16.01.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாகச் செய்த செயல்கள் அனைத்துக்குமான பலனைப் பெறுகிறீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தன்னலமற்ற சேவையைச் செய்கிறார்.
கேள்வி:
எவ்வாறு இவ் வகுப்பு மிகவும் அற்புதமாக உள்ளது? நீங்கள் இங்கு செய்ய வேண்டிய பிரதானமான முயற்சி என்ன?பதில்:
வயது குறைந்தவர்கள், வயது வந்தோர், வயோதிபர் அனைவரும் ஒன்றாக அமர்கின்ற ஒரே வகுப்பு இதுவே ஆகும். இந்த வகுப்பு மிகவும் அற்புதமானது, ஒருநாள் கல்லுப்புத்தி உடையவர்களும், தெய்வீகக் குணங்கள் அற்றவர்களும், சாதுக்களும் வந்து இங்கு அமர்வார்கள். நீங்கள் இங்கு செய்ய வேண்டிய பிரதான முயற்சி நினைவே ஆகும். நினைவினூடாக மாத்திரமே ஆத்மாக்களும், சரீரங்களும் இயற்கையாகக் குணப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், நினைவில் நிலைத்திருப்பதற்கு உங்களுக்கு இந்த ஞானமும் தேவையாகும்.பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்! விடியலின் இலக்கு தொலைவில் இல்லை!ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகத் தந்தை இதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கீதையையும், சமயநூல்களையும் எழுதியவர்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பது அற்புதமே; அவர்கள் அனைத்து விடயங்களில் இருந்தும் தவறான அர்த்தத்தைப் பிரித்தெடுக்கிறார்கள். ஞானக்கடலும், தூய்மையாக்குபவருமாகிய ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து அவற்றின் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். தந்தை மாத்திரமே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் மீண்டும் ஒருமுறை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வேறு பாடசாலைகளில் தாங்கள் மீண்டும் ஒருமுறை சட்டநிபுணர்கள் ஆகப் போகின்றோம் என அவர்கள் கூற மாட்டார்கள். எவ்வாறு “மீண்டும் ஒருமுறை” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவது என வேறு எவரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போல, இப்பொழுது மீண்டும் ஒருமுறை எல்லையற்ற தந்தையுடன் கற்கிறீர்கள் எனக் கூறுகிறீர்கள். நிச்சயமாக இவ்விநாசம் மீண்டும் ஒருமுறை இடம்பெறும். அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பெரிய குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் அவற்றை வெறுமனே வைத்திருப்பதற்காக உற்பத்தி செய்வதில்லை; இவ்விநாசமும் ஒரு மங்களகரமான நோக்கத்துக்காகவே உள்ளது. குழந்தைகளான நீங்கள் எதைப் பற்றியும் அஞ்சத் தேவையில்லை; இந்த யுத்தம் நன்மை அளிக்கும். தந்தை உங்களுக்கு நன்மை அளிப்பதற்கே வருகிறார். கூறப்பட்டுள்ளது: தந்தை வந்து பிரம்மாவினூடாக ஸ்தாபனைப் பணியையும், சங்கரரினூடாக விநாசத்தையும் மேற்கொள்கிறார். ஆகவே அக்குண்டுகள் போன்றவை விநாசத்திற்கானவை. அவற்றை விடவும் அதிகச் சக்திநிறைந்தவை எதுவும் இல்லை. அவற்றுடன், இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. அவற்றை இறை அனர்த்தங்கள் என்று அழைக்க முடியாது. இந்த இயற்கை அனர்த்தங்கள் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன‚ அவை புதியவை அல்ல! அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பெரிய குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: எங்களால் நகரங்கள் முழுவதையும் அழித்து விட முடியும். ஜப்பானில் அவர்கள் போட்ட குண்டுகள் மிகவும் சிறியவை. அவர்கள் இப்பொழுது மிகப் பெரிய குண்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அவர்களுக்குப் பெருஞ் சிரமம் ஏற்பட்டு, அவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத பொழுது, குண்டுகளைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். அதிகளவு சேதம் ஏற்படும்! என்ன நடைபெறுகிறது எனப் பார்ப்பதற்கு அவர்கள் ஒத்திகைகளை நடத்துகிறார்கள். அவர்கள் இவற்றில் பில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். அவற்றை உற்பத்தி செய்பவர்களின் சம்பளமும் கூட மிக அதிகளவாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்: இப்பழைய உலகம் அழியப் போகிறது. குழந்தைகளாகிய நீங்கள் அந்த புதிய உலகத்துக்காக முயற்சி செய்கிறீர்கள். நிச்சயமாகப் பழைய உலகம் அழியப் போகிறது எனக் காரணங்களும் கூறுகின்றன. கலியுகத்தில் என்ன இருக்கிறது என்பதையும், சத்திய யுகத்தில் என்ன இருக்கும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் நிற்கிறீர்கள். சத்திய யுகத்தில் அதிகளவு மக்கள் இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆகவே, அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த இயற்கை அனர்த்தங்களும் ஒரு கல்பத்தின் முன்னர் இடம்பெற்றன. பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். பல அனர்த்தங்களும் தொடர்ந்தும் வந்துள்ளன, ஆனால் அவை ஒரு சிறிய அளவிலேயே இருந்தன. இப்பொழுது இப்பழைய உலகம் முழுவதும் அழிக்கப்பட உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பரமாத்மாவாகிய, பரமதந்தையான, தந்தையே இங்கே அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்காகவே இவ்விநாசம் இடம்பெறுகிறது. உருத்திர ஞான யாகத்தில் இருந்தே விநாசத்துக்கான சுவாலைகள் வெளித்தோன்றின என்பது நினைவு கூரப்பட்டுள்ளது. கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் மிகச் சிறந்த அர்த்தம் உடையவை, ஆனால் எவரும் அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் அமைதியை வேண்டுகிறார்கள். விநாசம் விரைவில் நடக்க வேண்டும், அப்பொழுதே நாங்கள் சென்று சந்தோஷமாக இருக்க முடியும் என நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் சதோபிரதான் ஆகும் பொழுது மாத்திரமே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். தந்தை பலவிதமான கருத்துக்களைக் கொடுக்கிறார். அவை சிலரின் புத்தியில் மிகவும் நன்றாகப் பதிகின்றன, ஆனால் ஏனையோரின் புத்தியில் நன்றாகப் பதிவதில்லை. தாங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டுமென வயோதிபத் தாய்மார்கள் புரிந்து கொள்கிறார்கள், அவ்வளவுதான்! அவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்! எவ்வாறாயினும், அவர்களும் தங்களுடைய ஆஸ்தியைக் கோருகிறார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். அனைவரும் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். அஜாமிலைப் போன்ற பாவிகள், விபச்சாரிகள், போன்ற அனைவரும் ஈடேற்றப்பட வேண்டும். தூய்மைத் தொழிலாளிகளும் நல்ல ஆடைகளை அணிந்து வருகிறார்கள். காந்தி தீண்டத் தகாதவர்களை விடுதலை ஆக்கினார். அவர்கள் ஏனையோருடன் ஒன்றாக உணவு உண்கிறார்கள். தந்தை எதற்கும் உங்களுக்குத் தடை விதிக்கவில்லை. அவர்களும் ஈடேற்றப்பட வேண்டும் எனத் தந்தை புரிந்து கொள்கிறார். இதற்கும் அவர்கள் செய்கின்ற வேலைக்கும் எத்தொடர்பும் இல்லை. தந்தையுடனான யோகத்தில் உங்கள் புத்தியை இணைப்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு தீண்டத் தகாதவன். நாங்கள் சதோபிரதான் தேவர்களாக இருந்தோம் என்பதை இப்பொழுது நாங்கள் புரிந்து கொள்கின்றோம். இப்பொழுது, இறுதியில், மறுபிறவி எடுப்பதனால் நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம். இப்பொழுது ஆத்மாவாகிய நான், மீண்டும் தூய்மையாக வேண்டும். எவ்வாறு சிந்தியில் வந்த சுதேசிப் பெண்ணொருவர், திரான்ஸில் சென்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவள் பாபாவைச் சந்திப்பதற்கு ஓடோடி வருவாள். அவரும் ஓர் ஆத்மாவே என்பது விளங்கப்படுத்தப்பட்டது. தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு ஆத்மாக்களுக்கு ஓர் உரிமை உள்ளது. அவளுடைய குடும்ப அங்கத்தவர்களிடம் அவளைத் தொடர்ந்தும் ஞானத்தைப் பெற அனுமதிக்குமாறு வேண்டப்பட்டது, ஆனால் தங்கள் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படும் என அவர்கள் கூறினார்கள். அவர்கள் பயந்ததன் விளைவாக, அவர்கள் அவளை அழைத்துச் சென்று விட்டார்கள். உங்களிடம் வருகின்ற எவருக்கும் நீங்கள் “இல்லை” எனக் கூறக்கூடாது. கடவுள் அப்பாவிப் பெண்கள், விபச்சாரிகள், சுதேசி இனப் பெண்கள், சாதுக்கள் போன்ற அனைவரையும், அதாவது, சாதுக்களில் இருந்து சுதேசிகள் வரை ஈடேற்றுகிறார் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. யக்ஞத்துக்குச் சேவை செய்வதால் பெருமளவு பேறு இருக்கும், பலர் நன்மை அடைவார்கள். நாளுக்கு நாள், கண்காட்சிகளின் மூலமான சேவை அதிகரிக்கும். பாபா தொடர்ந்தும் பட்ஜ்களைச் செய்வித்துள்ளார். நீங்கள் எங்கே சென்றாலும், இந்தப் பட்ஜை விளங்கப்படுத்த வேண்டும்: இது தந்தை, இது தாதா, இது தந்தையின் ஆஸ்தி. இப்பொழுது தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள்! கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவர்கள் எனது பெயரை அகற்றி, குழந்தையின் பெயரைப் புகுத்தியதே தவறு. பாரதமக்கள் கூட, இராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலுள்ள உறவுமுறை என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய திருமணத்தின் முன்னரான அவர்களின் வரலாறு போன்றவை முற்றிலும் காட்டப்படவில்லை. அவர்கள் இருவரும் வெவ்வேறுபட்ட இராச்சியத்துக்கு உரியவர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர்கள் (சந்நியாசிகள்) இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு, இவை கடவுள் சிவனின் வாசகங்கள் எனக் கூறியிருப்பின், மக்கள் அவர்களை விரட்டி இருப்பார்கள். அவர்கள் வினவுவார்கள்: நீங்கள் இதை எங்கே கற்றீர்கள்? அது எந்தக் குரு? தாங்கள் அதை பிரம்மா குமாரிகளிடம் இருந்து கற்றோம் என்று அவர்கள் (சந்நியாசிகள்) கூறியிருப்பின், அவர்கள் அனைவரும் குழப்பம் அடைந்து விடுவார்கள். அவ்வாறாயின், குருமார்களின் இராச்சியம் முழுமையாகவே முடிவடைந்து விடும். அத்தகைய பலர் இங்கு வருகிறார்கள். அவர்கள் சிலவற்றை எழுதவும் செய்கிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் மறைந்து விடுகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறைகளைக் காண்பிக்கிறார். ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை இல்லாத பொழுது, தங்களுக்கு ஒரு குழந்தையை அருளுமாறு கடவுளை வேண்டுகிறார்கள். பின்னர், தங்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் பொழுது, அவர்கள் அதை மிகவும் கவனமாகப் பராமரிக்கிறார்கள்; அவர்கள் அவருக்குக் கல்வி புகட்டுகிறார்கள். பின்னர், அவர் வளர்ந்த பின்னர், சுயமாக சம்பாதிக்குமாறு அவர்கள் அவரைக் கேட்கிறார்கள். ஒரு தந்தை தனது குழந்தையைப் பராமரித்து, அவரைத் தகுதியானவர் ஆக்குகிறார். ஆகவே அவர் தனது குழந்தைகளின் சேவகர் ஆவார். இந்தத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்து உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தனது குழந்தைகள் சுதந்திரமாக செயலாற்ற ஆரம்பித்த பின்னர், தனது வியாபாரத்தில் ஈடுபட்டு, பெற்றோர் வயோதிபத்தை அடையும் போது, தமக்குச் சேவை செய்வார்கள் என ஒரு லௌகீகத் தந்தை நினைக்கின்றார். சிவத்தந்தை தனக்கென எச்சேவையையும் வேண்டுவதில்லை. அவர் தன்னலம் அற்றவர். ஆனால் ஒரு லௌகீகத் தந்தை தான் வாழும்வரையில் தன்னைப் பராமரிக்க வேண்டியது தனது குழந்தைகளின் கடமை என்றே நம்புகிறார். அவருக்கு அந்த ஆசை இருக்கிறது. அந்தத் தந்தை கூறுகிறார்: நான் தன்னலமற்ற சேவை செய்கிறேன். நான் ஓர் இராச்சியத்தை ஆளுவதில்லை. நான் மிகவும் தன்னலமற்றவர்! ஏனையோர் செய்வதற்கெல்லாம், அதற்கான பலனை அவர்கள் நிச்சயமாகப் பெறுகிறார்கள். அவரே அனைவரினதும் தந்தை. அவர் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் அத்தகையதொரு மேன்மையான அந்தஸ்தை அடைகிறீர்கள். நான் பிரம்மாந்தத்தின் அதிபதி மாத்திரமே. நீங்களும் அவ்வாறு ஆகுகிறீர்கள், ஆனால் நீங்கள் இராச்சியத்தைப் பெற்று, பின்னர் அதை இழக்கிறீர்கள். நான் இராச்சியத்தைப் பெறுவதோ அல்லது அதை இழப்பதோ இல்லை. இதுவே நாடகத்தில் எனது பாகம். உங்கள் சந்தோஷ ஆஸ்தியைக் கோருவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். ஏனைய அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். சந்தோஷம் காக்கை எச்சத்தைப் போன்றது என அக்குருமார்கள் கூறுகிறார்கள். இதனாலேயே அவர்கள் அமைதியை மாத்திரம் விரும்புகிறார்கள். அவர்களால் இந்த ஞானத்தைப் பெற முடியாது. அவர்கள் சந்தோஷத்தைப் பற்றிய எதையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: என்னால் மாத்திரமே அமைதியினதும் சந்தோஷத்தினதும் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்க முடியும். சத்திய, திரேதா யுகங்களில் குருமார்கள் இல்லை. அங்கு இராவணன் இருப்பதில்லை. அது இறை இராச்சியம் ஆகும். இந்நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. இவ்விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களை மிகவும் நன்றாகக் கிரகித்து, ஓர் உயர் அந்தஸ்தைக் கோர வேண்டும். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். புதிய உலக இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள், ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சக்கரத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் கூறுகின்றார்கள். அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கியதாக நினைவு கூரப்பட்டுள்ளது. பாண்டவர்களின் வெற்றியும் நினைவு கூரப்பட்டுள்ளது. நீங்கள் பிராமணர்கள். பிராமணர்கள் மாத்திரமே யாகங்கள் வளர்க்கின்றார்கள். இது மகத்துவமான, எல்லையற்ற, அதி முக்கியமான உருத்திர கடவுளின் யாகமாகும். பல வகையான எல்லைக்கு உட்பட்ட யாகங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த யாகம் ஒருமுறை மாத்திரமே வளர்க்கப்படுகின்றது. சத்திய, திரேதா யுகங்களில் யாகங்கள் இருப்பதில்லை. ஏனெனில், அங்கே அனர்த்தங்கள் போன்றவற்றின் கேள்வியே இல்லை. அந்த யாகங்கள் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. இவர் எல்லையற்றவர். எல்லையற்ற அர்ப்பணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த யாகம் எல்லையற்ற தந்தையினால் உருவாக்கப்படுகின்றது. அதன்பின்னர், அரைக்கல்பத்திற்கு எந்த யாகங்களும் இருக்க மாட்டாது. அங்கே இராவண இராச்சியமும் இருப்பதில்லை. அவ்விடயங்கள் அனைத்தும் இராவண இராச்சியம் தொடங்கும் பொழுது, ஆரம்பம் ஆகுகின்றன. இந்த எல்லையற்ற யாகம் ஒருமுறை மாத்திரமே உருவாக்கப்படுவதுடன், பழைய உலகம் முழுவதும் அதனுள் அர்ப்பணிக்கப்படுகின்றது. இது எல்லையற்ற உருத்திர ஞான யாகமாகும். இங்கே ஞானமும், யோகமுமே பிரதானமான விடயங்கள். யோகம் என்றால் நினைவாகும். 'நினைவு செய்தல்” என்ற வார்த்தை, மிகவும் இனிமையானது. ஆனால் 'யோகம்” என்ற வார்த்தை மிகவும் பொதுவானதாகி விட்டது. யோகம் என்பதன் அர்த்தத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. யோகம் என்றால் தந்தையை நினைவு செய்தல் என்று அர்த்தமாகும் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். பாபா, நீங்கள் எங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றீர்கள்! ஆத்மா கூறுகின்றார்: பாபா, நீங்கள் மீண்டும் ஒருமுறை வந்திருக்கின்றீர்கள்! நான் உங்களை மறந்திருந்தேன்! நீங்கள் எனக்கு இராச்சியத்தைக் கொடுத்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை வந்து என்னைச் சந்தித்துள்ளீர்கள்! நான் நிச்சயமாக உங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவேன். இவ்வாறாக நீங்கள் உங்களுடன் பேச வேண்டும். பாபா, நீங்கள் எனக்கு மிகவும் நல்ல பாதையைக் காட்டுகின்றீர்கள். நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதனை மறக்கின்றேன். நீங்கள் அதனை மறக்காதவாறு இப்பொழுது தந்தை உங்களை அத்தகையவர் ஆக்குகின்றார். இதனாலேயே நீங்கள் இப்பொழுது தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். இந்நினைவினைக் கொண்டிருப்பதால் மாத்திரமே, நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுவீர்கள். நான் உங்கள் முன்னிலையில் நேரடியாக வரும்பொழுதே, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். அதுவரையில் நீங்கள் தொடர்ந்தும் பாடுகிறீர்கள்: நீங்களே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவீர்கள். நீங்கள் இந்தப் புகழைப் பாடுகிறீர்கள், ஆனாலும் நீங்கள் ஆத்மாக்களைப் பற்றியோ அல்லது பரமாத்மாவைப் பற்றியோ புரிந்து கொள்வதில்லை. அத்தகையதொரு சின்னஞ்சிறிய புள்ளியில் ஓர் அழியாத பாகம் பதியப்பட்டுள்ளதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். தந்தை இதை விளங்கப்படுத்துகிறார். அவர் பரமாத்மாவாகிய, பரமதந்தை எனவும் அழைக்கப்படுகிறார். அவரே பரமாத்மா. அவர் ஒருபொழுதும் மங்காத சூரியனைப் போன்றவர் என்பதல்ல. ஓர் ஆசிரியர் செய்வதைப் போன்றே, நான் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கிறேன். பல குழந்தைகள் உள்ளார்கள். இவ்வகுப்பு எவ்வளவு அற்புதமானது எனப் பாருங்கள்! இங்கு யார் கற்கிறார்கள் எனப் பாருங்கள்! அப்பாவிப் பெண்களும், தெய்வீகக் குணங்கள் அற்றவர்களும், சாதுக்கள் போன்றோரும் கூட ஒருநாள் இங்கு வந்து அமர்வார்கள். வயோதிபப் பெண்களும், இளைய குழந்தைகளும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். அத்தகையதொரு பாடசாலையை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? இங்கு, நினைவுக்கான முயற்சியே செய்யப்படுகின்றது. இந்நினைவிற்கே காலம் எடுக்கிறது. நினைவுக்காக முயற்சி செய்வதும் ஞானமே ஆகும். நினைவுக்கான ஞானமும் உள்ளது. சக்கரத்தை விளங்கப்படுத்துவதற்கான ஞானமும் உள்ளது. இதுவே உண்மையான, இயல்பான, இயற்கை வைத்தியமாகும். ஆத்மாக்களான நீங்கள் முழுமையாகவே தூய்மை ஆகுகிறீர்கள். அந்த வைத்தியங்கள் சரீரங்களுக்கானவை, இந்த வைத்தியமோ ஆத்மாக்களுக்கு உரியது. ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. நிஜத்தங்கத்தால் நிஜ ஆபரணம் செய்யப்படுகிறது. இங்கு சிவபாபா தனிப்பட்ட முறையில் வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் இக்கரையிலிருந்து அக்கரை செல்ல வேண்டும். தந்தையையும், ஆஸ்தியையும், உங்கள் வீட்டையும் நினைவுசெய்யுங்கள். அதுவே இனிய மௌன வீடாகும். அமைதியின்மையின் ஊடாகத் துன்பம் விளைவிக்கப்படுகிறது, அமைதியினூடாகச் சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகிறது. சத்திய யுகத்தில், உங்களிடம் அமைதி, சந்தோஷம், செழிப்பு இருக்கின்றன் உங்களிடம் அனைத்தும் உள்ளது. அங்கு சண்டை அல்லது சச்சரவு செய்தல் என்பதற்கான கேள்வியே கிடையாது. நிஜத் தங்கமான, சதோபிரதான் ஆகுவதே, குழந்தைகளான உங்களுக்கு இருக்க வேண்டிய ஒரே அக்கறை, ஏனெனில் அப்பொழுது மாத்திரமே நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் அசைபோட்டு ஜீரணிக்கின்ற, ஆன்மீக உணவைப் பெறுகிறீர்கள். இன்று நாங்கள் செவிமடுத்த, முக்கிய கருத்துக்கள் எவை? இரு விதமான யாத்திரைகள் உள்ளன என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: ஆன்மீக யாத்திரையும், பௌதீக யாத்திரையும். இந்த ஆன்மீக யாத்திரை மாத்திரமே பயனுள்ளது. கடவுள் பேசுகிறார்: மன்மனாபவ! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இவ்விநாசம் மங்களகரமானது என்பதால், நீங்கள் அஞ்சக்கூடாது. உபகாரியான தந்தை நன்மையான விடயங்களையே தூண்டுகின்றார் எனும் விழிப்புணர்வைக் கொண்டிருந்து, சதா சந்தோஷமாக இருங்கள்.2. நிஜத் தங்கமான, சதோபிரதான் ஆகுவதற்கான ஓர் அக்கறையை மாத்திரமே சதா கொண்டிருந்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள். நீங்கள் பெறுகின்ற ஆன்மீக உணவைத் தொடர்ந்தும் அசைபோட்டு ஜீரணியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பொறுப்பானவரும் ஒவ்வொரு செயலையும் மிகச் சரியாகச் செய்பவரும் எனக் கருதுவதன் மூலம் முழுமையான வெற்றியின் சொரூபம் ஆகுவீர்களாக.இந்த நேரத்தில், மேன்மையான சங்கமயுக ஆத்மாக்களான உங்களின் மேன்மையான செயல்கள் ஒவ்வொன்றும் முழுச் சக்கரத்திற்கும் ஒரு சட்டம் ஆகின்றது. ஆகையால், உங்களை சட்டத்தை உருவாக்குபவர் எனக் கருதியவாறே ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். இவ்வாறு செய்வதனால், உங்கள் கவனயீனம் இயல்பாகவே முடிவடையும். சங்கமயுகத்தில், நீங்கள் சட்டத்தை உருவாக்குகின்ற, பொறுப்பான ஆத்மாக்கள் ஆவீர்கள். ஒவ்வொரு செயலையும் இந்த நம்பிக்கையுடன் செய்யுங்கள். ஏனெனில், சரியான முறையில் நீங்கள் செய்கின்ற செயல்கள் நிச்சயமாக முழுமையான வெற்றியை ஈட்டித்தரும்.
சுலோகம்:
சர்வசக்திவான் தந்தை உங்களுடன் இருக்கின்ற போது, மாயை ஒரு கடதாசிப்புலி ஆகிவிடுவாள்.அவ்யக்த சமிக்ஞை: இந்த அவ்யக்த மாதத்தில், பந்தனத்திலிருந்து விடுபட்டிருந்து, ஜீவன் முக்தி ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
சதா ஜீவன்முக்தியில் நிலைத்திருப்பதற்கு இலகுவான வழி: நானும் எனது பாபாவும்! ‘என்னுடையது’ என்ற உணர்வே பந்தனத்தை உருவாக்கின்றது. அனைத்துமே எனது பாபா ஆயின், ஏனைய அனைத்தும் முடிவடைகின்றது. ஏனைய அனைத்திலும் என்னுடையது என்ற உணர்வு முடிவடைந்து ஒன்று ஆகும் போது, நீங்கள் பந்தனத்திலிருந்து விடுபடுகிறீர்கள். நீங்கள் ஜீவன்முக்தி அடைந்த ஒரு பிராமண ஆத்மா என்பதை நினைவு செய்யுங்கள்.