19.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பீர்களாக! நடக்கும் பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் தொடர்ந்தும் இதைப் பயிற்சி செய்யுங்கள், நீங்கள் தொடர்ந்தும் பெருமளவில் முன்னேற்றம் அடைவீர்கள்.

கேள்வி:
எக்குழந்தைகளின் புத்தியால் தந்தையை மிகச்சரியாக நினைவுசெய்ய முடியும்?

பதில்:
தந்தையை மிகச்சரியாக இனங்கண்டு கொண்ட குழந்தைகளால் ஆகும். ஒரு புள்ளியை நினைவு செய்வது எவ்வாறு சாத்தியம் எனச் சில குழந்தைகள் கேட்கின்றனர். பக்தி மார்க்கத்தில், மக்கள் அவரை அநாதியான, முடிவற்ற ஜோதியாகக் கருதியே நினைவு செய்து வருகின்றனர். இப்பொழுது, நீங்கள் அவரை ஓர் ஒளிப் புள்ளி எனக் கூறும்பொழுது, அவர்கள் குழப்பம் அடைகின்றனர். இதனாலேயே தந்தை அநாதியான, முடிவற்ற ஒளி அல்ல என்ற நம்பிக்கை முதலில் இருக்க வேண்டும். அவர் ஓர் அதி சூட்சுமமான புள்ளி என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டாலே, உங்களால் மிகச்சரியான நினைவைக் கொண்டிருக்க முடியும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். மன்மனாபவ! உண்மையில், இது ஒரு சமஸ்கிருத வார்த்தையல்ல. தந்தை உங்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பித்த பொழுது, அவர் சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. இவருக்கும் கூட சமஸ்கிருதம் தெரியாது. தந்தை ஹிந்தியிலேயே விளங்கப்படுத்துகின்றார். இந்த இரதம் ஹிந்தி, சிந்தி, ஆங்கில மொழிகளை அறிந்திருந்தாலும் தந்தை ஹிந்தியில் மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொருவரும் என்ன சமயத்தைச் சார்ந்திருந்தாலும், அவரவருக்கெனச் சொந்த மொழி உள்ளது. இங்கு, ஹிந்தி மொழி மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. இம்மொழியைப் புரிந்து கொள்வது இலகுவானது. இப்பாடசாலை அற்புதமானது: இங்கு கடதாசி, பென்சில் போன்றவை தேவையில்லை. இங்கு, நீங்கள் ‘ஒரு வார்த்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும், அதாவது தந்தையை நினைவு செய்யுங்கள்’ என்பதையாகும். கடவுள், ஈஸ்வரர் அல்லது பரமாத்மா பரமதந்தையை நினைவு செய்யாமல் இருப்பது எவருக்கும் சிரமமானது. அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். எனினும், அவர்கள் அவரைச் சரியாக இனங்காணவில்லை. தந்தையே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். சமயநூல்களில் சக்கரத்தின் காலப்பகுதியை நீண்டதாகக் காட்டியிருப்பது பற்றியும் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். இது ஒரு பெரிய விடயமல்ல. வயதான தாய்மாரும், கல்லுப் புத்தி உடையவர்களும் எதைப் புரிந்து கொள்வார்கள்? இது மிகவும் இலகுவானது. சிறு குழந்தைகளால் கூட இதைப் புரிந்து கொள்ள முடியும். “பாபா” என்ற வார்த்தை புதிய வார்த்தையல்ல. மக்கள் சிவாலயத்திற்குச் செல்லும் பொழுது, ‘அவர் சிவபாபா, அவர் அசரீரியானவர்’ என்பது அவர்களின் புத்திகளில் புகுகின்றது. மனிதர்கள் அனைவரும் “பாபா” எனக் கூறுகின்றனர். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே. சரீரத்தை ஏற்றிருக்கும் ஆத்மாக்கள் அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றனர். அனைத்துச் சமயத்தவர்களும் நிச்சயமாகப் பரமாத்மா பரமதந்தையை நினைவு செய்கின்றனர். அவரே பரந்தாமத்தில் வசிக்கின்ற தந்தையாவார். நாங்களும் அவ்விடத்து வாசிகளே. நாங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். மக்கள் தூய்மையாக விரும்புகின்றார்கள். அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! புதிய உலகம் தூய்மையாக இருந்தது, அது இப்பொழுது பழையதாகி விட்டது. எவருமே அதை இப்பொழுது புதியது என்று அழைப்பதில்லை. தேவர்கள் புதிய பாரதத்தை ஆட்சிசெய்தார்கள் என்பதைப் பாரத மக்கள் அறிவார்கள். புதிய பாரதத்திற்கு முன்னர் என்ன இருந்தது? சங்கம யுகம். அதை விடவும் இலகுவான பதிலொன்று உள்ளது: புதியதாக இருப்பதற்கு முன்னர், அது பழைய உலகமாக இருந்தது. மக்களால் சங்கம யுகம் பற்றி அவ்வளவு இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. பழைய உலகிற்கும், புதிய உலகிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியே சங்கமயுகம் எனப்படுகின்றது. தந்தைக்கே அவர்கள் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம். புதிய உலகில் எவருமே அழைப்பதில்லை. பாரதம் தூய்மையாக இருந்தது என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் புகுந்துள்ளது. “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” மக்கள் நீண்ட காலமாக இவ்விதமாக அழைக்கின்றனர். தூய்மையற்ற உலகம் எப்பொழுது முடிவடையும் என்பதை அவர்கள் அறியார்கள். அது மேலும் 40,000 வருடங்களுக்குத் தூய்மையற்றதாக இருக்கும் எனச் சமயநூல்களில் எழுதப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் காரிருளில் உள்ளனர். நீங்கள் இப்பொழுது வெளிச்சத்தில் உள்ளீர்கள். தந்தை இப்பொழுது உங்களை வெளிச்சத்தினுள் கொண்டு வந்துள்ளார். இந்த உலகச் சக்கரம் 5000 வருடங்களுக்குப் பின்னர் முடிவிற்கு வருகின்றது. நீங்கள் ஆட்சிபுரிந்தது நேற்றைய விடயமாகும். அது உண்மையில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது; அதுவே சுவர்க்கமாக இருந்தது. தூய உலகில் அனர்த்தங்கள் போன்ற எதுவும் இருக்க முடியாது. இராவண இராச்சியத்தில் மாத்திரமே அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. தந்தை இங்கு உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், நீங்கள் அவர் கூறுவதை நேரடியாக உங்கள் செவிகள் மூலம் செவிமடுக்கின்றீர்கள். செவிமடுப்பது யார்? ஆத்மாக்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையைக் கண்டடைந்ததை இட்டு மிகவும் சந்தோஷம் அடைகின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்கள். அவர் இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! இதற்கு எழுத, வாசிக்கத் தேவையில்லை. எவராவது வரும்பொழுது, ‘நீங்கள் ஏன் இங்கு வந்துள்ளீர்கள்?’ என அவரிடம் கேட்கப்படுகின்றது. தாங்கள் இங்குள்ள மகாத்மாவைச் சந்திக்க வந்திருப்பதாகச் சிலர் பதில் அளிக்கிறார்கள். ‘ஏன்? உங்களுக்கு என்ன தேவை? உங்களுக்கு ஏதாவது தானம் வேண்டுமா, கூறுங்கள்.’ அவர் ஒரு சந்நியாசியாக இருந்தால், அவருக்கு ஒரு சப்பாத்தி தேவைப்படும். மக்கள் சந்நியாசிகளைச் சந்திக்கச் செல்லும் பொழுது அல்லது வழியில் அவர்களைக் காணும் பொழுது, அவர்கள் (சந்நியாசிகள்) தூய்மையாக இருப்பதால், அவர்களுக்கு உணவு கொடுத்தால் நன்றாக இருக்குமே எனச் சமயப் பற்றுள்ளவர்கள் உணர்வார்கள். இப்பொழுது அந்தத் தூய்மை கூட இல்லை; உலகம் முற்றிலும் தமோபிரதானாக உள்ளது, அதில் பெருமளவு குப்பையே உள்ளது. மக்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர்! இங்கு விரக்தி அடைந்திருத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: எதையும் எழுதத் தேவையில்லை. நீங்கள் எழுதுகின்ற கருத்துக்கள் நீங்கள் கிரகித்துக் கொள்வதற்கே ஆகும். வைத்தியர்களிடம் பல்வேறு மருந்துகள் உள்ளன. அவர்களால் அம்மருந்துகள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்க முடிகின்றது. ஒரு சட்டநிபுணர் பல சட்டக் குறிப்புக்களைத் தனது புத்தியில் வைத்திருக்க வேண்டியுள்ளது. நீங்கள் எதை நினைவு செய்ய வேண்டும்? ஒரேயொரு விடயம் மாத்திரமே உள்ளது, அதுவும் மிக இலகுவானது. நீங்கள் கூறுகின்றீர்கள்: ஒரேயொரு சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சிவபாபா எவ்வாறு வருவார் என அம்மக்கள் கேட்கின்றனர். உங்களைத் தவிர வேறெவருமே இவ்விடயங்களைப் அறிந்து கொள்வதில்லை. கடவுள் எங்கே? அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று அல்லது அவர் சர்வவியாபகர் என அவர்கள் கூறுகின்றனர். இவ்விரு கருத்துக்களுக்கும் இடையில் பகலுக்கும், இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது. பின்னர், கடவுள் பூனைகளிலும், நாய்களிலும் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இரண்டும் முற்றிலும் எதிரெதிர்க்; கருத்துக்கள். தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்து, கூறுகின்றார்: உங்கள் தந்தையான என்னை, நினைவு செய்யுங்கள்! “இலகு இராஜயோகம்” நினைவு கூரப்படுகின்றது. பாபா கூறுகின்றார்: “யோகம்” என்ற வார்த்தையை நீக்கி விடுங்கள். என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சிறு குழந்தையொன்று தனது பெற்றோரைக் கண்டதும் உடனடியாக ஓடிச் சென்று அவர்களைக் கட்டியணைப்பார். தனது தாய், தந்தை யார் என அவர் முதலில் சிந்திப்பாரா? இல்லை! இது பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் சிவனுக்கு மலர்களை அர்ப்பணிக்கின்றீர்கள். சோமநாதர் ஆலயம் மிகவும் ஆடம்பரமானதாக இருந்தது! பின்னர் முகமது கஸ்னாவி வந்து அதைக் கொள்ளை அடித்தான். சோமநாதர் ஆலயம் பாரதத்தில் மிகவும் பிரபல்யமானது. முதலில், சிவ வழிபாடே இருந்திருக்க வேண்டும். இந்த ஞானம் அனைத்தும் இப்பொழுது குழந்தைகளான உங்களின் புத்திகளில் உள்ளது. நீங்கள் வழிபட்டிருந்தாலும், அவ்வுருவங்கள் அனைத்தும் உயிரற்றவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. சிவபாபா நிச்சயமாக ஓர் உயிருள்ள ரூபத்திலேயே வந்திருக்க வேண்டும். இதனாலேயே மக்கள் ஒவ்வொரு வருடமும் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர். பரமாத்மா சிவன் அசரீரியானவர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தானும் அசரீரியானவரே என்பதை ஓர் ஆத்மா அறிவார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள். அது மிக இலகுவானது. அவர் எங்களின் தந்தை ஆவார். அவர் ஞானக்கடலும், சந்தோஷக் கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவருக்குப் பெருமளவு புகழ் உள்ளது. பிரம்மா, விஷ்ணு அல்லது சங்கரருக்கு அந்தளவு புகழ் இல்லை. மக்கள் ஒரேயொருவரின் புகழையே பாடுகின்றனர். பாபா வந்துவிட்டார் என்பதையும், அவர் எங்களுக்கு எங்களின் ஆஸ்தியை வழங்குகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகளுக்கு அனைத்தையும் வழங்குவார், ஆனால் அவர் அவர்களுக்குக் கற்பிப்பதில்லை. குழந்தைகள் கற்பதற்காகப் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர், பின்னர் தங்களின் ஓய்வு காலத்தில் ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றனர். இந்நாட்களில், அவர்கள் சிறு பிள்ளைகளையும் கூட ஒரு குருவை ஏற்குமாறு செய்கின்றனர். இங்கு, குழந்தைகளாகிய உங்களிடம் சிவபாபாவை நினைவு செய்யுமாறு கூறப்படுகின்றது. அனைவருக்கும் ஓர் உரிமை உள்ளது. அனைவரும் எனது குழந்தைகள். உங்கள் மத்தியிலும் என்னை மிக நன்றாக நினைவு செய்கின்ற சிலர் உள்ளனர். சிலர் கேட்கின்றனர்: பாபா, நாங்கள் யாரை நினைவு செய்ய வேண்டும்? எவ்வாறு நாங்கள் ஒரு புள்ளியை நினைவு செய்வது? பெரிதாகவுள்ள ஒன்றாயின் நினைவுசெய்ய முடியும். அச்சா, நீங்கள் நினைவு செய்து வந்த பரமாத்மா யார்? அவர் ஓர் அநாதியான, முடிவற்ற ஜோதி என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவர் அத்தகையவர் அல்ல. ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியை நினைவு செய்வது என்பது தவறானது. மிகச்சரியான நினைவு இருக்க வேண்டும், ஆனால் முதலில் நீங்கள் அவரை மிகச்சரியாக அறிந்து கொள்ள வேண்டும். தந்தையே வந்து, தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். பின்னர் அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய தகவல்களை விபரமாகவும், சுருக்கமாகவும் கொடுக்கின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தூய்மையாக விரும்பினால், அதற்கு ஒரேயொரு தீர்வே உள்ளது: என்னை நினைவு செய்யுங்கள்! நான் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றேன். ஆத்மாக்கள் தூய்மையாக்கப்பட வேண்டும். தான் தூய்மையற்றவராகி விட்டதாக இந்த ஆத்மாவும் கூறுகின்றார். நான் தூய்மையாக இருந்தேன், இப்பொழுது தூய்மையற்றவர் ஆகிவிட்டேன். அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். அனைத்தும் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் தமோபிரதான் ஆகுகின்றது. தான் தூய்மையற்றவர் ஆகிவிட்டதையும், இப்பொழுது தூய்மையாக்கப்பட வேண்டும் என்பதையும் ஆத்மாக்கள் அனைவரும் புரிந்துகொள்கிறார். அமைதி தாமத்தில் தூய்மை அற்றவர்கள் எவருமே இல்லை. இங்கு அனைவருமே தூய்மை அற்றவர்களாக உள்ளதால், சந்தோஷம் அற்றுள்ளனர். அவர்கள் தூய்மையாக இருந்தபொழுது, சந்தோஷமாக இருந்தனர். ஆத்மாக்கள் கூறுகின்றனர்: நாங்கள் துன்பத்திலிருந்து விடுபடும் வகையில், எங்களைத் தூய்மை ஆக்குங்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஓர் ஆத்மாவே ஒரு நீதிபதியாகவோ, சட்டநிபுணராகவோ ஆகுகின்றார். ஆத்மா கூறுகின்றார்: நான் ஓர் அரசன், நான் இன்னார். நான் இப்பொழுது இச்சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்க வேண்டும். இதுவே ஆத்ம உணர்வில் இருத்தல், ஒரு சரீரத்தில் இருக்கும் பொழுதே ஆத்ம உணர்வில் இருத்தல் எனப்படுகின்றது. இராவண இராச்சியத்தில் அவர்கள் சரீர உணர்வு உடையவர்களாக உள்ளனர். இப்பொழுது மாத்திரமே தந்தை உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். இந்நேரத்தில், ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் உள்ளனர். அதனாலேயே அவர்கள் தந்தையை அழைக்கின்றனர்: ஓ பாபா, வாருங்கள்! நாடக நியதிப்படி, நீங்கள் தொடர்ந்தும் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாகவும், தூய்மையானவர்களில் இருந்து தூய்மை அற்றவர்களாகவும் ஆகினீர்கள் என்பதை அறிவீர்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பது இப்பொழுது உங்களின் புத்திகளில் உள்ளது. இப்பொழுது இதை மறந்து விடாதீர்கள்! சுயதரிசனச் சக்கரதாரியாக இருங்கள். நீங்கள் அமரும் பொழுதும், நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்களின் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தந்தையை நினைவு செய்வதும், ஒரு சப்பாத்தியை உண்பதும் தான், அவ்வளவுதான்! இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: குழந்தைகளே, வயிற்றுக்குத் தேவைப்படுவது ஒரு சப்பாத்தி மாத்திரமே. வயிற்றுக்கு அதிகம் தேவையில்லை. அதற்குத் தேவைப்படுவது எல்லாம் ஒரு அவுன்ஸ் மாவேயாகும்: பருப்பும், ஒரு ரொட்டியும், அவ்வளவுதான்! ஒருவர் 10 ரூபாவிற்கும் உண்ணலாம், 10,000 ரூபாவிற்கும் உண்ணலாம். ஏழைகள் எதை உண்கின்றார்கள்? இருந்தும், அவர்கள் மிகவும் பலசாலிகளாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளனர்! மக்கள் பலவற்றையும் உண்ணும் பொழுது, மேலும் அதிகமாக நோயாளிகள் ஆகுகின்றனர். ஒரே வகை உணவை உண்டால் நீங்கள் நோய்வாய்ப்பட மாட்டீர்கள் என்றே வைத்தியர்களும் அறிவுரை கூறுகின்றனர். எனவே, தந்தையும் விளங்கப்படுத்துகின்றார்: ஒரு சப்பாத்தியை மாத்திரம் உண்ணுங்கள். நீங்கள் பெறுவதையிட்டுச் சந்தோஷமாக இருங்கள். பருப்பையும், ரொட்டியையும் போன்று வேறு எதுவுமே இருக்க முடியாது. அதிகப் பேராசையும் இருக்கக்கூடாது. சந்நியாசிகள் என்ன செய்கின்றனர்? அவர்கள் தங்களின் வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு விலகிக் காட்டுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஒளித் தத்துவத்தைக் கடவுளாகக் கருதி அதை நினைவு செய்வதுடன், தாம் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பார்கள் என்றும் எண்ணுகின்றனர். எவ்வாறாயினும், அது அவ்வாறில்லை. ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். ஆத்மாக்கள் இரண்டறக் கலக்கின்றனர் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்களே தூய்மையானவர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகுகின்றனர். நீங்கள் அத்தகைய சிறந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள்! நீங்கள் வெகுமதியை அனுபவித்து, இந்த ஞானத்தை மறந்து விடுகின்றீர்கள். பின்னர் நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை அனுபவம் செய்கின்றீர்கள் எனும் ஞானம் அனைத்தும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. எவரது பாகமும் முடிவுக்கு வரமுடியாது. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது, அது தொடர்ந்தும் சுழல்கின்றது. எப்பொழுது அல்லது எவ்வாறு அல்லது எங்கே கடவுள் இந்நாடகத்தை உருவாக்கினார் என நீங்கள் கேட்க முடியாது, அது சதாகாலமும் தொடர்கின்றது. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது. இவ்விடயங்களை எவருமே புரிந்து கொள்வதில்லை. நாடக நியதிப்படி நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். நாடகத்தின்படி நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். வேறெவராலும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. நாடகமா அல்லது தந்தையா சர்வசக்திவான் எனக் கேட்கப்படுகின்றது. கடவுளே சர்வசக்திவான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவரால் அனைத்தையும் செய்ய முடியும் என அவர்கள் உணர்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கு இங்கு வரவேண்டும். சத்திய யுகத்தில் நீங்கள் சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். நான் பரந்தாமத்திற்குச் சென்று ஓய்வெடுக்கின்றேன். நீங்கள் என் தலை மீது ஏறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் ஒரு சிங்கத்தில் சவாரி செய்கின்றீர்கள் (சத்திய யுகத்தில்). விநாடிக்கு விநாடி நிகழ்வதெல்லாம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் மிகச்சிறந்த ஞானம் உள்ளது. இப்பொழுது நீங்கள் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும், அவ்வளவுதான்! கடதாசி அல்லது பென்சில் போன்றவை தேவையில்லை. பிரம்மாபாபாவும் கற்கின்றார். ஆனால், அவர் எதையும் வைத்திருப்பதில்லை. நீங்கள் தந்தையை மாத்திரம் நினைவுசெய்தால் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இது மிகவும் இலகுவானது! நினைவு மூலம் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றீர்கள். இது கிரகிப்பதற்கான விடயம். அதனை எழுதி வைப்பதால், என்ன நன்மை இருக்கும்? இவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், சிலர் தாம் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு உதவுவதற்காக, கருத்துக்களை எழுதிக் கொள்கின்றனர். ஒருவர் எதையாவது ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டுமாயின், ஒரு முடிச்சுப் போட்டு வைக்கின்றார். நீங்களும் சிவபாபாவையும், ஆஸ்தியையும் நினைவில் வைத்திருப்பதற்காக ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்க வேண்டும். இது மிக இலகுவானது. யோகம் என்றால் நினைவு ஆகும். சிலர் கூறுகின்றனர்: பாபா, என்னால் நினைவில் இருக்க முடியாதுள்ளது. நான் எவ்வாறு யோகம் செய்ய முடியும்? ஓ! ஆனால் நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், உலாவித் திரியும் பொழுதும், அனைத்தையும் செய்யும் பொழுதும் உங்களால் உங்களின் லௌகீகத் தந்தையை நினைவுசெய்ய முடிகின்றது. நீங்களும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். அவ்வளவுதான்! அப்பொழுதே உங்கள் படகு அக்கரை செல்லும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சுயதரிசனச் சக்கரதாரியாகி, 84 பிறவிகளின் சக்கரத்தைத் தொடர்ந்தும் உங்கள் புத்தியில் சுழற்றுங்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்து, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருங்கள். தூய்மை ஆகுங்கள்.

2. எதிலும் பேராசைப்படாதீர்கள். நீங்கள் பெற்றுக் கொண்டவற்றையிட்டு, சந்தோஷமாக இருங்கள். ஒரு சப்பாத்தியை உண்டு, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
அனைவரின் இதயத்தின் இரகசியங்களை அறிந்தவராக இருந்து, அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

வெற்றியாளர் ஆகுவதற்கு, ஒவ்வொருவரின் இதயத்தின் இரகசியங்களையும் அறிந்து கொள்ளுங்கள். யாராவது ஒருவரின் உதடுகளில் இருந்து வெளிப்படும் சத்தங்களைக் கேட்பதன் மூலம் அவனின் அல்லது அவளின் இதயத்தின் இரகசியங்களை உங்களால் அறிந்து கொள்ள முடியும், அத்துடன் வெற்றியாளர் ஆகமுடியும். எவ்வாறாயினும், ஒருவரின் இதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு, உங்களுக்கு அகநோக்குத் தேவை. எந்தளவிற்கு நீங்கள் அகநோக்கில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் அவர்களின் இதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள முடிவதுடன் அவர்களைத் திருப்திப்படுத்தவும் முடியும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துபவர்கள், வெற்றியாளர்கள் ஆகுகிறார்கள்.

சுலோகம்:
விருப்பமின்மை என்பது வளம் மிக்கதொரு நிலமாகும், அதில் நீங்கள் எதைப் பயிரிட்டாலும் அது நிச்சயமாகப் பலனைத் தரும்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

உங்களின் ஊக்கமும் உற்சாகமும் நிலையாக இருப்பதற்கு, உங்களுடன் உறவுமுறையில் வருகின்ற யாராக இருந்தாலும், அவர்கள் மாணவர்களோ அல்லது சகபாடிகளோ, அனைவரையும் திருப்திப்படுத்தும் உற்சாகம் இருக்க வேண்டும். நீங்கள் யாரைப் பார்த்தாலும், தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒவ்வொரு கணமும் நற்குணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அனைவரின் நற்குணங்களின் சக்தியை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களின் உற்சாகம் சதா நிலைத்திருக்கும். நற்குணங்களை எடுத்துக் கொள்பவர் ஆகுங்கள். குறைகளைப் பார்த்தும் பார்க்காமல் இருங்கள்.