19.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சதா நினைவு செய்தல் எனும் தூக்கு மேடையில் நிலைத்திருக்க வேண்டும். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் நிஜத் தங்கம் ஆகுவீர்கள்.

கேள்வி:
உங்கள் குற்றப் பார்வையை உடனடியாக மாற்றுகின்ற சக்தி எது?

பதில்:
ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண் எனும் சக்தியைப் பெறும்போது குற்றங்கள் அனைத்தும் முடிந்துவிடுகின்றன. தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, நீங்கள் அனைவரும் சகோதரர்களும், சகோதர சகோதரிகளும் ஆவீர்கள். உங்களுடைய கண்கள் ஒருபோதும் குற்றமானதாக இருக்கக்கூடாது. நீங்கள் எப்பொழுதும் நினைவின் போதையில் அமர்ந்திருக்க வேண்டும். அற்புதம், அற்புதமான பாக்கியம்! கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! இவ்வாறு நினைக்கும்போது, நீங்கள் போதையில் நிலைத்திருப்பீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தையும் ஓர் ஆத்மாவே என்பதும், அவர் சம்பூரணமானவர் என்பதும், அவர் மீது எந்தத் துருவும் ஒருபோதும் இருக்காது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தன்னிடம் துரு இருக்கின்றதென சிவபாபா கூறுவாரா? நிச்சயமாக இல்லை! இந்த தாதா முழுமையாக துருவினால் மூடப்பட்டிருக்கின்றார். தந்தை அவரினுள் பிரவேசித்துள்ளதால், அவர் அந்த உதவியைப் பெறுகிறார். ஐந்து விகாரங்கள் என்ற துருவினை தங்கள் மீது கொண்டிருப்பதால், ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதே பிரதான விடயமாகும். தந்தையை நீங்கள் எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு துருவானது தொடர்ந்தும் அகன்றுவிடும். நீங்கள் பிறவி பிறவியாக பக்தி மார்க்கக் கதைகளை செவிமடுத்து வந்தீர்கள். நீங்கள் இப்பொழுது செவிமடுக்கின்ற விடயங்கள் முற்றிலும் தனித்துவமானவை. நீங்கள் இப்பொழுது ஞானக் கடலிடமிருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்கள் புத்தியில் ஓர் இலக்கையும் குறிக்கோளையும் கொண்டுள்ளீர்கள். வேறெந்த ஓர் ஆன்மீக ஒன்றுகூடலிலும் எவ்வித இலக்கோ குறிக்கோளோ இருப்பதில்லை. நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, அவர்கள் கடவுளை சர்வவியாபி என வெறுமனே கூறியவாறு, தொடர்ந்தும் அவரை இகழ்கின்றார்கள். இது ஒரு நாடகம் என்பதையோ படைப்பவரும் இயக்குனரும் நாடகத்தால் கட்டுண்டுள்ளார்கள் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர் சர்வசக்திவான் என்று நினைவுகூரப்பட்ட போதிலும், அவரும் நாடகத்தின் பாதையிலேயே நகர்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். பாபாவே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். “ஆத்மாவாகிய என்னுள் பதியப்பட்டுள்ள அழிக்கமுடியாத பாகத்திற்கேற்ப நான் உங்களுக்கு கற்பிக்கின்றேன்” என்று அவர் கூறுகின்றார். நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றவை எல்லாம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளவை. இப்பொழுது, அதிமேன்மையான இந்த சங்கமயுகத்தில் நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகவேண்டும். இவை கடவுளின் வாசகங்களாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து, இந்த இலக்ஷ்மி நாராயணனைப் போல் ஆகவேண்டும். நீங்கள் உலகின் அதிபதிகளாக வேண்டும் என்று எந்த ஒரு மனிதராலும் கூறமுடியாது. நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு, அதாவது, சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுவதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பக்தி மார்க்கத்தில் பிறவி பிறவியாக பல கதைகளைக் செவிமடுத்திருந்தாலும், நீங்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. சுவர்க்கத்தில் உண்மையாக இலக்ஷ்மி நாராயணனுடைய இராச்சியமே இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அது இப்பொழுது இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு திரிமூர்த்தியைப் பற்றியும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிசனாதன தேவ தேவியரின் தர்மம் பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது, வேறு எந்த சமயங்களும் இருக்கவில்லை. அந்த தர்மம் இப்பொழுதில்லை, அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். இது ஒரு பல்கலைக்கழகம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய நடத்தைகளை இங்கே மாற்ற வேண்டும். ஐந்து விகாரங்களும் அகற்றப்பட வேண்டும். நீங்கள் தேவர்களின் முன்னிலையில் நின்று பாடுவதுண்டு: நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள், நாங்கள் பாவிகள். பாரத மக்களே தேவர்களாக இருந்தார்கள். சத்தியயுகத்தில், இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தார்கள், இப்பொழுது கலியுகத்தில் அவர்கள் பூஜிப்பவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த, சதோபிரதான் ஆத்மாக்களாக இருந்தார்கள். அவர்களுடைய சரீரங்களும் சதோபிரதான் ஆனவையாக இருந்தன. ஆத்மாக்கள் எவ்வாறோ, அவ்வாறே நகைகளும் இருக்கின்றன. தங்கத்தினுள் கலப்படம் கலக்கப்படும்போது, அதன் பெறுமதியும் அதிகளவு குறைகின்றது. உங்களுடைய பெறுமதியும் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. உங்களுடைய பெறுமதி இப்பொழுது அதிகளவு குறைந்துவிட்டது! நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் எந்தளவிற்கு யோகம் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு துரு அகற்றப்படுவதுடன் தந்தை மீதான உங்கள் அன்பு தொடர்ந்தும் அதிகரிப்பதுடன், நீங்கள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். பாபா உங்களுக்குத் தெளிவாகக் கூறுகின்றார்: குழந்தைகளே, நாள் முழுவதும் நீங்கள் எந்தளவு நேரம் நினைவில் இருந்தீர்கள் என்ற அட்டவணையை வைத்திருங்கள். “நினைவு யாத்திரை” எனும் சொற்பதம் சரியானது. நினைவில் நிலைத்திருப்பதனால், உங்கள் துரு அகற்றப்பட்டு, உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கை நோக்கி உங்களை நகர்த்தும். அந்த வழிகாட்டிகள் உங்களை யாத்திரையில் பௌதீகமாக அழைத்துச் செல்கிறார்கள். இங்கே, ஆத்மாக்களாகிய நீங்களே யாத்திரையில் இருக்கின்றீர்கள். நாடகச்சக்கரம் முடிவிற்கு வருவதால், நீங்கள் பரந்தாமத்திற்குச் செல்ல வேண்டும். இந்த உலகம் மிகவும் அழுக்கானது என்பது உங்களுக்குத் தெரியும். எவரும் கடவுளை அறிந்ததுமில்லை, அவரை அறிந்து கொள்ளப் போவதுமில்லை. இதனாலேயே கூறப்படுகின்றது: விநாச வேளையில் சிலருக்கு அன்பற்ற புத்தி உள்ளது. அவர்களுக்கு இந்த நரகம் சுவர்க்கத்தைப் போன்றுள்ளது. இந்த விடயங்கள் அவர்கள் புத்தியில் பதிவதில்லை. இந்த ஞானத்தைக் கடைவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஏகாந்தத்தில் இருப்பது அவசியம். உங்களுக்கு இங்கே அதிகளவு ஏகாந்தத்தில் இருக்க முடியும், இதனாலேயே மதுவனம் புகழப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். கடவுள் சரீரங்களைக் கொண்ட ஆத்மாக்களாகிய எங்களுக்கு கற்பிக்கின்றார். அவர் முன்னைய சக்கரத்தில் கற்பித்ததைப் போன்றே எங்களுக்குக் கற்பிக்கின்றார். இது ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய கேள்வியல்ல, அவர் ஒரு சிறு குழந்தை ஆவார். அவர் ஓர் ஆத்மா, இவர் பராமாத்மா ஆவார். முதல் இலக்க ஆத்மாவாக இருந்த ஸ்ரீகிருஷ்ணர், இறுதி இலக்கத்தவர் ஆகியதால், அவருடைய பெயர் மாற்றம் அடைகின்றது. அவருடைய பல பிறவிகளின் இறுதியில், அவருடைய பெயர் நிச்சயமாக வேறுபட்டதாகவே இருக்க வேண்டும். இவர் தாதா லேக்ராஜ் என்று அழைக்கப்பட்டார். இது இவருடைய பல பிறவிகளின் இறுதிப்பிறவி ஆகும். தந்தை கூறுகிறார்: நான் இவரினுள் பிரவேசித்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். தந்தை நிச்சயமாக எவரேனும் ஒருவரினுள் பிரவேசிக்க வேண்டும். இவ்விடயங்கள் சமய நூல்களில் குறிப்பிடவில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மாத்திரமே இதை கற்கிறீர்கள். இந்த ஞானம் சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. அங்கே வெகுமதி மட்டுமே உள்ளது. தந்தை சங்கமயுகத்தில் வந்து, இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார், பின்னர் நீங்கள் உங்கள் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் கோருகின்ற காலம் இதுவேயாகும். எனவே குழந்தைகளாகிய நீங்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது. மாயை உங்களை மிகக் கவனயீனமானவர்கள் ஆக்கும்போது, அது உங்கள் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. தந்தை உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். அப்பொழுது உங்களுடைய பாக்கியத்தில் பெரும் வித்தியாசம் ஏற்படுகிறது. சிலர் சித்தி அடைகின்றார்கள், சிலர் சித்தி அடைவதில்லை. இரட்டைக் கீரிடாதாரிகள் ஆகுவதற்கு நீங்கள் ஏதாவது முயற்சி செய்யவே வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் இருக்கலாம். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பௌதீகத் தந்தையுடனான கடன்களைத் தீர்க்க வேண்டும். நீங்கள் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடப்பவராக இருக்க வேண்டும். இவ்வுலகில் அனைத்துமே சட்டத்திற்கு புறம்பானவையாகவே இருக்கின்றன. மிக மேன்மையானவர்களாக இருந்த நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், அதாவது BKs ஆவீர்கள். எனவே நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். ஆகையால் குற்றப்பார்வை எதுவும் இருக்கக் கூடாது. தந்தை உங்களுக்கு இந்த தந்திரத்தைக் கூறுகிறார். 'பாபா, பாபா" என்று நீங்கள் அனைவரும் தொடர்ந்து கூறுகிறீர்கள். எனவே நீங்கள் சகோதர, சகோதரிகள். நீங்கள் அனைவரும் கடவுளை 'பாபா" என அழைக்கின்றீர்கள். தாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என ஆத்மாக்கள் கூறுகிறார்கள். ஆனால் சரீரத்தில் இருக்கும் பொழுது அவர்கள் சகோதர சகோதரிகள். ஆகவே ஏன் குற்றப்பார்வை இருக்க வேண்டும்? நீங்கள் இவற்றைப் பெரிய ஒன்றுகூடல்களில் விளங்கப்படுத்தலாம். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். பிரஜாபிதா பிரம்மா மூலம் படைப்பு படைக்கப்படும்பொழுது நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். வேறு எந்த உறவுமுறையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் என்பதால் எவ்வாறு நாங்கள் விகாரத்தில் ஈடுபட முடியும்? நாங்கள் அனைவரும் சகோரர்கள் ஆக இருப்பதுடன், சகோதர சகோதரிகளுமாக இருக்கிறோம். இக்கண்களே பெரிதும் ஏமாற்றுகின்றன என்பதைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். கண்கள் நல்ல பொருள் ஒன்றைப் பார்த்தவுடனேயே, இதயம் அதைப் பெறவேண்டுமென விரும்புகிறது. கண்கள் எதையுமே பார்க்காவிட்டால் ஆசைகள் எதுவுமே இருக்காது. இந்தக் குற்றப் பார்வை மாற்றப்பட வேண்டும். சகோதரர்களும் சகோதரிகளும் விகாரத்தில் ஈடுபட முடியாது. அப்படியான பார்வை அகற்றப்பட வேண்டும். மூன்றாவது கண்ணாகிய ஞான சக்தி இருக்க வேண்டும். அரைக்கல்பமாக உங்களுடைய கண்களினாலேயே நீங்கள் அனைத்தையும் செய்தீர்கள். இப்பொழுது தந்தை வினவுகிறார்: துரு அனைத்தையும் எவ்வாறு அகற்ற முடியும்? தூய்மையாக இருந்த ஆத்மாக்களாகிய நாங்கள் துருப்பிடித்தவர்கள் ஆகிவிட்டோம். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களுக்கு அவர் மீது அதிகளவு அன்பு இருக்கும். நினைவின் மூலமே அன்பு ஏற்படுத்தப்படுகிறது. கல்வியின் மூலம் அல்ல. இது பாரதத்தின் புராதன யோகமாகும். இதன் மூலமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகி வீடு திரும்புவீர்கள். சகோதரர்கள் அனைவருக்கும் அவர்கள் தந்தையின் அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். சர்வவியாபி என்ற கருத்தினால் அனைவரும் கீழே மிகுந்த விசையுடன் வீழ்ந்து விட்டார்கள். நாடகத்திற்கு ஏற்ப, இப்பொழுது இதுவே உங்களுடைய பாகம் எனத் தந்தை கூறுகிறார். இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும். முன்னைய சக்கரத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்தீர்களோ, அதையே நீங்கள் நிச்சயமாக மீண்டும் செய்வீர்கள். தொடர்ந்தும் நீங்கள் பற்றற்ற பார்வையாளராக பாருங்கள். பலர் உங்கள் கண்காட்சிகளைப் பார்க்க வருவார்கள். இது இறை பணியகம். இது அசரீரியான இறை தந்தையின் பணியகம். இறை பணியகம். மக்கள் கிறிஸ்தவ பணியகம், பௌத்த பணியகம் போன்றவற்றைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவோ அசரீரியான கடவுளின் பணியகம். அசரீரியானவர் நிச்சயமாக ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கிறார். அசரீரி ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடன் வசித்து வந்தீர்கள். இந்த நாடகம் எவ்வாறானது என்பது எவருடைய புத்தியிலும் இல்லை. இராவணனுடைய இராச்சியத்தில் அனைவரும் அன்பற்ற புத்தியையே கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். 'என்னுடையவர் ஒரே ஒருவரே அன்றி வேறெவரும் இல்லை" என நீங்கள் சத்தியம் செய்தீர்கள். நீங்கள் பற்றை வென்றவர்கள் ஆக வேண்டும். இதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகிறது. இது தூக்கு மேடையில் ஏறுவது போன்றதாகும். தந்தையை நினைவு செய்வதென்பது தூக்கு மேடையில் ஏறுவது போன்றதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரத்தை மறந்து, நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் தந்தையிடம் செல்ல வேண்டும். தந்தையை நினைவு செய்வதே அத்தியாவசியமானதாகும். வேறு எவ்வாறு துருவை அகற்ற முடியும்? சிவபாபாவே கற்பிக்கின்றார் என்ற உள்ளார்ந்த சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். வெளியில் உள்ளவர்கள் இதைச் செவிமடுக்கும் பொழுது 'நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்பார்கள். ஏனெனில் அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரையே கடவுள் என நம்புகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீகிருஷ்ணருடைய இராச்சியத்திற்குள் செல்வீர்கள் எனும் சந்தோஷத்தை அதிகம் கொண்டுள்ளீர்கள். நாங்களும் இளவரசர்களும் இளவரசிகளும் ஆகமுடியும். அவரே முதலாவது இளவரசர் ஆவார். அவர் புதிய வீட்டில் வசிக்கிறார். தாமதமாகப் பிறப்பு எடுக்கின்ற குழந்தைகளும் பின்னர் வருவார்கள். எவ்வாறாயினும் அவர்கள் சுவர்க்கத்தில் பிறப்பெடுப்பார்கள். நீங்களும் சுவர்க்கத்தின் இளவரசர்கள் ஆக முடியும். அனைவராலும் முதல் இலக்கத்தைக் கோர முடியாது. மாலையும் வரிசைக்கிரமமாகவே உருவாக்கப்படும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, அதிகளவு முயற்சி செய்யுங்கள்! நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள். இதுவே சத்திய நாராயணனின் கதையாகும். 'இதுவே சத்திய இலக்ஷ்மியின் கதை" என்று எவராவது கூறுவதை நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரை நேசிக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை ஒரு தொட்டிலில் இட்டு ஆட்டுகிறார்கள். ஏன் ராதையை அவ்வாறு செய்வதில்லை? நாடகத்திட்டப்படி அவருடைய பெயர் நினைவு கூரப்படுகிறது. ராதையும் அவருக்குச் சமமானவர். ஆனால், ஏன் ஸ்ரீகிருஷ்ணர் மீது அதிகளவு அன்பு செலுத்தப்படுகிறது? நாடகத்தில் அவருடைய பாகம் அத்தகையது! புத்திரர்களே எப்பொழுதும் அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள். ஒரு லௌகீகத் தந்தை புத்திரர்களைப் பார்ப்பதில் அதிகளவு சந்தோஷம் அடைகிறார். ஒருவருக்கு ஒரு புத்திரன் இருக்கும்பொழுது அவர் அதிகளவு சந்தோஷம் அடைகிறார். அவருக்கு ஒரு புத்திரி இருக்குமாயின், அவர் தொடர்ந்தும் திணறுவார். சிலர் அவளைக் கொல்லவும் செய்வார்கள். இராவணனுடைய இராச்சியத்தில் இருப்பவர்களது நடத்தையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. நீங்கள் பாடுகிறீர்கள்: நீங்களே சகல பண்புகளும் நிறைந்தவர்கள்.... நாங்கள் பண்புகள் அற்றவர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்பொழுது மீண்டும் பண்புகள் உடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் எண்ணற்ற தடவைகள் உலக அதிபதிகள் ஆகியுள்ளீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். ஓஹோ! சிவபாபா எங்களுக்கு கற்பிக்கின்றார்! இதைப்பற்றி அமர்ந்திருந்து சிந்தியுங்கள்! 'கடவுள் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அற்புதமான பாக்கியம்! அற்புதம்!" இப்படியாக எண்ணுவதினால் நீங்கள் மிகவும் போதை உடையவர்கள் ஆக வேண்டும். அற்புதம், அற்புதமான பாக்கியம்! நாங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டு விட்டோம். பாபாவை மாத்திரமே நாங்கள் நினைவு செய்வோம். நாங்கள் தூய்மையைக் கிரகிக்க வேண்டும். நாங்கள் இவ்வாறு ஆகுவதால், தெய்வீகக் குணங்களை கிரகிக்கின்றோம். இதுவும் மன்மனாபவ ஆகும். பாபா இவ்வாறே எங்களையும் ஆக்குகிறார். இது ஒரு நடைமுறை அனுபவம் பற்றிய விடயமாகும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை ஆலோசனை கூறுகிறார்: உங்கள் அட்டவணையை எழுதுங்கள்! ஏகாந்தத்தில் இருந்து உங்களுடனேயே பேசுங்கள். இந்தப் பதக்கத்தை (பட்ஜை) உங்கள் இதயத்தில் அணியுங்கள். கடவுளின் ஸ்ரீமத்தை பின்பற்றுவதால் நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். அதைப் பாருங்கள், அதன்மீது தொடர்ந்தும் அன்பு செலுத்துங்கள். பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதினால் நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். பாபா, இது உங்கள் அற்புதமே! பாபா, நீங்கள் எங்களை உலக அதிபதிகள் ஆக்குவீர்கள் என்பதை நாங்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை. தீவிர பக்தி செய்பவர்கள், ஒரு காட்சியைப் பெறுவதற்காக தங்களுடைய கழுத்தையே வெட்டி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள். அப்படிச் செய்வதனால் மாத்திரம் அவர்கள் ஒரு காட்சியைப் பெறுவார்களா? அத்தகைய பக்தர்களை மாத்திரம் கொண்டதே பக்தர்களின் மாலையாகும். பக்தர்களுக்கும் மரியாதை உண்டு. கலியுகத்து பக்தர்கள் சக்கரவர்த்திகளைப் போன்றவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைமீது அன்பு செலுத்துகிறீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக் கூடாது. உங்களுடைய இணைப்பு மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும். இப்பொழுது எங்கள் 84 பிறவிகள் முடிவிற்கு வந்துவிட்டது. நாங்கள் இப்பொழுது தந்தையின் கட்டளைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். காமமே கொடிய எதிரியாகும். நாங்கள் காமத்தினால் தோற்கடிக்கப்படக் கூடாது. நீங்கள் அதனால் தோற்கடிக்கப்பட்டால், வருந்த நேரிடுவதுடன் பின்னர் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் எலும்புகள் முற்றிலும் நொருக்கப்பட்டுவிடும். மிகத் தீவிர தண்டனை பெறப்படும். உங்கள் துரு அகற்றப்படுவதற்கு பதிலாக, நீங்கள் மேலும் துருப்பிடித்தவர்கள் ஆகிவிடுவீர்கள்! உங்களால் யோகம் செய்ய முடியாதிருக்கும். நினைவில் நிலைத்திருப்பது மிகக் கடினமாக இருக்கும். முழு நேரமும் பாபாவின் நினைவில் இருப்பதாகச் சிலர் பொய்யான கதைகளைக் கூறுகிறார்கள். எனினும் இதை அவர்களால் செய்ய முடியாது என்பது பாபாவிற்குத் தெரியும். மாயை இதில் பல புயல்களை உருவாக்குகிறாள். சிலர் தம்மைத் தொந்தரவு செய்யும் கனவுகளையும் காண்கின்றார்கள். இந்த ஞானம் மிகவும் எளிமையானது. சிறு குழந்தைகளாலும் அதை விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், நினைவு யாத்திரையிலேயே பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அதிகளவு சேவை செய்கிறீர்கள் என நினைத்து சந்தோஷம் அடையாதீர்கள். நீங்கள் உங்கள் நினைவின் மறைமுகமான சேவையை தொடர்ந்தும் செய்யவேண்டும். சிவபாபாவின் ஒரேயொரு புத்திரனாக இருக்கின்ற போதையே இவருக்கு உள்ளது. பாபா உலகத்தைப் படைப்பவர். ஆகவே நிச்சயமாக நான் சுவர்க்கத்தின் அதிபதி ஆகுவேன். 'நான் இளவரசன் ஆகப்போகின்றேன்" எனும் உள்ளார்ந்த சந்தோஷம் இருக்கவேண்டும். ஆனால் குழந்தைகளாகிய உங்களைப் போன்று என்னால் அதிகளவு நினைவில் இருக்க முடியவில்லை. பாபா பல விடயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. முக்கியஸ்தர்களுக்கு பாபா அதிகளவு விருந்துபசாரம் செய்கிறார் என நினைத்து, குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் பொறாமை கொள்ளக் கூடாது. யாருக்காவது நன்மை அளிப்பதற்காக பாபா அவரவருடைய நாடியையும் பார்த்து, அதற்கேற்ப அவர்களுடன் தொடர்பு கொள்வார். ஒவ்வொரு மாணவனையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது ஆசிரியருக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இதையிட்டு எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உங்களுடனேயே பேசுங்கள். உங்கள் ஆத்மா மீதுள்ள துருவை அகற்றுவதற்கு நினைவு யாத்திரையில் இருங்கள்.

2. எதிலும் சந்தேகமோ, பொறாமையோ கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளார்ந்த சந்தோஷத்தைப் பேணுங்கள். உங்களுடைய மறைமுகமான சேவையைத் தொடருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் யாசிப்பவரில் இருந்து இளவரசராக மாறுகின்ற உங்கள் பாகத்தை நடைமுறையில் நடிக்கின்ற ஒரு துறவியாகவும், மேன்மையான, பாக்கியசாலி ஆத்மா ஆகவும் ஆகுவீர்களாக.

எதிர்காலத்தில் உலகச் சக்கரவர்த்தி ஆகுபவர், ஓர் அருள்பவராக இருப்பதை போன்றே, அருள்பவர் என்ற உங்கள் சம்ஸ்காரங்கள் இப்பொழுது வெளிப்படட்டும். வேறு யாரோ ஒருவரிடமிருந்து சற்கதி கிடைத்தாலே, நான் ஒருவருக்கு சற்கதி கொடுப்பேன் என என்றுமே நினைக்காதீர்கள். நீங்கள் யாசிப்பவரில் இருந்து இளவரசர்கள் ஆகுபவர்கள் என அறியப்பட்டவர்கள். நீங்கள் உங்களுக்காக எடுத்துக் கொள்பவர்கள் என்ற எந்த எண்ணத்தையும் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் எந்தத் தற்காலிக ஆசைகளுக்காகவும் யாசிப்பவர் அல்ல. யாசகர்களாகிய நீங்களே சம்பூரணமான ரூபங்கள் ஆகுகிறீர்கள். இப்பொழுது யாசிப்பவர்களில் இருந்து இளவரசர்களாக மாறுகின்ற பாகங்களை நடைமுறையில் நடிப்பவர்களே சதா துறவிகளும் மேன்மையான பாக்கியத்தை கொண்டிருப்பவர்களும் ஆவார்கள். துறவறத்தைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் பாக்கியத்தை நீங்கள் எக்காலத்திற்காகவும் உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

சுலோகம்:
எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதற்கு, பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்து ஒவ்வொரு விளையாட்டையும் அவதானியுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

உங்கள் சரீரமற்ற ஸ்திதியை நீங்கள் அனுபவம் செய்வதற்கு, உங்கள் எண்ணத்திலும்கூட சூட்சுமமாகவேனும் எதன் மீதும் உங்களுக்கு எந்தப் பற்றும் இல்லாதிருக்கட்டும், எந்தவொரு உறவினர்கள் அல்லது தொடர்பில் உள்ளவர்கள் மீது அல்லது எவரது சிறப்பியல்புகள் மீதும் எந்தப் பற்றும் இருக்கக் கூடாது. உங்கள் சொந்த சிறப்பியல்பின் மீதேனும் உங்களுக்கு எந்தப் பற்றும் இருக்குமாயின், அந்தப் பற்று பந்தனங்களை உருவாக்கி உங்களைச் சரீரமற்றவர் ஆக அனுமதிக்காது.