12.08.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் நல்ல சகுனங்களை அனுபவம் செய்கின்றீர்கள். இப்பொழுது உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன, இதனாலேயே இது உங்களுக்கு மேலேறுகின்ற ஸ்திதியாகும்.

கேள்வி:
யோகத்தில் முழுக் கவனம் செலுத்தாமையால் ஏற்படும் விளைவு என்ன? சதா நினைவில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகள் யாவை?

பதில்:
யோகத்தில் முழுக் கவனம் செலுத்தாது விட்டால், நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது மாயை தலையீடு செய்வதால், வீழ்கின்றீர்கள்; நீங்கள் சரீர உணர்வு உள்ளவர்களாகித் தொடர்ந்தும் பல தவறுகளைச் செய்கின்றீர்கள். மாயை உங்களைத் தவறான செயல்களைச் செய்ய வைக்கின்றாள்; அவள் உங்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகின்றாள். சதா நினைவில் நிலைத்திருப்பதற்கு, உங்கள் வாயினுள் ஒரு மணியை இடுங்கள். கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் மறந்து, நான் ஓர் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை என்பதைப் பயிற்சி செய்யுங்கள். யோக சக்தியினூடாக நீங்கள் அனுபவம் செய்கின்ற பேறுகளின் விழிப்புணர்வில் இருங்கள்.

பாடல்:
ஓம் நமசிவாய!

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள், உங்களுடைய ஆன்மீகத் தந்தை சிவபாபாவின் புகழைக் கேட்டீர்கள். பாவம் அதிகரிக்கின்ற பொழுதே, அதாவது, மனித ஆத்மாக்கள் பாவிகள் ஆகுகின்ற பொழுதே, தூய்மையாக்குகின்ற தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வருகின்றார். இது அந்த எல்லையற்ற தந்தையின் புகழ் மாத்திரமேஆ கும். அவர் விருட்சத்தின் பிரபு எனவும் அழைக்கப்படுகின்றார். இந்நேரத்தில், எல்லையற்ற தந்தையிடம் இருந்து, வியாழ சகுனங்களாகிய, எல்லையற்ற சகுனங்கள் உங்களுக்கு உள்ளன. “பொதுவான”, “குறிப்பாக” என்று இரண்டு வார்த்தைகள் உள்ளன. இவற்றின் அர்த்தங்கள் இங்கேயே அனுபவம் செய்யப்படுகின்றன. வியாழ சகுனங்களின் மூலம், குறிப்பாகப் பாரதம் ஜீவன்முக்தி அடைகின்றது. அதாவது, அது தனது சுய இராச்சிய அந்தஸ்தை அடைகின்றது. சத்தியம் என்று அழைக்கப்படுகின்ற, உண்மையான தந்தை வந்து, எங்களைச் சாதாரண மனிதரிலிருந்து, நாராயணனாக மாற்றுகின்றார். ஏனைய அனைவரும் அவர்களது சொந்தச் சமயத்தின் பகுதிக்குள் வரிசைக்கிரமமாகச் சென்று, பின்னர் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றார்கள். அவர்கள் கலியுக இறுதிவரை தொடர்ந்தும் இறங்கி வருவார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்த மதத்தில் தனது சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார். அரசரிலிருந்து, பிரஜைகள் வரைக்கும் அனைவரும் தங்கள் இராச்சியத்தில் தங்களுடைய சொந்தப் பாகங்களைப் பெற்றுள்ளனர். இந்நாடகம் அரசரிலிருந்து பிரஜைகள் வரை அனைவரையும் பற்றியதாகும். ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். உங்கள் மீது இப்பொழுது வியாழ சகுனங்கள் உள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தச் சகுனங்கள் ஒரு நாளே நீடிக்கின்றன என்றில்லை; இல்லை, அங்கே தொடர்ந்தும் உங்கள் மீது வியாழ சகுனங்கள் இருக்கின்றன. இப்பொழுது இது உங்களுடைய மேலேறுகின்ற ஸ்திதியாகும். எந்தளவு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக மேலேறுகின்ற ஸ்திதியும் இருக்கின்றது. நீங்கள் பாபாவை நினைவு செய்ய மறப்பதனால், மாயையின் தடைகள் ஏற்படுகின்றன. நினைவின் மூலம் மாத்திரமே, உங்களுக்கு நல்ல சகுனங்கள் உள்ளன. நீங்கள் பாபாவை நன்றாக நினைவு செய்யாது விடின், நிச்சயமாக வீழ்ந்து விடுவீர்கள். அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் ஏதோவொரு தவறைச் செய்து கொண்டிருப்பீர்கள். நாடகத்திற்கேற்ப அனைத்து மதத்தவர்களும் ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் பாகங்களை நடிப்பதற்குத் தொடர்ந்தும் கீழிறங்கி வருகின்றார்கள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். இப்பொழுது சுவர்க்கத்தின் சகுனங்கள், அதாவது, ஜீவன்முக்தியின் சகுனங்கள் உங்கள் மீதுள்ளன என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு நாடகச் சக்கரம் சுழல்கின்றது என்பதையும் நீங்கள் விபரமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலக நாடகச் சக்கரம் குறிப்பாக, பாரதத்தைப் பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். இந்த ஞானத்தைக் கேட்டு ஆச்சரியம் அடைந்து, அதை மற்றவர்களுக்கும் கூறிப் பின்னர் ஓடி விட்டவர்கள் பற்றியும் நினைவு கூரப்பட்டுள்ளது. முன்னேறிச் செல்லும்பொழுது மாயை குறுக்கிடுவதால், அவர்கள் வீழ்கின்றார்கள். நீங்கள் யோகத்தில் முழுக் கவனம் செலுத்தாதபோது, தந்தை வந்து உங்களுக்கு உயிர் கொடுக்கும் மூலிகையைக் கொடுக்க வேண்டி உள்ளது. அதாவது, அவர் உங்களைத் திரும்பவும் உயிர்ப்பிக்கின்ற மூலிகையைக் கொடுக்கின்றார். நீங்களும் அனுமான்கள். இந்நேரத்தில், நீங்கள் இராவணனை அப்பால் துரத்துவதற்கு, அவர் மூலிகையை நுகரச் செய்கின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தந்தை அனைத்தையும் பற்றிய உண்மையை உங்களுக்குக் கூறுகின்றார். ஒரேயொரு தந்தையே சத்தியமானவர், அவர் உங்களுக்குச் சத்திய நாராயணனின் கதையைக் கூறிச் சத்தியயுக ஸ்தாபனையை மேற்கொள்வதற்கு வருகின்றார். அவர் உண்மையைப் பேசுகின்ற சத்தியமானவர் என்று அழைக்கப்படுகின்றார். உங்களுக்குச் சமயநூல்களில் நம்பிக்கை உண்டா என்று மக்கள் கேட்கும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: ஆம், ஏன் நாங்கள் அதை நம்பக்கூடாது? அந்தச் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குச் சொந்தமானவை என நாங்கள் அறிவோம். ஞானம், பக்தி என இரண்டு விடயங்கள் உள்ளன என நாங்கள் உணர்ந்து கொள்கின்றோம். நீங்கள் ஞானத்தைப் பெறுகின்ற பொழுது பக்திக்கு என்ன தேவையுள்ளது? பக்தி என்றால் இறங்குகின்ற ஸ்திதியும், இந்த ஞானம் என்றால் மேலேறுகின்ற ஸ்திதியும் ஆகும். இந்நேரத்தில் பக்தி தொடர்கின்றது. நாங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளோம், அதன்மூலம் சற்கதி கிடைக்கின்றது. ஒரேயொரு கடவுளே பக்தர்களின் பாதுகாவலர். எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் வந்து உங்களை இராவணனிடம் இருந்து பாதுகாக்கின்றேன். எவ்வாறு நீங்கள் இராவணனிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றீர்கள் எனக் காண முடியும். நீங்கள் இராவணனை வெற்றிகொள்ள வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையான குழந்தைகளே, இராவணன் உங்களைத் தமோபிரதானாக்கி விட்டான். சத்தியயுகம் சதோபிரதான் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் உங்களுடைய கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. இறுதியில் நீங்கள் முற்றிலும் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது, தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றீர்கள். ஒரு கட்டடம் கட்டப்படும் பொழுது, அது புதியதாக இருக்கின்றது. பின்னர் ஒன்று அல்லது ஆறு மாதங்களின் பின்னர், அதனுடைய கலைகள் சிறிதளவு குறைவடைகின்றன. அவர்கள் ஒவ்வொரு வருடமும் கட்டடத்திற்கு வெள்ளை அடிக்கின்றனர், கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. அனைத்தும் புதியதிலிருந்து பழையதாகவும், பின்னர் பழையதில் இருந்து புதியதாகவும் ஆகுகின்றது. இதுவே ஆரம்பத்தில் இருந்து அனைத்திற்கும் நடைபெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட கட்டடம் 100 முதல் 150 வருடங்கள் வரை நிலைத்து நிற்கும் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: புதிய உலகம் சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் திரேதாயுகம் 25% குறைந்ததாக ஆகும், ஏனெனில் அது சிறிதளவு பழையதாகி விடுகின்றது. அது சந்திர வம்சமாகும். அதற்குச் சத்திரியரின் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் புதிய உலகிற்குத் தகுதியானவர்கள் ஆகவில்லை. இதனாலேயே அவர்களின் தராதரம் சிறிது குறைவாக உள்ளது. அனைவரும் கிருஷ்ண தாமத்திற்குச் செல்ல விரும்புகின்றார்கள். இராம தாமத்திற்குச் செல்ல விரும்புவதாக அவர்கள் கூறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் தாமத்திற்குச் செல்ல விரும்புவதாகவே அனைவரும் கூறுகின்றனர். அவர்கள் பாடுகின்றார்கள்: நாங்கள் பிருந்தாவனத்திற்குச் சென்று இராதை, கோவிந்தனின் புகழ் பாடுவோம். இது பிருந்தாவனத்தையே குறிக்கின்றது, அயோத்தியை (இராமரின் பிறந்த இடம்) அல்ல. அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பெருமளவு விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்கின்றனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகத்தைக் காண்கின்ற பொழுது, அவரைப் போன்று ஒரு கணவன், ஒரு மகன் அல்லது சகோதரன் வேண்டுமெனக் கூறுகின்றனர். விவேகமான குழந்தைகள் ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று ஒரு மகனைக் கொண்டிருப்பதற்காகத் தங்களின் முன்னே அவரின் விக்கிரகத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அன்பில் மூழ்கியிருக்கின்றனர். அனைவரும் கிருஷ்ண தாமத்தை விரும்புகின்றனர். இது இப்பொழுது இராவணனின் தேசமான, கம்சனின் பூமியாகும். கிருஷ்ணரின் தாமத்திற்குப் பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஸ்ரீகிருஷ்ணரைப் பெருமளவில் நினைவு செய்கின்றனர். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் அவரை இந்தளவு காலமாக நினைவுசெய்து வருகின்றீர்கள். இப்பொழுது கிருஷ்ண தாமத்திற்குச் செல்வதற்கு, அவரது குலத்திற்குள் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். சூரிய வம்சத்து எட்டு குலங்கள் உள்ளன. எனவே அந்த இராச்சியத்தில் ஒருவராகி, இளவரசர்களுடன் ஊஞ்சலில் ஊஞ்சலாடுவதற்கு அதிகளவு முயற்சியைச் செய்யுங்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இயன்றளவிற்கு “மன்மனாபவ”வாக இருங்கள். நீங்கள் நினைவில் நிலைத்து இருக்காவிடில், வீழ்ந்து விடுகிறீர்கள். இந்த ஞானம் ஒருபொழுதுமே உங்களை விழச் செய்ய மாட்டாது. நீங்கள் நினைவில் நிலைத்து இருக்காத பொழுது, வீழ்கின்றீர்கள். அலாவுதீனும் அற்புதவிளக்கும், மற்றும் ஹத்தாம்தாய் (வாயினுள் மணியை இட்டவர்) பற்றிய நாடகங்களும் இதை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். நினைவில் நிலைத்து இருப்பதற்கு, வாயினுள் ஒரு மணி இடப்படுகின்றது. ஒருவர் கோபம் அடைகின்ற பொழுது, அவர்கள் எதிர்த்து எதையாவது கூறுவார்கள், இதனாலேயே அவர்களுடைய வாயில் எதையாவது இடுமாறு கூறப்படுகின்றது. நீங்கள் எதையாவது கூறவில்லை என்றால், கோபம் எதுவும் இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: என்றுமே எவருடனும் கோபம் கொள்ளாதீர்கள். எவ்வாறாயினும், இவ்விடயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால், அவர்கள் பிழையான விடயங்களைச் சமயநூல்களில் எழுதியுள்ளார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து, உங்களுக்கு மிகச்சரியாக விளங்கப்படுத்துகின்றார். அவர் வருகின்ற பொழுது மாத்திரமே, அவரால் விளங்கப்படுத்த முடியும். வாழ்ந்து சென்றவர்களுக்கே புகழ் பாடப்பட்டுள்ளது. தாகூரும், ஜான்சி ராணியும் கடந்த காலத்தில் இருந்தார்கள், எனவே அவர்கள் பற்றிய நாடகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சரி, சிவனும் வந்து சென்றார், இதனாலேயே அவர்கள் அவரது பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார்கள். ஆயினும், சிவன் எப்பொழுது வந்தார் என்றோ, அல்லது அவர் வந்தபொழுது என்ன செய்தார் என்றோ அவர்களுக்குத் தெரியாது. அவரே முழு உலகினதும் தந்தை ஆவார். அவர் நிச்சயமாக வந்து, அனைவருக்கும் சற்கதி அருளியிருக்க வேண்டும். இஸ்லாம், பௌத்தம் போன்ற சமயங்களை ஸ்தாபித்தவர்களின் பிறந்ததினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவர்களிடம் அனைவரதும் நேரம், திகதி, இடம் போன்றவை உள்ளன, ஆனால், இந்தத் தர்மத்தின் அவ்வாறான விடயங்கள் பற்றி எவருமே அறியார். கிறிஸ்துவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர், பாரதம் வைகுந்தமாக இருந்தது என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் சுவஸ்திகாவை உருவாக்கும் பொழுது, அது நான்கு யுகங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற, நான்கு சம பாகங்களைக் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றார்கள். ஒவ்வொரு யுகமும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க மாட்டாது. ஜெகநாதர் ஆலயத்திலே அவர்கள் ஒரு சட்டியில் சாதம் சமைக்கும் பொழுது, அது நான்கு சம பாகங்களாகப் பிரிகின்றது. தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் மறந்து விடுங்கள். நான் ஓர் ஆத்மா, பரமாத்மா பரமதந்தையின் குழந்தை. இவ் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். பாபாவே சுவர்க்கத்தைப் படைப்பவர். எனவே அவர் நிச்சயமாக எங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். அவர் எங்களை நரகத்திற்கு அனுப்ப மாட்டார். தந்தை ஒருபொழுதும் எவரையும் நரகத்திற்கு அனுப்புவதில்லை. அனைவரும் முதலில் சந்தோஷத்தையே அனுபவம் செய்கின்றனர். முதலில் சந்தோஷமும், பின்னர் துன்பமும் உள்ளன. தந்தையே அனைவரதும் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். ஆத்மாக்கள் முதலில் சந்தோஷத்தையும் பின்னர் துன்பத்தையும் அனுபவம் செய்கின்றனர். நாங்கள் முதலில் சதோபிரதான் ஆகுகின்றோம், பின்னர், சதோ, ரஜோ, தமோவாக ஆகுகின்றோம் என மனச்சாட்சியும் கூறுகின்றது. வெளிநாட்டவர்கள் விவேகமானவர்கள் என மக்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் உடனடியாகவே கொல்லக்கூடிய அத்தகைய குண்டுகளைத் தயாரிக்கின்றார்கள். இந்நாட்களில் எவ்வாறு அவர்கள் ஒரு பிணத்தை மின்சாரத்தினால் எரிக்கின்றார்களோ, அதேபோன்று, ஒரு குண்டு வெடித்தவுடன், அது தீயை உருவாக்கி, மனிதர்களும் உடனடியாகவே மரணிக்கின்றார்கள். வைக்கோற்போர் தீ மூட்டப்பட உள்ளது. முழுக் கிராமங்களும் அழியக்கூடிய வகையில் புயல்களும் ஏற்படும். அப்பொழுது அந்நேரத்தில் அவர்களுக்கு எதையுமே பாதுகாப்பதற்கு முன்னேற்பாடுகள் எதுவும் இருக்க மாட்டாது. விநாசம் இடம்பெற வேண்டும். இந்தப் பழைய உலகம் முடிவடைய வேண்டும். இதுவும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: எவருமே அறிந்திருக்காத அவ்வாறான குண்டுகளை ஐரோப்பிய மக்கள் போடுவார்கள். விநாசம் முன்னைய கல்பத்திலும் இடம்பெற்றது, அது இப்பொழுது மீண்டும் இடம்பெறும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் கற்றதைப் போன்றே கற்கின்றீர்கள். விருட்சம் தொடர்ந்தும் படிப்படியாக வளர்கின்றது. வளர்ச்சி இடம்பெறுவதால், ஸ்தாபனையும் இடம்பெறுகிறது. மாயையின் புயல்கள் மிக நல்ல மலர்களையும் வீழ்த்துகின்றன. நீங்கள் முழுமையான யோகத்தில் நிலைத்திருக்காமல் விட்டால், மாயை தடைகளை உருவாக்குகிறாள். தந்தையின் குழந்தையாகி, தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்த பின்னர் விகாரத்தில் வீழ்வீர்களாயின், நீங்கள் தந்தையின் பெயரை அவமரியாதை செய்கிறீர்கள். நீங்கள் பின்னர் மிகக் கடுமையாகத் தாக்கப்படுவீர்கள். தந்தை கூறுகின்றார்: ஒருபொழுதும் காமத்தினால் தாக்கப்படாதீர்கள். இங்கே இரத்த ஆறுகள் ஓடும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் பாலாறுகள் ஓடும். அது புதிய உலகமும், இது பழைய உலகமும் ஆகும். இந்தக் கலியுகத்தில் என்ன உள்ளது எனப் பாருங்கள், புதிய உலகிலுள்ள சௌகரியங்களையும் பாருங்கள்: இங்கே எதுவுமே இல்லை. புத்திரிகள் திரான்ஸில் சென்று அனைத்தையும் கண்டு, திரும்புவது வழக்கம். அவர்கள் சூட்சும உலகில் மாம்பழச்சாறு அருந்துவது, மற்றும் ஏனைய விடயங்களைச் செய்வது போன்ற காட்சிகளைக் காண்பார்கள். எவ்வாறு அவர்கள் அசரீரி உலகிற்குச் செல்வார்கள் எனவும், பாபா பின்னர் எவ்வாறு அவர்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவார் எனவும் கூறுவதுண்டு. அந்தக் காட்சிகள் போன்ற அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. காட்சிகள் காண்பதனால் எதனையும் அடைய முடியாது. பல புதல்விகள் சூட்சும உலகிற்குச் சென்று, மாம்பழச்சாறு போன்றவற்றை அருந்தினார்கள். இன்று அவர்கள் இங்கு இல்லை! மிக நல்ல, முதற்தரமான குழந்தைகள் மறைந்து விட்டார்கள். திரான்ஸில் சென்று காட்சிகளைக் கண்டவர்கள், இப்பொழுது திருமணம் செய்து விட்டார்கள். மாயை எப்படியானவள் என்பது ஆச்சரியமாக உள்ளது! அவர்களுடைய பாக்கியம் முழுமையாக மாறி விட்டது. பலர் மிக நல்ல பாகங்களை நடித்தார்கள். அவர்கள் தேவையான நேரத்தில் பெருமளவு உதவியும் செய்தார்கள், இருந்தும் இன்று அவர்கள் இங்கில்லை. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். நீங்கள் மாயையுடன் போராடுகின்றீர்கள். இது யோகசக்தி மூலமான யுத்தம் என்று அழைக்கப்படுகின்றது. யோகசக்தியின் மூலம் என்ன பேறுகள் உள்ளன என்பதை எவருமே அறியார். இதுவே பாரதத்தின் புராதன யோகம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். பாரதத்தின் புராதன இராஜயோகம் நினைவுகூரப்பட்டுள்ளது என, இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு யோகத்தைப் பற்றி விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தத்துவ ஞானிகள் போன்றோர் எவரிடமும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. ஆன்மீகத் தந்தை மாத்திரமே, ஞானக்கடல் ஆவார். அவருக்கே அவர்கள் பாடுகின்றார்கள்: ஓம் நமசிவாய. அவரது புகழ் பாடப்படுகின்றது. தந்தை வந்து, அதிகளவு இந்த ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதுவே மூன்றாவது ஞானக்கண் என அறியப்படுகின்றது. வேறு எவருக்குமே தங்களைத் திரிகாலதரிசி என்றழைக்கின்ற சக்தியில்லை. யார் மூலம், இந்த யாகம் உருவாக்கப்பட்டதோ, அந்தப் பிராமணர்களாகிய நீங்களே திரிகாலதரிசிகள். இது உருத்திரரின் ஞான யாகமாகும். சிவனும் உருத்திரர் என்றே அழைக்கப்படுகின்றார். அவர்கள் அவருக்குப் பல பெயர்களை வைத்துள்ளார்கள். ஒவ்வொரு தேசத்திலும், அவருக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தந்தையைத் தவிர வேறு எவருக்கும் இந்தளவு அதிகமான பெயர்கள் இல்லை. அவர் முட்களை மலர்களாக்கும் பிரபுவாகிய, பபுல்நாத் எனவும் அழைக்கப்படுகின்றார். தங்களினுள் முட்களைக் கொண்டுள்ளவர்களே பபுல் ஆவார்கள். பாபா ஒருவரே முட்களை மலர்களாக மாற்றுபவர், இதனாலேயே அவர் பபுல்நாத் என்று அழைக்கப்படுகின்றார். பம்பாயில் அவர்கள் இங்கே (பபுல்நாத் ஆலயத்தில்) பெரிய ஒன்றுகூடல்களைக் கொண்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கிருந்து, தனது சரியான பெயர் சிவன் என்று விளங்கப்படுத்துகின்றார். வியாபாரிகள் பூச்சியத்தைச் சிவன் எனக் குறிப்பிடுகின்றார்கள். கணக்கிடுகையில் அவர்கள் பத்தை அடைகின்ற பொழுது “சிவா” எனக் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: புள்ளியாகிய நான், நட்சத்திரம் ஆவேன். பலர் தாய், தந்தையைக் குறிப்பதற்காகத் தங்கள் நெற்றிகளில் இரட்டைத் திலகம் இடுகின்றார்கள். அது ஞான சூரியனையும், ஞானச் சந்திரனையும் குறிக்கும் அடையாளம் ஆகும். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பாபா யோகம் பற்றி விளங்கப்படுத்தினார்: யோகம் மிகவும் பிரபல்யமானது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது “யோகம்” என்ற வார்த்தையை விட்டு, நினைவில் நிலைத்திருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: ‘யோகம்’ என்ற வார்த்தையின் மூலம் எவரும் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ‘நினைவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் பொழுதே, அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீங்கள் தந்தையை அதிகளவு நினைவு செய்ய வேண்டும்! அவர் மணவாளன் எனவும் அழைக்கப்படுகின்றார். அவர் உங்களை அரசிகள் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்கு உலக இராச்சியம் எனும் உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தை மாத்திரமே இருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு இரண்டு தந்தையர்களும், இந்த ஞான மார்க்கத்தில் மூன்று தந்தையர்களும் இருக்கின்றனர். இது அத்தகையதோர் அற்புதமே! நீங்கள் அனைத்தினதும் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். சத்தியயுகத்தில் உள்ள அனைவருமே சந்தோஷமாக இருக்கின்றார்கள். இதனாலேயே அவர்கள் இந்த உலகிற்கு அப்பாலுள்ள தந்தையையும் அறியாதுள்ளனர். நீங்கள் இப்பொழுது மூன்று தந்தையர்களையும் அறிவீர்கள். இந்த விடயங்கள் புரிந்து கொள்வதற்கு மிக இலகுவானவை. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நினைவில் நிலைத்திருப்பதற்கு, பேசாதிருங்கள்; உங்கள் வாயினுள் ஒரு மணியை இடுங்கள், கோபம் நின்றுவிடும். எவருடனும் ஒருபொழுதும் கோபம் கொள்ளாதீர்கள்.

2. இந்தத் துன்ப பூமி இப்பொழுது தீக்கிரையாகப் போகின்றது. எனவே அதனை மறந்து, புதிய உலகை நினைவு செய்யுங்கள். தூய்மையில் உறுதியாக இருப்பதாகத் தந்தைக்குச் நீங்கள் செய்த சத்தியத்தைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
அசரீரி ஸ்திதியைப் பயிற்சி செய்வதன் மூலம் ‘நான்’ என்ற உணர்வை முடித்து, அகங்காரம் அற்றவர் ஆகுவீர்களாக.

தற்சமயம், ‘நான்’ என்ற உணர்வே அதி சூட்சுமமான, அழகான இழை ஆகும். ‘நான்’ என்ற இந்த வார்த்தை உங்களை சரீர உணர்விற்கு அப்பால் எடுத்துச் செல்கிறது, அத்துடன் உங்களைச் சரீர உணர்விற்குள்ளும் எடுத்துச் செல்கிறது. ‘நான்’ என்ற உணர்வானது தவறான வடிவத்தில் வரும்போது, அது உங்களைத் தந்தையின் மீது அன்புடையவராக ஆக்குவதற்குப் பதிலாக, யாராவது ஒரு நபர் அல்லது பெயர், மதிப்பு அல்லது கௌரவத்தின் மீது அன்பு கொண்டவராக உங்களை ஆக்குகிறது. இந்த பந்தனத்தில் இருந்து சதா விடுபட்டவர் ஆகுவதற்கு, முதலில் அசரீரி ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, பின்னர் உங்களின் பௌதீக ரூபத்திற்குள் வாருங்கள். இந்தப் பயிற்சியை உங்களின் இயல்பான சுபாவம் ஆக்குங்கள். அப்போது நீங்கள் அகங்காரம் அற்றவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
யாராவது ஒருவரின் நல்ல அல்லது தீய சூழ்நிலைகளைக் கேட்டு, பின்னர் வெறுப்பான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால், மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

உங்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் தூய்மை இன்மையின் சுவடு இல்லாவிட்டால், நீங்கள் உண்மையான பிராமணர் என்று அழைக்கப்படுவீர்கள். இந்த தாரணைக்குக் கூறப்படுகிறது: நீங்கள் இறக்க வேண்டி வந்தாலும் உங்களின் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இத்தகைய தைரியத்தையும் திடசங்கற்பமான நம்பிக்கையையும் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் எந்தவிதச் சூழ்நிலையில் இருந்தும் பின்வாங்குவதில்லை.ஆனால் சந்தோஷமாகத் துறவறத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டிருப்பதுடன் எதற்கும் முகங்கொடுக்கக் கூடியதாகவும் தைரியமாகவும் இருப்பார்கள்.