14.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையுடன் நேர்மையாக இருங்கள். உங்கள் அட்டவணையை நேர்மையாக வைத்திருங்கள். ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். ஒரேயொரு தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள்.

கேள்வி:
முழுமையாக 84 பிறவிகளையும் எடுப்பவர்கள் செய்கின்ற முயற்சி யாது?

பதில்:
அவர்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கும், தங்கள் பௌதீகப் புலன்களில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கும் விசேட முயற்சி செய்கின்றார்கள்; அவர்களின் கண்கள் என்றுமே குற்றமானவை ஆகுவதில்லை. இப்பொழுதும் எவரையும் காணும்பொழுது, விகார எண்ணங்கள் தோன்றி, கண்கள் குற்றமானவை ஆகினால், அந்த ஆத்மா முழுமையான 84 பிறவிகளையும் எடுப்பவர் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

பாடல்:
எங்களை இப் பாவ உலகில் இருந்து அப்பால் ஓய்வும், சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் சாந்தி.
இது பாவ உலகம் என்பதை இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். புண்ணிய உலகத்தைப் பற்றியும் மனிதர்கள் அறிந்துள்ளார்கள். தூய, புண்ணிய உலகம் முக்தியும் ஜீவன்முக்தியும் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே பாவம் எதுவும் இருப்பதில்லை. இராவண இராச்சியமான, துன்ப உலகில் மாத்திரமே பாவம் உள்ளது. துன்பத்தை விளைவிக்கின்ற இராவணனின் படத்தை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். இராவணன் ஒரு மனிதனாக இல்லாத பொழுதும் அவனின் கொடும்பாவியை அவர்கள் எரிக்கின்றார்கள். இந்த நேரத்தில் நீங்கள் இராவண இராச்சியத்தில் இருக்கின்றீர்கள் என்பதையும், ஆனால் நீங்கள் அதிலிருந்து வெளியேறி விட்டீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது அதிமேன்மையான சங்கமயுகத்தில் இருக்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வரும்பொழுது, உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்ற தந்தையிடம் செல்கின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. அவர் உங்களைச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். பிரம்மாவோ அல்லது வேறு எந்தச் சரீரதாரியோ உங்களைச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குவதில்லை. தனக்கெனச் சரீரம் ஒன்றைக் கொண்டிராத சிவபாபாவே, இதனைச் செய்கின்றார். உங்களுக்கும் சரீரங்கள் இருக்கவில்லை, ஆனால் நீங்கள் சரீரங்களை எடுத்து, பிறப்பு இறப்புச் சக்கரத்திற்குள் பிரவேசித்தீர்கள். உங்கள் எல்லையற்ற தந்தையிடம் நீங்கள் செல்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் எங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அத்தகைய முயற்சியைச் செய்வதனால், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அனைவரும் சுவர்க்கத்தை நினைவு கூருகின்றார்கள். நிச்சயமாகப் புதிய உலகம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். அதனை நிச்சயமாக எவரோ ஒருவர் ஸ்தாபிக்க வேண்டும். நரகமும் எவரோ ஒருவரினால் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்கள் சந்தோஷ தாமத்தில் நடிக்கின்ற பாகங்கள் எப்பொழுது முடிவடையும் என்பதை அறிவீர்கள்; இராவண இராச்சியம் ஆரம்பம் ஆகுவதால் நீங்கள் துன்பத்தை அனுபவிக்க ஆரம்பிக்கின்றீர்கள். தற்பொழுது இது துன்ப உலகம். இங்கே எத்தனை மில்லியன்களை உடையவர்களும், பில்லியன்களை உடையவர்களும் இருந்த பொழுதிலும் நிச்சயமாக இது தூய்மையற்ற உலகம் என்றே கூறப்படுகின்றது. இது ஏழ்மை நிறைந்த துன்ப உலகமாகும். ஒருவர் எவ்வளவு பெரிய கட்டடங்களையும், சந்தோஷத்திற்காக எவ்வளவு சௌகரியங்களையும் கொண்டிருந்தாலும், இவ்வுலகம் பழையதும், தூய்மையற்றதும் என்றே அழைக்கப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் இந்த நச்சாற்றில் தத்தளிக்கின்றார்கள். விகாரத்தில் ஈடுபடுதல் பாவம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: இது இல்லாமல் எவ்வாறு உலகம் தொடர முடியும்? அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ கடவுளே, ஓ தூய்மையாக்குபவரே, வந்து, இந்தத் தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குங்கள்! ஆத்மாக்களே தங்கள் சரீரங்கள் மூலம் இதனைக் கூறுகின்றார்கள். ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியதால், அவர்களே அழைக்கின்றார்கள். சுவர்க்கத்தில் உள்ள ஒருவரேனும் தூய்மை அற்றவராக இருப்பதில்லை. சங்கமயுகத்தில் நன்றாக முயற்சி செய்பவர்களே, தாங்கள் முழுமையாக 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்பவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பின்னர் சத்தியயுகத்தில் அவர்கள் இலக்ஷ்மி நாராயணனுடன் ஆட்சி செய்வார்கள். ஒருவர் மாத்திரம் 84 பிறவிகளை எடுத்துள்ளார் என்றில்லை. அரசருடன், பிரஜைகளும் இருக்க வேண்டும். பிராமணர்களாகிய உங்கள் மத்தியிலும் அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலர் அரசர், அரசிகள் ஆகுகின்றார்கள். ஏனையோர் பிரஜைகள் ஆகுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுதே நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். இந்தக்கண்கள் குற்றமானவை. ஒருவரைப் பார்க்கும் பொழுது, அவரின் பார்வை தூய்மை அற்றதாக ஆகினால், அவர் 84 பிறவிகளை எடுக்கவில்லை எனக் கூறப்பட முடியும். அத்தகையவர்களால் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக முடியாது. உங்கள் கண்களை வெற்றி கொள்ளும் பொழுதே, நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். கண்களிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. கண்களே உங்களை ஏமாற்றுகின்றன. ஒவ்வோர் ஆத்மாவும் இந்த யன்னல்களினூடாகப் பார்க்கின்றார். இவருக்குள் இரு ஆத்மாக்கள் உள்ளனர். தந்தையும் இந்த யன்னல்களினூடாகப் (கண்கள்) பார்க்கின்றார். எனது பார்வையும் ஆத்மாக்களை நோக்கியே செல்கின்றது. தந்தை ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: நானும் ஒரு சரீரத்தை எடுத்துள்ளதாலேயே என்னால் பேச முடிகின்றது. பாபா உங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது இராவண இராச்சியம். நீங்கள் இந்தத் தூய்மையற்ற உலகிலிருந்து வெளியேறி உள்ளீர்கள். சிலர் அதிகளவு முன்னேறிச் சென்றுள்ளார்;கள். ஆனால், ஏனையோர் பின்னோக்கிச் சென்றுள்ளார்கள். ஒவ்வொருவருமே கூறுகின்றார்கள்: என்னைக் கரையேற்றுங்கள். நீங்கள் கரையேறிச் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். ஆனால் அங்கே உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், நீங்கள் தூய்மையாக வேண்டும்; நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதில் பிரதான விடயம், தந்தையை நினைவு செய்வதாகும், அப்பொழுதே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே முதல் பாடம். ஆத்மாக்களாகிய நீங்கள் நடிகர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில் நாங்கள் சந்தோஷ தாமத்திற்குச் சென்றோம், இப்பொழுது நாங்கள் இந்தத் துன்ப உலகில் இருக்கின்றோம். தந்தை எங்களை அந்தச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இப்பொழுது வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து, தூய்மை ஆகுங்கள். என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். மக்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் பெருமளவு துன்பத்தை விளைவிக்கின்றார்கள். சிலர் காமம் எனும் தீய ஆவியையும், ஏனையோர் கோபத்தையும் கொண்டுள்ளார்கள். சிலர் தங்கள் கைகளையும் பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர் பிறருக்குத் துன்பத்தை விளைவிக்கின்ற, ஒரு பாவாத்மா. நீங்கள் இன்னமும் தொடர்ந்தும் பாவத்தைச் செய்தால், உங்களால் எவ்வாறு புண்ணியாத்மா ஆக முடியும்? அத்தகையவர் குலத்தின் பெயருக்கு அவதூறை ஏற்படுத்துகின்றார். அனைவரும் என்ன கூறுவார்கள்? கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதாகவும், நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதாகவும், உலக அதிபதிகள் ஆகுவதாகவும் கூறுகின்றீர்கள். இருப்பினும் நீங்கள் இத்தகைய செயல்களைச் செய்கின்றீர்கள்! ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: தினமும் இரவில் உங்களைப் பாருங்கள். நீங்கள் ஒரு கீழ்ப்படிவான குழந்தையாக இருந்தால், உங்கள் அட்டவணையை பாபாவிற்கு அனுப்புங்கள். சிலர் தங்கள் அட்டவணையை எழுதுகின்றார்கள். ஆனால் தாங்கள் எவருக்கேனும் துன்பம் விளைவித்தார்களா அல்லது தவறுகள் செய்தார்களா என்பதை எழுதுவதில்லை. தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்து கொண்டு, தொடர்ந்தும் பிழையான செயல்களைச் செய்வதும் சரியல்ல. நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுதே பிழையான செயல்கள் செய்யப்படுகின்றன. சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்று பாருங்கள். அது மிகவும் இலகுவானது. சிலரால் ஒரே நாளில் ஆசிரியராகி விடமுடியும். தந்தை உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார்; அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர் நீங்கள் சென்று அதனைக் கடைய வேண்டும். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தோம்? சிலர் தங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரை விட அதிகளவு தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றார்கள். பாபாவினால் இதனை உங்களுக்கு நிரூபிக்க முடியும். சிலர் பாபாவிடம் தங்கள் அட்டவணையைக் காட்டிக் கூறுகின்றார்கள்: பாபா, எனது அட்டவணையைப் பாருங்கள். நான் எவருக்கும் சிறிதளவு துன்பத்தையேனும் கொடுக்கவில்லை. பாபா கூறுகின்றார்: இந்தக் குழந்தை மிகவும் இனிமையானவர்; அவர் மிகச்சிறந்த நறுமணத்தைக் கொடுக்கின்றார். ஓர் ஆசிரியர் ஆகுவது ஒரு விநாடிக்கான விடயம். சில மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை விடவும் நினைவு யாத்திரை செய்வதில் முன்னேறிச் செல்கின்றார்கள். ஆகையால் அவர்கள் ஆசிரியர்களை விடவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள். பாபா வினவுகின்றார்: நீங்கள் யாருக்குக் கற்பிக்கின்றீர்கள்? தினமும் சிவாலயங்களுக்குச் சென்று, சிவபாபா எவ்வாறு வந்து, சுவர்க்கத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார் எனவும், எவ்வாறு உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார் எனவும் நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதனை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. சிலர் தங்கள் அட்டவணைகளை எழுதி, பாபாவிற்கு அனுப்புகின்றார்கள்: பாபா, எனது ஸ்திதி இவ்வாறு உள்ளது. பாபா வினவுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் எந்தப் பாவச் செயல்களையும் செய்யவில்லை, இல்லையா? குற்றப் பார்வை உங்களைத் தவறான செயல்களைச் செய்ய வைக்கவில்லைத்தானே? உங்கள் சொந்தப் பண்புகளையும், நடத்தையையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். உங்கள் நடத்தை, செயற்பாடு அனைத்தும் கண்களிலேயே தங்கியுள்ளது. கண்கள் பல வழிகளில் உங்களை ஏமாற்றுகின்றன. நீங்கள் அனுமதி இல்லாமல் எதனையாவது எடுத்து உண்டால், அது ஒரு பாவம். ஏனெனில், நீங்கள் அதனை எவரது அனுமதியும் இல்லாமல் எடுத்தீர்கள். இங்கே பல நியதிகள் உள்ளன. இது சிவபாபாவின் யாகம் ஆகும். பொறுப்பானவரின் அனுமதி இல்லாமல் எவருமே எதனையும் எடுத்து உண்ணக்கூடாது. ஒருவர் இதனைச் செய்ய ஆரம்பித்தால், ஏனையோரும் அவ்வாறே செய்வார்கள். உண்மையில், இங்கே எதனையும் பூட்டி வைக்க வேண்டிய தேவையில்லை. தூய்மையற்ற எவரும் இந்தக் கட்டடத்தின் சமையலறைக்குள் வரக்கூடாது என நியதி கூறுகின்றது. வெளியில், ஒருவர் தூய்மையானவரா அல்லது தூய்மையற்றவரா என்ற கேள்விக்கு இடமில்லை. எவ்வாறாயினும், அவர்கள் தங்களைத் தூய்மை அற்றவர்கள் என்றே அழைக்கின்றார்கள்; அனைவரும் தூய்மை அற்றவர்கள். வல்லபாச்சாரியர்கள் அல்லது சங்கராச்சாரியர்களைத் தொடுவதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை. ஏனென்றால், தாங்கள் தூய்மையானவர்கள் என்றும், ஏனைய அனைவரும் தூய்மை அற்றவர்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இங்கே அனைவரின் சரீரமும் தூய்மையற்று உள்ள பொழுதிலும், நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்பவே, நீங்கள் ஒவ்வொருவரும் விகாரங்களைத் துறக்கின்றீர்கள். விகாரம் அற்றவர்களின் விக்கிரகங்களை, விகாரம் நிறைந்தவர்கள் வணங்குகின்றார்கள். கூறப்பட்டுள்ளது: “இவர் மிகத் தூய்மையான, தர்மாத்மா”. சத்தியயுகத்தில் தூய்மை அற்றவர்கள் இருப்பதில்லை; அது தூய உலகாகும். அங்கு ஒரேயொரு வகையினரே உள்ளனர். நீங்கள் இந்த இரகசியங்கள் அனைத்தையும் அறிவீர்கள். உலகின் ஆரம்பத்தில் இருந்து மத்தியினூடாக இறுதிவரையான இரகசியங்கள் உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் அனைத்தையும் அறிவோம். அறிவதற்கு வேறு எதுவும் இல்லை. நாங்கள் படைப்பவராகிய தந்தையை அறிவோம்; நாங்கள் சூட்சும உலகைப் பற்றி அறிவோம்; நாங்கள் அடைவதற்கு முயற்சி செய்கின்ற, எங்கள் எதிர்கால அந்தஸ்தை நாங்கள் அறிவோம். எவ்வாறாயினும், உங்கள் நடத்தை பாழாகினால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. ஒருவருக்குத் துன்பம் விளைவித்தல், விகாரத்தில் ஈடுபடுதல், தூய்மையற்ற பார்வை கொண்டிருத்தல் - இவை அனைத்தும் பாவங்களாகும். உங்கள் பார்வையை மாற்றுவதற்குப் பெருமளவு முயற்சி தேவையாகும். உங்கள் பார்வை மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் கோபப்படுவதை உங்கள் கண்கள் பார்க்கும் பொழுது, நீங்களும் சண்டையிட ஆரம்பிக்கிறீர்கள். சிவபாபாவுக்கான அன்பு சிறிதளவேனும் இல்லாததுடன், நீங்கள் சிவபாபாவை முழுமையாக நினைவு செய்யாமலும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணராகிய, கோவிந்தரின் காட்சி கிடைக்கச் செய்தது சிவபாபாவினது மகத்துவம், குருவின் மகத்துவம், சற்குருவின் மகத்துவம் ஆகும். உங்களைக் கோவிந்தரைப் போல் ஆகச் செய்பவர் குருவே ஆவார். ஒரு காட்சியைக் கொண்டிருப்பதால், உங்கள் வாய் இனிப்பூட்டப்பட மாட்டாது. மீராவுக்கு ஒரு காட்சி கிடைத்தது, ஆனால் அவருடைய வாய் இனிப்பூட்டப்பட்டதா? அவர் உண்மையில் சுவர்க்கத்துக்குச் செல்லவில்லை. அது பக்தி மார்க்கம்; அது சுவர்க்கத்தின் சந்தோஷம் என அழைக்கப்பட மாட்டாது. அது கோவிந்தரைக் காண்பதற்கான ஒரு கேள்வியல்ல, ஆனால் அவரைப் போன்று ஆகுவதாகும். அவ்வாறு ஆகுவதற்கே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் அவரிடம் வந்துள்ளீர்கள், அவர் உங்களை அவ்வாறு (கிருஷ்ணர்) ஆக்குகின்றார் என்னும் போதை உங்களுக்கு இருக்க வேண்டும். ஆகவே, பாபா அனைவருக்கும் ஆலோசனை கூறுகிறார்: இதை உங்கள் அட்டவணையில் எழுதுங்கள்: என்னுடைய கண்கள் என்னை ஏமாற்றினவா? நான் பாவம் செய்தேனா? ஏதாவதொரு வழியில் கண்கள் உங்களை நிச்சயமாக ஏமாற்றுகின்றன. கண்கள் முழுமையாகக் குளிர்ச்சி அடைய வேண்டும். உங்களைச் சரீரம் அற்றவர்களாகக் கருதுங்கள். இறுதியில் கர்மாதீத ஸ்திதி அடையப்படும். ஆனால், நீங்கள் உங்கள் அட்டவணையை பாபாவுக்கு அனுப்பும் பொழுது மாத்திரமே, அதுவும் நடைபெறும். அனைத்தும் இயல்பாகவே தர்மராஜின் பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன. ஆனால், பௌதீக ரூபமும் அனைத்தையும் அறிய வேண்டும். அதனால் அவர் உங்களை எச்சரிக்கை செய்ய முடியும், ஏனெனில் தந்தை இங்கே பௌதீக ரூபத்தில் வந்துள்ளார். குற்றப் பார்வையை உடைய ஒருவர் அல்லது சரீர உணர்வு உடையவர் சூழலைத் தூய்மை அற்றதாக ஆக்குவார். இங்கே அமர்ந்திருக்கும் பொழுது கூட, உங்கள் புத்தியின் யோகம் வெளியே செல்கின்றது. மாயை உங்களைப் பெருமளவு ஏமாற்றுகின்றாள். மனம் மிகவும் விஷமத்தனமானது. இவ்வாறு ஆகுவதற்கு நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் பாபாவிடம் வரும்பொழுது, அவர் உங்களை இந்த ஞானத்தின் மூலம் அலங்கரிக்கின்றார். நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தூய்மை ஆகுவீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அதன்பின்னர் நீங்கள் தூய சரீரங்களையும் பெறுவீர்கள். சத்தியயுகத்தில் ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டும் தூய்மையாக இருக்கும். அரைக் கல்பத்தின் பின்னர், இராவண இராச்சியம் நிலவும். மக்கள் வினவுகின்றார்கள்: கடவுள் ஏன் இப்படிச் செய்தார்? எவ்வாறாயினும், இது நாடகத்தில் அநாதியாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் எதுவும் செய்யவில்லை. சத்தியயுகத்தில் ஒரு தேவ தர்மம் மாத்திரமே இருக்கின்றது. சிலர் கூறுகின்றார்கள்: நான் ஏன் அத்தகைய கடவுளை நினைவு செய்ய வேண்டும்? எவ்வாறாயினும், உங்களுக்கு வேறு சமயங்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. முட்களாக ஆகியுள்ளவர்கள், வந்து மலர்கள் ஆகுவார்கள். சிலர் வினவுகின்றார்கள்: பாரத மக்களை மாத்திரமா கடவுள் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார்? அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறாகக் கடவுள் பாகுபாடு காட்டுகின்றாரா? எவ்வாறாயினும் இது நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவருமே சுவர்க்கத்திற்குச் செல்வதாயின், எண்ணற்ற சமயங்களின் பாகம் எப்படித் தொடர முடியும்? சுவர்க்கத்தில் பில்லியன் கணக்கான ஆத்மாக்கள் இருப்பதில்லை. முதலில் பிரதான விடயத்தை, அதாவது, கடவுள் யார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனை அவர்கள் புரிந்து கொள்ளாது விட்டால், அவர்கள் தொடர்ந்தும் பல கேள்விகளைக் கேட்கின்றார்கள். அவர்கள் தங்களை ஆத்மாக்கள் எனக் கருதினால், நீங்கள் சொல்வது சரி என்று கூறுகின்றார்கள். நாங்கள் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக விரும்புகின்றோம். நீங்கள் அந்த ஒரேயொருவரை நினைவுசெய்ய வேண்டும். சகல சமயத்தவர்களுமே கடவுளை நினைவு செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். கண்காட்சிகளில் நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்துகின்றீர்கள். இருப்பினும் வெகுசிலரே வெளிப்படுகின்றனர். எவ்வாறாயினும், நீங்கள் இனிமேலும் கண்காட்சிகள் நிகழ்த்தக்கூடாது என்பது அதற்கான அர்த்தம் இல்லை. அது நாடகத்தில் இருந்தது, நீங்கள் நிகழ்த்தினீர்கள். சிலவேளைகளில் கண்காட்சிகளின் மூலம் ஆத்மாக்கள் வெளிப்படுகின்றார்கள், சிலவேளைகளில் வெளிப்படுவதில்லை. நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, பலரும் வந்து, உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். குறைந்த அந்தஸ்தைக் கோரவுள்ள எவரும் அந்தளவிற்கு முயற்சி செய்ய மாட்டார்கள். இருப்பினும் தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவித்தீர்களா என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் எவருடனாவது சண்டை, சச்சரவில் ஈடுபட்டேனா? நான் எவருக்காவது பிழையான எதனையாவது கூறினேனா? நான் சரியற்ற எதனையாவது செய்தேனா? பாபா கூறுகின்றார்: நீங்கள் செய்த பாவச் செயலை எழுதுங்கள். துவாபரயுகம் முதல் நீங்கள் பாவங்களைச் செய்து வருவதால், பாவாத்மாக்கள் ஆகியுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் அதனை பாபாவிற்கு எழுதிக் கொடுக்கும் பொழுது, அதன் சுமை இலேசாக்கப்பட முடியும். சிலர் எழுதுகின்றார்கள்: நான் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. பாபா கூறுகின்றார்: அச்சா, உங்கள் அட்டவணையைக் கொண்டு வாருங்கள், நான் அதைப் பார்ப்பேன். பாபா அத்தகைய நல்ல குழந்தைகளைப் பார்க்க விரும்புவதால், அவர் உங்களை இங்கே அழைப்பார். பாபா தகுதியான, கீழ்ப்படிவான குழந்தைகளுக்குப் பெருமளவு அன்பைக் கொடுக்கின்றார். இன்னமும் எவருமே சம்பூர்ணம் அடையவில்லை என்பதை பாபா அறிவார். நீங்கள் ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சியை பாபா பார்க்கின்றார். குழந்தைகள் தங்கள் அட்டவணைகளை எழுதாத பொழுது, நிச்சயமாக அவர்கள் பாபாவிடம் இருந்து மறைக்கின்ற ஏதோவொரு பலவீனம் உள்ளது. தனது அட்டவணையை எழுதுபவரை மாத்திரமே உண்மையில் நேர்மையான குழந்தை என பாபா கருதுகின்றார். எவ்வாறாயினும் அட்டவணையுடன், நற்பண்புகளும் தேவைப்படுகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சுமையை இலேசானது ஆக்குவதற்கு, நீங்கள் செய்துள்ள பாவங்களைத் தந்தைக்கு எழுதுங்கள். இப்பொழுது எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். ஒரு தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தையாக இருங்கள்.

2. உங்கள் பார்வையை மிகவும் நன்றாக வைத்திருங்கள். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றாமல் இருப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் பண்புகளை மிகவும் நன்றாக வைத்திருங்கள். காமம் அல்லது கோபத்தின் ஆதிக்கத்தின் கீழ், எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் இலட்சியத்தையும் சென்று அடைய வேண்டிய இலக்கையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்த வண்ணம், சதா புனிதமாகவும் சந்தோஷமாகவும் ஆகி, தீவிர முயற்சி செய்வீர்களாக.

பிராமண வாழ்க்கையின் இலட்சியம், எந்தவிதமான எல்லைக்கு உட்பட்ட ஆதாரங்களும் இல்லாமல் சதா அக சந்தோஷத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இந்த இலட்சியம் மாறி, நீங்கள் எல்லைக்கு உட்பட்ட பேறுகள் என்ற சிறிய சந்துகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளும்போது, நீங்கள் சென்று அடைய வேண்டிய இலக்கு மிகத் தொலைவில் சென்றுவிடும். ஆகவே, என்னதான் நடந்தாலும், நீங்கள் எல்லைக்கு உட்பட்ட பேறுகள் சிலவற்றைத் துறக்க நேரிட்டாலும் அப்படியே செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் உங்களின் அழியாத சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள். புனிதமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் ஆசீர்வாதத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, தீவிர முயற்சி செய்வதன் மூலம் அழியாத பேறுகளை அடையுங்கள்.

சுலோகம்:
நற்குணங்களின் ரூபமாகித் தொடர்ந்து நற்குணங்களைத் தானம் செய்யுங்கள். இது ஒரு மிகப் பெரிய சேவை ஆகும்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராகவும் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆகவும் இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, பல வகையான வரிசைகளில் இருந்து அப்பால் செல்லுங்கள். எப்போதும் உங்களின் நேரத்தைத் தந்தையுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்துங்கள். அன்பிலே உங்களை மறந்திருங்கள், அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியில் இருங்கள். ஏனைய சகல விடயங்களும் இலகுவாக முடிந்துவிடும். அப்போது உங்களின் பிரஜைகளினதும் பக்தர்களினதும் வரிசையே உங்களின் முன்னால் இருக்கும்.