18.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தூய்மையாக்குபவராகிய தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள், இவ்வாறே நீங்கள் தூய உலகின் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். தங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றித் தூய்மை ஆகுபவர்கள் எதனையும் பெற்றுக் கொள்வதில்லை.
கேள்வி:
சேவை செய்யும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் குறிப்பாக எதில் கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
நீங்கள் சேவையில் இருக்கும்பொழுது, அற்ப விடயங்களில் ஒருவரோடொருவர் முரண்படாதீர்கள்; அதாவது, குழப்பம் அடையாதீர்கள். நீங்கள் ஒருவரோடொருவர் உவர்நீர் போலாகி, ஒருவருடன் ஒருவர் பேசாதிருந்தால், நீங்கள் அவச்சேவை செய்வதற்கான கருவிகள் ஆகுகின்றீர்கள். சில குழந்தைகள் தந்தையுடனேயே முகம் கோணுவதுடன், தவறான செயல்களையும் புரிய ஆரம்பிக்கின்றனர். அத்தகைய குழந்தைகளின் சுவீகாரமானது பின்னர் இரத்துச் செய்யப்படுகிறது.ஓம் சாந்தி.
தூய்மையாக்குபவரான தந்தை, தூய்மை ஆகுகின்ற குழந்தைகளுக்கு இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். தூய்மையற்ற குழந்தைகளே தூய்மையாக்குகின்ற தந்தையை அழைக்கின்றனர். நாடகத் திட்டமும் கூறுகிறது: இது இராவண இராச்சியம் ஆகையால், மனிதர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்களாக இருக்கின்றனர். காமத்தில் ஈடுபடுபவர்களே தூய்மையற்றவர்கள் எனப்படுகின்றனர். காமத்தில் ஈடுபடாத பலர் இருக்கின்றனர்; அவர்கள் பிரம்மச்சாரிகளாக இருக்கின்றனர். பாதிரியார்கள், முல்லாக்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் தாங்கள் விகாரம் அற்றவர்கள் என எண்ணுகின்றனர்; அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர். யார் அவர்களைத் தூய்மையாக்கியது? அவர்கள் தாங்களாகவே அவ்வாறு ஆகினார்கள். காமத்தில் ஈடுபடாமல், தூய்மையாக இருக்கின்ற ஏனைய பல சமயங்களும் உள்ளன, ஆனால் அவர்கள் தூய்மையாக்குபவரான தந்தையால் தூய்மை ஆக்கப்படவில்லை. இதனாலேயே அவர்களால் தூய உலகின் அதிபதிகளாக முடியாது; அவர்களால் தூய உலகிற்குச் செல்லவும் முடியாது. சந்நியாசிகளும் ஐந்து விகாரங்களையும் துறக்கின்றார்கள், ஆனால் அவர்களுக்குத் துறவறத்தைக் கற்பித்தவர் யார்? தூய்மையாக்குபவராகிய பரமாத்மா பரமதந்தை அவர்களை எதனையும் துறக்குமாறு செய்யவில்லை. தூய்மையாக்குபவராகிய தந்தை இன்றி, வெற்றி இருக்க முடியாது. அவர்களால் அமைதி தாமமான, தூய உலகிற்குச் செல்ல முடியாது. தந்தை இங்கு வந்து, உங்களைத் தூய்மையாக்குவதற்கே ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். சத்திய யுகம் விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. சத்திய யுகத்திற்குச் செல்பவர்கள் நிச்சயமாகத் தூய்மையாகவே இருப்பார்கள் என்பதை இது நிரூபிக்கிறது; சத்திய யுகத்தில் தூய்மையானவர்களே இருக்கின்றனர். அமைதி தாமத்திலும் ஆத்மாக்கள் தூய்மையானவர்களே; இந்த இராவண இராச்சியத்தில் மாத்திரமே அனைவரும் தூய்மை அற்றவர்களாக உள்ளனர். அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். சத்தியயுகத்தில் இருக்கும் ஆத்மாக்களும் மறுபிறவி எடுக்கின்றனர், ஆனால் அவர்கள் காமத்தின் மூலம் மறுபிறவி எடுப்பதில்லை. அது முற்றிலும் விகாரமற்ற உலகமாகும். திரேதா யுகம் இரு கலைகளால் குறைந்ததாக இருப்பினும், அது விகாரம் நிறைந்தது என அழைக்கப்படுவதில்லை. அவர்கள் கூறுகின்றனர்: ஸ்ரீ இராம பிரான், ஸ்ரீ சீதாதேவி. முதலில் அது 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்ததாகவும், பின்னர் 14 சுவர்க்கக் கலைகள் நிறைந்ததாகவும் உள்ளது. அது சந்திரனைப் போல் உள்ளது. தூய்மையாக்குகின்ற தந்தை வந்து, உங்களைத் தூய்மை ஆக்கும்வரை எவராலும் முக்திக்கோ அல்லது ஜீவன்முக்திக்கோ செல்ல முடியாது என்பதை இது நிரூபிக்கிறது. தந்தை மாத்திரமே வழிகாட்டி ஆவார். இவ்வுலகில் தூய்மையாக இருக்கின்ற பலர் உள்ளனர். சந்நியாசிகளின் தூய்மை காரணமாகவே மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்கள் தந்தையின் மூலம் தூய்மையாக்கப்படவில்லை. அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையே உங்களைத் தூய்மை ஆக்குகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அம்மக்கள் தங்களது சொந்தக் கட்டளைகள் மூலம் தூய்மை ஆகுகின்றனர், ஆனால் நீங்களோ தந்தையின் மூலம் தூய்மை ஆகுகின்றீர்கள். நீங்கள் தூய உலக ஆஸ்தியைத் தூய்மையாக்குபவராகிய தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். ஆகவே, தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே, காமமே உங்களது கொடிய எதிரி. அதனை வெல்லுங்கள்! இதனாலேயே அனைவரும் வீழ்கின்றனர். “நான் கோபப்பட்டதனால், எனது முகத்தை அழுக்காக்கி விட்டேன்” என அவர்கள் என்றும் எழுதுவதில்லை. காமத்தின் காரணமாகவே “நான் விழுந்ததால், எனது முகத்தை அழுக்காக்கி விட்டேன்” என அவர்கள் எழுகின்றனர். இவ்விடயங்கள் பற்றிக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். உலகிற்கு அவற்றைப் பற்றித் தெரியாது. நாடகத்திற்கேற்ப பிராமணர்கள் ஆக வேண்டியவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் இலக்கும் குறிக்கோளும் இருப்பதில்லை. சிவானந்தர் போன்றவர்களைப் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர், அவர்களில் கூட மிகச் சிலரே துறவறத்தை மேற்கொள்கின்றனர். இல்லறத்தவர்கள் துறவறத்தை மேற்கொள்வதில்லை. மிகச் சிலரே தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறப்பவர்கள். அவர்கள் சந்நியாசிகள் ஆகுகின்றனர், ஆனால் அவர்களும் மறுபிறவி எடுக்க வேண்டும். சிவானந்தர் ஜோதியுடன் இரண்டறக் கலந்து விட்டார் என நீங்கள் கூற மாட்டீர்கள். தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் வழிகாட்டியும் ஆவார். வழிகாட்டி இல்லாமல், எவராலும் வீடு திரும்ப முடியாது. உங்களது தந்தையே, தந்தையும், ஞானம் நிறைந்தவரும், அத்துடன் மனித உலக விருட்சத்தின் விதையானவரும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். முழு விருட்சத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியினது ஞானத்தை விதையானவர் மாத்திரமே கொண்டிருப்பார். அனைவரும் தந்தையைப் பற்றிப் பேசுகின்றனர். ஒரேயொருவரே உங்கள் தந்தையாகிய கடவுள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும், எனவே தந்தை அனைவர் மீதும் கருணையைக் கொண்டிருப்பார். பல மனிதர்கள் இருக்கின்றனர். பல்வேறு பூச்சிகளும் உள்ளன. அங்கு சில மனிதர்களே இருக்கின்றனர், ஆகவே நிச்சயமாக எல்லாவற்றினதும் சில உயிரினங்களே இருக்க வேண்டும். சத்தியயுகத்தில் எவ்வகையான குப்பைகளும் இருக்க மாட்டாது. இங்கு அவர்கள் தொடர்ந்தும் புதிய மருந்துகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் வகையில், பல வகையான நோய்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. நாடகத் திட்டத்திற்கேற்ப அவர்கள் தொடர்ந்தும் பலவகையான திறமைகளைப் பெறுவார்கள். அந்தத் திறமைகள் அனைத்தும் மனிதர்களுக்கு உரியவை, ஆனால் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையின் திறமை என்ன? தந்தையையிட்டுக் கூறப்பட்டுள்ளது: “ஓ தூய்மையாக்குபவரே, வந்து ஆத்மாக்களான எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” அவர்கள் தூய சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் தூய்மையாக்குபவரும், துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவருமாகிய ஒரேயொருவரை மாத்திரமே அழைக்கின்றனர். அனைவரும் தங்களது சொந்த மொழிகளில் நிச்சயமாக அவரை நினைவு செய்கின்றனர். ஒருவர் மரணிக்கவுள்ள தறுவாயில், அவர் கடவுளை நினைவு செய்கிறார். வேறு எவராலும் தனக்கு ஆதாரத்தை அளிக்க முடியாது என அவர் நம்புகிறார், இதனாலேயே தந்தையாகிய கடவுளை நினைவு செய்யுமாறு அவருக்குக் கூறப்படுகிறது. கிறிஸ்தவர்களும் “தந்தையாகிய கடவுளை நினைவு செய்யுங்கள்” என்று கூறுகின்றனர். “கிறிஸ்துவை நினைவு செய்யுங்கள்” என்று அவர்கள் கூறுவதில்லை. கிறிஸ்துவை விடவும் கடவுள் அதியுயர்ந்தவர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரேயொருவரே அனைவரதும் கடவுளாக இருப்பார். மரணபூமி எத்தகையது என்றும், அமரத்துவ பூமி எத்தகையது என்றும் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். உலகிலுள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. சுவர்க்கம், நரகம் இரண்டும் இங்கேயே உள்ளன என அவர்கள் கூறுகின்றனர். சத்திய யுகமும், தேவர்களது இராச்சியமும் இருந்திருக்க வேண்டும் எனச் சிலர் எண்ணுகின்றனர். இப்பொழுது கூட அவர்களுக்காகப் பல புதிய ஆலயங்கள் தொடர்ந்தும் கட்டப்படுகின்றன. ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவராலும் எங்களைத் தூய்மையாக்கி, எங்கள் வீட்டிற்கு எங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்ல முடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்களது இனிய வீட்டிற்கு செல்கிறோம் என்பது உங்களது புத்தியில் உள்ளது. தந்தை எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் இத்தனை பல பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இப்பொழுது சூத்திரர்களில் இருந்து நாங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளோம், பின்னர் பிராமணர்களில் இருந்து தேவர்கள் ஆகுவோம். நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இது இப்பொழுது சங்கமயுகம் ஆகும். பல்வகை-ரூபத்தில் உள்ள பிராமணர்களது உச்சிக்குடுமி மிகவும் பிரபல்யமானது. இந்துக்களும் உச்சிக்குடுமியின் அடையாளத்தைக் கொண்டுள்ளனர். மனிதர்கள் மனிதர்களே. சீக்கியர்கள், முஸ்லிம்கள் போன்றோர் ஒரேவகையான முகச்சாயலைக் கொண்டுள்ளனர், எனவே உங்களால் அவர்களை பிரித்தறிய முடியாது. ஆனால் சீனர்கள், ஆபிரிக்கர்கள் போன்ற சில தேசத்தவர்களை அவர்களது முகச்சாயல்களை வைத்து உங்களால் பிரித்தறிய முடியும். கிறிஸ்தவர்கள் பாரதத்துடன் தொடர்பைக் கொண்டிருப்பதனால், அவர்களிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டனர். பலவகையான சமயங்கள் உள்ளன. அவர்களின் நடைமுறைகள், சம்பிரதாயங்கள், ஆடையணியும் விதம் அனைத்தும் மிகவும் வேறுபட்டவை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நாங்கள் சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றோம். அங்கு வேறெந்தத் தர்மமும் இருக்கவில்லை. இந்தப் பல்வகையான சமயங்கள் அனைத்தும் இப்பொழுது பிரசன்னமாக உள்ளன. இப்பொழுது, இறுதியில் வேறெந்தச் சமயம் ஸ்தாபிக்கப்படும்? ஆம், புதிய ஆத்மாக்கள் தூய்மையானவர்கள், ஆகவே அத்தகைய ஆத்மாக்கள் வரும்பொழுது, அவர்களின் புகழ் சிறிதளவு காணப்படுகின்றது. இறுதியில் வருபவர்கள் நிச்சயமாக முதலில் சந்தோஷத்தையும், புகழையும் அனுபவம் செய்து, பின்னர் துன்பத்தையும் அனுபவிப்பர் எனப் பகுத்தறிவும் கூறுகிறது. அவர்கள் ஒரு பிறவியையே எடுக்கின்றார்கள். நீங்கள் நீண்டகாலம் சந்தோஷப் பூமியில் இருப்பதைப் போன்று அவர்கள் நீண்டகாலம் அமைதிதாமத்தில் இருக்கின்றனர். இறுதிவரை தொடர்ந்தும் பெருமளவு வளர்ச்சி இருக்கும். விருட்சம் மிகப் பெரியது. இந்நேரத்தில் மனித சனத்தொகை அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனாலேயே அவர்கள் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும் அவற்றின் மூலம் எதுவும் சாதிக்கப்படப் போவதில்லை. நாடகத் திட்டத்திற்கேற்ப, சனத்தொகை அதிகரிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். புதிய இலைகள் தொடர்ந்தும் வெளிவரும், பின்னர் கிளைகளும் கொப்புகளும் வெளிவரும். பல வகைகள் உள்ளன. உங்களுக்கு வேறெந்தத் தொடர்பும் இல்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மையாக்கி, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் செய்திகளை உங்களுக்குக் கூறுகிறார். நீங்களும் அவரை அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள். ஆகவே தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்படும். இந்தக் கணக்கு உள்ளது. சத்தியயுகத்தில் வெகுசில மனிதர்களே உள்ளனர், ஆனால் கலியுகத்திலோ பல மனிதர்கள் உள்ளனர். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்தப் பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. தந்தை மாத்திரமே ஸ்தாபனையை மேற்கொள்வார். கடவுள் பேசுகிறார்: நான் ஸ்தாபனையைத் தூண்டுகிறேன். நாடகத்திற்கேற்ப விநாசம் இடம்பெறும். பாரதத்தில் இந்த ரூபங்கள் உள்ளன. பிரம்மாவின் படைப்பாகிய, வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள் எத்தனை பேர் உள்ளனர் எனப் பாருங்கள். ஏனைய பிராமணர்கள் கருப்பை மூலமே உருவாக்கப்படுகின்றனர்; அவர்கள் தந்தையையும் அறிய மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது உற்சாகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். கலியுகம் அழிக்கப்பட உள்ளது என்றும், சத்தியயுகம் வரவுள்ளது என்றும் உங்களுக்குத் தெரியும். இது (இராச்சியத்திற்காக) குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற, உருத்திர ஞானயாகம் ஆகும். அதனுள் பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். வேறு எந்த அர்ப்பணமும் செய்ய வேண்டியதில்லை. தந்தை கூறுகிறார்: சுய இராச்சியத்திற்காக, குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற இந்த யாகத்தை நானே உருவாக்கி உள்ளேன். அது முழு உலகிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது யாககுண்டம் (யாகம் வளர்க்கப்படுகின்ற இடமும், புனிதமானது எனக் கருதப்படுகின்ற அதைச் சூழவுள்ள இடமும்) ஆகும். அதனுள் முழு உலகமும் அர்ப்பணிக்கப்பட உள்ளது. மக்கள் யாக குண்டங்களை உருவாக்கின்றனர். இந்த முழு உலகமுமே யாக குண்டம் ஆகும். இந்த யாக குண்டத்தில் என்ன நடைபெறும்? அனைத்தும் இதில் அழிக்கப்படும். இந்த யாக குண்டம் தூய்மையானதாகவும், புதியதாகவும் ஆகும். பின்னர் தேவர்கள் மீண்டும் இங்கு வருவார்கள். கடல் எங்கும் இருக்கின்றது, முழு உலகமும் புதியதாகும். பெருமளவு குழப்பம் இருக்கும். எவருக்கேனும் சொந்தம் இல்லாத எந்த இடமும் இல்லை. “இது என்னுடையது” என்று அனைவரும் கூறுகின்றனர். “எனது, எனது” எனக் கூறுகின்ற மனிதர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு, நான் தூய்மையாக்கிய வெகுசிலரே முழு உலகிலும் இருப்பார்கள். முதலில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே இருக்கும். அவர்களது இராச்சியம் யமுனை ஆற்றின் கரையில் இருக்கும். இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் பதிந்திருப்பதுடன், நீங்கள் சந்தோஷத்தையும் கொண்டிருக்க வேண்டும். மக்கள் அமர்ந்திருந்து, ஒருவருக்கொருவர் கதைகளைக் கூறுகின்றனர். இதுவும் சத்திய நாராயணனின் கதையாகும்; அது ஓர் எல்லையற்ற கதையாகும். இவ்விடயங்கள் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளன. இதிலும் சிறந்த மற்றும் சேவை செய்யக்கூடிய புத்தியைக் கொண்டவர்களால் அதனை நன்றாகக் கிரகிக்க முடிகிறது. அவர்களின் புத்திகள் முழுமையாக நிரம்புவதுடன், அவர்கள் தொடர்ந்தும் தானமும் செய்வார்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: தானம் செய்வதன் மூலம் செல்வம் குறைவடைவதில்லை. தானம் செய்வதன் மூலம் அது அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. உங்களது செல்வம் அழிவற்றது. கொடுப்பதன் மூலம் உங்கள் செல்வம் முடிவடைய மாட்டாது. எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் கொடுக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சந்தோஷத்தை உணர்வீர்கள். இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது, சிலர் ஆமோதிக்கும் வகையில் தலையசைக்கின்றனர். சிலர் பித்துப்பிடித்தவர்கள் போல அமர்ந்திருக்கின்றனர். தந்தை உங்களுக்கு அத்தகைய சிறந்த கருத்துக்களைக் கூறுகிறார், ஆகவே அவர் கூறுவதைச் செவிமடுக்கையில் நீங்கள் இயல்பாகவே தலையசைக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே இங்கு தந்தைக்கு முன்னால் வருகிறீர்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்குக் கருத்துக்களை மிகவும் சாதுரியமாக வழங்குகிறார். பாரதத்தில் தேவர்களது இராச்சியம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். பாரதமே சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. அது இப்பொழுது நரகமாக உள்ளது. நரகம் சுவர்க்கமாக மாறும், அப்பொழுது ஏனைய அனைவரும் அழிக்கப்படுவர். உங்களுக்குச் சுவர்க்கம் என்பது நாளைய விடயமாகும். நேற்று நீங்கள் ஆட்சிபுரிந்தீர்கள். வேறு எவராலும் இதனைக் கூற முடியாது. கிறிஸ்துவுக்குப் பல வருடங்களுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் வேறெந்தத் தர்மமும் இருக்கவில்லை. ஏனைய சமயங்கள் அனைத்தும் துவாபரயுகம் ஆரம்பித்த பின்னரே வருகின்றன. இது புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவான விடயம். எவ்வாறாயினும் புரிந்து கொள்வதற்கு ஏற்றமுறையில் மக்களது புத்தியானது இந்தத் திசையை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. அவர்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே அவர் நிச்சயமாக வந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவார். இங்கு எவராலும் தூய்மையானவர்களாக இருக்க முடியாது. சத்தியயுகமே விகாரமற்ற உலகம் என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது அது விகாரம் நிறைந்த உலகமாகும். பிரதான விடயம் தூய்மை ஆகும். இதற்காக நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். இதுவரை நடைபெற்றுள்ளவை நாடகத்திற்கேற்பவே இடம்பெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவருக்கு நடைபெற்றது நல்லதா அல்லது தீயதா என எங்களால் கூறமுடியாது. எது நடைபெற்றாலும், அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை எதிர்காலத்திற்காக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: சேவை செய்யும்பொழுது, இன்ன இன்ன செயல்களைச் செய்யாதீர்கள். இல்லாவிடின் அவச்சேவையே இடம்பெறும். நீங்கள் ஒருவருடனொருவர் உப்புநீர் போலாகி உள்ளீர்கள் எனத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுவார். நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காமலும், பேசாமலும் இருக்கும் பொழுதும் உங்களின் எவருக்கேனும் ஏதாவது கூறப்படும் பொழுதும் நீங்கள் குழப்பம் அடைந்தால், நீங்கள் உப்புநீர் போல் ஆகுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சிவபாபாவையும் மறந்து விடுகிறீர்கள்! இதனாலேயே உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: சதா சிவபாபாவை நினைவு செய்யுங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கிறார். அத்தகைய செயல்களைப் புரிவதால், நீங்கள் சீரழிந்தவர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், அது உங்கள் பாக்கியத்தில் இல்லாவிட்டால், நீங்கள் புரிந்து கொள்வதில்லை. பின்னர் தங்கள் யாரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றனரோ, அந்த சிவபாபாவுடனேயே அவர்கள் முகம் கோணுகின்றனர். அவர்கள் தங்கள் ஆசிரியருடனும் சிவபாபாவுடனும் முகங்கோணி, வகுப்பிற்கு வராமலேயே விட்டு விடுகின்றனர். நீங்கள் சிவபாபாவுடன் ஒருபொழுதும் முகம் கோணக்கூடாது. நீங்கள் அவரது முரளியைக் கற்பதுடன், அவரை நினைவு செய்யவும் வேண்டும். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் சற்கதியைப் பெறுவீர்கள். சரீர உணர்வு உடையவர் ஆகுவதால், நீங்கள் சரீரதாரிகளுடன் முகம் கோணுகின்றீர்கள். நீங்கள் பாட்டனாரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தைக்கு உரியவராகும் பொழுதே, பாட்டனாரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் தந்தையின் உறவைத் துண்டித்துக் கொண்டால், எவ்வாறு உங்களால் ஆஸ்தியைப் பெறமுடியும்? நீங்கள் பிராமண குலத்தை நீங்கிச் சூத்திர குலத்திற்கு உரியவராகும் பொழுது, உங்களுக்கு ஆஸ்தி முடிவடைந்து விடுகிறது. அப்பொழுது தத்தெடுத்தல் இரத்துச் செய்யப்படுகிறது. அப்பொழுது கூட உங்களிற் சிலர் புரிந்து கொள்வதில்லை. மாயை உங்களை முற்றிலும் பித்துப்பிடித்தவர்கள் ஆக்குகின்ற அத்தகையவள் ஆவாள். நீங்கள் தந்தையை அதிகளவு அன்புடன் நினைவுசெய்ய வேண்டும், இருப்பினும் நீங்கள் அவரை நினைவு செய்வதில்லை. நான் சிவபாபாவின் குழந்தை, அவர் என்னை ஓர் உலக அதிபதி ஆக்குகின்றார்! அவர் நிச்சயமாகப் பாரதத்திலேயே பிறப்பெடுக்கிறார். மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றனர். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறும். ஆகவே முதலில் சிவபாபா வந்து சுவர்க்கத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை மாத்திரமே வந்து உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். அவர் புதிய உலகிற்காக உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். நீங்கள் சென்று புதிய உலகில் ஆட்சி புரிகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியை இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களால் நிரப்பி, அவற்றைத் தானம் செய்யுங்கள். இந்த ஞானத்தைத் தானம் செய்வதால் மாத்திரமே, உங்கள் சந்தோஷம் பேணப்படுவதுடன், உங்களின் இந்த ஞானச் செல்வமும் தொடர்ந்தும் அதிகரிக்கும்.2. என்றுமே ஒருவருடனொருவர் குழப்பம் அடையவோ அல்லது உப்புநீர் போன்றோ ஆகாதீர்கள். தந்தையை நினைவு செய்வதுடன், முரளியைப் பெருமளவு அன்புடன் செவிமடுங்கள். பித்துப் பிடித்த நபர் போல் ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் யோகம் செய்கின்ற, உண்மையான யோகியாகவும் ஒத்துழைக்கும் ஆத்மாவாகவும் ஆகி, அதனால் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்களாக.ஒருவர் எந்தளவிற்கு யோகியாக இருக்கிறாரோ, அதற்கேற்ப அவர் நிச்சயமாக அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவார். ஒரு யோகியின் இணைப்பானது, அதாவது, அவரின் அன்பானது விதையானவருடன் இருப்பதனால், அந்த அன்பின் பிரதிபலனாக அவர் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுகிறார். விதையானவருடன் யோகம் செய்து, அன்பெனும் நீரை விதைக்கு ஊற்றுபவர்கள், ஆத்மாக்கள் அனைவரிடம் இருந்தும் ஒத்துழைப்பெனும் பழத்தைப் பெறுகிறார்கள். விதையுடன் யோகம் செய்வதனால், அவர்களுக்கு முழு மரத்துடனும் தொடர்பு உள்ளது.
சுலோகம்:
பழைய சம்ஸ்காரங்களுக்கு ‘எனது’ என்று சொல்வது என்றால் உங்களின் முயற்சிகளில் பின்தங்கி இருத்தல் என்று அர்த்தம்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
யாருக்கு எந்த வகையான ஒத்துழைப்புத் தேவைப்பட்டாலும் அருள்பவரின் குழந்தையாக அவருக்கு ஒத்துழைப்பைக் கொடுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவருடனும் அன்பாக இருக்கும்போது மட்டுமே உங்களால் அனைவருடனும் ஒத்துழைக்க முடியும். உங்களிடம் அன்பு இல்லாவிட்டால், உங்களால் அனைவருடனும் ஒத்துழைக்க முடியாது. இதனாலேயே, நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகளில் ஒத்துழைத்து, வெற்றி சொரூபம் ஆகவேண்டும்.