19.04.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2009     Om Shanti     Madhuban


குடும்பத்தின் மீதுள்ள அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, ஞானம் நிறைந்தவராகவும் தந்தைக்குச் சமமானவராகவும் ஆகி, பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். உங்களின் புத்தியில் தந்தை, சுயம், நாடகம், குடும்பத்தின் மீது நம்பிக்கை வைத்து, வெற்றியாளர் ஆகுங்கள்.


இன்று, சக்திவாய்ந்த தந்தை, தனது சக்திசாலிக் குழந்தைகளைப் பார்க்கிறார். ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும் ஆழ்ந்த அன்புடன் தந்தைக்குச் சமமாக (பாப்சமான்) ஆகுவதற்காக முயற்சி செய்கின்றார். குழந்தைகளான உங்களைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து, தனது இதயத்தில் குழந்தைகளான உங்களின் அற்புதப் பாடல்களைப் பாடுகிறார்: ஆஹா குழந்தைகளே, ஆஹா! குழந்தைகளான நீங்கள் தந்தையின் தலைமீதுள்ள கிரீடம் ஆவீர்கள். குழந்தைகளான நீங்கள் இரண்டு வடிவங்களில் வழிபடப்படுகிறீர்கள். ஆனால் தந்தையோ ஒரு வடிவத்திலேயே வழிபடப்படுகிறார். எனவே, குழந்தைகளான நீங்கள் தந்தையின் மூலம், தந்தைக்கு முன்னணியில் செல்கிறீர்கள். இதனாலேயே, குழந்தைகளான உங்களின் முயற்சிகளைக் கண்டு தந்தை மகிழ்ச்சி அடைகிறார். ஆம், நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கிறீர்கள், எனினும், உங்களின் முயற்சிகளில் வைத்திருக்கும் இலட்சியம், உங்களை முன்னேறச் செய்கிறது.

இன்று, பாபா அமிர்த வேளையில், எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரிடமும் உள்ள இந்த ஞானத்தின் அத்திவாரமான ஒரு விடயத்தைக் கண்டார். நம்பிக்கையே அந்த அத்திவாரம் கூறப்பட்டுள்ளது: நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டுள்ளவர்கள், வெற்றியாளர்கள். எனவே, பாபா உங்கள் அனைவரிலும் நம்பிக்கையைக் கண்டார். ஆம், வரிசைக்கிரமமாக, அனைவரும் தந்தையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதன் அடையாளம், நீங்கள் அனைவரும் தந்தையை இனங்கண்டு, அவருக்குச் சொந்தமாகி உள்ளதுடன் இங்கே அவரைச் சந்திக்கவும் வந்துள்ளீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் மீது துண்டிக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளார். ஆனால், தந்தையின் மீதுள்ள நம்பிக்கையுடன் கூடவே, ஏனைய விடயங்களில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பலமானதாக இருக்க வேண்டும். உங்களின் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அத்துடன் கூடவே, நாடகத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நான்கு வகையான நம்பிக்கையிலும் உறுதியாக இருத்தல் என்றால், உங்களின் புத்திகளில் நம்பிக்கை வைத்திருத்தல் என்று அர்த்தம். அத்துடன் அதன் அடிப்படையில் வெற்றியாளர் ஆகவேண்டும். எனவே, சோதித்துப் பாருங்கள்: நான் இந்த நான்கு வகையான நம்பிக்கைகளிலும் உறுதியாக இருக்கிறேனா? தந்தையின் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் அனைவரும் சொல்கிறீர்கள்: ‘எனது பாபா, நான் தந்தைக்குச் சொந்தமானவன்’ தந்தையைப் பொறுத்தவரை நீங்கள் ‘எனது’ என்று கூறி, தந்தையின் மீது முழுமையான உரிமையைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் தந்தையின் மீது சதா உரிமையைப் பெற்றுள்ளதுடன் சகல பொக்கிஷங்களுக்கும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். அத்துடன் கூடவே, உங்களின் மீது நம்பிக்கை வைப்பதும் அத்தியாவசியம் ஆகும். ஏன்? உங்களின் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், நீங்கள் மனவிரக்தி அடைகிறீர்கள். சுயத்தின் மீது நம்பிக்கை என்றால்: நான் தந்தையால் எனக்கு வழங்கப்பட்ட சுயமரியாதையின் சொரூபமாக இருக்கிறேன், சுய இராச்சியத்திற்கான உரிமையை நான் கொண்டிருக்கிறேன். தந்தையே எனக்கு அதிகளவு சுயமரியாதையை வழங்கி உள்ளார். ஒவ்வொரு சுயமரியாதைக் கருத்தையும் உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள், நீங்கள் மிகவும் போதை அடைவீர்கள். தற்காலத்தில், மக்களுக்கு ஏதாவது பட்டம் கிடைத்தால், அவர்கள் அதைத் தமது பாக்கியமாகக் கருதுகிறார்கள். ஆனால், குழந்தைகளான உங்களுக்கு ஒவ்வொரு சுய மரியாதைக் கருத்தையும் வழங்கியவர் யார்? பாப்தாதா அவரே ஒவ்வொரு குழந்தையையும் சுய மரியாதையின் சொரூபமாக ஆக்கியுள்ளார். சுயமரியாதையின் ஒவ்வொரு கருத்தையும் நினைப்பதன் மூலம், உங்களால் சந்தோஷத்துடன் பறக்க முடியும். எனவே, சதா உங்களின் மீது இந்தளவு நம்பிக்கையின் போதையைக் கொண்டிருங்கள்: நான் தந்தையினூடாக சுய இராச்சிய அதிகாரத்தைக் கொண்டுள்ள கோடானுகோடி ஆத்மாக்களில் ஒருவன், நான் சுயமரியாதையின் சொரூபம் ஆவேன். எப்படி உங்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அவ்வாறே, உங்களின் மீது நம்பிக்கை வைப்பதும் அத்தியாவசியம் ஆகும். ஏனென்றால், உங்களின் மீதே உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்போது, உங்களின் ஒவ்வொரு செயலிலும் உங்களின் புத்தியில் நம்பிக்கை இருக்கும். அதாவது, உங்களிடம் சுயமரியாதை இருக்கும். அதனால் நீங்கள் வெற்றியாளர்களாக இருப்பீர்கள். நம்பிக்கையின் அர்த்தம் வெற்றி ஆகும். எனக்குத் தந்தையின் மீது நம்பிக்கை இருக்கிறது என்பதல்ல. உங்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை இருப்பது மிகவும் நல்லது. ஆனால், தந்தையின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதுடன் கூடவே, நான் யார் என்ற போதையைக் கொண்டிருப்பதும் அவசியம். சுயமரியாதையின் ஒவ்வொரு கருத்தையும் நினைவு செய்யுங்கள். அப்போது நம்பிக்கையும் போதையும் உங்களின் செயல்பாடுகளிலும் உங்களின் முகத்திலும் புலப்படும். அது புலப்படுகிறது, அது தொடர்ந்தும் புலப்படும். இத்துடன் கூடவே, நாடகத்தில் நம்பிக்கை வைத்திருப்பதே மூன்றாவது விடயம் ஆகும். இதுவும் அவசியம். ஏனென்றால், நாடகத்திற்குள் பிரச்சனைகளும் உள்ளன, வெற்றியும் உள்ளது. உங்களுக்கு நாடகத்தின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால், புத்திகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், தமது நம்பிக்கையின் அடிப்படையில், அந்தப் பிரச்சனைகளை ஏதாவது தீர்வுகளின் ரூபமாக மாற்ற முடியும். ஏனென்றால், நம்பிக்கை என்றால் வெற்றி என்று அர்த்தம். எனவே, நீங்கள் எதில் வெற்றி அடைவீர்கள்? அதை மாற்றுவதன் மூலம், எந்தவொரு பிரச்சனையும் ஒரு விநாடியில் ஒரு தீர்வின் வடிவத்தைப் பெற்றுவிடும். அப்போது உங்களுக்குள் எந்தவிதமான குழப்பமும் ஏற்படாது. நீங்கள் அசைக்க முடியாதவராக இருப்பீர்கள். ஏனென்றால், நாடகத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுகிறீர்கள். சென்ற கல்பத்திலும் நீங்கள் தீர்வுகளின் சொரூபமாக இருந்தீர்கள், அதாவது, நீங்கள் ஒரு வெற்றிநிறைந்த ஆத்மா, இப்போதும் நீங்கள் அப்படி இருக்கிறீர்கள், ஒரு கல்பத்தின் பின்னரும் நீங்கள் அப்படி ஆகப் போகின்றீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. எனவே, இந்த போதை உங்களை நாடகத்தின் மீது மிகவும் உறுதியான நம்பிக்கை அடையச் செய்கிறது. உங்களுக்கு இந்த ஆன்மீகப் போதையும் (ஃபக்கூர்), போதையும் (நஷா) ஏற்படுகிறது: நான் அப்படி இருந்தேன், நான் இப்படி இருக்கிறேன், நான் அப்படி ஆகுவேன். ஆகவே, இந்த முயற்சி செய்யும் இந்த வாழ்க்கையில் நாடகத்தில் நம்பிக்கை வைப்பது அவசியமானது. அத்துடன்கூடவே, நான்காவது விடயம், குடும்பத்தின் மீது நம்பிக்கை வைத்தல். ஏனென்றால், தந்தை வந்தவுடனேயே இந்தக் குடும்பத்தை உருவாக்கினார். எப்படி உங்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அதேபோல், குடும்பத்திலும் நம்பிக்கை வைப்பது அவசியம். ஏனென்றால், இது யாருடைய குடும்பம்? வேறு யாருக்கு இத்தகைய பெரிய குடும்பம் இருக்க முடியும்? குடும்பத்தின் மீது நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், இந்த உலகில் வேறு யாரிடம் இத்தகையதொரு பெரிய குடும்பம் இருக்க முடியும்? உலகில் நீங்கள் விரும்பிய அளவு பல குடும்பங்களைச் சோதித்துப் பார்க்க முடியும்: யாரிடமாவது இத்தகைய குடும்பம் இருக்க முடியுமா? ஒரு தெய்வீகத் தந்தைக்குக்கூட இத்தகைய பெரிய குடும்பம் இல்லை. ஏனென்றால், அவர்களுக்குச் சீடர்கள் இருக்கிறார்கள், ஆனால் இங்கே இது ஒரு குடும்பம் ஆகும். இந்தக் குடும்பத்துடனேயே, நீங்கள் தொடர்ந்து சேவை செய்கிறீர்கள், உறவுமுறைகளைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தந்தையுடன் மட்டுமே தொடர்பு இருக்கிறது, அதனால் குடும்பத்துடன் உங்களுக்குத் தொடர்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என்பதல்ல. குடும்பத்தின் மீதான உங்களின் நம்பிக்கை, 21 பிறவிகளுக்குத் தொடர வேண்டும். உங்களுக்குத் தெரியும், அல்லவா? உங்களின் புத்தியிலுள்ள நம்பிக்கையுடன் நீங்கள் அறிந்து கொண்ட இந்தக் குடும்பத்துடன் தொடர்பில் வருவதன் மூலம், இந்தப் பெரிய குடும்பத்தில் உள்ள அனைவருடனும் நன்கு பழகுகிறீர்கள். குடும்பத்துடன் நன்றாகப் பழகுவதற்கு, நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கிறார்கள், கொண்டிருப்பார்கள். மாலையே உங்களின் ஞாபகார்த்தம் ஆகும். நீங்கள் அந்த மாலையைப் பார்த்தால், உங்களால் முதல் இலக்கத்தையும் 108 ஆம் இலக்கத்தையும் பார்க்க முடியும். ஏனென்றால், அவர்கள் இந்தக் குடும்பத்தில் வெவ்வேறு சம்ஸ்காரங்களைக் கொண்டவர்கள். எனவே, நீங்கள் இந்தப் பெரிய குடும்பத்தில், ஒருவர் மற்றவரின் சம்ஸ்காரங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் செயல்பட வேண்டும். இது ஒரு குடும்பம், ஒரு தந்தை, ஓர் இராச்சியம், அதனால் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது ஒரு பெரிய குடும்பமாக இருப்பதைப் போல், நீங்கள் அனைவருடனும் பெரிய இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும், அனைவருக்கும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் அனைவருடனும் பழக வேண்டும். ஏனென்றால், இந்தக் குடும்பத்திற்குள் சம்ஸ்காரங்களும் சுபாவங்களும் உள்ளன. சிலர் நினைக்கலாம்: குடும்பத்தைப் பற்றி என்ன கவலை? எனக்கு பாபாவின் மீது நம்பிக்கை உள்ளது. எவ்வாறாயினும், இங்கே, தர்மம், இராச்சியம் இரண்டும் ஸ்தாபிக்கப்படுகின்றன. இது ஒரு தர்மம் மட்டுமல்ல. இங்கு வந்த ஏனைய மதத்தாபகர்கள் அனைவரும் ஒரு மதத்தை மட்டும் ஸ்தாபித்தார்கள், ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கவில்லை. இங்கே, நீங்கள் அனைவரும் ஆட்சி செய்யப் போகின்றீர்கள். ஓர் இராச்சியத்தில், ஒரு குடும்பமும் தேவைப்படுகிறது. நீங்கள் 21 பிறவிகளுக்கு வெவ்வேறு ரூபங்களில் குடும்பத்துடன் வாழ வேண்டும். உங்களால் குடும்பத்தை விட்டு, வேறு எங்கேயும் செல்ல முடியாது. எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். ‘தந்தைக்குத் தெரியும், எனக்குத் தெரியும்’ என்று நினைக்காதீர்கள். அனைத்தும் தந்தையைப் பற்றியதே, ஆனால், இந்த நான்கு வகையான நம்பிக்கைகளில் ஒரு வகையான நம்பிக்கை குறைவாக இருந்தாலும், தளம்பல் ஏற்படும். ஆம், தந்தை சகாஷ் கொடுப்பதற்காக உங்களின் சேவை சகபாடி ஆகியுள்ளார். ஆனால், உங்களுடைய சகபாடிகள் யார்? உங்களுக்கு இருக்கும் பௌதீகமான சகவாசம் இந்தக் குடும்பமே ஆகும். எனவே, உங்களில் பெரும்பாலானோர் மூன்று வகையான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதுடன் மிக நன்றாக முன்னேறுவதைத் தந்தை கண்டார். எனினும், நீங்கள் குடும்பத்திற்கான உங்களின் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைக்க வேண்டும். நீங்கள் உபகார உணர்வுகளுடன் பார்த்து, ஒருவரோடு ஒருவர் பழக வேண்டும். இதில் பல குழந்தைகள் தமது கொள்ளளவிற்கேற்பவே செயல்படுகிறார்கள். எவ்வாறாயினும், குடும்பத்தின் மீதும் நம்பிக்கை வைப்பதில் ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதுடன், சதா முன்னேறி, தந்தையைப் போல் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியுடன் வாழ்பவர்களே முதல் இலக்கத்தில் வருவார்கள் அல்லது முதல் இலக்கப் பிரிவில் வருவார்கள். எனவே சோதித்துப் பாருங்கள்: சுபாவமும் நோக்கங்களும் ஒரு குடும்பத்திற்குள் உள்ளன, ஒரு குடும்பத்திற்குள் அற்பமான தவறுகள் நடக்கின்றன, குடும்பத்தைப் பொறுத்தவரை தடைகள் வருகின்றன. எனவே, இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை சித்தி அடைவது மிகவும் அத்தியாவசியமானது.

குடும்பத்துடன் பழகும்போதும் உங்களின் பொறுப்பை நிறைவேற்றும்போதும் ஏதாவது குறைவாக இருந்தால், அது சிறிய அல்லது பெரிய தடையாக இருந்தாலும் அது பிரச்சனையை உருவாக்கும். குடும்பத்துடன் தொடர்பில் மட்டுமே கேள்விகள் எழுகின்றன: ‘இது ஏன் இப்படி உள்ளது? எப்படி இது இருக்க முடியும்?’ அதனால், ‘ஏன்?’ என்று கேட்பதற்குப் பதிலாக, நீங்கள் இணைந்து செயல்பட்டு, ஒரு குடும்பத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணருங்கள். ஏனென்றால், இது தந்தையின் குடும்பம் ஆகும். இது இறைகுடும்பம், இது சாதாரணமான ஒரு குடும்பம் அல்ல. நம்பிக்கை வையுங்கள்: ‘ஆஹா பாபா! ஆஹா நாடகமே! ஆத்மாவான நான் ஆஹா! ஆஹா குடும்பம்!’ இது சரிதானே? நீங்கள் இதைச் சோதித்தீர்களா? நீங்கள் நான்கிலும் சித்தி அடைந்தீர்களா? நான்கிலுமா? ஒன்றிலேனும் குறைவாக இல்லையே? இதைச் சோதித்துப் பாருங்கள்! இப்போதே இதைச் சோதியுங்கள், ஏனென்றால், வெற்றியாளர் ஆகுவதற்கான ஒரேயொரு வழிமுறை இதுவே ஆகும். குடும்பத்திற்குள்ளேயே சம்ஸ்காரங்கள் வெளிப்படும். அந்த சம்ஸ்காரங்களை ஒத்திசையச் செய்வதற்கு, நீங்கள் அந்த சம்ஸ்காரங்களை மாற்ற வேண்டும். அத்துடன் மேன்மையான பார்வையுடன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும். கடைசிக் குழந்தையையும் அதி பாக்கியசாலியாகவே பாப்தாதா பார்க்கிறார் என பாப்தாதா உங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். ஏன்? அவர் இறைவனை இனங்கண்டுள்ளார். அவர் சாதாரணமான ரூபத்தில் உள்ள தந்தையை இனங்கண்டுள்ளார். அந்தப் பெரிய மகாத்மாக்களாலும் இறைவனை இனங்காண முடியவில்லை. ஆனால், பாப்தாதாவின் கடைசிக் குழந்தையும் கூறுகிறார்: எனது பாபா. அவர் தனது இதயபூர்வமாக, ‘எனது பாபா’ எனக் கூறுகிறார். பாப்தாதா குழந்தைகளுக்கு அன்பையும் அத்துடன் அன்பான நினைவுகளையும் வழங்குவதைப் போன்று, கடைசிக் குழந்தையின் சிறப்பியல்பைப் பார்க்கும்போதும் அவர் அதையே கடைசியில் இருப்பவர்களுக்கும் வழங்குகிறார். எனவே, நீங்கள் மூன்றில் அல்லது நான்கிலும் அல்லது வெறுமனே இரண்டில் அல்லது ஒன்றில் ஓகேயா என்பதைச் சோதித்துப் பாருங்கள். சோதித்து விட்டீர்களா? நீங்கள் சோதித்தீர்களா? தந்தை, சுயம், நாடகம், குடும்பம் என்ற நான்கிலும் நம்பிக்கை வைத்திருப்பதில் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள், நான்கிலும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் ஓகேயா? நீங்கள் ஓகேயா? பாபா உங்களைச் சோதிக்கட்டுமா? ஆம், அவற்றை உயர்த்துங்கள்! ஓகே? குடும்பம் என்ற பாடத்தில் நீங்கள் சித்தி அடைந்து விட்டீர்களா? நீங்கள் குடும்பத்துடன் ஓர் உறவுமுறையைப் பேண வேண்டும். ஏனென்றால், நீங்கள் குடும்பத்தை விட்டுச் செல்லப் போவதில்லை, நீங்கள் குடும்பத்தில் வாழ்ந்தவண்ணம் உங்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். எனவே, நீங்கள் இதில் சித்தி அடைந்து விட்டீர்களா? ‘இவர் இங்கே இல்லாவிட்டால் நன்றாக இருக்கும், இவர் ஏன் இதைச் செய்கிறார்? இது ஏன் நடக்கிறது?’ என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றுகின்றனவா? குடும்பத்தை இட்டு இத்தகைய முழுமையான போதை உங்களுக்கு இருக்கிறதா? நான்கிலும் நம்பிக்கை உடைய ஒருவர், ‘இது இப்படி’ அல்லது ‘அது அப்படி’ என்ற எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார். ‘இது ஏன் இப்படி நடந்தது?’ என்று உங்களின் எண்ணங்களில் பிரவேசிக்கக்கூடும். ஆனால், ஏன்? அல்லது என்ன? என்ற கேள்விகள் உங்களை அசைக்கக்கூடாது. அது உங்களின் மனோநிலையை மாற்றக் கூடாது. இதுவே நான்கிலும் சித்தி அடைதல் எனப்படுகிறது. நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தி பாப்தாதாவை மகிழ்ச்சி அடையச் செய்தீர்கள். ஆனால், குடும்பம் என்று வரும்போது, பாப்தாதா சிலவேளைகளில் அதிகமானவற்றைக் கேட்கவும் பார்க்கவும் வேண்டியுள்ளது. நீங்கள் முற்றிலும் பெரிய இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும். அனைவரும் நல்லாசிகளுடனும் தூய உணர்வுகளுடனும் சரியாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இது ஒரேயொரு குடும்பம் ஆகும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாகப் பழக வேண்டும், அத்துடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்ய வேண்டும். நீங்கள் மட்டும் இந்த முறையில் முன்னேறுவதாக இருக்கக்கூடாது. ஆனால், இதேபோன்று மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். ஏனென்றால், இதனாலேயே பாப்தாதா உங்களின் கவனத்தை இதில் ஈர்க்கிறார்: குடும்பத்தில் இருந்து, எந்தவொரு குழப்பத்திலும் சித்தி அடைபவர்களும் எந்தவிதமான வீணானவற்றைக் கொண்டிராதவர்களும் மற்றவர்களையும் அவ்வாறே ஆக்க வேண்டும். தற்சமயம், உங்களில் எத்தனை பேர் உங்களின் நிலையங்களில் வசிக்கிறீர்கள்? அதிகபட்சம், 25 இலிருந்து 50 பேராக இருக்கக்கூடும். அவ்வளவு பேர்கள் இல்லை. எனினும், அது ஒரு பெரிய இடமாக இருந்தால், 50 இலிருந்து 60 பேர் வரை இருக்கக் கூடும். அல்லது, ஆகக்கூடியது 100 பேர் இருக்கக்கூடும். அவ்வளவு பேர்கள் இல்லை, ஆனால் அவ்வளவு பேர் இருப்பதாகக் கருதுங்கள். நிலையங்கள் அனைத்திலும் உள்ள குழந்தைகளான உங்களை, அவர் கடைசிக் குழந்தையாக இருந்தாலும், நீங்கள் ஓர் அன்பான குழந்தை எனக் கூறி பாப்தாதா முன்னேறச் செய்கிறார். அன்பின் அடையாளம் என்ன? ஒவ்வொரு நாளும் பாப்தாதா உங்களுக்கு வழங்குகின்ற அன்பும் நினைவும் என்ன? இனிமையான, இனிமையான குழந்தைகளே (இனிமையிலும் இனிமையான குழந்தைகளே). புளிப்பான குழந்தைகள் இருப்பதை அறிந்திருந்தாலும், பாப்தாதா எப்போதாவது, இனிமையான மற்றும் புளிப்பான குழந்தைகளே என்று அன்பும் நினைவுகளும் வழங்கி இருக்கிறாரா? அவர்களையும் அவர் அன்பானவர்கள் என்றே அழைக்கிறார். அவர் இதைக் கூறுவது மட்டுமல்ல, ஆனால் அந்தக் குழந்தை ‘எனது குழந்தை’ என்று அவர் நம்புகிறார். அந்தக் குழந்தையைத் தனக்குச் சொந்தமானவர் என்ற உணர்வுடன் அவர் முன்னேறச் செய்கிறார். ஏனென்றால், இந்த நாடகத்திலும் மாலையிலும் அனைவரும் முதல் இலக்கம் ஆகமுடியாது, அதுவே பெறுபேறு என்பதை அவர் அறிவார். வெவ்வேறு சம்ஸ்காரங்கள் உள்ளன, அப்படி இருக்கவே வேண்டும். இல்லாவிட்டால், அனைவரும் அரசர்கள் ஆகிவிடுவார்கள். அப்போது யார் பிரஜைகளாக இருப்பார்கள்? நீங்கள் யாரை ஆட்சி செய்வீர்கள்? நல்லவர்களும், இராஜரீகமானவர்களும் தேவைப்படுகிறார்கள். இது ஓர் இராச்சியம். இந்த முறையில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துப் பாருங்கள். ஒரு குடும்பத்தில், ஒருவரிடம் ஏதாவதொரு விடயத்தில் தீய சம்ஸ்காரங்கள் காணப்படலாம். ஆனால் உங்களின் சம்ஸ்காரங்கள் எவை? ஒருவரின் தீய சம்ஸ்காரங்களைப் பார்க்கும்போது, உங்களின் சம்ஸ்காரங்களும் தீயவை ஆகினால், நீங்களும் தீயவர்கள் ஆகிவிடுவீர்கள். அந்தத் தீயது நல்லதைப் பாழாக்கிவிடும்.

ஸ்தாபனையின் வேளையில், பாப்தாதா ஒன்றுசேர்த்து, 350 இலிருந்து 400 பேர்களைப் பராமரித்தார். தற்சமயம், எவரின் குடும்பமும் இப்படி ஒன்றாக வசிப்பதில்லை. ஓகே, உங்களுக்கு வெவ்வெறு கடமைகள் இருக்கக்கூடும். ஆனால் அது ஒரு கடமை. ஒரு குடும்பத்திலும் கடமைகள் உள்ளன. சாதாரணமான குடும்பத்தில், சாதாரணமான கடமைகள், நீங்கள் உங்களின் நாளை சாதாரணமான முறையில் கழிக்கிறீர்கள். இது அப்படி அல்ல. இது ஒரு தனித்துவமான, அழகான குடும்பம். நீங்கள் இதில் குழப்பத்திற்கு உள்ளாகி, அவர் அதைச் செய்ததால் அது நடந்தது, அவர் அதைச் செய்ததால் இது நடந்தது என்று சாக்குப்போக்குக் கூறுவது என்றால்……. எவ்வாறாயினும், தந்தை எந்தவிதமான எதிர்ப்பிற்கும் முகங்கொடுக்கவில்லையா? விட்டுச் சென்றவர்கள் பலர் இருந்தனர். அது எதிர்ப்பு இல்லையா? அப்படி இருந்தும், சிலர் விட்டுச் சென்றிருந்தாலும், தந்தை கூறினார்: ‘அவர்களுக்கு தோளி அனுப்பி, அவர்களைத் திரும்பவும் அழைத்து வர முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குச் சேவை செய்து, அவர்களுக்கு நினைவூட்டுங்கள்’. எனவே, நீங்கள் நான்கு வகையான நம்பிக்கையையும் கொண்டிருப்பதில் சித்தி அடைய வேண்டுமா அல்லது மூன்றில் அல்லது இரண்டில் போதுமா? நீங்கள் முதலாம் இலக்கத்தைப் பெற வேண்டும். இதற்கு, விநாசத்திற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், விநாசம் இடம்பெறுவதற்காகக் காத்திருக்கிறது. இயற்கையும் தந்தையிடம் வருகிறது. இயற்கை - பஞ்சபூதங்கள் கூறுகின்றன: இப்போது இந்தச் சுமையைத் தாங்க முடியவில்லை. பஞ்சபூதங்களும் சுமையில் இருந்து விடுபடவே விரும்புகின்றன. மாயையும் கூறுகிறாள்: எனது பாகம் இப்போது முடிவடையப் போகிறது என்பதை நான் அறிவேன், ஆனால் பிராமணக் குடும்பத்தில் அற்ப விடயங்களுக்காக எனது சகபாடிகள் ஆகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் என்னைத் தங்களுடன் இருத்திக் கொள்கிறார்கள். உங்களின் சொந்த இராச்சியத்தை ஏற்படுத்துவதில், இந்த நான்கு விடயங்களிலும் நம்பிக்கை இன்னமும் சதவீதத்திலேயே உள்ளது. இதனாலேயே, காலமும் காத்திருக்கிறது. எவ்வாறாயினும், மாயையும் இயற்கையும் தயாராகவே உள்ளன. இப்போது கூறுங்கள்: பாபா அவர்களுக்கு ஒரு கட்டளை இடட்டுமா? குழந்தைகளான நீங்கள் என்றும் தயாராக இல்லாமல் இருக்கும்போது, பாபா மாயைக்கும் இயற்கைக்கும் இந்தக் கட்டளையைக் கொடுக்கட்டுமா? அவர் அதைச் செய்யலாமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் தயாரா? வெறுமனே உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள்! ஒரு பரீட்சை வரும், பரீட்சைத்தாள் வரும். நீங்கள் என்றும் தயாரா?

இப்போது, ஒவ்வொரு குழந்தையும் ‘கெய்ஸே?’ (எப்படி) என்பதை முடித்து, அதற்குப் பதிலாக ‘எய்ஸே!’ (இப்படி!) எனக் கூற வேண்டும் என்றே பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். ‘எப்படி நான் இதைச் செய்வது? இது எப்படி நடக்கும்?’ என்பதல்ல. அதற்குப் பதிலாக, ‘இப்படித்தான்’ என்று இருக்க வேண்டும். ‘நான் என்ன செய்வது?’ என்பதல்ல. ஆனால், ‘இதை இப்படிச் செய்யுங்கள்’ என்றிருக்க வேண்டும். இந்த நம்பிக்கையை எப்போது நீங்கள் பூர்த்தி செய்வீர்கள்? உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? அனைவரும் தயார் ஆகவேண்டும். நீங்கள் தயாராகி, உங்களின் கைகளை உயர்த்தினால், உங்களின் கடமை என்ன? ஒருவரை ஒருவர் உங்களுக்குச் சமமாக ஆக்குவதே ஆகும்.

இடம்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளின் அனைத்துச் செய்திகளின் பெறுபேற்றை பாப்தாதா செவிமடுத்தார். அவை நன்றாக இருந்தன, பெறுபேறும் அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் நிறைந்து நன்றாக இருந்தது. ஆகவே, இது நடக்கவே வேண்டும், நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தை இப்போது வைத்திருங்கள். நிறைவை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். நீங்கள் சிறிது தளம்பினாலும், நிறைவு சிறிது அப்பால் சென்றுவிடும். நீங்கள்தான் நிறைவை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், ஆட்சி செய்பவர்கள் தயாராக இல்லாவிட்டால் காலம் என்ன செய்யும்? ஆகவே, இப்போது சாக்குப் போக்குகள் சொல்வதை அல்லது காரணங்கள் சொல்வதை நிறுத்துங்கள். தீர்வை முன்னால் வையுங்கள். துன்பத்தில் வேதனைப்படுபவர்களுக்கு செய்தியை வழங்கி, அவர்களை விடுவிப்பதே உங்கள் அனைவரின் இலட்சியம் ஆகும். அவர்களை விடுவிக்காமல் உங்களால் முக்தி அடைய முடியாது. அதனால் அவர்களை விடுவியுங்கள்! தந்தை வந்துள்ளார், எனவே, அவர் முழு உலகிலும் உள்ள குழந்தைகளுக்கும் ஆஸ்தியை வழங்குவார், அப்படியல்லவா? அவர் உங்களுக்கு ஜீவன்முக்தி என்ற உங்களின் ஆஸ்தியை வழங்குவார், ஆனால் அனைவருமே அவரின் குழந்தைகளே. அவர்களுக்கும் அவர்களின் ஆஸ்தியை அவர் வழங்க வேண்டும், அல்லவா? எனவே, அவர்களின் ஆஸ்தி முக்தியும் உங்களின் ஆஸ்தி, ஜீவன்முக்தியும் ஆகும். அவர்களுக்கு நீங்கள் முக்தி கொடுக்கும்வரை, உங்களாலும் திரும்பிச் செல்ல முடியாது. இதற்கு, இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் 12 தடவைகள் ஒரு தேவதை ஆகுங்கள், 12 தடவைகள் அசரீரி ஸ்திதியில் இருங்கள். இரவும் பகலும் சேர்ந்து 24 மணிநேரம் உள்ளது. எனவே, நீங்கள் இந்த அப்பியாசத்தை 24 தடவைகள் செய்ய வேண்டும். தூங்கும் வேளையில் நீங்கள் தூங்கலாம். உங்களைத் தூங்க வேண்டாம் என்று பாப்தாதா சொல்லவில்லை. தூங்குங்கள், ஆனால், இதை நாள்பொழுதில் அதிகரியுங்கள். ஏதாவது விழாக்கள் இருக்கும்போது, நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்வீர்கள். நீங்கள் விழித்திருப்பீர்கள், அல்லவா? எனவே, இந்த அப்பியாசத்தைச் செய்வதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். அச்சா.

தந்தையின் மீது அன்பு வைத்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் - ஏனென்றால், அன்பு வைத்திருப்பவர்கள் நிச்சயமாக ஒத்துழைப்பார்கள், அந்த அன்பின் பிரதிபலனாக நடைமுறையில், ஒவ்வொரு பணியிலும் அவர்கள் நிச்சயமாக ஒருவரோடு ஒருவர் தமது சரீரங்கள், மனங்கள், செல்வம் மற்றும் உறவுமுறைகளால் ஒத்துழைப்பார்கள் - இத்தகைய சதா தந்தையின் அன்பிலே திளைத்திருக்கும் அன்பான, ஒத்துழைக்கும் குழந்தைகளுக்கு, அன்பாக இருப்பவர்கள் மட்டுமல்ல, ஆனால் அன்பிலே மூழ்கியிருப்பவர்களுக்கு, அத்துடன் தமது நேரம் மற்றும் எண்ணங்களைத் தந்தையின் பணிகள் அனைத்திற்கும் எப்போதும் பயன்படுத்துபவர்களுக்கு - ஏனென்றால், சங்கமயுகத்தில், உங்களின் நேரமும் எண்ணங்களும் அதிக பெறுமதி வாய்ந்தவை - இந்த ஒரு பிறவியில் பல பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்குபவர்களுக்கும் காலத்திற்கேற்ப ஒவ்வொரு நற்குணத்தையும் ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்தும் தீவிர முயற்சியாளர்களுக்கும் நற்குணங்களாலும் சக்திகளாலும் நிரம்பியுள்ள குழந்தைகளான உங்களுக்கும் அதிக, அதிக, கோடானுகோடி மடங்கு அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சட்டத்தை உருவாக்குபவரும் அத்துடன் ஆசீர்வாதங்களை அருள்பவரும் ஆகுவதன் மூலம் கருணைநிறைந்தவராகி, ஆத்மாக்கள் அனைவரையும் சக்தியால் நிரப்;புவீர்களாக.

ஓர் ஆத்மாவிற்கு ஏதாவது ஆசை இருந்து, அவருக்கு அந்த ஆசை இருந்தாலும், அவருக்குத் தான் விரும்பியதை அடையவதற்கான தைரியம் இருக்காவிட்டால், அத்தகையதோர் ஆத்மாவிற்கு, சட்டத்தை உருவாக்குபவராக ஆகுவதுடன், அதாவது, இந்த ஞானத்தை அருள்பவர் ஆகுவதுடன், கருணை நிறைந்தவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகுங்கள். அந்த ஆத்மாவிற்கு உங்களின் நல்லாசிகள் என்ற மேலதிக சக்தியை வழங்குங்கள். எவ்வாறாயினும், உங்களின் ஒவ்வோர் எண்ணமும் தந்தையிடம் அர்ப்பணிக்கப்பட்டால் மட்டுமே உங்களால் இத்தகைய ஆசீர்வாதங்களை அருள்பவரின் சொரூபம் ஆகமுடியும். உங்களின் ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வோர் எண்ணத்தையும் ஒவ்வொரு செயலையும் அர்ப்பணிப்பதற்காக நீங்கள் செய்த சத்தியத்தை நிறைவேற்றுங்கள்.

சுலோகம்:
உங்களின் உண்மையான ரூபத்தை உணர்ந்தவராக இருங்கள், உங்களிடம் சத்தியத்தின் சக்தி இருக்கும்.

அவ்யக்த சமிக்கை: மேன்மை ஆகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.

பாப்தாதா இப்போது குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் நெற்றியிலும் சம்பூரணமான தூய்மையின் இரத்தினம் பிரகாசிப்பதைக் காண விரும்புகிறார். உங்களின் கண்கள் சதா ஆன்மீகத்தால் பிரகாசிப்பதையும் இனிமையான, விலைமதிப்பற்ற வார்த்தைகளைக் கேட்கவும் உங்களின் செயல்களில் திருப்தியையும் பணிவையும் காணவே அவர் விரும்புகிறார்.