12.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்கின்ற வேளையிலும் உங்கள் இறை மாணவ வாழ்க்கையையும் இந்தக் கல்வியையும் சதா நினைவு செய்யுங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையில் இருங்கள்.

கேள்வி:
ஞானாமிர்தத்தை எவ்வாறு ஜீரணிக்கச் செய்வது என்பதை அறிந்த குழந்தைகளின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் சதா ஆன்மீகப் போதையைக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போதையின் அடிப்படையில் அவர்கள் தொடர்ந்தும் அனைவருக்கும் நன்மை செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்மை செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய விரும்புவதில்லை. அவர்கள் முட்களை மலர்களாக மாற்றுகின்ற சேவையில் மும்முரமாக இருக்கிறார்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் நடிகர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை நிறைவுசெய்து விட்டீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். உங்கள் இராச்சியத்தை நீங்கள் மீண்டும் ஒருமுறை கோரிக் கொள்வதற்கும் உங்களைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குவதற்குமே பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எவருமன்றி தந்தையால் மாத்திரமே இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் ஒரு பாடசாலையில் இருப்பது போன்று இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வெளியில் இருக்கும் பொழுது, நீங்கள் இந்தப் பாடசாலையில் இல்லை. இதுவே அதிமேலான ஆன்மீகப் பாடசாலை என நீங்கள் அறிவீர்கள். ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய கல்வியை நினைவுசெய்ய வேண்டும். இவரும் ஒரு குழந்தையே. தந்தையே இவருக்கும் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றார். அவரே மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை. உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே அவர் வந்து இந்த சரீரத்தைக் கடனாக எடுக்கின்றார். அவர் தினமும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள்; நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். மறுபிறவி எடுத்ததனால் நீங்கள் தரையில் வீழ்ந்து விட்டீர்கள். பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது. நீங்கள் இப்பொழுது இவை அனைத்தையும் அறிவீர்கள். முழுக் கதையும் பாரதத்தைப் பற்றியும் உங்கள் அனைவரையும் பற்றியதும் ஆகும். நீங்கள் உங்களை மறந்து விடாதீர்கள். நாங்கள் சுவர்க்கத்தை ஆட்சிசெய்தோம், நாங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது. நீங்கள் நாள் முழுவதும் இதை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். உங்கள் வியாபாரத்தைச் செய்கின்ற பொழுதிலும் நீங்கள் இந்தக் கல்வியை நினைவுசெய்ய வேண்டும்: நீங்கள் எவ்வாறு உலக அதிபதிகளாக இருந்தீர்கள், பின்னர் எவ்வாறு நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்கினீர்கள். இது மிக இலகுவானது, ஆனால் எவராலும் அதை நினைவுசெய்ய முடிவதில்லை. ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் என்பதால் நினைவு நழுவி விடுகின்றது. கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற விழிப்புணர்வும் நழுவி விடுகின்றது. நாங்கள் பாபாவின் மாணவர்கள். பாபா தொடர்ந்தும் கூறுகின்றார்: நினைவு யாத்திரையில் இருங்கள். தந்தை எங்களுக்குக் கற்பித்து எங்களை அவர்களைப் போன்று ஆக்குகின்றார். இந்த விழிப்புணர்வு நாள் முழுவதும் இருக்கட்டும். இந்த இடமே பாரதமாக இருந்தது என்று தந்தை மாத்திரமே உங்களுக்கு நினைவூட்டுகின்றார். நாங்கள் தேவர்களாக இருந்தோம், இப்பொழுது அசுரர்கள் ஆகிவிட்டோம். முன்னர் உங்கள் புத்தியும் அசுரத்தனமாகவே இருந்தது. தந்தை இப்பொழுது உங்களுக்கு இறைபுத்தியைக் கொடுத்துள்ளார். இருந்தும் இது சிலரது புத்தியில் இருப்பதில்லை; அவர்கள் மறந்து விடுகிறார்கள். தந்தை உங்களுக்கு அதிகளவு போதையைக் கொடுக்கின்றார். நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்தத் தேவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே இந்தப் போதை இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் இராச்சியத்தைக் கோருகின்றோம். நாங்கள் எங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்வோம். உங்களிற் சிலரிடம், முற்றாகவே போதை இருப்பதில்லை. உங்களால் ஞானாமிர்தத்தை ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. இந்தப் போதையைக் கொண்டிருப்பவர்கள், பிறருக்கு நன்மைபயக்கும் விடயங்களைத் தவிர, ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவது சரியானது என்று கருதவும் மாட்டார்கள். மற்றவர்களை மலர்களாக ஆக்குகின்ற சேவையில் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். முன்னர், நாங்கள் மலர்களாக இருந்தோம். பின்னர் மாயை எங்களை முட்களாக மாற்றினாள். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை மலர்கள் ஆகுகின்றோம். இவ்வாறு உங்களுடன் நீங்களே பேசுங்கள். நீங்கள் இந்தப் போதையுடன் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தினால் அம்பு மிக விரைவாக இலக்கைத் தாக்கும். பாரதம் அல்லாவின் தோட்டமாக இருந்தது. இப்பொழுது அது தூய்மை அற்றதாகி விட்டது. நாங்கள் முழு உலகின் அதிபதிகளாக இருந்தோம். இது ஒரு மகத்தான விடயம். எவ்வாறாயினும் நாங்கள் இப்பொழுது என்னவாகி உள்ளோம் எனப் பாருங்கள்! நாங்கள் அதிகளவு வீழ்ந்து விட்டோம். எங்கள் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றியதே இந்த நாடகம். தந்தை இங்கே அமர்ந்திருந்து இந்தக் கதையை எங்களுக்குக் கூறுகின்றார். ஏனைய கதைகள் பொய்யானவை. இதுவே உண்மைக் கதையாகும். அந்த மக்கள் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகின்றார்கள், ஆனால் அவர்கள் எவ்வாறு மேலே ஏறினார்கள் என்றோ அல்லது எவ்வாறு கீழே இறங்கினார்கள் என்றோ புரிந்து கொள்வதில்லை. தந்தை இப்பொழுது நீங்கள் எவ்வாறு இராச்சியத்தை இழந்தீர்கள் என்ற சத்திய நாராயணனின் கதையை இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்றார். அனைத்தும் உங்களிலேயே தங்கியுள்ளது. நீங்கள் எவ்வாறு தந்தையிடம் இருந்து இராச்சியத்தைக் கோருகின்றீர்கள் என்று ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இங்கிருக்கும் பொழுது உங்களுக்கு இந்தப் போதை இருக்கின்றதா எனத் தந்தை வினவும் பொழுது, நீங்கள் ‘ஆம்’ எனக் கூறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் வெளியே சென்றதும் முற்றாகவே போதை இருப்பதில்லை. நீங்கள் கரங்களை உயர்த்திய பொழுதும் அத்தகைய போதையைக் கொண்டிராத வகையில் உங்கள் நடவடிக்கை உள்ளதைக் குழந்தைகளாகிய உங்களால் புரிந்துகொள்ள முடியும். இதை நீங்கள் உங்களுக்கு உள்ளேயே உணர முடியும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தேன். பின்னர் நீங்கள் அதை இழந்தீர்கள். நீங்கள் கீழே இறங்கினீர்கள். இந்த நாடகம் உங்கள் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றியதாகும். இன்று ஒருவர் அரசர் ஆகலாம், நாளை அவரது அரசுரிமை பறிக்கப்பட்டுவிடும். பத்திரிகைகளில் அவ்வாறான பல கதைகள் வருகின்றன. நீங்கள் அவர்களுக்குப் பதில் அளித்திருந்தால் மக்களால் சிலவற்றையாவது புரிந்துகொள்ள முடியும். இது ஒரு நாடகம் என நீங்கள் நினைத்தால் நிலையான சந்தோஷம் இருக்க முடியும். இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்னரும் சிவபாபா வந்தார் என்பது உங்கள் புத்தியில் இருக்கின்றது. அவர் வந்து எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார். பின்னர் போர் நடந்தது. தந்தை, சரியான இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். இதுவே அதிமேன்மையான சங்கமயுகம். கலியுகத்தின் பின்னர் இந்த அதிமேன்மையான யுகம் உள்ளது. கலியுகம் அதிமேன்மையான யுகம் என அழைக்கப்படுவதில்லை. சத்தியயுகமும் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. அசுர சமுதாயத்தைப் பற்றியும் தேவ சமுதாயத்தைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய உலகம் புதியது ஆக்கப்படுகின்ற பொழுது இடையே உள்ளதே இந்தச் சங்கமயுகம் ஆகும். புதியதில் இருந்து பழையது ஆகுவதற்கு முழுச் சக்கரமும் எடுக்கின்றது. இது இப்பொழுது சங்கமயுகம். சத்தியயுகத்தில் அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அவர்கள் இப்பொழுது இல்லை, ஆனால் ஏனைய பல மதங்கள் இப்பொழுது வந்துள்ளன. இது உங்கள் புத்தியில் இருக்கின்றது. பலர் 6 இலிருந்து 8 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் கற்று விட்டுப் பின்னர் வீழ்ந்து விடுகின்றார்கள்; அவர்கள் தோல்வி அடைகின்றார்கள். அவர்கள் தூய்மையாகிய பொழுதிலும், கற்காததால் சிக்கிக் கொள்கின்றார்கள். தூய்மை மாத்திரம் இருப்பதால் எந்தப் பயனுமில்லை. தங்கள் சந்நியாச தர்மத்தைத் (துறவற தர்மம்) துறந்துள்ள சந்நியாசிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் திருமணம் செய்து இல்லறத்தவர் ஆகுகின்றார்கள். ஆகையினால் தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பாடசாலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு இராச்சியத்தை இழந்தீர்கள் என்பதும் எத்தனை பிறவிகள் எடுத்தீர்கள் என்பதும் உங்கள் விழிப்புணர்வில் உள்ளது. தந்தை மீண்டும் ஒருமுறை கூறுகின்றார்: உலக அதிபதிகள் ஆகுங்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் பாபாவை எந்தளவு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவுக்குத் தூய்மை ஆகுவீர்கள். இல்லாவிடின், தங்கத்தில் கலந்துள்ள கலப்படம் வேறு எவ்வாறு அகற்றப்படும்? ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கின்றது. நீங்கள் 24 கரட் தங்கமாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் தொடர்ந்தும் இந்த நிலையை அடையும்வரை கீழே இறங்கினீர்கள். நீங்கள் என்னவாகி விட்டீர்கள்? நீங்கள் என்னவாகி உள்ளீர்கள் எனத் தந்தை கூறமாட்டார். ஆனால் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என மனிதர்களான நீங்கள் கூறுகின்றீர்கள். பாரதத்தின் புகழ்ச்சி இருக்கின்றது. பாரதத்தில் பிரவேசித்த ஒரேயொருவர் யார்? அவர் வந்தபொழுது கொடுத்த ஞானம் என்ன? எவருக்கும் இது தெரியாது. விடுதலை அளிப்பவர் எப்பொழுது வருகின்றார் என்பதையாவது குறைந்தபட்சம் ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும். பாரதமே பழைமையான நாடு எனக் கூறப்படுகின்றது. எனவே அவரது மறு அவதாரமும் நிச்சயமாகப் பாரதத்திலேயே இடம்பெற வேண்டும். இதன் அர்த்தம் அவரது பிறந்த தினமும் இங்கேயே கொண்டாடப்படுகின்றது என்பதாகும். தந்தை நிச்சயமாக இங்கேயே வருகின்றார். பாக்கிய இரதம் பற்றியும் கூறப்படுகின்றது. ஆகையினால் அவர் மனிதச் சரீரத்திலேயே பிரவேசித்திருக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு குதிரை ரதத்தைச் சித்தரித்துள்ளார்கள். அதிகளவு வேறுபாடுள்ளது. அவர்கள் இரதத்தில் ஸ்ரீகிருஷ்ணரைக் காட்டி உள்ளார்கள். எவருக்கும் என்னைப் பற்றித் தெரியாது. பாபா இந்த இரதத்தில் வந்தார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இவர் ‘பாக்கிய இரதம்’ என அழைக்கப்படுகின்றார். பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார்; இந்தப் படத்தில் இது மிகத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவனை திரிமூர்த்திகளின் மேலேயே காட்டியுள்ளார்கள். யார் சிவனின் அறிமுகத்தைக் கொடுத்தார்? பாபாவே இதை உருவாக்கச் செய்தார். பிரம்மாவின் இரதத்தினுள் பாபா பிரவேசிக்கின்றார் என இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு பிரம்மாவாக ஆகுகின்றார். எவ்வாறு விஷ்ணு 84 பிறவிகளின் பின்னர் பிரம்மா ஆகுகின்றார் என்றும் பின்னர் எவ்வாறு பிரம்மா ஒரு விநாடியில் விஷ்ணு ஆகுகின்றார் எனவும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் புத்தியினால் கிரகிக்கப்பட வேண்டிய அற்புதமான விடயம். முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. ஆகையினால் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் நிச்சயமாகச் சுவர்க்கத்தை உருவாக்கி இருக்க வேண்டும். இந்தப் படம் முதல் தரமானது. இதை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். தந்தைக்கும் இந்த ஆர்வம் உள்ளது. நிலையங்களிலும் நீங்கள் இதே போன்று விளங்கப்படுத்த வேண்டும். இங்கே தந்தை இப்பொழுது நேரடியாக உங்கள் முன்னிலையில் இருக்கின்றார். தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய உங்களால் கொடுக்கப்படுகின்ற விளக்கத்திற்கும் தந்தையினால் கொடுக்கப்படுகின்ற விளக்கத்திற்கும் இடையில் நிச்சயமாக வேறுபாடு உள்ளது. ஆகவே நீங்கள் பாபாவிடம் நேரடியாகச் செவிமடுப்பதற்காகவே இங்கே வருகின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: குழந்தாய், குழந்தாய். தந்தையிடம் இருந்து கிடைக்கின்ற விளைவைப் போன்று சகோதரர்களிடம் இருந்து கிடைப்பதில்லை. இங்கே, நீங்கள் தந்தையின் முன்னால் நேரடியாகவே அமர்ந்திருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவைச் சந்திக்கின்றீர்கள். எனவே இது மேலா (சந்திப்பு) என அழைக்கப்படுகின்றது. தந்தை நேரடியாக விளங்கப்படுத்தும் பொழுது, போதை மிகவும் அதிகளவு உயர்கின்றது. நீங்கள் சிந்திக்கின்றீர்கள்: எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துவதால், நான் ஏன் அவர் சொல்வதைச் செவிமடுக்கக்கூடாது? தந்தை கூறுகின்றார்: நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினேன். பின்னர் 84 பிறவிகள் எடுக்கையில் நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினீர்கள். எனவே நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையாக மாட்டீர்களா? பாபா இதை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகின்றார். உங்களில் சிலர் புரிந்துகொண்டு கூறுகின்றீர்கள்: பாபா உண்மையையே கூறுகின்றார். சிலர் உடனடியாகவே கூறுகின்றனர்: பாபா, நான் ஏன் தூய்மையாகக் கூடாது? தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் நிஜத்தங்கம் ஆகுவீர்கள். நான் அனைவரையும் தூய்மையாக்கும் தந்தை ஆவேன். ஆகவே தந்தையினால் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கும் ஆத்மாக்களினால் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. உதாரணமாக ஒரு புதிய நபர் வரும்பொழுது, அவர் ஒரு மலராக இருந்து, இதற்கு உரியவர் ஆகினால் அவருக்குத் தொடுகை ஏற்பட்டு, ‘இது சரியானது’ எனக் கூறுவார். அவர் இதற்கு உரியவர் ஆகாமல் இருந்தால் அவர் எதையுமே புரிந்து கொள்வதில்லை. ஆகவே மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள்: ஆத்மாக்களாகிய எங்களைத் தூய்மை ஆகுமாறு தந்தை கூறுகின்றார். மக்கள் தூய்மை ஆகுவதற்காக கங்கையில் நீராடுவதற்காகச் செல்கின்றார்கள். அவர்கள் ஒரு குருவையும் ஏற்றுக் கொள்கின்றார்கள். எவ்வாறாயினும் தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் மிகவும் தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள்! இதனாலேயே ஆத்மாக்களாகிய நீங்கள் என்னை நினைவுசெய்து, வந்து தூய்மை ஆக்குமாறு என்னை அழைத்தீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றேன். இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுமாறு குழந்தைகளாகிய உங்களுக்கு நான் கூறுகின்றேன். இந்த இராவண இராச்சியம் அழியப் போகின்றது. தூய்மை ஆகுவதே பிரதான விடயமாகும். சுவர்க்கத்தில் நஞ்சு இருப்பதில்லை. வருகின்ற எவருக்கும் தந்தை கூறுவதாக விளங்கப்படுத்துங்கள்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்; உங்களுக்குள் இருக்கும் கலப்படம் அகற்றப்படும். “மன்மனாபவ” என்ற வார்த்தையை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள், இல்லையா? தந்தை அசரீரியானவர், ஆத்மாக்களாகிய நாங்களும் அசரீரியானவர்களே, எவ்வாறு நாங்கள் எங்கள் சரீரங்களின் மூலம் செவிமடுக்கின்றோமோ, அவ்வாறே தந்தையும் ஒரு சரீரத்தினுள் பிரவேசிப்பதால், எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். வேறு எவ்வாறு அவர் கூறமுடியும்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சரீர உறவினர்கள் அனைவரையும் துறவுங்கள்;? அவர் நிச்சயமாக இங்கே வந்து பிரம்மாவில் பிரவேசிக்கின்றார். இப்பொழுது பிரஜாபிதா பிரம்மா நடைமுறை ரூபத்தில் இருக்கின்றார், தந்தை அவர் மூலமாகப் பேசுகின்றார். நாங்கள் எல்லையற்ற தந்தை கூறுவதை மாத்திரம் செவிமடுக்கின்றோம். அவர் கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள். தூய்மை அற்றவர் ஆகுவதைத் துறவுங்கள். அந்தப் பழைய சரீரங்களின் அகங்காரத்தைத் துறவுங்கள். என்னை நினைவுசெய்யுங்கள், உங்களின் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும், நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவீர்கள். மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதும், தீய விடயங்களைப் பற்றிப் பேசுவதும் செவிமடுப்பதுமே தந்தையிடம் இருந்து நீங்கள் பிரிந்ததற்கான பிரதான குறைபாடாகும். தந்தையின் வழிகாட்டல்: தீய விடயங்களைச் செவிமடுக்காதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவரின் கதையை மற்றவருக்கும் பின்னர் அவரின் கதையை முதலாமவருக்கும் கூறுகின்ற வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது. அரட்டை அடிப்பதைத் துறவுங்கள். தற்பொழுது உலகில் உள்ள அனைவரும் தந்தை மீது அன்பில்லாத புத்தியையே கொண்டிருக்கின்றார்கள். இராமரைப் பற்றிய விடயங்களைத் தவிர, வேறு எதைப் பேசினாலும் அது வம்பு பேசுவதாகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: வம்பு பேசுவதை விட்டுவிடுங்கள். ஆத்மாக்கள் அனைவருக்கும் கூறுங்கள்: ஓ சீதைகளே, இப்பொழுது உங்கள் யோகத்தை ஒரேயொரு இராமருடன் தொடர்புபடுத்துங்கள். நீங்கள் தூதுவர்கள். தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். அதில் அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! அவ்வளவுதான். இந்த ஒரு விடயத்தைத் தவிர ஏனைய அனைத்தும் வம்பளத்தலே. தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கூறுகின்றார்: வம்பு பேசுவதைத் துறவுங்கள்! சீதைகள் அனைவரினதும் புத்தியின் யோகத்தை ஓர் இராமருடன் இணையுங்கள். இதுவே உங்கள் ஒரேயொரு வியாபாரம். இந்தச் செய்தியைத் தொடர்ந்தும் கொடுங்கள்: தந்தை வந்துள்ளார், நாங்கள் இப்பொழுது சத்திய யுகத்திற்குச் செல்ல வேண்டும் என அவர் கூறுகின்றார். நாங்கள் இப்பொழுது இந்தக் கலியுகத்தை விட்டுச் செல்ல வேண்டும். நீங்கள் வனவாசத்தில் உள்ளீர்கள். நீங்கள் காட்டில் இருக்கின்றீர்கள். கானகமும் காடு என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு குமாரி திருமணம் செய்ய இருக்கும் பொழுது, அவள் தனிமை ஆக்கப்பட்டு, பின்னர் மாளிகைக்குச் செல்வாள். நீங்களும் காட்டிலேயே இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் புகுந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை இங்கேயே விட்டுச் செல்ல வேண்டும். ஒரேயொரு தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள். விநாச காலத்தில் அன்பான புத்தியைக் கொண்டிருப்பவர்கள் மாளிகைக்குச் செல்வார்கள், அன்பில்லாத புத்தியைக் கொண்டவர்கள் காட்டிற்குச் செல்வார்கள். அவர்களுடைய வசிப்பிடம் காடாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் பல்வேறு முறைகளில் விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுத்த தந்தையை மறந்து, நீங்கள் காட்டுக்குச் சென்றீர்கள். அங்கே காட்டுவாசிகளும் பூந்தோட்டவாசிகளும் இருக்கின்றார்கள். தந்தை தோட்டத்தின் அதிபதி எனவும் அழைக்கப்படுகின்றார். இந்தளவாவது ஒருவரின் புத்தியில் பதிய வேண்டும்! எங்களுடைய இராச்சியம் பாரதத்தில் இருந்தது, ஆனால் அது இப்பொழுது இல்லை. தற்பொழுது எமது வசிப்பிடம் இந்தக் காடாகும். நாங்கள் பூந்தோட்டத்திற்குச் செல்ல இருக்கின்றோம். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: “என் மீது அன்பு கொண்டிருங்கள்”. ஆனால் நீங்கள் என்னை மறந்து விடுகின்றீர்கள். தந்தை முறைப்பாடு செய்கின்றார்: எவ்வளவு காலத்திற்கு நீங்கள் தொடர்ந்தும் என்னை மறக்கப் போகின்றீர்கள்? நீங்கள் எவ்வாறு சத்திய யுகத்திற்குச் செல்லப் போகின்றீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்க வேண்டும்: எவ்வளவு நேரம் நான் பாபாவை நினைவுசெய்தேன்? எங்கள் பாவங்கள் அழிக்கப்படும் வகையில், நாங்கள் யோக அக்கினியில் அமர்ந்திருப்பதைப் போன்று உள்ளது. உங்கள் புத்தி ஒரேயொரு தந்தையின் மீது மாத்திரம் அன்பு கொண்டிருக்க வேண்டும். அவர் உங்கள் முதற்தரமான அன்பிற்கினியவர், அவர் உங்களையும் முதற் தரமானவர் ஆக்குகின்றார். மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஆடுகள் போன்று பயணம் செய்வதற்கும் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணஞ் செய்வதற்கும் இடையில் அத்தகைய வித்தியாசம் இருக்கின்றது. இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றி ஞானக்கடலைக் கடையுங்கள். நீங்கள் களிப்படைவீர்கள். இந்த பாபாவும் கூறுகின்றார்: நானும் பாபாவை நினைவு செய்வதற்குப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. இந்த எண்ணங்களே தொடர்ந்தும் நாள் முழுவதும் வரவேண்டும். இந்த முயற்சியையே குழந்தைகளாகிய நீங்களும் செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இராமரின் (கடவுள்) விடயங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களை, எவருடனும் பேசாதீர்கள். வம்பு பேசுவதையும் ஒருவருடைய கதையை மற்றவருக்கு கூறுவதையும், மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதையும் துறவுங்கள்.

2. ஒரேயொரு தந்தையின் மீது மாத்திரம் அன்பு வைத்திருங்கள். பழைய சரீரத்தின் அகங்காரத்தைத் துறந்து, தந்தையின் நினைவில் இருப்பதால், உங்களைத் தூய்மை ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உலகை மாற்றுபவராகி, தவறான எதையும் சரியாக்குவதற்கு உங்களின் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பயன்படுத்துவீர்களாக.

நீங்கள் மற்றவர்களின் தவறுகளைப் பார்க்கும்போது நீங்களும் எந்தத் தவறுகளையும் செய்யாதீர்கள். யாராவது தவறு செய்திருந்தாலும், நீங்கள் சரியாக இருக்க வேண்டும். அவர்களின் தவறான செயலின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். ஆதிக்கத்திற்கு உட்படுபவர்கள், கவனயீனம் அடைகிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சதா சரியான பாதையில் நடப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். யாராவது ஏதாவது தவறு செய்தாலும் அந்த வேளையில் உங்களின் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பயன்படுத்துங்கள். மற்றவர்களின் தவறுகளைக் குறித்துக் கொள்வதைத் தவிர்த்து, அவர்களுக்கு ஒத்துழைப்பின் குறிப்பைக் கொடுங்கள். அதாவது, உங்களின் ஒத்துழைப்பால் அவர்களை நிரப்புங்கள். அப்போது உலக மாற்றம் என்ற பணி இலகுவாகப் பூர்த்தியாகும்.

சுலோகம்:
சதா யோகி ஆகுவதற்கு, ‘நான்’ அல்லது ‘எனது’ என்ற எல்லைக்கு உட்பட்டதை, எல்லையற்றதாக மாற்றுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கிரகியுங்கள்.

தற்போதைய நேரத்திற்கேற்ப, நீங்கள் உங்களின் தேவதை ஸ்திதிக்கும் தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற ஸ்திதிக்கும் நெருங்கி வருகிறீர்கள். அதற்கேற்ப, தூய்மையின் வரைவிலக்கணம் அதிகபட்சம் சூட்சுமம் ஆகுகின்றது. பிரம்மச்சாரியம் கடைப்பிடிப்பது மட்டும் தூய்மை அல்ல. பிரம்மச்சாரியத்துடன் கூடவே, பிரம்மாச்சாரி (பிரம்மாவைப் பின்பற்றுபவர்கள்) ஆகி, ஒவ்வொரு செயல்களின் வடிவத்தில் உங்களின் ஒவ்வோர் அடியையும் தந்தை பிரம்மாவின் பாதச்சுவடுகளின் மீது வையுங்கள்.