18.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இறை குடும்பத்துக்கு உரியவராக இருக்கின்ற போதையிலும்; உங்கள் மறைமுகமான தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்ற போதையிலும் நிலைத்திருங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களிடமுள்ள எந்த உறுதியான பழக்கத்தினால் நீங்கள் நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்?பதில்:
உங்களிடம் அதிகாலையில் எழுந்திருந்து, இந்த ஞானக்கடலைக் கடைகின்ற பழக்கம் உள்ள பொழுது, உங்களுக்கு நாள் முழுவதும் எல்லையற்ற சந்தோஷம் இருக்கும். தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, அமிர்தவேளையில் எழுந்திருந்து, உங்கள் தந்தையுடன் இனிமையாகப் பேசுங்கள். நீங்கள் எக்குடும்பத்துக்கு உரியவர்கள் என்பதையும், உங்கள் கடமை என்ன என்பதையும் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் இந்த இறை குடும்பத்துக்கு உரியவர்கள் என்பதும், நீங்கள் புதிய இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளபொழுது, உங்களுக்கு நாள் முழுவதும் சந்தோஷம் இருக்கும்.ஓம் சாந்தி.
இது ஓர் ஆன்மீகக் குடும்பம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏனைய அனைத்தும் லௌகீகக் குடும்பங்கள் ஆகும். இது ஓர் ஆன்மீகக் குடும்பமாகும். இது ஆன்மீகத் தந்தையின் குடும்பம் ஆகும். ஒரு லௌகீக வீட்டில், தாய், தந்தை, குழந்தைகள் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், அது ஓர் எல்லைக்கு உட்பட்ட குடும்பமாகும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற குடும்பத்தினர் ஆவீர்கள். குழந்தைகள் பாடுகிறார்கள்: நீங்களே தாயும், தந்தையும். அது ஒரு குடும்பத்தைப் போன்றதாகும். அது படைப்பவரின் படைப்பு ஆகும். உண்மையில், குழந்தைகள் அவருடைய படைப்பு ஆவார்கள். ஆனால் அவர்கள் இதனை அறியார்கள். இப்பொழுது, உண்மையிலேயே இது எல்யைற்ற தந்தையின் குடும்பம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதுவே உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஆகும். இதனையிட்டு நினைவு கூரப்பட்டுள்ளது: அன்பான புத்தியைக் கொண்டவர்களே வெற்றியாளர்கள். கீதையில் அத்தகையதொரு குடும்பம் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் இறை குடும்பத்தினர் ஆவீர்கள். நீங்கள் மறைமுகமான தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். இதனைப் பற்றி எவரும் அறியார். உங்களுக்கு இப்போதை உள்ளது. தந்தையை நினைவு செய்பவர்கள் போதையுடன் இருப்பார்கள். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது, அந்தப் போதை குறைவடைகிறது. இது இறை குடும்பம் ஆகும். நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும், பின்னர் தெய்வீக இராச்சியத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு தேவ குடும்பம் இருக்கிறது. மற்றையது அசுர குடும்பமாகும். இதுவோ உங்கள் இறை குடும்பம் ஆகும். ஆன்மீக பாப்தாதாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள் ஆவார்கள், அவ்வளவுதான்! இதுவே ஆன்மீக இல்லறப்பாதை ஆகும். சத்தியயுகத்தில் இது இறை குடும்பம் என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அது தேவ குடும்பம் ஆகும். இந்த இறை குடும்பம் மிகவும் சக்திநிறைந்ததாகும். நீங்கள் இறை குடும்பத்துக்கு உரியவர்கள் என்பதையும், நீங்கள் தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இவ்விதமாக உங்களுடன் பேசி, இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். அதிகாலையில் எழுந்திருந்து, நினைவில் நிலைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் இந்த ஞானக்கடலைக் கடையும் பழக்கத்தை விருத்தி செய்வதுடன், தொடர்ந்தும் உற்சாகமாக இருப்பீர்கள். ஏனைய அனைவரும் உறக்கத்தில் இருக்கும் அந்தநேரமே, நீங்கள் விழித்தெழும் நேரமாகும். அதிகாலையில் எழுந்திருந்து, இவ்விடயங்களைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்பொழுது நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் பெற்றுள்ள ஸ்ரீமத் அனைத்தையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்கும். நீங்கள் உங்கள் இறை குடும்பத்தை நினைவு செய்வீர்கள், உங்கள் இதயம் அசுர குடும்பத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கும். ஒரு புதிய வீடு முழுமையாகத் தயாராகும் பொழுது, பழைய வீட்டின் மீதுள்ள பற்றுக்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. புதியதொன்று தயாராகும்வரை, பழையதில் தொடர்ந்தும் சிறிதளவு பழுதுபார்க்கும் வேலைகள் அடிக்கடி இடம்பெறும். அதன்பின்னர் இதயம் அதிலிருந்து அகற்றப்படுகிறது. இப்பழைய உலகத்துக்கும் இதுவே பொருந்துகிறது. இப்பொழுது இது ஒரு பழைய வீடு என்பதையும், நீங்கள் உங்கள் புதிய வீட்டுக்குச் செல்லவுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர் நீங்கள் ஒரு புதிய ஆடையை அணிவீர்கள். இச்சரீரமும் பழையதாகும். நீங்;கள் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சியப் பாக்கியத்தை இப்பொழுது கோருகிறீர்கள். இங்கு நீங்கள் ஆட்சிசெய்யப் போவதில்லை. ஸ்தாபனை இங்கேயே இடம்பெறுகிறது. நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களை அறிவீர்கள். இதுவே கீதை. இது இராஜயோகமாகும். இது இலகு இராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்களுடைய தேவ இராச்சியத்தை இவ்விதமாக, பல தடவைகள் இராஜயோகப் பயிற்சியின் மூலம் ஸ்தாபித்தீர்கள். அங்கு நீங்கள் இவ்விடயங்களை நினைவு செய்ய மாட்டீர்கள். அங்கு நீங்கள் இவ்விடயங்களை நினைவு செய்வதாக இருப்பின், நீங்கள் அந்தச் சந்தோஷத்தை உணர மாட்டீர்கள், நீங்கள் கவலைப்படுவீர்கள். இந்நேரத்தில் உங்களுக்கு மறைமுகமான போதை உள்ளது. இதுவே அதிமேன்மையான பாபாவின் குடும்பம் ஆகும். இது மறைமுகமான இறை இல்லற வழி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஆகும். இது இறை யாகமும் ஆகும். இது ஒரு குடும்பம் ஆகும். நாங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் இனிமையானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ரூப்பும் பசான்ட்டும் ஆகுகிறீர்கள். ஆத்மாவே ரூப்பும், அத்துடன் பசான்ட்டும் ஆவார். அத்தகைய சின்னஞ் சிறிய ஆத்மா, ஓர் அழிவற்ற பாகத்தை நடிக்கிறார்! இந்நேரத்தில் நீங்கள் ரூப்பும் பசான்ட்டும் ஆவீர்கள். தந்தையே ஞானக்கடல் ஆவார். அவர் இச்சரீரத்தில் பிரவேசிக்கும் பொழுது, நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் இந்த ஞான மழையைப் பொழிகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு இரத்தினமும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்ததாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை உங்களுக்கு நினைவூட்டி உள்ளார். எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரம் சுழல்கிறது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இதனாலேயே நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். விஷ்ணுவோ அல்லது இலக்ஷ்மி நாராயணனோ சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் அல்லர். அவர்களுக்கு இந்த ஞானம் இருப்பதில்லை. எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்னும் ஞானத்தை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். மக்கள் திரிமூர்த்தியைப் பற்றிப் பேசினாலும், அவர்கள் அதில் சிவனைச் சித்தரிப்பதில்லை. நீங்கள் திரிமூர்த்தியின் பல படங்களைப் பார்த்திருப்பீர்கள். உண்மையில், பௌதீகமான பிரஜாபிதா பிரம்மா இங்கேயே இருக்கிறார். இவர் மிகவும் வயதான, முப்பாட்டனார் ஆவார். இதுவே பிரஜாபிதா பிரம்மாவின் வம்சாவளி விருட்சம் ஆகும். தந்தை பிரம்மாவின் மூலம் உலகத்தைப் படைக்கிறார். ஆகவே, பிரம்மா வயதானவர் ஆவார். அவர்கள் அவரை ஒரு வயோதிபராகச் சித்தரிக்கிறார்கள். அவர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருமே தந்தையின் குழந்தைகள் என்பதை நீங்களும் அறிவீர்கள். ஆத்மாக்களுக்குத் தந்தையின் அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். பாரதம் இப்பொழுது பெருமளவுக்கு நன்மை அடைந்து வருகிறது. ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாகி, முக்தி தாமத்துக்குச் செல்வார்கள். குறிப்பாகப் பாரதத்துக்கும், பொதுவாக உலகத்துக்குமாக, நீங்கள் இப்பொழுது பாரதத்துக்குச் சேவை செய்கிறீர்கள். நீங்களே இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்ற மிகச்சிலர் ஆவீர்கள். சுருக்கமாக, உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: குழந்தைகளே, மன்மனாபவ ஆகுங்கள்! உங்களுக்கு வேறாகவும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்களிடமுள்ள அனைத்தையும், தேவ இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குப் பயன்படுத்துங்கள். பாபு காந்திஜி என்ன செய்தார்? அவரும் இராம இராச்சியம் இருப்பதையே விரும்பினார். இது அத்தகையதோர் அற்புதமான நாடகம்! நீங்கள் இப்பொழுது இந்த நாடகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கிறீர்கள். எவ்வாறு அவர்கள் ஒரு கால எல்லைக்குட்பட்ட ஒன்றை இன்னுமொரு கால எல்லைக்குள் இட்டு விட்டார்கள் என நீங்களும் எண்ணுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நாடகத்துக்கேற்ப, உலகம் மிகவும் மோசமானதொரு நிலையை அடைந்துள்ளது. தந்தை இப்பொழுது சற்கதியை அருள்வதற்குத் வந்துவிட்டார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் போதையுடன் இருக்கிறீர்கள். அவர் முழு உலகினதும் அசரீரியான பாபுஜி (தந்தை) ஆவார். இந்தப் பிரம்மா யாருடைய குழந்தை? சிவபாபாவின் குழந்தை ஆவார். அவர் யாருடைய குழந்தை? சிவபாபா தங்கள் குழந்தை எனத் தாய்மார்களான நீங்கள் கூறுகிறீர்கள். இவை சிவபாபாவின் விளையாட்டுக்கள் ஆகும். சிவபாபா தங்களில் பிரவேசித்துப் பேசுகிறார் என அவர்கள் விசேடமாகக் கூறும்பொழுது, திரான்ஸிலும், காட்சிகள் போன்றவற்றிலும் மாயையினால் பெருமளவு குறுக்கீடுகள் தோன்றுகின்றன. அவை அனைத்தும் தீய ஆவிகளின் குறுக்கீடு ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய ஆவிகளின் இந்நோயானது உங்களை இரு உலகங்களிலும் இழக்கச் செய்கின்ற அத்தகைய ஒரு நோயாகும். நீங்கள் ஒருபொழுதும் காட்சிக்கான எந்த விருப்பத்தையம் கொண்டிருக்கக் கூடாது. அந்த எண்ணங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. இந்த ஞான மார்க்கம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மாயை உங்களைப் பல வழிகளில் ஏமாற்றுகிறாள். காட்சிகளைப் போன்றவற்றைப் பெறுவதன் மூலம் எந்த நன்மையும் கிடையாது. தந்தை கூறுகிறார்: நான் இவரினூடாக உங்கள் நிச்சயதார்த்தத்தை மேற்கொள்கிறேன். தந்தையின் கட்டளைகள்: சரீரதாரிகளை நினைவு செய்ய வேண்டாம்! உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்! உங்கள் சொந்த நன்மைக்காக நீங்கள் உங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது பெரும் புரிந்துணர்வுக்கான ஒரு விடயமாகும். உங்களில் எவரும் உங்கள் செய்தியை பாபாவுக்கு எழுத முடியும். சில குழந்தைகளுக்கு எல்லையற்ற தந்தைக்குத் தங்கள் நலனைப் பற்றிய ஒரு கடிதத்தை எழுதுவதற்குப் போதுமானளவு விவேகம் கூட இருப்பதில்லை. நீங்கள் உங்கள் லௌகீகத் தந்தைக்கு ஒரு கடிதத்தை எழுதாது விட்டால், அவர் தூக்கத்தை இழப்பார். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். அவர் ஒரு மாதத்துக்கு அல்லது ஒன்றரை மாதத்துக்கு ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதைக் காணும்பொழுது, மாயை உங்களை உண்டுவிட்டதன் காரணமாகவே நீங்கள் ஒருவேளை பரலோகத் தந்தைக்கு எழுதவில்லை எனப் புரிந்து கொள்கிறார். நீங்கள் குறைந்தபட்சம் எழுத வேண்டும்: பாபா, நான் சதா நாராயணன் ஆகுகின்ற போதையில் நிலைத்திருக்கிறேன். நீங்கள் எனக்குக் காண்பித்துள்ள வழிமுறையை நான் சதா பயன்படுத்துகிறேன். அப்பொழுது பாபா நீங்கள் நலமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதைப் புரிந்து கொள்வார். நீங்கள் எழுதா விட்டால், நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள் என்றும், நினைவில் நிலைத்து இருக்கவில்லை என்றும் நினைப்பார். இல்லா விட்டால், நீங்கள் உங்கள் செய்தியை பாபாவுக்குக் எழுதுவீர்கள்: நான் இச்சேவையைச் செய்தேன். நான் இவருக்கு விளங்கப்படுத்தினேன், ஆனால் அவருடைய புத்தியில் அது முற்றிலும் பதியவில்லை. அப்பொழுது, அந்நபருக்கு நீங்கள் எவ்வாறு விளங்கப்படுத்த முடியும் என பாபா கூறுவார். பக்தி மார்க்கத்தில் தாங்கள் கூறுகின்ற எவற்றினது அர்த்தத்தையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது என்பதே பிரதான விடயமாகும். தந்தையை அறிந்து கொள்வதால், பாரதம் சற்கதியைப் பெறுகின்றது. தந்தையை அறியாத காரணத்தினால், பாரதம் முழுமையாகவே சீரழிந்ததாகி விட்டது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களைச் சற்கதிக்குள்ளும், ஏனைய அனைவரையும் முக்திக்குள்ளும் அழைத்துச் செல்கிறேன். பாரதம் ஜீவன்முக்தியில் இருந்தபொழுது, ஏனைய அனைவரும் முக்தியில் இருந்தார்கள். தந்தையைத் தவிர எவராலும் இம்மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. ஒரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். அனைவரும் நிச்சயமாகச் சற்கதியைப் பெறுகிறார்கள். அது ஒவ்வொரு கல்பமும் சங்கமயுகத்தில் நடைபெறுகிறது. ஆத்மாக்களாகிய உங்களின் ஆன்மீகத் தந்தை ஒருவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களே அவரை நினைவு செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு இரண்டு தந்தையர்கள் இருக்கிறார்கள். சத்தியயுகத்தில் உங்களுக்கு ஒரு தந்தையே இருக்கிறார். சங்கமயுகத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர்கள் இருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மா உங்கள் தந்தை ஆவார். சிவபாபாவும் பாபா ஆவார். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். அவரை நினைவு செய்வதால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பிரம்மாவை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. இதனாலேயே நீங்கள் சிவபாபாவை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் இப்பொழுது அவருக்கு உரியவர்கள் ஆவோம். இது ஆன்மீகத் தந்தையிடம் இருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கான நிஜமான, உண்மையான ஞானமாகும். ஏனைய அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள் ஆவார்கள். சரீர உணர்வுடைய, தூய்மையற்ற மக்கள் செய்பவை அனைத்தும், அவர்களை மேலும் தூய்மை அற்றவர்கள் ஆக்குவதற்கு மாத்திரமே ஆகும். அவர்கள் என்ன தானமளித்தாலும், என்ன புண்ணியத்தைச் செய்தாலும், அது அவர்களை மேலும் தூய்மை அற்றவர்களாக மாத்திரமே ஆக்குகிறது. அது இராவண இராச்சியத்தில் தொடர்ந்தும் நடைபெறுகிறது. தந்தை இப்பொழுது வந்து ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்! விகாரத்தில் ஈடுபடாதீர்கள்! காமத்தை வெல்லுங்கள்! பல புயல்கள் வரும். நீங்கள் அவற்றால் தோல்வி அடையக் கூடாது. உங்களுக்கு அறியாமைப் பாதையில் ஒருபொழுதுமே வந்திராத மாயையின் பல பாவ எண்ணங்கள் இப்போது வரலாம். அத்தகைய பல பாவ எண்ணங்கள் வருகின்றன. சிலர் கூறுகிறார்கள்: நாங்கள் பக்தி மார்க்கத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். இப்பொழுது நான் உங்களை நினைவு செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. என்னால் ஒரு புள்ளியை நினைவு செய்ய முடியவில்லை. நீங்கள் பெரிய ஏதாவதொன்றாக இருப்பின், என்னால் உங்களை நினைவு செய்ய முடியும். பாபா கூறுகிறார்: 'சிவபாபா' எனக் கூறி, என்னை நினைவு செய்யுங்கள். இப்பழைய உலகத்தை மறவுங்கள்! அமைதி தாமத்தில் என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் அமைதி தாமத்தை மாத்திரம் நினைவுசெய்யக் கூடாது. தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்கள், இனிமையான தந்தை மீது அன்பு செலுத்த வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் ஆத்மாக்கள் அரைக்கல்பத்துக்குக் காதலர்களாக இருக்கிறார்கள். ஆத்மா கூறுகிறார்: நான் அரைக்கல்பமாக உங்களை மறந்திருந்தேன். பிராமண ஆசிரியர்களாகிய நீங்கள் இங்கு அழைத்து வருகின்றவர்கள் அனைவரையும் பெரும் எச்சரிக்கையாக அழைத்து வரவேண்டும். அவர்கள் புத்தியில் உறுதியான நம்பிக்கை உடையவர்களாக மாத்திரமே இருக்க வேண்டும். அவர்கள் இங்கு வந்து, அதன்பின்னர் தூய்மை அற்றவர்கள் ஆகினால், கருவி ஆசிரியர் தண்டனையைப் பெறுவார். இதனாலேயே பிராமண ஆசிரியருக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. பாபா இந்த இரதத்தைப் பெற்றுள்ளார். அவர் அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர் ஆவார். இங்கு தீயவை எவற்றுக்குமான கேள்வியே கிடையாது. நீங்கள் சிரிப்பதற்கோ அல்லது விளையாடுவதற்கோ அல்லது ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கோ தடை விதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், இன்னுமோர் ஆத்மாவுக்கான சிறிதளவு அன்பு இருக்குமானால், அது அதிகரித்து, நீங்கள் தொடர்ந்தும் அந்த ஆத்மாவையே நினைவு செய்வீர்கள், இதனாலேயே நீங்கள் அதற்கும் அப்பால் செல்ல வேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா அல்லது சத்தியயுகத்தில் இருக்கிறீர்களா? (வீட்டில்) தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு வீட்டில் கற்பிக்கிறார். இது உங்கள் அனைவரினதும் வீடாகும். நீங்கள் வெளியில் இருக்கும் பொழுது, நீங்கள் இதனைக் கூற மாட்டீர்கள். உங்களுக்கு இங்கு மிகச்சிறந்த போதை உள்ளது. நீங்கள் சரீரங்களின் அகங்காரத்தையும் துறக்க வேண்டும். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். சாதி, சமயம் போன்ற அனைத்து விதமான பாகுபாடுகளும் முடிவடையும். பழைய உலகம் தமோபிரதான் ஆனது. அவர்களின் பாகுபாடு மேலும் மேலும் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில், ஆங்கிலேய அரசாங்கக் காலத்தில், பாஷையைப் பற்றிய அதிகளவு குழப்பம் இருக்கவில்லை. இப்பொழுது, நாளுக்கு நாள், குழப்பம் அதிகரிக்கிறது. சத்தியயுகத்தில், ஒரு பாஷை மாத்திரமே இருக்கும். அங்கு எவ்விதமான பாகுபாடும் இருக்காது. நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எச்சரீரதாரிகளையும் நினைவு செய்ய வேண்டாம். ஆகையால், எவர் மீதும் தனிப்பட்ட அன்பு செலுத்த வேண்டாம். அதற்கு அப்பால் சென்று, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மாயையின் பாவ எண்ணங்களை இட்டு அச்சமடைய வேண்டாம், ஆனால் வெற்றியாளர் ஆகுங்கள்.2. திரான்ஸிலும், காட்சிகளிலும் அதிகளவு மாயையின் குறுக்கீடு உள்ளது. ஆகவே, தீய ஆவிகளின் அந்தக் குறுக்கீட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தந்தையிடம் உங்கள் உண்மையான செய்தியைக் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அனைத்தின் சாரத்தையும் ஓர் இலகுவான முயற்சியாளராகக் கிரகித்து, சகலகலா வல்லுனர் ஆகுவீர்களாக.நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ, எதைக் கேட்கிறீர்களோ, அதன் சாரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளும் நீங்கள் செய்யும் செயல்களும் சாரம் நிறைந்தவையாக இருக்க வேண்டும். அப்போது உங்களின் முயற்சிகள் இலகுவாக இருக்கும். இத்தகைய முயற்சியாளர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சகலகலா வல்லுனர்கள் ஆகுவார்கள். அவர்களில் எந்தவிதமான குறைகளும் தென்படாது. அவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருபோதும் தைரியத்தை இழப்பதில்லை. அத்துடன், என்னால் இதைச் செய்ய முடியாது என்ற வார்த்தைகளையும் ஒருபோதும் பேசுவதில்லை. இத்தகைய இலகுவான முயற்சியாளர்களும் எளிமையான இதயத்தைக் கொண்டவர்களும் மற்றவர்களையும் எளிமையான இதயத்தைக் கொண்டவர்கள் ஆக்குகிறார்கள்.
சுலோகம்:
சகல வசதிகளையும் பயன்படுத்தும்போது, அவற்றின் எந்தவிதமான ஆதிக்கத்தில் இருந்தும் பற்றற்று இருப்பதுடன் தந்தையின் மீது அன்பானவராக இருங்கள்.அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட, அசைக்க முடியாதவராகவும் நிலையான ஸ்திதியையும் அனுபவம் செய்யுங்கள்;.
நிலையான, ஸ்திரமான ஸ்திதியை உருவாக்குவதற்கு, அனைத்தையும் பார்க்கும்போதும் ஒரேயொருவரைத் தவிர வேறு எதையும் பார்க்காதீர்கள். நீங்கள் பார்க்கும் எந்த விடயங்களும் எஞ்சி இருக்கப் போவதில்லை. ஆகவே, ஏதாவது காட்சிகளை நீங்கள் பார்க்கும்போதும் ‘ஏன்?’ அல்லது ‘என்ன?’ என்ற கேள்விகள் எதுவும் இல்லாதபோது மட்டுமே உங்களால் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்க முடியும். வீணான எண்ணங்களின் குழப்பம் ஏற்படுவதற்கு இதுவே காரணம் ஆகும். ‘ஏன்?’ என்ற இந்தக் கேள்வி முடிந்தால் மட்டுமே முழுமை ஏற்படும்.