12.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சேவை செய்வதற்கு அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் இந்த ஞானமும், யோகமும் இருப்பதால், அதனைப் பிறருக்குக் கற்பியுங்கள். சேவை செய்வதை அதிகரியுங்கள்.

கேள்வி:
சேவை செய்வதற்கான உற்சாகம் இல்லாமைக்கான காரணம் என்ன? எந்த ஒரு தடையினால், உற்சாகம் இல்லாதுள்ளது?

பதில்:
குற்றப் பார்வையே மிகப்பெரிய தடையாகும். உற்சாகத்துடன் சேவை செய்வதற்கு இந்த நோய் உங்களை அனுமதிப்பதில்லை. இது மிகவும் கடுமையான நோய் ஆகும். குற்றப் பார்வை குளிர்மை அடையாது விட்டால், குடும்ப வாழ்வின் இரு சக்கரங்களும் நன்றாக இணைந்து செல்லாததால், இல்லறம் ஒரு சுமையாகி விடுகின்றது. அதனால், இலேசாக இருந்து சேவையில் உற்சாகத்தைக் கொண்டிருப்பது சாத்தியம் அற்றதாகி விடும்.

பாடல்:
விழித்தெழுங்கள்! ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய யுகம் விடியவுள்ளது.

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அனைவரும் வைத்திருக்க வேண்டிய, இதைப் போன்ற அத்தகைய சில நல்ல பாடல்களே உள்ளன. இவை ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட வேண்டும். இப்பாடல்கள் நாடகத்திற்கு ஏற்ப, அவ்வாறு செய்வதற்கு ஒரு தொடுகையினால் தொடப்பட்ட மக்களால் இயற்றப்பட்டன. அதனாலேயே குழந்தைகளாகிய உங்களுக்கு இவை பயன்படுகின்றன. அத்தகைய பாடல்களைக் குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுக்கும் பொழுது, உங்கள் போதையும் உயர்கின்றது. நீங்கள் இப்பொழுது ஒரு புதிய இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை அறிந்திருப்பதால், குழந்தைகளாகிய உங்களுடைய போதை உயர்வாக இருக்க வேண்டும். அதனை நீங்கள் இராவணனிடம் இருந்து திரும்பப் பெறுகின்றீர்கள். மக்கள் யுத்தத்திற்குச் செல்லும் பொழுது இன்னொருவருடைய இராச்சியத்தைக் கைப்பற்றவே தாம் செல்கின்றனர் என்ற சிந்தனையையே கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் வேறொருவரின் கிராமத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் எல்லைக்கு உட்பட்ட விடயங்களுக்காகச் சண்டை இடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாயையுடனேயே சண்டை இடுகின்றீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர, வேறு எவருக்கும் இது பற்றித் தெரியாது. நீங்கள் இவ்வுலகம் முழுவதும் உங்கள் இராச்சியத்தை மறைமுகமான முறையில் ஸ்தாபிக்க வேண்டும். அதாவது, நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பதை அறிவீர்கள். உண்மையில், இதனைச் சண்டை என நீங்கள் அழைப்பதில்லை. நாடகத்திற்கேற்ப, நீங்கள் சதோபிரதானில் இருந்து தமோபிரதானாக வேண்டியிருந்தது. நீங்கள் மீண்டும் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றியே நீங்கள் அறிந்திருக்கவில்லை. தந்தையே இதனை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். வேறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஞானத்தைப் பெற மாட்டார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே விளங்கப்படுத்துகின்றார். ‘தர்மமே சக்தி’ எனக் கூறப்பட்டுள்ளது. பாரத மக்களுக்குத் தமது தர்மம் எது என்பது தெரியாது. ஆதிசனாதன தேவி தேவதா தர்மமே உங்கள் தர்மம் என்பதை நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை வந்து மீண்டும் உங்களை அந்தத் தர்மத்திற்கு மாற்றுகின்றார். உங்கள் தர்மம் எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எவருடனும் சண்டையிட வேண்டியதில்லை. நீங்கள் உங்களைச் சுயத்தின் ஆதிதர்மத்தில் ஸ்திரப்படுத்திக் கொண்டு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதற்கும் காலம் எடுக்கின்றது. இதனைப் பற்றிப் பேசுவதன் மூலமே இதில் நீங்கள் ஸ்திரப்பட முடியும் என்றில்லை. உள்ளார இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்: ஆத்மாவாகிய, நான் அமைதியின் சொரூபம். ஆத்மாவான நான், இப்பொழுது தமோபிரதானாகவும், தூய்மை அற்றவராகவும் ஆகியுள்ளேன். ஆத்மாவாகிய நான், அமைதி தாமத்தில் இருந்தபொழுது, தூய்மையாக இருந்தேன். பின்னர் எனது பாகத்தை நடிக்கும் பொழுது, நான் தமோபிரதான் ஆகினேன். நான் இப்பொழுது தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுவதற்கு, நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்ற போதையைக் கொண்டிருப்பீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது மிகவும் இலகுவானது! நினைவு செய்வதன் மூலமே நீங்கள் தூய்மையாகி, அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். உலகத்தினருக்கு அந்த அமைதி தாமத்தைப் பற்றியோ சந்தோஷ தாமத்தைப் பற்றியோ தெரியாது. சமயநூல்களில் இவ்விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஞானக்கடலின் ஒரேயொரு கீதையே உள்ளது. அதில் அவர்கள் பெயரை மாற்றியுள்ளனர் என்பதே ஒரே விடயமாகும். ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், ஞானக்கடலும் என அழைக்கப்படுகின்றார். வேறு எவரும் ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுவதில்லை. அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் பொழுதே, நீங்கள் ஞானம் நிறைந்தவராக ஆகமுடியும். அனைவரும் இப்பொழுது பக்தி நிறைந்தவர்களாக உள்ளார்கள். நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள்; சிலரிடம் இந்த ஞானம் உள்ளது. சிலரிடம் இல்லை. எனவே, என்ன கூறப்பட முடியும்? அதற்கேற்ப, உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. தந்தை சேவை செய்வதற்காக அதிகளவு உற்சாகம் கொண்டிருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாநாடு போன்றவற்றை நடாத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பொழுதிலும், பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கான சக்தியையோ அல்லது அதற்கான யுக்திகளையோ இன்னமும் உருவாக்கவில்லை. சகோதரர்களிடம் சிறிதளவு சக்தி இருப்பதால், சேவையை விரிவடையச் செய்வதற்காக சில வழிகளை உருவாக்குவதற்கு ஓர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யலாம் எனச் சிந்திக்கின்றார்கள். அவர்கள் இதற்காகச் செயற்படுகின்றார்கள். இது சக்திசேனை என அழைக்கப்பட்ட பொழுதிலும், சில சக்திகள் கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர். கல்வி அறிவற்ற சிலர், கல்வியறிவு உள்ளவர்களுக்கு மிக நன்றாகக் கற்பிக்கின்றார்கள். குற்றப் பார்வை பெரும் தீங்கை விளைவிக்கின்றது என்று பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். இது ஒரு மிகவும் கடுமையான நோய்; இதனாலேயே அந்தளவிற்கு உற்சாகம் இருப்பதில்லை. ஆகவே இல்லறப் பாதையில் இரு சக்கரங்களும் இணைந்து நன்றாக ஓடுகின்றனவா என பாபா வினவுகின்றார். அந்தப் பக்கத்தில் மிகப் பெரிய சேனைகள் உள்ளன. மிகவும் நல்ல கல்வியறிவு உள்ள பெண் குழுக்கள் உள்ளார்கள்; அவர்களுக்கு உதவி கிடைக்கின்றது. நீங்கள் மறைமுகமானவர்கள். பிரம்மாகுமாரர்கள், குமாரிகளான நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பது எவருக்கும் தெரியாது. நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். இல்லறப் பாதையின் சுமைகளினால் உங்கள் முதுகுகள் வளைந்து விட்டன. சிலர் தம்மை பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் எனக் கூறிய பொழுதிலும், அவர்களின் குற்றப் பார்வை குளிர்மை அடைவதில்லை. இரு சக்கரங்களும் ஒரே வேகத்தில் ஓடுவது மிகவும் சிரமமாகும். நீங்கள் சேவையைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதற்காக, பாபா குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். சிலர் செல்வந்தராக இருந்த பொழுதிலும், அவர்களிடம் உற்சாகம் இருப்பதில்லை; அவர்கள் செல்வத்தின் மீது பேராசை கொண்டுள்ளார்கள். தமக்கெனச் சொந்தக் குழந்தைகள் இல்லாவிட்டால், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகின்றார்கள். அவர்கள் அந்தளவு உற்சாகத்துடன் கூறுவதில்லை: பாபா, நான் இங்கிருக்கின்றேன், நான் ஒரு பெரிய வீட்டை வாங்கி, சேவைக்காகக் கொடுப்பேன். பாபாவின் பார்வை விசேடமாக டெல்கி மீதே உள்ளது. ஏனெனில் டெல்கியே தலைமைக் காரியாலயமான, தலைநகராகும். பாபா கூறுகின்றார்: சேவை குறிப்பாக டெல்கியிலே பரவ வேண்டும். நீங்கள் கடும் முயற்சி செய்து, எவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். பாண்டவர்களுக்கு 3 சதுர அடி நிலமேனும் கௌரவர்களினால் கொடுக்கப்படவில்லை என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. “கௌரவர்கள்” என்ற வார்த்தை கீதையிலிருந்தே எடுக்கப்பட்டது. கடவுள் வந்து இராஜயோகத்தைக் கற்பித்தார். அதுவே கீதை எனப் பெயரிடப்பட்டது. எனினும், அவர்கள் கீதையின் கடவுளை மறந்து விட்டார்கள். இதனாலேயே பாபா மீண்டும், மீண்டும் உங்களிடம் கூறுகின்றார்: இந்த ஒரு முக்கிய கருத்தை விளங்கப்படுத்துங்கள். முன்னர் பாபா கூறுவதுண்டு: பெனாரஸில் உள்ள ‘விதூத்’ சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் வழிமுறைகளைக் காட்டுகின்றார். ஆகவே அவர்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தந்தை தொடர்ந்தும், மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். முதல் இலக்கமான (தலைநகரம்) டெல்கிக்குச் சேவை செய்வதற்கான வழிகளை உருவாக்குங்கள். ஒன்றுகூடல் ஒன்றைக் கூட்டி இந்த விடயங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். டெல்கியில் எவ்வாறு மிகப்பெரிய மேலாவை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே முதன்மையான விடயம். டெல்கியில் அம்மக்கள் பல உண்ணாவிரதங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் அவ்வாறான விடயங்களைச் செய்வதில்லை. நீங்கள் சண்டை சச்சரவுகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டியதில்லை. நீங்கள் உறக்கத்தில் இருப்பவர்களை விழித்தெழச் செய்கிறீர்கள். டெல்கியில் உள்ளவர்களே இந்தப் பணியைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். முன்னைய கல்பத்தில் இடம்பெற்றதைப் போன்று, நீங்கள் ஒளித் தத்துவமான, பரந்தாமத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாக உலக அதிபதிகள் ஆகவேண்டும் என்பது நிச்சயமாக உறுதியாகும். இப்பொழுது உங்களுக்குத் தலைநகரத்தில் மூன்று சதுரடி நிலம் தேவை, அப்பொழுது உங்களால் இந்த ஞானக் குண்டுகளைப் போட முடியும். இந்தப் போதை இருக்க வேண்டும். பிரபல்யமான மக்களிடம் இருந்தான ஓசை தேவைப்படுகின்றது. இந்நேரத்தில் முழுப் பாரதமும் ஏழ்மையாகி விட்டது. ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காகவே தந்தை வருகின்றார். டெல்கியில் மிக நல்ல சேவை இடம்பெற வேண்டும். பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் சமிக்ஞைகள் கொடுக்கின்றார். டெல்லியில் உள்ளவர்கள், பாபா தமது கவனத்தை இதில் திருப்புகின்றார் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் பாலும் சீனியும் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், பாண்டவர்களாகிய உங்களின் கோட்டையேனும் இருக்க வேண்டும். அது டெல்கியிலேயே கட்டப்பட வேண்டும். இதற்கு மிகச்சிறந்த தலைவர் ஒருவர் தேவை. நீங்கள் பெருமளவு செய்யலாம். ‘பாரதமே எங்கள் பூமி, நாங்கள் இதனைச் செய்வோம்’ என அம்மக்கள் மிகப் பெருமையுடன் பாடுகின்றார்கள். எனினும் அவர்களிடம் அதற்கான சக்தி எதுவுமில்லை. வெளிநாட்டு உதவியின்றி அவர்களை ஈடேற்ற முடியாது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து அதிகளவு உதவியைப் பெறுகின்றீர்கள். வேறு எவராலும் அவ்வளவு உதவியைச் செய்ய முடியாது. இப்பொழுது மிக விரைவில் ஒரு கோட்டையை உருவாக்குங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். ஆகவே உங்களுக்குப் பெரும் உற்சாகம் இருக்க வேண்டும். பலரின் புத்திகள் அரட்டையடிப்பது போன்றவற்றில் சிக்கியுள்ளது. பெண்களுக்குத் தங்கள் பந்தனத்தினால் பெரும் கஷ்டம் ஏற்படுகின்றது. ஆண்களுக்கு எந்தப் பந்தனங்களும் இல்லை. பெண்கள் அப்பாவிகளும், பலவீனமானவர்களும் எனக் கூறப்படுகின்றது. எனினும் ஆண்கள் பலசாலிகள். ஓர் ஆண் திருமணம் செய்யும் பொழுது, அவரே குருவும் கடவுளும், அனைத்தும் என்று கூறப்படுவதால், அவருக்குக் கூடுதலான அதிகாரம் கொடுக்கப்படுகின்றது. பெண் ஒருவர் ஒரு வால் போன்றவராகவே உள்ளார். ஒரு பெண் எப்பொழுதும் தன் கணவரின் பின்னாலேயே சென்று கொண்டிருப்பதால், உண்மையில் கணவரின் பின்னாலுள்ள வால் போல் ஆகுவார். அந்தப் பெண் தனது கணவன், குழந்தைகள் போன்றோர் மீது பற்று வைத்திருப்பாள். ஆனால் ஆண்கள் அந்தளவிற்குப் பற்று வைப்பதில்லை. அவர்கள் ஒரு பாதணியை (மனைவியை) இழந்தால், இரண்டாவது, மூன்றாவது எனத் தேடிக் கொள்வார்கள். அப்பழக்கத்தை அவர்கள் தங்களில் பதித்துக் கொண்டுள்ளார்கள். பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: இதனையும், அதனையும் செய்திப் பத்திரிகைகளில் அச்சடியுங்கள். குழந்தைகளாகிய நீங்களே தந்தையை வெளிப்படுத்த வேண்டும். இதனை விளங்கப்படுத்துவது உங்கள் கடமையாகும். தாதா பாபாவுடன் இருப்பதால், இவரால் எங்கும் செல்ல முடியாது. மக்கள் கூறுவார்கள்: சிவபாபா, எனக்கு இன்ன, இன்ன கஷ்டம் உள்ளது. இதனையிட்டு உங்களால் எனக்கு ஆலோசனை கூறமுடியுமா? அத்தகைய வினாக்களை அவர்கள் கேட்கின்றார்கள். தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்கவே தந்தை வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் முழுமையாக இந்த ஞானத்தையும் பெறுகின்றீர்கள். இவ்விடயங்களை உங்கள் மத்தியில் கலந்துரையாட முயற்சி செய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது துரிதசேவை செய்வதற்கான அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட வேண்டும். சேவை தவழும் வேகத்திலே தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. இப்பொழுது பலரும் நன்மை அடையக் கூடிய வகையில் அத்தகைய அற்புதங்கள் நிகழ்த்துங்கள். முன்னைய சக்கரத்திலும் பாபா இதனை விளங்கப்படுத்தி உள்ளார். அவர் இப்பொழுதும் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பலரின் புத்திகள் ஏதோ ஒன்றில் சிக்கியுள்ளன, அவர்களுக்கு உற்சாகம் இருப்பதில்லை. அவர்கள் மிக விரைவிலேயே சரீர உணர்வு உடையவர் ஆகுகின்றார்கள். சரீர உணர்வே அனைத்தையும் (உண்மை) அழித்துள்ளது. உண்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்காக மிகவும் இலகுவான, அத்தகைய விடயங்களைத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். இல்லாவிடில், நீங்கள் சக்தியைப் பெறமாட்டீர்கள். சிலர் நிலையங்களைப் பராமரித்தாலும், சரீர உணர்வு உடையவராக இருப்பதால், அவர்களிடம் எந்தப் போதையும் இல்லை. அவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகினால், தாங்கள் யாருடைய குழந்தை என்பதை அறிந்து கொள்வதனால் போதை உடையவர்கள் ஆகுவார்கள். தந்தை கூறுகின்றார்: எந்தளவிற்கு ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகச் சக்தியை நீங்கள் பெறுவீர்கள். அரைக்கல்பமாகச் சரீர உணர்வின் போதையில் இருந்ததால், ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி எடுக்கின்றது. பாபா ஞானக்கடல் என்பதாலும், நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளதாலும், உங்களால் ஏனைய பலருக்கும் விளங்கப்படுத்த முடியும் என நீங்கள் உணர்கிறீர்கள் என்றில்லை. நினைவின் சக்தியும் இருக்க வேண்டும். இந்த ஞான வாளும், நினைவு யாத்திரையும் உள்ளன, இந்த இரு விடயங்களும் வெவ்வேறானவை. இந்த ஞான மார்க்கத்தில், நினைவு யாத்திரையின் சக்தி அவசியம். அது இல்லாமல் இருந்தால், வாள் ஒரு மூங்கில் மரவாள் ஆகிவிடும். சீக்கியர்கள் வாட்களுக்கு அதிக மரியாதை கொடுக்கின்றார்கள். அதுவே அவர்கள் சண்டையிடப் பயன்படுத்துகின்ற, ஆயுதமாக இருந்தது. உண்மையில், குருமார்கள் என்றுமே சண்டையிடக் கூடாது. ஒரு குரு அகிம்சையைக் கடைப்பிடிப்பவர். சண்டை போடுவதன் மூலம் சற்கதியை அடைய முடியாது. உங்களுடையது யோக விடயம். நினைவின் சக்தி இல்லாதுவிடின், இந்த ஞான வாளால் வேலை செய்ய முடியாது. குற்றப் பார்வையே பெருமளவு பாதிப்பை விளைவிக்கின்றது. ஆத்மாக்கள் செவிகளுடாகக் கேட்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நினைவினால் போதை கொண்டிருங்கள். அப்போது சேவை தொடர்ந்தும் அதிகரிக்கும். தமது உறவுக்காரர்கள் தாம் கூறுவதைக் கேட்பதில்லை எனச் சிலவேளைகளில் குழந்தைகள் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: அதற்குக் காரணம் நீங்கள் நினைவு யாத்திரையில் பலவீனமாக இருப்பதால், இந்த ஞானவாள் வேலை செய்வதில்லை. நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த முயற்சி மறைமுகமானது. பிறருக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பது மிகவும் வெளிப்படையானது. நீங்கள் நினைவின் மூலம் சக்தியைப் பெறுகின்றீர்கள், நினைவிற்கான முயற்சி மறைமுகமானது. இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் சக்தியைப் பெற முடியாது. நினைவுச் சக்தியினாலேயே நீங்கள் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மை ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒரு வருமானத்தை ஈட்டுவதற்கு, முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்கள் நினைவு நிலையாகவும், உங்கள் ஸ்திதி மிகவும் நன்றாகவும் இருந்தால் நீங்கள் பெருஞ் சந்தோஷத்துடன் இருக்கின்றீர்கள். மிகச்சரியான நினைவை நீங்கள் கொண்டிருக்காமல், ஏதோ ஒன்றையிட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருந்தால், உங்கள் சந்தோஷம் மறைந்து விடுகின்றது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை நினைக்க மாட்டார்களா? இங்கு, வீட்டில் இருந்து, அனைத்தையும் மேற்கொள்ளும் வேளையில், நீங்கள் ஆசிரியரை நினைவுசெய்ய வேண்டும். இந்த ஆசிரியர் மூலம் நீங்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும். ஆசிரியரை நினைவு செய்வதனால், நிச்சயமாக நீங்கள் தந்தையையும், குருவையும் நினைவு செய்வீர்கள். அவர் தொடர்ந்தும் உங்களுக்கு பல்வேறு வழிகளில் விளங்கப்படுத்துகின்றார். எனினும், நீங்கள் வீட்டில் உங்கள் செல்வம், செழிப்பு, உங்கள் குழந்தைகள் போன்றவற்றைப் பார்க்கும் பொழுது, அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் ஆன்மீக சேவை செய்ய வேண்டுமென பாபா உங்களிடம் பல தடவைகள் கூறுகின்றார். தந்தையின் நினைவே அனைத்திலும் அதியுயர்ந்த சேவையாகும். உங்கள் புத்தியிலும், உங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். இந்த ஞானக் கருத்துக்களைப் பிறருக்கும் கூறுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். அதர்மமான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். அவர்கள் முதல் விடயமான அல்ஃபாவைப் புரிந்து கொள்ளாது விட்டால், வேறு எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் முதலில் அல்ஃபாவை அவர்களிடத்தில் உறுதி ஆக்குங்கள். அதுவரையில், ஏனைய பாடங்கள் எதற்கும் செல்ல வேண்டாம். சிவபாபா உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். இந்த அசுத்தமான உலகில் மாயையின் பெரும் பகட்டு உள்ளது. நாகரிகம் போன்றவை அதிகளவில் உள்ளன. இந்த அசுத்த உலகின் மீது விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதன் மூலம், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அனைத்தையும் மிக நன்றாகக் கிரகியுங்கள். எதிரியான மாயை பலரின் விவேகத்தையும் முற்றாகவே அழித்து விடுகின்றாள். ஓர் இராணுவத்தளபதி தவறு செய்தால், அவர் வேலை நீக்கம் செய்யப்படுகின்றார். அத் தளபதி தன்னையிட்டு வெட்கப்பட்டு, தானாகவே இராஜினாமா செய்கின்றார். இங்கும் அவ்வாறே உள்ளது. சிலவேளைகளில் மிக நல்ல தளபதிகளும் தோல்வி அடைகின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நினைவு செய்வதற்கு மறைமுகமான முயற்சியைச் செய்யுங்கள். நினைவின் போதையைப் பேணுவதனால் சேவை செய்வது இயல்பாகவே தொடர்ந்து அதிகரிக்கும். உங்கள் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

2. இந்த ஞானத்தைப் பற்றிய விடயங்களை மாத்திரமே பேசுங்கள். எவருக்கும் என்றுமே துன்பம் விளைவிக்காதீர்கள். அதர்மமான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் பரஸ்நாத் (தெய்வீகப் பிரபு) ஆகி, இரும்பைப் போன்ற ஆத்மாக்களை தெய்வீகமானவர்களாக மாற்றுவீர்களாக.

நீங்கள் எல்லோரும் பரஸ்நாத் தந்தையின் மாஸ்ரர் பரஸ்நாத் குழந்தைகள் ஆவீர்கள். ஆகவே, ஓர் ஆத்மா எவ்வளவுதான் இரும்பைப் போல் இருந்தாலும் உங்களின் சகவாசத்தில் இரும்புகளும் தெய்வீகமாக மாறும். இவர் இரும்பைப் போல் இருக்கிறார் என ஒருபோதும் நினைக்காதீர்கள். தத்துவஞானியின் கல்லின் சிறப்பியல்பு, இரும்பைத் தங்கமாக மாற்றுவதாகும். நீங்கள் ஒவ்வோர் எண்ணத்தை உருவாக்கும் போதும் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் இந்த இலட்சியத்தையும் அதற்கான தகைமைகளையும் சதா உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அப்போது மட்டுமே நீங்கள் ஆத்மாக்களான உங்களிடம் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிப்படுவதை அனுபவம் செய்ய முடியும். இந்தக் கதிர்கள் ஆத்மாக்கள் எல்லோருக்கும் பொன்னாக மாறுவதற்கான சக்தியைக் கொடுக்கும்.

சுலோகம்:
ஒவ்வொரு செயலையும் தைரியமாகச் செய்யுங்கள். நீங்கள் எல்லோருடைய மரியாதையையும் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

இந்த மேன்மையான பிராமணப் பிறவியின் அடிப்படை இறையன்பே ஆகும். எங்கு அன்பு உள்ளதோ, அங்கே உலகம் இருக்கும், அங்கே உயிர் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எங்கு அன்பு இல்லையோ, இதயத்தில் உயிர்த்துடிப்பு இருக்காது, அத்துடன் அதற்கென ஓரிடமோ அல்லது உலகமோ இருக்காது. அன்பைக் கண்டு அடைந்ததால், நீங்கள் உலகையே கண்டு அடைந்து விட்டீர்கள். இந்த உலகம் ஒரு துளி அன்பிற்காக ஏங்குகிறது. ஆனால் குழந்தைகளான உங்களுக்கோ இறையன்பு உங்களின் சொத்தாகும். நீங்கள் இறையன்பால் பராமரிக்கப்படுகிறீர்கள். அதாவது, உங்களின் பிராமண வாழ்க்கையில் நீங்கள் முன்னேறுகிறீர்கள். எனவே, சதா அன்புக்கடலில் திளைத்திருங்கள்.