17.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்களுக்காக, நான் சுவர்க்கத்தை எனது உள்ளங்கைகளில் கொண்டு வந்துள்ளேன். என்னை நினைவு செய்தால், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள்.

கேள்வி:
எந்தக் குழந்தைகளால் எப்பொழுதும் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியும்?

பதில்:
எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருப்பவர்களாலும் ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டித்துத் தங்களை ஒருவருடன் இணைத்துக் கொண்டிருப்பவர்களாலும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியும். தந்தையைப் பின்பற்றுபவர்களினதும், சேவை செய்வதில் ஆர்வத்தைக் கொண்டிருப்பவர்களினதும் சந்தோஷம் என்றுமே மறைய முடியாது.

பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டிறங்கி, கீழே பூமிக்கு வாருங்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலைக் கேட்டார்கள். இதனைக் கூறியவர் யார்? தந்தை குழந்தைகளை வினவுகிறார்: நீங்கள் பாடலைக் கேட்டீர்களா? பெரும் துன்பத்தில் உள்ளபொழுது, மக்கள் அவரை அழைக்கிறார்கள். தந்தை மாத்திரமே தூய உலகாகிய, சந்தோஷ தாமத்தை உருவாக்கினார், அதாவது, அவர் தேவதேவியர்களின் இராச்சியத்தை ஸ்தாபித்தார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அது தேவ, தேவியர்களே சுவர்க்கத்தின் அதிபதிகள் என்பதைப் போன்றுள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தார்கள் என்பதையும், அவர்களுடைய இராச்சியம் எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதையும் உங்களால் பார்க்க முடியும். அவர்களுடைய இராச்சியத்தில் அனர்த்தங்கள் இருக்கவில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அத்தகையதோர் ஆஸ்தியைக் கொடுப்பதனால், உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அனைத்தும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமானவை. முழு ஞானத்தையும் பெறாத காரணத்தினால், சிலரால் அங்கேயோ அல்லது (வெளி உலகில்), இங்கேயோ சந்தோஷத்தை அனுபவம் செய்ய இயலாதுள்ளது. அவர்கள் இரு உலகங்களையும் இழக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோரும்பொழுது, அவர்கள் வீழ்கிறார்கள். கடவுள் வந்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பதை உலகில் எவரும் அறியார், ஏனெனில் அவர் ஒரு மறைமுகமான ரூபத்தில் வருகிறார். அனைவரும் காரிருளில் இருப்பதனால், கடவுள் நிச்சயமாக இந்நேரத்தில் இங்கு இருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். நள்ளிரவு இருக்கும் பொழுது, காரிருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரவில் காரிருளும், பகலில் பேரொளியும் உள்ளன. பக்தி மார்க்கமாகிய இரவு இப்பொழுது ஒரு முடிவுக்கு வருகிறது என்பதையும், அதில் துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பக்தி செய்த பின்னர் தாங்கள் கடவுளைக் அடைவார்கள் என மக்கள் எண்ணுகிறார்கள். தந்தை மாத்திரமே வந்து அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆவீர்கள். சிலரின் சந்தோஷப் பாதரசம் உயர்ந்தே இருக்கிறது. அவர்கள் சந்தோஷமாக அதிகளவு முயற்சியையும் செய்கிறார்கள். அவர்கள் சேவை செய்வதிலும், சென்று மக்களுக்கு விளங்கப்படுத்துவதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனாலேயே பாபா கண்காட்சிகளுக்கும், விழாக்கள் போன்றவற்றுக்குமான ஏற்பாடுகளைச் செய்கிறார். ஆகவே, நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்தும் பொழுது, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர முடியும். இங்கு, தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாகச் செல்வந்தர்கள் எண்ணுகிறார்கள். இந்த ஞானத்தைப் பெறுவது அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனாலேயே பலமில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே தந்தையின் ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கோருவதற்கான விவேகிகள் ஆகுகிறார்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. நினைவு கூரப்படுகிறது: தந்தையைப் பின்பற்றுங்கள். ஆகவே, நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத்தை மிகவும் நன்றாகப் பின்பற்றுபவர்கள் தந்தையையும் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, இந்தக் குழந்தை (பிரம்மா) அவரை மிகவும் நன்றாகப் பின்பற்றுகிறார். அவருடைய சொந்தக் குழந்தைகள் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றாத பொழுது, அவர் அவர்களை அவர்கள் விரும்பும் பாதையில் செல்லுமாறு கூறினார். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களும், இராமரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களும் ஒன்றாக இருக்க முடியாது. பாரதத்திலேயே ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுத்து, தூய்மையற்றவர்கள் ஆகினார்கள். இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இப்பொழுது மேலும் ஒரு சில நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தேவ இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குக் காலம் எடுக்கிறது. இது மறைமுகமானது. இதில் ஒரு யுத்தத்துக்கான கேள்வியே கிடையாது. நீங்கள் எவருக்கும் எதிராகவும் ஒரு யுத்தத்தை ஆரம்பித்து, இராச்சியத்தைக் கோருகிறீர்கள் என்பதல்ல. இல்லை, வந்து உங்களை அரசர்க்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகின்ற, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என நினைவு செய்யப்படுகின்ற, தந்தையே இராச்சியத்தைக் கொடுக்கிறார். சந்நியாசிகளும், குருமார்கள் போன்றோரும் துன்பத்தை அகற்றுபவர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய துறவறம் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் உங்களுடைய துறவறமோ எல்லையற்றது. இங்கு, உங்களுக்கு முடிவற்ற சந்தோஷம் உள்ளது. தேவியாகிய இலக்ஷ்மிக்கும், தேவராகிய நாராயணனுக்கும் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. தூய்மையற்ற மனிதர்கள் தொடர்ந்தும் தங்கள் மனத்தில் தோன்றுவதை எல்லாம் கூறுகிறார்கள். நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் அர்;த்தம் நிறைந்தவை. புதிய உலகில், ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. அதனை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. பழைய உலகில் மாத்திரமே ஒப்பீடுகள் இருக்க முடியும். பழைய உலகில் என்ன உள்ளது என்பதை நீங்கள் புதிய உலகில் அறியாதிருக்கிறீர்கள். அங்கு, நீங்கள் அனைத்தையும் மறந்திருப்பீர்கள். இங்கு, புதிய உலகம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படும், பழைய உலகம் எப்பொழுது அழிக்கப்படும் என்பதைப் பற்றிய அனைத்தும் உங்களுக்குக் கூறப்படுகிறது. உங்களிடம் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையை நீங்கள் இப்பொழுது கண்டடைந்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியை மிக நன்றாகக் கோர வேண்டும். முன்னைய கல்பத்தில் மிக நன்றாக முயற்சி செய்தவர்களே, ஓர் ஆஸ்தியைப் பெறுவார்கள். அவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. இதுவே முட்களின் உலகம். அனைவரிடமும் முதல் இலக்க முள் உள்ளது. பழைய உலகம் தீங்கானது, புதிய உலகம் மிகவும் சிறந்தது. சுவர்க்கம் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. இன்னார் சுவர்க்கவாசி ஆகினார் என அவர்கள் கூறுகிறார்கள். அவர் சுவர்க்கவாசி ஆகுவதற்குச் சுவர்க்கம் எங்கே உள்ளது? இந்தப் பாரதத்திலேயே சுவர்க்கம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நரகமும் பாரதத்திலேயே உள்ளது. அம்மக்கள் அவ்வார்த்தைகளைப் பின்பற்றி, இங்கு சுவர்க்கமும் நரகமும் ஒரேநேரத்திலேயே உள்ளது எனவும், அதிகளவு செல்வம் உடையவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறு அல்ல. பாரதம் புதியதாக இருந்தபொழுது, அது சத்தியயுகமாக இருந்தது, அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது, தூய்மையற்ற உலகமே நரகமாக உள்ளது. ஓர் உலகம் மாத்திரமே உள்ளது. இலக்ஷ்மியினதும், நாராயணனினதும் இராச்சியம் புதிய உலகிலேயே இருந்தது, இராவண இராச்சியம் பழைய உலகிலேயே உள்ளது. கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு உங்களுடைய 84 பிறவிகளின் இரகசியங்களைக் கூறுகிறேன். இந்த இராஜ யோகத்தினூடாக, நான் உங்களை அரசர்க்கெல்லாம் அரசர்களாக, சுவர்க்க அதிபதிகளாக ஆக்குகிறேன். ஆகவே, நிச்சயமாக நரகம் அழிக்கப்பட வேண்டும். அவர்கள் சமயநூல்களில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்திவிட்டு, ஒரு யுத்தம் போன்றவற்றையும் காண்பித்துள்ளார்கள். பாண்டவர்களுக்குச் சேனை கிடையாது. இந்நாட்களில், அவர்கள் குமாரிகளினதும், தாய்மார்களினதும் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு எவ்வாறு துப்பாக்கிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது எனக் கற்பிக்கிறார்கள். இங்கு, உங்கள் கரங்களில் துப்பாக்கிகள் போன்ற எதுவும் கிடையாது. சிவசக்திசேனை என்றால் யார் என்பதைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? சிவபாபா ஒருபொழுதும் உங்களை வன்முறையைப் புரியுமாறு செய்வதில்லை. யுத்தத்தின் கேள்வியே கிடையாது. சிவபாபாவின் சேனையே ஆன்மீக சேனை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபா எங்களை இரட்டை அகிம்சாவாதிகள் ஆக்குகிறார். இது 100சதவீதம் அகிம்சை என்று அழைக்கப்படுகிறது. அவர்களுடையதோ 100சதவீதம் வன்முறை ஆகும். அவர்கள் ஒரு குண்டின் மூலம் பலரை அழிக்கிறார்கள். எல்லையற்ற அகிம்சைக்கும், வன்முறைக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற மௌனத்தில் இருக்கிறீர்கள். அவர்கள் யுத்தத்துக்காக, தொடர்ந்தும் அதிகளவு முன்னேற்பாடுகளைச் செய்யும் அளவுக்கு, அதிக சத்தத்தை எழுப்புவார்கள். விநாசத்தில் அதிகளவு குழப்பம் உள்ளது. இந்த ஸ்தாபனைக்காக, நீங்கள் அத்தகையதொரு மௌனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்! வன்முறைக்கான கேள்வியே கிடையாது. இது இப்பொழுது உங்களுடைய நடைமுறை வாழ்வு ஆகும். யோகசக்தியின் மூலம் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். தந்தையாகிய, அல்பாவை நினைவு செய்வதனால், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அது மிகவும் இலகுவானது! தந்தையே அதியன்பிற்கினியவர் ஆவார். அவர் அத்தகைய தொலைதூர தேசத்திலிருந்து வருகிறார். ஒரு தந்தை வெளிநாட்டில் இருந்து வரும்பொழுது, அவருடைய குழந்தைகள் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களுடைய தந்தை அவர்களுக்காக வெளிநாட்டிலிருந்து பல சிறந்த பரிசுகளைக் கொண்டு வந்திருப்பார். இவர் எல்லையற்ற தந்தை ஆவார், அவர் ஒருமுறை மாத்திரமே வருகிறார். அவர் என்ன பரிசு கொண்டு வருகிறார்? அவர் கூறுகிறார்: நான் உங்களுக்காக, எனது உள்ளங்கைளில் சுவர்க்கத்தைக் கொண்டு வந்துள்ளேன். உதாரணமாக, அனுமான் தனது கரத்தில் உயிர் காக்கும் மூலிகை (சஞ்சீவி) வளர்கின்ற மலை உச்சியைச் சுமந்தார் எனக் கூறப்பட்டுள்ளது. எவராலும் ஒரு மலையை உயர்த்த முடியாது. அவ்வாறே, தந்தை கூறுகிறார்: நான் எனது உள்ளங்கையில் சுவர்க்கத்தைக் கொண்டு வந்துள்ளேன். சுவர்க்கத்தை ஒருவரின் உள்ளங்கையில் சுமக்க முடியாது. இது புரிந்து கொள்வதற்கான ஒரு விடயம். பாபா உங்களுக்காக முதற்தர பரிசைக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளதனால், நீங்கள் தூய்மையாக வேண்டும். இது இராஜயோகம். கீதையின் கடவுள் மாத்திரமே பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பித்து, அவர்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தார். அவர் இப்பொழுது மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையின் குழந்தைகள் எனக் கூறுகிறீர்கள். தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதனால், ஒருவர் நிச்சயமாக இராச்சியத்தைப் பெறுவார். சுவர்க்கத்தில் வாழ்பவர்களுக்கு மாத்திரமே தந்தை கொடுப்பார் என்பதல்ல. தந்தை ஏனைய அனைவருக்கும் கூடக் கொடுக்கிறார். நாடகத்துக்கேற்ப, ஏனைய அனைவரும் முக்தியின் பாகத்தைப் பெறுகிறார்கள். அனைவரும் விடுதலை அடைகிறார்கள். வேறு எவருமன்றி, ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். உங்கள் கண்காட்சிகள் போன்றவற்றுக்கு வருகின்ற முக்கியஸ்தர்களில், கீதையின் கடவுள் ஸ்ரீகிருஷ்ணரன்றி, சிவனே என்று உண்மையிலேயே நம்புகின்ற அனைவரையும் எதையாவது எழுதுமாறு நீங்கள் செய்ய வேண்டும். மக்கள் முக்கியஸ்தர்கள் கூறுவதை மாத்திரமே செவிமடுக்கிறார்கள். எவரும் ஏழைகள் கூறுவதைச் செவிமடுப்பதில்லை, இதனாலேயே, கண்காட்சிகளில், கீதையின் கடவுள் ஒரேயொருவரே எனவும், அவரே அனைவரினதும் தந்தை எனவும் அவர்களை எழுதுமாறு செய்வதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டும். இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதம் சுவர்க்கமாகவும், அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாகவும் இருந்தது. இப்பொழுது முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. அவனே அனைவரினதும் எதிரியாவான். அவனை ஒவ்வொரு வருடமும் எரிப்பினும், அவன் மரணிப்பதில்லை. இப்பொழுது பாரதத்தின் மிகப்பெரிய எதிரி இராவணனே ஆவான். நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். இப்பொழுது, பரமாத்மாவாகிய பரமதந்தையான இராமர் உங்களை இராவணனை வெற்றிகொள்ளச் செய்கிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். அப்பொழுது உங்களுக்குப் புதிய உலகம் தேவைப்படுகிறது. நிச்சயமாகப் பழைய உலகம் அழிக்கப்பட்டது, அது மீண்டும் நடைபெறும். இராவண இராச்சியம் அழிக்கப்பட்டு, இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்ட பொழுது, மகாபாரத யுத்தம் நடைபெற்றது. இராவண இராச்சியத்திலேயே விரக்திக் குரல்கள் ஆரம்பிக்கின்றன. விரக்திக் குரல்களின் பின்னர், வெற்றிக் குரல்கள் ஒலிக்கும், அப்பொழுது உலகமும் மாற்றம் அடையும். ஒரு பழைய கட்டடம் அழிக்கப்பட்டு, புதியதொன்று கட்டப்படுகிறது, பின்னர் மீண்டும் அழிக்கப்படும். அதேபோன்று, ஸ்தாபனையும் நடைபெறுகிறது. அவர்கள் தொடர்ந்தும் குண்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறார்கள். முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இப்பொழுது தசேரா வந்துள்ளது, அவர்கள் இராவணனின் கொடும்பாவியொன்றைச் செய்கிறார்கள். உங்களுடையது ஓர் எல்லையற்ற விடயம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையிட்டு உங்கள் புத்தி அதிசயிக்கிறது. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது, தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்பொழுது அவர்களும் வியப்படைவார்கள். அத்தகையதொரு பெரிய இராவணன் இருக்க முடியாது என்பதை உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது இராம இராச்சியத்தைக் கோருங்கள். ஐந்து விகாரங்களின் தானத்தைச் செய்வதனால், சகுனங்கள் அகற்றப்படும். முழு உலகமும் ஐந்து விகாரங்களினால் பீடிக்கப்பட்டுள்ளது என்பதைத் தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார். அனைவரும் முழுமையாகவே அவலட்சணம் ஆகிவிட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். மேலும் ஒரு சிலநாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. நீங்கள் இப்பொழுது படைப்பவரையும், இயக்குனரையும், பிரதான நடிகரையும், நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிவீர்கள். அதனை வேறு எவருமே அறியார்கள். இப்பொழுது உங்கள் புத்தி தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆகிவிட்டது. இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால், அவர் நிச்சயமாக உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்புவார். ஞானமே வருமானத்தின் மூலாதாரம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தந்தை மாத்திரம் கொடுக்கின்ற ஆன்மீக ஞானமாகும். மனிதர்களால் இந்த ஞானத்தை மனிதர்களுக்குக் கொடுக்க முடியாது. உலகில், மனிதர்களே மனிதர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார்கள். இங்கு, பரமாத்மாவாகிய தந்தை வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். ஏனைய அனைவரும் பக்தி மார்க்கத்தின் கட்டுக்கதைகளைக் கூறுபவர்கள். சத்திய நாராயணனினதும், இராமாயணத்தினதும் கதைகள் உள்ளன. அவர்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கதைகளைத் தொடர்ந்தும் உருவாக்குகிறார்கள். இது ஒரு கல்வி. ஒரு கல்வியில் வரலாறும், புவியியலும் கற்பிக்கப்படுகின்றன. இது உலகின் வரலாறும் புவியியலும் ஆகும், அது மிகப் பெரியது. 5000 வருடங்களுக்கு முன்னரும், கீதையைக் கற்பவர்கள் உண்மையிலேயே எதனையும் புரிந்து கொள்ளவில்லை என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். யாதவர்களும், கௌரவர்களும், பாண்டவர்களும் யார் என உங்களால் நடைமுறை ரீதியில் பார்க்க முடியும். ஐரோப்பியவாசிகளான யாதவர்கள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்தார்கள், அதனூடாக விநாசம் நடைபெற்றது. விநாசத்தின் பின்னர் என்ன நடைபெற்றது என்பதைப் பற்றிய எதனையும் அவர்கள் காண்பிக்கவில்லை. அவர்கள் பிரளயம் நடைபெற்றதாகக் எண்ணுகிறார்கள். நீங்கள் சமயநூல்களை நம்புகிறீர்களா என அவர்கள் உங்களை வினவுகிறார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: ஆம், நாங்கள் அறிவோம், அவற்றை நம்புகிறோம், ஆனால் அவை பக்தி மார்க்கத்துக்கு உரியவை என்பதையும் நாங்கள் அறிவோம். ஞானக்கடலாகிய ஒரேயொரு தந்தையே இந்த ஞானத்தைப் பேசுகிறார். இப்பொழுது பக்தி ஒரு முடிவுக்கு வருகிறது, இந்த ஞானத்துக்கு வெற்றி ஏற்படும். பழைய உலகின் விநாசம் முன்னிலையில் உள்ளது. அது புதியதல்ல. எங்கள் அன்பு ஒரேயொரு தந்தைக்கே ஆகும். நாங்கள் ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டித்து, எங்களை ஒரே ஒருவருடன் இணைத்துக் கொள்கிறோம். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னுடன் யோகம் செய்யுங்கள். இது பாரதத்தின் புராதன இராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை மாத்திரமே இதனைக் கற்பிக்கிறார். இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவும் அவருடைய இறுதிப்பிறவியில் உள்ளார். பாபா இவருக்குக் கூறுகிறார்: நீங்கள் உங்கள் சொந்தப் பிறவிகளையே அறிந்து கொள்ளவில்லை. இது உங்களுடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். இதனாலேயே நான் அவரில் பிரவேசிக்கிறேன். நான் இவரில் அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களைப் பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களாக ஆக்கி, உங்களுக்கு உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுக்கிறேன். தந்தையைத் தவிர, வேறு எவராலும் உங்களுக்கு இதனைக் கூற முடியாது. தந்தையே உங்களுக்கு அனைத்தையும் இந்த வாயினூடாகக் கூறுகிறார். இந்த பாபாவும் முன்னர் எதனையும் அறிந்திருக்கவில்லை. நீங்களும் எதனையும் அறிந்திருக்கவில்லை. பாரத மக்களுக்கு எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கிறது என்பது விளங்கப்படுத்தப்பட வேண்டும். தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக ஆக்கி, சுவர்க்க வாசல்கள் திறப்பதற்குக் காரணமாக இருந்த, அதே யுத்தம் இதுவே ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தை மிகவும் நன்றாகப் பின்பற்றுபவர்களைப் பின்பற்றுங்கள். எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்து இருப்பதற்கு, ஏனையோரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. ஓர் அன்பான புத்தியைக் கொண்டிருந்து, ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டிப்பதுடன், உங்களை ஒரேயொரு தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். இரட்டை அகிம்சாவாதிகள் ஆகி, மௌனமாக அமர்ந்திருந்து, உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தியாகத்தைச் செய்து, தபஸ்யா செய்வதன் மூலம் ஓர் உண்மையான சேவையாளராகி, நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி அடைவீர்களாக.

நீங்கள் செய்யும் சேவையில் வெற்றி அடைவதற்கான பிரதானமான வழிமுறை, தியாகம் செய்வதும் தபஸ்யா செய்வதுமே ஆகும். தியாகம் என்றால், உங்களின் மனதிலுள்ள எண்ணங்களையும் துறத்தல் என்று அர்த்தம். ஒரு சூழ்நிலை காரணமாக, மரியாதைக் கோட்பாடுகளின் காரணமாக அல்லது கட்டாயத்தின் பேரில் எதையாவது துறத்தல், தியாகம் அல்ல. ஆனால் இந்த ஞானத்தின் சொரூபமாக இருந்தவண்ணம் உங்களின் எண்ணங்களிலும் அதைத் துறக்க வேண்டும். ஒரு தபஸ்வி என்றால், சதா தந்தையின் அன்பில் மூழ்கி இருத்தல், ஞானக்கடல், அன்புக்கடல், ஆனந்தக்கடல், சந்தோஷக்கடல், அமைதிக்கடலில் மூழ்கி இருத்தல் என்று அர்த்தம். இத்தகைய துறவிகளும் தபஸ்விகளுமே தாம் செய்யும் சேவையில் வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையான சேவையாளர்கள் ஆவார்கள்.

சுலோகம்:
உங்களின் தவத்தால் அமைதியின் அதிர்வலைகளைப் பரப்புவதே உலக சேவையாளராக இருப்பதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

சம்பூரணமான, முழுமையான ஆத்மாக்களான உங்களின் இறுதி வாகனம், எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபட்ட ஸ்திதி, கர்மாதீத் ஸ்திதி ஆகும். இத்தகைய ஸ்திதியை உருவாக்குவதற்கு, தந்தை பிரம்மாவைப் போல் சகல எல்லைக்கு உட்பட்ட விடயங்களிலும் வெற்றி அடையும் வெற்றி இரத்தினங்கள் ஆகுங்கள். அப்போது மட்டுமே உங்களால் இறுதி, கர்மாதீத் ரூபத்தை அனுபவம் செய்ய முடியும். பல்வகையான எல்லைகள் என்றால், ‘எனது, எனது’ என்ற பல்வேறு வடிவங்கள் ஆகும். ‘நான், எனது, நீ, உனது’ என்ற நான்கு வார்த்தைகளும் ‘பாபா’ என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடும்போது, முழுமை நெருங்கி வரும்.