18.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை வழிகாட்டியாக இருப்பதைப் போன்று, நீங்களும் அவ்வாறே வழிகாட்டிகளாகி அனைவருக்கும் வீட்டிற்கான பாதையைக் காட்டுங்கள். குருடர்களுக்கு ஊன்றுகோல்கள் ஆகுங்கள்.
கேள்வி:
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்த அநாதியான நாடகத்தின் எந்த இரகசியத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள்?பதில்:
ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்த அநாதியான நாடகத்தில் எந்தவொரு நடிகரையேனும் சேர்த்துக் கொள்ளவோ அல்லது அகற்றவோ முடியாது. எவருமே அநாதியான முக்தியைப் பெறுவதில்லை. சிலர் கூறுகின்றார்கள்: வருவதும், போவதுமான இந்தச் சக்கரத்தினுள் பிரவேசிக்க நாம் விரும்பவில்லை. பாபா கூறுகின்றார்: ஆம், சிறிது காலத்திற்கு இது சாத்தியம். ஆனால், எவருமே தனது பாகத்தை நடிப்பதில் இருந்து முற்றாக விடுபட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த நாடகத்தின் இரகசியத்தை அறிவீர்கள்.ஓம் சாந்தி.
போலாநாத் (கள்ளங்கபடமற்ற பிரபு) என அழைக்கப்படுபவர் யார் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சங்கம யுகத்தைச் சேர்ந்த குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அவரை அறிவீர்கள். கலியுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரைச் சற்றேனும் தெரியாது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடல் ஆவார். அவரே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் உங்களுக்கு எதுவுமே தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் வந்து, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றேன். நான் உங்களுக்கு உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். அதனையே நீங்கள் இப்பொழுது பெறுகின்றீர்கள். உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஒரு நடிகரையேனும் சேர்த்துக் கொள்ளவோ அல்லது அகற்றவோ முடியாது. ஒவ்வொருவரும் தத்தமது பாகத்தைப் பெற்றிருக்கின்றார்கள். எவருமே அநாதியான முக்தியைப் பெறமுடியாது. ஒருவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும், அவர் மீண்டும் தனது சமயத்திற்குச் செல்வார். பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் போன்றோர் சுவர்க்கத்திற்குச் செல்ல ஆசைப்படுகின்ற போதிலும், அவர்களால் அங்கே செல்ல முடியாது. அவர்களின் மத ஸ்தாபகரின் வருகையுடனேயே அவர்களின் பாகம் ஆரம்பம் ஆகின்றது. இது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. இந்த நேரத்தில், உலகில் உள்ள மனிதர்கள் அனைவருமே நாஸ்திகர்கள் ஆவார்கள். அதாவது அவர்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியாது. மனிதர்கள் மாத்திரமே இதனை அறிந்திருக்க வேண்டும். இது மனிதர்களின் அரங்கம் ஆகும். ஒவ்வோர் ஆத்மாவும் தனது பாகத்தை நடிப்பதற்கு நிர்வாண தாமத்தில் (சப்தத்திற்கு அப்பால்) இருந்து வருகின்றார். அதன் பின்னர், மீண்டும் நிர்வாண தாமத்திற்குச் செல்வதற்கே ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றார்கள். புத்தர் நிர்வாணாவிற்குச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், புத்தரின் சரீரம் அங்கே செல்வதில்லை. ஆத்மாவே அங்கே செல்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இன்னமும் எவராலும் அங்கே செல்ல முடியாது. எவராலும் நாடகத்தை விட்டுச் செல்ல முடியாது. அவர்களால் அநாதியான முக்தியைப் பெற முடியாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சிலர் தாம் அநாதியான முக்தியைப் பெறமுடியும் என நம்புகிறார்கள். அதனால் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். சமணர்களைப் போல் அவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். அவர்களுக்கே உரிய நடைமுறைகளும் சம்பிரதாயங்களும் உள்ளன. அவர்களின் நம்பிக்கைக்குரிய அவரவர் சொந்த குருவும் இருக்கிறார். எவ்வாறாயினும், எவருமே அநாதியான முக்தியைப் பெறுவதில்லை. நீங்கள் அனைவரும் இந்த நாடகத்தின் நடிகர்கள் என்பதை அறிவீர்கள். தாம் எப்பொழுது வந்தோம், எவ்வாறு திரும்பிச் செல்வோம் என்பதை எவருமே அறியமாட்டார்கள். விலங்குகளுக்கும் இது தெரியாது. மனிதர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள், எங்கள் பாகங்களை நடிக்கும் நடிகர்கள் ஆவோம். இது ஆத்மாக்கள் வாழ்கின்ற கர்ம ஷேத்திரமாகும். அதனை (ஆத்மலோகம்) கர்ம ஷேத்திரம் என அழைக்க முடியாது. அது அசரீரியான உலகமாகும். அங்கே வேடிக்கைகளோ விளையாட்டுக்களோ இருப்பதில்லை. அங்கே செயல்கள் செய்யப்படுவதில்லை. உங்கள் பாகங்களை நடிப்பதற்காக, நீங்கள் அசரீரியான உலகில் இருந்து சரீர உலகிற்கு இறங்கி வருகின்றீர்கள். அது மீண்டும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. பிரளயம் என்றுமே இடம்பெறுவதில்லை. மகாபாரத யுத்தம் இதிகாசத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. யாதவர்களும் கௌரவர்களும் மரணித்து விட்டதாகவும், பஞ்சபாண்டவர்கள் மாத்திரமே எஞ்சியதாகவும் எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களும் மலையுச்சியில் உருகிப்போனதால், அவர்களும் எஞ்சவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே அவர்கள் பிரளயம் ஏற்பட்டதாக நம்புகிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்து அக்கதைகளை உருவாக்கி உள்ளனர். அதன் பின்னர் ஒரு குழந்தை தனது கால் பெருவிரலைச் சூப்பியவாறு அரசமிலையில் கடலில் மிதந்து வந்ததாகவும் கூறுகின்றார்கள். இப்பொழுது, அவர் மூலமாக எவ்வாறு உலகம் உருவாக்கப்பட முடியும்? மக்கள் எதைச் செவிமடுக்கின்றார்களோ, அவற்றை எல்லாம் ‘உண்மை, உண்மை’ என ஏற்றுக் கொள்கின்றார்கள். சமய நூல்களில் பல வகையான விடயங்கள் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்! அந்தச் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். பக்தர்களின் பக்திக்கான பலனைக் கொடுப்பவர் ஒரேயொரு தந்தையான கடவுள் ஆவார். சிலர் முக்தியையும், சிலர் ஜீவன்முக்தியையும் பெறுகின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் (நடிகர்) அவருக்குரிய பாகம் ஆரம்பிக்கும்போது, மீண்டும் இறங்கி வருவார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்வதில்லை. ‘படைப்பவரையோ படைப்பையோ எங்களுக்குத் தெரியாது’ என்று கூறப்படுகின்றது. நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள், நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அல்லது அதன் கால எல்லையையோ அறியாதிருந்தால், அவர்கள் விவேகம் அற்றவர்கள் எனப்படுகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தினாலும் அதனை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. 8.4 மில்லியன் பிறவிகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதால், சக்கரத்தின் கால எல்லை மில்லியன் ஆண்டுகள் என அவர்கள் கூறுகின்றார்கள். உலக இராச்சியத்தைப் பெறுவதற்காக நாங்கள் கல்பம் கல்பமாக பாபாவிடம் வருகின்றோம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: எங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்கு 5000 வருடங்களின் முன்னரும் நாங்கள் உங்களைச் சந்தித்தோம். அரசர்கள் அரசிகள், பிரஜைகள் அனைவருமே உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள். பிரஜைகளும் கூறுகின்றார்கள்: நாங்கள் உலகின் அதிபதிகள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகும்போது சந்திரவம்ச இராச்சியம் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதிவரை முழுச் சக்கரத்தையும் அறிந்திருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் தாம் யாரை வழிபடுகின்றோம் என்பதைப் பற்றியேனும் மனிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தாம் வழிபடுபவர்களின் சுயசரிதத்தை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைவரின் சுயசரிதங்களையும் தந்தையிடம் இருந்து புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் ஆவீர்கள். உங்களுக்குத் தந்தையின் சுயசரிதம் தெரியும். தந்தை தூய்மையாக்குபவரும், முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். நீங்கள் பாண்டவர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் அனைவருக்கும் வழிகாட்டிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் குருடர்களுக்குப் பாதையைக் காட்டும் ஊன்றுகோல்கள் ஆகுகின்றீர்கள். தந்தை வழிகாட்டியாக இருப்பதைப் போன்று, நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும். நீங்கள் ஆத்மாக்கள், அவர் பரமாத்மா ஆவார். நீங்கள் அவரிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாரதத்தில் எல்லையற்ற இராச்சியம் நிலவியது, ஆனால் அது இப்பொழுது இல்லை. நீங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்ற எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். அதாவது, நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். நாங்கள் தேவர்களாக இருந்தோம், 84 பிறவிகளை எடுத்த பின்னர் நாங்கள் சூத்திரர்கள் ஆகினோம். தந்தை எங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாற்றவே வருகின்றார். யாகம் வளர்ப்பதற்கு நிச்சயமாக பிராமணர்கள் (புரோகிதர்கள்) தேவைப்படுகின்றனர். இதுவே இந்த ஞானத்தின் யாகமாகும். பாரதத்தில் அவர்கள் பல யாகங்களை உருவாக்குகின்றார்கள். இதில், விசேடமாக ஆரிய சமாஜி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு யாகங்கள் உருவாக்குகின்றார்கள். இது முழு உலகமும் அர்ப்பணிக்கப்படுகின்ற, உருத்திர ஞான யாகமாகும். இதற்காக, நீங்கள் இப்பொழுது உங்கள் புத்திகளைப் பயன்படுத்த வேண்டும். கலியுகத்தில் பல மனிதர்கள் உள்ளனர். இது மிகப் பெரிய பழைய உலகமாகும். இவை அனைத்தும் அழிக்கப்படும். எதுவும் பயனற்றதாகி விடும். சத்தியயுகத்தில் அனைத்தும் புதிதாக இருக்கும். இங்கே, அதிகளவு அசுத்தம் நிறைந்துள்ளது. மனிதர்கள் மிகவும் அசுத்தமாக உள்ளனர். செல்வந்தர்கள், மிகவும் அழகான மாளிகைகளில் வாழ்கின்றார்கள். ஏழைகள் குடிசைகளில், மிகவும் அசுத்தமான சூழலிலேயே வாழ்கின்றனர். அக்குடிசைகள் இப்பொழுது அழிக்கப்படுகின்றன. அவர்களுக்கு வாழ்வதற்கு வேறு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் (அரசாங்கம்) அந்நிலங்களைத் தொடர்ந்தும் விற்கின்றார்கள். அவர்கள் வெளியேறா விட்டால், பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். ஏழைகள் அதிகளவு கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். சந்தோஷமாக வாழ்பவர்களும், நிலையான சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. அவர்களுக்கு அவ்வாறான சந்தோஷம் இருக்குமாயின், அந்தச் சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது என்று ஏன் கூறப்படுகிறது? கடவுள் சிவன் பேசுகின்றார்: நான் இந்தத் தாய்மார்களின் மூலம் சுவர்க்க வாசலைத் திறக்கின்றேன். இந்த ஞானக் கலசம் தாய்மார்களின் தலையில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இந்த ஞானாமிர்தத்தை அனைவருக்கும் வழங்குகின்றார்கள். எவ்வாறாயினும், உங்களுடையது இல்லறப் பாதையாகும். நீங்கள் உண்மையான பிராமணர்கள். எனவே நீங்கள் அனைவரையும் இந்த ஞானச் சிதையில் அமர்த்துகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தேவ சமுதாயத்தவர் ஆகுகின்றீர்கள். தூய்மையற்ற சமுதாயம் என்பது இராவண சமுதாயம் ஆகும். இராம இராச்சியம் நிலவ வேண்டும் என காந்தி கூறுவதுண்டு. ‘ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!’ என அவர்கள் அழைத்த போதிலும், அவர்கள் தம்மைத் தூய்மையற்றவர்கள் என ஏற்றுக் கொள்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்துள்ளார். நீங்கள், காரிருளில் இருந்து பேரொளிக்குள் வந்துள்ளீர்கள். கங்கையில் நீராடினால் தாம் தூய்மை அடைவோம் என மனிதர்கள் நினைக்கின்றார்கள். ஹரித்துவாரின் அனைத்துக் கழிவுகளும் கங்கையிலேயே போடப்படுகின்றன. சில இடங்களில் அக்கழிவுகள் பண்ணைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை சத்தியயுகத்தில் இடம்பெற மாட்டாது. அங்கே, அதிகளவு தானியங்கள் உள்ளன. அதற்காகப் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. பாபாவிற்கு அனுபவம் உள்ளது. முன்னர், தானியங்களின் விலை மிகவும் மலிவாக இருந்தது. சத்திய யுகத்தில், வெகுசிலரே வாழ்ந்தனர். அங்கே அனைத்தும் மலிவாகக் கிடைக்கும். ஆகையால், தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக மாறவேண்டும். அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களில் கலப்படம் கலந்துள்ளதால், ஆத்மாக்கள் இப்பொழுது மங்கி விட்டனர். தெய்வீகப் புத்திகளைக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது கல்லுப் புத்திகள் உடையவர்கள் ஆகியுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கல்லுப் பிரபுக்களில் இருந்து தெய்வீகப் பிரபுக்கள் ஆகுவதற்காகவே தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை உங்களை உலக அதிபதிகளாக, அதிலும், சத்தியயுக உலகத்திற்கு அதிபதிகள் ஆக்குகின்றார். இது கலியுக உலகம். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களைத் தெய்வீக உலகின் அதிபதிகளாக ஆக்குகிறார். இங்குள்ள மாளிகைகள் போன்றன அனைத்தும் எதற்கும் பயன்பட மாட்டாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். எவ்வாறாயினும், இங்கு என்னதான் உள்ளது? அமெரிக்காவில் அதிக தங்கம் உள்ளது. இங்கு, தாய்மார்களிடம் உள்ள சிறிதளவு தங்கமும்கூட எடுக்கப்பட்டு விடும். ஏனென்றால், தங்கம் கடன்களை அடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும். அங்கே, உங்களிடம் தங்கத்திற்கு மேல் தங்கம் அளவற்று இருக்கும். இங்கோ, சிப்பிகளே உள்ளன. ஆனால் அங்கோ, வைரங்கள் இருக்கும். இது கலியுகம் என அழைக்கப்படுகின்றது. பாரதம் அழியாத தேசம். அது என்றுமே அழிக்கப்படுவதில்லை. பாரதமே அனைத்திலும் அதிமேன்மையான இடமாகும். தாய்மார்களாகிய நீங்கள் முழு உலகத்தையும் ஈடேற்றுகின்றீர்கள். உங்களுக்கு நிச்சயமாகப் புதியதோர் உலகம் தேவையாகும். பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. உங்கள் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் உழைக்கவும் வேண்டும். நீங்கள் எதனையும் துறக்க வேண்டியதில்லை. பாபா கூறுகின்றார்: அனைத்தையும் செய்யும் அதேவேளையில், தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள். பக்தி மார்க்கத்திலும், உங்கள் அன்பிற்கினியவரான என்னை நினைவு செய்தீர்கள். நீங்கள் கூறினீர்கள்: அவலட்சணமாக உள்ள எங்களை அழகானவர்கள் ஆக்க வாருங்கள். அவர் பயணி என அழைக்கப்படுகின்றார். நீங்கள் அனைவரும் பயணிகளே. உங்கள் வீடு அங்கே உள்ளது. அங்கேயே ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்றனர். நீங்கள் அனைவரையும் இந்த ஞானச் சிதையில் அமர்த்துகின்றீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் கணக்குளைத் தீர்த்த பின்னர் வீடு திரும்புவீர்கள். அதன் பின்னர் மீண்டும் வந்து புதிதாக ஆரம்பிப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு தூய்மையாகி, மேன்மையானதோர் அந்தஸ்தையும் கோருவீர்கள். தாய்மார்களுக்கு நேரம் உள்ளது. ஆண்களின் புத்திகள் தொடர்ந்தும் தமது வியாபாரம் போன்றவற்றில் சுற்றித்திரிகின்றன. ஆகையாலேயே தந்தை இந்த ஞானக் கலசத்தை தாய்மாரின் தலைகளில் வைத்துள்ளார். இங்கே, ஒரு மனைவிக்கு அவளது கணவனே கடவுளும், குருவும், அனைத்தும் என்றும், அவள் அவனது வேலைக்காரியே என்றும் கூறப்படுகின்றது. தந்தை இப்பொழுது தாய்மார்களாகிய உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். பெண்களாகிய நீங்களே பாரதத்தை ஈடேற்றுகின்றீர்கள். வந்து, போவதில் இருந்து தாம் விடுபடுவது சாத்தியமா எனச் சிலர் பாபாவிடம் கேட்கின்றனர். பாபா கூறுகின்றார்: ஆம், சிறிது காலத்திற்கு மட்டும் அது சாத்தியமாகும். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் சகல துறை பாகத்திலும் நடிக்கின்றீர்கள். ஏனையோர், முக்தி தாமத்தில் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு நடிப்பதற்கு சிறியதொரு பாகமே உள்ளது. அவர்கள் சுவர்க்கத்திற்கும் செல்வதில்லை. ‘வந்து, போவதில் இருந்து விடுபட்டவர்கள்’ என, இறுதியில் வந்து உடனடியாக மீண்டும் வீடு திரும்புபவர்களை இட்டே கூறப்படுகின்றது. அவர்களால் இந்த ஞானம் போன்றவற்றைச் செவிமடுக்க முடியாது. ஆரம்பம் முதல் இறுதிவரை தமது பாகத்தை நடிப்பவர்களாலேயே இந்த ஞானத்தைச் செவிமடுக்க முடியும். தாம் அவ்விடத்தை விரும்புவதால், தாம் மேலே, அங்கேயே தங்கியிருக்க விரும்புகின்றோம் எனச் சில ஆத்மாக்கள் கூறுகின்றார்கள். அது எவ்வாறு சாத்தியம்? நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவாறு, அவர்கள் அங்கு சென்ற பின்னர், இறுதியில் நிச்சயமாக வருவார்கள். அவர்கள் எஞ்சிய காலத்துக்கு, அமைதி தாமத்தில் தங்கியிருப்பார்கள். இந்த நாடகம் எல்லையற்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உண்மையானதொரு பிராமணராக இருந்து, ஞானாமிர்தத்தை அனைவருக்கும் வழங்குங்கள். அனைவரையும் இந்த ஞானச் சிதையில் அமரச் செய்யுங்கள்.2. அனைத்தையும் செய்யும்போதும், உங்கள் வாழ்வாதாரத்திற்காக, உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ளும் போதும், தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்கு, தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதுடன், அனைவருக்கும் தந்தையை நினைவூட்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சிறப்பியல்புகளைத் தானம் செய்வதன் மூலம் மகத்துவம் ஆகுகின்ற மகாதானி ஆகுவீர்களாக.நீங்கள் எல்லோரும் இந்த ஞானத்தைத் தானம் செய்கிறீர்கள். ஆனால் விசேட ஆத்மாக்களான நீங்கள் உங்களின் சிறப்பியல்புகளைத் தானம் செய்ய வேண்டும். உங்களுக்கு முன்னால் வருகின்ற எவரும் உங்களில் தந்தையின் அன்பை அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் முகத்தில், அவர்கள் தந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும். உங்களின் செயல்பாடுகளில் தந்தையின் நடத்தையை அவர்கள் காண வேண்டும். அவர்கள் உங்களின் சிறப்பியல்புகளைப் பார்க்கும்போது, விசேடமான ஆத்மாக்கள் ஆகுகின்ற தூண்டுதலைப் பெறுவார்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, அதாவது, பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களின் இருந்து பூஜிப்பவர்கள் ஆகும்வரை மகத்துவமாக இருக்கின்ற, இத்தகைய மகாதானிகள் ஆகுங்கள்.
சுலோகம்:
சதா ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பவர்களே, மகாஞானி ஆத்மாக்கள் ஆவார்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
தந்தையின் மீதுள்ள அன்பில் சதா அமிழ்ந்திருப்பதுடன், நான் என்ற உணர்வைத் துறந்த மனோபாவத்தைக் கொண்டுள்ள குழந்தைகளில் தந்தை புலப்படுவார். இந்த ஞானத்தின் அடிப்படையில் குழந்தைகளான நீங்கள் தந்தையின் நினைவில் அமிழ்ந்துள்ளீர்கள். இவ்வாறு அமிழ்ந்து இருத்தல் அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதி எனப்படுகிறது. நீங்கள் அன்பிலே திளைத்திருக்கும் போது, அதாவது, நீங்கள் அன்பிலே உங்களை மறந்திருக்கும் போது, நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள்.