20.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களையே கேளுங்கள்: நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்கின்றீர்கள்? நீங்கள் எவ்வளவு நேரம் ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள்?
கேள்வி:
பாக்கியசாலிக் குழந்தைகள் தந்தையின் எந்த வழிகாட்டலைப் பின்பற்றுகின்றார்கள்?பதில்:
தந்தையின் வழிகாட்டல்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பீர்களாக! ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் ஆண்கள், பெண்களல்ல. ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவரிலும் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த முயற்சியைச் செய்து, ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இதுவே அதி உயர்ந்த இலக்காகும்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து வந்துள்ளேன்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகள், அதாவது, சரீரத்திலுள்ள ஆத்மாக்கள், புதிய உலகிற்கான தங்கள் பாக்கியத்தை, அதாவது, சுவர்க்கப் பாக்கியத்தை உருவாக்குவதற்கு ஆன்மீகத் தந்தையுடன் அமர்ந்திருப்பதாகக் கூறுகின்றார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள், ஆத்மீக உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்; நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராக வேண்டும். இதற்கு அதிக முயற்சி தேவை. உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதுடன், ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என ஆத்மாக்களான நீங்கள் கருதவும் வேண்டும். சிலநேரங்களில் நீங்கள் சட்டநிபுணர்களாகவும், சிலநேரங்களில் ஒன்றாகவும், சிலநேரங்களில் வேறொன்றாகவும் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்கள் ஆண்கள், அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் அல்ல. ஆத்மா கூறுகின்றார்: இது எனது சரீரம். எனவே, இந்த முறையில் சரீரம் பெண்ணாக இருக்கலாம், ஆனால் ஆத்மா ஆண் ஆவார். அனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை உங்களது புத்தியைச் சுத்தமாக்கி, அதை மிகப் பரந்ததாக ஆக்குகின்றார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஒவ்வோர் ஆத்மாவிலும் நல்ல, தீய சமஸ்காரங்கள் உள்ளன. அந்தச் சமஸ்காரங்களுக்கு ஏற்பவே நீங்கள் ஒரு சரீரத்தைப் பெறுகின்றீர்கள். அனைத்தும் ஆத்மாவிலேயே தங்கியுள்ளது. இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. உங்களுடைய லௌகீகத் தந்தையர்களை நீங்கள் பிறவி, பிறவியாக நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இவ்வுலகிற்கு அப்பாலுள்ள உங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். உங்களை மீண்டும், மீண்டும் ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாவாகிய நான் இந்தச் சரீரத்தை எடுத்துள்ளேன். தந்தை இப்பொழுது ஆத்மாக்களான எங்களுக்குக் கற்பிக்கின்றார். இது ஆன்மீகத் தந்தையினால் கொடுக்கப்பட்ட ஆன்மீக ஞானமாகும். குழந்தைகளான நீங்கள் ஆத்ம உணர்வில் இருக்க வேண்டும் என்பதே முதலாவதும், முதன்மையானதுமான விடயமாகும். ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பது மிகவும் உயர்ந்த இலக்காகும். இந்த ஞானம் அந்தளவு உயர்ந்த இலக்கில்லை. இந்த ஞானத்தில் எந்த முயற்சியுமில்லை. உலகச் சக்கரத்தைப் புரிந்துகொள்வதே வரலாறையும், புவியியலையும் புரிந்து கொள்வதாகும். தந்தையே அதிமேலானவர். பின்னர் சூட்சும உலகத் தேவதைகள் இருக்கின்றனர். உலகின் வரலாறும், புவியியலும் மனித உலகிலேயே இருக்கின்றன. சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ எந்த வரலாறும், புவியியலும் இல்லை. அது அமைதி தாமமாகும். சத்தியயுகம் சந்தோஷ தாமம் ஆகும். ஆனால் கலியுகம் துன்ப தாமம் ஆகும். எவருமே இங்கே இராவண இராச்சியத்தில் அமைதியைப் பெறமுடியாது. நீங்கள் ஆத்மாக்கள், அமைதியுலக வாசிகள் என்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். நீங்கள் செயல்கள் செய்கின்றீர்களோ, இல்லையோ அந்த அங்கங்கள் உங்கள் செயல்களைச் செய்வதற்கானவை. நான் ஓர் ஆத்மா, எனது ஆதிதர்மம் அமைதியாகும். நீங்கள் கர்மயோகிகள். நீங்கள் நிச்சயமாகச் செயல்கள் செய்ய வேண்டும்; கர்மத்தின் துறவு எதுவும் இருக்க முடியாது. அந்தச் சந்நியாசிகள் ஒவ்வொருவரும் தமது பாகத்தை நடிக்கின்றனர். அவர்கள் வீடுகளைத் விட்டுச் செல்கின்றார்கள்; அவர்கள் உணவு சமைப்பதில்லை, ஆனால் தொடர்ந்தும் இல்லறத்தினரிடம் தானம் கேட்கின்றார்கள். அவர்கள் உணவை உண்பதற்கு இல்லறத்தினரிடம் செல்ல வேண்டும். அவர்கள் தங்களது வீடுகளையும், குடும்பங்களையும் துறந்துள்ளார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்தும் செயல்களைச் செய்கின்றார்கள். கர்மத்தின் துறவு இருக்க முடியாது. ஆத்மாக்கள் அமைதி தாமத்தில் வசிக்கும் பொழுதே, கர்மத்தின் துறவு இருக்க முடியும். அங்கே பௌதீக அங்கங்களும் இருப்பதில்லை. எனவே எவ்வாறு ஓர் ஆத்மாவால் செயல்களைச் செய்ய முடியும்? இதுவே கர்மஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. அனைவரும் கர்மஷேத்திரத்துக்கு வரவேண்டும். அது அசரீரி உலகான, அமைதி தாமம் ஆகும். ஆத்மாக்கள் பிரம்ம தத்துவத்தில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள் என்றில்லை. ஆத்மாக்கள் அமைதிதாம வாசிகள். அவர்கள் பின்னர் தங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக இங்கு கர்மஷேத்திரத்துக்கு வருகின்றார்கள். இவை விபரமான விடயங்கள். பாபா உங்களுக்குச் சுருக்கமாகக் கூறுகின்றார்: நீங்கள் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள், இதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே பாரதத்தின் புராதன யோகம் என்று அழைக்கப்படுகின்றது. உண்மையில் இது யோகம் என அழைக்கப்பட முடியாது, ஆனால் நினைவேயாகும். இதற்கு முயற்சி தேவை; வெகுசிலரே யோகிகள் ஆகுகின்றனர். முதலில் யோகத்தின் கற்பித்தல்களே இருக்க வேண்டும். பின்னரே இந்த ஞானமாகும். முதலில் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! இதுவே ஆன்மீக நினைவு யாத்திiர் இது ஞான யாத்திரையல்ல. நீங்கள் இதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். சிலர் தங்களைப் பிரம்மாகுமார்களும், குமாரிகளும் என்று அழைத்த பொழுதிலும், தந்தையை நினைவு செய்வதில்லை. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களைப் பிரம்மா மூலம் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். இவர் சரீர உணர்வு உடையவராக இருந்தார், இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவராக ஆகுவதற்கு முயற்சி செய்கின்றார். பிரம்மா கடவுளல்ல, இங்கே மனிதர்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள். ஒரு தனி நபரேனும் தூய்மையானவராகவும், மேன்மையானவராகவும் இல்லை. புண்ணியாத்மா, பாவாத்மா என்று கூறும்பொழுது, அது ஆத்மாவையே குறிக்கின்றது. மனிதர்கள் கூறுகின்றார்கள்: எனது ஆத்மாவைத் தொந்தரவு செய்யாதீர்கள்! எவ்வாறாயினும், அவர்கள் தாங்கள் யார் எனப் புரிந்து கொள்வதில்லை. இவ்வாறு கேட்கப்படுகிறது: ஓ மனித ஆத்மாவே, நீங்கள் என்ன வியாபாரம் செய்கின்றீர்கள்? அவர் பதிலளிப்பார்: ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்தின் மூலம் இன்ன, இன்ன வியாபாரத்தைச் செய்கின்றேன். எனவே, முதலில் அந்த நம்பிக்கையை வைத்திருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். வேறு எவருமன்றி தந்தையாலேயே இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியும். தந்தை வந்து உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். இந்த ஞானத்தில் திறமைசாலிகளாக இருக்கின்றவர்கள், ஆத்ம உணர்வில் மிகவும் உறுதியானவர்களாக இருக்கின்றார்கள் என்றில்லை. ஆத்ம உணர்வு உடையவர்கள் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிப்பார்கள். இந்த ஞானத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் சிவபாபாவை மறந்து விடுகின்றனர். நீங்கள் மீண்டும், மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில் நீங்கள் ஒரு ஜீனியைப் போன்று ஆகவேண்டும். ஜீனியின் கதை ஒன்றுள்ளது. தந்தையும் உங்களுக்கு இந்தப் பணியையே கொடுக்கின்றார். என்னை நினைவு செய்யுங்கள், இல்லையெனில் மாயை உங்களை உண்டு விடுவாள்! மாயையே ஜீனி ஆவாள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், அதிகளவு ஈர்ப்பையும் உணர்வீர்கள். மாயை உங்களைத் தலைகீழாகத் திருப்பி, பல புயல்களைக் கொண்டு வருகின்றாள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் என்பது ஆத்மாக்களாகிய உங்களது புத்திகளில் இருக்க வேண்டும். நீங்கள் இந்தச் சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் சரீர உணர்வு உடையவர் ஆகும்பொழுதே, மாயை உங்களை அறைகிறாள். அவர்கள் ஹதம்தாயின் (ஒருவர் தனது வாயினுள் மணியை இடுதல்) நாடகத்தையும் காட்டுகின்றார்கள். ஒருவர் தனது வாயினுள் ஒரு மணியை இடுகின்ற பொழுது, பிரச்சனை மறைந்து விடுகின்றது. நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது, மாயை உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டாள் என்பதே இதன் அர்த்தம். இதன் காரணமாகவே ஒரு போராட்டம் இருக்கின்றது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்கின்றீர்கள். ஆனால் மாயை உங்களை மூக்கினால் பிடித்து, நினைவில் நிலைத்திருக்க அனுமதிப்பதில்லை. நீங்கள் பின்னர் விரக்தியடைந்து உறங்கச் செல்கின்றீர்கள். மாயையுடன் அதிகளவு யுத்தம் உள்ளது. எவ்வாறாயினும் உலகின் வரலாறும், புவியியலும் மிகவும் இலகுவானது. உங்களுடைய 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைகின்றன, நீங்கள் இப்பொழுது பாபாவைச் சந்திக்கச் செல்கின்றீர்கள் என்று எப்பொழுதும் எண்ண வேண்டும் என உங்களுக்கு மீண்டும், மீண்டும் கூறப்பட்டுள்ளது. இதை நினைவு செய்வது கடினமானது, ஆனால் இதை எவருக்கும் விளங்கப்படுத்துவது கடினமானதல்ல. நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றீர்கள் என்று நினைக்க வேண்டாம்; இல்லை. நினைவே முதல் விடயமாகும். கண்காட்சிகளுக்குப் பலரும் வருகின்றார்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள், அதனால் அவர்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகிறார்கள் என்ற முதல் பாடத்தை அவர்களுக்குக் கற்பியுங்கள். இதுவே அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய முதற் பாடமாகும். வேறு எவராலுமே பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தை வந்து அதைக் கற்பிக்கும் பொழுதே உங்களால், அதைக் கற்க முடியும். மனிதர்களால் மனிதர்களுக்கு இராஜயோகம் கற்பிப்பது அசாத்தியம். சத்தியயுகத்தில் நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள், அங்கே நீங்கள் வெகுமதியை அனுபவம் செய்கின்றீர்கள். அங்கே இந்த ஞானம் அல்லது அறியாமை என்ற கேள்வியே கிடையாது. பக்தி மார்க்கத்திலேயே மக்கள் தங்களது துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருளுமாறு அவரை அழைக்கின்றனர். சத்திய, திரேதா யுகங்களில் குருமாரும், சாதுக்களும் இருக்க மாட்டார்கள். அங்கே அவர்கள் சற்கதி பெற்றுள்ளார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு அல்லது 21 தலைமுறைகளுக்குச் சற்கதி எனும் உங்களின் ஆஸ்தியைக் கோர முடியும். பிரம்மாகுமாரி ஒருவர் 21 தலைமுறைகளை ஈடேற்றுபவர் எனக் கூறப்பட்டுள்ளது. இது பாரதத்திலேயே நினைவுகூரப்படுகின்றது. பாரதத்திலேயே நீங்கள் 21 தலைமுறைகளுக்கு ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அங்கே நீங்கள் ஒரேயொரு தேவ தர்மத்திற்குச் சொந்தமானவர்கள், அங்கே வேறெந்த மதங்களும் இருக்க மாட்டாது. தந்தை வந்து உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். எவ்வாறு நாங்கள் தூய்மை ஆகாமல் வீடு திரும்ப முடியும்? இங்குள்ள அனைவரும் தூய்மை அற்றவர்களும், விகாரமானவர்களும் ஆவர். ஒரு சமயத்தை ஸ்தாபிப்பவர் தங்கள் சமயம் தொடர்ந்தும் வளரும் பொழுது, அதைப் பராமரிக்கவும் வேண்டும். எவராலும் வீடு திரும்ப முடியாது. ஒரு நடிகராலும் வீடு திரும்ப முடியாது. அனைவரும் சதோபிரதானாகி, சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்ல வேண்டும். பிரம்மாவுக்கும் கூறப்பட்டுள்ளது: பிரம்மாவின் இரவும், பிரம்மாவின் பகலும். உலகில் பிரம்மா மாத்திரம் இருப்பாரா? நீங்கள் இப்பொழுது பிராமணக் குலத்தின் ஒருவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் இரவில் இருந்தீர்கள், இப்பொழுது பகலுக்குச் செல்கின்றீர்கள். எவ்வளவு காலம் நீங்கள் பூஜிக்கத்தக்கவராக இருந்தீர்கள் என்றும், எத்தனை பிறவிகளுக்குப் பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள் என்றும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை வரும் வரை, எவருமே சீரழிந்தவர்களில் இருந்து, மேன்மையானவர்கள் ஆகமுடியாது. விகாரத்தின் மூலம் பிறப்பவர்களே சீரழிந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இதனாலேயே இது நரகம் என அழைக்கப்படுகின்றது. சுவர்க்கம், நரகம் இரண்டிலும் துன்பம் இருந்திருந்தால், அப்பொழுது சுவர்க்கத்தைச் சுவர்க்கம் என்று அழைக்க முடியாது. ஒருவர் இதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளும்வரை, தொடர்ந்தும் தவறான கேள்விகளையே கேட்பார். பாரதம் மிகவும் மேன்மையாக இருந்தது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறு கடவுளின் புகழ் முடிவற்றதோ, அதேபோன்று பாரதத்தின் புகழ்ச்சியும் முடிவற்றது. பாரதம் என்னவாக இருந்தது? யார் அதனை அவ்வாறு ஆக்கியது? நீங்கள் புகழ்பாடுகின்ற தந்தையே அதனை அவ்வாறு ஆக்கியவர். தந்தை வந்து குழந்தைகளான உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் மனிதர்கள் அனைவரையும் சீரழிவிலிருந்து சற்கதிக்குள் அழைத்துச் செல்கின்றார். அவர் மனிதர்கள் செல்வதற்கு முயற்சி செய்கின்ற, அமைதி தாமத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றார். அதுவே முழுமையான சந்தோஷமும், முழுமையான அமைதியும், முழுமையான தூய்மையும் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே, நீங்கள் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருக்கின்றீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதியில் மாத்திரம் இருக்கின்றார்கள். நீங்கள் அதிகபட்ச எண்ணிக்கையான பிறவிகளை எடுக்கின்றீர்கள். குறைந்தளவு பிறவிகளை எடுக்கின்றவர்கள், முழுமையான அமைதியில் இருக்கின்றார்கள். அவர்கள் நுளம்புகளைப் போன்று வந்து, தங்கள் பாகங்களை ஒரு பிறவிக்கோ அல்லது அரைப் பிறவிக்கோ நடிக்கின்றார்கள். அதில் என்ன பெறுமதி உள்ளது? அவர்களுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. நுளம்புகளுக்கு என்ன பெறுமதி உள்ளது? அவை இரவில் பிறந்து, இரவில் இறக்கின்றன. இன்றைய குருமார் மௌனத்திற்குள் செல்பவர்களாக உள்ளதால், அதிகளவு மக்கள் அமைதியை விரும்புகின்றனர். நீங்கள் இங்கே சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு வந்துள்ளீர்கள். சுவர்க்கவாசிகளை, அமைதி தாமவாசிகள் என்று அழைப்பதில்லை. அசரீரி உலகில் வசிப்பவர்களே அமைதி தாமவாசிகள் ஆவார்கள். மக்கள் “முக்தி” என்ற வார்த்தையைத் தங்கள் குருமாரிடமிருந்து கற்றுள்ளார்கள். பெண்கள் வைகுந்தத்திற்குச் செல்வதற்காக விரதம் இருக்கின்றார்கள். ஒருவர் இறக்கின்ற பொழுது, அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என மக்கள் கூறுகின்றனர். அவர்கள் உண்மையில் அவ்வாறு ஆகுவதில்லை, ஆனால் பாரத மக்கள் சுவர்க்கத்தில் நம்பிக்கை உடையவர்கள்; பாரதம் வைகுந்தமாக இருந்தது என்று அவர்கள் நம்புகின்றனர். சிவபாபா பாரதத்தில் வந்து சுவர்க்கத்தை உருவாக்குகின்றார். எனவே, அவர் நிச்சயமாக அதை இங்கேயே உருவாக்கியிருப்பார். அவர் அதைச் செய்வதற்குச் சுவர்க்கத்துக்கு வர மாட்டார். அவர் கூறுகின்றார்: நான் சுவர்க்கத்தினதும், நரகத்தினதும் சங்கமத்தில் வருகின்றேன். நான் கல்பம் கல்பமாகச் சங்கமயுகத்தில் வருகின்றேன். அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக அவர்கள் எழுதி உள்ளார்கள்; அவர்கள் “சக்கரம்” என்ற வார்த்தையை மறந்து விட்டார்கள். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது, பின்னர் அது மீண்டும் மீண்டும் நடைபெறும். நீங்கள் இந்த இறுதிப் பிறவியில் தந்தையையும், உலகச் சக்கரத்தையும் அறிந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது எவ்வாறு ஸ்தாபனை இடம்பெறுகின்றதென வரிசைக்கிரமமாக அறிகின்றீர்கள். இந்த முழு நாடகமும் பாரத மக்களான உங்களையே அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் இப்பொழுது தந்தையுடன் இராஐயோகம் கற்கின்றீர்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், நீங்கள் இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். படங்களும் இருக்கின்றன. யார் இந்தப் படங்கள் அனைத்தையும் உருவாக்கியவர்? இவர் எந்தக் குருமார்களையும் கொண்டிருக்கவில்லை. இவர் ஒரு குருவைக் கொண்டிருந்தால், அந்தக் குருவுக்கு ஒரு சீடர் மாத்திரமே இருந்திருக்க முடியாது! அவருக்குப் பல சீடர்கள் இருந்திருப்பார்கள். வேறு எவருமன்றி, ஒரேயொரு தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தை அறியமுடியும். மக்கள் “உங்களுடைய தாதாவா இந்தப் படங்களை உருவாக்கினார்” எனக் கேட்கின்றார்கள். தந்தை தெய்வீகப் பார்வை மூலம் காட்சிகளை அருளினார். அவர் வைகுந்தத்தின் காட்சிகளையும் அருளினார். அங்கே எவ்வாறு ஒரு பாடசாலை நடைபெறும் எனவும், அங்கே என்ன மொழி இருக்குமெனவும் நீங்கள் காட்சிகளைக் கண்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒரு சூளையில் இருந்தபொழுது, பாபா உங்களுக்குக் களிப்பூட்டுவார். கராச்சியில் நீங்கள் தனிமையில் வசித்தீர்கள், அப்பொழுது அது உங்கள் இராச்சியம் போன்றிருந்தது. நீங்கள் உங்களுக்கு உரியவையாக அனைத்தையும் கொண்டிருந்தீர்கள். ஏனையோரால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அது குதாவின் (கடவுளின்) சபை என நம்பினீர்கள். நீங்கள் வேறு எவருக்குமன்றி, ஒரேயொருவருக்கே சொந்தமான, கன்னியாஸ்திரிகள் ஆவீர்கள் என்று பாபா விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறெவரையும் நினைவு செய்யக்கூடாது. கன்னியாஸ்திரிகள் வேறெவருக்குமன்றி, கிறிஸ்துவுக்கு மாத்திரமே சொந்தமானவர்கள். நீங்கள் உங்களின் ஆஸ்தியைச் சிவபாபாவிடம் இருந்து மாத்திரமே பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். சிவபாபா ஒரு புள்ளியாவார். அவர் எவராவது ஒருவர் மூலம் விளங்கப்படுத்தவும் வேண்டும். பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக இங்கேயே இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரது தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகித்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். இதற்கு முயற்சி தேவை. இதுவே அதியுயர்ந்த இலக்காகும். இந்த முயற்சியைச் செய்வதனால், ஆத்மாவாகிய உங்களைச் சதோபிரதான் ஆக்குங்கள்.2. ஒரு ஜீனியாகி நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். மாயை எத்தனை தடைகளைக் கொண்டு வந்தாலும் பரவாயில்லை. உங்கள் வாயினுள் ஒரு மணியை இடுங்கள். மாயையினால் விரக்தி அடையாதீர்கள். ஒரேயொருவரின் நினைவில் நிலைத்திருந்து, புயல்களை அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் வசதிகளைப் (சாதன்) பயன்படுத்தும் வேளையில், ஆன்மீக முயற்சியை (சாதனா) உங்களின் அத்திவாரம் ஆக்கிக் கொள்வதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.நீங்கள் பழைய உலகின் கவர்ச்சியான ஒரு காட்சியைப் பார்க்கும்போது அல்லது எதையாவது பார்த்து அந்த வசதிகளைத் தற்காலிகமான சந்தோஷத்திற்காகப் பயன்படுத்தும்போது, நீங்கள் அந்த வசதிகளின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறீர்கள். அந்த வசதிகளின் ஆதாரத்தில் செய்யப்படும் ஆன்மீக முயற்சியானது, மணலின் அத்திவாரத்தில் கட்டப்படும் கட்டடம் போன்றதாகும். ஆகவே, உங்களின் அழியாத ஆன்மீக முயற்சியை எந்தவொரு அழியும் வசதிகளின் அடிப்படையில் செய்யாதீர்கள். வசதிகள் பெயரளவிலேயே உள்ளன. ஆனால் உங்களின் ஆன்மிக முயற்சி, கட்டுமானத்திற்குரிய அடிப்படை ஆகும். ஆகவே, உங்களின் ஆன்மீக முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவும்.
சுலோகம்:
பலவீனத்தின் சுவடேனும் இருக்குமாயின், அதன் சந்ததியை அது உருவாக்கி உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
உங்களின் புத்தியை ஏதாவதொன்றின் மீது ஒருமுகப்படுத்துவதற்காக உங்களுக்குக் காட்டப்பட்டிருக்கும் வழிமுறையை உணர்ந்தவராக இருங்கள். அதைத் தளம்பல் அடைய அனுமதிக்காதீர்கள். சரீரங்கள் மற்றும் பௌதீக உலகத்தில் இருந்து பற்றற்றவர் ஆகுங்கள். உங்களின் மனம் மற்றும் புத்தி என்ற விமானத்தால் ஒரு விநாடியில் பௌதீக மற்றும் அசரீரி ஸ்திதிகளை அனுபவம் செய்யுங்கள். உங்களின் புத்தியைத் தளம்பல் அடைய அனுமதிக்காதீர்கள். இல்லாவிட்டால், போராடுவதிலேயே அதிகளவு நேரம் வீணாக்கப்படும். எப்படி தபஸ்விகள் ஒரு விசேடமான ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்களோ, அதேபோல், உங்களின் நிலையான ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். அப்போது மட்டுமே உங்களால் உங்களின் எதிர்கால சிம்மாசனத்தைப் பெற முடியும்.