20.09.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2011 Om Shanti Madhuban
அமிர்தவேளையில், குறிப்பாக சகல சக்திகளின் சொரூபத்தை அனுபவம் செய்து சூழலில் யோகத்தின் சகாஷைப் பரப்புங்கள். உங்களின் மனதை சதா மும்முரமாக வைத்திருங்கள். காலத்தின் அழைப்பானது: நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரின் நெற்றிகளிலும் பாக்கிய நட்சத்திரங்கள் பிரகாசிப்பதைப் பார்க்கிறார். ஒன்று உங்களின் பிறப்பின் பாக்கியம். இரண்டாவது உங்களின் உறவுமுறைகளின் பாக்கியம். மூன்றாவது, பேறுகளின் பாக்கியம். இந்த மூன்று பாக்கியங்களையும் பார்ப்பதில் பாபா களிப்படைகிறார். உங்களின் பிறப்பின் பாக்கியத்தை நீங்கள் அறிவீர்கள் - அதாவது, பாக்கியத்தை அருள்பவரான அவரே உங்கள் அனைவருக்கும் இந்தத் தெய்வீகப் பிறப்பை, இந்த பிராமணப் பிறப்பை வழங்கி உள்ளார். எனவே, உங்களின் பாக்கியம் எத்தனை மகத்தானது என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! அத்துடன்கூடவே, உறவுமுறைகளும் உள்ளன. அவர்களின் சிறப்பியல்புகளை நீங்கள் அறிவீர்கள்: உங்களிடம் ஒரேயொரு தந்தையில் தந்தை, ஆசிரியர், சற்குரு என்ற மூன்று உறவுமுறைகளும் உள்ளன. ஒரேயொருவரில் மூன்று உறவுமுறைகளும் உள்ளன. எங்கே தந்தை இருக்கிறாரோ, அங்கே பேறுகள் உள்ளன – சகல பேறுகளும் அத்துடன் எல்லையற்ற பேறுகளும். மூன்று உறவுமுறைகளும் ஒரேயொருவருடன் உள்ளன. பொதுவாக, இந்த மூன்று உறவுமுறைகளும் வாழ்க்கைக்கு அவசியமானவை. எவ்வாறாயினும், உலகிலுள்ள மக்களுக்கு உறவுமுறைகள் அனைத்தும் வெவ்வேறானவை. ஆனால் உங்களுக்கு இந்த மூன்று உறவுமுறைகளும் ஒரேயொருவருடனேயே உள்ளன. ஒரேயொருவருடன் மூன்று உறவுமுறைகளையும் கொண்டிருப்பதனால், நீங்கள் இலகுவாக நினைவை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மூன்று உறவுமுறைகளையும் அனுபவம் செய்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் தந்தையிடம் இருந்து எதைப் பெறுகிறீர்கள்? ஓர் ஆஸ்தி. நீங்கள் தந்தையான கடவுளிடம் இருந்து பெறுவதனால் அத்தகைய மேன்மையான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள், இந்த ஆஸ்தி நீண்ட காலம் நிலைத்திருக்கும். இரண்டாவது உறவுமுறை, ஆசிரியருக்கு உரியது. கற்பித்தல்கள் உங்களின் வருமானத்தின் மூலாதாரம் எனப்படுகின்றன. எனவே, நீங்கள் அனைவரும் ஆசிரியரிடம் இருந்து பெற்ற பேறு மிகப்பெரியது. இதை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? உங்களால் தந்தையான பரமாத்மாவைத் தவிர வேறு எவரிடம் இருந்தும் இத்தகைய பெரிய பேற்றினைப் பெற முடியாது. நீங்கள் பெறுகின்ற கற்பித்தல்களால் ஓர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள், அத்துடன் உங்களுக்கு மேன்மையான பேறு கிடைக்கிறது. உலகில், இராஜ அந்தஸ்தே மேன்மையான அந்தஸ்து எனப்படுகிறது. நீங்களும் ஆசிரியரிடம் இருந்து ஓர் இராஜ அந்தஸ்தைப் பெற்றுள்ளீர்கள். இப்போதும் நீங்கள் சுய இராச்சிய அரசர்கள் ஆவீர்கள். ஏன்? இராஜ யோகிகளாக இருப்பதனால், ஆத்மாக்களான நீங்கள் உங்களுக்கே அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே ஆள்கின்றீர்கள். ஆத்மாக்களான நீங்கள் உங்களின் பௌதீகப் புலன்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவதில்லை. ஆத்மாக்கள் அதிபதிகளாகவும் தமது பௌதீகப் புலன்களின் அரசர்களாகவும் ஆகுகிறார்கள். எனவே, இப்போது உங்களுக்கு சுய இராச்சிய அதிகாரம் உள்ளது. அத்துடன் எதிர்காலத்திலும் நீங்கள் உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். எனவே, உங்களுக்கு இரட்டை இராச்சியம் உள்ளது: இப்போதும் எதிர்காலத்தில் நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தும் உள்ளன. மூன்றாவது உறவுமுறை, சற்குருவுக்கு உரியது. நீங்கள் மூன்று உறவுமுறைகளையும் பெற்றுள்ளீர்கள், அல்லவா? தந்தை, ஆசிரியர், மூன்றாவது சற்குரு. நீங்கள் சற்குருவிடம் இருந்து குருவின் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் பெற்றுள்ள வழிகாட்டல்கள் எத்தனை மேன்மையானவை! உங்களையே சோதித்துப் பாருங்கள்: நான் சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறேனா? அல்லது எனது புத்தி சிலவேளைகளில் எனது கட்டளைகள் அல்லது மற்றவர்களின் கட்டளைகளை நோக்கித் திரும்புகிறதா? நீங்கள் உங்களையே சோதித்துப் பார்த்தீர்களா? நீங்கள் எப்போதும் மேன்மையான வழிகாட்டல்களான, ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள், உங்களின் கனவுகளிலேனும் ஒருபோதும் உங்களின் சொந்த அல்லது மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதில்லை என்று நம்பினால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன் ஒருபோதும் தங்களின் அல்லது மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றாதவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்!
பாருங்கள், தாய்மார்கள் தமது கைகளை உயர்த்தினார்கள். நீங்கள் மெதுவாக அவற்றை உயர்த்துகிறீர்கள். சிலவேளைகளில், உங்களின் புத்திகள் அந்தத் திசையில் செல்கின்றன. அதாவது, மற்றவர்களின் கட்டளைகள் அல்லது உங்களின் சொந்தக் கட்டளைகள் உங்களை ஏமாற்றுகின்றன. எனவே, அதி முக்கியமான ஸ்ரீமத் என்ன? உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, உங்களின் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! இது இலகுவா அல்லது கஷ்டமா? இது சிலவேளைகளில் கஷ்டமாக இருக்கிறதா? எவ்வாறாயினும் ஒவ்வொரு குழந்தையும் இந்த மூன்று உறவுமுறைகளுடன் சதா முன்னே பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே தந்தை விரும்புகிறார். எனவே, பாப்தாதா உங்களிடம் கேட்கிறார்: உங்களின் கைகளை உயர்த்தாதவர்கள் - உங்களால் இன்றில் இருந்து உங்களின் சொந்த மனதின் கட்டளைகளையும் மற்றவர்களின் கட்டளைகளையும் பின்பற்றுவதை விட்டுவிட முடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. பாப்தாதா ஏற்கனவே உங்களுக்கு காலத்தின் சமிக்ஞையைக் கொடுத்துள்ளார். இப்போது, சங்கமயுகத்தின் நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அத்துடன் இந்த நேரத்திற்கேற்ப, அனைத்தும் சடுதியாக நடக்கலாம் என்ற சமிக்ஞையையும் பாப்தாதா உங்களுக்கு வழங்கி உள்ளார். அதனால், நீங்கள் சதா என்றும் தயாராக இருக்க வேண்டும், அப்படியல்லவா? நீங்கள் அனைவரும் ஒன்றாக வீடு திரும்பிச் செல்லப் போகின்றீர்கள்தானே? அல்லது, நீங்கள் பின்னால் செல்வீர்களா? நீங்கள் பாப்தாதாவுடன் சேர்ந்து வீடு திரும்ப விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்தானே? ஒன்றாக வீடு திரும்புவதற்கு நீங்கள் தயாரா? என்றும் தயார்! வெறுமனே தயார் அல்ல, ஆனால் என்றும் தயார்! பாப்தாதா உங்களுக்கு காலத்தின் சமிக்ஞையை வழங்குகிறார். இந்த ஒரு பிறவியில், நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்களின் வெகுமதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். தந்தை ஒவ்வொரு குழந்தையின் மீதும் அன்பு வைத்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தந்தையுடன் திரும்பிச் சென்று, அதேவேளை இராச்சியத்திற்கான உரிமையையும் கோர வேண்டும் என்றே தந்தை விரும்புகிறார்.
எனவே, உங்களால் ஒன்றாக வீடு திரும்ப முடியும். ஆனால் நீங்கள் தந்தையைப் போன்று சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகினால் மட்டுமே உங்களால் தந்தையுடன் வீடு திரும்பிச் செல்ல முடியும். இந்த வேளையில், இந்தச் சிறிய பிறப்பில், 21 பிறவிகளுக்கான பேற்றுக்கான உத்தரவாதம் உள்ளது. எனவே, சங்கமயுகத்தின் இந்தச் சிறிய பிறப்பின் ஒவ்வொரு நிமிடமும் எத்தனை மகத்தானது எனச் சிந்தித்துப் பாருங்கள்! இதைக் கணக்கிட்டுப் பாருங்கள்: நீங்கள் இந்தப் பிறவியில் 21 பிறவிகளுக்கான உங்களின் இராச்சிய பாக்கியத்தை நீங்கள் கோர வேண்டும். எனவே, சங்கமயுகத்தின் ஒரு நிமிடமும் எத்தனை பெறுமதி வாய்ந்தது! ஆகவே, இந்தப் பெறுமதியை அறிந்திருப்பதனால் இப்பொழுதில் இருந்தே நீங்கள் என்ன செய்வீர்கள்?
இரண்டு விடயங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். இந்த இரண்டு விடயங்களும் எவை? நீங்கள் இவற்றை நினைவு செய்கிறீர்கள்தானே? ஒன்று உங்களின் நேரம், மற்றையது உங்களின் எண்ணங்கள். உங்களின் எண்ணங்கள் வீணாக்கப்படக் கூடாது. உங்களின் நேரமும் வீணாக்கப்படக் கூடாது. ஒவ்வொரு வினாடியும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, கூறுங்கள்! நீங்கள் அந்தளவு கவனம் செலுத்துவீர்கள், அல்லவா? பாப்தாதாவிற்குக் குழந்தைகளான உங்கள் அனைவரின் மீதும் அன்பு உள்ளது. பாப்தாதா எந்தவொரு குழந்தையும் தனது சகவாசம் இல்லாமல் இருக்கக்கூடாது என்றே விரும்புகிறார். நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள், வீட்டுக்கு ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள், நீங்கள் ஒன்றாகவே இராச்சியத்திற்கான உரிமையைக் கோரிக் கொள்வீர்கள், சதா உங்களின் வாழ்க்கைகளில் சந்தோஷத்தையும் அமைதியையும் அனுபவம் செய்வீர்கள். எனவே கூறுங்கள்! நீங்கள் ஒன்றாக வீடு திரும்பிச் செல்வீர்கள்தானே? நீங்கள் செய்வீர்கள், அல்லவா? நீங்கள் பின்தங்கி விடப்பட மாட்டீர்கள், அல்லவா? பாருங்கள், ஒவ்வொருவரின் நெற்றியிலும் மூன்று வகையான பாக்கியமும் ஜொலிக்கின்றது. இந்த மூன்று வகையான பாக்கியமும் உங்களின் நெற்றியில் புலப்படுகிறதுதானே? சங்கமயுகம், உங்களின் பாக்கிய யுகம் ஆகும். உங்களில் எவராலும் நீங்கள் விரும்பிய அளவு பாக்கியத்தை உருவாக்க முடியும். எவ்வாறாயினும், நீங்கள் நீண்ட காலத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும். எனவே இப்போது, குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த முயற்சிகளில் தீவிரத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் முயற்சியாளர்கள். நீங்கள் முயற்சி செய்வதை பாப்தாதா பார்க்கிறார். ஆனால் இப்போது அனைவரும் தீவிர முயற்சி செய்ய வேண்டும். இப்போது ஒவ்வொரு குழந்தையும் ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருப்பதைக் காணவே பாப்தாதா விரும்புகிறார். எதன் அதிபதி? சகல பொக்கிஷங்களினதும் அதிபதி. சிலவேளைகளில், சில குழந்தைகள் பாப்தாதாவிடம் கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் சகல சக்திகளையும் கொடுத்துள்ளீர்கள், நாங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும், பின்னர் குழந்தைகள் பலரும் முறைப்பாடு செய்கிறார்கள்: சிலவேளைகளில், எங்களுக்குத் தேவையான சக்தி, அந்த வேளையில் எங்களிடம் வருவதில்லை. இதற்கான காரணம் என்ன? தந்தை ஒவ்வொருவருக்கும் சகல சக்திகளையும் வழங்கி உள்ளார். அவர் அவற்றைக் கொடுத்துள்ளாரா அல்லது சிலருக்குக் குறைவாகவும் ஏனையோருக்கு அதிகமாகவும் கொடுத்துள்ளாரா? இதற்கான காரணமும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த வேளையில் நீங்கள் அதை மறந்து விடுகிறீர்கள். ஒவ்வொரு குழந்தையும் சகல சக்திகள் என்ற பொக்கிஷத்தை ஓர் ஆஸ்தியாகப் பெற்றுள்ளார். தந்தை அனைவருக்கும் சகல சக்திகள் என்ற ஆஸ்தியை வழங்கியுள்ளார். அவர் சிலருக்குக் குறைவாகவும் ஏனையோருக்கு அதிகமாகவும் கொடுக்கவில்லை. அவர் சகல சக்திகளையும் வழங்கியுள்ளார். ஆனால் அந்த வேளையில் ஏன் அவை உங்களிடம் வருவதில்லை? சிந்தித்துப் பாருங்கள்: ஒருவர் தனது சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்காவிட்டால், யாராவது அவரின் கட்டளையை ஏற்றுக் கொள்வாரா? எனவே, அந்தச் சக்தி உங்களிடம் வராதபோது, அதற்கான காரணம், நீங்கள் உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் அமரச் செய்யாததே ஆகும். ஆகவே, நீங்கள் உங்களின் ஆசனத்தில் இல்லாதபோது, எவரும் உங்களின் கட்டளையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, எப்போதும் உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். சிலவேளைகளில், உங்களுக்கு வீணான எண்ணங்கள் தோன்றுகின்றன. சிலவேளைகளில், உங்களிடம் பதட்டம் காணப்படுகிறது. எனவே, அந்த வேளையில் நீங்கள் உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தைக் கைவிட்டு விடுகிறீர்கள். பாப்தாதா உங்கள் ஒவ்வொருவருக்கும் சுயமரியாதைக்காகப் பல கருத்துக்களை வழங்கியுள்ளார். சுயமரியாதை ஆசனம் மிகவும் பெரியது! தந்தை சுயமரியாதைக்காக எத்தனை கருத்துக்களை வழங்கி உள்ளார் என்று கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் உங்களின் சுயமரியாதை ஆசனத்தில் அமராவிட்டால், அதன்பின்னர் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அது தெரியும்தானே? சரீர உணர்வு ஏற்படும். ஒன்றில் சுயமரியாதை இருக்கும் அல்லது சரீர உணர்வு இருக்கும். சரீர உணர்வெனும் ஆசனத்தில் அமர்ந்தவண்ணம் நீங்கள் ஒரு கட்டளை இடும்போது, உங்களின் சக்திகள் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டாது. இல்லாவிட்டால், மாஸ்ரர் சர்வசக்திவான்கள் கூறுவதை சக்திகள் கேட்காமல் போவது என்பது சாத்தியமே இல்லை. சதா உங்களின் ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் கர்மயோகா, சேவை அல்லது கடைதல் செய்யும்போது, நீங்கள் உங்களின் ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருக்கிறீர்களா என்பதையும் உங்களின் சக்திகள் அனைத்தும் பிரசன்னமாக உள்ளனவா என்பதையும் சோதித்துப் பாருங்கள்.
இன்று, பாப்தாதா அமிர்தவேளையின் போது சுற்றுப்பயணம் செய்தார். வெளிநாடுகள் மற்றும் இங்கே எங்கும் சுற்றி வரும்போது - பாப்தாதாவிற்கு எங்கும் சுற்றி வருவதற்கு அதிக நேரம் எடுக்காது – அவர் எதனைக் கண்டார்? பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பெரும்பாலான குழந்தைகள் அமிர்த வேளையின் போது அமர்ந்திருந்தார்கள். அவர்கள் விழித்தெழுந்து, தத்தமது சொந்த இடங்களில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லா வேளைக்கும் அனுபவ ரூபம் ஆகுகின்ற முயற்சியைச் செய்தவண்ணம் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அது தேவையாக இருந்தது, ஆனால் பாபா எதைக் கண்டார்? உங்களில் சிலர் அனுபவ ரூபங்களாக இருந்தீர்கள். ஏனென்றால், அனுபவமே மகத்தான சக்தியாகும். அனுபவ சொரூபமாக, சகல சக்திகளின் அனுபவ சொரூபமாக, மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராக, மாஸ்ரர் சகல சக்திகளின் சொரூபமாக இருப்பதாகும். எவ்வாறாயினும், நீங்கள் அனுபவ ரூபமாக ஆகுவதில் ஏதோ குறைவாக இருந்தது. நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். பாப்தாதா உங்களைப் பராட்டுகிறார். ஏனென்றால், உங்களில் பெரும்பாலானோர் வந்து முயற்சி செய்கிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், பாப்தாதா உங்களை ஒளி மற்றும் சக்தியின் அனுபவ சொரூபத்தின் ரூபமாக அமர்ந்திருப்பதையே விரும்புகிறார். இது ஏனென்றால், அமிர்த வேளையின் போது உங்களின் யோகத்தின் சகாஷ் சூழலில் எங்கும் பரவுகிறது. இந்த அனுபவத்தை மேலும் அதிகரியுங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். அவரின் ஸ்திதி, சக்திவாய்ந்த, தேவதை ரூபமாக இருந்தது. உங்களுக்கே உரிய முறையில் களைப்பற்றவராக அமிர்த வேளையில் கவனம் செலுத்துங்கள். சில குழந்தைகள் ஒளி மற்றும் சக்தி ரூபத்தில் அமர்ந்திருப்பதை பாப்தாதா கண்டார். அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை என்பதல்ல. அவர்கள் அந்த முறையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த நேரத்திற்கான (அமிர்தவேளை) முயற்சியில் மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களின் மனதை சதா மும்முரமாக வைத்திருக்க வேண்டும் என்று பாப்தாதா முன்னரே உங்களுக்கு சமிக்கை கொடுத்துள்ளார். நீங்கள் உங்களின் மனம் மூலம், வார்த்தைகளின் மூலம் அல்லது கடைதல் சக்தியால் சேவை செய்தாலும் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருங்கள். ஞானத்தைக் கடையுங்கள். கடையும் சக்தியானது உங்களின் மனதை ஒருமுகப்படச் செய்கிறது. சில குழந்தைகள் நன்றாகக் கடைகிறார்கள். ஆனால் நீங்கள் இப்போது நாள் முழுவதும் உங்களின் கடையும் சக்தியை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், கடைசிக் குழந்தையின் மீதும் பாப்தாதா அன்பு வைத்திருக்கிறார். கடைசிக் குழந்தையும் தன்னுடன் வீடு திரும்ப வேண்டும், அவர் விடுபட்டு விடக்கூடாது என்றே பாப்தாதா விரும்புகிறார். அவர் பின்னால் விடுபடக் கூடாது. எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? கவனம் செலுத்துங்கள்!
இன்றுள்ள ஒன்றுகூடலைப் பார்க்கும்போது, நிச்சயமாக விரிவாக்கம் நடக்கப் போகிறது என்பதை பாப்தாதா அறிந்துள்ளார். நீங்கள் 75 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடி உள்ளீர்கள். அதற்காகக் குழந்தைகளான உங்களை பாப்தாதா பாராட்டுகிறார். குழந்தைகளான உங்களுக்குச் சேவையின் மீதுள்ள அன்பையும் பாப்தாதா பார்த்தார். ஒவ்வோர் இடத்தில் உள்ளவர்களும் உற்சாகத்தைக் கொண்டிருந்தார்கள். அத்துடன் சேவையின் பலனும் சக்தியும் புலப்பட்டன. குழந்தைகள் சேவை செய்த இடங்களில் குறிப்பாக அரசாங்கத்தில் கருவிகளாக இருந்த ஆத்மாக்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கே வெளிப்பட்டதை பாப்தாதா பார்த்தார். தற்போதைய நேரத்திற்கேற்ப, துன்பமும் அமைதி இன்மையும் அதிகரிக்கும் வேளையில், அதன் விளைவாக நீங்கள் தேர்ந்து எடுத்துள்ள தலைப்பு அத்தியாவசியமானது என்பதை பாபா அறிவார். ஏனென்றால், அவர்களுக்கு எவ்வளவு அதிகமாக அமைதி தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அமைதி இன்மை அதிகரிக்கும். ஏதாவதொரு வகையான அமைதி இன்மை நிச்சயமாக ஏற்படும். இந்தக் காரணத்தால், எங்கும் பதட்டமும் அதிகரிக்கிறது. பாரதம் பதட்டத்தில் இருந்து விடுபட்டதாக ஆகவேண்டும் என்றே அரசாங்கமும் விரும்புகிறது. எனவே, சேவை செய்த குழந்தைகள் அனைவரையும் பாப்தாதா பாராட்டுகிறார். சேவை செய்யப் போகின்றவர்களுக்கும் பாபா முன்கூட்டியே வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
இப்போது ஒவ்வொரு குழந்தையும் தந்தையைப் பின்பற்றி, நிச்சயமாக தந்தையைப் போல் சம்பூரணம் ஆகவேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் முயற்சி செய்வதை பாப்தாதா கண்டார். நீங்கள் முயற்சி செய்ய விரும்புகிறீர்கள். அத்துடன் நீங்கள் உங்களுக்கே பல சத்தியங்களையும் செய்கிறீர்கள்: ‘நான் இதை இனிமேலும் செய்ய மாட்டேன்! நான் இதை இனிமேல் செய்ய மாட்டேன்!’ எவ்வாறாயினும், இதற்கான காரணம் என்ன? உங்களின் முயற்சிகளில் திடசங்கற்பம் குறைவாக இருப்பதே அதற்கான காரணம் ஆகும். இடையில் கவனக்குறைவு ஏற்படுகிறது. ‘அது நடக்கும், நான் வருவேன்.....’ இந்தக் கவனக்குறைவானது உங்களின் முயற்சிகளைப் பின்னடையச் செய்கிறது. எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்போது, இதில் விசேட கவனம் செலுத்துங்கள். நாள் முழுவதும் உங்களின் மனதை மும்முரமாக வைத்திருப்பதற்கு உங்களுக்காக சொந்தத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் சொந்த நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும். உங்களின் மனதை மும்முரமாக வைத்திருப்பதற்கு உங்களின் சொந்த நேர அட்டவணையை உருவாக்குங்கள். நீங்கள் கடைதல், சேவை செய்தல் அல்லது ஒருவர் மற்றவரின் கவனத்தை ஈர்த்தல் என்று எதைச் செய்தாலும், உங்களின் மனதை மும்முரமாக வைத்திருங்கள்! உங்களின் மனதில் மும்முரமாக இருங்கள். நீங்கள் பௌதீகமாக மும்முரமாகவே இருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களின் மனதால் மும்முரமாக இருங்கள். உங்களின் மனதை மும்முரமாக வைத்திருப்பதன் மூலம் முதலாம் இலக்க வியாபாரி ஆகுங்கள். உங்களால் இதைச் செய்ய முடியுமா? நீங்கள் இதைச் செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? தந்தை பிரம்மாவும் உங்களுக்காகக் காத்திருக்கிறார், உங்களின் முன்னோடிக் குழுவினரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எப்போது காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருவீர்கள்? ஏனென்றால் நீங்களே காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதற்குப் பொறுப்பானவர்கள். உங்களை சம்பூரணம் ஆக்குவது என்றால் காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதாகும்.
பாப்தாதா உங்களுக்கு ஏற்கனவே ஒரு விசேடமான மாதத்தை வழங்கி உள்ளார். இந்த ஒரு மாதத்தில், ஒவ்வொருவரும் தீவிர முயற்சியாளர் ஆகவேண்டும். வெறுமனே முயற்சியாளராக அன்றி, நிச்சயமாகத் தீவிர முயற்சியாளர் ஆகுங்கள். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதற்கு நீங்கள் தயாரா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. வாழ்த்துக்கள். இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் முழு நாளைப் பொறுத்தவரை, நீங்கள் பாப்தாதாவிற்கு நாளாந்தப் பெறுபேறாக எதைக் கொடுக்கப் போகின்றீர்கள்? தீவிர முயற்சி என்பதாகும். உங்களின் முயற்சி என்பதல்ல, ஆனால் உங்களின் தீவிர முயற்சியின் பெறுபேறு. நீங்கள் இதற்குத் தயாரா? நீங்கள் தயாரா? உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. அவ்வாறாயின், பாப்தாதா சடுதியாக இடையில் பெறுபேற்றைக் கேட்பார். அவர் உங்களுக்கு அந்தத் திகதியைக் கொடுக்க மாட்டார். சடுதியாக, மாதத்தில் எந்த வேளையிலும் பாப்தாதா பெறுபேற்றைக் கேட்பார். ‘நான் இதைச் செய்ய வேண்டும்’. இந்தச் சத்தியத்தை உங்களுக்குள் செய்யுங்கள். பாப்தாதாவால் நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்ய வைக்க முடியும், இதை அவர் எல்லா வேளையும் செய்கிறார். ஆனால் இப்போது நீங்களாகவே இந்த எண்ணத்தைக் கொண்டிருந்து, அதை நடைமுறையில் செய்வதன் மூலம் செய்து காட்டுங்கள். ‘நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும்’. ‘நான் ஏதாவதொரு வேளையில் அதைச் செய்வேன்’ என்பதல்ல. இப்போது, நீங்கள் அதை ஏதாவதொரு வேளையில் செய்வீர்கள் என்று கூறுவது நல்லதல்ல. காலம் இப்போது முன்னேறிச் செல்கிறது. அது அதன் உச்சக்கட்டத்தை நோக்கிச் செல்கிறது. எனவே, காலத்தை மாற்றப் போகின்ற மூதாதையர்களான நீங்கள் உங்களின் சந்தோஷம் அற்ற குடும்பத்திற்காகக் கருணையை உணரவில்லையா? கருணை நிறைந்தவர் ஆகுங்கள்! சந்தோஷம் இல்லாமல் இருப்பவர்களுக்கு உங்களின் எண்ணங்கள், உங்களின் வார்த்தைகள் அல்லது உங்களின் தொடர்புகள் மற்றும் உறவுமுறைகளால் சந்தோஷப் பாதையைக் காட்டுங்கள். அவர்கள் உங்களின் குடும்பம், அல்லவா? எனவே, நீங்கள் உங்களின் குடும்பத்தின் துன்பத்தை நீக்க வேண்டும். கருணைநிறைந்தவர் ஆகுங்கள்! அச்சா.
இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் எங்கே அமர்ந்திருந்தாலும் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாலும் இங்கே வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தாலும் மற்றவர்கள் தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ‘தீவிர முயற்சியாளர்’ என்ற பட்டத்தை வழங்குகிறார். எப்போதும் இந்தப் பட்டத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் யார் என யாராவது உங்களிடம் கேட்டால், ‘தீவிர முயற்சியாளர்’ எனச் சொல்லுங்கள். இது சரிதானே? அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா? இப்போது, பின்தங்கிய முறையில் தொடர்ந்து முயற்சி செய்வது சரியல்ல. காலம் முன்னோக்கி ஓடுகிறது. இதனாலேயே, நீங்கள் நிச்சயமாக தீவிர முயற்சியாளர்கள் ஆகவேண்டும். இதுவே காலத்தின் அழைப்பாகும். நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக! குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவிடம் இருந்து அதிக, அதிக அன்பும் நினைவுகளும், அத்துடன் பாபா உங்களுக்குத் தீவிர முயற்சி என்ற பரிசையும் வழங்குகிறார்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையைப் பற்றிய அறிவு எதுவும் அற்ற அப்பாவிகளாகி, இந்த ஞானத்தின் புனிதராகவும் சம்பூரணமாகத் தூய்மையானவராகவும் ஆகுவீர்களாக.சத்தியயுக ஆத்மாக்கள் விகாரங்களைப் பற்றிய அறிவில் அப்பாவிகளாக இருப்பதைப் போல், அதே சம்ஸ்காரங்கள் உங்களின் விழிப்புணர்வில் தெளிவாக இருக்குமாயின், நீங்களும் மாயையின் எந்தவிதமான அறிவும் இல்லாத அப்பாவிகளாக இருப்பீர்கள். எவ்வாறாயினும், எல்லா வேளையும் உங்களின் விழிப்புணர்வில் உங்களின் ஆத்ம உணர்வு ரூபம் தெளிவாக இருந்தால் மட்டுமே எதிர்காலத்திற்குரிய சம்ஸ்காரங்கள் உங்களின் விழிப்புணர்வில் இருக்கும். உங்களின் சரீரம் தெளிவாகப் புலப்படுவதைப் போன்று, ஆத்மாவான உங்களின் ரூபம் தெளிவாகப் புலப்பட வேண்டும். அதாவது, அது அனுபவம் செய்யப்பட வேண்டும். அப்போது நீங்கள் மாயையைப் பற்றி அறியாத அப்பாவி என்றும் இந்த ஞானத்தின் புனிதர், அதாவது, சம்பூரணமாகத் தூய்மையானவர் என்றும் அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
உங்களுக்குள்ளே இருக்கும் எந்தவொரு தூய்மை இன்மையும் நீங்கள் சம்பூரணமாகத் தூய்மை ஆகுவதற்குத் தடையாக இருக்கும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
இறை சேவையாளர்களான நீங்கள் சேவை செய்பவர்கள், மற்றவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள் அல்ல. நீங்கள் சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள் ஆகினால், உங்களின் கடமையும் உங்களின் பெயருக்கேற்பவே இருக்கும். இறை சேவையாளர்கள் சேவையைப் பெற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அருள்பவரின் குழந்தைகள் என்பதனால் அவர்கள் சேவை செய்கிறார்கள். தந்தை ஒருபோதும் எதையும் எடுத்துக் கொள்ளாமல் எப்போதும் வழங்குகிறாரோ, அதேபோல், நீங்களும் வழங்குபவர்கள் ஆகவேண்டும். நீங்கள் எப்போதாவது பிரச்சனை கொடுப்பவராக ஆகினால், அதுவும் சேவையைப் பெற்றுக் கொள்வதே ஆகும். மற்றவர்களிடம் இருந்து எந்த வகையான மேலதிக சேவையையும் பெற்றுக் கொள்பவர்களால் ஒருபோதும் அருள்பவர் மற்றும் ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தையாக இருக்கும் போதையைக் கொண்டிருக்க முடியாது.
விசேட அறிவித்தல்: மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைக்கான யோகப் பயிற்சி.
இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, மாலை 6.30 இலிருந்து 7.30வரை யோக தபஸ்யாவில் அமருங்கள். ஞான சொரூபமாக இருக்கும் உங்களின் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் ஞான ஒளியையும் யோக சக்தியையும் வழங்கி, ஒவ்வோர் ஆத்மாவையும் சக்தி சென்றடையச் செய்யுங்கள். அதன் மூலம் அவர்களால் இந்த சத்தியப் பாதையில் தொடரக்கூடியதாக இருக்கும். உங்களின் தூய எண்ணங்களால் உலக நன்மையை ஏற்படுத்தும் இந்தச் சேவையைச் செய்யுங்கள்.