13.07.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    03.02.2006     Om Shanti     Madhuban


கடவுள் மீது உங்களுக்கு உள்ள அன்பால், வீணானவற்றின் பெயரோ அல்லது சுவடோ இல்லாதவாறு உங்களின் ஸ்திதியை சம்பூரணமாகத் தூய்மை ஆக்குங்கள்.


இன்று, பாப்தாதா இறைவனால் நேசிக்கப்படும் எங்கும் உள்ள தனது குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். முழு உலகிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட சிலர் மட்டுமே இறையன்பிற்கான உரிமையைக் கொண்டவர்கள் ஆகுகிறார்கள். இறையன்பு மட்டுமே குழந்தைகளான உங்களை இங்கே வரவழைத்து உள்ளது. கல்பம் முழுவதிலும் இந்த வேளையில் மட்டுமே நீங்கள் இறையன்பை அனுபவம் செய்கிறீர்கள். ஏனைய வேளைகளில் எல்லாம், நீங்கள் ஆத்மாக்கள், மகாத்மாக்கள் மற்றும் மதச்சார்புள்ள ஆத்மாக்களிடம் இருந்து அன்பை அனுபவம் செய்துள்ளீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இறையன்பைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் ஆகியுள்ளீர்கள். இறைவன் எங்கே என யாராவது கேட்டால் நீங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்? தந்தையாகிய இறைவன் எங்களுடன் இருக்கிறார், நாங்கள் அவருடனேயே வாழ்கிறோம். இறைவனால் நாங்கள் இன்றி இருக்க முடியாது, எங்களாலும் இறைவன் இன்றி இருக்க முடியாது. நீங்கள் அதிகளவு அன்பை அனுபவம் செய்கிறீர்கள். இறைவன் உங்களின் இதயத்தில் வாழ்வதாகவும் நீங்கள் அவரின் இதயத்தில் வாழ்வதாகவும் நீங்கள் போதையுடன் கூறுவீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள்தானே? நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்களா? உங்களின் இதயத்தில் என்ன உள்ளது? நாங்கள் இதில் அனுபவசாலிகள் ஆகாவிட்டால், வேறு யார்தான் அப்படி இருப்பார்கள்? இத்தகைய அன்பின் உரிமையைப் பெற்றுள்ள குழந்தைகளைக் காண்பதில் தந்தையும் மகிழ்ச்சி அடைகிறார்.

இறைவனின் மீது அன்பு வைத்திருப்பதன் அடையாளம்: நீங்கள் அன்பு வைத்திருப்பவருக்காக எல்லாவற்றையும் இலகுவாக அர்ப்பணிக்கத் தயாராக இருப்பீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் தந்தை எப்படி ஆகவேண்டும் என விரும்பினாரோ, அப்படி ஆகிவிட்டீர்கள்தானே? அப்போது ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குச் சமமாக ஆகுவதுடன் ஒவ்வொருவரின் முகத்திலும் தந்தை புலப்படுவார். பாப்தாதாவிற்குப் பிடித்தமான ஸ்திதி என்னவென்று உங்களுக்குத் தெரியும்தானே? சம்பூரணமான தூய்மை என்ற ஸ்திதியையே தந்தை விரும்புகிறார். சம்பூரண தூய்மையே இந்த பிராமண வாழ்க்கையின் அத்திவாரம். சம்பூரணமான தூய்மையின் ஆழம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களின் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ தூய்மையின்மையின் பெயரோ அல்லது சுவடோ சிறிதளவேனும் இருக்கக்கூடாது. தற்காலத்தின் நேரத்தின் நெருக்கத்திற்கேற்ப, பாப்தாதா மீண்டும் மீண்டும் உங்களின் கவனத்தை இந்த விடயத்தின் மீது ஈர்க்கிறார் - சம்பூரணமான தூய்மையைப் பொறுத்தவரை, வீணான எண்ணங்கள் இருந்தால் அது முழுமைநிலை இல்லை. எனவே, சோதித்துப் பாருங்கள்: உங்களுக்குள் ஏதாவது வீணான எண்ணங்கள் இருக்கின்றனவா? எந்த வகையான எண்ணங்களும் உங்களின் முழுமை நிலையில் இருந்து தொலைவில் அழைத்துச் செல்லவில்லையே என்பதைச் சோதித்துப் பாருங்கள். எந்தளவிற்கு நீங்கள் உங்களின் முயற்சிகளில் தொடர்ந்து முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு வீணான எண்ணங்கள் உங்களின் நேரத்தை இராஜரீகமான முறையில் வீணாக்கவில்லையே என்பதை அதிகளவில் சோதித்துப் பார்க்க வேண்டும். அகங்காரமும் அவமதிக்கப்பட்ட உணர்வும் வீணான எண்ணங்களின் வடிவில் இராஜரீகமான முறையில் உங்களைத் தாக்குகின்றனவா? அகம்பாவத்தினால் யாராவது ஒருவர் இறை பரிசாகக் கிடைத்த தனது சிறப்பியல்பை, தன்னுடைய சிறப்பியல்பாகக் கருதினால், அந்தச் சிறப்பியல்பின் அகம்பாவம் அவரைக் கீழே கொண்டு வந்துவிடும். அது ஒரு தடையாகிவிடும். அத்துடன் உங்களுக்குத் தெரிந்த சூட்சும வடிவத்தில் வருகின்ற அகங்காரம், ‘எனது’ என்ற உணர்வைக் கொண்டிருக்கும்: ‘எனது பெயர், எனது கௌரவம் இருக்க வேண்டும்’. ‘எனது’ என்ற இந்த உணர்வானது, அகங்காரத்தின் வடிவத்தை எடுக்கிறது. இந்த வீணான எண்ணங்கள் உங்களை முழுமை நிலையில் இருந்து அப்பால் கொண்டு செல்கின்றன. பாப்தாதா நீங்கள் எந்தவோர் அகங்காரத்தையோ அல்லது அவமதிக்கப்பட்ட உணர்வையோ கொண்டிருக்காமல், உங்களின் சுயமரியாதையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இவையே வீணான எண்ணங்கள் வருவதற்கான காரணங்கள் ஆகும்.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் இரட்டை அதிபதியாக நம்பிக்கையுடனும் போதையுடனும் இருப்பதைக் காண விரும்புகிறார். இரட்டை அதிபதி என்றால் என்ன? முதலில், நீங்கள் தந்தையின் பொக்கிஷங்களின் அதிபதிகள். இரண்டாவதாக, நீங்கள் சுய இராச்சிய அதிகாரத்தின் அதிபதிகள். நீங்கள் இரண்டு வகையான அதிபதிகள். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் குழந்தைகளும் அத்துடன் அதிபதிகளும் ஆவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் ‘எனது பாபா’ எனச் சொல்வதனால் குழந்தைகள் ஆகியிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். எனவே, ‘எனது பாபா’ எனச் சொல்வது என்றால் நீங்கள் எப்படியும் குழந்தைகள் என்றே அர்த்தம். எவ்வாறாயினும், குழந்தையாக இருப்பதுடன் கூடவே, இரண்டு வகையான அதிபதிகளும் ஆகுங்கள். ஓர் அதிபதி ஆகுவதில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். எனவே, ‘நான் ஒரு குழந்தை, அத்துடன் நான் ஓர் அதிபதி’. நீங்கள் ஆஸ்தியின் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, ஒரு குழந்தையாக இருக்கும் நம்பிக்கையும் போதையும் உங்களிடம் உள்ளன. ஆனால் நீங்கள் நடைமுறையில் ஓர் அதிபதியாக இருக்கும் நம்பிக்கையையும் போதையையும் கொண்டிருப்பதில் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். சுய இராச்சிய அதிகாரத்தின் உரிமையைக் கொண்டவர் ஆகுவதில், குறிப்பாக உங்களின் மனமே உங்களுக்குத் தடைகளை உருவாக்குகிறது. உங்களின் மனதின் அதிபதி ஆகுங்கள். உங்களின் மனதின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். உங்களிடம் சுய இராச்சிய அதிகாரம் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, சுய இராச்சிய அதிகாரி என்றால் ஓர் அரசர் என்றே அர்த்தம். தந்தை பிரம்மா ஒவ்வொரு நாளும் தன்னைச் சோதித்தார். அவர் தனது மனதின் அதிபதி ஆகியதுடன், உலக அதிபதி ஆகுவதற்கான உரிமையையும் பெற்றுக் கொண்டார். அதேபோல், உங்களின் மனதும் புத்தியும் அரசரான உங்களின் அமைச்சர்கள். ஆகவே, உங்களின் மனதில் அந்த வீணான எண்ணங்கள் தோன்றும்போது, உங்களின் மனமே வீணான எண்ணங்களால் உங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. உங்களின் மனதைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, உங்களையே சோதித்துப் பாருங்கள். மனம் விஷமத்தனம் செய்வதால் மனம் ஒரு குதிரை போன்றது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் உங்களிடம் ஸ்ரீமத் என்ற கடிவாளங்கள் உள்ளன. ஸ்ரீமத் என்ற கடிவாளங்கள் சிறிது தளர்வடைந்தாலும், உங்களின் மனம் விஷமத்தனம் செய்ய ஆரம்பித்துவிடும். கடிவாளங்கள் ஏன் தளர்வடைகின்றன? ஏனென்றால், எங்கேயோ நீங்கள் பக்கக் காட்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். கடிவாளங்கள் தளர்வடையும்போது, மனமும் அதன் வாய்ப்பை எடுத்துக் கொள்கிறது. அதனால் சதா இந்த விழிப்புணர்வை வைத்திருங்கள்: நான் ஓர் அதிபதி, அத்துடன் ஒரு குழந்தை. நீங்கள் பொக்கிஷங்களின் அதிபதியாகவும் அத்துடன் சுய இராச்சிய அதிகாரத்தின் அதிபதியாகவும் இருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள்: நான் இரட்டை அதிபதியா? நீங்கள் ஓர் அதிபதியாக இல்லாவிட்டால், பலவீனமான சம்ஸ்காரங்கள் வெளிப்படும். சம்ஸ்காரங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘எனது சம்ஸ்காரங்கள் இப்படிப்பட்டவை, எனது சுபாவம் இப்படிப்பட்டது’. எவ்வாறாயினும், அவை என்னுடையவையா? நீங்கள் அவற்றை ‘எனது சம்ஸ்காரங்கள்’ எனக் குறிப்பிடுகிறீர்கள். அவை என்னுடையவையா? ‘எனது சம்ஸ்காரங்கள்’ எனச் சொல்வது சரியா? அது சரியாகுமா? அவை என்னுடையவையா? அல்லது அவை இராவணனின் சொத்துக்களா? பலவீனமான சம்ஸ்காரங்கள், இராவணனின் சொத்துக்களே. அவை உங்களுடையவை என எப்படி உங்களால் சொல்ல முடியும்? எனது சம்ஸ்காரங்கள் எவை? தந்தையின் சம்ஸ்காரங்களே, எனது சம்ஸ்காரங்கள். எனவே, தந்தையின் சம்ஸ்காரங்கள் எவை? உலக உபகாரி. நல்லாசிகளும் தூய உணர்வுகளும். ஆகவே, எந்தவொரு பலவீனமான சம்ஸ்காரத்தையும் உங்களின் சம்ஸ்காரம் என்று அழைப்பது தவறானது. எனவே, ‘எனது சம்ஸ்காரங்களை’ நீங்கள் உங்களின் இதயத்தில் வைத்திருந்தால், உங்களின் இதயத்தில் ஏதாவது தூய்மை இன்மையையே வைத்திருக்கிறீர்கள். உங்களுக்குச் சொந்தமான எதிலும் உங்களுக்கு அன்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அதை உங்களுடையது எனக் கருதுவதன் மூலம், நீங்கள் அதற்கு உங்களின் இதயத்தில் இடம் கொடுத்துள்ளீர்கள். இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் சிலவேளைகளில் போராடுகிறீர்கள். ஏனென்றால், நீங்கள் உங்களின் இதயத்தில் தூய்மை, தூய்மை இன்மை இரண்டையும் வைத்திருக்கிறீர்கள். அதனால் அவை இரண்டும் என்ன செய்யும்? அவை போராடவே செய்யும். உங்களின் எண்ணங்களில் அல்லது வார்த்தைகளில், ‘எனது சம்ஸ்காரங்கள்’ என்பதைக் கொண்டிருக்கும்போது, உங்களையே சோதித்துப் பாருங்கள்: அந்தத் தூய்மையற்ற சம்ஸ்காரங்கள் எனது சம்ஸ்காரங்கள் அல்ல. ஆகவே, நீங்கள் அந்த சம்ஸ்காரங்களை மாற்ற வேண்டும்.

பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் உங்களின் செயல்பாடுகளிலும் உங்களின் முகத்திலும் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாகக் காண விரும்புகிறார். சில குழந்தைகள் தாம் பாக்கியசாலிகள் ஆகியிருப்பதாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், தொடர்ந்து முன்னேறும்போது, அவர்களில் வெளிப்படையாக இருக்க வேண்டிய பாக்கியம், அமிழ்ந்து போகிறது. பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாக்கிய நட்சத்திரம் ஜொலிப்பதைக் காண விரும்புகிறார். உங்களையும் உங்களின் செயல்பாடுகளையும் பார்க்கும் எவரும், உங்களைப் பாக்கியசாலியாகக் காண வேண்டும். அப்போது மட்டுமே தந்தையை வெளிப்படுத்துதல் குழந்தைகளான உங்களின் மூலம் இடம்பெறும். ஏனென்றால், தற்சமயம், பெரும்பாலான மக்களுக்கு அனுபவமே தேவைப்படுகிறது. இன்றைய விஞ்ஞானம் நடைமுறையில் புலப்படுகிறது. அது உங்களுக்கு அனுபவத்தைக் கொடுக்கிறதுதானே? அது உங்களுக்கு வெப்பத்தினதும் குளிர்ச்சியினதும் அனுபவத்தைக் கொடுக்கிறது. அதேபோல், அவர்களும் மௌன சக்தியால் ஓர் அனுபவத்தைப் பெற விரும்புகிறார்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இந்த அனுபவத்தில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் மற்றவர்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுப்பீர்கள். நீங்கள் இப்போது ஒன்றிணைந்த சேவை செய்ய வேண்டும், வார்த்தைகளால் மட்டுமன்றி, அனுபவ ரூபம் ஆகுவதன் மூலம் மற்றவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் சேவையையும் செய்ய வேண்டும் என பாப்தாதா ஏற்கனவே உங்களுக்கு சமிக்கை கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள்: அமைதியின் அனுபவம், சந்தோஷத்தின் அனுபவம், ஆத்ம உணர்வு அன்பின் அனுபவம். அனுபவம் எத்தகையது என்றால், நீங்கள் ஒரு தடவை எதையாவது அனுபவம் செய்துவிட்டால், உங்களால் அதைக் கைவிட முடியாது. நீங்கள் கேட்டவற்றை மறக்கக்கூடும். ஆனால் நீங்கள் அனுபவித்ததை உங்களால் மறக்க முடியாது. அந்த அனுபவத்தை அவர்களுக்குக் கொடுத்தவர்களுக்கு நெருக்கமாக அது அவர்களைக் கொண்டு வருகிறது.

எதிர்காலத்தில் என்ன புதுமையை ஏற்படுத்துவது என நீங்கள் எல்லோரும் கேட்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சேவை செய்வதை பாப்தாதா பார்த்திருக்கிறார். ஒவ்வொரு பிரிவும் சேவை செய்கிறது. இன்றும், பல பிரிவுகள் ஒன்றாக வந்துள்ளார்கள். நீங்கள் மெகா நிகழ்ச்சிகளைச் செய்தீர்கள். நீங்கள் செய்தியைக் கொடுத்தீர்கள். அதனால் உங்களுக்கு எதிராகப் போடப்பட்ட முறைப்பாட்டை நீங்கள் நீக்கி உள்ளீர்கள். அதற்காகப் பாராட்டுக்கள். எவ்வாறாயினும், இதுவரை, இது இறைஞானம் என்ற ஒலி பரவவில்லை. பிரம்மாகுமாரிகள் மிக நல்ல பணியைச் செய்கிறார்கள். பிரம்மாகுமாரிகளின் ஞானம் மிகவும் நல்லது. எவ்வாறாயினும், ‘இது மட்டுமே இறைஞானம், இறை பணி இப்போது செய்யப்பட்டு வருகிறது’ என்ற ஒலி இப்போது பரவ வேண்டும். நீங்கள் அவர்களுக்கு தியான பாடநெறியைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள். ஆனால், இன்னமும், மிகச்சிலரே இறைவனே தனது பணியைச் செய்கிறார் என்ற அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள். ஆத்மாக்களும் அவர்களின் தாரணையும் (விழுமியங்கள்) வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் நல்ல வேலை செய்கிறீர்கள். நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். நீங்கள் நல்ல விடயங்களைக் கற்பிக்கிறீர்கள். இவற்றைப் பொறுத்தவரை இது நன்றாகவே உள்ளது. உங்களின் ஞானமும் நல்லது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், இது இறை ஞானம் என்ற ஒலியானது, அவர்களை இறைவனுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும். அவர்களை எந்தளவிற்குக் கடவுளுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறீர்களோ, அந்தளவிற்கு அவர்கள் இயல்பாகவே தொடர்ந்தும் இந்த அனுபவத்தைப் பெறுவார்கள். அதனால், இத்தகைய திட்டத்தைச் செய்து, உங்களின் சொற்பொழிவுகளைச் சக்தியால் நிரப்புங்கள். அதனால் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமாக வரவேண்டும். அவர்களின் கவனம் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதில் ஈர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் ஆத்மாக்களையும் பரமாத்மாவையும் பற்றிய ஞானத்தையும் கொடுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், இறைவன் வந்துள்ளார், அவரே தனது பணியை நிறைவேற்றுகிறார் என்ற வெளிப்படுத்துதல், அவர்களை ஒரு காந்தத்தை நோக்கி ஊசிகள் கவரப்படுவதுபோல் நெருக்கமாகக் கொண்டுவரும். நீங்கள் தந்தையைக் கண்டு அடைந்து விட்டீர்கள், நீங்கள் அவரைச் சந்திக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட போதே, நீங்களும் நெருக்கமாக வந்தீர்கள். எனவே, பெரும்பாலானோரை அன்பானவர்கள் ஆகச் செய்த புரிந்துணர்வு என்ன? இந்தப் பணி மிகவும் நல்லது. பிரம்மாகுமாரிகள் செய்யும் பணியை வேறு எவராலும் செய்ய முடியாது, அவர்கள் மாற்றம் நடக்கச் செய்கிறார்கள் என்பதே. எவ்வாறாயினும், இறைவனே பேசுகிறார், தாம் இறைவனிடம் இருந்து தமது ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பதை உணரும் அளவிற்கு அவர்கள் நெருக்கமாக வரவில்லை. முன்னர் பிரம்மாகுமாரிகள் என்ன செய்கிறார்கள், அவர்களின் ஞானம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாத மக்கள், இப்போது அதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்கள் இறைவனின் வெளிப்படுத்தலைப் புரிந்து கொள்வார்கள் ஆயின், இது இறை ஞானம் என்பதைப் புரிந்து கொண்டால், நெருங்கி வருவதை அவர்களால் தடுக்க முடியுமா? எப்படி நீங்கள் எல்லோரும் இங்கே ஓடோடி வந்தீர்களோ, அதேபோல் அவர்களும் ஓடி வருவார்கள். அதனால், இப்போது இத்தகைய திட்டத்தைச் செய்யுங்கள். இத்தகைய சொற்பொழிவுகளைத் தயார் செய்யுங்கள். இந்த இறை அனுபவத்தின் நடைமுறை அத்தாட்சி ஆகுங்கள். அப்போது மட்டுமே தந்தையை வெளிப்படுத்துதல் நடைமுறைரீதியாகப் புலப்படும். இப்போது, நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருப்பது நல்லதே. இறையன்பை அனுபவம் செய்வதன் மூலம் எல்லோரும் நல்லவர்கள் ஆகவேண்டும் என்ற அலை பரவும். எனவே, இந்த அனுபவத்தின் சொரூபமாகி, மற்றவர்களுக்கும் இந்த அனுபவத்தை வழங்குங்கள். அச்சா. இப்போது, இரட்டை அதிபதியாக இருக்கும் விழிப்புணர்வுடன் சக்திசாலியாகி, மற்றவர்களையும் சக்திசாலி ஆக்குங்கள். அச்சா.

சேவை செய்வது பஞ்சாப் பிராந்தியத்தின் முறை: உங்களின் கைகளை அசையுங்கள். எந்தப் பிராந்தியம் சேவை செய்தாலும், அவர்கள் இங்கே திறந்த இதயத்துடன் வருவது நல்லவிடயம். (பஞ்சாப் பிராந்தியத்தில் இருந்து 4000 பேர் வந்துள்ளார்கள்). நீங்கள் நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். ஒவ்வொரு பிராந்தியமும் சேவை செய்வதற்கு நல்லதொரு வாய்ப்பை எடுத்துக் கொள்வதை இட்டு பாப்தாதாவும் களிப்படைகிறார். ‘பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் சிங்கங்கள், பஞ்சாப் சிங்கங்கள்’ என எல்லோரும் சொல்வது பொதுவான விடயம். எவ்வாறாயினும், சிங்கங்கள் என்றால் வெற்றி பெறுபவர்கள் என்று அர்த்தம் என பாப்தாதா கூறுகிறார். எனவே, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் எப்போதும் தமது நெற்றிகளில் வெற்றித் திலகத்தை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றித் திலகத்தைப் பெற்றுள்ளீர்கள். சதா இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி பெறுபவர்கள். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இப்படி இருந்தோம், இப்படி இருக்கிறோம், இப்படி இருப்போம். நல்லது. பஞ்சாபைச் சேர்ந்தவர்களும் தந்தையிடம் வாரிசு தரமுள்ள ஆத்மாக்களை அழைத்து வருவதற்கான நிகழ்ச்சியைச் செய்கிறீர்கள்தானே? இன்னமும், நீங்கள் பாப்தாதாவின் முன்னால் வாரிசு தரமுள்ள ஆத்மாக்களை அழைத்து வரவில்லை. நீங்கள் அன்பான ஆத்மாக்களை அழைத்து வந்துள்ளீர்கள். சகல பிராந்தியங்களும் அன்பான, ஒத்துழைக்கும் தரமுள்ள ஆத்மாக்களை அழைத்து வந்துள்ளார்கள். ஆனால் நீங்கள் இன்னமும் வாரிசு தரமுள்ள ஆத்மாக்களை இங்கே அழைத்து வரவில்லை. நீங்கள் அவர்களைத் தயார் செய்கிறீர்கள்தானே? சகல வகையினரும் தேவைப்படுகிறார்கள். வாரிசுகளும் தேவைப்படுகிறார்கள். அன்பான ஆத்மாக்களும் தேவைப்படுகிறார்கள். ஒத்துழைக்கும் ஆத்மாக்களும் தேவைப்படுகிறார்கள். மைக்குகளும் தேவைப்படுகிறார்கள். மைற் (சக்தி) தேவைப்படுகிறது. சகல வகையினரும் தேவைப்படுகிறார்கள். இது நல்லது. நிலையங்களில் வளர்ச்சி காணப்படுகிறது. ஒவ்வொருவரும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சேவையில் முன்னேறுகிறார்கள். இப்போது, இறைவன் வந்துள்ளார் என்ற உண்மையை எந்தப் பிராந்தியம் வெளிப்படுத்துகிறது என நாம் பார்ப்போம். எந்தப் பிராந்தியம் தந்தையை வெளிப்படுத்தும்? பாப்தாதா இதை அவதானிக்கிறார். வெளிநாடுகள் இதைச் செய்வார்களா? அவர்களாலும் இதைச் செய்ய முடியும். பஞ்சாப் இதில் ஓர் இலக்கத்தைப் பெறுங்கள். அதை எடுத்துக் கொள்ளுங்கள். இது நல்லது. எல்லோரும் உங்களுடன் ஒத்துழைப்பார்கள். நீங்கள் நீண்ட காலமாக, ‘இவரே ஒரேயொருவர், இவரே ஒரேயொருவர், இவரே ஒரேயொருவர்’ என்ற ஒலியைப் பரப்ப முயற்சி செய்கிறீர்கள். தற்சமயம், ‘இதுவும் உள்ளது’ என்ற ஒலியே உள்ளது. ‘இவர் மட்டுமே ஒரேயொருவர்’ என்று அவர்கள் சொல்வதில்லை. எனவே, பஞ்சாப் என்ன செய்வீர்கள்? ‘இவர் மட்டுமே ஒரேயொருவர். இவர் மட்டுமே ஒரேயொருவர்’ என்ற ஒலி ஏற்பட வேண்டும். அதை எப்போது செய்வீர்கள்? இந்த வருடம் நீங்கள் அதைச் செய்வீர்களா? புதிய வருடம் இப்போது ஆரம்பம் ஆகியுள்ளது அல்லவா? எனவே, புது வருடத்தில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும்தானே? ‘இதுவும் உள்ளது’ என்பதை நீங்கள் நீண்ட காலமாகக் கேட்டு வந்துள்ளீர்கள். உங்களின் மனதில் இயல்பாகவே ‘பாபா, பாபா, பாபா’ என்பது மட்டுமே இருப்பதைப் போல், அவர்களின் வாயில் இருந்தும் ‘எமது பாபா வந்துள்ளார்’ என்பது வெளிப்பட வேண்டும். நான்கு மூலைகளில் இருந்தும் ‘எனது பாபா, எனது பாபா’ என்ற ஒலி வெளிப்பட வேண்டும். எவ்வாறாயினும், அது ஏதாவது ஒரு மூலையில் இருந்தே வெளிப்படும், இல்லையா? எனவே, பஞ்சாப் இந்த அற்புதத்தைச் செய்யுமா? நீங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது? நீங்கள் அதைச் செய்ய வேண்டும். மிகவும் நல்லது. முன்கூட்டியே உங்களுக்கு வாழ்த்துக்கள். அச்சா.

எங்கும் உள்ள ஆன்மீக ரோஜாக்களான குழந்தைகள் எல்லோருக்கும் அதிகபட்சமாக தந்தையின் மீது அன்பை வைத்திருப்பதுடன் அதிகபட்சமாக சரீர உணர்வில் இருந்தும் விடுபட்டு இருப்பவர்களுக்கும் பாப்தாதாவின் இதயத்தின் விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகளுக்கும் ஒரேயொரு தந்தைக்குச் சதா சொந்தமான குழந்தைகளுக்கும் ஒருமுகப்பட்ட மனதையும் நிலையான, ஸ்திரமான ஸ்திதியையும் கொண்டிருப்பவர்களுக்கும் வெவ்வேறு இடங்களில் வசித்தாலும் விஞ்ஞானத்தின் வசதிகளால் மதுவனத்திற்கு வந்துள்ள குழந்தைகள் எல்லோருக்கும், பாபாவைத் தனிப்பட்ட முறையில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சகல விசேடமான அதியன்பிற்குரிய நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் ஒவ்வொரு கல்பமும் இறையன்பிற்கான உரிமையைப் பெற்றுள்ள குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும். தயவு செய்து இதயபூர்வமான பலமில்லியன் மடங்கு ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் இரட்டை அதிபதிகளான குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதாவிடம் இருந்து நமஸ்காரங்கள்.

தாதிஜியிடம்: நீங்கள் மதுவனத்தின் கதாநாயக நடிகர் ஆவீர்கள். நீங்கள் எப்போதும் ஸீரோவை நினைக்கிறீர்கள். சரீரம் நன்றாக இயங்காமல் போகலாம். அது சிறிது மெதுவாக இயங்குகிறது. ஆனால் எல்லோருடைய அன்பும் ஆசீர்வாதங்களும் உங்களை அசையச் செய்கின்றன. உங்களுக்கு எப்படியும் தந்தையின் ஆசீர்வாதங்கள் உள்ளன. அத்துடன் எல்லோருடைய ஆசீர்வாதங்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் எல்லோரும் தாதியை நேசிக்கிறீர்கள்தானே? எல்லோரும் கூறுகிறார்கள்: ‘எங்களுக்கு தாதிகள் வேண்டும், எங்களுக்கு தாதிகள் வேண்டும்’. எனவே, தாதிகளின் சிறப்பியல்பு என்ன? தாதிகள் தந்தையின் ஸ்ரீமத்திற்கு ஏற்பவே ஒவ்வோர் அடியையும் எடுத்து வைப்பதே, தாதிகளின் சிறப்பியல்பு ஆகும். அவர்கள் தந்தையின் நினைவிற்கும் சேவை செய்வதற்கும் தமது மனங்களை அர்ப்பணித்துள்ளார்கள். நீங்கள் எல்லோருமே இதையே செய்கிறீர்கள், அப்படித்தானே? உங்களின் மனங்களை அர்ப்பணியுங்கள். உங்களின் மனங்கள் பெரும் அற்புதங்களைச் செய்வதை பாப்தாதா பார்த்துள்ளார். அவை என்ன அற்புதங்களைச் செய்கின்றன? அவை விஷமத்தனம் செய்கின்றன. நீங்கள் ஒரு கொடியை ஏற்றும்போது செய்வதைப் போல், உங்களின் மனம் ஒருமுகப்பட்டும் ஸ்திரமாகவும் இருக்க வேண்டும். அதேபோல், ஒருவரின் மனதின் கொடியானது, சிவபாபா ஆவார். எனவே, சிவபாபாவின் மீது ஒருமுகப்படுங்கள். அந்த நேரமும் நெருங்கி வருகிறது. சிலவேளைகளில், குழந்தைகளின் மிக நல்ல எண்ணங்கள் சிலவற்றை பாப்தாதா கேட்கிறார். எல்லோருடைய இலட்சியமும் மிகவும் நல்லது. அச்சா. மண்டபம் எத்தனை அழகாக உள்ளது எனப் பாருங்கள். அது ஒரு மாலை போல் உள்ளதல்லவா? மாலையின் மணிகள் மத்தியில் அமர்ந்திருக்கிறார்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மௌன சக்தியால் ஒரு விநாடியில் முக்தி மற்றும் ஜீவன் முக்தியின் அனுபவத்தை வழங்கும் விசேடமான ஆத்மா ஆகுவீர்களாக.

விசேடமான ஆத்மாக்களின் கடைசிச் சிறப்பியல்பானது, ஏனைய ஆத்மாக்களை ஒரு விநாடியில் முக்தியும் ஜீவன்முக்தியும் அடையச் செய்வதே ஆகும். அவர்கள் பாதையை மட்டும் காட்டுவதில்லை. ஆனால், ஒரு விநாடியில் அமைதி மற்றும் அதீந்திரிய சுகத்தின் அனுபவத்தை வழங்குவார்கள். ஜீவன்முக்தி வாழ்க்கையின் அனுபவம், சந்தோஷம் ஆகும். முக்தியின் அனுபவம், அமைதி ஆகும். அதனால், உங்களுக்கு முன்னால் யார் வந்தாலும் ஒரு விநாடியில் அவர்கள் இவற்றை அனுபவம் பெறச்செய்யுங்கள். இத்தகைய வேகத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது, அவர்களும் விஞ்ஞானத்தை மௌனம் வெற்றி கொள்வதைக் காண்பார்கள். அப்போது எல்லோருடைய வாயில் இருந்தும் ‘ஆஹா, ஆஹா!’ என்ற ஒலி வெளிப்படும். வெளிப்படுத்தலுக்கான காட்சிகள் உங்களின் முன்னால் தோன்றும்.

சுலோகம்:
தந்தையின் ஒவ்வொரு கட்டளைக்கும் உங்களை அர்ப்பணிக்கும் உண்மையான விட்டில் பூச்சிகள் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து, மேன்மையான சேவைக்குக் கருவி ஆகுங்கள்.

எப்படி நீங்கள் இப்போது வார்த்தைகளால் வழிகாட்டல்களைக் கொடுக்கிறீர்களோ, அவ்வாறே, சகல செயல்பாடுகளும் மேன்மையான எண்ணங்களால் செய்ய முடியும். விஞ்ஞானிகளால் மேலே விண்வெளியில் இருந்தாலும் கீழே பூமியில் இருந்து வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, மேன்மையான எண்ணங்களின் சக்தியால் உங்களால் சகல செயல்பாடுகளையும் செய்ய முடியாதா? எப்படி அவர்கள் பேசுவதன் மூலம் எல்லாவற்றையும் தெளிவு படுத்திக் கொள்கிறார்களோ, அவ்வாறே, நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, உங்களின் செயல்பாடுகள் அனைத்தும் எண்ணங்களால் அதேபோல் செய்யப்படும். இந்த முறையில் மேன்மையான எண்ணங்களின் களஞ்சியத்தைச் சேமியுங்கள்.