21.04.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானக்கடலான தந்தை இந்த ஞான நடனத்தைக் குழந்தைகளாகிய உங்கள் முன்னால் தனிப்பட்ட முறையில் ஆடுவதற்காகவே வந்துள்ளார். நீங்கள் மிக விவேகமான, சேவை செய்யும் குழந்தைகள் ஆகுகின்றீர்கள், உங்கள் ஞான நடனமானது மிகவும் சிறந்ததாக ஆகுகின்றது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் என்ன பொழுதுபோக்கைச் சங்கமயுகத்தில் விருத்தி செய்கின்றீர்கள்?

பதில்:
நினைவில் இருத்தல். இது உங்கள் ஆன்மீகப் பொழுதுபோக்கு. இந்தப் பொழுதுபோக்கை நீங்கள் விருத்தி செய்வதுடன் கூடவே நீங்கள் தெய்வீக ஆன்மீகச் செயல்களையும் செய்ய வேண்டும். நீங்களே பிராமணர்கள். நீங்களே நிச்சயமாக உண்மையான கதையை அனைவருக்கும் கூற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்யும் பொழுதுபோக்கையும்; கொண்டிருக்க வேண்டும்.

பாடல்:
பொறுமையாக இரு மனமே, உனது சந்தோஷ நாட்கள் வர இருக்கின்றன.....

ஓம் சாந்தி.
யாராவது ஒருவர் வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது, அந்த நோயாளி, வலியில் இருந்து தான் விடுபட வேண்டும் என்றே விரும்புகின்றார். தனது நிலை என்னவென்றும் எப்பொழுது தான் அந்த நோயில் இருந்து விடுபடுவார் எனவும் அவர் தனது வைத்தியரைக் கேட்கின்றார். அவை அனைத்தும் எல்லைக்கு உட்பட்ட விடயங்களே. இதுவோ எல்லையற்ற விடயமாகும். தந்தை வந்தே குழந்தைகளாகிய உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். இது உண்மையிலே சந்தோஷம் மற்றும் துன்பம் நிறைந்த ஒரு நாடகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உண்மையில் குழந்தைகளாகிய நீங்கள் சத்தியயுகத்தை விட இங்கேயே அதிகளவு நன்மையைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் இப்பொழுது இறைவனின் குழந்தைகள் என்பதுவும், இறைவனின் மடியில் இருக்கின்றீர்கள் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில் நாங்கள் மிக மேன்மையான மறைமுறைமான புகழைக் கொண்டிருக்கின்றோம். மனிதர்கள் தந்தையை ‘சிவன், ஈஸ்வரன், பகவான் (இறைவன்)’ என்று அழைத்த போதிலும் அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் அவரை அழைக்கின்றார்கள். இது நாடகத்திற்கேற்பவே நடைபெறுகின்றது. ஞானமும் அறியாமையும் இரவும் பகலுமாக இருக்கின்றன. அவர்கள் தொடர்ந்தும் இதனைப் பாடுகின்றார்கள், ஆனால் அவர்கள் அத்தகைய தமோபிரதான் புத்தியைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தம்மைத் தமோபிரதானாகக் கருதுவது இல்லை. தந்தையின் ஆஸ்தியைத் தனது பாக்கியத்தில் ஒருவர் கொண்டிருக்கும் பொழுதே இந்த விடயங்கள் அவரது புத்தியில் புகும். நீங்கள் காரிருளில் இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கே தெரியும். இப்பொழுது தந்தை வந்துள்ளார், ஆகவே நாம் இப்பொழுது பெருமளவு ஒளியைப் பெற்றுள்ளோம்! தந்தை விளங்கப்படுத்தும் இந்த ஞானமானது எந்தவொரு வேதத்திலோ, சமயநூலிலோ அல்லது கிரந்தம் போன்றவற்றிலோ இல்லை. தந்தை இதனைக் கூறி நிரூபிக்கின்றார். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பினதும், படைப்பவரினதும்; ஆரம்பம், மத்தி இறுதி பற்றிய இந்த ஞான ஒளியைக் கொடுக்கின்றேன். அது பின்னர் மறைந்து விடுகின்றது. என்னைத் தவிர வேறு எவரிடம் இருந்தும் இந்த ஞானத்தை எவராலும் பெற முடியாது. இந்த ஞானம் பின்னர் மறைந்து விடுகிறது. கலியுகம் முடிந்து விட்டது என்றும், அது மீண்டும் 5000 வருடங்களின் பின்னர் திரும்ப வரும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது ஒரு புதிய விடயமாகும், இது எந்தவொரு சமயநூலிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை அனைவருக்கும் ஒரே ஞானத்தைக் கொடுத்தாலும் அதனைக் கிரகிப்பதில் அனைவரும் வரிசைக்கிரமாகவே இருக்கின்றார்கள். மிகச்சிறந்த சேவை செய்யத் தகுதிவாய்ந்த குழந்தைகள் வந்ததும், பாபாவின் ஞான நடனமானது அதற்கேற்பவே இருக்கின்றது. நடனம் ஆடும் ஒரு பெண்ணைப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் அந்த நடனத்தை மிக நன்றாகச் சந்தோஷமாக ஆடுகின்றாள். பார்வையாளர்கள் ஒரு சிலர் மாத்திரமே அமர்ந்திருப்பார்களாயின், அவள் மிகச் சாதாரண முறையில், பொதுவான ஒரு நடனத்தையே ஆடுவாள். கைதட்டும் பலர் இருக்கும் பொழுது அவளின் உற்சாகம் அதிகரிக்கின்றது. இங்கும் இது அவ்வாறே. குழந்தைகள் அனைவரும் முரளியைச் செவிமடுக்கின்றார்கள், ஆனால் நேர்முன்னிலையில் முரளியைச் செவிமடுப்பது என்பது வேறுபட்ட ஒரு விடயமாகும். ஸ்ரீகிருஷ்ணர் நடனமாடினார் என்பதுவும் காட்டப்பட்டுள்ளது. அது ஒரு பௌதீக நடனமல்ல. உண்மையில், அது ஞான நடனமாகவே இருந்தது. சிவபாபாவே உங்களுக்குக் கூறுகிறார்: நான் இந்த ஞான நடனத்தை ஆடுவதற்காக வந்துள்ளேன். நானே ஞானக்கடல் ஆவேன். ஆகவே, மிகச் சிறந்த கருத்துக்கள் வெளிவருகின்றன. இது ஒரு மரத்தாலான புல்லாங்குழல் அன்றி, ஞானப் புல்லாங்குழல் ஆகும். தூய்மையாக்குபவராகிய தந்தை வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பாரா? அல்லது ஒரு மரத்தாலான புல்லாங்குழலை வாசிப்பாரா? வேறு எவருமே தந்தை வந்தே இந்த முறையில் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என ஒருபொழுதும் சிந்திக்க மாட்டார்கள். நீங்கள் இதனைப் புரிந்து கொண்டிருந்தாலும், இது வேறு எந்த மனிதர்களின் புத்திகளிலும் புகுவதில்லை. இங்கு வருபவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே ஓர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எந்த முயற்சியைப் சென்ற சக்கரத்தில் செய்தீர்களோ, அதே முயற்சியையே நீங்கள் தொடர்ந்தும் செய்வீர்கள். தந்தை வந்து, உங்களுக்கு அனைத்து இரகசியங்களையும் முன்னைய கல்பத்தில் அவர் வெளிப்படுத்தியது போலவே, இப்பொழுதும் வெளிப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். அவர் கூறுகின்றார்: நானும் நாடகத்தால் கட்டுப்பட்டு இருக்கிறேன். அனைவரும் நாடகத்தின் பந்தனத்துள் சிக்கியிருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் நடந்தவை அனைத்தும் மீண்டும் நடைபெறும். பல வகையான உயிரனங்கள் இருக்கின்றன. இப்பொழுது இருக்கும் அளவிற்குச் சத்தியயுகத்தில் அத்தனை உயிரனங்கள் இருக்கமாட்டாது. அங்கே, சிறிய வகையான உயிரனங்களே இருக்கும். பின்னர், மதங்கள் தொடர்ந்து வளர்வதைப் போன்று, உயிரனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அவை சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் இருப்பனவற்றை நீங்கள் சத்தியயுகத்தில் மட்டுமே காண்பீர்கள். சத்தியயுகத்தில் இருக்கும் எதுவுமே அழுக்கையோ அல்லது குப்பையையோ உருவாக்க மாட்டாது. இந்த தேவர்களே, இறைவன், இறைவியர் எனப்படுகின்றார்கள். வேறு எந்த இடத்தில் இருக்கும் எவருமே இறைவன் அல்லது இறைவி என்று அழைக்கப்பட மாட்டார்கள். அந்த தேவர்கள் நிச்சயமாக சுவர்க்கத்திலேயே அரசாட்சி செய்தார்கள். அவர்கள் எந்தளவிற்குப் புகழப்படுகின்றார்கள் எனப் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பொறுமையை விருத்தி செய்துள்ளீர்கள். உங்களின் ஸ்திதி எத்தனை மேன்மையானது அல்லது கீழானது என்பதையும் எத்தனை புள்ளிகளுடன் நீங்கள் சித்தி அடைவீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இன்னின்னார் நல்ல சேவையைச் செய்கின்றார்கள் என்பதை உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆமாம், நீங்கள் முன்னேறிச் செல்கையில் புயல்களும் வருகின்றன. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளின் மேல் எவ்விதமான புயல்களோ அல்லது தீய சகுனமோ வரக் கூடாது. நல்ல குழந்தைகளையும் மாயை விழ வைக்கின்றாள். தந்தை உங்களுக்குப் பொறுமையை வழங்குகின்றார்: இன்னமும் குறுகிய காலமே எஞ்சி இருக்கின்றது. நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். ஸ்தாபனை நடைபெற்றதன் பின்னர், நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதில் ஒரு விநாடிக்கான மாற்றம் கூட இருக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே இந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள முடியும். நாங்கள் அனைவரும் இந்த நாடகத்தின் நடிகர்களே. நாங்களே இதில் பிரதானமான பாகத்தை நடிக்கின்றோம். இந்த வெற்றி தோல்விக்கான நாடகம் பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டது. பாரதம் தூய்மையாக இருந்தது, அங்கே பெருமளவு அமைதியும், தூய்மையும் இருந்தன. இது நேற்றைக்கு மட்டுமே உரிய விடயம். நேற்று, நாமே அந்தப் பாகங்களை நடித்தோம். 5000 வருடத்திற்கான முழுப்பாகமும் பதியப்பட்டுள்ளது. நாம் சக்கரத்தில் சுற்றி வந்தோம், நாம் இப்பொழுது தந்தையுடன் யோகம் செய்கின்றோம், இதன் மூலம் கலப்படம் அகற்றப்படுகின்றது. நீங்கள் தந்தையை நினைவு செய்யும் பொழுது ஆஸ்தியும் கூட நிச்சயமாக நினைவு செய்யப்படுகின்றது. அனைத்திற்கும் முதலில் அல்பாவை அறிந்து கொள்ளுங்கள்! தந்தை கூறுகின்றார்: என்னைப் புரிந்து கொள்வதன் மூலம் என்னில் இருந்து நீங்கள் அனைத்தையுமே புரிந்து கொள்வீர்கள். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. அது ஒரு விநாடிக்கானது. இருப்பினும், அவர் அதனை உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் கருத்துக்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். பிரதானமான கருத்து: மன்மனாபவ! இதிலேயே தடைகள் உள்ளன. சரீர உணர்வு வரும்பொழுது நீங்கள் பல வழிகளிலும் திணறுகின்றீர்கள். அது உங்களை யோகம் செய்வதற்கும் அனுமதிப்பதில்லை. பக்தி மார்க்கத்திலும், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை நினைவுசெய்ய அமரும் பொழுது, அவர்களின் புத்திகள் பல வழிகளில் அலைகின்றன! பலரும் பக்திக்கான அனுபவத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அது இப்பிறவியையே குறிக்கின்றது. இப்பிறவியினைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் முன்னைய பிறவியைப் பற்றியவற்றையும் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்யும் பொழுதுபோக்கினை விருத்தி செய்துள்ளீர்கள். நீங்கள் எவ்வளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவிற்கு உங்கள் சந்தோஷமானது அதிகரிக்கின்றது. அத்துடன் கூடவே நீங்கள் தெய்வீகமான ஆன்மீக உலகாயச் செயல்களையே செய்ய வேண்டும். நீங்கள் பிராமணர்கள். நீங்கள் சத்தியநாராயணன், அமரத்துவக் கதை போன்றவற்றைக் கூறுகின்றீர்கள். அனைத்தும் உள்ளடங்கும் ஒரேயொரு பிரதான விடயமே இருக்கின்றது. நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றது. இந்த ஒரேயொரு பொழுதுபோக்கே ஆன்மீகமானதாகும். இந்த ஞானமானது மிகவும் இலகுவானது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். “குமாரிகள்” என்ற பெயரும் நினைவு செய்யப்படுகின்றது. ஆதர் குமாரிகளுடன் (அரைக்குமாரிகள், திருமணமான பெண்கள்) ஒப்பிடுகையில் குமாரிகளின் பெயரே அதிகளவு புகழப்படுகின்றது. அவர்கள் எவ்விதமான பந்தனங்களும் அற்றவர்கள். அந்தக் கணவன்மார் அவர்களை விகாரம் கொண்டவராக ஆக்குகின்றார்கள். இந்தத் தந்தை உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவதற்காக அலங்கரிக்கின்றார். அவர் உங்களை இனிய கடலுக்கு அழைத்துச் செல்கின்றார். தந்தை கூறுகின்றார்: உங்கள் பழைய சரீரம் உட்பட, இப்பழைய உலகின் அனைத்தையும் மறந்து விடுங்கள். ஆத்மா கூறுகின்றார்: நான் எனது 84 பிறவிகளையும் முடித்துவிட்டேன். நான் இப்பொழுது எனது முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்ளுவேன். நீங்கள் தைரியத்தைப் பேணிய பொழுதிலும், இன்னமும் மாயையுடனான யுத்தம் நடைபெறுகின்றது. இந்த பாபாவே முன்னால் இருக்கின்றார். இவரே அதிகளவு மாயையின் புயல்களுக்கு முகம் கொடுக்கின்றார். பலரும் பாபாவிடம் வந்து தமக்கு வரும் அத்தகைய விடயங்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். அப்பொழுது பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, இந்தப்புயல்கள் நிச்சயமாக வரும். அவை என்னிடமே முதல் வருகின்றன. இறுதியில், நீங்கள் அனைவரும் உங்கள் கர்மாதீத நிலையை அடைவீர்கள். இது ஒன்றும் புதியதல்ல. இது சென்ற கல்பத்திலும் நடைபெற்றது. நீங்கள் உங்களின் பாகங்களை இந்த நாடகத்தில் நடித்திருக்கிறீர்கள், இப்போது நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போகின்றீர்கள். இந்தப் பழைய உலகமே நரகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். கூறப்பட்டுள்ளது: இலக்ஷ்மியும் நாராயணனும் பாற்கடலில் வாழ்ந்து வந்தார்கள். மக்கள் அவர்களுக்கு அத்தகைய சிறந்த கோயில்களைக் கட்டுகிறார்கள். ஆரம்பத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்ட போது, அவர்கள் ஒரு பால் குளத்தை உருவாக்கி அதில் விஷ்ணுவின் சிலை ஒன்றையும் வைத்தார்கள். அவர்கள் மிக நல்ல உருவங்களையும் உருவாக்கி அவற்றை வழிபாடும் செய்தார்கள். அந்நேரத்தில் அனைத்தும் மலிவாகவே இருந்தன. பாபா அனைத்தையும் பார்த்திருக்கின்றார். உண்மையில், இந்த பாரதமே அத்தகைய தூய, பாற்கடலாக இருந்தது! நெய்யாறும் பாலாறும் ஓடுவதைப் போலவே அது இருந்தது. அவர்கள் இந்தப் புகழைக் காட்டி இருக்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கம் எனக் கூறுகின்ற மாத்திரத்திலேயே உங்கள் வாய் ஊறுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாம் ஞானக் கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆகவே, உங்கள் புத்திகள் புரிந்துணர்வினைப் பெற்றிருக்கின்றன. உங்கள் புத்தியானது வீட்டிற்குச் சென்று பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்கின்றது. அங்கே இருக்கும் அனைத்தும் புதியதாகவே இருக்கும். ஸ்ரீ நாராயணனின் சிலையைப் பார்த்து பாபா மிகவும் சந்தோஷம் அடைவது வழக்கம். அவர் அதனை மிகுந்த அன்புடன் பராமரித்து வந்தார். அவர் தானே அவ்வாறு ஆகுவேன் என்பதை புரிந்து கொண்டிருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தை பாபாவிடம் இருந்து பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் பிரமாந்தத்தைப் பற்றிய ஞானத்தையும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய ஞானத்தையும் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். பாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். மிகக் குறுகிய காலமே இன்னமும் எஞ்சியிருக்கின்றது என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமடைய வேண்டும். இச்சரீரத்திற்கு ஏதாவது ஒன்று தொடர்ந்தும் இருக்கும். இதுவே உங்கள் இறுதிப் பிறவியாகும். நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, உங்கள் சந்தோஷ நாட்கள் வர இருக்கின்றன. விநாசம் உங்கள் முன்னால் இருக்கின்றது என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் மூன்றாம் ஞானக் கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் அசரீரியான உலகம், சூட்சும உலகம் மற்றும் பௌதீக உலகினைப் பற்றி மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த சுயதரிசன சக்கரமானது உங்கள் புத்தியில் மிக நன்றாகச் சுற்றுகின்றது. எல்லையற்ற தந்தையே உங்கள் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், இது ஒரு புதிய விடயம், ஆதலால் நீங்கள் மீண்டும் மீண்டும் இதனை மறந்து விடுகின்றீர்கள். இல்லாவிடின், நீங்கள் “பாபா” எனக் கூறும் பொழுது சந்தோஷப் பாதரசமானது ஏறும். ராம்டிராத் என்பவர், ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தராக இருந்தார், அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சியைக் காண்பதற்காகவே பெருமளவு முயற்சியைச் செய்தார். அவர் ஒரு காட்சியைக் கண்ட மாத்திரத்திலேயே மிகச் சந்தோஷம் அடைந்தார். ஆனால் அதன் மூலம் நடந்ததென்ன? அவர் எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை! இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், ஏனெனில் நீங்கள் அத்தகையதொரு உயர்ந்த அந்தஸ்தை 21 பிறவிகளுக்குப் பெற்றுக் கொள்வீர்கள் என்பதை அறிவீர்கள். சக்கரத்தின் முக்கால் பங்கிற்கு நீங்கள் சந்தோஷமாகவே இருக்கிறீர்கள். இது அரைப் பங்காக இருக்குமாயின், அதில் எந்தவிதமான நன்மையும் இருக்காது. நீங்கள் சக்கரத்தின் முக்கால் பங்கிற்கு சந்தோஷமாகவே இருக்கின்றீர்கள். வேறு எவராலுமே நீங்கள் அனுபவம் செய்யும் அளவிற்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. நீங்களே எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். பெருமளவு சந்தோஷம் இருக்கும் பொழுது, நீங்கள் துன்பம் என்றால் என்ன என்பதையே அறியாதவர்களாகவே இருந்தீர்கள். சங்கமயுகத்திலேயே நீங்கள் இவை இரண்டையும் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். அதாவது நீங்கள் இப்பொழுது துன்பத்தில் இருந்து சந்தோஷத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் முகம் பகலை நோக்கியும், உங்கள் பாதம் இரவை நோக்கியும் இருக்கின்றது. இந்த உலகினை உதைத்துத் தள்ளுங்கள், அதாவது, அதனை உங்கள் புத்தியில் இருந்து அகற்றுங்கள். நீங்கள் பல பாகங்களை நடித்துள்ளீர்கள். இந்தவிதமாக உங்களுடன் பேசிக்கொள்ளுங்கள். இப்பொழுது அதிகளவிற்குத் தந்தையை நினைவு செய்யும் பொழுது, அதிகளவிற்குத் துரு அகற்றப்படும். நீங்கள் தந்தையின் சேவையில் அதிகளவில் ஈடுபட்டு, ஏனையோரையும் உங்களைப் போல் ஆக்கும் பொழுது அதிகளவு தந்தையை வெளிப்படுத்துவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் இருக்கின்றது. ஆகவே, நீங்கள் வீட்டை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். பழைய கட்டிடம் ஒன்று தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டே இருக்கின்றது. பழைய கட்டிடத்திற்கும் புதிய கட்டிடத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்! அங்கே பகலுக்கும் இரவிற்கும் இடையான வித்தியாசம் இருக்கின்றது. இது உண்மையிலே நச்சு ஆறு ஆகும். மக்கள் தமக்கிடையே தொடர்ந்தும் சண்டை செய்வதுடன் ஒருவர் மற்றவரைக் கொல்லவும் செய்கின்றார்கள். இப்பொழுது பாபா வந்திருக்கின்றார், ஆகவே பெருமளவு சண்டை ஆரம்பமாகி இருக்கின்றது. மனைவி காமத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்காவிடின், அவள் பெருமளவும் துன்புறுத்தப்படுகின்றார்! மக்கள் பெருமளவு குழப்பங்களை உருவாக்குகின்றார்கள். பெருமளவு அக்கிரமங்கள் சென்ற கல்பத்திலும் இடம் பெற்றன. நினைவு செய்யப்படும் அந்த விடயங்கள், தற்சமயத்தையே குறிக்கின்றன. தாய்மார்கள் எவ்வளவு கதறி அழைக்கின்றார்கள் என்பதை உங்களால் பார்க்க முடியும். நாடகத்தின் அப்பாகமானது இப்பொழுது மீண்டும் நடிக்கப்படுகின்றது. தந்தையையும் குழந்தையையும் தவிர வேறு எவருக்குமே இது தெரியாது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, அனைவரும் இதனைப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். தந்தையே தூய்மையாக்குபவரும் சற்கதியை அருள்பவரும் என்று அழைக்கப்படுகின்றார். எவ்வாறு பாரதம் நரகமாகவும், சுவர்க்கமாகவும் ஆகுகின்றது என்பதை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: வாருங்கள், நாங்கள் உங்களுக்கு முழு உலகினதும் புவியியல் மற்றும் வரலாற்றினை விளங்கப்படுத்துவோம். கடவுளுக்கும் அவரது குழந்தைகளாகிய உங்களுக்கும் மாத்திரமே இந்த எல்லையற்ற வரலாற்றையும், புவியிலையும் தெரியும். இந்த வரலாற்றையும், புவியியலையும் அறிந்து கொள்வதன் மூலம் எவ்வாறு தூய்மையும், சந்தோஷமும், அமைதியும் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் நிச்சயமாகவே உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்வீர்கள். உள்ளே வந்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள். பல தலைப்புக்கள் இருக்கின்றன. குழந்தைகளாகிய உங்கள் தலைகள் இப்பொழுது நிறைந்து வழிகின்றன. சந்தோஷப் பாதரசமானது பெருமளவு உயர்கின்றது! குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்த தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். பின்னர் நாங்கள் சென்று இலக்ஷ்மி நாராயணன் ஆகுவோம். இந்த ஞானம் அங்கு இருக்காது. இவை அனைத்தும் அத்தனை ஆழமான விடயங்கள், அவை புரிந்து கொள்ளப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஏணிப்படத்தை மிக நன்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இதுவே 84 பிறவிச் சக்கரமாகும். இப்பொழுது இதனை விளங்கப்படுத்தி மக்களுக்குத் தெளிவாக்குங்கள். இவ்வுலகம் சுவர்க்கம் என்றோ அல்லது தூய்மையான உலகம் என்றோ அழைக்கப்பட முடியாது. அந்தச் சத்தியயுகமானது இந்தக் கலியுகத்தில் இருந்து வேறுபட்டதாகும். இச்சக்கரம் எவ்வாறு சுற்றுகின்றது என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானது. விளக்கம் மிகவும் இலகுவானது, பலராலும் நினைவு யாத்திரையில் இருக்கும் முயற்சியைச் செய்ய முடிவதில்லை. அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகினையும் உங்கள் சரீரத்தையும் உங்கள் புத்தியில் இருந்து அகற்றித் தந்தையையும் வீட்டினையும் நினைவு செய்யுங்கள். உங்கள் சந்தோஷ நாட்கள் இப்போது வர இருக்கின்றன என்ற சந்தோஷத்தைச் சதா பேணுங்கள்.

2. ஞானம் நிறைந்த தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த ஞானத்தைக் கடைந்து, உங்கள் புத்தியை நிறைந்து வழியச் செய்யுங்கள். சரீர உணர்வு உடையவர்களாகி எவ்வழியிலும் திணறாதீர்கள்.

ஆசீர்வாதம்:
சதா நிலையான ஸ்திதி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதன் மூலம், நீங்கள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பீர்களாக.

அதி மேன்மையான சிம்மாசனம், பாப்தாதாவின் இதய சிம்மாசனமே ஆகும். எவ்வாறாயினும், இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதற்கு, உங்களிடம் ஆட்ட, அசைக்க முடியாத, நிலையான ஸ்திதியின் சிம்மாசனம் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஸ்திதி என்ற சிம்மாசனத்தில் உங்களால் ஸ்திரமாக இருக்க முடியாவிட்டால், உங்களால் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்திலும் ஸ்திரமாக அமர்ந்திருக்க முடியாது. இதற்கு, அமரத்துவ ரூபமாகி, உங்களின் நெற்றியின் மத்தி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். இந்தச் சிம்மாசனத்தில் அசையாதீர்கள். அப்போது உங்களால் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க முடியும்.

சுலோகம்:
உங்களின் தூய எண்ணங்களால், எதிர்மறையான எதையும் ஆக்கபூர்வமானதாக மாற்றுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.

தந்தை பிரம்மா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஆன்மீகத்தின் புன்னகையைக் காண விரும்புகிறார். இரண்டாவதாக, உங்களின் உதடுகளில் இருந்தும் இனிமையான வார்த்தைகளைக் கேட்பதற்கே கேட்க விரும்புகிறார். எந்தவொரு வார்த்தையும் இனிமை இல்லாமல் இருக்கக்கூடாது. உங்களின் முகத்தில் ஆன்மீகமும் உங்களின் வார்த்தைகளில் இனிமையும் உங்களின் மனதிலும் புத்தியிலும் சதா நல்லாசிகளும் இருக்க வேண்டும். ஒரு கருணைநிறைந்த அருள்பவரின் உணர்வுகளைக் கொண்டிருந்து, ஒவ்வோர் அடியிலும் தந்தையைப் பின்பற்றுங்கள். இந்தப் பராமரிப்பின் பிரதிபலனைக் கொடுங்கள்.