது ஓர் அன்னம் என்று அழைக்கப்படலாம். ஆனால் நாளையோ அவர் ஒரு நாரையைப் போன்றவர் ஆகுகின்றார். அதற்கு அதிகக் காலம் எடுப்பதில்லை! மாயை மறைமுகமானவள். கோபமும் வெளியே தென்படாது. ஒருவர் குரைக்க ஆரம்பிக்கும் பொழுது, அது வெளிப்பட்டு, பின்னர் தென்படுகின்றது. பின்னர் இந்த ஞானத்தைச் செவிமடுப்பதில் வியப்படைந்து ஏனையோருக்கும் கூறியவர்கள் ஓடிவிடுகிறார்கள். அவர்கள் மிகவும் கீழே வீழ்கின்றார்கள்! அவர்கள் முழுமையாகவே கல்லைப் போல் ஆகுகின்றார்கள். இந்திர சபையின் கதை உள்ளது. அத்தகையோரை இனங்காண முடியும். அவர்கள் இந்த ஒன்றுகூடலுக்குள் வரக்கூடாது. இந்த ஞானத்தைச் சிறிதளவு செவிமடுத்துள்ள எவருமே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள், ஏனெனில் இந்த ஞானம் என்றுமே அழிவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும். நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால், உங்கள் அந்தஸ்து சீரழிந்தாகிவிடும். நீங்கள் முதலில் சூரிய வம்சத்திலும், பின்னர் சந்திர வம்சத்திலும், பின்னர் வைசிய வம்சத்திலும், அதன்பின்னர் சூத்திர வம்சத்திலும் ஒருவர் ஆகுகிறீர்கள். எவ்வாறு சக்கரம் சுழல்கிறது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். கலியுகம் முடிவிற்கு வருவதற்கு இன்னமும் 40,000 வருடங்கள் உள்ளன என அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஏணியில் கீழே வர வேண்டும். அது இன்னுமொரு 40,000 வருடங்களாக இருந்திருப்பின், பல மனிதர்கள் இருப்பார்கள்! 5000 வருடங்களிலேயே உண்பதற்கும் போதுமானளவு எதுவும் இல்லாத வகையில், பல மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆகவே இன்னமும் அத்தனை ஆயிரம் வருடங்கள் இருப்பின், சனத்தொகை அதிகளவு பெருகியிருக்கும்! ஆகவே தந்தை வந்து உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கின்றார். தூய்மையற்ற மனிதர்கள் தொடர்ந்தும் ஒருவரோடு ஒருவர் சண்டை இடுகிறார்கள். அவர்களின் புத்தியால் இந்தப் பக்கத்தை நோக்கித் திரும்ப முடியாமல் உள்ளது. எவ்வளவுக்கு உங்கள் புத்தி மாறியுள்ளது எனப் பாருங்கள். அவ்வாறிருந்தும் மாயை நிச்சயமாக உங்களை ஏமாற்றுகிறாள். நீங்கள் ஆசைகள் என்றால் என்னவென்றே முற்றிலும் அறியாதவர்கள்; ஆக வேண்டும். ஏதாவது ஆசைகள் இருப்பின், அனைத்தும் இழக்கப்படுகின்றது. நீங்கள் முற்றிலும் ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்கள் ஆகுகின்றீர்கள். மாயை மிகச் சிறந்த மகாராத்திகளையும் ஏதோ ஒரு வழியில் தொடர்ந்தும் ஏமாற்றுகிறாள். சிலரால் தங்கள் பெற்றோர்களின் இதயத்தில் ஏற முடியாததைப் போன்றே, பின்னர் அவர்களால் (கடவுளின்) இதயத்தில் ஏற முடியாமல் உள்ளது. சில குழந்தைகள் தங்கள் லௌகீகப் பெற்றோர்களையும் கூட கொல்லக் கூடியவர்கள்! அவர்கள் தங்கள் குடும்பத்தையும் கொன்று விடுகிறார்கள்! அவர்கள் மிகவும் பாவாத்மாக்கள். இராவணன் என்ன செய்கிறான் எனப் பாருங்கள்! இவ்வுலகம் மிகவும் தீயது. நீங்கள் அதன் மீது உங்கள் இதயத்தை பற்றிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. தூய்மை ஆகுவதற்குப் பெருமளவு தைரியம் தேவைப்படுகின்றது. உலக இராச்சியப் பரிசைக் கோருவதற்கு தூய்மையே பிரதானமான விடயம் ஆகும், இதனாலேயே தூய்மையாக்க வருமாறு நீங்கள் தந்தையிடம் கூறுகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையினால் ஏமாற்றப்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, ஆசைகள் என்றால் என்னவென்றே முற்றிலும் அறியாதவர்கள் ஆகுங்கள். இந்தத் தீய உலகின் மீது உங்கள் இதயத்தில் பற்றைக் கொண்டிருக்காதீர்கள்.

2. தூய்மையின் முழுமையான அத்தாட்சியைக் கொடுங்கள். தூய்மையே அதியுயர்வான நடத்தை ஆகும். உங்களைச் சீர்திருத்துவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.

ஆசீர்வாதம்:
உங்கள் திரிகாலதரிசி ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருந்து, ஒரு முதல் இலக்க பாக்கியசாலி ஆத்மாவாக, சதா அசைக்க முடியாதவராகவும் பற்றற்ற பார்வையாளராகவும் ஆகுவீர்களாக.

ஒவ்வோர் எண்ணத்தை நீங்கள் உருவாக்கும் போதும், ஒவ்வொரு செயலை நீங்கள் செய்யும் போதும், ஒவ்வொரு சூழ்நிலையைப் பார்க்கின்ற போதும் உங்கள் திரிகாலதரிசி ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருங்கள். 'இது ஏன் இவ்வாறு உள்ளது?' அல்லது 'இது என்ன?' என்ற எந்தக் கேள்விக் குறிகளையும் கொண்டிருக்காதீர்கள். எப்பொழுதும் முற்றுப் புள்ளி இடுங்கள். எதுவும் புதியது அல்ல. ஒவ்வோர் ஆத்மாவின் பாகத்தையும் மிக நன்றாக அறிந்திருந்து, உங்கள் பாகத்தை நடியுங்கள். ஆத்மாக்களுடன் உறவுமுறைகளையும் தொடர்புகளையும் கொண்டிருக்கின்ற போது, பற்றற்று இருப்பதிலும் அன்பாக இருப்பதிலும் சமமாக இருங்கள். அப்போது, அனைத்துத் தளம்பல்களும் முடிவடையும். சதா அசைக்க முடியாதவராகவும் ஒரு பற்றற்ற பார்வையாளராகவும் இருப்பதே முதல் இலக்கப் பாக்கியசாலி ஆத்மாவின் அடையாளம் ஆகும்.

சுலோகம்:
சகிப்புத்தன்மை என்ற தெய்வீகக் குணத்தைக் கிரகித்தால், உங்கள் கடுமையான சம்ஸ்காரங்கள் சாந்தம் அடையும்.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

உங்கள் சுலோகம்: முக்தியும் ஜீவன்முக்தியும் உங்கள் பிறப்புரிமை ஆகும். பரந்தாமத்தில், உங்களுக்கு முக்தி அல்லது ஜீவன்முக்தி என்றால் என்னவென்று தெரியாது. இப்பொழுது நீங்கள் அவற்றை இங்கே, இந்த பிராமண வாழ்வில் அனுபவம் செய்ய வேண்டும்.