12.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மிக மேன்மையான குலத்தவர்கள். நீங்கள் பிராமணர்களில் இருந்து, தேவர்களாக மாறவேண்டும் என்பதால் விகாரங்கள் நிறைந்த தீய பழக்கங்கள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.
கேள்வி:
இந்தக் கல்வியுடன் சம்பந்தமில்லாத விடயம் என்ன?பதில்:
எவ்வாறு நீங்கள் ஆடை அணிகின்றீர்கள் என்பது இந்தக் கல்வியுடன் சம்பந்தமில்லாத விடயம். இங்கே உங்களின் ஆடையை மாற்றுவது என்ற கேள்வி இல்லை. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது ஒரு பழைய, தூய்மையற்ற சரீரமென்றும் அதற்கு எந்தவித சாதாரண ஆடையை அணிந்தாலும் பரவாயில்லை என்றும் ஆத்மா அறிவார். ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே தூய்மை அற்றவை. தந்தை தூய்மை அற்றவர்களை மாற்றி, அழகானவர்கள் ஆக்குகின்றார்.ஓம் சாந்தி.
ஆன்மீகப் பாடசாலையில், ஆன்மீகக் குழந்தைகள், ஆன்மீகத் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். இது லௌகீகப் பாடசாலை அல்ல. ஆன்மீகத் தந்தை ஆன்மீகப் பாடசாலையில் அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து, நாராயணனாக மாறுவதற்காக, அதாவது மீண்டும் ஒருமுறை தேவ அந்தஸ்தைக் கோருவதற்காக, ஆன்மீகத் தந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது புதிய விடயம். முன்னர் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது என்றும், அவர்கள் இரட்டைக் கிரீடம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர்கள் ஒளியாலான கிரீடத்தையும், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தையும் இரண்டையும் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் ஒளியாலான கிரீடத்தைக் கொண்டிருந்தார்கள். இங்கேயிருந்து பின்னர் சென்றவர்கள் அவர்ளைச் சுற்றி வெண்ணிற ஒளிவட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அது தூய்மையின் அடையாளம். தூய்மை அற்றவர்களை ஒருபோதும் ஒளிவட்டத்துடன் காட்டமுடியாது. உங்களுடைய புகைப்படம் எடுக்கப்படும்போது அதில் ஒளிவட்டம் காட்டப்பட முடியாது. அவர்கள் அதைத் தூய்மையின் அடையாளமாகப் பயன்படுத்துகின்றார்கள். ஒளியும் இருளும்: பிரம்மாவின் பகல் ஒளி, பிரம்மாவின் இரவு இருள். இருள் என்றால் அவரைச்சுற்றி ஒளி இல்லை என்று அர்த்தம். தந்தை மாத்திரமே வந்து அவலட்சணமானவர்களையும், தூய்மை அற்றவர்களையும் மாற்றி அவர்களைத் தூய்மை ஆக்குகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தூய இராச்சியம் இப்பொழுது இல்லை. சத்தியயுகத்தில் அரசன், அரசி எப்படியோ பிரஜைகளும் அப்படியே. அனைவரும் தூய்மையானவர்கள். அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் படத்தைப் பயன்படுத்தி மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். இதுவே உங்களின் இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு மேலும் மிக நல்ல படங்கள் உள்ளன. இதனாலேயே பல படங்கள் இங்கேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவு யாத்திரையின் மூலம் அவர்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாகி, பின்னர் முக்திக்கும் ஜீவன்முக்திக்கும் செல்வார்கள் என்பதை மக்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஜீவன்முக்தி என்றால் என்ன என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எப்பொழுது இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து தூய்மையான தேவ இராச்சியத்தைக் கோருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் படங்களைப் பயன்படுத்தி மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். பாரதத்திலேயே அவர்கள் இரட்டைக் கிரீடம் தரித்தவர்களைப் பூஜிக்கின்றார்கள். ஏணிப்படத்தில் அவ்வாறான ரூபம் உள்ளது. அவர்களிடம் அந்தக் கிரீடம் உள்ளது. ஆனால் ஒளிக்கிரீடம் இல்லை. தூய்மையானவர்கள் மாத்திரமே பூஜிக்கப்படுகின்றார்கள். தூய்மையின் அடையாளம் ஒளியாகும். சிம்மாசனத்தில் எவராவது அமரும்போது, ஒளி வெளிப்படும் என்றில்லை. இல்லை, அது தூய்மையின் அடையாளம். இப்பொழுது நீங்கள் முயற்சியாளர்கள், இதனாலேயே உங்களை அந்த ஒளிக்கிரீடத்துடன் காட்டமுடியாது. தேவர்களின் ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையானவை. இங்கே எவருக்கும் தூய சரீரமில்லை. இதனாலேயே அவர்களை அந்த ஒளியுடன் காட்ட முடியாது. உங்களுக்குள்ளேயும் சிலர் முற்றிலும் தூய்மையாகவும், சிலர் அரைவாசி தூய்மையாகவும் இருக்கின்றீர்கள். அவர்களுக்கு மாயையின் புயல்கள் இருப்பதால் அவர்கள் அரைவாசி தூய்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சிலர் முற்றிலும் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும். ஆத்மாக்களே தூய்மை அற்றவர்கள் ஆகின்றமையால், ஒளியுடன் காட்ட முடியாதுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் அதியுயர்ந்த தந்தையின் குழந்தைகள் என்பதை மறக்கக்கூடாது, ஆகவே உங்களிடம் அதிகளவு இராஜரீகம் இருக்கவேண்டும். உதாரணமாக கழிவறை சுத்தப்படுத்தும் ஒருவர் ஒரு எம்.எல்.ஏ ஆக அல்லது எம்.பி ஆக அல்லது நன்றாகக் கற்று பிரத்தியேக அந்தஸ்தை அடைகின்றபோது, அவர் மிகவும் நேர்த்தியானவர் ஆகின்றார். அவ்வாறான பலர் உள்ளனர். அவர் அதே ஜாதியினராக இருந்தபோதும் அந்த அந்தஸ்தை அடைகின்றபோது, மிகவும் போதை உடையவராகி அதற்கேற்ற ஆடையை அணிகின்றார். அதேபோன்று, நீங்களும் இப்பொழுது தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மையாகுவதற்காகக் கற்கின்றீர்கள். அவர்களது கல்வியின் மூலம் அவர்கள் ஒரு வைத்தியராகவோ, அல்லது சட்டத்தரணியாகவோ ஆகுகின்றனர். ஆயினும் அவர்களும் தூய்மை அற்றவர்களே, ஏனெனில் அவர்களது கல்வி தூய்மை ஆகுவதற்கானது அல்ல. நீங்கள் எதிர்காலத்தில் தேவர்கள் ஆகுவீர்கள் என அறிந்திருப்பதால், சூத்திரப் பழக்கங்கள் தொடர்ந்தும் அகற்றப்படுகின்றன. பரமதந்தை பரமாத்மா உங்களை இரட்டைக்கிரீடம் உள்ளவர்களாக ஆக்குகின்றார் என்ற போதையை நீங்கள் உள்ளாரக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் சூத்திரர்களில் இருந்து, பிராமணர்களாக மாறுகின்றோம், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுவோம், எனவே அந்தக் கண்ணியமற்ற, விகாரமான பழக்கங்கள் முடிக்கப்பட வேண்டும். அசுர விடயங்கள் அனைத்தும் துறக்கப்பட வேண்டும். கழிவறை சுத்தம் செய்கின்ற ஒருவர் எம்.பி யாக ஆகுகின்றபோது அவரது வாழ்க்கை முறை, வசிப்பிடம் போன்றவை அனைத்தும் முதல் தரமாக இருக்கும். அவர்களுடையது இந்த நேரத்திற்கு உரியது. நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். உங்களுடன் இவ்வாறு பேசுங்கள்: நான் முன்னர் எவ்வாறு இருந்தேன், இப்பொழுது நான் எவ்வாறு ஆகியுள்ளேன்? நீங்களும் சூத்திரகுலத்திற்குச் சொந்தமாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஒருவர் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றபோது, அவருக்கு அந்தப் போதை இருக்கும். எனவே நீங்கள் யாராக இருந்தீர்கள்? நீங்கள் தூய்மையற்றும், அவலட்சணமாகவும் இருந்தீர்கள். இப்பொழுது கடவுள் உங்களுக்குக் கற்பித்து, உங்களை எல்லையற்றதன் அதிபதிகள் ஆக்குகின்றார். பரமதந்தை, பரமாத்மா நிச்சயமாக இங்கே வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் அதை அசரீரி உலகிலோ, அல்லது சூட்சும உலகிலோ கற்பிக்க மாட்டார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் தூரதேசவாசிகள் ஆவீர்கள். உங்களுடைய பாகங்களை நடிக்கவே நீங்கள் இங்கே வருகின்றீர்கள். 84 பிறவிகளின் பாகங்கள் நடிக்கப்பட வேண்டும். அவர்கள் 8.4 மில்லியன் ஜீவராசிகள் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்றும், இப்பொழுது தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள் எனவும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! ஆயினும் உங்களைத் தூய்மையாக்கத் தந்தை தானே வந்துள்ளார் என்பதையும் அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. கற்காது எவருமே உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. பாபா உங்களுக்குக் கற்பித்து உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு முன்னே இலக்கும் குறிக்கோளும் உள்ளன. ஒரு பிரஜையின் அந்தஸ்தை அடைவது, உங்கள் இலக்கும் குறிக்கோளும் அல்ல. இலக்ஷ்மி, நாராயணனின் படமும் உள்ளது. வேறு எங்கே அவர்கள் இவ்வாறான படங்களுடன் உங்களுக்குக் கற்பிப்பார்கள்? உங்கள் புத்திகளில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளன. நாங்கள் 84 பிறவிகள் எடுத்ததால் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம். ஏணிப்படம் மிக நல்லது. இதுவே தூய்மையற்ற உலகம் ஆகும். இதில் சாதுக்கள், புனிதர்கள் அனைவருமே அடங்குகின்றனர். அவர்களும் தொடர்ந்து பாடுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தூய்மையற்ற உலகைத் தூய்மையான உலகம் என்று அழைக்க முடியாது. புதிய உலகமே தூய உலகமாகும். தூய்மையான எவருமே பழைய, தூய்மையற்ற உலகில் இருக்க முடியாது. நீங்கள் இறை தந்தையின் மாணவர்கள், கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையடைய வேண்டும். தந்தை வந்து, ஏழைகளுக்கே கற்பிக்கின்றார். ஏழை மக்களின் ஆடைகள் மிக அழுக்கானவை. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். இது ஒரு பழைய சரீரம், சாதாரண ஆடை அணிந்தாலும் பரவாயில்லை என்பதை ஆத்மா அறிவார். ஆடையை மாற்றுவது, அல்லது எந்தவிதமான பகட்டு போன்றவை பற்றிய கேள்வியே இல்லை. எவ்வாறு நீங்கள் ஆடை அணிகின்றீர்கள் என்பதற்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கே கற்பிக்கின்றார். சரீரம் தூய்மையற்றது, நீங்கள் அதற்கு மிக நல்ல ஆடை அணிவித்தாலும் ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை அற்றதாகவே உள்ளன. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் ரூபத்தை கருநீலமாகக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் அவரது ஆத்மாவும் சரீரமும் அவலட்சணமானதுடன் அவர் ஒரு கிராமத்துச் சிறுவனாகவும் இருந்தார். நீங்கள் அனைவருமே கிராமத்துச் சிறுவர்களாக இருந்தீர்கள். உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் அநாதைகள், அவர்கள் தந்தையை அறியமாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஓர் எல்லைக்கு உட்பட்ட தந்தை இருக்கின்றார். ஆனால் பிராமணர்களாகிய நீங்களே எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டுள்ளீர்கள். எல்லையற்ற தந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இந்த ஞானம் உள்ளது, அத்துடன் பக்தியும் உள்ளது. பக்தி முடியும்போதே தந்தை வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இப்பொழுது இது முடிவிற்கான நேரம். இந்த விடயங்கள் எதுவும் சத்தியயுகத்தில் இருக்கமாட்டாது. பழைய உலகம் இப்பொழுது அழியப்போகின்ற நிலையை அடைந்துள்ளது. தூய உலகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இது படங்களிலே மிகத்தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ராதையும் கிருஷ்ணரும் பின்னர் இலக்ஷ்மி, நாராயணன் ஆகின்றனர். எவருக்கும் இது தெரியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு இராச்சியத்துக்குச் சொந்தமானவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சத்தியயுக திருமண வைபவத்தைப் பார்த்துள்ளீர்கள். பாகிஸ்தானில் நீங்கள் களிப்பூட்டுவதற்காக சகலவிதமான வாத்தியங்களையும் வைத்திருந்தீர்கள். நீங்கள் அனைத்துக் காட்சிகளையும் கண்டீர்கள். நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இதை மறக்கக்கூடாது. நீங்கள் சமைப்பவர் அல்லது பாத்திரங்கள் கழுவுபவர் ஆயினும் ஒவ்வொருவரதும் ஆத்மாவே கற்கின்றார். அனைவரும் இங்கே வந்து அமர்ந்திருக்கின்றனர். பிரபல்யமான மக்கள் இங்கே வருவதில்லை, ஏனெனில் ஏழைகளே இங்கு வருகின்றனர் என அவர்கள் நம்புவதால் தர்மசங்கடமாக உணர்கின்றனர். தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். கழிவறை சுத்தம் செய்பவர்களும் கூட சில நிலையங்களுக்கு வருகின்றார்கள். இஸ்லாமியரும் வருகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: சரீரத்துக்கான சமயங்கள் அனைத்தையும் துறவுங்கள். நான் குஜராத்தி, நான் இன்னார், இன்னார் என்பவை அனைத்தும் சரீர உணர்வாகும். இங்கே பரமதந்தையே ஆத்மாக்களாகிய உங்களுக்கு கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். சாதாரணமானவர்களே, சாதாரணமானவரிடம் வருகின்றார்கள். இவர் ஒரு வைர வியாபாரியாக இருந்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னைய கல்;பத்தில் அவர் உங்களுக்கு என்ன கூறினார் எனத் தந்தை தானே நினைவூட்டுகின்றார். நான் ஒரு சாதாரண, வயதான சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். நான் அவரது பல பிறவிகளின் கடைசிப்பிறவியில் இவரினுள் பிரவேசிக்கின்றேன். உங்களுடைய சொந்தப்பிறவிகள் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள் என நான் அவருக்குக் கூறுகின்றேன். அவர் குதிரை இரதத்தில் இருந்தவண்ணம் அர்ஜுனனுக்கு மாத்திரம் இந்த ஞானத்தைக் கொடுக்கவில்லை. அதை ஒரு பாடசாலை என்று அழைக்க முடியாது. இது ஒரு யுத்தகளம் கிடையாது. இது ஒரு கல்வியாகும். குழந்தைகளாகிய நீங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் முழுமையாகக் கற்று இரட்டைக்கிரீடம் அணிந்தவர்களாக ஆகவேண்டும். இப்பொழுது எம்மிடம்; எந்தக்கிரீடமும் இல்லை. நாங்கள் எதிர்காலத்தில் இரட்டைக் கிரீடம் உள்ளவர்களாக ஆகப்போகின்றோம். துவாபரயுகத்தில் ஒளிக்கிரீடம் மறைந்து, ஒரு கிரீடமே மீதம் இருந்தது. ஒற்றைக் கிரீடம் உள்ளவர்கள், இரட்டைக்கிரீடம் உள்ளவர்களைப் பூஜிக்கின்றார்கள். இதனுடைய அடையாளம் நிச்சயமாக இருக்க வேண்டும். பாபா படங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் உங்களுக்குக் கொடுக்கின்றார். எனவே இந்தப் படங்களை உருவாக்குபவர்கள் முரளியிலே அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். கல்லூரிகளில் அவர்கள் உலகப்படத்தில் ஐரோப்பா இந்தப் பக்கத்திலும், அயர்லாந்து அந்தப் பக்கத்திலும், லண்டன் இந்தப் பக்கத்திலும் இருக்கின்றது எனக் காட்டும்போது அவை அவர்களின் புத்திகளில் பதிவதைப் போல, எவருக்கும் படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். அவர் உலகப்படத்தை பார்க்கவில்லை என்றால், ஐரோப்பா எங்கே உள்ளது என எவ்வாறு அறிந்து கொள்வார்? உலகப்படத்தைப் பார்ப்பதனால் அது அவரது புத்தியில் விரைவாகப் பதியும். பூஜிக்கத்தக்க இரட்டைக்கிரீடம் தரித்த தேவர்கள் உச்சியில் உள்ளார்கள் என நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பின்னர் அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கும் போது, அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்குகின்றார்கள். இந்த ஏணிப்படம் புரிந்து கொள்வதற்கு மிக இலகுவானது, எவருமே அதைப்புரிந்து கொள்ள முடியும். ஆயினும், சிலரது புத்தியில் எதுவுமே இருப்பதில்லை. அவர்களது பாக்கியம் அவ்வளவுதான்! மாணவர்கள் பாடசாலையில் சித்தியடைகின்றனர் அல்லது தோல்வி அடைகின்றனர். அது அவர்களது பாக்கியத்தில் இல்லையெனில் முயற்சி செய்யாதிருப்பதுடன், நோய்வாய்ப்படுவதால், அவர்களால் கற்க முடியாதிருக்கும். சிலர் முழுமையாகக் கற்கின்றனர். ஆனால் அது லௌகீகக் கல்வி, இதுவோ ஆன்மீகக்கல்வி ஆகும். இதற்கு ஒரு தங்கப்புத்தி தேவை. என்றென்றும் தூய்மையான, தங்கமான கடவுளை நினைவு செய்வதனால் ஆத்மாக்களாகிய நீங்களும் தொடர்ந்தும் தங்கம் போன்று ஆகுவீர்கள். கூறப்பட்டுள்ளது: இவர் கூழாங்கற்கள் போன்ற புத்தியுடையவர். அங்கே அவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. அது சுவர்க்கம். பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். நீங்கள் கண்காட்சிகளில் இதை விளங்கப்படுத்துவதுடன், பின்னர் அவர்களை மறுபடியும் கூறவைக்கலாம். இதைப் புரொஜெக்டருடன் செய்ய முடியாது. முதலில் திரிமூர்த்தி, இலக்ஷ்மி, நாராயணன், ஏணிப்படம் போன்றவை மிகவும் முக்கியமானவை. 84 பிறவிகளின் முழு ஞானமும் இலக்ஷ்மி நாராயணன் படத்தில் அடங்குகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் நாள் முழுவதும் சதா இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நிலையத்திலும் பிரதான படங்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். மக்கள் படங்களிலிருந்து மிக நன்றாக புரிந்து கொள்வார்கள். இந்த இராச்சியம் பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் ஆவோம். முன்னர் நாங்கள் சூத்திர குலத்திற்குச் சொந்தமாக இருந்தோம், இப்பொழுது நாங்கள் பிராமண குலத்திற்குச் சொந்தமானவர்கள். நாங்கள் பின்னர் தேவர்கள் ஆகுவோம். சிவபாபா எங்களைச் சூத்திரர்களில் இருந்து, பிராமணர்கள் ஆக்குகின்றார். எங்களது இலக்கும் குறிக்கோளும் எங்களின் முன்னால் உள்ளன. இலக்ஷ்மி, நாராயணன் உலக அதிபதிகளாக இருந்தார்கள், எனவே அவர்கள் எவ்வாறு ஏணியில் கீழிறங்கினார்கள்? அவர்கள் எவ்வாறானவர்களில் இருந்து, இவ்வாறு ஆகியுள்ளார்கள் எனப்பாருங்கள். அவர்கள் முழுமையாக புத்தியற்றவர்கள் ஆகிவிட்டனர். இலக்ஷ்மி நாராயணன், பாரத இராச்சியத்தை அரசாண்டார்கள், பின்னர் என்ன நடந்தது? அவர்கள் எங்கே சென்றார்கள்? என பாரதமக்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்களை எவராவது வெற்றி கொண்டார்களா? அவர்கள் யுத்தத்தில் எவரையாவது தோற்கடித்தார்களா? அவர்கள் யாரையும் வெற்றி கொள்ளவும் இல்லை, தோற்கடிக்கப்படவும் இல்லை. இவை அனைத்தும் மாயையின் விடயங்களே. இராவண இராச்சியம் ஆரம்பமானவுடன் அவர்கள் ஐந்து விகாரங்களுக்குள் வீழ்ந்து இராச்சியத்தை இழந்தார்கள். பின்னர் ஐந்து விகாரங்களையும் வெற்றி கொண்டு, மீண்டும் அவ்வாறு ஆகுகின்றனர். இப்பொழுது இது இராவண இராச்சியத்தின் பகட்டு. நாங்கள் மறைமுகமான முறையில் எங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். நீங்கள் சாதாரணமானவர்கள், உங்களுக்குக் கற்பிப்பவர் அதிமேன்மையானவர். அசரீரியான தந்தை ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்களையே அவ்வாறு (இலக்ஷ்மி, நாராயணன்) ஆக்குகின்றார். அவர் தூரதேசத்தில் இருந்து, தூய்மையற்ற உலகிற்கு வந்து, தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றார். இருந்தபோதிலும் அவர் தன்னை இலக்ஷ்மி, அல்லது நாராயணன் ஆக்குவதில்லை. அவர் குழந்தைகளாகிய உங்களையே அப்படி ஆக்குகின்றார். ஆயினும் நீங்கள் அப்படி ஆகுவதற்கு முழு முயற்சி செய்வதில்லை. நீங்கள் இரவு பகலாகக் கற்று, ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும். நாளுக்கு நாள் பாபா மிக இலகுவான வழிமுறைகளை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இலக்ஷ்மி, நாராயணனுடனேயே விளக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்தார்கள்? அவர்கள் இப்பொழுது அவர்களுடைய கடைசிப்பிறவியில் கற்கின்றார்கள். பின்னர் அவர்களது வம்சம் உருவாக்கபடும். விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு விடயங்கள் உள்ளன. படங்களுக்கான வழிகாட்டல்களை பாபா உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் ஒரு படத்தை உருவாக்கும் போது, பாபாவிடம் ஓடிவர வேண்டும். பாபா அதைத் திருத்தி மேலும் வழிகாட்டல்களைக் கொடுப்பார். பாபா கூறுகின்றார்: நான் சக்கரவர்த்திகள் அனைவருக்கும் சக்கரவர்த்தி ஆவேன். உங்களுடைய பொக்கிஷக் களஞ்சியமும் நிரம்பும். எதைப்பற்றிய கவலையும் இருக்கக்கூடாது. பல குழந்தைகள் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். எவரின் மூலம் பொக்கிஷக் களஞ்சியத்தை நிறைக்க முடியும் என பாபா அறிவார். ஜெய்ப்பூரை முழுமூச்சுடன் உயர்வடையச் செய்வதற்கான எண்ணத்தை பாபா கொண்டிருந்தார். அங்கே ஹத்தயோகிகளின் அருங்காட்சியகம் உள்ளது. உங்கள் இராஜயோக அருங்காட்சியகமும் எவரும் வந்து பார்க்கக் கூடியவகையில் கவர்ச்சிகரமாக உருவாக்கப்பட வேண்டும். அச்சா.இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை, ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியில் இந்தத் தூய ஞானத்தைக் கிரகிப்பதற்கு, உங்களின் புத்தி எனும் பாத்திரத்தைத் தங்கமாக ஆக்குங்கள். நினைவின் மூலம் மட்டுமே பாத்திரம் தங்கமாக மாறும்.2. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், எனவே சூத்திர பழக்கங்கள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். மிகுந்த இராஜரீகத்துடன் வாழுங்கள். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற போதையைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலியாகி, சங்கமயுகத்தில் ஒன்றுக்குப் பதிலாக நூறு மடங்கைப் பெற்றுக் கொள்வீர்களாக.சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் ஒன்றுக்குப் பதிலாக நூறு மடங்கு நடைமுறைப் பலனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நான் தந்தைக்குச் சொந்தமானவன், நான் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற எண்ணத்தை ஒரு தடவை நீங்கள் ஏற்படுத்தியதும் மாயையை வென்றவராகவும் வெற்றியாளராகவும் இருக்கும் போதையை அனுபவம் செய்வீர்கள். இந்த மேன்மையான எண்ணத்தைக் கொண்டிருப்பதே விதை ஆகும். அதன் மிகப் பெரிய பழம், பரமாத்மாவான தந்தையே ஒரு மனித வடிவில் வந்து உங்களைச் சந்திப்பதாகும். இந்தப் பழத்திற்குள் அனைத்துப் பழங்களும் அடங்கும்.
சுலோகம்:
உண்மையான பிராமணரின் முகமும் நடத்தையும் தூய்மையின் ஆளுமை மற்றும் இராஜரீகத்தின் அனுபவத்தைக் கொடுக்கும்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
தற்சமயம், ஆத்மாக்கள் பலரும் தங்களை ஈடேற்றும் விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களிடம் அதற்கான தைரியமோ அல்லது சக்தியோ கிடையாது. மற்றவர்களை ஈடேற்றும் குழந்தைகளான நீங்கள், இத்தகைய பலவீனமான ஆத்மாக்களை ஈடேற்றுவதற்குக் கருவிகள் ஆகுவீர்கள். உண்மையான இதயத்தை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே உங்களால் மற்றவர்களை ஈடேற்ற முடியும். உலக இராச்சிய அதிகாரத்தின் உரிமையைக் கொண்டிருப்பதற்கு, உங்களை ஈடேற்றுவதன் கூடவே, நீங்கள் மற்றவர்களையும் ஈடேற்ற வேண்டும்.