12.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் கல்வியில் அனைத்தும் யோகத்திலேயே தங்கியுள்ளது. யோகத்தின் மூலமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுவதுடன், உங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கப்படுகின்றீர்கள்.

கேள்வி:
சில குழந்தைகள் தந்தைக்கு உரியவர்கள் ஆகிய பின்னர், அவரைக் கைவிடுகின்றனர். இதற்கான காரணம் என்ன?

பதில்:
சில குழந்தைகள் எட்டு முதல் பத்து வருடங்கள் தந்தைக்கு உரியவர்களாக இருந்த பின்னரும், அவரை விவாகரத்து செய்து அவரைக் கைவிடுகின்றனர். ஏனெனில் அவர்கள் முழுமையாக அவரை இனங்கண்டு கொள்ளாததும், நம்பிக்கையுடைய புத்தியைக் கொண்டிராமையும் ஆகும்; அவர்களின் அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. குழந்தைகள் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கும் பொழுது, மாயையின் தீய சகுனங்கள் உள்ளன, அப்பொழுது அவர்களின் ஸ்திதி தளம்பல் அடைந்து, கற்பதை நிறுத்துகின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் அனைவருமே எல்லையற்ற தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் எங்களை பாப்தாதா என அழைக்கின்றீர்கள். நீங்கள் ஆன்மீகக் குழந்தைகளாக இருப்பதைப் போன்றே, இவரும் (பிரம்மா) சிவபாபாவின் ஓர் ஆன்மீகக் குழந்தை ஆவார். சிவபாபாவிற்கு நிச்சயமாக ஓர் இரதம் தேவை. ஆகையால், ஆத்மாக்களாகிய நீங்கள் செயல்களைச் செய்வதற்காகப் அங்கங்களைப் பெற்றிருப்பதைப் போன்றே, சிவபாபாவும் இந்த இரதத்தைப் பெற்றிருக்கின்றார். இது செயல்கள் செய்யப்படுகின்ற, செயற்களம் ஆகும். அது ஆத்மாக்கள் வசிக்கும் வீடாகும். நாடகம் நடிக்கப்படாத, அமைதிதாமமே உங்கள் வீடு என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே ஒளி போன்றவை இருக்க மாட்டாது; அங்கே ஆத்மாக்கள் வெறுமனே வசிக்கின்றார்கள். அவர்கள் தங்கள் பாகங்களை நடிக்கவே இங்கு வருகின்றார்கள். இது ஓர் எல்லையற்ற நாடகம் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை நடிகர்கள் அனைவரும் புரிகின்ற செயற்பாடுகளைக் குழந்தைகளான நீங்கள், உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக அறிவீர்கள். இங்கு உங்களுக்கு விளங்கப்படுத்துபவர் ஒரு சாதுவோ அல்லது ஒரு புனிதரோ அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் இங்கே எல்லையற்ற தந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இங்கே சரீரங்களும் தூய்மையாகும் என்றில்லை; இல்லை. ஆத்மாக்களே தூய்மையானவர்கள் ஆகுகின்றனர். பஞ்ச தத்துவங்கள் சதோபிரதான் ஆகிவிட்ட பொழுது மாத்திரமே, சரீரங்கள் தூய்மையாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தூய்மை ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். அங்கே ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே தூய்மையாக உள்ளன. இங்கு அவ்வாறு இருக்க முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகும்பொழுது, உங்கள் பழைய சரீரங்களை நீங்கிச் செல்கின்றீர்கள். அதன்பின்னர் புதிய தத்துவங்களினால், புதிய சரீரங்கள் உருவாக்கப்படும். ஆத்மாவாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றீர்களா, இல்லையா என்பதை அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். இந்தக் கல்வியில் அனைத்தும் யோகத்திலேயே தங்கியுள்ளது. இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உள்ளார்த்தமானதும், மறைமுகமானதுமான நினைவு யாத்திரையே மிகப் பிரதான விடயம். அதனைப் பார்ப்பது சாத்தியமல்ல. ஒருவர் பெருமளவு நினைவு செய்கின்றாரா அல்லது குறைந்தளவு நினைவு செய்கின்றாரா என்பதை பாபாவினால் கூற முடியாது. ஆம், இந்த ஞானத்தைப் பொறுத்தவரை, ஒருவர் இந்தப் பாடத்தில் மிகவும் திறமைசாலி என்று உங்களால் கூற முடியும். நினைவைப் பொறுத்தவரை எதுவும் வெளியில் தெரிவதில்லை. ஞானம் வாயினால் பேசப்படுகின்றது. நினைவு சதா செபிக்கப்படுகின்ற மந்திரமாகும். ‘செபித்தல்’ எனும் வார்த்தை பக்தி மார்க்கத்திற்கு உரியது. செபித்தல் என்றால் ஒருவரின் பெயரைக் ஓதிக் கொண்டிருத்தலாகும். இங்கே ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்து, தொடர்ந்தும் தூய்மை ஆகுவதால், நீங்கள் முக்திதாமத்தையும், அமைதியையும் அடைவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் நாடகத்தில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள் என்றல்ல. “முக்தி” என்றால் துன்பத்திலிருந்து விடுபடுதல் என்று அர்த்தம். நீங்கள்; அமைதிதாமத்திற்கும், பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள். தூய்மை ஆகுபவர்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். தூய்மையற்ற மனிதர்கள் அவர்களுக்குச் சேவை செய்கின்றார்கள். தூய்மையாக இருப்பவர்களின் புகழ் உள்ளது. இதற்கே முயற்சி தேவையாகும். கண்கள் உங்களைப் பெருமளவு ஏமாற்றுவதால், நீங்கள் வீழ்கின்றீர்கள். அனைவரும் தளம்பலடைய வேண்டியுள்ளது. அனைவரும் தீய சகுனங்களை அனுபவம் செய்கின்றார்கள். குழந்தைகளாலும் விளங்கப்படுத்த முடியும் என்று பாபா கூறிய பொழுதிலும், அவர் மேலும் கூறுகின்றார்: குருமாதாவும் தேவைப்படுகின்றார். ஏனெனில், இக்காலத்தில் குரு மாதாக்கள் உள்ள வழக்கம் இருக்கின்றது. முன்னர், தந்தைமார்கள் மாத்திரமே இருந்தனர். இப்பொழுது தாய்மாருக்கே முதலில் கலசம் கொடுக்கப்படுகின்றது. தாய்மார்களே பெரும்பான்மையானோர். குமாரிகள் தூய்மைக்காக ஓர் இராக்கியைக் கட்டுகிறார்கள். கடவுள் கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றி கொள்ளுங்கள்! ரக்ஷாபந்தன் தூய்மைக்கான விழாவாகும். அம்மக்கள்; இராக்கியை அணிந்த பொழுதிலும், அவர்கள் தூய்மையானவர்கள் ஆகுவதில்லை. அந்த இராக்கிகள் அனைத்தும் செயற்கையானவை. அவை எதுவும் உங்களைத் தூய்மை ஆக்குவதில்லை. அதற்கு உங்களுக்கு இந்த ஞானம் தேவை. நீங்கள் இப்பொழுது அவர்களுக்கு ராக்கி கட்டுகின்றீர்கள். நீங்கள் அதன் அர்த்தத்தையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தி, அவர்களைச் சத்தியமும் செய்ய வைக்கின்றீர்கள். சீக்கியர்கள் தங்களுக்குரிய சின்னமாக ஓர் உருக்குக் காப்பை அணிகின்றார்கள். ஆனால் அவர்களும் தூய்மை ஆகுவதில்லை. ஒரேயொருவரே தூய்மையற்ற அனைவரையும் தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அவர் ஒரு சரீரதாரியல்ல. கங்கை நீரை இக்கண்களால் பார்க்க முடியும். சற்கதியை அருள்பவரான தந்தையை இக்கண்களால் பார்க்க முடியாது. ஓர் ஆத்மா எவ்வாறானவர் என்பதை எவரும் பார்க்க முடியாது. ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. ஆனால் எவராவது ஆத்மாவைப் பார்த்திருக்கின்றார்களா? அவர்கள் “இல்லை” என்றே கூறுகின்றார்கள். ஒரு பெயரையுடைய அனைத்தும் நிச்சயமாகத் தென்படுகின்றது. ஆத்மாவுக்கும் ஒரு பெயர் உள்ளது. ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிப்பதாகக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், அது புலப்படுவதில்லை. அவர்கள் பரமாத்மாவை நினைவு செய்கின்றனர். ஆனால் அவரைப் பார்க்க முடியாது. இலக்ஷ்மியையும் நாராயணனையும் இக்கண்களால் பார்க்க முடியும். அவர்கள் ஒரு லிங்கத்தை வழிபட்ட பொழுதிலும், அது மிகச்சரியானது அல்ல. அதனை அவர்களால் பார்க்க முடிந்தாலும், பரமாத்மா யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இதனை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ்சிறிய புள்ளிகள். அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆத்மாவையும் பார்க்க முடியாது, பரமாத்மாவையும் பார்க்க முடியாது. ஆனால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் பாபா இவருக்குள் பிரவேசித்திருப்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இந்த ஆத்மா தனது சொந்தச் சரீரத்தைக் கொண்டிருக்கின்றார். பின்னர் பரமாத்மாவான பரமதந்தை கூறுகின்றார்: நான் இவரின் இரதத்திற்குள் பிரசன்னம் ஆகுகின்றேன். இதனாலேயே நீங்கள் எங்களை பாப்தாதா என அழைக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் தாதாவை உங்கள் கண்களால் காண முடியும், ஆனால் தந்தையை உங்களால் காண முடியாது. பாபா ஞானக்கடல் என்பதையும், அவர் இச்சரீரத்தின் மூலம் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவரே ஞானக்கடலும், தூய்மையாக்குவரும் ஆவார். வேறு எவ்வாறு அசரீரியானவரால் உங்களுக்குப் பாதையைக் காட்ட முடியும்? எதுவும் தூண்டுதல்களினால் இடம்பெற முடியாது. கடவுள் வருகின்றார் என்பதை எவருமே அறியாமல் இருக்கிறார்கள். மக்கள் சிவனின் பிறந்த நாளையும் கொண்டாடுகின்றார்கள். ஆகவே, அவர் நிச்சயமாக இங்கே வந்திருக்கின்றார். அவர் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா இவருக்குள் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தையை முழுமையாக இனங்காணாததாலும், நம்பிக்கையுடைய புத்தியைக் கொண்டிராததாலும், எட்டு முதல் பத்து வருடங்களின் பின்னரும் சிலர் தந்தையை நீங்கிச் செல்கின்றார்கள். மாயை அவர்களை முழுக் குருடர்கள் ஆக்குகின்றாள். தந்தைக்கு உரியவரான பின்னர் நீங்கள் அவரை விட்டுச் சென்றால், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் அறிமுகத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆகையால், நீங்கள் அதனைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும். ரிஷிகளும் முனிவர்களும் ‘நேற்றி, நேற்றி’ (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுகின்றார்கள். முன்னர், நீங்களும் இதனை அறியாதிருந்தீர்கள். அவரைப் பற்றிய அனைத்துமே உங்களுக்குத் தெரியும் என்பதால் நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகியுள்ளீர்கள் என இப்பொழுது கூறுகின்றீர்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதனைக் கற்கும் முன்னர், முழு உலகத்தினரும், நீங்களும் நாஸ்திகர்களாகவே இருந்தீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பதால், பரமாத்மாவான பரமதந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி, உங்களை ஆஸ்திகர்கள் ஆக்கியுள்ளார் என நீங்கள் கூறுகின்றீர்கள். நாங்கள் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறிந்திருக்கவில்லை. தந்தையே படைப்பவர். புதிய உலகை ஸ்தாபித்து, பழைய உலகை அழிப்பதற்கு அவர் சங்கமயுகத்தில் வருகின்றார். பழைய உலகை அழிப்பதற்கே இந்த மகாபாரத யுத்தம் இடம்பெறுகின்றது, இதற்காக அந்நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார் என அவர்கள் நம்புகின்றார்கள். அசரீரியான தந்தையே வந்தார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அவரைப் பார்க்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரின் படங்கள் உள்ளன, அவரைப் பார்க்க முடியும். சிவனைப் பார்க்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் அதே முகச்சாயல்களை மீண்டும் கொண்டிருக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு அல்லது எப்பொழுது வந்தார் என்பதை எவரும் அறியார். ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனின் (அசுரன்) சிறையில் உள்ளார் என அவர்கள் காட்டுகின்றார்கள். கம்சன் சத்தியயுகத்தில் இருந்தானா? அது எவ்வாறு சாத்தியமாக முடியும்? கம்சன் ஓர் அசுரன். இந்த நேரத்தில் முழு உலகமும் அசுர சமுதாயத்திற்கு உரியது; அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் கொல்கின்றார்கள். தெய்வீக உலகம் இருந்தது என்பதை அவர்கள் மறந்துள்ளார்கள். கடவுளின் தெய்வீக உலகைக் கடவுள் ஸ்தாபித்தார். இது உங்கள் புத்தியில் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் இறை குடும்பத்தினர், பின்னர் நீங்கள் அங்கே தேவர்களின் குடும்பத்தினர் ஆகுவீர்கள். இந்நேரத்தில் கடவுள் உங்களைச் சுவர்க்கத்தின் தேவர்கள் ஆகுவதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தச் சங்கமயுகத்தை எவருக்கும் தெரியாது. இந்த அதிமேன்மையான சங்கமயுகத்தை எந்தச் சமயநூலும் குறிப்பிடவில்லை. அதிமேன்மையான சங்கமயுகம் என்றால், மக்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்ற காலமாகும். சத்தியயுகமே அதிமேன்மையான யுகம் எனப்படுகின்றது. இந்நேரத்தில் மனிதர்கள் மேன்மையானவர்கள் அல்ல. அவர்கள் சீரழிந்த, தமோபிரதான் ஆனவர்கள் என அழைக்கப்படுகின்றனர். பிராமணர்களாகிய உங்களைத் தவிர, வேறு எவரும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. தந்தை கூறுகின்றார்: இது அசுரர்களின் சீரழிந்த உலகம். சத்தியயுகத்தில் இவ்விதமான சூழல் இருக்க மாட்டாது. அது மேன்மையான உலகாக இருந்தது. அவர்களின் படங்கள் உள்ளன. உண்மையில், அவர்கள் மேன்மையான உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். பாரதத்தின் அந்த அரசர்களாக இருந்தவர்கள் பூஜிக்கப்பட்டனர். அவர்கள் தூய்மையானவர்களாகவும், பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகியுள்ளார்கள். பூஜிப்பவர்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளனர். ஆனால் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள், இந்த ஞான மார்க்கத்தில் உள்ளனர். பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் எவ்வாறு பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள் என்பதையும், பூஜிப்பவர்கள் எவ்வாறு பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இவ்வுலகில் பூஜிக்கத் தகுதியான ஒருவரேனும் இருக்க முடியாது. பரமாத்மாவான பரமதந்தையும், தேவர்களும் மாத்திரமே பூஜிக்கத் தகுதியானவர்களாக இருக்க முடியும். பரமாத்மாவான பரமதந்தை அனைவராலுமே பூஜிக்கப்படத் தகுதியானவர். சகல சமயத்தினரும் அவரை வழிபடுகின்றார்கள். அத்தகைய தந்தையின் பிறப்பே இங்கே நினைவு கூரப்படுகினறது. சிவனின் பிறந்தநாள் உள்ளது. ஆனால், அவர் பாரதத்தில் பிறப்பெடுக்கின்றார் என்பதை மக்கள் அறியார்கள். இந்நாட்களில், சிவனின் பிறந்த நாளுக்கு விடுமுறை கூட அளிக்கப்படுவதில்லை. அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதும், கொண்டாடாமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. ஆனால் அது உத்தியோகபூர்வ விடுமுறை அல்ல. சிவஜெயந்தியில் நம்பிக்கை அற்றவர்கள் வேலைக்குச் செல்கின்றார்கள். பல சமயங்கள் உள்ளன. சத்தியயுகத்தில் அவ்வாறான விடயங்கள் இருப்பதில்லை. அங்கே இவ்விதமான சூழல் இருக்க மாட்டாது. சத்தியயுகம் ஒரேயொரு தர்மம் மாத்திரம் உள்ள, புதிய உலகமாகும். சந்திர வம்ச இராச்சியம் அவர்களைத் தொடர்ந்து வரும் என்பதை அவர்கள் அங்கே அறிந்திருப்பதில்லை. இங்கே, கடந்த காலத்தில் இன்ன இன்னார் இருந்தார்கள் என்பதையும், நீங்கள் சத்தியயுகத்தில் இருப்பீர்கள் என்பதையும் அறிவீர்கள். அங்கே நீங்கள் எந்தக் கடந்த காலத்தை நினைவு செய்வீர்கள்? சத்தியயுகத்தில் கலியுகமே கடந்த காலமாகும். அதன் வரலாற்றையும், புவியியலையும் செவிமடுப்பதில் என்ன நன்மை இருக்கும்? இங்கே நீங்கள் பாபாவுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். பாபாவே ஆசிரியரும், சற்குருவும் ஆவார். தந்தை அனைவருக்கும் சற்கதி அருளவே வந்துள்ளார். அவர் நிச்சயமாக ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது என மனிதர்கள் சரீர உணர்வினால் கூறுகின்றார்கள். ஆத்மாக்கள் அனைவரும் நீங்கிச் சென்ற பின்னர், களிமண்ணால் ஆக்கப்பட்ட பழைய சரீரங்கள் அழிக்கப்படும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாவாகிய நான், ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றேன். இந்த உலகில் இதுவே எனது இறுதிப் பிறவி. அனைவரும் தூய்மை அற்றவர்கள். எவரும் அநாதியாகத் தூய்மையானவராக இருக்க முடியாது; சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகள் நிச்சயமாக உள்ளன. அனைத்தும் கடவுளின் வடிவங்கள் எனவும், கடவுள் களிப்பூட்டுவதற்காகத் தனது பல வடிவங்களைப் படைத்தார் எனவும் அம்மக்கள் கூறுகின்றார்கள். எதன் கணக்கையும் அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை, களிப்பூட்டுபவர் யார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதுமில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து, உங்களுக்கு உலக வரலாற்றையும், புவியியலையும் விளங்கப்படுத்துகின்றார். ஒரு நாடகத்தில் ஒவ்வொருவரின் பாகமும் வேறுபட்டது. ஒவ்வொருவரின் தராதரமும் வேறுபட்டது. ஒருவர் வகிக்கும் தராதரம் எதுவோ, அது புகழப்படுகின்றது. தந்தை சங்கமயுகத்தில் இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் சத்தியயுகத்தின் பாகமே நடிக்கப்படுகின்றது. அங்கு இவ்விடயங்கள் இருக்க மாட்டாது. இங்கு இந்த உலகச் சக்கரத்தின் இந்த ஞானம் உங்கள் புத்தியில் சுழல்கின்றது. உங்கள் பெயர்: “சுயதரிதனச் சக்கரதாரிகள்”. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் சுயதரிதனச் சக்கரம் கொடுக்கப்படவில்லை. சக்கரம் இந்த நேரத்துக்கு உரியது. அசரீரி உலகில் ஆத்மாக்கள் மாத்திரம் வசிக்கின்றார்கள்; சூட்சும உலகில் எதுவுமேயில்லை. இங்கேயே மிருகங்கள், பறவைகள் போன்றவையும் மனிதர்கள் அனைவரும் இருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் மயில்கள் போன்றவற்றைக் காட்டுகின்றார்கள். அங்கு அவர்கள் மயில் இறகுகளைப் பிடுங்கி அவற்றை அணிய மாட்டார்கள். அங்கு, அவர்கள் மயிலுக்கு எந்த வலியையும் கொடுக்க மாட்டார்கள். ஒரு மயிலில் இருந்து விழுந்துள்ள இறகுகளைப் பொறுக்கித் தங்கள் கிரீடங்களில் அவற்றைப் பதிக்கவும் மாட்டார்கள், இல்லை. அவை கிரீடத்தில் பொய்யாகக் காட்டப்பட்டுள்ளன. அங்கு, அனைத்தும் அழகாக இருக்கின்றன. அங்கு அழுக்கான எவற்றினதும் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. நீங்கள் பார்த்தவுடனேயே விருப்பமின்மையை உணரும் வகையில் எதுவும் அங்கு இருக்காது. இங்கு, நீங்கள் விருப்பமின்மையை உணர்கின்றீர்கள். அங்கு, மிருகங்கள் கூட வேதனையை அனுபவம் செய்வதில்லை. சத்தியயுகம் முதற்தரமானது; அதன்பெயரே, புதிய உலகான, சுவர்க்கம். இங்கு, பழைய உலகில், மழையில் கட்டடங்கள் கூட வீழ்ந்து, மக்கள் மரணிக்கின்றார்கள். பூமியதிர்ச்சிகள் இடம்பெறும் பொழுது, அனைவரும் மண்ணில் புதையுண்டு மரணிக்கின்றார்கள். சத்தியயுகத்தில் மிகச்சொற்ப மனிதர்களே இருப்பார்கள், பின்னர் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முதலில், சூரிய வம்சம் இருக்கும். உலகம் 25வீதம் பழையதாகும் பொழுது, அது சந்திர வம்சம் என அழைக்கப்படும். சத்தியயுகம் 1250 வருடங்களுக்கு நீடிக்கின்றது; அது நூறுவீதம் புதிய உலகம். அங்கு தேவர்கள் ஆட்சி செய்கின்றார்கள். உங்களிற் பலர் இவ்விடயங்களை மறந்து விடுகின்றீர்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். உங்களுக்கு இதய வழுவல் ஏற்படக்கூடாது. இது முயற்சி செய்வதற்கான ஒரு விடயம். குழந்தைகளான உங்கள் அனைவரையும் முயற்சி செய்யுமாறு தந்தை சமமாகத் தூண்டுகின்றார். நீங்கள், உங்களுக்காகவே பூமியில் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் என்ன ஆகுவீர்கள் என உங்களைச் சோதித்துப் பாருங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அதிமேன்மையான யுகத்தில் சுவர்க்கத்தின் தேவர்கள் ஆகுவதற்கான இந்தக் கல்வியைக் கற்று, உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குங்கள். உங்கள் முயற்சிகளில் இதய வழுவலைக் கொண்டிராதீர்கள். (மனந் தளராதீர்கள்.)

2. இந்த எல்லையற்ற நாடகத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் சொந்த, தனிப்பட்ட பாகமும், தராதரமும் உள்ளன. ஒவ்வொருவரும் தனது தராதரத்துக்கேற்ப மரியாதையைப் பெறுகின்றார். இந்த இரகசியங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டு, உலக வரலாற்றையும் புவியியலையும் கடைந்து, ஒரு சுயதரிசனச் சக்கரதாரி ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் ஒவ்வொரு மேன்மையான வழிகாட்டலையும் (ஸ்ரீமத்) கடைப்பிடிக்கின்ற உண்மையிலேயே அன்பான, அன்பிற்கினிய ஆத்மா ஆகுவீர்களாக.

ஒரேயொரு தந்தைக்கான இந்த அன்பில் குழந்தைகள் சதா அமிழ்ந்துள்ளார்கள். அவர்கள் தந்தையால் பேசப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நேசிப்பதுடன், அவர்களின் கேள்விகளும் முடிவடைகின்றன. பிராமணப் பிறப்பின் அத்திவாரமே அன்பாகும். அன்பான, அன்பிற்கினிய ஆத்மாக்கள் தந்தையின் ஸ்ரீமத்தைக் கடைப்பிடிப்பதில் எந்தச் சிரமத்தையும் அனுபவம் செய்வதில்லை. அவர்களின் அன்பு காரணமாக அவர்கள் பாபா கூறுகின்ற எதற்கும் சதா உற்சாகத்தைக் கொண்டிருக்கின்றனர். அது தங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் என்று எண்ணி, தாங்கள் அதனைச் செய்ய வேண்டும் என்றும் எண்ணுகின்றார்கள். அன்பான ஆத்மாக்களுக்குப் பெரிய இதயங்கள் இருப்பதால், அவர்களுக்குப் பெரிய விடயமும் சிறியதாகி விடுகின்றது.

சுலோகம்:
எதனைப் பற்றியும் உணர்ச்சி வசப்படுகின்ற உணர்வுகளைக் கொண்டிருப்பது தோல்வியின் அறிகுறி ஆகும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

எரிமலை ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, உங்கள் நினைவு எனும் அக்கினியை ஏற்றி வைத்திருங்கள். இதனைச் செய்வதற்கு இலகுவான வழி, சதா உங்களை ஓர் இரத ஓட்டியாகவும், பற்றற்ற பார்வையாளராகவும் கருதுங்கள். ஆத்மாவாகிய நீங்கள் உங்கள் இரதத்தின் சாரதி. இவ் விழிப்புணர்வு உங்களை உங்களுடைய சரீரத்திலிருந்தும், எவ்வகையான சரீர உணர்விலிருந்தும் பற்றற்றவர் ஆக்கும். உங்களை ஓர் இரத ஓட்டியாகக் கருதுவதனால், உங்கள் பௌதீக அங்கங்கள் அனைத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும். உங்கள் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் எனும் உங்கள் சூட்சும சக்திகள் கூட ஒழுங்கில் இருக்கின்றன.