20.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சேவை செய்வதுடன் சதா நினைவு யாத்திரையிலும் நிலைத்திருங்கள். இந்த ஆன்மீக யாத்திரையில் ஒருபோதும் பின்தங்கி விடாதீர்கள்.
கேள்வி:
சில குழந்தைகள் ஆன்மீக சேவையில் ஆர்வம் காட்டாததற்கான காரணம் என்ன?பதில்:
ஆன்மீக சேவை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இல்லாதிருப்பின் நிச்சயமாக சரீர உணர்வின் தீய சகுனங்கள் இருக்கின்றன. முன்னேறிச் செல்லும் போது, சரீர உணர்வினாலேயே நீங்கள் ஒருவரோடொருவர் முரண்பட்டு சேவை செய்வதை நிறுத்துகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரின் முகங்களைப் பார்த்ததுமே சேவைக்கான அனைத்து எண்ணங்களும் பறந்து விடுகின்றன. இதனாலேயே பாபா கூறுகிறார்: இந்தத் தீய சகுனங்களையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.பாடல்:
எங்களின் யாத்திரை தனித்துவமானது.ஓம் சாந்தி.
பாடலில் உள்ள இந்த வரியினால் குழந்தைகளாகிய நீங்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றீர்கள். உங்களுக்கு என்ன கூறப்பட்டது? நீங்கள் யாத்திரையில் இருக்கிறீர்கள் என்பதையும் இந்த யாத்திரை தனித்துவமானது என்பதையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இந்த யாத்திரையை மறந்துவிடாதீர்கள். இந்த யாத்திரையிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. ஏனைய மக்கள் பௌதீக யாத்திரையில் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் வருகின்றனர். அவர்கள் பிறவி பிறவியாக தொடர்ந்தும் யாத்திரை செல்கின்றனர். எங்களது யாத்திரை அவர்கள் அமர்நாத்திற்குச் (அமரத்துவப் பிரபு) சென்று பின்னர் மீண்டும் மரண பூமிக்குத் திரும்புவது போன்றதல்ல. உங்களது யாத்திரை அவ்வாறானதல்ல. ஆனால் ஏனைய மனிதர்களது யாத்திரை அவ்வாறானதாகும். மக்கள் தீர்த்தயாத்திரைகள், சுற்றுலா போன்றவற்றிற்குச் சென்று பின்னர் மீண்டும் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். பல வகையான யாத்திரைகள் உள்ளன. தேவர்களுக்கு பல ஆலயங்களும் உள்ளன. மக்கள் விகாரத்தில் ஈடுபடுபவர்களுடனேயே யாத்திரை செல்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் விகாரம் அற்றிருப்பதற்கு சத்தியம் செய்துள்ளீர்கள். விகாரம் அற்றிருக்கும் உங்கள் அனைவரதும் யாத்திரையே இதுவாகும். என்றென்றும் தூய்மையாக இருக்கின்ற விகாரமற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். கடல் நீர் விகாரமானதாகவோ விகாரமற்றோ இருக்க முடியாது அதேபோல் கடலிலிருந்து தோன்றுகின்ற கங்கையும் எவரையும் விகாரமற்றவர்கள் ஆக்க முடியாது. மனிதர்கள் எதையுமே புரிந்து கொள்ள முடியாத வகையில் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளனர். அந்த பௌதீக யாத்திரைகள் குறுகிய காலத்திற்கு நீடிக்கக்கூடிய தற்காலிக யாத்திரைகள் ஆகும். இது நீண்ட யாத்திரை. அமர்ந்து கொள்ளும் போதும் உலாவித் திரியும் போதும் குழந்தைகளாகிய நீங்கள் இந்த யாத்திரை பற்றியே சிந்திக்க வேண்டும். மக்கள் தீர்த்தயாத்திரை செல்லும் போது, அவர்கள் தமது வியாபாரம், அனைவருடனுமான தொடர்புகளையும் அனைத்தையும் மறக்க வேண்டும். அவர்கள் செல்லும் போதெல்லாம் சாதாரணமாக ‘அமரத்துவப் பிரபுவிற்கு வெற்றி’ எனப் பாடுகின்றனர். அவர்கள் ஓரிரு மாதங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்று பின்னர் தீய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பின்னர் அவர்கள் கங்கைக்குச் சென்று நீராடுகின்றனர். ஒவ்வொருநாளும் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றோம் என்பதை அவர்கள் பரிந்து கொள்வதில்லை. கங்கை, யமுனைக் கரைகளில் வாழ்பவர்களும் ஒவ்வொரு நாளும் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் கங்கையில் நீராடுகின்றனர். அது அவர்களின் நாளாந்த ஒழுங்குமுறை என்பது ஒரு காரணம். இரண்டாவது காரணம் அவர்கள் கங்கையை தூய்மையாக்குபவர் எனக் கருதுவதனால் முக்கிய நாட்களில் சென்று அதில் நீராடுகின்றனர். அந்தக் குறித்த நாட்களில் கங்கை தூய்மையாக்குபவராகவும் ஏனைய நாட்களில் அவ்வாறு இல்லை என்றும் அல்ல. மேலாக்கள் இடம்பெறும் போது கங்கை தூய்மையாக்குபவர் ஆகுகின்றது என்பதல்ல, இல்லை. அது எப்போதும் ஒரேமாதிரியாகவே இருக்கிறது. மக்கள் இன்னமும் அதில் ஒவ்வொருநாளும் நீராடச் செல்கின்றனர். அவர்கள் மேலாக்கள் இடம்பெறும்போது விசேட நாட்களில் இன்னமும் அதில் நீராடச் செல்கின்றனர், ஆனால் அதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. கங்கையோ அல்லது யமுனையோ இரண்டும் ஒன்றுதான். அவர்கள் பிணத்தையுமே நதிகளில் வீசுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு செல்கிறோம். இதற்கு கங்கையில் நீராடவோ, சமய நூல்களைக் கற்க வேண்டியதோ இல்லை. தந்தை ஒருமுறை மாத்திரமே வருகின்றார். முழு உலகமும் ஒருமுறை மாத்திரமே தூய்மை அற்றதிலிருந்து தூய்மையாகிறது. கலியுகம் பழைய உலகம் என்பதும் சத்தியயுகம் புதிய உலகம் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். புதிய உலகை ஸ்தாபிப்பதற்கும் பழைய உலகை அழிப்பதற்கும் நிச்சயமாகத் தந்தை வர வேண்டும். இது அவரது பணியாகும். எவ்வாறாயினும் நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள முடியாதவாறு மாயை உங்களது புத்தியை மிகவும் தமோப்பிதானாக்கி விட்டாள். பல பிரமுகர்கள் கண்காட்சிக்கு வருகின்றனர். சந்நியாசிகளும் வருவார்கள், ஆனால் பலமில்லியனில் ஒரு கைப்பிடியினரே புரிந்து கொள்வார்கள். நீங்கள் நூறாயிரக் கணக்கானோருக்கு அல்லது பலமில்லியனுக்கு விளங்கப்படுத்தும் போதே சில அரிதான ஆத்மாக்கள் வெளிப்படுவார்கள். நீங்கள் பலருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பின்னர் உங்கள் அனைத்து விளக்கங்களும் படங்களும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும். ஏணிப்படமும் பத்திரிகையில் அச்சிடப்படும். அவர்கள் கூறுகின்றனர்: இது பாரதத்திற்கு மாத்திரமே பொருந்தும், ஆனால் ஏனைய தர்மங்களைச் சார்ந்தவர்களுக்கு என்ன நடைபெறும்? ‘தீர்வுக்குரிய நேரம்’ நினைவு கூரப்படுகிறது. ‘தீர்வுக்குரிய நேரம்’ என்பதன் அர்த்தம் வீடு திரும்புவதற்கான நேரம் ஆகும். பழைய உலகம் அழிக்கப்பட்டு புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும். ஆகவே அனைவரும் நிச்சயமாக வீடு திரும்புவார்கள். அனைவரும் அழிக்கப்பட வேண்டும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் இவ் விடயங்களை அறிய மாட்டார்கள். நரக வாசிகளது அழிவும் சுவர்க்க வாசிகளது ஸ்தாபனையும் இடம்பெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதே போன்று ஒவ்வொரு சக்கரத்திலும் அது இடம்பெறும். எஞ்சி இருக்கும் குறுகிய காலத்தில் பலரும் தொடர்ந்து விளக்கங்களைப் பெறுவதோடு கண்காட்சிகளும் தொடர்ந்தும் இடம்பெறும். அனைத்து இடங்களில் இருந்தும் மக்கள் பாபாவிடம் கேட்டு எழுதுகின்றனர்: நாங்களும் கண்காட்சிகளையும் விழாக்களையும் நடாத்த வேண்டுமா? எவ்வாறாயினும் இவற்றுடன் உங்கள் நினைவு யாத்திரையை நீங்கள் மறந்து விடக் கூடாது. சில குழந்தைகள் மிகவும் மெதுவாகவே முன்னேறுகின்றனர். வயது போனவர்களைப் போல் அவர்கள் யாத்திரையில் நிலைத்திருக்கின்றனர். அவர்களிடம் சக்தி எதுவும் அற்றவர்கள் போன்றும், எதையும் உண்ணாது இருப்பவர்கள் போலும் அவர்கள் இருக்கின்றனர். பாபாவிற்கு அதிகளவில் அக்கறை உள்ளது. இவை அனைத்தையும் எண்ணுகின்ற போது அவர் இரவு உறக்கத்தையும்; இழந்து விடுகிறார். அனைவரும் இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். எல்லையற்ற தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இந்தக் கல்வியின் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். சிலரது நடத்தை நண்டுகளைப் போல் உள்ளது. நண்டுகளையே தந்தை தேவர்கள் ஆக்குகின்றார். இருந்தும் அரிதாகவே எவரும் தங்கள் நடத்தையை மாற்றுகின்றனர். ஏணிப்படியில் மிகச் சிறந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் குழந்தைகள் அந்தளவிற்கு வேலை செய்வதில்லை. அவர்கள் நினைவு யாத்திரையிலும் செல்வதில்லை. தந்தையை நினைவு செய்யுங்கள், அப்போது உங்கள் புத்திகளின் பூட்டு தொடர்ந்து திறந்து கொள்வதுடன் புத்தியும் தங்கமாக ஆகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகப்புத்தியைக் கொண்டிருந்து பலருக்கும் நன்மை பயக்க வேண்டும். சதோபிரதானாக இருந்து இப்பொழுது நீங்கள் தமோப்பிரதான் ஆகிவிட்டீர்கள். மீண்டும் ஒருமுறை நீங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். கிருஷ்ணரைக் கடவுள் என அழைக்க முடியாது. அவர் அவலட்சணமானவர் என்றே அழைக்கப்படுகிறார். தந்தை இங்கே அமர்ந்திருந்து அவலட்சணமான தூய்மையற்ற ஆத்மாவிற்கே விளங்கப்படுத்துகிறார். பாபா எங்களை உலக அதிபதி ஆக்குகிறார் என்பது ஆத்மாவிற்குத் தெரியும், ஆகவே உங்கள் புத்தி சந்தோஷத்தால் நிறைந்திருக்க வேண்டும். இதில் அகங்காரம்; என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை மிகவும் ஆணவமற்றவர். உங்கள் புத்தியில் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டுள்ளீர்கள். நாளை நாங்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளைக் கட்டுவோம். புதிய உலகில் நாங்கள் இராச்சியத்தை ஆட்சி செய்வோம். இந்த உலகம் முற்றாக தூய்மையற்றது. இவ்வுலக மனிதர்களால் எப்பயனும் இல்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாது. உங்களது வாழ்க்கை வைரத்தைப் போல் பெறுமதி வாய்ந்ததாக இருந்தது என்பதையும் இப்பொழுது 84 பிறவிகளை எடுத்தமையால் அவ்வாறிருந்த நீங்கள் சிப்பியைப் போல் பெறுமதியற்றவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் காண்பிக்க வேண்டும். ஏணிப்படமே முதல் இலக்கப் படமாகும். திரிமூர்த்தி இரண்டாம் இலக்கப் படமாகும். பாரதம் எதிர்காலத்தில் மேன்மையானதாகும் என நீங்கள் கூறுகிறீர்கள். மேன்மையான உலகில் வெகுசில மனிதர்களே இருப்பார்கள். இப்பொழுது பல மனிதர்கள் உள்ளனர். மகாபாரத யுத்தம் உங்கள் முன்னால் உள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக் கூட்டத்தைப் போல் திரும்பிச் செல்வார்கள். தீ மூட்டப்பட உள்ளது. எந்தளவிற்கு அவர்கள் அனைத்தையும் புதுப்பிக்க முற்படுகிறார்களோ அந்தளவிற்கு அனைத்தும் பாதகமானதாக ஆகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்களை அதிகளவில் போதை கொள்ளச் செய்கிறார். இங்கிருந்து சென்றதும் உங்கள் சிலரில் இந்த ஞானம் அனைத்தும் பறந்து சென்று விடுவதுடன்; எதைப்பற்றிய விழிப்புணர்வையும் நீங்கள் கொண்டிருப்பதில்லை. இல்லாவிடின் சென்று ஏனையவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காணப்படும். உங்கள் திவ்ய குணங்களைப் பார்த்து தந்தை குழந்தைகளாகிய உங்களைச் சேவையில் அனுப்புவார். இதில் நீங்கள் அதிகளவு முகமலச்சியுடன் ஈடுபடுவீர்கள். சேவை செய்வதன் மூலம் உங்களின் சந்தோஷ பாதரசம் உயர்வடையும். சிறந்த பழைய குழந்தைகள் சிறிய விடயங்களுக்காக, ஒருவரோடொருவர் முரண்படுகின்றனர். அதனால் நீங்கள் சேவை செய்யக்கூடாது என்றல்ல. நீங்கள் சந்தோஷத்துடன் சேவை செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடன் ஒத்துப் போகாதவர்களின் முகங்களைப் பார்த்ததுமே சேவை செய்வதற்கான எண்ணம் பறந்து விடுகிறது. நீங்கள் சேவை செய்வதற்கான ஆர்வத்தைக் கொண்டிராத போது நீங்கள் அனைவரிடம் இருந்தும் விலகி இருக்கிறீர்கள். அவ்வாறிருப்பின் இந்த ஞானத்தில் இருப்பவர்களுக்கும் இல்லாதிருப்பவர்களுக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இருக்க மாட்டாது. சரீர உணர்வு எனும் தீய சகுனம் வந்து தங்கிவிடுகிறது. இதுவே முதல் இலக்க நோயாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார். ஆத்மாக்கள் விகாரமானவர்களாகவும் விகாரம் அற்றவர்களாகவும் ஆகுகின்றனர். அவர்கள் சுவர்க்கத்தில் விகாரம் அற்றவர்களாக இருந்தனர். ஆத்மாக்கள் இராவண இராச்சியத்தில் விகாரமானவர்கள் ஆகியுள்ளார்கள். இவ்வாறு இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே மக்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! விகாரமற்றவர்கள் இப்பொழுது தூய்மையற்று விகாரம் உடையவர்களாகி விட்டார்கள். அவர்கள் விகாரமற்று இருந்து இப்பொழுது விகாரம் உடையவர்கள் ஆகிவிட்டார்கள் என்பது எவரது புத்தியிலும் புகுவது இல்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரி உலகவாசிகள் ஆவோம். அங்கே, ஆத்மாக்களாகிய நாங்கள் விகாரம் அற்றவர்களாகவே இருப்போம். இங்கே, எங்கள் சரீரத்தால் எங்கள் பாகத்தை நடிக்கும் பொழுது, நாங்கள் விகாரமானவர்கள் ஆகிவிட்டோம். தந்தை இங்கே அமர்ந்திருந்தே உங்களுக்கு இவற்றை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் அமைதி தாமத்தில் இருந்து வரும் பொழுது, அவர்கள் நிச்சயமாகத் தூய்மையாகவே இருந்தார்கள். பின்னரே அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள். புதிய உலகிலே 900,000 மக்கள் இருக்கின்றார்கள். பின்னர், இப் பல ஆத்மாக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் நிச்சயமாக அமைதி தாமத்தில் இருந்தே வந்திருப்பார்கள். அதுவே அமைதியான அசரீரி உலகமாகும். அங்கிருக்கின்ற ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆவர். பின்னர் அவர்கள் தங்கள்; பாகங்களை நடிக்கும் பொழுது சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளின் ஊடாகச் செல்கின்றார்கள். ஆத்மாக்கள் தூய்மையானவர்களில் இருந்து தூய்மை அற்றவர்களாக வேண்டும். பின்னர் தந்தை வந்து அனைவரையும் தூய்மையாக்குகிறார். இந்த நாடகமானது எப்பொழுதும் தொடர்கின்றது. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி ஆகியவற்றின் இரகசியத்தைக் கூற முடியாது. எவருக்குமே அந்தத் தந்தையைத் தெரியாது. ரிஷிகளும், முனிவர்களும் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) எனக் கூறுகின்றார்கள். எங்களுக்குக் கடவுளையோ அல்லது அவரது படைப்பையோ தெரியாது. பின்னர் அவர்கள் தந்தையாகிய கடவுளே ஞானம் நிறைந்தவர் எனக் கூறுகின்றனர். சகல ஆத்மாக்களினதும் தந்தையாகிய பரமாத்மாவே விதையாவார். அவர் சகல ஆத்மாக்களினதம் விதையாவார், பிரஜாபிதா பிரம்மா மனித உலகின் விதையாவார். அசரீரியான தந்தை இவரினுள் (பிரம்மா) பிரவேசித்து மனிதர்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் மனித உலகின் விதை என்று அழைக்கப்பட மாட்டார். அவர் சகல ஆத்மாக்களின் தந்தையாவார். இந்த பிரம்மாவே மனித உலகிலுள்ள மக்களின் தந்தையாவார். இவரினூடாகவே தந்தை வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆத்மா சரீரத்திலிருந்து வேறுபட்டவர். மனம், புத்தி, ஞாபகங்கள் (சித்) என்பன ஆத்மாவின் பாகங்கள் ஆகும். ஒரு பாகத்தை நடிப்பதற்காக ஆத்மா வந்து ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். ஒருவர் தனது சரீரத்தை விட்டு நீங்கிச் சென்றால், அவர் சென்று இன்னொரு பாகத்தை நடிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆகவே அழுவதால் எதைப் பெற்றுக் கொள்வீர்கள்? அவர் பிரிந்து சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து உங்கள் தாய்வழி அல்லது தந்தைவழி மாமனாக ஆகப் போவதில்லை. எனவே, அழுவதால் என்ன பயன்? உங்கள் மம்மா சென்று இப்பொழுது நாடகத்திற்கு ஏற்ப ஒரு பாகத்தை நடிக்கின்றார். பல ஆத்மாக்கள் அவ்வாறு செல்கின்றனர். அவர்கள் சென்று வேறெங்கேனும் பிறப்பெடுக்கின்றார்கள். ஓர் ஆத்மா எவ்வளவு கீழ்ப்படிவுள்ளவராக இருக்கின்றாரோ, அதற்கேற்பவே ஒரு சிறந்த வீட்டில் பிறப்பு எடுப்பார். இங்கிருந்து செல்பவர்கள் நல்ல வீட்டிற்கே செல்வார்கள். அதுவும் வரிசைக்கிரமமானது. நீங்கள் என்ன செயல்களைச் செய்கின்றீர்களோ, அதற்கேற்றவாறே நீங்கள் ஒரு வீட்டிற்குச் செல்வீர்கள். இறுதியிலே, நீங்கள் சென்று இராஜ குடும்பத்தில் பிறப்பெடுப்பீர்கள். யார் அரசர்களிடம் செல்வார்கள் என்பதை உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் உங்கள் தெய்வீக சம்ஸ்காரங்களையாவது உங்களோடு எடுத்துச் செல்வீர்கள். நீங்கள் மிகவும் பரந்த புத்தியால் இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். தந்தையே ஞானக்கடல் ஆவார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் ஞானக்கடல்கள் ஆக வேண்டும். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள் ஆவர். நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, முன்னேற்றம் இருக்கும் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்று எதையும் செய்ய முடியாது இருப்பவர்கள், நாளை அவர்களின் சகுனங்கள் நீக்கப்பட்டதும் பலரையும் முந்திச் செல்லலாம். சிலரின் மீது தீய சகுனங்கள் இருப்பதால், அவர்கள் சாக்கடையினுள் விழுகின்றார்கள். அவர்களுடைய எலும்புகளும் முறிந்து விடுகின்றன. எல்லையற்ற தந்தைக்கு ஒரு சத்தியத்தைச் செய்த பின்னர் அவர்கள் விழுந்தால், தர்மராஜிடம் பெருமளவு தண்டனையைப் பெற வேண்டும். எல்லையற்ற தந்தையே, எல்லையற்ற தர்மராஜ் ஆவார். அவரிடமிருந்து நீங்கள் எல்லையற்ற தண்டனையைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எதைப்பற்றியாவது சாக்குப்போக்குகளைக் கூறி, தவறுகள் எதையேனும் செய்தால், நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். நீங்கள் கடவுளிற்குக் கீழ்ப்படியாது இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்வதில்லை. தந்தை தொடர்ந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, சேவையிலே உதவியாளர்கள் ஆகுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் படங்களை விளங்கப்படுத்துவதற்குப் பயிற்சி செய்தால், அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வீர்கள். வேறு எவ்வாறு நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும்? லௌகீக வாழ்க்கையிலே, சில பெற்றோருக்குக் கீழ்ப்படிவுள்ள குழந்தைகளும், வேறு சிலருக்குக் கீழ்ப்படிவற்ற குழந்தைகளும் இருக்கின்றார்கள். இங்கும், சிலர் உடனடியாகவே பாபாவின் வேலையைச் செய்கின்றார்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற சேவையைச் செய்ய வேண்டும். எல்லையற்ற ஆத்மாக்களுக்கு நன்மை செய்யுங்கள். மன்மனாபவ எனும் செய்தியைக் கொடுங்கள். தந்தையை நினைவு செய்தால், உங்கள் புத்தி தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகும். இப்பொழுது தமோபிரதானமான இந்தக் கலியுக உலகின் முடிவாகும். நீங்கள் இப்பொழுது சதோபிரதானாக வேண்டும். அங்கிருக்கும் ஆத்மாக்களின் உலகமானது வரிசைக்கிரமமானது. அவர்கள் தங்கள் பாகத்தை இங்கு நடிப்பதற்கும் வரிசைக்கிரமமாகவே வருகின்றார்கள். நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் வரிசைக்கிரமமாகவே கீழிறங்கி வருவீர்கள். இப்பொழுது, இராவண இராச்சியத்திலே ஆத்மாக்கள் அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. எவரிடமாவது “நீங்கள் தூய்மையற்றவர்” எனக் கூறினால், அவர் குழப்பம் அடைவார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது விகாரமான உலகம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் இராச்சியம் எனும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். ஏனையோர் விநாசம் இடம்பெறும்போது, வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்கள். ஒரேயொரு சமயம் மாத்திரம் எஞ்சியிருக்க, ஏனைய அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படுகின்ற மகாபாரத யுத்தம் இடம்பெறும் என்பது நினைவுகூரப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் சுவர்க்க வாயில் திறக்கப்படும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, மக்கள் தொடர்ந்தும் உங்களுக்குச் செவிமடுத்து, தொடர்ந்தும் இங்கு வந்து கொண்டே இருப்பார்கள். தூய்மையற்றவர்கள் ஆகிவிட்ட சூரிய, சந்திர வம்சத்தவர்கள் வந்து, தங்கள் ஆஸ்தியை வரிசைக்கிரமமாகப் பெறுவார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருபொழுதும் கடவுளின் வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படிவின்றி இருக்காதீர்கள். எல்லையற்ற சேவையில் ஒரு கீழ்ப்படிவான குழந்தையாகி, அவருடைய உதவியாளர் ஆகுங்கள்.2. இந்த ஞானச் செல்வத்தின் மறைமுகமான சந்தோஷத்தால் உங்கள் புத்தியை நிறைத்து வைத்திருங்கள். ஒருபொழுதும் ஒருவரோடொருவர் முகம் கோணாதீர்கள்.
ஆசீர்வாதம்:
வழிகாட்டல்களுக்கேற்ப ஒவ்வோர் அடியையும் எடுத்து வைப்பதன் மூலமும் மாயையை உங்களிடம் சரணடையச் செய்வதன் மூலமும் இலகு யோகி ஆகுவீர்களாக.வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கும் குழந்தைகள், முழு உலகையும் தங்களிடம் சரணடையச் செய்வார்கள். அத்துடன்கூடவே, மாயையும் தனது முழுமையான சந்ததியுடன் தன்னை அர்ப்பணிப்பாள். அனைத்திற்கும் முதலில் நீங்கள் தந்தையிடம் சரணடையும்போது, மாயையும் தன்னை உங்களிடம் அர்ப்பணிப்பாள். உங்களின் மேன்மையான சுயமரியாதையை வைத்திருக்கும்போது, தொடர்ந்து ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றுங்கள். நீங்கள் பிறவி பிறவியாக சகல கஷ்டங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். இப்போது, நீங்கள் இலகு யோகி ஆவீர்கள். எதிர்காலத்தில், நீங்கள் இலகு வாழ்க்கை வாழுவீர்கள். எனவே, உங்களின் வாழ்க்கையை மிகவும் இலகுவாக ஆக்குங்கள்.
சுலோகம்:
உங்களின் சொந்த மாற்றத்தின் மூலம் ஆத்மாக்கள் பலரை மாற்றுவது என்றால், அவர்களுக்கு உயிர்த்தானத்தை வழங்குவதாகும்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல் சம்பூரணமான, முழுமை ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
நீங்கள் குறிப்பிட்டதொரு ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருந்து, அந்த ஸ்திதியில் ஸ்திரம் அடையும்போது, அதுவே தந்தைக்குச் சமமாக இருக்கும் சம்பூரணமான ஸ்திதி அல்லது இறுதியான, கர்மாதீத் ஸ்திதி எனப்படும். நீங்கள் சம்பூரணமான ஸ்திதிக்கு நெருக்கமாக வரும்போது, அதாவது, நீங்கள் தந்தைக்கு நெருக்கமாக வரும்போது, அதற்கேற்ப நீங்கள் இராச்சியத்திற்கும் உங்களின் எதிர்கால வெகுமதிக்குமான உரிமையைக் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் எவ்வளவு போதை இருக்கிறதோ, அதற்கேற்ப, உங்களால் உங்களின் கர்மாதீத் ஸ்திதி என்ற இலக்கை நெருக்கமாகப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.