15.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிகாலையில் விழித்தெழுந்து, அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா, எவ்வாறு அத்தகைய பெரிய சரீரத்தை இயக்குகின்றார் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். “ஆத்மாவாகிய நான், எனக்குள் அழியாததொரு பாகத்தைப் பதிவு செய்திருக்கின்றேன்”

கேள்வி:
சிவபாபா எந்த நடைமுறைகளைச் செய்கின்றார், அவர் எந்த நடைமுறைகளைச் செய்வதில்லை?

பதில்:
சிவபாபா ஆத்மாக்களை ஞான இரத்தினங்களால் அலங்கரிக்கும் பணியைச் செய்கின்றார், ஆனால் அவர் சரீரத்தை அலங்கரிக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில் அவர் கூறுகின்றார்: எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. நான் இவரின் சரீரத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்ட பொழுதிலும், அந்த ஆத்மாவே தனது சொந்தச் சரீரத்தை அலங்கரிக்கின்றார். நான் அதைச் செய்வதில்லை. நான் எப்பொழுதும் சரீரமற்றவர் ஆவேன்.

பாடல்:
உலகம் மாறினாலும், நாங்கள் மாறவோ அல்லது கைவிடவோ மாட்டோம்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைக் கேட்டீர்கள். அதனைக் கேட்டவர் யார்? ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய சரீரத்திலுள்ள செவிகளின் மூலம் அதனைக் கேட்டீர்கள். ஓர் ஆத்மா எவ்வளவு சின்னஞ்சிறியவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மா சரீரத்தில் இல்லாத பொழுது, சரீரத்தினால் எவ்விதப் பயனும் இல்லை. அத்தகைய பெரியதொரு சரீரம், சின்னஞ்சிறியதோர் ஆத்மாவின் ஆதாரத்துடனேயே இயங்குகின்றது. இந்த இரதத்தில் பிரசன்னமாகியுள்ள ஆத்மாவை உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. இதுவே அமரத்துவ ரூபமான, ஆத்மாவின் சிம்மாசனம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அது மிகவும் களிப்பூட்டுவதும், அர்த்தம் நிறைந்ததும் ஆகும். நீங்கள் அர்த்தம் நிறைந்ததொரு விடயத்தைக் செவிமடுக்கும் பொழுது, தொடர்ந்தும் அதைப் பற்றியே சிந்திக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்களும் அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா, எவ்வாறு அத்தகையதொரு பெரிய சரீரத்தில் உள்ளார் என்பதையிட்டுத் தொடர்ந்தும் சிந்திக்கின்றீர்கள். இந்த ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. சரீரம் அழிகின்றது, ஆத்மா அழிவதில்லை. இது சிந்திப்பதற்குரிய விடயம். அதிகாலையில் விழித்தெழுந்து இவ்விடயங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவர் என்பதையும், அவர் அநாதியான பாகத்தைப் பெற்றுள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். “ஆத்மாவாகிய நான் மிகவும் அற்புதமானவன்!” இது புதிய ஞானம், இதனைப் பற்றி உலகிலுள்ள எவருமே அறியார். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இதனைக் கூறுகின்றார். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா எவ்வாறு தனது பாகத்தை நடிக்கின்றார் என்பது பற்றி நீங்கள் தொடர்ந்தும் சிந்தித்தவாறு இருக்;க வேண்டும். ஒரு சரீரம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது. சிவபாபாவின் ஆத்மா எவ்வாறு வந்து, போகின்றார் என்பது பாபாவிற்குத் தெரியாது. இந்தச் சரீரத்திலேயே அவர் சதா இருக்கின்றார் என்றில்லை. ஆகையால், இந்த விடயங்களையிட்டு நீங்கள் சிந்திக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த ஞானம் போன்றதொன்றை, வேறு எவராலும் பெற முடியாது. உண்மையிலேயே இந்த ஆத்மாவில் (பிரம்மா பாபாவின்) முன்னர் இந்த ஞானம் இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களில் உள்ளவர்களும் இவ்விடயங்களைப் பற்றி என்றுமே சிந்திப்பதில்லை. எவரிடமும் ஆத்மா, பரமாத்மாவைப் பற்றிய ஞானம் சிறிதளவேனும் இல்லை. ஆத்மாவே சரீரத்தின் மூலம் பிறருக்கு மந்திரங்களைக் கூறுகின்றார் என்பது சந்நியாசிகள் அல்லது புனிதர்கள் எவருக்குமே தெரியாது. ஆத்மாக்கள் தங்கள் சரீரங்கள் மூலம் சமயநூல்களைக் கற்கின்றனர். எந்தவொரு மனிதரும் ஆத்ம உணர்வில் இருப்பதில்லை. எவருக்குமே ஆத்மாவைப் பற்றிய இந்த ஞானம் இல்லை. எனவே ஒருவரிடம் எவ்வாறு தந்தையைப் பற்றிய இந்த ஞானம் இருக்க முடியும்? ‘இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் மிகவும் விவேகிகளாக ஆகுகின்றீர்கள்!’ என ஆத்மாக்களாகிய உங்களிடமே தந்தை கூறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை இங்கே அமர்ந்திருந்து, இச் சரீரத்தில் உள்ள ஆத்மாவிற்குக் கற்பிப்பதை ஒரு மனிதரேனும் புரிந்து கொள்வதில்லை. இவ்விடயங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எனினும், நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபடும்பொழுது, மறந்து விடுகின்றீர்கள். அனைத்துக்;கும் முதலில், ஆத்மாவின் இந்த ஞானத்தையே தந்தை கொடுக்கின்றார். எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இல்லை. ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என்று நினைவுகூரப்படுகின்றது. இதற்கான கணக்கும் உள்ளது. ஆத்மாவே சரீரத்தினூடாகப் பேசுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் சரீரத்தினூடாக நல்ல, தீய செயல்களைச் செய்கின்றார். தந்தை வந்து, ஆத்மாக்களாகிய உங்களை மிகவும் அழகானவர்கள் ஆக்குகின்றார். அனைத்துக்கும் முதலில், தந்தை கூறுகின்றார்: அதிகாலையில் விழித்தெழுந்தவுடன், உங்கள் சரீரத்தின் மூலம் செவிமடுக்கின்ற ஆத்மா எவ்வாறானவர் என்பதைப் பற்றிச் சிந்திப்பதைப் பயிற்சி செய்யுங்கள். தூய்மையாக்குபவரும் ஞானக்கடலும் என அழைக்கப்படுகின்ற பரமாத்மாவாகிய பரமதந்தையே ஆத்மாக்களின் தந்தை ஆவார். ஆகவே அவர்கள் கூறுவதைப் போன்று எந்த மனிதரையும் எவ்வாறு சந்தோஷக்கடல் என்றும், அமைதிக்கடல் என்றும் அழைக்க முடியும்? இலக்ஷ்மியும், நாராயணனும் சதா தூய்மைக் கடல்களாக உள்ளார்கள் என நீங்கள் கூறுவீர்களா? இல்லை, ஒரேயொரு தந்தை மாத்திரமே என்றும் தூய்மைக்கடல் ஆவார். மனிதர்கள் அமர்ந்திருந்து, பக்தி மார்க்கத்தின் சமயநூல்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்களிடம் எந்த நடைமுறைரீதியான அனுபவமும் இல்லை. ஆத்மாக்களே தங்கள் சரீரங்கள் மூலம் தந்தையைப் புகழ்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவரே எங்களின் மிகவும் இனிமையான பாபா. அவர் மாத்திரமே சந்தோஷத்தை அருள்பவர். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, இப்பொழுது எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! அழிவற்ற ஆத்மாக்களான நீங்கள் அநாதியான தந்தையிடம் இருந்து அநாதியான வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். அந்த அழியக்கூடிய சரீரதாரிகள், அழியக்கூடிய சரீரதாரிகளிடம் இருந்தே வழிகாட்டல்களைப் பெறுகின்றார்கள். இங்கு நீங்கள் சம்பாதிப்பதன் வெகுமதியைச் சத்தியயுகத்தில் பெறுகின்றீர்கள். அங்கு எவருமே பிழையான வழிகாட்டல்களைப் பெறுவதில்லை. இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸ்ரீமத் அநாதியானது; அது அரைச் சக்கரத்திற்கு நீடிக்கும். இது புதிய ஞானம். இதனைக் கிரகிப்பதுடன், பின்னர் அதனைச் செயல்படுத்தக்கூடிய அத்தகையதொரு புத்தி ஒருவருக்குத் தேவை. ஆரம்பத்தில் இருந்தே பக்தி செய்துள்ளவர்களினால் மாத்திரமே இதனை மிக நன்றாகக் கிரகிக்க முடியும். உங்கள் புத்திகளால் இதனை நன்றாகக் கிரகிக்க முடியாவிட்டால், நீங்கள் நிச்சயமாக ஆரம்பம் முதல் பக்தி செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு ஏதேனும் புரியாவிட்டால், தந்தையே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் என்பதால், அவரிடம் கேளுங்கள். அவர் பரமாத்மா என்றும் அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுது, புகழப்படுகின்றார்கள். ஆத்மாக்களின் புகழ் இருக்கும் பொழுதே, அவர்களுடைய சரீரங்களின் புகழும் இருக்கின்றது. ஓர் ஆத்மா தமோபிரதானாக இருக்கும் பொழுது, அவருடைய சரீரமும் புகழப்படுவதில்லை. இந்நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் ஆழமான புத்திகளைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களே அதனைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் இனிமையாகவும், அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுப்பவர்களாகவும் ஆகவேண்டும். பாபா மிக இனிமையானவர்! அவர் ஆத்மாக்களையும் மிகவும் இனிமையானவர்கள் ஆக்குகின்றார். ‘ஆத்மாக்களாகிய நாங்கள் அதர்மமான செயல்கள் எதனையும் செய்யக்கூடாது’ என்பதைப் பயிற்சி செய்யுங்கள். சோதித்துப் பாருங்கள்: “நான் அதர்மமான செயல்கள் எதனையும் செய்கின்றேனா?” சிவபாபா அதர்மமான எதனையும் செய்வாரா? இல்லை, அவர் அனைத்திலும் அதிமேன்மையான, நன்மைபயக்கும் பணியை மேற்கொள்ளவே வருகின்றார். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். ஆகவே குழந்தைகளாகிய நீங்களும், தந்தை மேற்கொள்கின்ற அதே பணியைச் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இருந்து அதிகளவு பக்தி செய்துள்ளவர்களாலேயே இந்த ஞானத்தைத் தங்களுக்;குள் நிலைத்திருக்கச் செய்ய முடியும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுதும் கூட தேவர்களின் பக்தர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் தங்கள் தலையை வெட்டவும் தயாராக உள்ளார்கள். குறைந்தளவு பக்தி செய்துள்ளவர்கள், அதிகளவு பக்தி செய்துள்ளவர்களின் பின்னால் செல்கின்றார்கள்; அவர்களின் புகழை அவர்கள் பாடுகின்றார்கள். அவர்களுடைய அனைத்தும் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. இங்கு நீங்கள் மறைமுகமானவர்கள். இவ்வுலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் முழுவதும் உங்கள் புத்திகளில் உள்ளது. தந்தை எங்களுக்குக் கற்பிப்பதற்காகவே வந்துள்ளார் என்பதையும், இப்பொழுது நாங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவுள்ளோம் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்ற இடமே எங்கள் வீடாகும். அங்கு சரீரங்கள் இல்லாததால், அங்கு எவ்வாறு சத்தம் இருக்க முடியும்? ஓர் ஆத்மா இல்லாவிட்டால், சரீரம் உயிரற்றதாக ஆகுகின்றது. மனிதர்களுக்குத் தங்கள் சரீரங்களின் மீது அதிகளவு பற்றுள்ளது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கும் பொழுது, பஞ்ச பூதங்கள் மாத்திரமே எஞ்சிய பொழுதிலும், மனிதர்களுக்கு இன்னமும் அதன் மீது அதிகளவு அன்புள்ளது. ஒரு மனைவி தனது கணவனின் சிதையில் விழுவதற்கும் தயாராக உள்ளார்; அச்சரீரத்தின் மீது அந்தளவு பற்று உள்ளது. முழு உலகின் மீதுமுள்ள உங்கள் பற்று அனைத்தையும் அழித்து விடவேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இச்சரீரம் அழியவுள்ளது என்பதால், அதிலிருந்து பற்றுக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். எனினும், பெரும் பற்றுள்ளது. ஓர் ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கிய நாள் நினைவுகூரப்படும் பொழுது, பிராமணப் புரோகிதர்களுக்கு உணவு கொடுக்கப்படுகின்றது. (அவர்கள் பிரிந்து சென்ற ஆத்மாவிற்கு மறைமுகமாக உணவு படைக்கின்றார்கள்.) அந்த ஆத்மாவால் எதனையுமே உண்ண முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அவ்விடயங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட வேண்டும். நாடகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பாகத்தை நடிக்கின்றார்கள். இந்நேரத்தில் நீங்கள் பற்றை அழிப்பவர்களாக வேண்டும் என்பதை அறிவீர்கள். பற்றை வென்ற அரசரின் கதையும் உள்ளது. உண்மையில் பற்றை வென்றவர் ஓர் அரசர் அல்ல. அவர்கள் பல கதைகளை உருவாக்கி உள்ளார்கள். அங்கு அகால மரணங்கள் இடம்பெறுவதில்லை. எனவே அங்கு எதனைப் பற்றியும் கேட்பதற்கான கேள்வி இல்லை. இந்த நேரத்திலேயே நீங்கள் பற்றை வென்றவர்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். சத்தியயுகத்தில் பற்றை வென்ற அரசர்கள் உள்ளார்கள். அரசரும், அரசியும் எவ்வாறோ, அவர்களின் பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள். உண்மையில் அந்த இராச்சியம் முழுவதும், பற்றை வென்றவர்களுக்கு உரியது. இராவண இராச்சியத்திலேயே பற்று உள்ளது. அங்கு விகாரம் எதுவும் இருப்பதில்லை, ஏனெனில் அங்கு இராவண இராச்சியம் இருப்பதில்லை; இராவண இராச்சியம் மறைந்து விடுகின்றது. இராமரின் இராச்சியத்தில் என்ன நிகழ்கின்றது என்பதைப் பற்றி எதுவுமே எவருக்கும் தெரியாது. இவ்விடயங்களைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. இச்சரீரத்தில் தந்தை இருந்த பொழுதிலும், அவர் ஆத்ம உணர்விலேயே இருக்கின்றார். ஒரு வீட்டைக் கடனுக்கு வாங்கி இருந்தாலும் அல்லது வாடகைக்கு எடுத்திருந்தாலும் கூட இன்னமும் அந்த வீட்டின் மீது பற்றுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளைத் தளபாடங்களினால் மிக நன்றாக அலங்கரிக்கின்றார்கள். தந்தைக்கு எதனையும் அலங்கரிக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர் சரீரமற்றவர். அவர் சரீரங்களை அலங்கரிக்கும் எப்பணியையும் செய்வதில்லை. அவர் குழந்தைகளான உங்களை இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களால் அலங்கரிக்கும் பணியை மாத்திரமே செய்கின்றார். அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். இச்சரீரம் தூய்மையற்றது. ஆயினும், அவர் தனது இன்னொரு சரீரத்தைப் பெறும்பொழுது, அது தூய்மையாகவே இருக்கும். இந்நேரத்தில் இவ்வுலகம் பழையதாகவும் அழிக்கப்படவும் உள்ளது. இது உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. அவர்கள் படிப்படியாக அதனைப் பற்றி அறிந்து கொள்வார்கள். அந்தப் புதிய உலகை ஸ்தாபிப்பதுவும், இப்பழைய உலகை அழிப்பதுவும் தந்தையின் பணி மாத்திரம் ஆகும். தந்தை வந்து புதிய உலகை ஸ்தாபிப்பதற்காக, பிரம்மா மூலம் படைப்பைப் படைக்கின்றார். நீங்கள் புதிய உலகிலா இருக்கின்றீர்கள்? இல்லை; அந்தப் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆகவே பிராமணர்களின் உச்சிக்குடுமியே அதியுயர்வானது. பாபாவிற்கு நேர்முன்னிலையில் வரும்பொழுது, அனைத்துக்கும் முதலில் நீங்கள் தந்தையாகிய கடவுளின் நேர்முன்னிலையில் வருகின்றீர்கள் என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டுமென பாபா விளங்கப்படுத்தி உள்ளார். சிவபாபா அசரீரியானவர். நீங்கள் அவருக்கு முன்னால் எப்படிச் செல்ல முடியும்? ஆகவே அந்தத் தந்தையை நினைவுசெய்து, பின்னரே இந்தத் தந்தையின் (பிரம்மாவின்) முன்னிலையில் வாருங்கள். அந்த ஒரேயொருவர் இவருக்குள் அமர்ந்திருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இச்சரீரம் தூய்மை அற்றது. சிவபாபாவின் நினைவில்லாமல் நீங்கள் எதனைச் செய்தாலும் பாவம் சேமிக்கப்படுகின்றது. நாங்கள் சிவபாபாவிடம் செல்கின்றோம். பின்னர் எங்களுடைய அடுத்த பிறவியில், வேறு உறவினரைக் கொண்டிருப்போம். அங்கே நாங்கள் தேவர்களின் மடிக்குச் செல்வோம். நாங்கள் ஒருமுறை மாத்திரமே இந்தக் கடவுளின் மடியைப் பெறுகின்றோம். நீங்கள் கூறுகின்றீர்கள்: “பாபா, நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன்”. அவரை ஒருபொழுதும் காணாத பலர் உள்ளனர். அவர்கள் வெளியில் வாழ்ந்து கொண்டு, சிவபாபாவிற்கு எழுதுகின்றார்கள்: “பாபா, நான் உங்களுடைய தத்தெடுக்கப்பட்ட குழந்தை ஆகியுள்ளேன்”. புத்தியில் இந்த ஞானம் உள்ளது. ஆத்மா கூறுகின்றார்: “நான் இப்பொழுது சிவபாபாவிற்கு உரியவன்”. இதற்கு முன்னர், நாங்கள் தூய்மை அற்றவர்களின் மடியில் இருந்தோம். எதிர்காலத்தில் நாங்கள் தூய தேவர்களின் மடிக்குச் செல்வோம். இந்தப் பிறவி மிகவும் பெறுமதியானது. நீங்கள் சங்கமயுகத்தில் ஒரு வைரம் போன்று பெறுமதி மிக்கவர்களாக ஆகுகின்றீர்கள். ஆற்றுநீர் கடலுடன் சங்கமிப்பது, சங்கமயுகம் அல்ல. அதில் இரவுக்கும், பகலுக்குமான வேறுபாடு உள்ளது. பிரம்மபுத்திரா நதியே மிகப்பெரிய நதியாகும். அது கடலைச் சந்திக்கின்றது. நதிகள் கடலுக்குள் பாய்கின்றன. ஞான நதிகளான நீங்கள், கடலிலிருந்து தோன்றி விட்டீர்கள். சிவபாபா ஞானக்கடல் ஆவார். நதிகள் அனைத்திலும் மிகப்பெரியது பிரம்மபுத்திரா நதியாகும். இவரின் பெயர் பிரம்மா. இவரும் கடலுக்குச் சமமானவர். நதிகள் எங்கிருந்து தோன்றுகின்றன என உங்களுக்குத் தெரியும். அவை கடலில் தோன்றி, பின்னர் கடலிற்கு உள்ளேயே அமிழ்ந்து விடுகின்றன. இனிமையான நீர் கடலில் இருந்தே கிடைக்கின்றது. கடலின் குழந்தைகளாகிய நீங்கள் வந்து, கடலுக்குள்ளே மீண்டும் அமிழ்ந்து விடுகின்றீர்கள். ஞானக்கடலில் இருந்து நீங்கள் தோன்றி, பின்னர் நீங்கள் அனைவரும் அவர் வசிக்கும் இடத்திற்கு அவருடனேயே திரும்பிச் செல்வீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் அங்கு வசிக்கின்றீர்கள். ஞானக்கடல் வந்து, உங்களை இனிமையானவராகவும், தூய்மையானவராகவும் ஆக்குகின்றார். அவர் உவர்ப்பாகியுள்ள ஆத்மாக்களை மீண்டும் இனிமையானவர்கள் ஆக்குகின்றார். ஐந்து விகாரங்களான உவர்ப்பான குப்பைகள் உங்களிடம் இருந்து அகற்றப்பட்டு, நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக ஆகுகின்றீர்கள். தந்தை உங்களைப் பெருமளவு முயற்சி செய்யத் தூண்டுகிறார். நீங்கள் சுவர்க்கத்தில் வசித்த பொழுது, மிகவும் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் முற்றிலும் அழுக்காகி விட்டீர்கள். இராவணன் உங்களை என்னவாக ஆக்கியுள்ளான் எனப் பாருங்கள்! பாரதத்தில் மாத்திரமே “வைரம் போன்று பெறுமதிமிக்க ஒரு பிறவி” என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. பாபா தொடர்ந்தும் உங்களை வினவுகின்றார்: சிப்பிகளைத் துரத்திச் செல்வதன் மூலம் உங்களை ஏன் விரக்திக்கு உள்ளாக்குகின்றீர்கள்? எச்சந்தர்ப்பதிலும் உங்களுக்கு அதிகளவு சிப்பிகள் தேவைப்படாது. ஏழைகள் மிக விரைவில் புரிந்து கொள்கின்றார்கள். செல்வந்தர்கள் தங்களுக்கு இப்பொழுது இங்கேயே சுவர்க்கம் உள்ளதென நம்புகின்றார்கள். இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவருடைய பிறப்பும் ஒரு சிப்பியைப் போன்று பெறுமதி அற்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்களும் அதுபோன்றே இருந்தோம். பாபா இப்பொழுது எங்களை என்னவாக ஆக்கியுள்ளார் எனப் பாருங்கள். மனிதர்களில் இருந்து நாராயணனாக மாறுகின்ற இலக்கும், குறிக்கோளும் உங்களுக்கு உள்ளன. பாரதம் இப்பொழுது மிகவும் வறுமை அடைந்து, ஒரு சிப்பி போன்ற பெறுமதியாக உள்ளது. இது பாரத மக்களுக்கே தெரியாது. இங்கே நீங்கள் மிகவும் சாதாரணமானவர்களும், பலவீனமான அப்பாவித் தாய்மார்களும் ஆவீர்கள். முக்கியஸ்தர்கள் இங்கே இருப்பதை விரும்புவதில்லை. இதற்குப் பதிலாக அவர்கள் மகத்தான சந்நியாசிகளும் குருமார்கள் போன்றவர்களும் இருக்கின்ற, பெரிய ஒன்றுகூடல்களுக்குச் செல்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: நானே ஏழைகளின் பிரபு ஆவேன். கடவுளே ஏழைகளைப் பாதுகாக்கின்றார் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் கோடானு கோடீஸ்வரர்கள் ஆகப்போகின்றீர்கள் என பாபா எழுதுகின்றார். அங்கே எவ்விதச் சண்டையோ அல்லது யுத்தமோ இருப்பதில்லை. இங்கோ பணத்திற்காக அதிகளவு சண்டைகள் இடம்பெறுகின்றன. அதிகளவில் இலஞ்ச ஊழலும் உள்ளன. மனிதர்களுக்குப் பணம் தேவை. பாபா உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்களை நிரப்புகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அரைச் சக்கரத்திற்கு உங்களுக்கு வேண்டியளவு செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம். எனினும் நீங்கள் முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். கவனயீனமாக இருக்காதீர்கள். ‘தந்தையைப் பின்பற்றுங்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது. தந்தையைப் பின்பற்றுவதனால் நீங்கள் இவ்வாறு ஆகுகின்றீர்கள். ஒரு சாதாரணப் பெண் அல்லது ஆணிலிருந்து இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவீர்கள். இது ஒரு முக்கியமான பரீட்சை. இதில் சற்றேனும் கவனயீனமாக இருக்காதீர்கள். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். ஆகவே நீங்கள் அதனைப் பின்பற்ற வேண்டும். சட்டங்களையும், நடைமுறைகளையும் மீறாதீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. இலாபம் நட்டம் பற்றியும், நீங்கள் தந்தையை எவ்வளவிற்கு நினைவு செய்கிறீர்கள் என்றும், எத்தனை பேருக்குப் இப்பாதையைக் காட்டினீர்கள் என்பதையிட்டும் ஒரு நாளாந்த அட்டவணையை வைத்திருங்கள். நீங்களே குருடர்களுக்கான ஒரு கைத்தடி ஆவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று இனிமையானவராகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். அதர்மமான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். நன்மைபயக்கின்ற, அதிமேன்மையான பணியைச் செய்யுங்கள்.

2. சிப்பிகளைத் துரத்திச் செல்வதனால், உங்களை விரக்தி அடையச் செய்யாதீர்கள். முயற்சி செய்து உங்கள் வாழ்க்கையை வைரம் போல் பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள். கவனயீனமானவர் ஆகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியில் சதா நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன், உங்கள் நம்பிக்கை எனும் பாதத்தை அசைக்காமல் வைத்திருப்பதன் மூலம் கவலையற்றவராக இருப்பீர்களாக.

கவலைப்படுவதே மிகப்பெரிய நோய் ஆகும். வைத்தியர்களிடம் அதற்கென மருந்து கிடையாது. கவலைப்படுபவர்கள், எந்தளவிற்கு பேறுகளைத் துரத்திச் செல்கிறார்களோ, அந்தளவிற்கு அதிகமாக அந்தப் பேறுகளும் அப்பால் ஓடிவிடுகின்றன. ஆகவே, உங்கள் நம்பிக்கை எனும் பாதம் சதா அசைக்கப்படாமல் இருக்க வேண்டும். நீங்கள் ஒரே ஆதாரத்தையும், ஒரே பலத்தையும் கொண்டிருந்து, அசைக்க முடியாதவராக இருக்கும் பொழுது, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. உத்தரவாதம் அளிக்கப்பட்ட வெற்றி, உங்களைச் சதா கவலையற்றவர்கள் ஆக்குகின்றது. உங்கள் நம்பிக்கை என்ற பாதத்தை அசைப்பதற்கு, மாயை பல்வேறு ரூபங்களில் வருகின்றாள். எவ்வாறாயினும், மாயை உங்களை அசைத்தாலும், நீங்கள் உங்களுடைய நம்பிக்கை எனும் பாதத்தை அசைய விடக்கூடாது. அப்பொழுது நீங்கள் கவலையற்றவர்களாக இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
ஒவ்வொருவருடைய சிறப்பியல்புகளையே தொடர்ந்தும் பாருங்கள், நீங்கள் ஒரு விசேடமான ஆத்மா ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

தந்தையுடன் உறவுமுறைகள் அனைத்தினதும் சந்தோஷத்தை அனுபவம் செய்து, அவரில் மூழ்கியிருப்பதாக கோப, கோபியராகிய உங்கள் தெய்வீகச் செயற்பாடுகள் நினைவுகூரப்பட்டு வருகின்றன. அவருடைய அன்பில் அமிழ்ந்திருப்பதே இதன் அர்த்தமாகும். ஆழ்ந்த அன்புடன் நீங்கள் ஒருவரைச் சந்திக்கும் பொழுது, இவையே அந்த அன்புச் சந்திப்பின் வார்த்தைகள்: “அவர்கள் ஒருவர் மற்றவரில் அமிழ்ந்துள்ளனர்” அல்லது “இருவர் சந்தித்து, ஒருவர் ஆகினார்”. ஆகவே, தந்தையின் அன்பில் அமிழ்ந்திருப்பது எனில், உங்கள் ரூபம் தந்தையினுடையதைப் போல் ஆகுவதாகும்.