17.08.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    16.11.2006     Om Shanti     Madhuban


உங்களின் சுய மரியாதையின் கௌரவத்தைப் பேணுங்கள். நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து என்றும் தயார் ஆகுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள இறையன்பிற்குத் தகுதிவாய்ந்தவர்களாகவும் சுயமரியாதை என்ற ஆசனத்தில் நிலையாக இருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். குழந்தைகள் எல்லோரும் தமது ஆசனங்களில் நிலையாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், சில குழந்தைகள் ஒருமுகப்படுத்தல் என்ற ஸ்திதியில் நிலையாக இருக்கிறார்கள். ஆனால் ஏனைய குழந்தைகள் தமது எண்ணங்களில் சிறிது குழப்பத்துடன் இருக்கிறார்கள். தற்காலத்திற்கேற்ப, ஒவ்வொரு குழந்தையும் சதா ஒருமுகப்பட்ட ரூபத்திலும் சுயமரியாதையின் சொரூபமாகவும் இருப்பதை பாப்தாதா காண விரும்புகிறார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் ஒருமுகப்பட்ட ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் வெவ்வேறு வகையான சுயமரியாதைகளை அறிவீர்கள். நீங்கள் அவற்றைப் பற்றி நினைக்கிறீர்கள். ஆனால், சிலவேளைகளில் நீங்கள் உங்களின் ஒருமுகப்படுத்தலைத் தளம்பல் அடையச் செய்கிறீர்கள். உங்களிடம் நிலையான ஸ்திரமான ஸ்திதி மிகக் குறைவாகவே உள்ளது. நீங்கள் அதை அனுபவம் செய்துள்ளீர்கள். நீங்கள் இந்த ஸ்திதியைக் கொண்டிருக்க விரும்புகிறீர்கள். ஆனால், அது ஏன் சிலவேளைகளில் மட்டும் காணப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? சதா கவனம் செலுத்துவதில் ஏற்படும் குறைவே ஆகும். நீங்கள் உங்களின் சுய மரியாதைக் கருத்துக்களை ஒரு பட்டியல் போட்டால், அது நீண்டதாக இருக்கும். முதலாவது சுயமரியாதையானது, நீங்கள் நினைவு செய்து கொண்டிருந்த தந்தையின் நேரடிக் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவரின் முதல் இலக்கக் குழந்தை ஆவீர்கள். பாப்தாதா எங்கும் உள்ள பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரான, குழந்தைளான உங்கள் எல்லோரையும் தேர்ந்து எடுத்து, தனக்குச் சொந்தமாக ஆக்கியுள்ளார். ஐந்து கண்டங்களில் இருந்தும் தந்தை குழந்தைகளான உங்களைத் தனக்கு நேரடியாகச் சொந்தம் ஆக்கியுள்ளார். இது மிகப் பெரிய சுயமரியாதைக் கருத்து. நீங்கள் உலகைப் படைப்பவரின் முதல் படைப்பு ஆவீர்கள். நீங்கள் இந்தச் சுய மரியாதையை அறிவீர்கள்தானே? பாப்தாதாவுடன் கூடவே, அவர் குழந்தைகளான உங்கள் எல்லோரையும் முழு உலகிலும் உள்ள ஆத்மாக்களுக்கு மூதாதையர்களாக ஆக்கி உள்ளார். நீங்களே உலகின் மூதாதையர்கள். நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் ஆதார மூர்த்திகளாகவும் உலகிற்கு ஓர் உதாரணமாகவும் ஆக்கியுள்ளார். உங்களுக்கு இந்தப் போதை உள்ளதா? அது சிலவேளைகளில் சிறிது குறைகிறது. அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதுவே அதி விலைமதிப்பற்ற சிம்மாசனம் ஆகும். அது கல்பம் முழுவதிலும் வேறு எவராலும் அடைய முடியாத விலைமதிப்பற்ற சிம்மாசனம் ஆகும். உங்கள் ஒவ்வொருவருக்கும் இறைவனின் சிம்மாசனமும், ஒளிக்கிரீடமும் விழிப்புணர்வு என்ற திலகமும் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு இது நினைவிருக்கிறதா: ‘நான் யார்? எனது சுயமரியாதை என்ன?’ நீங்கள் போதையாக உணர்கிறீர்கள்தானே? அந்த சத்தியயுக சிம்மாசனம் எவ்வளவு விலைமதிப்பற்றதாக இருந்தாலும் குழந்தைகளான நீங்கள் மட்டுமே இறைவனின் இதய சிம்மாசனத்தைப் பெற்றுள்ளீர்கள்.

பாப்தாதா எப்போதும் கடைசி இலக்கக் குழந்தையையும் தேவர் ஆகப் போகும் தேவதையின் ரூபத்திலேயே பார்க்கிறார். இந்தக் கணத்தில், நீங்கள் ஒரு பிராமணர். பிராமணரில் இருந்து நீங்கள் ஒரு தேவதை ஆகுவீர்கள். தேவதையில் இருந்து நீங்கள் தேவர் ஆகவேண்டும். உங்களின் சுயமரியாதை உங்களுக்குத் தெரியுமா? உங்களின் சுயமரியாதையை மறந்ததால், உங்களுக்கு சரீர உணர்வும் சரீர அகங்காரமும் ஏற்பட்டது என்பதை பாப்தாதா அறிவார். நீங்கள் இப்போதும் துயரப்படுகிறீர்கள். உங்களுக்குச் சரீர உணர்வு ஏற்படும்போது அல்லது உங்களின் சரீர அகங்காரம் ஏற்படும்போது, நீங்கள் மிகவும் துயரப்படுவதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் இதில் அனுபவசாலிகள்தானே? உங்களின் சுயமரியாதையின் கௌரவத்தைப் பேணுவதும் உங்களின் சுயமரியாதையில் இல்லாதபோது துயரப்படுவதும் - இவை இரண்டையும் நீங்கள் அறிவீர்கள். குழந்தைகள் எல்லோரிலும் உங்களில் பெரும்பாலானோர் மிக நன்றாக ஞானம் நிறைந்தவர்கள் ஆகியிருப்பதையும் சக்தியால் நிரம்பி இருப்பதைப் பொறுத்தவரை, நீங்கள் சக்திசாலிகள் இல்லை என்பதையும் பாப்தாதா பார்க்கிறார். உங்களிடம் இதில் சதவீதம் மட்டுமே உள்ளது.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் ஒரு குழந்தையாகவும் தனது பொக்கிஷங்கள் எல்லாவற்றுக்கும் அதிபதியாகவும் ஆக்கியுள்ளார். அவர் உங்கள் எல்லோருக்கும் சகல பொக்கிஷங்களையும் வழங்கி உள்ளார். அவர் சிலருக்குக் குறைவாக அல்லது அதிகமாக வழங்கவில்லை. ஏனென்றால், அவை எண்ணற்ற பொக்கிஷங்கள். அவை எல்லையற்ற பொக்கிஷங்கள். இதனாலேயே, அவர் ஒவ்வொரு குழந்தையையும் ஒரு குழந்தையாகவும் எல்லையற்றதற்கு அதிபதியாகவும் ஆக்கியுள்ளார். எனவே, இப்போது உங்களையே சோதித்துப் பாருங்கள். அவரே எல்லையற்ற தந்தை, அவர் எல்லைக்கு உட்பட்ட தந்தை அல்ல. அவர் எல்லையற்ற தந்தை ஆவார். பொக்கிஷங்களும் எல்லையற்றவை. எனவே, உங்களிடம் அவை எல்லையற்ற முறையில் உள்ளனவா? உங்களிடம் அவை எல்லா வேளையும் உள்ளனவா அல்லது சிலவேளைகளில் அவற்றில் சிலது களவாடப்பட்டோ அல்லது தொலைந்தோ போகின்றனவா? ஏன் பாபா உங்களின் கவனத்தை இதில் ஈர்க்கிறார்? ஏனென்றால், நீங்கள் துயரப்படக்கூடாது, உங்களால் உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் நிலையாக இருப்பதுடன், குழப்பம் அடையக்கூடாது என்பதனால் ஆகும். நீங்கள் 63 பிறவிகளுக்கு குழப்பம் அடையும் அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதை மேலும் அனுபவம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் களைப்பு அடையவில்லையா? இப்போது, உங்களின் சுயமரியாதைப் பேணுங்கள். அதாவது, உங்களின் அதியுயர்ந்த கௌரவத்தைப் பேணுங்கள். ஏன்? அதிக காலம் கடந்து சென்றுவிட்டது. நீங்கள் உங்களின் 70 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறீர்கள்தானே? எனவே, உங்களை இனங்காண்பது என்றால், உங்களின் சுயமரியாதையை இனங்கண்டு, உங்களின் சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பதாகும். காலத்திற்கேற்ப, இப்போது உங்களின் நடைமுறை வாழ்க்கையில் ‘சதா’ என்ற வார்த்தைப் போடுங்கள். வார்த்தையை மட்டும் கீழ்க்கோடிட வேண்டாம், ஆனால் அதை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் கீழ்க்கோடிடுங்கள். ‘நான் இப்படி இருக்க வேண்டும், நான் இப்படியே இருப்பேன், நான் இதைச் செய்கிறேன்..... நான் இதைச் செய்வேன்.....’ இவை குழந்தைகளாகவும் எல்லையற்றதன் அதிபதிகளாகவும் (பாலக் சோ மாலிக்) உள்ளவர்களின் வார்த்தைகள் அல்ல. உங்கள் எல்லோருடைய இதயங்களிலும் தொடர்ந்து வெளிப்பட வேண்டிய வார்த்தைகள்: நான் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்து விட்டேன். எல்லையற்ற பொக்கிஷங்களைக் கொண்டுள்ள எல்லையற்ற தந்தையின் குழந்தைகளால் ‘நான் அடைந்து கொண்டு இருக்கிறேன்’ எனக் கூற முடியாது. நான் ஏற்கனவே அடைந்து விட்டேன். நீங்கள் பாப்தாதாவை அடைந்த கணத்தில் இருந்து ‘எனது பாபா’ என நீங்கள் சொல்கிறீர்கள், நீங்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இதை அறிவீர்கள், அத்துடன் அதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த வார்த்தைகள் மட்டுமே உங்களின் இதயத்தில் இருந்து தொடர்ந்து வெளிப்பட வேண்டும்: ‘நான் அடைந்து விட்டேன்.’ குழந்தைகளான உங்களிடம் சிலவேளைகளில் மட்டுமே சுயமரியாதை இருப்பதனால், நீங்கள் காலத்தின் முக்கியத்துவத்தை உங்களின் விழிப்புணர்வில் மிகச் சிறிதளவே வைத்திருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். ஒன்று, உங்களுக்கான மரியாதை. மற்றையது, காலத்தின் முக்கியத்துவம். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நீங்கள் மூதாதையர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உலகிலுள்ள ஆத்மாக்களின் ஆதாரம் ஆவீர்கள். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் குழப்பத்தில் இருக்கும்போது, உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு என்ன நடக்கும்? மகாராத்திகள் என்று அழைக்கப்படுபவர்கள் மட்டுமே உலகின் ஆதாரங்கள் என்று நினைக்காதீர்கள். புதியவர்கள் வந்திருந்தால், இன்று, பல புதியவர்கள் வந்திருக்கிறார்கள், புதியவர்கள் தமது இதயபூர்வமாக ‘எனது பாபா’ என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளீர்களா? வந்திருக்கும் புதியவர்களான நீங்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளீர்களா? வெறுமனே அதைத் தெரிந்து கொண்டவர்கள் அல்ல, ஆனால் ‘எனது பாபா’ என்று ஏற்றுக் கொண்டவர்கள்? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அவற்றை உயரே உயர்த்துங்கள்! புதியவர்கள் தமது கைகளை உயர்த்துகிறார்கள். பழையவர்களான நீங்கள் இதில் உறுதியாக(பக்கா) இருக்கிறீர்கள்தானே? ‘எனது பாபா’ என்று தமது இதயபூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் - தந்தையும் ‘எனது குழந்தை’ என்று ஏற்றுக் கொண்டுள்ளார் - எல்லோருமே பொறுப்பானவர்கள். ஏன்? நீங்கள் ஒரு பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரி என நீங்கள் கூறிய வேளையில் இருந்து, அல்லது, நீங்கள் பிரம்மாகுமார் அல்லது குமாரி அல்லது சிவகுமார் அல்லது சிவகுமாரி அல்லது இருவருக்கும் நீங்கள் சொந்தமானவர் ஆகினால் என்ன, நீங்கள் கட்டுண்டு இருக்கிறீர்கள். அப்போது உங்களிடம் பொறுப்புக் கிரீடம் இருக்கும். உங்களிடம் அது உள்ளதல்லவா? பாண்டவர்களே,பேசுங்கள்! உங்கள் ஒவ்வொருவரிடமும் பொறுப்புக் கிரீடம் உள்ளதா? அது சுமையாக இல்லையல்லவா? அது இலேசாக இருக்கிறதுதானே? அது ஒளியால் ஆனது. ஒளி, மிகவும் இலேசானது (பாரம் அற்றது). காலத்தின் முக்கியத்துவதில் கவனம் செலுத்துங்கள். காலம் வருவதற்கு முன்னர் உங்களிடம் கேட்கப் போவதில்லை. இப்போதும் சில குழந்தைகள் தமக்குச் சிறியதொரு குறிப்புத் தேவை, தமக்கு 20 வருடங்களா அல்லது 10 வருடங்களா இருக்கின்றன என்பதைத் தாம் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள் அல்லது நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா கூறுகிறார்: இறுதி விநாசத்திற்குரிய நேரம் மட்டும் அல்ல, உங்களின் சொந்தச் சரீரத்தின் விநாசம் எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களில் எவருக்காவது இன்ன திகதியில் நீங்கள் உங்களின் சரீரத்தை விட்டு நீங்குவீர்கள் என்பது தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? தற்காலத்தில், சரீரத்தை விட்டுச் சென்ற பல பிராமணர்களுக்கு போக் படைக்கப்படுகிறது. எந்தவித உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். இந்தச் சிறிய யுகம் காலத்தால் சிறியது. ஆனால், இதுவே மகத்தான பேறுகளுக்கான யுகமாகும். ஏனென்றால், அனைவரிலும் மகத்தான தந்தை இந்தச் சிறிய யுகத்திலேயே இங்கே வருகிறார். அவர் ஏனைய நீண்ட யுகங்களில் வருவதில்லை. இந்தச் சிறிய யுகத்திலேயே, கல்பம் முழுவதற்குமான பேறுகளின் விதைகளை விதைப்பதற்கு உங்களுக்கு நேரம் கிடைத்துள்ளது. நீங்கள் உலக இராச்சியத்தை அடைந்தாலும் அல்லது பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகினாலும் இதுவே கல்பம் முழுவதற்கும் விதைகளை விதைப்பதற்கான காலம் ஆகும். இது இரட்;டைப் பலனைப் பெறுவதற்கான காலம் ஆகும். இந்த வேளையில் நீங்கள் உங்களின் பக்திக்கான பலனைப் பெறுகிறீர்கள். அத்துடன் இந்த வேளையில் உடனடியான, புலப்படும் பலனையும் நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் எதையாவது செய்து, உடனடியாக நடைமுறையான, புலப்படும் பலனைப் பெறுவதுடன் எதிர்காலத்திற்கும் அதை உருவாக்குகிறீர்கள்.

கல்பம் முழுவதிலும், இத்தகைய வேறு யுகம் ஏதாவது இருக்கிறதா? இந்த வேளையிலேயே தந்தை குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் மகத்தான பரிசுகளை அவர்களின் உள்ளங்கைகளில் வழங்கினார். உங்களின் பரிசு உங்களுக்கு நினைவிருக்கிறதா? சுவர்க்க இராச்சிய பாக்கியம். பாபா ஒவ்வொரு குழந்தைக்கும் உங்களின் உள்ளங்கையில் புதிய உலக சுவர்க்கத்தைப் பரிசாக வழங்கி உள்ளார். வேறு எவரும் இத்தகைய பெரிய பரிசைக் கொடுத்ததில்லை, அதை வேறு எந்த வேளையிலும் வழங்கப்பட முடியாது. நீங்கள் இதை இந்த வேளையில் பெறுகிறீர்கள். நீங்கள் இந்த வேளையில் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆகுகிறீர்கள். வேறு எந்த யுகத்திலும் நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் அந்தஸ்தைப் பெற மாட்டீர்கள். எனவே, உங்களின் சுய மரியாதையைப் பேணுவதிலும் காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள். சுயம் (சுவயம்) மற்றும் நேரம் (சமய்) : உங்களுக்கான மரியாதையும் காலத்தின் முக்கியத்துவமும். கவனக்குறைவாக ஆகாதீர்கள். எழுபது வருடங்கள் கடந்துவிட்டன. நீங்கள் இப்போது கவனக்குறைவாக ஆகினால், உங்களின் பேறுகளைப் பெருமளவில் குறைத்துக் கொள்வீர்கள். எந்தளவிற்கு நீங்கள் முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமான கவனயீனம் ஏற்படுகிறது - ‘நான் மிகவும் நல்லவன், நான் மிக நன்றாக முன்னேறுகிறேன், நான் அங்கே சென்று அடைவேன். பாருங்கள், நான் பின்தங்க மாட்டேன், இது நடக்கும்.’ இதுவே கவனயீனமும் இராஜரீகமான சோம்பேறித்தனமும் ஆகும். கவனயீனமும் சோம்பேறித்தனமும். சிலவேளைகளில் (கப்) என்ற வார்த்தைகள் சோம்பேறித்தனத்தைக் குறிக்கின்றன. இப்போது (அப்) என்ற வார்த்தை, மகா புண்ணியத்தை ஏற்படுத்தும் உடனடித் தானத்தைக் குறிக்கின்றது.

எனவே, இப்போது, இன்றுதான் முதலாவதாக சந்திக்கும் முறை, அல்லவா? ஆகவே, பாப்தாதா உங்களின் கவனத்தை இதில் ஈர்க்கிறார். இந்தப் பருவகாலத்தில், நீங்கள் உங்களின் சுய மரியாதையில் இருந்து கீழே வரக்கூடாது, நீங்கள் காலத்தின் முக்கியத்துவத்தையும் மறக்கக்கூடாது. விழிப்பாக இருங்கள், புத்திசாலியாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்தானே? தான் நேசிக்கும் ஒருவரில் சிறிதளவு பலவீனத்தை அல்லது குறைபாட்டைப் பார்க்க அவரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. கடைசிக் குழந்தையிலும் பாப்தாதாவிற்கு ஆழ்ந்த அன்பு உள்ளது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் பாபாவின் குழந்தை ஆவார். எனவே, இப்போது, இந்தப் பருவகாலத்தில் (இந்த முறையில்) இது இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பருவகாலமாக இருந்தாலும் இரட்டை வெளிநாட்டவர்களும் சளைத்தவர்கள் இல்லை. இரட்டை வெளிநாட்டவர்கள் இல்லாத சந்திக்கும் முறைகள் எதுவும் இல்லை என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். இது அவர்களின் அற்புதம் ஆகும். இப்போது, இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எத்தனை பேர் உள்ளார்கள் எனப் பாருங்கள். உங்களின் விசேடமான சந்திக்கும் முறை முடிந்துவிட்டது. எனினும், உங்களில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். வாழ்த்துக்கள். வருக வருக. பற்பல பாராட்டுக்கள்.

எனவே, நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? இந்தப் பருவகாலத்தின் போது என்ன செய்யப்பட வேண்டும் என்ற வீட்டுவேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே அதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களை அன்றி, உங்களை மட்டும் உணர்ந்து நிஜத் தங்கம் ஆகுங்கள். ஏனென்றால், ‘எனது பாபா’ எனச் சொல்பவர்கள், தந்தையுடன் திரும்பிச் செல்வார்கள் என்பதை பாப்தாதா நம்புகிறார். அவர்கள் பின்தொடரும் கூட்டத்தில் ஒருவர் ஆக மாட்டார்கள். நீங்கள் ஸ்ரீமத்தின் கரத்தைப் பிடித்தவண்ணம் பாப்தாதாவுடன் திரும்பிச் செல்வீர்கள். அதன்பின்னர், நீங்கள் தந்தை பிரம்மாவுடன் முதல் இராச்சியத்திற்குள் வருவீர்கள். புதிய வீட்டில் மகிழ்ச்சி உள்ளது. ஒரு மாத வயதாக இருந்தாலும் ஒரு மாதம் வயது என்றே கூறப்படும். நீங்கள் தந்தை பிரம்மாவுடன் இராச்சியத்திற்குள் செல்லும்போது, உங்களின் புதிய வீடு, புதிய உலகம், புதிய வழிமுறைகள், புதிய நடைமுறை மற்றும் சம்பிரதாயங்களுக்குள் செல்ல வேண்டும். உங்களுக்குத் தந்தை பிரம்மாவிடம் அதிகளவு அன்பு இருப்பதாக நீங்கள் எல்லோரும் கூறுகிறீர்கள். எனவே, அந்த அன்பின் அடையாளம் என்ன? அவருடன் இருப்பது, அவருடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வது, அவருடன் கீழே இறங்கி வருவது என்பவையே. இதுவே அன்பின் அத்தாட்சி ஆகும். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் அவருடனேயே இருந்து, அவருடனேயே திரும்பிச் சென்று, அவருடனேயே கீழே இறங்கி வருவதை விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பிய எதையும் நீங்கள் கைவிட மாட்டீர்கள்தானே? எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையின் அன்பின் பொறுப்பானது, அவர்கள் தன்னுடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே ஆகும். அவருக்குப் பின்னால் பின்தொடர்வது அல்ல. இன்னமும் ஏதாவது எஞ்சி இருந்தால், நீங்கள் தர்மராஜின் தண்டனைக்காக நிற்க வேண்டியிருக்கும். அந்த நிலையில், உங்களின் கை அவரின் கையில் இருக்காது. நீங்கள் பின்பு பின்தொடர்ந்து செல்ல வேண்டியிருக்கும். எதில் மகிழ்ச்சி உள்ளது? அவருடன் இருப்பதில்தான், இல்லையா? எனவே, நீங்கள் உறுதியான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? அவருடன் திரும்பிச் செல்வீர்கள் என்ற உங்களின் சத்தியம் உறுதியாக உள்ளதா அல்லது, நீங்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்லப் போகின்றீர்களா? பாருங்கள்! உங்களின் கைகளை நீங்கள் மிக நன்றாக உயர்த்துகிறீர்கள். பாப்தாதா உயர்த்திய கைகளைப் பார்ப்பதில் களிப்படைகிறார். ஆனால் நீங்கள் ஸ்ரீமத் என்ற கையை உயர்த்த வேண்டும். சிவபாபாவிற்குக் கைகள் இல்லை. ஆத்மாவான பிரம்மாபாபாவிற்கும் கைகள் இல்லை. உங்களிடமும் பௌதீகமான கைகள் இருக்காது. நீங்கள் ஸ்ரீமத் என்ற கையைப் பற்றியவண்ணம் ஒன்றாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள்தானே? குறைந்தபட்சம் தலையை அசையுங்கள்! அச்சா, நீங்கள் உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். ஒரு குழந்தையேனும் பின்னால் விடப்படக்கூடாது, எல்லோரும் ஒன்றாக வீடு திரும்ப வேண்டும் என்பதே பாப்தாதாவின் விருப்பம். நீங்கள் என்றும் தயாராக இருக்க வேண்டும். அச்சா.

இப்போது, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருடைய பதிவேடுகளையும் தொடர்ந்து பார்ப்பார். நீங்கள் ஒரு சத்தியம் (வைதா) செய்து அதை நிறைவேற்றினீர்கள். நீங்கள் நன்மை (ஃபைதா) அடைந்தீர்கள் என்பதே அதன் அர்த்தம். ஒரு சத்தியத்தை மட்டும் செய்யாதீர்கள், ஆனால் அதில் இருந்து நன்மையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அச்சா. இப்போது, உங்களுக்கு ஒரு திடசங்கற்பமான எண்ணம் ஏற்பட்டுள்ளது அல்லவா? இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தின் ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள்: நான் இதைச் செய்ய வேண்டும். நான் திரும்பிச் செல்ல வேண்டும். நான் ஒன்றாகத் திரும்பிச் செல்ல வேண்டும். இப்போது, உங்களுக்குள் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். அந்த ஸ்திதியில் அமர்ந்திருங்கள். ‘நான் அதைச் செய்வேன்.... நான் அதைச் செய்வேன்....’ எனச் சொல்லாதீர்கள். நான் அதைச் செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள். அச்சா.

எங்கும் உள்ள இரட்டைச் சேவாதாரிக் குழந்தைகள் எல்லோருக்கும் எங்கும் உள்ள பாப்தாதாவின் நெற்றியின் மணிகளுக்கும் சதா சுயமரியாதை என்ற ஆசனத்தில் ஒருமுகப்பட்டு அமர்ந்திருப்பவர்களுக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனால் தீவிர முயற்சி செய்யும் அத்தாட்சியைக் கொடுக்கும் தகுதிவாய்ந்த குழந்தைகள் ஆகியுள்ள எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சதா ஊக்கம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யும் இலேசான, ஒளியான, தேவதைக் குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

தாதிகளிடம்: எல்லோரும் முன்னேறுவதுடன் தமது ஒத்துழைப்பையும் கொடுக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சிறப்பியல்பு என்ற விரலைக் கொடுப்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். (தாதிஜியிடம்) ஆதி இரத்தினங்களைப் பார்க்கும்போது எல்லோரும் களிப்படைகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே, நீங்கள் உங்களின் எலும்புகளையும் சேவைக்காகக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் உங்களின் எலும்புகளால் சேவை செய்துள்ளீர்கள். மிகவும் நல்லது. பாருங்கள், என்னதான் நடந்தாலும் இந்த ஒரு விடயத்தைப் பாருங்கள்: படுக்கையில் இருந்தாலென்ன அல்லது வேறு எங்கே இருந்தாலென்ன, நீங்கள் தந்தையை மறக்கவில்லை. தந்தை உங்களின் இதயத்தில் அமிழ்ந்துள்ளார். அப்படித்தானே? பாருங்கள், அவர் மிக அழகாகப் புன்னகை செய்கிறார். ஆம், வயதில் நீங்கள் முதுமை அடைந்திருக்கலாம். நீங்கள் தர்மராஜ்புரிக்கு ‘டாடா’ சொல்ல விரும்புகிறீர்கள். நீங்கள் தண்டனையை அனுபவிக்க விரும்பவில்லை. தர்மராஜூம் தலைவணங்க வேண்டியிருக்கும். அவர் உங்களை வரவேற்பார். நீங்கள் ‘டாடா’ எனச் சொல்வீர்கள். அதனால், நீங்கள் இங்கே தந்தையின் நினைவில் உங்களின் வெகு சில கணக்குகளைத் தீர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எந்தவிதமான வேதனையும் இல்லை. நோய் இருந்தாலும், துன்பத்தின் சுவடேனும் கிடையாது. (தாதி நிர்மல் சாந்தாவிடம் பேசுகிறார்) இவர் அதிகளவில் புன்னகை செய்கிறார். எல்லோருக்கும் திருஷ்டி கொடுங்கள்! அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உண்மையான வர்த்தகராகி, புறக் கெட்டித்தனத்தில் இருந்து விடுபட்டு, அதனால் தந்தையால் விரும்பப்படுபவர் ஆகுவீர்களாக.

பாப்தாதா புற, உலகரீதியான கெட்டித்தனத்தை விரும்புவதில்லை. கள்ளங்கபடம் அற்றவர்களுக்கே கடவுள் சொந்தமானவர் எனக் கூறப்படுகிறது. விவேகிகளின் பிரபு, (சத்துர் சுஜன்) கள்ளங்கபடம் அற்ற குழந்தைகளையே நேசிக்கிறார். இறைவனின் அகராதியில், கள்ளங்கபடம் அற்ற குழந்தைகளான நீங்களே விசேடமான விஐபி கள் ஆவீர்கள். உலகின் பார்வை யார் மீது விழுவதில்லையோ, அவர்களே தந்தையுடன் ஒரு பேரத்தைச் செய்து, இறைவனின் கண்களின் நட்சத்திரங்கள் ஆகுகிறீர்கள். கள்ளங்கபடம் அற்ற குழந்தைகளான நீங்களே, உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா!’ எனச் சொல்கிறீர்கள். ஒரு விநாடிக்குரிய இந்த ஒரு வார்த்தையால், நீங்கள் எண்ணற்ற பொக்கிஷங்களுக்காகப் பேரம் பேசும் உண்மையான வர்த்தகர்கள் ஆகியுள்ளீர்கள்.

சுலோகம்:
எல்லோருடைய அன்பையும் பெறுவதற்கு, எப்போதும் இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகி ஆகுவதற்கு, இறையன்பை அனுபவிப்பவர் ஆகுங்கள்.

சதா தந்தையின் நினைவில் திளைத்திருப்பவர்களுக்கு, அதாவது, தந்தையில் திளைத்திருப்பவர்களுக்கு, சதா தந்தை அவர்களின் கண்களிலும் அவர்களின் வாயினூடாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அமிழ்ந்து இருப்பார். அவர்கள் சரீரங்களாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, சர்வசக்திவான்களாக (சகல சக்திகளைக் கொண்டவர்கள்) காணப்படுவார்கள். எப்படி ஸ்தாபனையின் ஆரம்பத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் பிரம்மாவின் ரூபத்தில் புலப்பட்டாரோ, அப்படியே, சர்வசக்திவான், குழந்தைகளான உங்களினூடாகப் புலப்படுவார்.

அறிவித்தல்: இன்று, மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. உலக தியான நாள். இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் எல்லோரும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30வரை தியானம் செய்வார்கள். யோகம் செய்யும் வேளையில், மூதாதையராக இருக்கும் சுய மரியாதையில் ஸ்திரமாக இருந்து, கல்ப விருட்சத்தின் வேர்களில் அமர்ந்திருந்து, சக்திவாய்ந்த யோகதானம் செய்து, தெய்வீகத் தன்மையுடன் உங்களின் சந்ததியைப் பராமரியுங்கள்.