22.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் விவேகிகள் ஆகியுள்ளீர்கள். எனவே ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதில் நீங்கள் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் வேலை செய்கின்ற போதும், தந்தையை நினைவுசெய்ய நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தொடர்ந்தும் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் பெற்றிராத, எந்த ஸ்ரீமத்தை இப்பொழுது பெறுகின்றீர்கள்?பதில்:
இந்நேரத்தில் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் ஸ்ரீமத்: இனிய குழந்தைகளே, அதிகாலையில் எழுந்திருந்து, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள், அப்பொழுதே உங்களால் உங்களின் முழு ஆஸ்தியையும் கோரமுடியும். 2) வீட்டில் உங்களின் குடும்பத்துடன் வாழும்போதும், தாமரை மலர்போன்று இருங்கள். வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களிலும், நீங்கள் இவ்வாறான ஸ்ரீமத்தைப் பெறுவதில்லை. அந்த ஆன்மீக ஒன்றுகூடல்களில் தந்தையையும், ஆஸ்தியையும் பற்றிய கேள்வியில்லை.பாடல்:
நீங்களே தாயும், தந்தையும் ஆவீர்கள்……ஓம் சாந்தி.
பல ஆன்மீக ஒன்றுகூடல்கள் விசேடமாக பாரதத்திலும், பொதுவாக முழு உலகிலும் இருக்கின்றன. தாங்கள் ஓர் ஆஸ்தியைக் கோருகின்றோம் என்ற எண்ணம் எந்த ஒன்றுகூடல்களிலோ, ஆலயங்களிலோ, தேவாலயங்கள் போன்றவற்றிலோ உள்ள மக்களின் புத்தியில் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அனைத்து நிலையங்களில் உள்ள குழந்தைகளும் சந்தோஷ உலகம் எனும் ஆஸ்தியைத் தங்களுடைய தந்தையிடம் இருந்து கோருகின்றோம் என்ற எண்ணத்துடன் எல்லையற்ற தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடலிலோ அல்லது தேவாலயங்கள் போன்றவற்றிலோ இந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் உள்ளது. நீங்கள் புதிய உலகமாகிய சுவர்க்கம் எனும் உங்களின் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். ஒரு தந்தையிடம் இருந்தே குழந்தைகள் அனைவரும் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். பல குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அதிகாலை வேளையில் எழுந்திருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள் எனும் ஸ்ரீமத்தை நீங்கள் அனைவரும் பெறுகின்றீர்கள். நாங்கள் இந்த ஆஸ்தியை பாபாவிடம் இருந்து பெறப்போகின்றோம். நாங்கள் அந்தத் தந்தைக்குச் சொந்தமானவர்கள். ஆத்மாக்களான நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். என்னை நினைவு செய்யுங்கள், வீட்டில் உங்களின் குடும்பங்களுடன் வாழும்போதே, தாமரை மலர்போன்று தூய்மையாக இருங்கள் என்று தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அனைவரும் இங்கே வந்து தங்கியிருக்கலாம் என்றில்லை. நீங்கள் பாடசாலைக்கு கற்பதற்காகச் சென்று பின்னர் வீட்டுக்குத் திரும்புகின்றீர்கள். ஒவ்வொரு குழந்தையும் அவர்களுடைய ஆசிரியரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறமுடியும், இங்கும் அதேபோன்றதுதான். நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்றுவிட்டுப் பின்னர் வீட்டுக்குச் சென்று, வேலைக்குச் செல்கின்றீர்கள். நீங்கள் வீட்டில் வாழ்கின்றீர்கள், அத்துடன் மாணவர்களாகவும் இருக்கின்றீர்கள். வீட்டில் வாழும்போதே நீங்கள் தாமரைமலர் போன்று தூய்மையாக இருங்கள். எந்த சந்நியாசிகளும் இதைக் கூறுவதில்லை. நீங்கள் இங்கே நடைமுறை ரீதியில் இருக்கின்றீர்கள். குடும்பத்துடன் வாழும்போதே நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். வேறு எவருமே தூய்மையாகி பரமதந்தை, பரமாத்மாவை நினைவு செய்வதில்லை. அவர்கள் கீதையைக் கேட்டு, அதைக் கற்றபோதிலும், அவரை நினைவு செய்வதில்லை. அவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் இடையில் அதிக வேறுபாடு உள்ளது. எங்களுடைய தந்தை ஞானம் நிறைந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரிடம் நாடகத்தின் முழுச்சக்கரம் பற்றிய ஞானம் இருக்கின்றது. நாங்களும் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றோம். இந்தச் சக்கரமும் மிகவும் நல்லது. இது அதி உன்னதமான சங்கமயுகமாக இருப்பதால் உங்களுடைய இந்தப்பிறப்பும் அதிமேன்மையான ஒன்றாகும். மேலதிகமான மாதம் ஒன்றுள்ளது. இல்லையா? நாங்கள் உண்மையில் தந்தையினால் அதிமேன்மையானவர்கள் ஆக்கப்படுகின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் மீண்டும் ஒருமுறை அதியுயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் மீண்டும் ஒருமுறை 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகின்றோம். நீங்கள் இந்த ஞானத்தைப் புத்தியில் கொண்டுள்ளீர்கள். இது வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் விளங்கப்படுத்தப்படுவதில்லை. நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும் எனப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தந்தையால் மாத்திரமே உங்களை இவ்வாறு ஆக்கமுடியும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் படத்தை மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். பிரம்மாவின் மூலமாக யோகசக்தியினால் அவர்கள் உண்மையில் அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். நீங்கள் உங்கள் புத்தியில் இதை வெளிப்படும் வகையில் இருக்கச் செய்யவேண்டும். பிரம்மா, சரஸ்வதியினதும், இலக்ஷ்மி, நாராயணனினதும் இரண்டு ரூபங்களும் காட்டப்பட்டுள்ளன. பிரம்மா சரஸ்வதியுடன் பிரஜைகளும் காட்டப்பட வேண்டும். ஒவ்வொரு விடயத்தையும் பற்றியும் மிக நன்றாக சிந்தியுங்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். அவர் பிரம்மாவுக்கும் கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். அவர் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான உங்கள் அனைவருக்கும் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். எவ்வாறு அவரை நினைவுசெய்ய வேண்டுமென்பது உங்கள் புத்தியில் உள்ளது. படங்களும் உங்களின் முன்னால் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இதை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். கண்காட்சிகளிலும் இந்தப் படங்களை விளங்கப்படுத்துங்கள். அவர் உண்மையிலேயே அனைவரதும் எல்லையற்ற தந்தை என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. இதற்கேற்ப நாங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறவேண்டும். அசரீரியான ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். நாங்கள் சரீரதாரிகள் ஆகும்போது, சகோதர, சகோதரிகள் ஆகின்றோம். அதன் பின்னரே நாங்கள் கற்கமுடியும். பிரம்மாவின் குழந்தைகளே சகோதர, சகோதரிகள் ஆகின்றார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இதை உங்கள் புத்தியில் பதிய வையுங்கள். இதை எவருக்கும் விளங்கப்படுத்துங்கள். முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். நாங்கள் சகோதரத்துவம் ஆனவர்கள். நீங்கள் சர்வவியாபி என்று பேசும்போது, அது தந்தைத்துவம் ஆகின்றது. எவ்வாறு ஒரு தந்தைத்துவம் ஓர் ஆஸ்தியைப் பெறமுடியும்? அனைவரும் தந்தை எனக் கூறுவதன் மூலம் நீங்கள் வீழ்வதுடன், ஆஸ்தியையும் பெறமுடியாமல் போகின்றது. இதுவே சகோதரத்துவம் என்பதை இப்பொழுது புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இதை மிக நன்றாக விளங்கப்படுத்தும் போது மக்களின் புத்தியிலுள்ள எட்டு இஷ்ட தெய்வங்களைப் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் அகற்றப்படும். அவர்களுக்கு இரண்டு தந்தையர் உள்ளார்கள் என்று அவர்களிடம் கூறுங்கள். ஒருவர், அனைவரும் சற்கதியைப் பெறுகின்ற ஆன்மீகத் தந்தை ஆவார். அவர் மாத்திரமே அமைதி, சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அதனால் அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். அவரே சுவர்க்கத்தை உருவாக்குகின்ற சுவர்க்கத்தின் கடவுளான, தந்தை என்று அழைக்கப்படுகின்றார். முதலில் தந்தையின் ஆதிக்கம் அவர்களது புத்தியில் இருக்கட்டும். அவர் ஆத்மாக்களின் எல்லையற்ற தந்தை ஆவார். அவரே தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பரமதந்தை, பரமாத்மாவின் குழந்தைகள் ஆவீர்கள். இந்த நம்பிக்கையை உறுதியாக்குங்கள். முதலில் இந்தப் பிரதான விடயங்களை அவர்களது புத்தியில் நிலைக்கச் செய்யுங்கள். அவர்கள் இதைப்புரிந்து கொள்கின்றபோது மட்டுமே சந்தோஷப் பாதரசம் உயர்வதுடன், நாங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்வோம், தந்தையை நினைவு செய்வதன் மூலம் உலகின் அதிபதிகள் ஆகுவோம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றோம் என அப்பொழுதே அவர்களால் கூறமுடியும். அவர்கள் இந்த சந்தோஷத்தை அதிகளவு கொண்டிருப்பார்கள். விவேகமானவர்களும், புத்தியில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர்களும் கூறுவார்கள்: முதலில் நாங்கள் தாதாவில் பிரவேசிக்கும் எல்லையற்ற தந்தையைச் சந்திப்போம். சிவபாபா பிரம்மா பாபாவின் ஊடாகவே எங்களுடன் பேசமுடியும். ஆத்மாக்களாகிய நீங்கள் அவரை இன்னமும் சந்திக்கவில்லை என்றால், எவ்வாறு நீங்கள் அவரை நினைவு செய்யமுடியும்? குழந்தைகள் தத்து எடுக்கப்படுகின்ற போதே அவர்களால் அவரை நினைவு செய்யமுடியும். நீங்கள் தத்து எடுக்கப்படவில்லை என்றால் எவ்வாறு நீங்கள் அவரை நினைவு செய்வீர்கள்? முதலில் அவருக்குச் சொந்தம் ஆகுங்கள். நீங்கள் அவ்வாறான தந்தையை உடனடியாகவே சந்திக்க வேண்டும். தந்தை வினவுகின்றார்: நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்களா? நான் ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை ஆவேன். சிவபாபா உங்களுடன் பேசுகின்றார். ஆத்மாவாகிய என்னுடைய தந்தையே உங்களுடைய தந்தையும் ஆவார். உண்மையில் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர்தான் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்களா? என அவர் உங்களை வினவுகின்றார். அவர் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பார். நீங்களும் தூய்மையாக வேண்டும். அவரை நினைவு செய்வதற்கு நீங்கள் அனைத்தையும் மறக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் வீட்டிலிருந்து சரீரமற்றவர்களாகவே வந்தீர்கள். உங்களுக்கு சரீரமோ அல்லது சரீர உறவினர்களோ இருக்கவில்லை. ஓர் ஆத்;மா சரீரத்தினுள் பிரவேசித்து வளர்ச்சி அடைந்த பின்னரே, அவருக்கு இவர் உங்களுடைய தந்தை, இவர் இன்னார், இன்னார் என விளங்கப்படுத்த முடியும். ஆத்மா அனைத்து உறவுமுறைகளில் இருந்தும் விலகியிருப்பார். ஓர் ஆத்மா சரீரத்தை விட்டுச் செல்கின்றபோது, கூறப்படுகின்றது: நீங்கள் மரணிக்கின்றபோது, உலகமே உங்களுக்கு மரணிக்கின்றது. இன்னொரு சரீரத்தை எடுக்கும் வரைக்கும் ஆத்மா பந்தனத்தில் இருந்து விடுபடுகின்றார். ஓர் ஆத்மா ஒரு தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்துப் பின்னர் பிறப்பெடுக்கின்றார். ஆத்மா அறிந்து கொள்பவர் ஆகும்போதே உறவுமுறைகள் என்ற கேள்வி எழுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இங்கேயும் இதை விளங்கப்படுத்த வேண்டும். வாழும்போதே அனைத்தையும் மறந்து விடுங்கள். ஒரு தந்தையை நினைவு செய்வதே கலப்படமற்ற நினைவு என்று அழைக்கப்படுகின்றது. இதுவே யோகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கேயுள்ள மனிதர்கள் பலரை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் கலப்படமற்ற நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள். அந்தச் சரீர உறவுகள் எல்லாம் அழியப் போகின்றது என்றும் எங்களுடைய உறவுமுறை ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் என்பதையும் ஆத்மாக்களான நாங்கள் அறிவோம். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு செய்வதனால் நீங்கள் பாவம் செய்கின்றீர்கள் என்றில்லை, இல்லை. தவறான செயல்கள் செய்கின்ற போதே பாவங்கள் செய்யப்படுகின்றன. ஏனையோரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் பாவத்தை சேர்த்துக் கொள்வதில்லை, ஆனால் நேரம் நிச்சயமாக வீணாக்கப்படுகின்றது. ஒரு தந்தையை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இதுவே உங்களது பாவங்களை அழிப்பதற்கான வழிமுறை ஆகும். எவ்வாறாயினும் நீங்கள் உங்களது நண்பர்கள், உறவினர்கள் போன்றோரையும் நினைவு செய்கின்றீர்கள். உங்கள் வியாபாரத்தையும், சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான அனைத்தையும் செய்யுங்கள். ஆனால், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்தால், கலப்படம் அகற்றப்படும். இதுவே பிரதான விடயம் ஆகும். எவ்வாறு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர் ஆகுவது என்பது பற்றி உள்ளாரச் சிந்தியுங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழவேண்டும். சந்நியாசிகள் அவர்களுடைய சரீரத்தைவிட்டு நீங்கிப் பின்னர் குடும்பத்தவர்களுக்கு பிறக்கின்றனர். அவர்கள் பிறவி, பிறவியாக தூய்மை ஆகுவார்கள் என்றில்லை. விகாரமற்ற உலகம் இப்பொழுது இருப்பதில்லை. இது விகாரமான உலகமாகும். எவருமே இதிலிருந்து விடுபட முடியாது. விகாரமான உலகில் வசிக்கின்றமையால், நிச்சயமாக ஏதோவொரு பலவீனம் இருக்கின்றது. எவ்வாறாயினும் இரண்டு உலகங்களே இருக்கின்றன. ஒன்று விகாரமற்றது, மற்றையது விகாரமான உலகம். தேவர்கள் தூய உலகிலேயே வசிக்கின்றனர். இது விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவாக இருக்கவேண்டும். இந்தத் தூய்மையற்ற உலகம் இப்பொழுது அழியப் போகின்றது. விநாசம் இடம்பெறும் முன்னர் எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்களின் ஆஸ்தியைக் கோருங்கள். பாபா கூறுகின்றார்: சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து, நீங்கள் ஓர் ஆத்மா என்று நம்பிக்கையைக் கொண்டிருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை தூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றீர்கள். கங்கையில் மூழ்கி எழுகின்ற பலர் இருக்கின்றனர். அதனைச் செய்வதனால் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள் என்றில்லை. நீங்கள் கண்காட்சிகளில் மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். மக்களின் தந்தையான பிரஜாபிதா பிரம்மா இங்கேயே இருக்கவேண்டும். கீழே பிரம்மாவும், பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் தபஸ்யா செய்வதாகக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் இந்த விடயத்தை மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இதயபூர்வமாக விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் மேலோட்டமாக அதிகளவு இந்த ஞானத்தைக் கொடுப்பதன் மூலம் நீங்கள் பெயரை அவதூறு செய்வீர்கள். நீங்கள் எதுபற்றியாவது குழப்பம் அடையும்போது, இன்னொரு சகோதரியை அனுப்பும்வரை அவர்களைக் காத்திருக்குமாறு கூறுங்கள். சிலர் மற்றவர்களிலும் பார்க்க திறமைசாலிகள் ஆவார்கள். அனைவரும் வாதம் செய்யாது விளங்கப்படுத்துகின்றார்களா என நிச்சயப்படுத்துவதற்கு கண்காட்சிகளிலும் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். அனைவரையும் அறிந்த ஒருவர் வாசலில் இருக்கவேண்டும். ஏனெனில் பலவிதமான வித்தியாசமான மக்கள் வருகின்றார்கள். நீங்கள் பிரபல்யமான மக்களுக்கு நிச்சயமாக மரியாதை கொடுக்க வேண்டும். அங்கே நிச்சயமாக சில வேறுபாடுகள் இருக்கும். மற்றவர்களிலும் பார்க்க இவருக்கு அதிகளவு அன்பு காட்டப்படுகின்றது என்ற பாகுபாட்டை நீங்கள் உணரக்கூடாது. இது பாகுபாடு பார்த்தல் என்று அழைக்கப்படுவதில்லை. அதி முக்கியமான பிரமுகர்களுக்கு இங்கே அதிகளவு விருந்து உபசாரம் செய்யப்படுவதாகச் சிலர் உணர்கிறார்கள். சேவை செய்பவர்களுக்கு நிச்சயமாக அந்த உபசாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் ஒரு கட்டடத்தைக் கட்டிக்கொடுத்து இருந்தால், அவரை நிச்சயமாக பார்த்துக் கொள்வதுடன் அந்த உபசாரமும் கொடுக்கப்பட வேண்டும். கட்டடங்கள் உங்களுக்காகவே கட்டப்படுகின்றன. முயற்சி செய்து அரசர்கள் ஆகியவர்களைப் பிரஜைகள் இயல்பாகவே பார்த்துக் கொள்வார்கள். உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களுக்கு, தாழ்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களிலும் பார்க்க நிச்சயமாக மகத்தான விருந்து உபசாரம் செய்து கொடுக்கப்பட வேண்டும். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். எவ்வாறாயினும் அவர் பாரதத்திலேயே பிறப்பெடுக்கின்றார். முதலில் மேன்மையானவர்களாக இருந்த பாரதமக்கள் இப்பொழுது சீரழிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளேன். நான் பாரதத்திலேயே வருகின்றேன், அதனால் அனைவருமே நன்மை அடைகின்றனர். ‘குறிப்பாக’ மற்றும் ‘பொதுவாக’ என்ற வார்த்தைகள் உள்ளன. பாரதம் இப்பொழுது நரகமாக உள்ளது, அது சுவர்க்கமாக வேண்டும். எனவே அவர் பாரதத்திற்கே வரவேண்டும், இல்லையா? வேறு எங்காவது சென்று, அவர் என்ன செய்வார்? பக்தி மார்க்கத்தில் பாரத மக்களே முதலில் மிக அழகான சோமநாதர் ஆலயத்தைக் கட்டினார்கள். பாப்பரசரால் அந்த இராச்சியம் கோரப்பட்டபோது எவ்வாறு வெளிநாடுகளில் பெரிய தேவாலயங்களைக் கட்டினார்களோ அதைப் போன்றதே இதுவும். தேவாலயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவையல்ல, அவையும் வரிசைக்கிரமமானவை. சோமநாதர் ஆலயம் வைரங்களாலும், இரத்தினங்களாலும் நிறைந்திருந்தது. முஸ்லிம்கள் அனைத்தையும் கொள்ளை அடித்து எடுத்துச் சென்றார்கள். நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். ஒரு தேவாலயத்தில் இருந்து நீங்கள் எதைக் கொள்ளை அடிப்பீர்கள்? மக்கள் பணத்தின் பின்னால் ஓடுகின்றனர்! முகமது கஸ்நாவி அதிகளவை எடுத்துச் சென்றார். பின்னர் பிரித்தானியர்கள் வந்தார்கள். அவர்கள் தொடர்ந்தும் வெளிநாட்டுக்கு செல்வத்தை அனுப்பியதுடன், அதிகளவை எடுத்தும் சென்றார்கள். நீங்கள் இப்பொழுது அதைத் திரும்பப் பெறுகின்றீர்கள். அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொடுக்கின்றனர். நீங்கள் தேவையான நேரத்தில் இவை அனைத்தையும் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களது கணக்கை திரும்பப் பெறாவிடின், தேவையான நேரத்தில் என்ன செய்வீர்கள்? எவ்வாறு இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்தக் கொடுக்கல், வாங்கல் கணக்கைப் பாருங்கள். ஆயினும் நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்தின் அதிபதிகளாக வேண்டும். எவ்வாறு உலக வரலாறும் புவியியலும் சக்கரத்தில் சுற்றி வருகின்றது எனப்பாருங்கள். இதுவும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: குழந்தைகளே, மன்மனாபவ ஆகுங்கள்! இவை அனைத்தும் மறுபடியும் இடம்பெறும். சதோவில் இருந்து அனைத்துமே தமோபிரதான் ஆகும். பகலிலே நீங்கள் வேலை போன்றவற்றைச் செய்யவேண்டும். எனவே அந்த நேரத்தை விடுத்து, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நினைவு செய்யுங்கள். உங்களுக்கு வேலை செய்யும் போதும் நேரம் உள்ளது. சிலருடைய வேலை அவ்வாறானது, அவர்கள் காகிதத்தில் கையெழுத்திடும் வேலையை மட்டுமே செய்கின்றார்கள், அவ்வளவுதான்! பலரும் அதிகளவு ஓய்வாக இருக்கின்றார்கள். பின்னர் இரவு உங்களுக்குச் சொந்தமானது. பகல் நேரத்தில் உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள். எனவே இரவில் இந்த வருமானத்தைச் சம்பாதியுங்கள். இது உங்களின் எதிர்கால 21 பிறவிக்கானதாகும். ஒரு நொடி, அரைநொடி என்று கூறப்பட்டுள்ளது. இயன்றளவிற்கு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள், நீங்கள் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். விவேகிகள் தாங்கள் உண்மையில் அதிகளவு சம்பாதிக்க முடியும் எனப் புரிந்து கொள்வார்கள். சிலர் அவர்களது அட்டவணையில் எழுதுகின்றார்கள், நான் பாபாவை இவ்வளவு நேரம் நினைவு செய்தேன். அறியாமைப் பாதையிலும் சிலர் தங்களுடைய நாளாந்த அட்டவணையை எழுதுகின்றார்கள். நீங்கள் உங்கள் அட்டவணையை எழுதினால் உங்களால் அந்த கவனத்தைப் பேணமுடியும். உங்களுடைய நேரம் வீணாக்கப்படவில்லையே, அல்லது நீங்கள் எந்தப் பாவச்செயலையும் செய்யவில்லையே என்பதைச் சோதித்துப் பாருங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தச் சரீரதாரிகளையும் நினைவு செய்வதன் மூலம் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். பாவச் செயல்கள் ஆகும்படியான எந்தப் பிழையான செயல்களையும் செய்யாதீர்கள்.2. உயிருள்ள போது ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள், ஏனைய அனைத்தையும் மறந்திடுங்கள். உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காகச் செயல்களைச் செய்யுங்கள். அத்துடன், விவேகிகளாகி அழியாத வருமானத்தைச் சம்பாதியுங்கள். நினைவு அட்டவணையை வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் முழுமையான ஸ்திதி மற்றும் உங்களின் அந்தஸ்தின் விழிப்புணர்வுடன் எப்போதும் மேன்மையான செயல்களைச் செய்வதன் மூலம் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்களாக.ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் ஒவ்வொரு வினாடியும் ஒரு மேடையில் இருப்பதை எப்போதும் உணர்ந்தவராக இருங்கள். உங்களின் ஒவ்வொரு செயலிலும் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் உங்களின் முழுமை ஸ்திதிக்கு நெருக்கமாக வருவீர்கள். அத்துடன் உங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால அந்தஸ்தினை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் உங்களின் ஒவ்வொரு செயலும் மேன்மையானது ஆகிவிடும். இந்த இரண்டு விடயங்களின் விழிப்புணர்வும் உங்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்கும். சமமானவர் ஆகுவதன் மூலம் உங்களால் இலகுவாக மற்றவர்களின் மனங்களில் உள்ள எண்ணங்களை அறிந்து கொள்ள முடியும். இதற்கு, உங்களின் எண்ணங்களின் மீது கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பது அவசியம். உங்களின் எண்ணங்களில் எந்தவிதமான கலப்படமும் இருக்கக்கூடாது.
சுலோகம்:
ஆசைகளே பொறாமைக்கும் பேறுகள் இல்லாமல் போவதற்குமான காரணம். எங்கு சகல பேறுகளும் உள்ளனவோ, அங்கே சந்தோஷம் காணப்படும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது அருள்பவர் என்ற உங்களின் ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் நீங்கள் எதையாவது கொடுத்தீர்கள், ஆனால் எதையாவது நீங்களும் எடுத்துக் கொண்டீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் தந்தையிடம் இருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும், அதை நீங்கள் ஏற்கனவே எடுத்து விட்டீர்கள். இப்போது நீங்கள் கொடுக்க வேண்டும். கொடுப்பதில் நீங்கள் எந்தளவிற்கு மும்முரமாக இருக்கிறீர்களோ, அந்த அந்தளவிற்கு எந்தவொரு இக்கட்டான சூழலுக்கு ஊடாகச் செல்வதும் கஷ்டம் இல்லாமல் இருக்கும். அனைத்தும் இலகுவாக இருக்கும். ஏனென்றால், ஒரு மகாதானி ஆகுவதன் மூலம் நீங்கள் இயல்பாகவே மகத்தான சக்தியைப் பெறுவீர்கள்.