21.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே ஸ்ரீமத்தைப் பின்பற்றி அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள். அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதால் நீங்கள் அனைவரையும் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்கினீர்கள். இப்பொழுது சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெறுங்கள்.
கேள்வி:
எந்த இரகசியத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் விவேகமான குழந்தைகள் மேன்மையான ஓர் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றார்கள்?பதில்:
இது இன்பமும் துன்பமும் வெற்றியும் தோல்வியும் பற்றிய நாடகம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சந்தோஷ நாடகம் இப்பொழுது அரைக் கல்பத்திற்குத் தொடரும். அங்கே எவ்விதத் துன்பமும் இருக்காது. புதிய இராச்சியம் இப்பொழுது வரப்போகின்றது. அதற்காகத் தந்தை தனது பரந்தாமத்தை விட்டு குழந்தைகளாகிய எங்களுக்குக் கற்பிப்பதற்கு இங்கே வந்திருக்கிறார். இப்பொழுது முயற்சி செய்து நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுங்கள்.பாடல்:
உலகம் மாறலாம், ஆனால் நாங்கள் மாறமாட்டோம்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். இங்கே சத்தியப் பிரமாணம் செய்யத் தேவையில்லை. ஆத்மாக்கள் புரிந்துணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்கள் தமோபிரதானாக இருப்பதால் முற்றிலும் விவேகம் அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் எவ்வளவு விவேகம் அற்றவர்களாக இருந்தீர்கள் என்பதும் இப்பொழுது எவ்வளவு விவேகமானவர்களாக ஆகிவிட்டீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அத்தகைய விடயங்கள் மற்றைய ஆன்மீகக் கூட்டங்களிலே இருப்பதில்லை. அவர்கள் சமயநூல்களையும் இராமாயணம் போன்றவற்றையும் கற்கிறார்கள். அவர்கள் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் அதனை வெளியே விட்டு விடுகிறார்கள்; அங்கே எந்தப் பெறுபேறுமே இல்லை. அவர்கள் பெருமளவு தபஸ்யா செய்கிறார்கள், தானதர்மம் செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் அலைந்து திரிந்தாலும் எந்தப் பெறுபேற்றையும் பெறுவதில்லை. இவ்வுலகில் உள்ள எவருக்குமே சந்தோஷம் இல்லை. தந்தை இப்பொழுது உங்கள் முழுமையான புரிந்துணர்வைக் கொடுக்கிறார். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறார். மக்கள் காரிருளினுள் இருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் தொடர்ந்தும் அவரை நினைவு செய்கிறார்கள்: ஓ துன்பத்தை நீக்குபவரே! சந்தோஷத்தை அருள்பவரே! சற்கதி அருள்பவரே! உலகெங்கும் என்ன நடைபெறுகின்றது எனப் பாருங்கள். அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். தந்தை யார் என்பதோ அல்லது தந்தையிடம் இருந்து நீங்கள் என்ன ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதோ எந்த மனிதருக்கும் தெரியாது. அவர்களுக்கு எல்லையற்ற தந்தையைச் சிறிதளவேனும் தெரியாது. அவர்கள் அமைதியைத் தேடித் தொடர்ந்தும் அலைந்து திரிகிறார்கள். தமக்கு மன அமைதி வேண்டும் எனக் கூறியது யார்? ஆத்மாக்களே இதைக் கூறுகிறார்கள், ஆனால் மக்கள் இந்தளவையேனும் புரிந்து கொள்வதில்லை; அவர்கள் சரீர உணர்வு உடையவர்கள். சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அமைதியே தேவைப்படுகிறது. சாதுக்கள், புனிதர்களுக்கும் நோய்கள் வருகின்றன விபத்துக்களும் நடைபெறுகின்றன. உலகிலே துன்பத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. இப்பொழுது நீங்கள் விவேகமானவர்கள் ஆகிவிட்டீர்கள். புதிய உலகம், பழைய உலகம் மற்றும் சந்தோஷமும் துன்பமும் பற்றிய விளையாட்டு நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். தந்தை உங்கள் புத்தியிலுள்ள பூட்டைத் திறந்து விட்டார், ஏனைய மனிதர்கள் அனைவரும் ஒரு கோட்ரெஜ் பூட்டைத் தமது புத்தியில் கொண்டுள்ளார்கள்; அவர்கள் முற்றிலும் தமோபிரதான் புத்தியைக் கொண்டுள்ளார்கள். குழந்தைகளான நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக அனைத்தையும் அறிவீர்கள். நீங்கள் உண்மையாகவே எல்லையற்ற தந்தையைக் கண்டுவிட்டீர்கள். அவர் எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களையும் இந்த நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறுகிறார். சந்தோஷம் இருக்கும் பொழுது துன்பம் பற்றிய குறிப்பே இல்லை. நீங்கள் உங்கள் அமைதி, சந்தோஷம், செழிப்பு போன்ற ஆஸ்திகளைத் தந்தையிடம் இருந்து பெறுகிறீர்கள் என்பது குழந்தைகளான உங்கள் புத்தியில் இருக்கிறது. சத்தியயுக ஆரம்பத்தில் இருந்து திரேதாயுக இறுதிவரை எந்தத் துன்பமும் இருக்காது. நீங்கள் இப்பொழுது ஒளியில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குரிய இராச்சியத்திலே ஒருவரை விட மற்றவர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக முயற்சி செய்கிறீர்கள். இது ஓர் எல்லையற்ற பாடசாலை. எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். எல்லையற்ற புகழை உடைய அவரே உங்களுடைய அதி அன்பிற்கினிய தந்தை என்பது உங்களுக்குத் தெரியும். அந்த அதிமேலான தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். ஏனைய மனிதர்கள் அனைவரும் அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதனால் தொடர்ந்தும் ஒருவரையொருவர் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குகிறார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் நீங்கள் அனைவரையும் சந்தோஷமானவர்கள் ஆக்க வேண்டும். இந்த நாடகத்திலே எவ்வாறு நாங்கள் நடிகர்களாக இருக்கிறோம் என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை. இந்த நாடகத்திலே பாரத மக்களுக்கு மாத்திரமே சகலதுறைப் பாகங்கள் இருக்கின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். முன்னர் நீங்கள் எதையும் சிறிதளவேனும் அறிந்து கொள்ளவில்லை. இப்பொழுது நீங்கள் அசரீரி உலகம், சூட்சும உலகம், சரீர உலகம் பற்றிய அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். உங்களிடம் இப்பொழுது உண்மையான ஞானம் இருக்கிறது. பரமாத்மா பரமதந்தையே இவர் மூலம் எங்களுக்குக் கற்பிக்கிறார். பாபா எங்களுக்கு மூன்று உலகங்களினதும் ஞானம் அனைத்தையும் தருகிறார். இது ஒரு முட்காடாகும். நீங்கள் இப்பொழுது முட்களிலிருந்து மலர்களாக, அதாவது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இங்கே இளையவர்கள், முதியவர்கள் அனைவருமே தொடர்ந்தும் துன்பத்தையே விளைவிக்கிறார்கள். தாயின் கருப்பையினுள் இருக்கும் ஒரு குழந்தையும் அவளுக்குத் துன்பத்தையே கொடுக்கிறார். இது மிகவும் அழுக்கான பழைய உலகம். எவருக்கும் இந்த உலகச் சக்கரத்தைத் தெரியாது. நாங்கள் எங்கிருந்து வந்தோம், நாங்கள் எத்தனை பிறவிகளை எடுத்துள்ளோம், நாங்கள் எங்கே செல்ல வேண்டும் என்பது எவருக்குமே தெரியாது. எல்லையற்ற தந்தை, அதாவது, சீதைகள் அனைவரதும் ஒரே இராமர், அந்த அசரீரியான ஒரேயொருவரே ஆவார். நீங்கள் அனைவரும் சீதைகள், தந்தையே மணவாளன் ஆவார். நீங்கள் அனைவரும் ஒரு மணவாளனின் பக்தர்களாகிய மணவாட்டிகள் ஆவீர்கள். சீதைகள் அனைவரும் இப்பொழுது துன்பக்குடிலான இராவணனின் சிறையிலே அகப்பட்டுள்ளார்கள். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரேயொரு கடவுளையே நினைவு செய்கிறார்கள். கடவுளே பக்தர்கள் அனைவரதும் பாதுகாவலர் எனக் கூறப்படுகிறார். நீங்கள் அனைவரும் இப்பொழுது பிரம்மாவின் வாய் வழித்தோன்றல்களாகிய பிராமணர்கள் ஆவீர்கள். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது பிராமணர்களாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக பாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சிவபாபாவே சுவர்க்கத்தை உருவாக்குபவர். அதை நீங்கள் சுவர்க்கம் என்றோ அல்லது தெய்வீக இராச்சியம் என்றோ அழைக்கலாம்; அதுவே சுவர்க்க இராச்சியம். இலக்ஷ்மியும் நாராயணனுமே சுவர்க்கத்தின் அதிபதிகள். இப்பொழுது இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கே சத்தியயுகம் இருந்த பொழுது அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. இது இப்பொழுது கலியுகம். அந்த அப்பாவி ஆதரவற்ற மக்கள் கரிருளினுள் இருப்பதால் இது இப்பொழுது கலியுக இறுதி என்பதைப் பற்றிய எதனையுமே அவர்கள் அறியார்கள். விநாசம் முன்னால் நிற்கிறது. ஒரேயொரு இராமரே சீதைகளாகிய உங்கள் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். சீதைகள் அனைவரும் இப்பொழுது சீரழிந்த நிலையில் இருக்கிறார்கள். எவ்வாறாயினும் மக்கள் தாம் சீரழிந்த நிலையில் இருப்பதைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தமது செல்வத்தின் போதையை மாத்திரமே கொண்டுள்ளார்கள். எம்மிடம் அதிகளவு சொத்து, அதிகளவு செல்வம், பல்வேறு மாளிகைகள் போன்றவை இருக்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தத் துன்ப உலகம் மாறப் போகிறது என்பது எவருக்குமே தெரியாது. மரணம் உங்களுக்கு முன்னால் நிற்கிறது. அனைத்துமே மண்ணோடு மண்ணாகப் போகின்றன. பழைய உலகிலே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. விநாசத்திற்கான முழு ஆயத்தங்களும் செய்யப்படுகின்றன. இது அதே மகாபாரத யுத்தமாகும். இவரே அதே கீதையின் கடவுள் ஆவார். எவ்வாறாயினும் தந்தையின் வாழ்க்கை வரலாற்றில் அவர்கள் குழந்தையின் பெயரைப் புகுத்தி உள்ளார்கள். சிவபாபா இப்பொழுது உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அவர்கள் கடவுளின் பெயரை மறையச் செய்ததே மிகப் பெரும் தவறாகும். எமக்குக் கற்பிப்பவர் ஒரு மனிதனோ, சாதுவோ, அல்லது புனிதரோ அல்ல என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கிறார். அவரே தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார்; அனைத்தும் அவரே. இதை நீங்கள் மறக்கக்கூடாது. தந்தை கூறுகிறார்: அனைவரும் எனது குழந்தைகளே, ஆனால் அவர் அனைவருக்கும் கற்பிப்பதில்லை. தான் பாரத மக்களான உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு மீண்டும் ஒருமுறை வந்துள்ளதாகத் தந்தை கூறுகிறார். பாரத மக்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். அவர்கள் வைரங்களைப் போல இருந்தார்கள், இப்பொழுது சிப்பிகளைப் போலாகி விட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அதிகளவு அமைதியின்மை நிலவுகிறது. சிலர் கூறுகிறார்கள்: பாபா, எனது குழந்தைகளை நெறிப்படுத்த வேண்டும் என்பதால் நான் கோபப்படுகின்றேன். ஐந்து விகாரங்களையும் நான் சிவபாபாவிடம் தானம் அளித்துள்ளதால் 'நான் ஏன் இதைச் செய்கிறேன்?" என்ற கரிசனை எனக்கு இருக்கிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த நேரத்திலே அனைவர் மீதும் ஐந்து விகாரங்களின் கிரகணம் இருக்கிறது. சரீர உணர்வு எனும் தீய ஆவி வரும்பொழுது மற்றைய தீய ஆவிகள் அனைத்தும் வருகின்றன. தந்தை கூறுகிறார்: இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! இப்பொழுது நீங்கள் புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். நாங்கள் சத்திய யுகத்திலும் ஆத்ம உணர்வு உடையவர்களாகவே இருந்தோம். ஆத்மாவின் இந்தச் சரீரம் இப்பொழுது பழையதாகி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நான் இப்பொழுது எனது ஆயுட் காலத்தை முடித்து விட்டேன். எனவே நான் இந்தச் சரீரத்தை விட்டு புதியதொன்றை எடுப்பேன். ஒரு பாம்பின் தோல் பழையதாகும் பொழுது அது அதை நீக்கிவிட்டு புதியதொன்றை எடுக்கிறது. இது சத்தியயுகத்திற்கான உதாரணமே ஆகும். அங்கே நீங்கள் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லாத விதமாக ஒரு சரீரத்தை விட்டு நீங்குகின்றீர்கள். இங்கே அதிகளவு துன்பம் இருக்கிறது. பெருமளவு அழுகையும் புலம்பலும் இருக்கின்றன. இது ஒரு பழைய தோல் என்பது இப்பொழுது குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். நீங்கள் இங்கே புதிய தோல்களைப் பெறப் போவதில்லை. இதுவே இறுதி பழைய சப்பாத்து. நீங்கள் இப்பொழுது அதன் மூலம் சலிப்படைந்து விட்டீர்கள். நீங்கள் அங்கே ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றைப் பெரும் சந்தோஷத்துடன் எடுக்கிறீர்கள். இவ்விடயங்களை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். புதியவர்கள் பலர் இங்கே வருகின்றார்கள், ஆனால் அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இங்கே அனைத்தையும் புரிந்து கொள்வதற்காக இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு வருகிறார்கள், அதன்பின்னர் அவர்கள் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள்! ஆம், அவர்கள் அனைத்தையும் மிகக் கவனமாகக் கேட்டு சந்தோஷத்தை அனுபவம் செய்தால் அவர்கள் பிரஜைகள் ஆகுவார்கள். பல பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். இது கடவுளின் வாசலும் (தர்) வீடும் (கர்) ஆகும். நீங்கள் கடவுளின் வீட்டிலே அமர்ந்திருக்கிறீர்கள். பரமாத்மா பரந்தாமத்தில் இருந்து வந்து இப்பொழுது இங்கே ஒரு சாதாரண சரீரத்திலே அமர்ந்திருக்கிறார். அங்கே ஆத்மாக்கள் தந்தையுடன் வாழ்கின்றனர். இங்கே பாபாவே தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவதற்குச் சங்கமயுகத்திலே வந்திருக்கிறார். அவர் அசரீரியான சிவன் என அழைக்கப்படுகிறார். ஆத்மாக்கள் அசரீரியான தந்தையை அழைக்கிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! 'தந்தையாகிய கடவுளே" என மக்கள் எதனையும் புரிந்து கொள்ளாமல் கூறுகிறார்கள். இலக்ஷ்மி நாராயணனை இறைவனும் இறைவியும் என ஐரோப்பியர் அழைக்கிறார்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? மக்கள் தேவ விக்கிரகங்களுக்குக் கூறுகிறார்கள்: நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்கள், பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள். பின்னர் அவர்கள் தம்மைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? பாரதத்தில் வாழ்ந்து ஆட்சிசெய்த அவர்கள் (தேவர்கள்) மனிதர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, அவர்களின் புகழைப் பாடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் தம்மைத் தாமே சீரழிந்த பாவிகள் என அழைக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்திற்கும் சென்று, அவருடைய புகழைப் பாடுகிறார்கள். அவர்கள் சிவனைப் பற்றி இந்தப் புகழைப் பாட மாட்டார்கள். அவருடைய புகழ் வேறுபட்டது. பொதுவாக அவர்கள் ஒரு சிவாலயத்திற்குச் செல்லும் பொழுது தமது மடியை நிரப்புமாறு வேண்டுகிறார்கள். பின்னர் அவர் போதையூட்டும் பானத்தை அருந்துவதாகவும் நச்சு மலர்களை உண்பதாகவும் கூறுகிறார்கள். அங்கு எவ்வாறு போதையூட்டும் பானமும் நச்சு மலர்களும் இருக்க முடியும்? அவர்களுக்குப் புரிந்துணர்வு எதுவும் இல்லை! அவர்களுக்கு ஒரு கணவன் வேண்டும், அவர்களுக்கு இது வேண்டும் அல்லது அது வேண்டும் என அவர்கள் சதா அனைத்தையும் வேண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். தீபமாலா தினத்தன்று அவர்கள் இலக்ஷ்மியை அழைக்கிறார்கள். அவர் (இலக்ஷ்மி) யார் என்பது எவருக்குமே தெரியாது. எவருக்காவது எப்பொழுதேனும் 8 அல்லது 10 கரங்கள் இருந்ததுண்டா? நான்கு கரங்களைக் கொண்ட உருவம் இல்லறப் பாதையைச் சித்தரிக்கிறது. அவ்வுருவத்திற்கு அவர்கள் விஷ்ணு எனப் பெயர் சூட்டியுள்ளார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்திய யுகத்திலேயே வாழ்கிறார்கள். விஷ்ணுவின் இரட்டை வடிவத்தின் மூலம் அதாவது, இலக்ஷ்மி நாராயணனின் மூலம் பராமரிப்பு நடைபெறுவதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இலக்ஷ்மியின் உருவங்களையும் நான்கு கரங்களுடன் சித்தரித்துள்ளார்கள். நான்கு கரங்களுடன் கூடிய ஒருவருக்கு நான்கு கரங்களுடைய குழந்தைகளே இருப்பார்கள்! அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை! பாபா வரும்வரை நீங்களும் எதனையும் புரிந்து கொள்ளவில்லை என்பதை இப்பொழுது விளங்கிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி தெரியும். தந்தை வந்து தூய்மையற்ற உலகத்தைத் தூய்மை ஆக்குகிறார். “ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!” என மக்கள் அழைக்கிறார்கள். கடவுள் எவ்வாறு வரமுடியும்? அவர் எவ்வாறு தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவார்? தந்தை கூறுகிறார்: நான் தேவ சுய இராச்சியத்தை 5000 வருடங்களுக்கு முன்னரும் உருவாக்கினேன். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதைப் பற்றிய புரிந்துணர்வு எதுவுமே உங்கள் புத்தியில் முன்னர் இருக்கவில்லை. இந்தப் பிரம்மாவும் எதையுமே அறிந்திருக்கவில்லை. அவர் தொடர்ந்தும் இராதை கிருஷ்ணரையும் இலக்ஷ்மி நாராயணனையும் வழிபாட்டார். ஆனால் இராதையும் கிருஷ்ணருமே தங்களின் திருமணத்தின் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகிறார்கள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இதனாலேயே இளவரசி இராதை, இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர் எனக் கூறப்படுகிறது. தங்களின் திருமணத்தின் பின்னர் அவர்கள் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியும் ஆகுகிறார்கள். அவ்வாறு ஆகுபவராகிய இவரே அதை அறிந்திருக்கவில்லை. ஒருவர் காட்சிகளைப் பெற்றாலும் அவர் எதையுமே புரிந்து கொள்வதில்லை. இருப்பினும் நான் தற்காலிகமாக பக்தர்களுக்கு அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் காட்சிகளை அருள்கிறேன். இங்கு திரான்ஸ் அல்லது காட்சிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் காட்சிகள் போன்றவற்றிலே மாயை குறுக்கிட்டால் பின்னர் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். பலர் வந்து சிவபாபாவின் காட்சியை வேண்டுகிறார்கள். மின்மினிப் பூச்சிகள் எவ்வளவு சிறியவை என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அவற்றைக் கண்ணாலேனும் காணமுடியும். ஓர் ஆத்மா அதை விடச் சின்னஞ்சிறிய புள்ளி ஆவார். ஓர் ஆத்மாவைப் போலவே பரமாத்மாவின் ரூபமும் இருக்கும். நீங்கள் ஒரு காட்சியைப் பெற்றிருந்தாலும் அது சின்னஞ் சிறிய புள்ளியினுடைய காட்சியாகவே இருக்கும். அது நெற்றியின் மத்தியிலே வாழ்கின்ற மிகவும் சின்னஞ்சிறிய ஒரு புள்ளியாகும். அவர்கள் ஓர் ஆத்மாவின் காட்சியைப் பெற்றாலும் எதையுமே புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பிரம்மா குமாரர்கள் குமாரிகளாகிய நீங்கள் அனைவரும் உங்கள் ஆஸ்தியைச் சிவபாபாவிடம் இருந்து பெறுகிறீர்கள். இது எங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் மாணவர்கள். நீங்கள் தந்தையுடன் இலகு இராஜயோகத்தைக் கற்க வந்துள்ளீர்கள் எனக் கூறுகிறீர்கள். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இதை மறக்கக்கூடாது. பக்தி மார்க்கத்திலே பக்தர்கள் தங்களுடன் தேவர்களின் படங்களை வைத்திருக்கிறார்கள். எனவே திரிமூர்த்தியின் படத்தை நீங்களும் உங்கள் சட்டைப் பையிலே வைத்திருக்க வேண்டும். நாங்கள் சிவபாபாவின் மூலம் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகிறோம். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சிவபாபாவிடம் விகாரங்களைத் தானம் செய்த பின்னர் என்றுமே அவற்றை மீண்டும் எடுக்காதீர்கள். சரீர உணர்வு எனும் தீய ஆவியிடம் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இத்தீய ஆவியின் மூலமே மற்றைய தீய ஆவிகள் அனைத்தும் வருகின்றன. எனவே ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.2. திரான்சில் செல்வதற்கோ காட்சிகளைப் பெறுவதற்கோ ஆசை வைத்திருக்காதீர்கள். உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன்னால் வைத்திருந்தவாறு முயற்சி செய்யுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கரவன்ஹாரை (செயல்களைச் செய்யத் தூண்டுபவர்) உணர்ந்தவராக இருந்தவண்ணம் எப்போதும் நீங்கள் செய்யும் சேவையில் ஆக்கபூர்வமான வேலையைச் செய்கின்ற கர்மயோகி ஆகுவீர்களாக.எந்தவொரு செயலையும் ஒரு கர்மயோகி ஸ்திதியுடன் செய்யுங்கள். நீங்கள் வெறுமனே செயல்களைச் செய்பவர்கள் அல்ல, ஆனால் நீங்கள் ஒரு கர்மயோகி ஆவீர்கள். கர்மங்கள் என்றால் ஓர் உறவுமுறை என்று அர்த்தம். யோகம் என்றால் இறைவனுக்காக என்று அர்த்தம். எனவே இரண்டிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். உங்களின் சரீரத்தின் வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்ளும் அதே வேளை ஆத்மாவான உங்களின் வாழ்வாதாரத்தை மறந்து விடாதீர்கள். நீங்கள் என்ன செயலைச் செய்தாலும் அது இறை சேவையாக இருக்க வேண்டும். இதற்கு சேவையில் ஒரு கருவியாக இருப்பதுடன் கரன்ஹார் (செய்பவர்) ஆக இருக்கும் உணர்வை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். நீங்கள் கரவன்ஹாரை மறக்காதபோது தொடர்ந்து நீங்கள் செய்யும் சேவையில் ஆக்கபூர்வமாக இருப்பீர்கள்.
சுலோகம்:
சேவை, உறவுமுறைகள், தொடர்புகளில் தடைகள் ஏற்படுவதற்கான காரணம் பழைய சம்ஸ்காரங்கள் ஆகும். அதனால் அந்த சம்ஸ்காரங்களின் மீது விருப்பமின்மையைக் கொண்டிருங்கள்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
அமர்வதற்கான அதி மேன்மையான சிம்மாசனம், பாப்தாதாவின் இதய சிம்மாசனம் ஆகும். எவ்வாறாயினும் இந்தச் சிம்மாசனத்தில் அமர்வதற்கு முன்னர் உங்களிடம் ஆட்ட, அசைக்க முடியாத நிலையான ஸ்திதி என்ற சிம்மாசனம் இருப்பது அவசியம். உங்களின் அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பயிற்சி உங்களுக்கு இருந்தால் மட்டுமே உங்களால் நிலையான ஸ்திதி என்ற சிம்மாசனத்தில் ஸ்திரமாக அமர முடியும். அந்தத் தபஸ்விகள் எப்போதும் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைப் போல் நீங்கள் ஆத்மாவின் நிலையான ஸ்திதி என்ற சிம்மாசனத்தில் ஸ்திரமாக அமர்ந்திருக்க வேண்டும். இந்த ஆசனத்தை விட்டு நீங்காதீர்கள். அப்போது மட்டுமே நீங்கள் சிம்மாசனத்தைப் பெறுவீர்கள்.