22.11.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    03.04.2012     Om Shanti     Madhuban


‘என்னுடையது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றி கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள். வீணானது எதுவும் வருவதற்கு இடமளிக்காதவாறு உங்களுடைய மனதைத் தந்தையின் அன்பிலும் அவருடைய சேவையிலும் மும்முரமானதாக்கிக் கொள்ளுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது கவலையற்ற சக்கரவர்த்திகளைப் பார்க்கிறார். காலையில் விழித்தெழுந்ததில் இருந்து, ஒவ்வொரு குழந்தையும் தனது ஒவ்வொரு செயலையும் செய்யும்போது கவலையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருக்கும் இந்த வாழ்க்கையின் அனுபவம் சுய இராச்சிய உரிமையையும், கவலையற்ற நிலையையும் கொண்டதாகும். இது மிக அழகாக உள்ளது. ஏனெனில் நீங்கள் அனைவரும் உங்களுடைய கவலைகளை (ஃபிக்கர்) தந்தைக்குக் கொடுத்துவிட்டு, ஆன்மீகப் போதையைப் (ஃபகூர்) பெற்றுள்ளீர்கள். நீங்கள் பெற்றுள்ள ஆன்மீகப் போதை, அழிவற்ற ஆன்மீகப் போதையாகும். இந்தக் கவலையற்ற வாழ்க்கை எத்தனை அழகானது என்பதை ஒவ்வொருவரும் அனுபவம் செய்கிறார்கள். இரவு பகலாக, உங்களுக்கு எதனையிட்டும் எந்தவிதக் கவலைகளும் இல்லை. ஆனால் உங்களுக்கு ஆன்மீகப் போதை மட்டுமே உள்ளது. கவலையற்றவராக இருக்கும் இந்த வாழ்க்கையைத் தந்தை உங்களுக்குக் கொடுத்து, இந்த ஒரு பிறவிக்கு மட்டுமன்றி, பல பிறவிகளுக்கு உங்களைக் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆக்கியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது, நீங்கள் கவலையற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்தால், உங்களுடைய நெற்றியில் ஒரு தெய்வீக ஒளி சதா பிரகாசித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். உங்களுக்குக் கவலை இருந்தால், பல வகையான துன்பங்கள் நிறைந்த கூடையை நீங்கள் தலையில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். கவலையற்ற வாழ்க்கைக்குரிய இந்த வழிமுறை மிகவும் இலகுவானது. நீங்கள் எல்லைக்கு உட்பட்ட ‘என்னுடையது’ அனைத்தையும் ‘உங்களுடையது’ என்று மாற்றியுள்ளீர்கள். ‘என்னுடையது’ (மேரா) என்ற வார்த்தைக்கும், ‘உங்களுடையது’ (தேரா) என்ற வார்த்தைக்கும் இடையில் இந்த ஒரேயொரு எழுத்து வித்தியாசமே காணப்படுகிறது. ‘எ’ உம் ‘உ’ உம். எவ்வாறாயினும், ‘என்னுடையது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றுவதன் மூலம், உங்களுடைய வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக ஆகின்றது. அது அவ்வாறு ஆகியுள்ளதல்லவா? உங்கள் தலைகளை அசைத்துக் காட்டுங்கள். அது அவ்வாறு ஆகியுள்ளதல்லவா? உங்களுடைய வாழ்க்கைகள் கவலையற்றதாகி உள்ளன. இது ஏனென்றால், கவலை நிறைந்த வாழ்க்கையின் அடிப்படை வீணான எண்ணங்களாகும்.

இப்போது, ஒவ்வொரு குழந்தையிடம் இருந்தும் இதனையே பாப்தாதா காண விரும்புகிறார்: நீங்கள் ‘என்னுடையது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றி இருப்பதனால் எந்தவொரு குழந்தையிலும் வீணான எண்ணங்களின் சுவடேனும் எஞ்சியிருக்கக் கூடாது. அப்போது நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகுவீர்கள். கவலையற்ற சக்கரவர்த்திக்குரிய இந்த வாழ்க்கை மிகவும் அழகானது. ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருக்கிறீர்கள். ‘ஏன்?’ ‘என்ன?’ ‘எப்படி?’ ‘எது வரை?’ போன்ற எந்தவிதக் கவலையும் உங்களுக்குக் கிடையாது. அந்தக் கேள்விகள் அனைத்தும் இப்போது முடிவிற்கு வந்துவிட்டன. இந்தப் பருவகாலத்தின் இறுதி நாளான இன்று, ஒவ்வொரு குழந்தையும் வீணான ‘என்னுடையது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்ற வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். தந்தையே அதனை எரிப்பார். நீங்கள் வெறுமனே ஓர் எழுத்தை மாற்ற வேண்டும். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? இது சாத்தியமா? இது சாத்தியம் என்றால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. ஏனெனில், அடுத்துவரும் ஐந்து, ஆறு மாதங்களுக்கு, உங்களுடைய சக்திவாய்ந்த மனோபாவத்தினால், நீங்கள் அனைவரும் உலகிலுள்ள சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்கு சந்தோஷக் கதிர்களையும், அமைதிக் கதிர்களையும் வழங்க வேண்டும். நீங்கள் உங்களுடைய மனதை இதில் மும்முரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீணான எண்ணங்கள் எங்கே தோன்றுகின்றன? உங்களுடைய மனதிலேயே அவை தோன்றுகின்றன, அப்படியல்லவா? எனவே, ஒவ்வொரு கவலையற்ற சக்கரவர்த்திக் குழந்தையும் தனது மனதை, அதாவது, தனது மனோபாவத்தை வீணானவை எதுவும் வருவதற்கு இடமளிக்காமல் மும்முரமாக வைத்திருக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் சிரமப்பட (மேஹ்னாத்) வேண்டியதில்லை. ஆனால், தந்தையின் அன்பிலே (மொஹபத்) மூழ்கியிருந்து, நீங்கள் போராட வேண்டிய தேவை இல்லாதவாறு, உங்களுடைய மனோபாவத்தினூடாகச் சேவை செய்வதில் உங்களுடைய மனதை மும்முரமாக்கிக் கொள்ள வேண்டும். சில குழந்தைகள் கூறுகிறார்கள்: ‘இவை வருவதை நான் விரும்புவதில்லை, ஆனால் அவை வருகின்றன’. நீங்கள் அதனை என்னவென்று அழைக்கிறீர்கள்? நீங்கள் தந்தையின் அன்பிலும் அவருடைய சேவையிலும் உங்களுடைய மனதை மும்மரமாக்கிக் கொள்ளவில்லை. தந்தையிடம் உங்களுக்கு எவ்வளவு அன்பு உள்ளது என அனைவரையும் கேட்டால், அவர்கள் என்ன கூறுவார்கள்? அது எல்லையற்றது. எனவே, நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களுக்குக் கூறுவதைக் கேட்பது கடினமான விடயமல்ல. ஆகவே, உங்கள் அனைவருக்கும் தந்தையிடம் துண்டிக்கப்படாத அன்பு உள்ளதல்லவா? அல்லது, சிலவேளைகளில் மட்டும் உள்ளதா? அது எப்போதும் உள்ளதா அல்லது சிலவேளைகளில் மட்டும் உள்ளதா? எல்லா வேளையும் உங்களுக்கு அன்பு உள்ளது என்று கூறுபவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! எல்லா வேளையும் உங்களுக்கு அன்பு உள்ளதா? அதனைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! உங்களுக்கு சதா அன்பு இருந்தால், தந்தை எதனைக் கூறினாலும், குழந்தைகள் அதனைச் செய்வார்கள். நீங்கள் இதனை அறிவீர்கள், அல்லவா?

எனவே, இப்போது, இந்தப் பருவகாலத்தில், குழந்தைகளான நீங்கள் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் இதற்குத் தயார், அல்லவா? உங்கள் தலைகளை அசைத்துக் காட்டுங்கள். திடசங்கற்பமான எண்ணத்தை உருவாக்க நீங்கள் தயாரா? பின்னால் இருப்பவர்களே, நீங்கள் தயாரா? தாய்மார்களே நீங்கள் தயாரா? பாண்டவர்களே நீங்கள் தயாரா? உங்களுடைய கரங்களை நன்றாக உயர்த்துங்கள்! இதற்காக உங்களுடைய இரண்டு கரங்களையும் உயர்த்துங்கள். நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தும்போது, பாப்தாதாவைக் களிப்படையச் செய்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய பௌதீகக் கரங்களை உயர்த்தியதைப் போன்று, உங்களுடைய மனக் கரங்களையும் உயர்த்துங்கள்: எந்தவொரு வீணான எண்ணமும் வருவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். வருவது அவற்றின் கடமை. ஆனால் உங்களுடைய கடமை என்ன? அவற்றை முடிப்பது. இந்தப் பருவகாலத்தின்போது, முன்னரும் பாப்தாதா இரு விடயங்களில் கவனம் செலுத்துமாறு உங்களுக்குக் கூறியுள்ளார்: ஒன்று எண்ணங்கள், இரண்டாவது நேரம். நீங்கள் இதனை அறிவீர்;கள். சங்கமயுக நேரத்தின் - ஒவ்வொரு நிமிடமும் 21 பிறவிகளுடன் தொடர்புடையது. இந்த வேளையில், பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் அன்பு வைத்துள்ளார். குழந்தைகளுக்கும் தந்தையிடம் அன்பு உள்ளது. எனவே, சங்கமயுகத்தின் ஒரு விநாடிக்குரிய நேரம் என்பது ஒரு விநாடி அல்ல, ஏனெனில் அது 21 பிறவிகளுடன் தொடர்புடையது. இப்பொழுது இல்லையேல்……. நீங்கள் இப்போது நேரத்தைச் சேமிக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் 21 பிறவிகளுக்குத் தந்தைமீது அன்பு கொண்டிருப்பீர்கள், அத்துடன் ஒவ்வொருவரும் இப்போதும் தந்தையுடனேயே இருந்து, அவருடனேயே வீடு திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள். நீங்கள் இப்போது உங்களுடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும், அல்லவா? நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் சென்று, பாப்தாதாவுடன் இராச்சியத்திற்குத் திரும்பி வரவேண்டும். நீங்கள் இராச்சியத்தில், குறிப்பாக பிரம்மபாபாவுடன் நெருக்கமாக இருப்பீர்கள். தந்தை பிரம்மா தேவதை ரூபத்தில் இருக்கிறார். எனவே, நீங்கள் அவருடன் திரும்பிச் செல்ல விரும்பினால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு தேவதை ஆகவேண்டும், அப்படியல்லவா? நீங்கள் ஒரு தேவதை ஆகுவீர்கள். நீங்கள் நிச்சயமாக இவ்வாறு ஆகவேண்டும்.

தந்தை பிரம்மாவின் கரத்தை உங்களுடைய கரத்தினால் பற்றிப் பிடித்தவண்ணம் நீங்கள் முன்னேற வேண்டும். எனவே, அது என்ன கரம்? தேவதைக்குப் பௌதீகமாகக் கைகள் இருப்பதில்லை. எனவே, தந்தை பிரம்மாவின் கரங்கள் என்பது என்ன? ஸ்ரீமத். பாப்தாதாவின் ஸ்ரீமத் யாதெனில்: இப்போது கவலையற்ற சக்கரவர்த்தி ஆகி, உங்களுடைய ஜெகதாம்பா முயற்சி செய்ததைப் போன்று - அதாவது, தந்தை ஜெகதாம்பாவிற்குக் கூறினார், ஜெகதாம்பா அதனைச் செய்தார் - நீங்கள் இப்போது ஜெகதாம்பாவைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய நேரத்தையும் எண்ணங்களையும் நிச்சயமாகப் பயனுள்ள முறையில் உபயோகிக்க வேண்டும். அவை வீணாக்கப்படக் கூடாது. ஒவ்வோர் எண்ணமும் 21 பிறவிகளுடன் தொடர்புடையது என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது, அப்படியல்லவா? எனவே, நீங்கள் உங்களுடைய மனதை சதா மும்முரமாக வைத்திருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். அது முரளியைக் கடைவதாகவோ அல்லது சேவையாகவோ இருக்கலாம். அதில் ஒவ்வொரு கணமும் மும்முரமாக இருங்கள். உங்களுடைய அட்டவணையைப் பேணுங்கள். அடிக்கடி, பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ள அப்பியாசத்தைப் பயிற்சி செய்யுங்கள். சரீரமற்றவர் ஆகுவதற்கான அப்பியாசத்தை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? உங்களுடைய மூன்று ரூபங்களின் விழிப்புணர்வின் அப்பியாசம். நீங்கள் இதனை அறிவீர்கள், அல்லவா? தந்தைக்கு மூன்று ரூபங்கள் இருப்பதைப் போன்று, உங்களுக்கும் மூன்று ரூபங்கள் உள்ளன – பிராமணர், தேவதை, தேவர். அந்த அப்பியாசத்தின் போது, இந்த மூன்று ரூபங்களினதும் விழிப்புணர்வில் உங்களுடைய மனதை ஈடுபடுத்துங்கள். இதற்கான மகா மந்திரம் என்ன? மன்மனாபவ.

ஒவ்வொரு குழந்தையிலும் பாப்தாதா அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். இதனாலேயே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும், ‘நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்களாக!’ என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார். சில குழந்தைகள் தாங்கள் வெற்றியாளர் ஆகுவோம் என்றும், ஆனால் மாலை 108 மணிகளை மட்டுமே கொண்டிருப்பதனால், தாங்கள் வெற்றியாளர் ஆகினாலும் அந்த மாலையின் மணிகள் ஆக முடியாது என நினைக்கிறார்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் வெற்றியாளர் ஆகினால், பாப்தாதா மணிமாலையில் மேலதிகமான அடுக்குகளைச் சேர்க்கும் அளவிற்கு பாப்தாதாவிற்கு அதிகளவு அன்பு உள்ளது. நீங்கள் வெற்றியாளர் ஆகவேண்டும், அவ்வளவே. எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் நிச்சயமாக வெற்றியாளர் ஆகப் போகிறீர்கள், அல்லவா? அல்லது, 108 பேர் மட்டுமே வெற்றியாளர் ஆகுவார்களா? இல்லை. தந்தையின் ஒவ்வொரு குழந்தையும் வெற்றியாளரே. ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாப்தாதா எதனைப் பார்க்கிறார்? வெற்றித் திலகத்தை. ஏனெனில் நீங்கள் தந்தையை அவருடைய சாதாரணமான ரூபத்தில் இனங்கண்டுள்ளீர்கள். அது கடைசிக் குழந்தையாக இருந்தாலும், அவர் முயற்சியில் பலவீனமானவராக இருந்தாலும், சாதாரண ரூபத்தில் வந்துள்ள தந்தையை இனங்கண்டு, ‘எனது பாபா’ என்று கூறுகின்ற சிறப்பியல்பை அவர் கொண்டுள்ளார். இதனாலேயே, ஒவ்வொரு குழந்தையும் தைரியத்தைப் பேணி வெற்றி பெற வேண்டும். நீங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்? இது எந்தவொரு முயற்சிக்கும் உரிய விடயமல்ல. இது அன்பிற்குரிய விடயம். உங்களுக்கு பாப்தாதாவிடம் அன்பு உள்ளது. குடும்பத்திடமும் அன்பு உள்ளது. எனவே, உங்களால் நீங்கள் நேசிக்கும் ஒருவரிடம் இருந்து பிரிந்திருக்க முடியாது. எனவே, பிரம்மா பாபாவிடம் நீங்கள் எந்தளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்? தந்தை பிரம்மாவிடமும் தந்தை சிவனிடமும் துண்டிக்கப்படாத அன்பைக் கொண்டிருக்கிறோம் என நினைப்பவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! துண்டிக்கப்படாத அன்பா? துண்டிக்கப்படாத அன்பா? மிகவும் நல்லது? எனவே, அடுத்த பருவகாலத்தின் போது பாப்தாதா எதனைக் காண விரும்புகிறார்? நீங்கள் அதனை அறிவீர்கள். வீணான எண்ணங்களை சக்திமிக்க எண்ணங்களாக மாற்றுவதற்கு ஐந்து, ஆறு மாதங்கள் உங்களுக்குக் கிடைக்கவுள்ளன.

எனவே, கூறுங்கள்! மதுவனத்தைச் சார்ந்தவர்களே, மேலே இருப்பவர்களாயினும் அல்லது கீழே இருப்பவர்களாயினும், எழுந்து நில்லுங்கள். பலர் இருக்கிறார்கள். மதுவனத்தைச் சார்ந்தவர்களிடம் பாப்தாதா அன்பு வைத்துள்ளார். பாப்தாதா மற்றவர்களை நேசிக்கவில்லை என்பது இதன் அர்த்தம் அல்ல. அவர்களையும் நேசிக்கிறார். ஆனால் மதுவனவாசிகளிடம் ஒரு விடயத்திற்காக பாப்தாதா விசேடமான அன்பு வைத்துள்ளார். அது என்ன? நீங்கள் அனைவரும் உங்களுடைய மனதால் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் யோகி ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் ஞானி ஆத்மாக்களும் ஆவீர்கள். எவ்வாறாயினும், மதுவனத்தைச் சார்ந்தவர்கள் உங்களுடைய எதிர்காலத்தை இலகுவாக உருவாக்குவதற்கான உயர்த்தியைப் பெற்றுள்ளீர்கள். அது என்ன உயர்த்தி? நீங்கள் மதுவனத்திற்கு வருகின்ற எவருக்கும் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். உதாரணமாக, சமைப்பவர்கள் அல்லது வேறு எந்தவொரு கடமையையும் செய்பவர்களுக்கு பாப்தாதா கூறுகிறார்: ஒருவர் நிலத்தைக் கூட்டினாலும், அவரும் பாக்கியசாலியே ஆவார். ஏன்? இங்கு வருகின்ற எவரும் சூழலைப் பார்த்தும், உங்களுடைய இதயத்திலுள்ள அன்பு சக்தியைப் பார்த்தும் சந்தோஷம் அடைகிறார்கள். உணவு தயாரிப்பவர்களோ அல்லது வேறு எந்தவொரு கடமையைச் செய்பவர்களோ, அவர்கள் யாராக இருந்தாலும், மதுவனவாசிகள் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். மதுவனத்தின் அன்பையும் இங்கு உருவாக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த சூழலையும் பார்க்கும்போது, நீங்கள் இப்போது இந்தப் பருவகாலத்தை நிறைவு செய்து விட்டீர்கள், எதிர்காலத்திலும் நீங்கள் தொடர்ந்து ஆத்மாக்களைத் திருப்திப்படுத்துவதுடன், உங்களுடைய மனதினூடாக அவர்களுக்குச் சக்திவாய்ந்த அனுபவங்களையும் வழங்குவதற்குக் கருவிகள் ஆகுவீர்கள் என்பதனால் பாப்தாதா மதுவனவாசிகளை அதிகளவில் பாராட்டுகிறார். எனவே, அனைவரும் மதுவனவாசிகளுக்குக் கைதட்டிப் பாராட்டுங்கள். அச்சா.

இன்று, அமிர்தவேளையில், மதுவன சேவாதாரிகள் பாப்தாதாவின் முன்னால் வந்தார்கள். பாப்தாதா ஒவ்வொருவரையும் சூட்சும வதனத்தில் சந்தித்தார். பாபா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளதைப் போன்று, அதிகாலை 4.00 மணிக்கு, முன்னோடிக் குழுவிற்குச் சென்றுள்ள உங்களுடைய விசேடமான தாதிமார்கள் நிச்சயமாக வருகிறார்கள். இன்று, விசேடமான தாதிமார்களும், விசேடமான சகோதரர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் விசேடமாக மதுவன வாசிகளை அங்கே அழைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். குறிப்பாக, தீதியும் தாதியும், விசேடமான சகோதரர்களும் மதுவனத்தைச் சார்ந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள். தாதி விசேட நினைவை வழங்கினார். அத்துடன்கூடவே, சூட்சும வதனத்தில் இருந்து மாம்பழங்களையும் வழங்கினார்கள். சூட்சும வதனத்தின் பழங்கள் மிக நல்ல தரம் வாய்ந்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவற்றைத் தடியால் அடித்துப் பறிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு என்ன பழங்கள் வேண்டும் என்றாலும், உங்களுடைய கைகளாலேயே அவற்றைப் பறித்துக் கொள்ள முடியும். எனவே, தாதி கூறினார்: இன்று, மதுவனத்தைச் சார்ந்தவர்களுடன் நாம் மாம்பழ பிக்னிக் செய்யப் போகிறோம். தாதியுடன்கூடவே, ஏனைய தாதிகளும் விசேடமான சகோதரர்களுடன் காணப்பட்டார்கள். பாப்தாதா கூறினார்: மதுவனத்தைப் பற்றி அவர்களின் மனங்களில் என்ன தோன்றுகின்றது என அவர்களைக் கேளுங்கள். தாதி என்ன கூறினார்? உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ஏற்கனவே தெரியும், நீங்கள் தாதியை அறிவீர்கள், அல்லவா? தாதி கூறினார்: மதுவனத்திலுள்ள ஒவ்வொருவரும், உங்களுடைய முயற்சிகளில் இன்னமும் ஏதாவது குறைவாக இருந்தால், நீங்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசையே எனக்கு இன்னமும் உள்ளது. இதற்கு மதுவனவாசிகள் ஒரு விடயத்தைச் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் எதனை விரும்புகிறேன்? ஒவ்வொரு மதுவனவாசியும் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். உண்மையில், அனைவரும் அவ்வாறு ஆகவேண்டும். ஆனால் மதுவனம் விசேடமானது. மதுவனத்தைச் சார்ந்தவர்கள் தாதியிடம் அன்பு வைத்துள்ளார்கள். தாதி இவ்வாறு கூறுவதுண்டு. நான் இதனை அறிவேன். எனவே, அன்பிற்குப் பிரதிபலனாக, மம்மா தனது இலக்கை வைத்திருந்ததைப் போன்று – அதாவது, பாபா எதனைக் கூறினாலும், மம்மா அதனைச் செய்தார் - இருக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். மதுவனத்தைச் சார்ந்தவர்கள் நிச்சயமாக இதனை அறிவார்கள். அதேபோன்று, அமிர்தவேளையில் இருந்து இரவு வரை, மதுவனத்திலுள்ள ஒவ்வொருவரும் பாபாவின் மீதும், என்மீதும், தாதிகளின் மீதும் அன்பு வைத்திருக்கிறார்கள். எனவே, மம்மா தந்தையின் அறிவுரை ஒவ்வொன்றையும் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்ததைப் போன்று, நாங்களும் அவ்வாறே செய்தோம். எனவே, உங்களுக்கு தாதிகளிடம் அன்பு இருக்குமாயின், அதனை இவ்வாறு செய்து காட்டுங்கள்: காலையிலிருந்து இரவுவரை, தாதிகளோ, தந்தையோ அல்லது வேறு எவருமோ விரும்பாத எண்ணங்களையோ, வார்த்தைகளையோ அல்லது செயல்களையோ செய்யாதீர்கள்.

ஆசிரியர்களான உங்களைப் பார்க்கும்போது, பாப்தாதா களிப்படைகிறார். ஏனெனில் தந்தைக்குச் சமமாக இருக்கும் ஆசனத்தின் பாக்கியத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். தந்தையின் முரளியை வாசிக்கும் ஆசனத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆசிரியர்கள் சகபாடிகள் எனத் தந்தை எப்போதும் கூறுகிறார். ஆசிரியர்களிடம் இருந்து இப்போது பாப்தாதா ஒரு விடயத்தை விரும்புகிறார். பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒவ்வொரு ஆசிரியரின் முகமும் தந்தை பிரம்மாவினுடையதைப் போன்று சந்தோஷமானதாக இருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். இவ்வாறே காணப்பட வேண்டும். உள்ளார்த்தமாக, முயற்சி இருக்கலாம். ஆனால் உங்களுடைய முகம் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். யாரைப் பார்த்தாலும், தந்தையின் பிரகாசம் அவர்களில் புலப்பட வேண்டும். இந்த முறையில் தமது முகங்களால் சேவை செய்பவர்கள் நிச்சயமாகத் தந்தையை வெளிப்படுத்துவார்கள். உங்களுடைய முகத்தின் மூலம் தந்தையை வெளிப்படுத்துவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. ஆசிரியர்கள் இயல்பாகவே எப்போதும் ‘மேரா பாபா’ என்று நினைவு செய்வார்கள். இப்போது உங்களுடைய முகங்களினூடாகத் தந்தையை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். உங்களால் இதனைச் செய்ய முடியும், அல்லவா? உங்களால் முடியும் என்றால், அதனைச் செய்யுங்கள்! இதுவரை பெறுபேற்றைப் பற்றி அனைவரும் என்ன கூறுகிறார்கள் என்று பாருங்கள்! பிரம்மாகுமாரிகள் மிக நல்ல பணி செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். தந்தை இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை – அவர் இன்னமும் மறைமுகமாகவே இருக்கிறார். எனவே, உங்களினூடாக – அது கருவி ஆசிரியர்களாயினும் அல்லது எந்தவொரு குழந்தையாயினும் - நீங்கள் தந்தையை வெளிப்படுத்தும் நேரம் இப்போது நெருங்கி வந்துள்ளது. ‘பிரம்மாகுமாரிகள் மிக நல்ல பணியைச் செய்கிறார்கள்’. அது ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. நீங்கள் இந்தளவினை அடைந்திருக்கிறீர்கள். எவ்வாறாயினும், இப்போது கடவுளே பிரம்மாவின் சரீரத்தில் அவதாரம் செய்து, பிரம்மாகுமாரிகளைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார் என்பதைக் காட்டுங்கள். இந்த விடயம் இன்னமும் எஞ்சியுள்ளது. ‘மேரா பாபா ஆ கயா – எனது பாபா வந்துள்ளார்’ என்ற பாடலை நீங்கள் பாடுகிறீர்கள். எவ்வாறாயினும், கடவுளே அவதரித்து, சகோதர, சகோதரிகளினூடாக இந்தப் பணியைச் செய்கிறார் என்பது இப்போது ஆத்மாக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் இந்த வெளிப்படுத்துகையைச் செய்ய வேண்டும், அல்லவா? எப்போது நீங்கள் இதனைச் செய்வீர்கள்? நீங்கள் என்ன கூறுவீர்கள்? ‘இப்போது’, என்று கூறுவீர்கள், அல்லவா? (நாம் இப்போது அதனைச் செய்ய ஆரம்பித்து, அடுத்த பருவகாலத்தின்போது அதனை நிறைவேற்றுவோம்.) நீங்கள் அனைவரும் அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? அடுத்த பருவகாலத்தின்போது அது நிகழுமா? இதனை ஏற்றுக் கொள்பவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! வெகு சிலரே தமது கரங்களை உயர்த்துகிறார்கள். தமது கரங்களை உயர்த்தாதவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள், நீங்கள் அதனைச் செய்வீர்கள். ஆசிரியர்களான உங்களுக்கு இந்த எண்ணம் இருக்கிறதல்லவா? ஏனெனில், அனைத்தும் சடுதியாக நிகழும் என பாப்தாதா கூறுவதை உங்களால் காண முடிகிறது. பாபா நீண்ட காலமாக, ‘சடுதியாக, சடுதியாக’ என்று கூறுகிறார், இப்போது அது நிகழவேண்டும் எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், குழந்தைகள் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகும்போது இது சடுதியாக நிகழும். உங்களுடைய முகங்கள், உங்களுடைய ரூபங்கள், உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். இது நிச்சயமாக நிகழப்போகிறது. இது நிகழவே வேண்டும். நீங்கள் இப்போது அதற்கான கருவிகள் ஆகவேண்டும். அடுத்த பருவகாலத்தின்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? முதலில், நீங்கள் உங்களைத் தந்தைக்குச் சமமானவர்கள் ஆக்குவீர்கள். ஏதாவது பலவீனங்கள் எஞ்சியிருந்தாலும், நீங்கள் அவற்றை நீக்குவீர்கள். பாப்தாதா எதனையிட்டுக் களிப்படைகிறார்? சகல சிறிய மற்றும் பெரிய நிலையங்களிலும், வார்த்தைகளினூடாகத் தாங்கள் என்ன பணி செய்கிறோம் என்பதை வெளிப்படுத்தி, அதன் மூலம் சூழலை மாற்றி உள்ளார்கள். பாப்தாதா அதற்காக உங்களைப் பாராட்டுகிறார். எந்தவொரு இடத்திலும் நிகழ்ச்சிகளை யார் நடத்தி இருந்தாலும், நீங்கள் அதனைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். அத்துடன் பிரம்மாகுமாரிகள் உண்மையில் மறைமுகமான முறையில் தமது 75 வருடகாலப் பணியைப் பூர்த்தி செய்துள்ளார்கள் என்பது அனைவரின் கவனத்திற்கும் வந்துள்ளது. இப்போது, பிரம்மாகுமாரிகளின் பாபாவான கடவுள் வந்துள்ளார் என அவர்கள் கூறவேண்டும். உங்களுக்கு இந்த இலக்கு உள்ளதல்லவா? எனவே, இந்தப் பணி அடுத்த பருவகாலத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்காக ஒரு நடைமுறை நிகழ்ச்சிநிரலைத் தயாரியுங்கள். நீங்கள் நிகழ்ச்சிகளையும் சந்திப்புக்களையும் நடாத்துகிறீர்கள், அல்லவா? சந்திப்புகளின்போது, இந்த நிகழ்ச்சியை நடாத்துங்கள். ஆஸ்தியை வழங்கும் தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகள் அனைவரும் அறிய வேண்டும். அவர்களுக்கு இது தெரியாமல் போகக்கூடாது. குழந்தைகளின் துன்பத்தைப் பார்க்கும்போது, தந்தை அதிகளவு கருணை கொள்கிறார். அவர்கள் துன்பத்தில் அழும்போது, தந்தை அவர்களின் மீது கருணை கொள்கிறார். இறைவன், இறைவிகளான உங்களையும் அவர்கள் அதிகளவில் அழைக்கிறார்கள். எனவே, அடுத்த பருவகாலத்தின்போது, வீணானவை எதனதும் பெயரோ அல்லது சுவடோ இருக்கக்கூடாது. ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களுடைய இதயக் கரத்தை உயர்த்துங்கள். உங்களுடைய இதயக் கரத்தை உயர்த்துங்கள். வீணானது என்றால் என்ன என்ற ஞானம் அனைத்தும் மறைய வேண்டும். சுவர்க்கத்தைச் சார்ந்த இளவரசிகள் வரும்போது (திரான்ஸில்), அவர்களுக்கு துன்பம் அல்லது அமைதியின்மையைப் பற்றியே தெரியாது. அவர்கள் கூறுவார்கள்: அவர்கள் என்ன கூறுகிறார்கள்? அது என்ன? அதேபோன்று, பிராமணக் குடும்பத்திலுள்ள எவருக்கும் வீணானது என்றால் என்னவென்றே தெரியக்கூடாது. சுயத்திற்குத் தூய்மையான, சாதகமான எண்ணங்களும் மற்றவர்களுக்குத் தூய்மையான, சாதகமான எண்ணங்களும் இருக்க வேண்டும். அச்சா.

எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், பாப்தாதாவின் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும். அத்துடன்கூடவே, ஒவ்வொரு குழந்தையையும் அவர்களின் சுய மரியாதையின் நம்பிக்கையுடனும் போதையுடனும் பார்ப்பதில் தந்தை சந்தோஷம் அடைகிறார். உங்களுடைய சுய மரியாதையை ஒருபோதும் கைவிடாதீர்கள். சுயமரியாதை கொண்டவராக இருப்பதெனில், சகல பேறுகளையும் கொண்டவராக இருப்பதாகும். சுயமரியாதைப் பட்டியல் நீண்டது. தினமும் சுயமரியாதைக்குரிய ஒரு கருத்தை உங்களுடைய விழிப்புணர்வில் வைத்திருந்து, அதனை உங்களுடைய நடைமுறையில் கொண்டுவந்து, தீவிர முயற்சியாளராகித் தொடர்ந்து முன்னேறுங்கள். பாப்தாதாவை உங்களுடைய இதயத்தில் இருத்தி, நீங்களும் பாப்தாதாவின் இதயத்தில் அமர்ந்திருங்கள். பயமற்றவராகவும் மாஸ்ரர் சர்வசக்திவானாகவும் ஆகித் தொடர்ந்தும் முன்னேறுங்கள். தொடர்ந்து பறப்பதுடன், மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் சேவை மேடையில் ஏற்றுக் கொள்ளும் சக்தியால் மாஸ்ரர் கடலாகி, அதன்மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் சேவை மேடைக்குச் செல்லும்போது, உங்களின் முன்னால் பல வகையான சூழ்நிலைகள் வரும். ஆகவே, அந்தச் சூழ்நிலைகளை உங்களுக்குள் ஏற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். ஏற்றுக் கொள்ளுதல் என்றால், உங்களுக்குள் வெளிப்படையான எதனுடைய சுவடேனும், அது எண்ணம் அல்லது உணர்வின் ரூபத்தில்கூட அமிழ்ந்திருக்கக் கூடாது. நன்மை செய்யாத வார்த்தைகளை நன்மை செய்யக்கூடிய வார்த்தைகளாக மாற்றுங்கள். அது நன்மை செய்யாத வார்த்தைகளே பேசப்படவில்லை என்பதைப் போல் இருக்க வேண்டும். குறைபாடுகளை நற்குணங்களாகவும் இகழ்ச்சியைப் புகழ்ச்சியாகவும் மாற்றுங்கள். அப்போது நீங்கள் மாஸ்ரர் கடல் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
விரிவாக்கத்தைப் பார்க்காமல், சாரத்தை மட்டும் பார்த்து, அதைத் தனக்குள் அடக்கிக் கொள்பவரே, தீவிர முயற்சியாளர் ஆவார்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல் சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

உங்களின் படைப்பான ஆமையால் ஒரு விநாடியில் தனது அங்கங்களை உள்ளே இழுத்துக் கொள்ள முடியும். படைப்பிற்கே அமிழ்த்திக் கொள்ளும் சக்தி உள்ளது. அமிழ்த்திக் கொள்ளும் சக்தியின் அடிப்படையில், மாஸ்ரர் படைப்பாளிகளான உங்களால் சகல எண்ணங்களையும் ஒரு விநாடியில் அமிழ்த்தி, ஒரு விநாடியில் ஓர் எண்ணத்தில் ஸ்திரமடைய முடியும். நீங்கள் உங்களின் ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக்கிக் கொள்ளும்போது, உங்களின் பௌதீக அங்கங்களின் செயல்களின் விழிப்புணர்விற்கு அப்பால் செல்லும்போது, நீங்கள் கர்மாதீத் ஸ்திதியை, அதாவது, முழுமை ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.