18.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் மிகச்சரியானவர்கள் ஆகவேண்டும். ஏனெனில் நீங்களே தேவர்களிலும் மிக உயர்வான உச்சிக்குடுமிகளான பிராமணர்கள் ஆவீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் கூட சிரமத்துடன், புரிந்து கொள்கின்ற, அதிமறைமுகமான, சீர்ப்படுத்தப்பட்ட விடயம் என்ன?

பதில்:
சிவபாபாவினதும், பிரம்மாபாபாவினதும் இரகசியத்தைப் புரிந்து கொள்வதே அதி மறைமுகமான, சீர்ப்படுத்தப்பட்ட விடயமாகும். சில குழந்தைகள் இது பற்றிக் குழப்பம் அடைகின்றனர். தந்தையே இந்த இரகசியத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்: ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் நான் இந்தச் சரீரத்தின் மூலம் குழந்தைகளான உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நான் நாள் முழுவதும் இந்த இரதத்தில் சவாரி செய்கின்றேன் என்றில்லை.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். யார் அந்தக் குழந்தைகள்? பிராமணர்கள். நீங்களே தேவர்களாகப் போகின்ற, பிராமணர்கள் என்பதை ஒருபொழுதும் மறக்க வேண்டாம். நீங்கள் குலங்களையும் நினைவுசெய்ய வேண்டும். இங்கே, உங்களுக்கு இடையே, நீங்கள் அனைவரும் பிராமணர்கள். எல்லையற்ற தந்தையே பிராமணர்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தப் பிரம்மா உங்களுக்குக் கற்பிக்கவில்லை, சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிரம்மாவின் மூலமே அவர் பிராமணர்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் சூத்திரர்களில் இருந்து, பிராமணர்கள் ஆகாமல், தேவர்களாக முடியாது. நீங்கள் சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சிவாபாவே அனைவரதும் தந்தையாவார். இந்தப் பிரம்மா பாட்டனார் என அழைக்கப்படுகின்றார். அனைவருக்கும் ஒரு லௌகீகத் தந்தை உள்ளார். பக்தி மார்க்கத்தில் மக்கள், உலகிற்கு அப்பாலுள்ள தந்தையை நினைவு செய்கின்றார்கள். பிரம்மாவிற்கு ஆலயம் ஒன்று இருந்த பொழுதிலும், எவருமே அறியாத சூட்சுமமான தந்தையே இவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இங்கேயும், மக்களின் தந்தையாகிய, ஆதிதேவருக்கு ஓர் ஆலய் உள்ளது. அவர் மகாவீரர் எனவும் அழைக்கப்படுகின்றார். சிலர் அவரை தில்வாலா எனவும் அழைக்கின்றனர். ஆயினும் பிரம்மா அன்றி, சிவபாபாவே உங்களின் இதயங்களை வெல்பவர். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஆத்மாக்கள் அனைவரையும் சதா சந்தோஷமானவர்களாக்கி, அவர்களுக்குக் களிப்பைக் கொடுப்பவர். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். உலகிலுள்ள மக்கள் முற்றிலும் எதையுமே அறியார்கள். நாங்கள் பிராமணர்கள், நாங்கள் சிவபாபாவிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகின்றோம். நீங்களும் இதை மீண்டும் மீண்டும் மறக்கின்றீர்கள். நினைவு மிகவும் இலகுவானது. சந்நியாசிகள் “யோகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். யோகம் என்பது ஒரு பொதுவான வார்த்தை. இது ஒரு யோக ஆச்சிரமம் என அழைக்கப்படுவதில்லை. தந்தையும், குழந்தைகளும் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வது, குழந்தைகளின் கடமையாகும். நாங்கள் பிராமணர்கள், நாங்கள் பிரம்மாவின் மூலம் பாட்டானாரிடம் இருந்து எங்களது ஆஸ்தியைக் கோருகின்றோம். இதனாலேயே சிவபாபா கூறுகின்றார்: இயன்றவரை தொடர்ந்தும் என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் படங்களையும் நினைவு செய்யலாம். நீங்கள் பிராமணர்கள் என்பதையும், தந்தையிடம் இருந்து ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதையும் அப்பொழுது நீங்கள் நினைவு செய்வீர்கள். பிராமணர்கள் எப்பொழுதாவது தங்களது குலத்தை மறக்கின்றார்களா? சூத்திரர்களின் சகவாசத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் பிராமணர்கள் என்பதை மறந்து விடுகின்றீர்கள். பிராமணர்கள் தேவர்களிலும் உயர்வானவர்கள், ஏனெனில் பிராமணர்களான நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள். கடவுள் ஐனிஜனன்ஹார் (உள்ளே இருக்கும் அனைத்தையும் அறிந்தவர்) என்று அழைக்கப்படுகின்றார். அவர் அமர்ந்திருந்து, ஒவ்வொருவரது இதயத்திலும் என்ன இருக்கின்றது எனப் பார்க்கின்றார் என்று இதற்கு அர்த்தமில்லை. இல்லை; அவரிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. அவரே விதையானவர் ஆவார். விதையானவர் விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவார். எனவே நீங்கள் அவ்வாறான தந்தையைப் பெருமளவு நினைவு செய்ய வேண்டும். இவருடைய ஆத்மாவும், அந்தத் தந்தையை நினைவு செய்கின்றார். அந்தத் தந்தை கூறுகின்றார்: இவர் (பிரம்மா) என்னை நினைவு செய்கின்ற பொழுதே, தனது அந்தஸ்தை அடைவார். நீங்கள் என்னை நினைவு செய்தால், நீங்களும் ஓர் அந்தஸ்தை அடைவீர்கள். முதலில் நீங்கள் இங்கே சரீரமற்றவர்களாக, சரீரமின்றியே கீழிறங்கி வந்தீர்கள், நீங்கள் மீண்டும் சரீரமற்றவர்களாகி, வீடு திரும்ப வேண்டும். ஏனைய சரீர உறவினர்கள் அனைவரும், உங்களுக்குத் துன்பத்தையே கொடுக்கின்றனர். எனவே, நீங்கள் என்னைக் கண்டுகொண்டதால், ஏன் அவர்களை நினைவு செய்கின்றீர்கள்? நான் உங்களைப் புதிய உலகிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். அங்கே துன்பம் எதுவுமே இல்லை. அங்கே தெய்வீகமான உறவுமுறைகளே உள்ளன. இங்கே, ஆண், பெண் என்ற உறவுமுறையில், முதலில் துன்பம் உள்ளது, ஏனெனில் அவர்கள் விகாரமானவர்கள் ஆகுகின்றனர். நான் இப்பொழுது உங்களை விகாரம் என்ற கேள்வியே இல்லாத அவ்வுலகிற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றேன். நினைவு கூரப்பட்டுள்ளது: “காமமே கொடிய எதிரி”. ஏனெனில் அது ஆரம்பத்தில் இருந்து, மத்தியூடாக, இறுதிவரை துன்பத்தையே கொடுக்கின்றது; நீங்கள் கோபத்தை ஆரம்பத்தில் இருந்து, மத்தியூடாக, இறுதிவரை துன்பத்தைக் கொடுக்கின்றது எனக் கூற மாட்டீர்கள்; இல்லை. நீங்கள் காமத்தை வெல்ல வேண்டும். ஏனெனில் இதுவே ஆரம்பத்தில் இருந்து, அதன் மத்தியூடாக, இறுதிவரை துன்பத்தைக் கொடுக்கின்றது; அது உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்றது. “தூய்மையின்மை” என்ற வார்த்தை விகாரத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. நீங்கள் அந்த எதிரியை வெற்றிகொள்ள வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தின் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இந்த நம்பிக்கையை நீங்கள் கொண்டிராதவரை, உங்களால் எதையுமே அடைய முடியாது. தந்தை குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் மிகச்சரியானவர்கள் ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள் என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, அவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். அவர்கள் அங்கே ஓர் உலகம், ஓர் இராச்சியம், ஒரு தர்மம், ஒரு மொழி இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றார்கள். உங்களால் விளங்கப்படுத்த முடியும்: ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே ஓர் இராச்சியமும் ஒரு தர்மமும் இருந்தன, அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. இராம இராச்சியம், இராவண இராச்சியம் பற்றி எவருமே அறியார். நீங்களும் அவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நீங்களும் இப்பொழுது செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாகச் சுத்தமான புத்தியுடையவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துவதால், நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: பழைய உலகில் வாழும்பொழுதும், தாமரை மலர் போல் தூய்மையாக வாழுங்கள். அத்துடன், தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள். தந்தை ஆத்மாக்களுக்கே விளங்கப்படுத்துகின்றார். நான் இந்த அங்கங்கள் மூலம் ஆத்மாக்களுக்குக் கற்பிக்க வந்துள்ளேன். இது ஓர் அழுக்கான, பழைய உலகமும், அவலட்சணமான சரீரமும் ஆகும். பிராமணர்களான நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் அல்ல. நீங்கள் புகழப்பட மாத்திரமே தகுதியானவர்கள். தேவர்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உலகைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் புகழப்படுகின்றீர்கள், ஆனால் பூஜிக்கப்படுவதில்லை. நிச்சயமாக, தேவர்கள் அன்றி, பிராமணர்களே புகழப்படுகின்றனர். தந்தை உங்களைச் சூத்திரர்களில் இருந்து, பிராமணர்களாக மாற்றுகின்றார். தேவர்களின் ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே தூய்மையானவை. ஆத்மாக்களான நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் தூய்மை ஆகுகின்றீர்கள்; உங்கள் சரீரங்கள் தூய்மையானவை அல்ல. இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். நீங்களும் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சதோபிரதான் ஆகவேண்டும். பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே, தந்தை அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். பிராமணர்களின் விருட்சம் தொடர்ந்தும் வளரும். உறுதியான பிராமணர்களாக ஆகுபவர்கள், பின்னர் தேவர்கள் ஆகுவார்கள். இது ஒரு புதிய விருட்சம், மாயையின் புயல்கள் அதைப் பாதிக்கின்றன. சத்தியயுகத்தில் எந்தப் புயல்களும் இருக்க மாட்டாது. இங்கே பாபாவின் நினைவில் நிலைத்திருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. பாபாவின் நினைவின் மூலமே நீங்கள் தமோபிரதானில் இருந்து, சதோபிரதான் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். நினைவிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. எவரேனும் வந்து, தங்களுக்குப் புராதன யோகத்தைக் கற்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டவர்கள் வேண்டுகிறார்கள். இரு வகையான யோகங்கள் உள்ளன: ஒன்று ஹத்த யோகிகளுடையது, மற்றையது இராஜ யோகிகளுடையது. நீங்கள் இராஜயோகிகள். மற்றையது பல நாட்களாகத் (நீண்ட காலம்) தொடர்கின்றது. நீங்கள் இப்பொழுது இராஜயோகம் பற்றி அறிவீர்கள். சந்நியாசிகள் இராஜயோகத்தைப் பற்றி எதனை அறிவார்கள்? தந்தை வந்து உங்களுக்குக் கூறியுள்ளார்: நான் வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன்; ஸ்ரீகிருஷ்ணரால் அதைக் கற்பிக்க முடியாது. இதுவே பாரதத்தின் புராதன யோகம். கீதையில் எனது பெயருக்குப் பதிலாக, அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். அது அனைத்தையும் அதிகளவு வேறுபடுத்தி விட்டது. சிவனின் பிறப்பு (அவதாரம்) இடம்பெறும் பொழுது, ஸ்ரீகிருஷ்ணரின் இராச்சியமாக இருக்கின்ற, உங்களுடைய வைகுந்தத்தின் பிறப்பும் இடம்பெறுகின்றது. சிவபாபாவின் பிறந்ததினம் இடம்பெறுகின்ற பொழுதே, கீதையின் பிறப்பும், பின்னர் வைகுந்தத்தின் பிறப்பும் இடம்பெறுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பின்னர் தூய்மை ஆகுவீர்கள். முன்னைய கல்பத்தில் நடந்தது போலவே, மிகச்சரியாக ஸ்தாபனை இடம்பெறுகின்றது. எனவே, சிவனின் பிறப்பு என்றால், சுவர்க்கத்தின் பிறப்பு என்பதாகும். பாபாவே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் என்னை நினைவு செய்யாததால், மாயை உங்களை ஓரிரு பாவங்களைச் செய்ய வைக்கின்றாள். நீங்கள் என்னை நினைவு செய்யாதுவிட்டால் அறையப்படுவீர்கள். நினைவில் நிலைத்திருப்பதனால், நீங்கள் அறையப்பட மாட்டீர்கள். இந்தக் குத்துச்சண்டை இடம்பெறுகின்றது. உங்கள் எதிரி ஒரு மனிதரல்ல, இராவணனே உங்கள் எதிரி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு குமாரும், குமாரியும் திருமணம் செய்த பின்னர், தூய்மை அற்றவர்களாகி, ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆகுகின்றனர். அவர்கள் திருமணத்திற்காக நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்கின்றனர். தந்தை கூறுகின்றார்: திருமணம் செய்வது என்றால், உங்களையே நீங்கள் அழித்துக் கொள்வதாகும். பரலோகத் தந்தை ஒரு கட்டளையை இடுகின்றார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. அதை வெற்றி கொண்டு, தூய்மைக்கான சத்தியத்தைச் செய்யுங்கள். எவருமே தூய்மை அற்றவர்கள் ஆகக்கூடாது. இவ்விகாரத்தினாலேயே நீங்கள் பிறவிபிறவியாகத் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள், இதனாலேயே காமம் கொடிய எதிரி என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் எனத் தந்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்களான நாங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்றோம் என்ற தூய பெருமையைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் பின்னர் சுவர்க்கத்தில் இராச்சியத்தை ஆட்சிசெய்வோம். நீங்கள் முயற்சி செய்யும் அளவிற்கேற்ப, ஓர் அரசராகவோ, அரசியாகவோ அல்லது ஒரு பிரஜையாகவோ ஆகுவதனால், ஓர் அந்தஸ்தைக் கோருவீர்கள். எவ்வாறு அரசர்களும், அரசிகளும் உருவாக்கப்படுகின்றார்கள் எனக் காண்கின்றீர்கள். நினைவு கூரப்பட்டுள்ளது: தந்தையைப் பின்பற்றுங்கள். இது தற்போதைய நேரத்தையே குறிக்கின்றது; இது லௌகீக உறவுமுறைகளை இட்டுக் கூறப்படவில்லை. இந்தத் தந்தை உங்களுக்கு ஒரு வழிகாட்டலைக் கொடுக்கின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் மிக நல்ல வழிகாட்டல்களைப் பின்பற்றி, பலருக்கும் சேவை செய்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் தந்தையிடம் வந்துள்ளதால், சிவபாபா உங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றார், இவரும் உங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றார். இவரும் கற்கின்றார். சிவபாபாவும் கூறுகின்றார்: நான் காலையில் வருகின்றேன். ஓகே. ஒருவர் என்னை சந்திக்க வரும்பொழுது, இந்தப் பிரம்மாவினால் எதையும் விளங்கப்படுத்த முடியாதா? “பாபா நீங்கள் வந்து விளங்கப்படுத்துங்கள்; நான் விளங்கப்படுத்த மாட்டேன்” என இவர் கூறுவாரா? இவை மிகவும் மறைமுகமான, ஆழமான விடயங்கள். என்னால் அனைவரையும் விட நன்றாக விளங்கப்படுத்த முடியும். சிவபாபாவினால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும் என்றும், இவரால் எதையும் விளங்கப்படுத்த முடியாது என்றும் ஏன் நீங்கள் நினைக்கின்றீர்கள்? முன்னைய கல்பத்திலும் இவர் விளங்கப்படுத்தினார், இதனாலேயே இவர் தனது அந்தஸ்தை அடைந்தார் என்பதை நீங்களும் அறிவீர்கள். மம்மாவும் விளங்கப்படுத்துவதுண்டு. அவரும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார். நீங்கள் அங்கே சூட்சும உலகில் பாபாவைக் காண்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். ஏழைகளே தங்களை அர்ப்பணிக்கின்றார்கள்; செல்வந்தர்களால் தங்களை அர்ப்பணம் செய்ய முடியாது. ஏழைகளே கூறுகின்றனர்: பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை. சிவபாபாவே அருள்பவர்; அவர் என்றுமே எதனையும் பெறுவதில்லை. அவர் குழந்தைகளான உங்களுக்குக் கூறுகின்றார்:இவை அனைத்தும் உங்களுடையது. நான் இங்கேயோ அல்லது அங்கேயோ எனக்காக ஒரு மாளிகையைக் கட்டுவதில்லை. நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றேன். நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தி எனும் மடிகளை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்ப வேண்டும். மக்கள் ஆலயங்களுக்குச் சென்று, “எனது மடியை நிரப்புங்கள்!” எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அது எந்த மடி, அது எதனால் நிரப்பப்பட வேண்டும்? இலக்ஷ்மியே அனைவரதும் மடியை நிரப்புபவர், ஏனெனில் அவர் பணத்தைக் கொடுக்கின்றார். மக்கள் சிவனிடம் செல்வதில்லை. ஸ்ரீகிருஷ்ணரே கீதையைப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் “எங்களது மடிகளை நிரப்புங்கள்!” என ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறுவதில்லை. அவர்கள் சங்கரரிடம் சென்று, இதைக் கூறுகின்றனர். சிவனும், சங்கரரும் ஒருவரே என அவர்கள் நம்புகின்றனர். சங்கரரே அவர்களின் மடிகளை வெறுமையாக்குபவர். எவராலும் எங்களது மடிகளை வெறுமையாக்க முடியாது. விநாசம் இடம்பெற வேண்டும். நினைவுகூரப்பட்டுள்ளது: இந்த உருத்திர ஞான யாகத்தில் இருந்தே விநாசத்தின் சுவாலைகள் வெளிப்பட்டன. எவ்வாறாயினும் எவருமே அதை நம்புவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இல்லறத்தில் வாழ்ந்து கொண்டு, உங்கள் வியாபாரத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரது நாடித் துடிப்பையும் உணர்ந்த பின்னரே, தந்தை அறிவுரை வழங்குகின்றார். ஏனெனில் ‘குழந்தைகளால் பின்பற்ற முடியாத அறிவுரையை நான் ஏன் கொடுக்க வேண்டும்?’ என அவர் உணர்கின்றார். அவர் ஒவ்வொருவரதும் நாடித் துடிப்பையும் உணர்ந்த பின்னரே அறிவுரை வழங்குகின்றார். நீங்கள் இவரிடம் வரவேண்டும்; இவர் உங்களுக்குச் சரியான அறிவுரையை வழங்குவார். “பாபா, இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?” என நீங்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? தந்தை உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புகின்றார். நாங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்பொழுது, நாங்கள் நரகவாசிகள். நீங்கள் இப்பொழுது நரகத்திலும் இல்லை, சுவர்க்கத்திலும் இல்லை. பிராமணர்கள் ஆகியுள்ளவர்களின் நங்கூரங்கள் இப்பொழுது இந்த அழுக்கான உலகிலிருந்து உயர்த்தப்பட்டு விட்டன. நீங்கள் இப்பொழுது கலியுக உலகின் கரையிலிருந்து நீங்கி விட்டீர்கள். நினைவு யாத்திரையில் சில பிராமணர்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்கின்றனர், சிலர் மெதுவாகச் செல்கின்றனர். சிலர் தந்தையின் கரத்தை விட்டு நீங்கும் பொழுது, மூச்சுத் திணறி, மூழ்கி விடுகின்றனர், அதாவது, அவர்கள் மீண்டும் கலியுகத்திற்குச் சென்று விடுகின்றனர். படகோட்டி இப்பொழுது உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பலவிதமான பௌதீக யாத்திரைகள் உள்ளன. உங்கள் யாத்திரை ஒன்றே, அது முற்றிலும் தனித்துவமானது. ஆம், புயல்களும் வரும், அவை உங்களின் நினைவைத் துண்டித்து விடுகின்றன. இந்த நினைவு யாத்திரையை மிகவும் உறுதியாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் கர்மயோகிகள். இயன்றளவிற்கு, உங்கள் கைகள் வேலை செய்யட்டும், உங்கள் இதயங்கள் நினைவில் இருக்கட்டும். நீங்கள் அரைக்கல்பமாகக் காதலிகளாக இருந்து, உங்கள் அன்பிற்கினியவரை நினைவுசெய்து வருகின்றீர்கள். பாபா, இங்கே எங்களுக்குப் பெருமளவு துன்பம் உள்ளது. இப்பொழுது எங்களைச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குங்கள்! நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்தால், உங்கள் பாவங்கள் முடிந்து விடும். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோரி, இப்பொழுது அதை இழந்து விட்டீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, இதனாலேயே மக்கள் புராதன பாரதம் பற்றிப் பேசுகின்றார்கள். மக்கள் பாரதத்திற்குப் பெருமளவு மரியாதை கொடுக்கின்றார்கள். ஏனெனில் அதுவே பெரியதும், பழமையானதும் ஆகும். விநாசம் முன்னால் உள்ளதை நீங்கள் அறிவீர்கள். அனைத்தையும் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்பவர்கள் உள்ளாரப் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்கள். கண்காட்சிகளுக்குப் பலரும் வருகின்றார்கள். எவ்வாறு பலவிதமான சாதுக்களும், புனிதர்களும் அகமதாபாத்துக்கு வந்தார்கள் எனப் பாருங்கள். “நீங்கள் உண்மையைக் கூறுகின்றீர்கள்” என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், தாங்கள் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பது அவர்கள் புத்தியில் பதிவதில்லை. அவர்கள் இங்கிருந்து சென்றதும், அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. தந்தை எங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார் என இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். அங்கே கருப்பை எனும் சிறையோ அல்லது மற்றைய சிறையோ இருக்க மாட்டாது. நீங்கள் அங்கே ஒரு சிறையின் அறிகுறியையேனும் பார்க்க மாட்டீர்கள். எந்தச் சிறையும் இருக்க மாட்டாது. இங்கே இவை அனைத்தும் மாயையின் பகட்டாகும். இந்நாட்களில் அனைத்தும் விரைவாகவே நடைபெறுகின்றது. மரணம் கூட தொடர்ந்தும் விரைவாக இடம்பெறுகிறது. சத்தியயுகத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் எதுவும் இருக்க மாட்டாது. இங்கே மரணம் விரைவாக இடம்பெறுவதுடன், பெருமளவு துன்பமும் இருக்கும்; அனைத்தும் முடிவடைந்து விடும். பூமி முழுவதுமே புதியதாகும். சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது, அது நிச்சயமாக மீண்டும் இருக்கும். நீங்கள் முன்னேறும் பொழுது, என்ன நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்பீர்கள். அது மிகவும் பயங்கரமான காட்சியாக இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளைக் கண்டிருந்தீர்கள். நினைவு யாத்திரையே குழந்தைகளுக்கான பிரதான விடயமாகும். இதுவே ஏறுகின்ற ஸ்திதிக்கான யாத்திரையாகும். அச்சா.

இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் பிராமணர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். கடவுள் பிராமணர்களான எங்களுக்கு மட்டுமே கற்பிக்கின்றார். நாங்கள் இப்பொழுது தேவர்களாகவுள்ள, பிராமணர்கள் ஆகுகின்றோம்.

2. உங்களின் மடிகளை இந்த ஞான இரத்தினங்களால் நிரப்பி, அவற்றைத் தானம் செய்யுங்கள். இந்தக் கலியுக, தூய்மையற்ற உலகின் கரையை நீங்கிச் செல்லுங்கள். மாயையின் புயல்களையிட்டுப் பயப்படாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் பிறப்புரிமையின் போதையைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் தகைமைகளை உங்களின் இலட்சியத்திற்குச் சமமாக ஆக்குகின்ற, மேன்மையான பாக்கியத்தைக் கொண்டவர் ஆகுவீர்களாக.

உங்களின் லௌகீக வாழ்க்கையில், உங்களின் பௌதீகச் செல்வம் உங்களின் பிறப்புரிமையாக உள்ளது. அதேபோல், இந்த பிராமணப் பிறவியில், நற்குணங்களின் செல்வம், ஆன்மீக சந்தோஷம் மற்றும் சக்திகள் உங்களின் பிறப்புரிமை ஆகும். உங்களின் பிறப்புரிமையின் போதையை நீங்கள் இயல்பான முறையில் கொண்டிருக்கும்போது, எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டிய தேவை இருக்காது. இந்த போதையைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் தகைமைகள் உங்களின் இலட்சியத்திற்குச் சமமானவை ஆகிவிடும். நீங்கள் உங்களை எத்தகையவரோ, என்ன செய்கிறீர்களோ அவ்வாறு அறிந்து ஏற்றுக் கொள்வதுடன் உங்களின் மேன்மையான தந்தையையும் குடும்பத்தையும் அறிந்து கொள்ளும்போது, நீங்கள் மேன்மையான பாக்கியத்தைக் கொண்டவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் ஆதி ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். உங்களால் இலகுவாக வெற்றி நட்சத்திரம் ஆகமுடியும்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

ஒரு விநாடியில் சத்தத்திற்குள் வாருங்கள், ஒரு விநாடியில் சத்தத்திற்கு அப்பால் செல்லுங்கள். ஒரு நிமிடம், சத்தத்தின் மத்தியில் இருங்கள், அடுத்த நிமிடம், சத்தத்திற்கு அப்பால் செல்லுங்கள். இந்தப் பயிற்சியானது எளிதாகவும் இலகுவாகவும் ஆகும்போது, முழுமை நெருங்கி வந்துள்ளது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இப்போது, உங்களின் ஒவ்வொரு பௌதீக அங்கமும் ‘ஆம் எனது பிரபுவே, உள்ளேன், எனது பிரபுவே’ எனக் கூறியவாறு தொடர்ந்து இயங்க வேண்டும். உங்களின் பௌதீக அங்கங்கள் அரச ஆட்சியாளர்களான உங்களை சதா வரவேற்கும்போது, அதாவது, தொடர்ந்து அவை உங்களுக்குத் தலைவணங்கும்போது, உங்களால் சம்பூரணமாக கர்மாதீத் ஆகமுடியும்.