13.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த மரண உலகம் இப்பொழுது முடிவடைய உள்ளது. ஏனெனில், அமரத்துவ உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆகையால், மரண உலகிற்கு உரியவர்களை நீங்கள் நினைவு செய்யக் கூடாது.
கேள்வி:
தந்தை தனது ஏழைக் குழந்தைகளுக்கு எதனை ஞாபகப்படுத்துகின்றார்?பதில்:
குழந்தைகளே, நீங்கள் தூய்மையாகவும் விகாரம் அற்றவர்களாகவும் இருந்த போது, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். உங்களைப் போன்று செல்வந்தராக வேறு எவரும் இருக்கவில்லை. உங்களுக்கு அளவற்ற சந்தோஷம் இருந்தது. பூமி, வானம், அனைத்தும் உங்கள் கைகளிலேயே இருந்தது. தந்தை மீண்டும் உங்களைச் சந்தோஷமானவர்களாக ஆக்கவே இப்பொழுது வந்துள்ளார்.பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களுக்கு வழிகாட்டுங்கள்!ஓம் சாந்தி.
ஆத்மாக்களாகிய இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். இதனைக் கூறியவர் யார்? ஆத்மாக்களின் ஆன்மீகத் தந்தையே கூறினார். ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையிடம் கூறினார்கள்: பாபா! அவர் ஈஸ்வர் (கடவுள்) என்றும், தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார். எந்தத் தந்தை? பரமதந்தை. இரு தந்தையர் உள்ளனர். ஒருவர் லௌகீகத் தந்தையும், மற்றவர் ஆன்மீகத் தந்தையும் ஆவார். லௌகீகத் தந்தையின் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையை அழைக்கின்றார்கள்: ஓ பாபா! பாபாவின் பெயர் என்ன? சிவன்! அசரீரியான சிவன் வழிபாடு செய்யப்படுகின்றார். அவர் பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். லௌகீகத் தந்தையைப் பரமன் என்று அழைக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரதும் அதிமேலான தந்தை ஒரேயொருவரே ஆவார். அந்தத் தந்தையையே, சரீரத்தில் வாழும் ஆத்மாக்கள் அனைவருமே நினைவு செய்கின்றார்கள். தமது தந்தை யார் என்பதை ஆத்மாக்கள் மறந்துள்ளார்கள். அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ தந்தையான கடவுளே! குருடர்களான எங்களுக்குப் பார்வை கொடுங்கள், அப்பொழுதே நாங்கள் எங்கள் தந்தையை இனங்காண முடியும்! நாங்கள் குருடர்களாக ஆனதால், பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் அலைந்து திரிந்தோம். எங்களை இப்பொழுது இந்த தடுமாற்றத்தில் இருந்து விடுவியுங்கள்! தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார். இப்பொழுது இது கலியுகம். சத்தியயுகம் இப்பொழுது வரவுள்ளது. கலியுகத்திற்கும் சத்தியயுகத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியே சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே அதி மங்களகரமான சங்கமயுகமாகும். சீரழிந்திருப்பவர்களை மீண்டும் ஒருமுறை மேன்மையானவர்கள் ஆக்குவதற்கு எல்லையற்ற தந்தை வருகின்றார். அவர் அவர்களை அதிமேலானவர் ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் அதிமேலானவர்கள் ஆவார்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்திற்கான வம்சம் ஒன்றிருந்தது. தந்தை வந்து உங்களுக்கு அதனை ஞாபகப்படுத்துகின்றார். பாரதமக்களாகிய நீங்கள் 5000 வருடங்களின் முன்னர் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள், இப்பொழுது நரக வாசிகள் ஆகியுள்ளீர்கள். 5000 வருடங்களின் முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்த போது அது அதிகளவு புகழப்பட்டது. தங்கமும், வைரமும் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் இருந்தன. இப்பொழுது எதுவுமே இல்லை. அந்த நேரத்தில் வேறு சமயங்கள் எதுவும் இருக்கவில்லை. சூரிய வம்சம் மாத்திரமே இருந்தது. சந்திர வம்சம் பின்னரே வந்தது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் மாத்திரமே சூரிய வம்சத்திற்கு உரியவர்கள். அவர்கள் இன்னமும் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். எவ்வாறாயினும், இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எப்பொழுது இருந்தது என்றும், அதனை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்பதையும் எவரும் அறிய மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் அவர்களை வழிபடுகின்றார்கள். ஆனால் அவர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே அது குருட்டு நம்பிக்கை. மக்கள் சிவனையும், இலக்ஷ்மி நாராயணனையும் வழிபடுகின்றார்கள், ஆனால் அவர்களின் சுயசரிதை எவருக்கும் தெரியாது. பாரத மக்களே தாம் தூய்மையற்றவர்கள் என்று கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்கும் பாபாவே வாருங்கள்! வந்து, எங்களைத் துன்பத்தில் இருந்தும் இராவண இராச்சியத்தில் இருந்தும் விடுவியுங்கள். தந்தை வந்து அனைவரையும் விடுவிக்கின்றார். சத்தியயுகத்தில் ஒரேயொரு இராச்சியமே இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். காங்கிரஸ் கட்சியும், பாபு காந்திஜியும் மீண்டும் ஒருமுறை இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். நாங்கள் சுவர்க்க வாசிகள் ஆக விரும்புகின்றோம். இந்த நேரத்தில் நரகவாசிகளின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை உங்களால் காணக்கூடியதாக உள்ளது. இது அசுர உலகமான நரகம் என்று அழைக்கப்படுகின்றது. இதே பாரதமே தேவ உலகமாக இருந்தது. இப்பொழுது அது நரக உலகமாகி உள்ளது. நீங்கள் 84 பிறவிகளையே எடுக்கின்றீர்கள் என்றும், 8.4 மில்லியன் பிறவிகள் அல்ல என்பதை பாபா விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சமயநூல்களில் பொய்களை எழுதியுள்ளார்கள். இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர், அது சற்கதியின் பாதையாக இருந்தது. அங்கு பக்தி இருக்கவில்லை அல்லது துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லை. அது சந்தோஷ தாமம் என்று அழைக்கப்பட்டது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆதியில், நீங்கள் அமைதி தாம வாசிகளாக இருந்தீர்கள். நீங்கள் இங்கு உங்கள் பாகங்களை நடிப்பதற்கு வந்தீர்கள். நீங்கள் 84 மறுபிறவிகளை எடுக்கிறீர்கள், 8.4 மில்லியன் மறுபிறவிகளை அல்ல. எல்லையற்ற தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கவே வந்துள்ளார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் உரையாடுகின்றார். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் மனிதர்களே பக்தி மார்க்கக் கதைகளை மனிதர்களுக்குக் கூறுகின்றார்கள். சுவர்க்கம் இருந்த போது, அரைக்கல்பத்திற்குத் தூய்மையற்ற ஒருவரேனும் இருக்கவில்லை. இப்பொழுது தூய்மையான ஒருவரேனும் இல்லை. இது தூய்மையற்ற உலகம். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கீதையில் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகின்றார் என்று எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் கடவுளும் இல்லை, அவர் கீதையை கூறவும் இல்லை. அம்மக்களுக்கு அவர்களின் சொந்த சமயநூலையே தெரியாது. அவர்கள் தமது சொந்தத் தர்மத்தை மறந்திருக்கின்றார்கள். நான்கு பிரதான சமயங்கள் உள்ளன. முதலாவது சூரிய வம்ச, ஆதிசனாதன தேவி தேவதா தர்மம், அதன் பின்னர் சந்திர வம்சம் உள்ளது. அவை இரண்டும் சேர்ந்ததே தேவ தர்மம் ஆகும். அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் சந்தோஷ உலகில் 21 பிறவிகளுக்கு இருந்தீர்கள். அதன் பின்னர் இராவண இராச்சியத்தில் பக்தி மார்க்கம் ஆரம்பித்தது. சிவபாபா எப்பொழுது வந்தார்? இரவில். பாரதமக்கள் காரிருளில் இருக்கும் போதே பாபா வருகின்றார். அவர்கள் தொடர்ந்தும் பொம்மைகளை வழிபடுகின்றார்கள். அவர்களுக்கு ஒருவரின் சுயசரிதமும் தெரியாது. பக்திமார்க்கத்தில் அவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றார்கள். தீர்த்தயாத்திரைகள் பலவற்றை அவர்கள் செய்த போதிலும் அவற்றில் அவர்கள் எப்பேற்றையும் பெறுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மாவினூடாக உண்மையான ஞானத்தைக் கொடுக்கின்றேன். மக்கள் அழைக்கின்றார்கள்: எங்களுக்குச் சந்தோஷ உலகிற்கும் அமைதி உலகிற்குமான பாதையைக் காட்டுங்கள். தந்தை கூறுகின்றார்: 5000 வருடங்களின் முன்னர், நான் உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்கினேன். நான் உங்களுக்கு அதிகளவு செல்வத்தைக் கொடுத்தேன். அனைத்தையும் நீங்கள் எங்கு இழந்தீர்கள்? நீங்கள் மிகவும் செல்வந்தராக இருந்தீர்கள். அதனை பாரதம் என்று அழைப்பவர் யார்? பாரதம் அனைத்திலும் அதிமேன்மையான இடமாக விளங்குகிறது. உண்மையில், இதுவே அனைத்திலும் அதி சிறந்த யாத்திரைத்தலம். ஏனெனில், அதுவே தூய்மையாக்குகின்ற தந்தையின் பிறப்பிடம். சகல சமயத்தினருக்கும் தந்தை வந்து சற்கதியை அருள்கின்றார். இப்பொழுது முழு உலகிலும் இராவண இராச்சியமே வியாபித்துள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல. இது சூரிய வம்ச இராச்சியமாக இருந்த போது, விகாரங்கள் இருக்கவில்லை. விகாரம் அற்றதாக இருந்த பாரதம், இப்பொழுது விகாரம் நிறைந்துள்ளது. அனைவரும் நரகவாசிகள் ஆவார்கள். சத்தியுகத்தில் தேவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 84 பிறவிகளை எடுத்து, அசுர சமுதாயத்தினர் ஆகினார்கள். இப்பொழுது அவர்கள் மீண்டும் தேவ சமுதாயத்தினர் ஆகவுள்ளனர். மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்த பாரதம், இப்பொழுது ஏழ்மையாகி உள்ளது. ஆகையாலேயே அது கடன் கேட்கின்றது. தந்தை ஏழைக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருந்தீர்கள்! உங்களைப் போன்று வேறு எவராலும் அதிகளவு சந்தோஷத்தைப் பெற முடியாது. பூமி, ஆகாயம் அனைத்தும் உங்கள் கைகளிலேயே இருந்தது. சமயநூல்களில் சக்கரத்துக்கு நீண்ட கால எல்லையைக் கொடுத்ததால், அவர்கள் அனைவரையும் அசுரத்தனமான கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்த்தி விட்டார்கள். பாரதம் சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயமாக இருந்தது. அங்கே தூய்மை இருந்ததுடன், அந்த புதிய உலகைத் தேவர்கள் ஆட்சி செய்தார்கள். இராதைக்கும் கிருஷ்ணருக்கும் இருக்கும் உறமுறையையும் கூட மக்கள் அறியாதுள்ளார்கள். இருவரும் இருவேறு இராச்சியதிலிருந்து வந்தார்கள். அதன் பின்னர், தமது திருமணத்தின் போது, அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகினார்கள். எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! உங்கள் பரமதந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! நினைவு செய்வதனால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுவதற்கு, அதாவது, தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கே இங்கே வருகின்றீர்கள். இப்பொழுது இது இராவண இராச்சியம். இராவண இராச்சியம் பக்தியுடன் ஆரம்பம் ஆகுகின்றது. பக்தி செய்பவர்கள் அனைவரும் இராவணனின் பிடியில் சிக்கியுள்ளார்கள். முழு உலகமும் ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் சிறையில் உள்ளது. அவர்கள் துன்பக் குடிலில் இருக்கின்றார்கள். தந்தை வந்து அனைவரையும் விடுவித்து, அவர்களுக்கு வழிகாட்டியாகி அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆகையாலேயே மகாபாரத யுத்தம் உள்ளது. அது 5000 வருடங்களின் முன்னரும் இடம்பெற்றது. தந்தை மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அதிகளவு செல்வத்தைக் கொண்டவர்கள் சுவர்க்கத்தில் இருக்கின்றார்கள் என்றில்லை. இப்பொழுது அது நரகம். தந்தையே அன்றி, ஒரு நதியைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. அவை அனைத்தும் பக்திமார்க்கம். பாபா மாத்திரமே வந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். ஒருவர் லௌகீகத் தந்தையும், மற்றவர் ஆன்மீகத் தந்தையும், மூன்றாமவர் சூட்சுமத் தந்தையும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆன்மீகத் தந்தையான சிவபாபா பிரம்மாவினூடாக பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் பிராமணர்களைத் தேவர்கள் ஆக்குவதற்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களே மறுபிறவி எடுக்கின்றார்கள். ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை விட்டு, இன்னொன்றை எடுக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா என்று கருதி உங்கள் தந்தையான என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். இப்பொழுது இது மரண உலகிற்கான முடிவு. அமரத்துவ உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிய உள்ளன. சத்தியயுகத்தில், ஒரேயொரு தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. அதன் பின்னர், திரேதாயுகத்தில் இராமர் சீதையின் சந்திர வம்சம் இருந்தது. தந்தை முழுச் சக்கரத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். தந்தை மாத்திரமே அமைதிதாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் ஸ்தாபிக்கின்றார். மனிதர்களால் மனிதர்களுக்கு சற்கதி அருள முடியாது. அந்தக் குருமார்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் பாபாவிடம் இருந்து உங்கள் பாக்கியமான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பல பிரஜைகளும் உருவாக்கப்பட உள்ளனர். பலரில் ஒரு கைபிடி அளவினரே அரசர்கள் ஆகுவார்கள். சத்தியயுகம் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது அது முட்காடாக உள்ளது. இராவண இராச்சியம் இப்பொழுது மாற்றம் அடைகின்றது. விநாசம் இடம்பெற வேண்டும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இலக்ஷ்மி நாராயணனிடம் இந்த ஞானம் இருக்க மாட்டாது. அது மறைந்து விடுகின்றது. பக்தி மார்க்கத்தில் எவருக்கும் தந்தையை மிகச்சரியாகத் தெரியாது. தந்தையே படைப்பவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் படைப்புகளே. நீங்கள் சர்வவியாபி என்று பேசும் போது ஆஸ்திக்கான உரிமை இழக்கப்படுகின்றது. பாபா வந்து அனைவருக்கும் அவரவருக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் வருபவர்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ 40 பிறவிகள் எடுக்கின்றார்கள். ஒரேயொரு கடவுளையே தேடி மக்கள் அலைந்து திரிகின்றார்கள். நீங்கள் இப்பொழுது அலைந்து திரிவதில்லை. நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவு செய்தால், தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இது ஒரு யாத்திரை. இது இறை தந்தையின் பல்கலைக்கழகம். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்கின்றீர்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்று சாதுக்களும் சந்நியாசிகளும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மாவே தனது செயல்களிற்கு ஏற்ப, இன்னொரு பிறவியை எடுக்கின்றார். ஆத்மாவே நல்ல, தீய செயல்களைச் செய்கின்றார். கலியுகமாகிய இந்த நேரத்தில் உங்கள் செயல்கள் பாவகரமானவை. சத்தியயுகத்திலோ உங்கள் செயல்கள் நடுநிலையாக இருக்கும். அங்கே பாவங்கள் எதுவும் இருப்பதில்லை. அது தர்மாத்மாக்களின் உலகமாகும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு தந்தையிடம் இருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். இப்போது நீங்கள் தந்தையைக் கண்டிருப்பதால் எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் அலைந்து திரியக் கூடாது.2. தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தி உள்ளவற்றை உங்கள் விழிப்புணர்வில் கொண்டிருந்து, அளவற்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். சரீரதாரிகள் எவரையும் நினைவு செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சக்தி சொரூபமாகி, அன்பினால் உங்களின் பலவீனங்கள் அனைத்தையும் பலி கொடுப்பீர்களாக.அன்பின் அடையாளம் தியாகம் செய்தல். அன்பினால் எதையாவது தியாகம் செய்வது என்றால், கடினமான அல்லது அசாத்தியான ஏதாவதுகூட சாத்தியமாக, இலகுவாக ஆகிவிடும். எனவே, சக்தி சொரூபமாக இருக்கும் ஆசீர்வாதத்தால், உங்களின் பலவீனங்கள் அனைத்தையும் பலி கொடுங்கள். கட்டாயத்தின் பேரில் அல்ல, ஆனால் உங்களின் இதயபூர்வமாகச் செய்யுங்கள். ஏனென்றால், சத்தியமான தந்தையால் சத்தியமான எதுவும் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, தந்தையின் அன்பின் பாடல்களை மட்டும் பாடாதீர்கள், ஆனால், தந்தையைப் போல் அவ்யக்த ஸ்திதியின் சொரூபம் ஆகுங்கள். அப்போது அனைவரும் உங்களின் பாடல்களைப் பாடுவார்கள்.
சுலோகம்:
இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் அந்த ஒருவரின் நினைவு உங்களின் எண்ணங்களிலும் கனவுகளிலும் இருக்கும்போது, நீங்கள் உண்மையான தபஸ்வி எனப்படுவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
பாப்தாதா எப்போதும் இந்த ஸ்ரீமத்தை வழங்குகிறார்: ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் உங்களின் மனதில் சதா நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருங்கள். உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றும் மனோபாவத்தைக் கொண்டிருங்கள். அனைவருக்காகவும் நீங்கள் எப்போதும் மேன்மையான, தன்னலமற்ற எண்ணங்களையே கொண்டிருக்க வேண்டும். சதா அருள்பவர் என்ற உணர்வுடன் இருங்கள். நீங்கள் எப்போதும் சுய மாற்றத்தைக் கொண்டிருக்கும்போது, உங்களின் மேன்மையான செயல்களால் உங்களால் மற்றவர்களையும் மேன்மையான செயல்களைச் செய்வதற்குத் தூண்ட முடியும். அப்போது மட்டுமே நீங்கள் மற்றவர்களை ஈடேற்றுபவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.
மாதேஷ்வரியின் விலைமதிப்பிட முடியாத வாசகங்கள்
1) மனிதர்களின் இலக்கும் குறிக்கோளும் என்ன? அதனை அடைவதற்கான சரியான வழிமுறை.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை சிறப்பாக்கிக் கொள்வதற்கு, பொருத்தமானது என்னவென்பதை பற்றி நிச்சயமாக சிந்திக்க வேண்டியது அவசியம். மனித வாழ்க்கை எதற்காக? அதில் நாங்கள் செய்ய வேண்டியது என்ன? எனது இதயத்திடம் நான் கேட்க வேண்டியது: எனது வாழ்க்கையில் அந்த மாற்றத்தை நான் பார்க்கின்றேனா? அனைத்திற்கும் முதலில், எங்கள் மனித வாழ்வில், எங்களுக்கு இந்த ஞானம் தேவை. அதன் பின்னர், இந்த வாழ்வின் இலக்கும் குறிக்கோளும் என்ன? அது எக்காலத்திலும் முற்றிலும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்பதே என்பதை நீங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வீர்கள். அதனை நான் இப்பொழுது பெறுகிறேனா? இந்த இருளான, கலியுகத்தில், துன்பத்தையும் அமைதியின்மையையும் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, நாங்கள் எவ்வாறு அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டிருக்க முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ‘அமைதியும் சந்தோஷமும்’ என்ற இரு வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன என்பதால் நிச்சயமாக அவை முன்னர் இந்த உலகில் இருந்திருக்கின்றது. அதனாலேயே மக்கள் அதனை வேண்டுகின்றனர். ஒரு மனிதர் தான் அவ்வாறானதோர் உலகைக் காணவில்லை என்று கூறினால், நீங்கள் எவ்வாறு அவ்வாறானதொரு உலகில் நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும்? உங்களுக்கு ‘பகலும் இரவும்’ என்ற இரு வார்த்தைகளும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, நிச்சயமாக இரவும் பகலும் இருக்கின்றன. தான் இரவை மாத்திரமே பார்த்திருக்கின்றேன் என்பதால், தான் எவ்வாறு பகல் என ஒன்றுள்ளதை நம்புவது என எவருமே கூற முடியாது. எவ்வாறாயினும், இரு பெயர்கள் உள்ளதால், இவற்றிற்கு நிச்சயமாக ஒரு பாகம் உள்ளது. உண்மையில், சத்தியயுகம் என்று அழைக்கப்பட்ட, கலியுகத்தை விட உயர்வான நிலை ஒன்றிருந்ததைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது இருப்பதைப் போன்றே காலம் தொடருமாயின், ‘சத்தியயுகம்’ என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டது? ஒரு சிறுகுழந்தை, சிறுவன், இளைஞன், பெரியவன் என உங்களுக்குள் நிலைகள் இருப்பதைப் போன்று இந்த உலகமும் தொடர்ந்தும் தனது நிலையை மாற்றுகின்றது. இவ்வாறாக உலகமும் தொடர்ந்தும் மாறுகின்றது. இன்றைய வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கைக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. எனவே, அத்தகைய மேன்மையானதொரு வாழ்வை உருவாக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்.
2) அசரீரியான உலகத்தின், சூட்சும வதனத்தின், பௌதீக உலகின் விரிவாக்கம்.
மூன்று உலகங்கள் உள்ளன. ஒன்று அசரீரி உலகம், இரண்டாவது சூட்சும வதனம், மூன்றாவது பௌதீக உலகம். ஆத்மாக்கள் அசரீரி உலகில் இருக்கின்றார்கள் என்பதையும், பௌதீக மனித சமுதாயம், பௌதீக உலகில் வாழ்கின்றார்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அத்துடன் சூட்சும வதனம் என்றொரு உலகமும் உள்ளது. எண்ணங்கள் தோன்றுகின்றன: இந்த சூட்சும உலகம் எக்காலத்திலும் உள்ளதா அல்லது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமா அது தொடர்கிறது? சூட்சும உலகம் மேலே உள்ளது என்றும் அங்கே தேவதைகள் வாழ்கின்றார்கள் என்றும் அதுவே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது என்றும், தாம் அங்கே சென்று சந்தோஷத்தை அனுபவம் செய்வோம் என்றும் உலக மக்கள் நினைக்கின்றார்கள். எனினும், சுவர்க்கமும் நரகமும் இந்த உலகிலேயே உள்ளது என்பது இப்பொழுது தெளிவாகி உள்ளது. தூய ஆத்மாக்களது காட்சிகளை நாம் காணுகின்ற சூட்சும, தேவதை உலகம், துவாபர யுகத்தில் ஆரம்பமாகின்றது. பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் போது, அசரீரி உலகமும், பௌதீக உலகமும் எக்காலத்திலும் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது. சூட்சும உலகம் எக்காலத்திலும் உள்ளது என எங்களால் கூற முடியாது. இந்த நேரத்தில் மாத்திரமே நாங்கள் குறிப்பாக பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் காட்சிகளை காண்கின்றோம். ஏனெனில் இந்த நேரத்திலேயே கடவுள் மூன்று வடிவங்களையும் படைக்கின்றார். இதனூடாகவே அவர் தனது மூன்று பணிகளையும் மேற்கொள்கின்றார். அச்சா.