15.01.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ‘ஓ கடவுளே, ஓ பாபா!’ போன்ற வார்த்தைகள் உங்கள் வாய்களில் இருந்து என்றுமே வெளிப்படக் கூடாது. அந்தப் பயிற்சி பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஏன் வெண்ணிற ஆடையை அணிய விரும்புகிறீர்கள்? அது எதைக் குறிக்கின்றது?

பதில்:
நீங்கள் இப்பொழுது இப் பழைய உலகில் மரணித்து வாழ்கிறீர்கள் என்பதாலேயே நீங்கள் வெண்ணிற ஆடையை அணிய விரும்புகிறீர்கள். இந்த வெண்ணிற ஆடை மரணத்தைக் குறிக்கின்றது. ஒருவர் மரணிக்கும் போது அவர் வெள்ளைத் துணியினால் மூடப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மரணித்து வாழ்கிறீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ‘ஆன்மிகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், வெறுமனே ‘தந்தை’ எனக் கூறினாலும் அதுவும் சரியே. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சகோதரர்கள் என நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். எனவே தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் அனைவருக்கும் விளங்கப்படுத்துவதில்லை. நீங்கள் சகோதரர்கள் என நீங்கள் அனைவரும் கூறுகின்றீர்கள். கீதையில் கூறப்படுகின்றது: கடவுள் பேசுகின்றார். கடவுள் யாருடன் பேசுகின்றார்? அனைவரும் கடவுளின் குழந்தைகளே. அவர் தந்தை என்பதால், கடவுளின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். கடவுள் உங்களுக்கு விளங்கப்படுத்தி, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்திருக்கின்றார். இப்பொழுது உங்கள் புத்திகளின் பூட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள வேறு எவரும் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். செய்தியைப் பெற்றவர்கள் தொடர்ந்தும் பாடசாலைக்கு வந்து கற்பார்கள். தாம் கண்காட்சியைப் பார்த்து விட்டோம் என்பதால், மேலும் சிறிதளவு இந்த ஞானத்தைக் கேட்பதற்காகச் செல்ல வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள். இவை தூய்மையாக்குபவரும் ஞானக்கடலும் கீதையை உரைத்த சிவனின் வாசகங்கள் என்பதே முதலாவதும், முதன்மையானதுமான விடயமாகும். அனைத்திற்கும் முதலில், எமக்குக் கற்பித்து விளங்கப்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஒரேயொருவரான அசரீரியான ஞானக்கடலான பரமாத்மா ஆவார். அவரே சத்தியம், அவர் உண்மையை மாத்திரமே உங்களுக்குக் கூறுவார். எனவே அதிலிருந்து வேறு எந்தக் கேள்விகளும் எழுவதில்லை. அனைத்திற்கும் முதலில் பரமாத்மாவான பரமதந்தை பிரம்மாவினூடாக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதுவே இராஜ அந்தஸ்தாகும். அனைவரதும் தந்தையான இவ் உலகிற்கு அப்பாலுள்ள தந்தையே உங்களுக்கு இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார் என்றும் அவரே அதிமேலான அதிகாரி என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கும் போது, அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இருக்க மாட்டாது. அவரே தூய்மையாக்குபவர். எனவே அவர் வரும் போது, அவர் நிச்சயமாக தனது சொந்த நேரத்திலேயே வர வேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதை உங்களால் காணக் கூடியதாக உள்ளது. விநாசத்தின் பின்னர் விகாரமற்ற உலகம் இருக்கும். இது விகாரம் நிறைந்த உலகமாகும். பாரதம் விகாரம் அற்றதாக இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களின் புத்தி சற்றேனும் வேலை செய்வதில்லை. கோத்ரேஜ் பூட்டினால் அவர்களது புத்தி பூட்டப்பட்டுள்ளது. அவரிடமே அவற்றிற்கான சாவி உள்ளது. அதனாலேயே அவர் ஞானத்தை அருள்பவர் என்றும் தெய்வீகக் கண்ணை அருள்பவர் என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைக் கொடுக்கின்றார். உங்களுக்கு கற்பிப்பவர் யார் என்பதை எவருமே அறியாதிருக்கின்றார்கள். அவர் தாதா (பிரம்மாபாபா) என அவர்கள் நினைப்பதால், அவர்கள் விமர்சிக்க ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் ஏதாவது ஒரு குறையை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதால், இதனை நீங்கள் முதலில் விளங்கப்படுத்த வேண்டும். இதில் எழுதப்பட்டுள்ளது: கடவுள் சிவன் பேசுகின்றார். அவரே சத்தியமானவர் ஆவார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் தூய்மையாக்குபவரான சிவன். நான் சாலிகிராம்களாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக பரந்தாமத்தில் இருந்து வந்திருக்கின்றேன். அந்தத் தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். இந்த நேரத்தில், மாத்திரமே நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். அவரே உலகைப் படைப்பவர். அவர் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குகின்றார். அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எனவே, அனைத்திற்கும் முதல், அவரின் அறிமுக்தைக் கொடுக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் உங்களுக்கு உள்ள உறவுமுறை என்ன? அவரே சத்தியம் ஆவார். அவர் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்கு உண்மையான இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தையே சத்தியமும், அவரே சத்திய உலகைப் படைப்பவரும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாறுவதற்கே நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு சட்டநிபுணரிடம் செல்லும் போது, நீங்கள் ஒரு சட்டநிபுணர் ஆகுவதற்கே அங்கு சென்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. சிலர் நம்பிக்கை வைத்திருந்த போதிலும், பின்னர் அவர்களின் புத்தியில் சந்தேகம் எழுகின்றது. அதன் பின்னர், ஏனையவர்கள் அவர்களிடம் கூறுகின்றார்கள்: கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதாகக் கூறுகின்றீர்கள், அவ்வாறாயின், கடவுளை விட்டுவிட்டு நீங்கள் இங்கே ஏன் வருகிறீர்கள்? அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும் போது, அவர்கள் திரும்பிச் சென்று விடுகின்றார்கள். அவர்கள் ஏதாவது ஒரு பாவச் செயலைச் செய்கின்றார்கள். கடவுள் பேசுகின்றார்: காமமே மிகக் கொடிய எதிரி. அதனை நீங்கள் வெற்றி கொள்வதனால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். தூய்மை ஆகுபவர்கள் பின்னர் தூய உலகிற்குச் செல்கின்றார்கள். இங்கே, இது இராஜயோகம் பற்றிய கேள்வியாகும். நீங்கள் அங்கே சென்று ஆட்சி செய்வீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்த பின்னரே வீடு திரும்புவார்கள். இது கணக்குத் தீர்க்கும் காலமாகும். சத்திய யுகம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படுகின்றது. என உங்கள் புத்தி இப்பொழுது கூறுகின்றது. சத்தியயுகம் தூய உலகம் எனப்படுகின்றது. ஏனைய அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். அவர்கள் தமது சொந்தப் பாகங்களையே மீண்டும் நடிப்பார்கள். தூய்மையாகுவதுடன் தூய உலகின் அதிபதியாக வேண்டும் என்பதற்கான முயற்சியை நீங்களும் உங்களுக்காகவே தொடர்ந்தும் செய்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் அதிபதிகள் என உங்களையே கருதுவீர்கள். பிரஜைகளும் அதிபதிகளே. மக்கள் கூறுகின்றார்கள்: எனது பாரதம்! மகத்துவமான மனிதர்கள், சந்நியாசிகள் போன்றோரும் கூறுகின்றார்கள்: எனது பாரதம்! இந்த நேரத்தில் பாரதத்தில் உள்ள அனைவருமே நரகவாசிகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கே இப்பொழுது இராஜயோகம் கற்கின்றோம். அனைவரும் சுவர்க்கவாசிகள் ஆகுவார்கள் என்றில்லை. இந்த நேரத்தில் நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அந்த மக்கள் கூறுகின்ற அனைத்தும் சமயநூல்களில் இருந்தே கொடுக்கப்படுகின்றன. அவர்கள் சமயநூல்களின் அதிகாரிகள். தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில் அவர்கள் வேதங்களையும், சமயநூல்களையும் கற்கின்ற வேளையில் அவர்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழிறங்குகிறார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கம் முடிவடையும் போதே நான் வருகின்றேன். நான் பக்தர்கள் அனைவருக்கும் அவர்களின் பக்திக்கான பலனைக் கொடுக்க வர வேண்டும். பெரும்பான்மையானோர் பக்தர்களே. அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் அழைக்கின்றார்கள்: ஓ தந்தையான கடவுளே! பக்தர்கள் நிச்சயமாக ‘ஓ தந்தையான கடவுளே! ஓ கடவுளே!’ எனக் கூறுகின்றார்கள். பக்திக்கும் இந்த ஞானத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. என்றுமே ‘ஓ கடவுளே!’ என்பது உங்கள் வாயிலிருந்து வெளிவரக்கூடாது. மக்கள் அரைக்கல்பமாக அப் பயிற்சியைச் செய்திருக்கின்றார்கள். அவர் உங்கள் தந்தை என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளதால், நீங்கள் இனிமேலும் ‘ஓ பாபா!’ எனக் கூறக்கூடாது. நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். முதலில் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை பெறுகிறீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கான உரிமையைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுத்துள்ளார். அவரே உண்மையான தந்தை ஆவார், அல்லவா? தந்தை தனது குழந்தைகள் கிரகிப்பதற்காக இந்த ஞானமிர்தத்தைக் கொடுக்கின்றார் என்பது அவருக்குத் தெரியும். அவர் அவர்களை ஞானச்சிதையில் அமர்த்தி அவர்களை ஆழ் உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்து, அவர்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புகிறார். ஆத்மாக்கள் அமைதிதாமத்தினதும் சந்தோஷ தாமத்தினதும் வாசிகள் என்பதையும் தந்தை உங்களுக்குக் விளங்கப்படுத்தி உள்ளார். சந்தோஷ உலகம் விகாரமற்ற உலகம் எனப்படுகின்றது. தேவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள். மற்றையது எமது இனிய வீடாகும்! அது நடிகர்களாகிய உங்கள் வீடு என்பதும், அந்த அமைதி தாமத்திலிருந்தே உங்கள் பாகங்களை நடிப்பதற்காக நீங்கள் இங்கே வருகின்றீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாங்கள் இவ்வுலகவாசிகள் அல்ல. அந்த நடிகர்கள் அவ்விடத்து வாசிகள். அவர்கள் தங்கள் வெவ்வேறு வீடுகளில் இருந்து வந்து, தங்கள் ஆடையை மாற்றிக் கொண்டு தங்கள் பாகத்தை நடிக்கின்றார்கள். உங்கள் வீடு அமைதி தாமம்; என்பதும் அங்கேயே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வரும் போது, தந்தை வந்து அனைவரையும் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். இதனாலேயே அவர் விடுதலையளிப்பவரும் வழிகாட்டியும் என்று அழைக்கப்படுகின்றார். அவர் துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். எனவே மனிதர்கள் அனைவரும் எங்கு செல்வார்கள்? இதனைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! இங்கே வாருங்கள் என நீங்கள் தூய்மையாக்குபவரை அழைத்தீர்கள். எதற்காக? உங்கள் சொந்த மரணத்திற்காகவே ஆகும்! துன்ப உலகில் நீங்கள் வாழ விரும்பவில்லை என்பதாலேயே நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் வீடு திரும்புவோம்! அவர்கள் அனைவரும் முக்தியில் நம்பிக்கை கொண்டவர்கள். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. அந்த மக்கள் புராதன இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள். உண்மையில், ஹத்த யோகிகளுக்கு இராஜயோகம் பற்றி எதுவுமே தெரியாது. அவர்களின் யோகம் பிழையானது என்பதால் நீங்கள் சென்று அவர்களுக்கு உண்மையான இராஜயோகத்தைக் கற்பிக்க வேண்டும். சந்நியாசிகளின் காவி ஆடையைக் காணும் போது மக்கள் அவர்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கின்றார்கள். பௌத்த மதத்திலும் காவி ஆடை அணிந்த ஒருவரைக் கண்டால், அவர்கள் அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள். சந்நியாசிகள் தாமதமாகவே வருகின்றார்கள். பௌத்த மதத்தின் ஆரம்ப காலத்தில் சந்நியாசிகள் இருக்கவில்லை. பௌத்த மதத்தில் பாவம் அதிகரிக்கும் போதே சந்நியாசி தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அதன் ஆரம்பத்தில், அந்த ஆத்மாவும் மேலிருந்தே வருகின்றார். அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைத் தொடர்ந்து கீழே வருகின்றார்கள். ஆரம்பத்திலேயே துறவறத்தைக் கற்பிப்பதால் அவர் என்ன செய்ய முடியும்? துறவறம் பின்னரே வருகின்றது. அவர்கள் இங்கிருப்பதையே பிரதி செய்கின்றார்கள். சந்நியாசிகளுக்கு மரியாதை செலுத்துகின்ற பல கிறிஸ்தவர்களும் உள்ளார்கள். காவி உடையே ஹத்த யோகிகளின் சீருடையாகும். உங்கள் குடும்பத்தையும் வீட்டையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்றோ அல்லது நீங்கள் வெண்ணிற ஆடை அணிய வேண்டும் என்றோ இல்லை. எவ்வாறாயினும் வெண்ணிற ஆடை சிறந்தது. நீங்கள் ‘பத்தி’ யில் இருந்ததால், இது உங்கள் ஆடையாகி விட்டது. இக்காலத்தில், மக்கள் வெண்ணிற ஆடைகளை அதிகளவு விரும்புகின்றார்கள். ஒருவர் மரணிக்கும் போது, அவர் வெள்ளைத் துணியால் மூடப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது மரணித்து வாழ்கிறீர்கள். எனவே வெண்ணிற ஆடை அணிவது நல்லது. முதன்முதலில், ஒருவருக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இரு தந்தையர் உள்ளனர் என்பதை விளங்கப்படுத்துவதற்குக் காலம் தேவையாகும். கண்காட்சிகளில் உங்களுக்கு விவரமாக விளங்கப்படுத்த முடியாது. சத்தியயுகத்தில் உங்களுக்கு லௌகீகத் தந்தை மாத்திரமே இருப்பார். இந்த நேரத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர் உள்ளார்கள். ஏனெனில் கடவுள் பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றார். அவர் அனைவரதும் தந்தை ஆவார். உங்களுக்கும் ஒரு லௌகீகத் தந்தை உள்ளார். அச்சா. மூன்று தந்தையினரில் அதிமேலான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? அசரீரியான தந்தை உங்களுக்கு எவ்வாறு ஆஸ்தியை கொடுக்கின்றார்? அவர் அதனை பிரம்மாவினூடாகவே கொடுக்கின்றார். இப்படத்தை நீங்கள் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும். சிவபாபா அசரீரியானவர், இவர் பிரஜாபிதா பிரம்மா அதாவது, கொள்ளுப் பாட்டனாரான ஆதிதேவ் ஆவார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னைக் கொள்ளுப் பாட்டனாரான சிவன் என அழைப்பதில்லை. நான் அனைவருக்கும் தந்தை ஆவேன், பிரம்மாவான இவரோ மனிதகுலத்தின் தந்தை ஆவார். நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். நீங்கள் ஆண்கள், பெண்களாக இருந்தாலும் நீங்கள் சகோதர சகோதரிகள் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொண்டிருக்கின்றது. உங்கள் ஆஸ்தியை நீங்கள் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையில் குற்றமான துன்புறுத்தல் இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விகாரப் பார்வை இருக்குமாயின், அவர்கள் வீழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் தந்தையை மறந்து விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: எனது குழந்தை ஆகிய பின்னர் உங்கள் முகத்தை நீங்கள் அழுக்காக்கிக் கொள்கிறீர்கள்! எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மிகவும் போதை நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். உங்கள் லௌகீகக் குடும்பத்தினரோடு நீங்கள் வாழ்ந்து, அவர்களுக்கான உங்கள் பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். உங்கள் லௌகீகத் தந்தையை நீங்கள் ‘அப்பா’ என்றே அழைக்க வேண்டும். அவரை நீங்கள் சகோதரர் என்று அழைக்கக்கூடாது. மிகவும் சாதாரணமாக நீங்கள் அவரை ‘அப்பா’ என அழைக்கலாம். அவர் உங்கள் லௌகீகத் தந்தை என்பதை உங்கள் புத்தி புரிந்திருக்கின்றது. உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. இந்த ஞானம் தனித்துவமானது. இக்காலத்தில் சிலர் தந்தையைப் பெயர் சொல்லி அழைப்பதும் உண்டு. ஆனால் உங்கள் தந்தையை உறவினர் ஒருவரின் முன்னிலையில் நீங்கள் ‘சகோதரர்’ என்று அழைப்பீர்களாயின், உங்களுக்குப் பித்து பிடித்துவிட்டது என்றே அவர் நினைப்பார். நீங்கள் மிகவும் சாதூர்யமாக இருக்க வேண்டும். உங்கள் ஞானம் மறைமுகமானது, உங்கள் உறவுமுறையும் மறைமுகமானதே. நீங்கள் மிகவும் சாதூர்யமாகவே பழக வேண்டும். எவ்வாறாயினும், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல் நல்லது. உங்கள் உறவினர்களுக்கான பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். உங்கள் புத்தி மேலே செல்ல வேண்டும். எங்கள் ஆஸ்தியை நாங்கள் பாபாவிடமிருந்தே பெறுகின்றோம். எவ்வாறாயினும், உங்கள் மாமாவை நீங்கள் ‘மாமா’ என்றும் உங்கள் தந்தையை நீங்கள் ‘அப்பா’ என்றுமே அழைக்க வேண்டும். பிராமணர் அல்லாதவராயின் அவரால் சகோதரர்கள், சகோதரிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. பிரம்மா குமார், பிரம்மாகுமாரிகள் ஆகியவர்களால் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். வெளியில் இருந்து வந்தவர்கள் இதனை முதலில் கேட்டதும், அதிர்ச்சி அடைவார்கள். இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் நல்லதொரு புத்தி தேவை. குழந்தைகளாகிய உங்கள் புத்திகளைத் தந்தை மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆக்குகின்றார்! முன்னர், உங்களுக்கு எல்லைக்கு உட்பட்ட புத்தியே இருந்தது. இப்பொழுது உங்கள் புத்தி, எல்லையற்றதை நோக்கியே செல்கின்றது. அவர் எங்கள் எல்லையற்ற தந்தை ஆவார். அவர்கள் அனைவரும் எங்கள் சகோதர சகோதரிகள் ஆவார்கள். உறவுமுறை என்ற வகையில் ஒரு மருமகளை, மருமகள் என்றே அழைக்க வேண்டும். மாமியாரை, மாமி என்றே அழைக்க வேண்டும். அவர்கள் இருவருமே இங்கு வந்தாலுமே, நீங்கள் சகோதரி என்று அழைக்கக் கூடாது. வீட்டில் வாழும் போதும், நீங்கள் மிகவும் சாதூர்யமாகவே பழக வேண்டும். மக்களின் கருத்துக்களையிட்டு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின், நீங்கள் கணவனைச் சகோதர் ஆக்குகின்றீர்கள் என்றும் மாமியாரைச் சகோதரி ஆக்குகிறீர்கள் என்றுமே கூறுவார்கள். உங்களுக்கு என்ன கற்பிக்கப்படுகின்றது என அவர்கள் அதிசயப்படுவார்கள். இந்த ஞானத்தின் இவ்விடயங்களை உங்களைத் தவிர வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. ‘உங்களுக்கே உங்கள் வழியும் முறையும் தெரியும்’ என்று கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகையால், உங்களுக்கு மாத்திரமே அவரின் வழியும் முறையும் தெரியும். எவரும் குழப்பம் அடையாத வகையில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். கண்காட்சிகளில் கடவுளே கற்பிக்கின்றார் என்பதை முதலில் விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது அவர் யார் என எங்களுக்குக் கூறுங்கள்! அவர் அசரீரியான சிவனா அல்லது ஸ்ரீ கிருஷ்ணரா? சிவனின் பிறப்பின் பின்னரே, ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு இடம்பெறுகின்றது. ஏனெனில் தந்தையே இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். பரமாத்மாவான சிவன் வரும்வரையில் உங்களால் அவரின் பிறந்தநாளைக் கொண்டாட முடியாது என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் பதிந்துள்ளது. சிவன் வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் உலகைப் படைக்கும் வரையில், உங்களால் எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும்? அவர்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவுமே புரியாதிருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசர் ஆயின் அவர் நிச்சயமாக சத்திய யுகத்திலேயே இளவரசராக இருந்திருக்க முடியும். அங்கே தேவர்களின் இராச்சியமும் இருக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் மாத்திரமே இராச்சியத்தைப் பெறுபவராக இருக்கவும் முடியாது. அது நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ணரின் உலகமாகும். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் உலகைப் பற்றியும் இது கம்சனின் உலகம் என்றும் பேசுகின்றார்கள். கம்சனின் உலகம் அழிக்கப்படும் போது, ஸ்ரீகிருஷ்ணரின் உலகம் ஸ்தாபிக்கப்பட்டது. அவை இரண்டுமே பாரதத்திலேயே இருக்கின்றன. கம்சன் போன்றோர் புதிய உலகில் இருக்க முடியாது. இக் கலியுகமே கம்சனின் உலகம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது எத்தனை மனிதர்கள் உள்ளார்கள் எனப் பாருங்கள்! சத்தியயுகத்தில் வெகுசிலரே இருக்கிறார்கள். தேவர்கள் யுத்தம் புரியவில்லை. அதனை ஸ்ரீ கிருஷ்ணரின் உலகம் என்று அழைத்தாலும் சரி, விஷ்ணுவின் உலகம் என அழைத்தாலும் சரி, அல்லது தேவ சமுதாயமாயினும் அசுர சமுதாயமாயினும் அனைத்தும் இங்கேயே உள்ளன. எவ்வாறாயினும், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலோ அல்லது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலோ எந்த யுத்தமும் இடம்பெறவில்லை. நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்த ஐந்து விகாரங்களையும் நீங்கள் வெற்றி கொண்டால், நீங்கள் உலகை வெற்றி கொள்வீர்கள். இதில் யுத்தம் என்ற கேள்விக்கு இடமில்லை. ‘சண்டையிடுதல்” என நீங்கள் கூறுவீர்களாயின், அது வன்முறையாகும். நீங்கள் இராவணனை வெற்றி கொள்ள வேண்டும். ஆனால் அகிம்சை வழியில் வெற்றி கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்தாலே எங்கள் பாவங்கள் அழிக்கப்படும். போராடுதல் போன்றவற்றின் கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள் என்பதால் இப்பொழுது மீண்டும் சதோபிரதான் ஆக வேண்டும். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் தொடர்புபடுத்தினால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையே தூய்மையாக்குபவர் என்பதால் உங்கள் புத்தியின் யோகத்தை அவருடன் தொடர்புபடுத்தினால் நீங்கள் தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது அவருடன் நடைமுறைரீதியில் யோகம் செய்கின்றீர்கள். இதில் யுத்தம் என்ற எந்தக் கேள்விக்கும் இடமில்லை. நன்றாகக் கற்று, தந்தையுடன் மிகவும் நன்றாக யோகம் செய்பவர்கள், தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சகோதரத்துவப் பார்வை என்ற உங்கள் பயிற்சியைப் பேணுகின்ற அதேவேளை உறவினர்களுக்கான உங்கள் பொறுப்புகளையும் நிறைவேற்றுங்கள். அனைவருடனும் மிகவும் சாதூர்யமாகப் பழகுங்கள். குற்றப் பார்வை இருக்கக்கூடாது. கணக்குத் தீர்க்கும் இந்த நேரத்தில் நீங்கள் முற்றிலும் தூய்மையாக வேண்டும்.

2. தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுவதற்கு மிகவும் நன்றாகக் கற்றுத் தூய்மையாக்குபவரான தந்தையுடன் யோகம் செய்வதன் மூலம் தூய்மை ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் சம்பூரணத்தின் அடிப்படையில், நேரத்தை அண்மிக்கச் செய்கின்ற ஓர் மாஸ்டர் படைப்பவர் ஆகுவீர்களாக.

நேரம் உங்கள் படைப்பாகும், நீங்கள் மாஸ்டர் படைப்பவர் ஆவீர்கள். படைப்பவர் படைப்பில் தங்கி இருப்பதில்லை, படைப்பவர் தனது படைப்பை தன்னில் தங்கியிருக்கச் செய்வார். ஆகையால், நேரம் உங்களை சம்பூரணம் ஆக்கும் என என்றுமே நினைக்காதீர்கள். நீங்கள் சம்பூரணம் ஆகி, நேரத்தை அண்மிக்கச் செய்ய வேண்டும். வருகின்ற எந்தத் தடையும் தனக்குரிய நேரத்தில் நிச்சயமாகச் சென்று விடும், ஆனால் அந்த நேரத்திற்கு முன்பாகவே மாற்றத்தின் சக்தியினால் அதனை நீங்கள் மாற்றினால், அதற்கான பலன் உங்களைச் சேரும். இந்த நேரத்தின் அடிப்படையில் மாற்றம் ஏற்படுமாயின், அதற்கான எந்தப் பலனும் உங்களை சேராது.

சுலோகம்:
கர்மாவினதும் யோகத்தினதும் சமநிலையைக் கொண்டிருப்பவர்கள் மாத்திரமே உண்மையான கர்மயோகிகள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

உங்கள் பௌதீகப் புலன்களின் ஆதாரம் உங்களுக்கு இருக்கும் வரைக்கும், நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், எந்தக் கர்ம பந்தனமும் இல்லாதிருக்க வேண்டும், ஆனால் கர்ம உறவுமுறை இருக்க வேண்டும். ஜீவன்முக்தி ஸ்திதி என்றால், நீங்கள் அந்தச் செயல்களின் சுமை எதுவும் இல்லாது, அதிகளவு வெற்றியை அனுபவம் செய்வீர்கள். விடுதலை அடைந்தவர்கள் சதா வெற்றி சொரூபங்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஜீவன்முக்தி அடைந்த ஓர் ஆத்மா ஆன்மீக போதையுடன் கூறுவார்: வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது, வெற்றி எனது பிறப்புரிமை.